WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா :
இந்தியா
India’s government uses authoritarian
measures against self-styled anti-corruption crusade
சுய-பாணியிலான
ஊழல்-எதிர்ப்பு
போராட்டத்திற்கு எதிராக இந்திய அரசாங்கம் அடக்குமுறை முறைமைகளைப் பயன்படுத்துகிறது
By
Keith Jones
18 August 2011
Back to
screen version
சுய-பாணியிலான
காந்தியவாதியும்,
ஊழலுக்கு எதிரான
சிலுவைபோரில் ஈடுபட்டுள்ளவருமான
அன்னா
(அண்ணன்)
ஹசாரே தலைமையிலான
ஒரு போராட்டத்தைத் தடுக்கும்
ஒரு பயனற்ற முயற்சியாக,
இந்தியாவின்
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய
முற்போக்கு கூட்டணி அரசாங்கம்
முன்னெச்சரிக்கை கைது மற்றும்
பெருந்திரளான மக்கள் கைது
நடவடிக்கைகளைப் பயன்படுத்திய
பின்னர்,
குழப்பத்தில்
உள்ளது.
“இந்தியர்களுக்கு
எதிரான ஊழலுக்காக"
பேசும் முதன்மை
பிரமுகர் ஹசாரே,
ஓர் அரசாங்க
சட்டமசோதாவில் மாற்றங்களைக்
கொண்டு வர,
அதாவது
பல தசாப்தங்களாக கிடப்பில்
கிடக்கும்
லோக்பால்
அல்லது
ஊழலை இழுத்துப்பிடிக்க உதவும்
ஓபட்ஸ்மென்
(Ombudsman)
அமைப்பைக் கொண்டு
வர அழுத்தம் அளித்து வருகிறார்.
அரசாங்கம்
ஹசாரேவின்
"ஊழல்-எதிர்ப்பு"
பிரச்சாரத்தைக்
குலைக்க காட்டுமிராண்டித்தனமான
முறைகளுக்குள் தஞ்சமடைந்திருப்பதற்கு,
பெருநிறுவன
ஊடகங்களும்,
ஸ்ராலினிச
தலைமையிலான இடது முன்னணியிலிருந்து
இந்து மேலாதிக்க பாரதிய ஜனதா
கட்சி
(பிஜேபி)
வரையில்
அனைத்து எதிர்கட்சிகளும்
கண்டனம் தெரிவித்துள்ளன.
அவை டெல்லி,
மும்பை,
பெங்களூர்
மற்றும் இந்தியா முழுவதிலும்
உள்ள நகர்புறங்களிலும் சிலபோது
எதிர்ப்பு பேரணிகளை ஏற்பாடு
செய்துள்ளன.
அரசாங்க
ஒடுக்குமுறை குறித்த
தலையங்கத்திற்கு
Hindu
நாளிதழ்
"ஊழல்,
ஒடுக்குமுறை
மற்றும் முட்டாள்தனம்"
(Corrupt, Repressive and Stupid)
என்று
தலைப்பிட்டிருந்தது.
அதேபோல
Times of India
நாளிதழ்
"தவறான
கைது"
(Wrongful arrest)
என்று
தலைப்பிட்டிருந்தது.
ஒடுக்குமுறைக்கு
அரசாங்கம் அதன் நிலைப்பாட்டை
விளக்க வேண்டுமென்ற எதிர்கட்சிகளின்
கோரிக்கைக்கு விடையிறுப்பாக,
நேற்று,
இந்தியாவின் பிரதம
மந்திரி மன்மோகன் சிங் இந்திய
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்
ஒரே அறிக்கையைப் படிக்கும்
ஓர் அரிய நடவடிக்கையை எடுத்தார்.
ஹசாரேவின் பிரச்சாரம்
"அரசாங்கத்தின்
அதிகாரத்திற்கும்,
நாடாளுமன்றத்தின்
தனியுரிமைக்கும்"
“சவால்விடுவதாக"
உள்ளது என்று
முறையிட்ட சிங்,
பொலிஸ் நடவடிக்கைகளுக்கு
ஆதரவாக முழுமையாக குரல்
கொடுத்தார்.
செவ்வாயன்று,
ஆகஸ்ட்
16இல்,
இந்திய தலைநகரிலுள்ள
ஒரு பூங்காவில் தமது போராட்டத்தைத்
தொடங்கவிருந்த ஹசாரே,
வெறும்
5,000
மக்களே பங்கெடுக்க
வேண்டும் மற்றும் மூன்று
நாட்களுக்குப் பின்னர்
"சாகும்வரை
உண்ணாவிரத"
போராட்டத்தை அவர்கள்
அனைவரும் கைவிட வேண்டும்
என்பன போன்ற நிபந்தனைகளுடன்
22
நிபந்தனைகளை
ஹசாரே ஏற்க வேண்டுமென அதிகாரிகள்
கோரினர்.
அதை
அவர்கள்
'போராடும்
தங்களின் அடிப்படை ஜனநாயக
உரிமையைத் தடுக்கும் ஓர்
ஏதேச்சதிகார முயற்சியென்று'
மிகச்சரியாக
குறிப்பிட்டு,
ஹசாரேவும் அவருடைய
பரிவாரங்களும் ஆறு நிபந்தனைகளோடு
மல்லுக்கட்டி நின்றபோது,
அரசாங்கம் குற்றவியல்
சட்டத்தின்
144
பிரிவை
அமுல்படுத்தியது.
காலனித்துவ காலத்தைத்
திரும்ப கொணர்ந்திருக்கும்
இந்த கொடூரமான முறைமை,
கூட்டம் கூடுவதற்கு
தடைவிதிக்கும் அதிகாரத்தை
அதிகாரிகளுக்கு வழங்குகிறது.
செவ்வாயன்று
காலை,
போராட்டம்
நடைபெறவிருந்த பூங்காவிற்குப்
புறப்பட்ட போது ஹசாரேவும்,
ஏனைய ஆறு நபர்களும்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
கைது செய்யப்பட்டார்கள்.
அடுத்த சில
மணிநேரங்களிலேயே,
பூங்காவிற்கு
வந்து கொண்டிருந்த அல்லது
வருவதற்குத் தயாராகி கொண்டிருந்த
2,600க்கும்
மேற்பட்ட மக்களை டெல்லி பொலிஸ்
கைது செய்தது.
சிங்கைப் பொறுத்த
வரையில்,
“அமைதியையும்,
ஒழுங்கையும்
காப்பாற்ற இந்த குறைந்தபட்ச
நடவடிக்கைகள்"
தேவைப்படுகின்றன.
தங்கள்
மீதும்,
அரசியலமைப்பின்
மீதும் மக்களுக்கு
இருக்கும் கோபத்தை திசைதிருப்பவும்,
வியாரங்கள்
மீதிருக்கும் அரசின் அசிரத்தையை
இன்னும் குறைக்க அழுத்தம்
அளிக்கவும் பெருநிறுவன
மேற்தட்டு இந்த பிரச்சாரத்தை
ஒரு பயனுள்ள கருவியாக பார்க்கிறது
என்பதால்,
கடந்த
ஆறு மாதங்களாக ஹசாரேவைத்
தூண்டிவிட்டுவரும் பரந்த
பிரிவுகளான இந்திய பெருநிறுவன
மேற்தட்டுக்களுக்கு ஒரு
வெளிப்படையான முறையீட்டையும்,
இந்திய பிரதம
மந்திரி அவருடைய நாடாளுமன்ற
அறிக்கையில் உள்ளடக்கி
இருந்தார்.
"இந்தியா
உலக அரங்கில் இப்போது முக்கிய
பங்களிப்பாளர்களில் ஒன்றாக
வளர்ந்து வருகிறது.
நாடுகளின் கூட்டமைப்பில்
இந்தியா அதன் உண்மையான இடத்தைப்
பெறுவதை விரும்பாத பல சக்திகளும்
உள்ளன.
நாம்
அவர்களின் கைகளில் விளையாட்டுப்
பொருளாகிவிடக்கூடாது.
உட்பூசலால் நம்முடைய
பொருளாதார முன்னேற்றம்
கொள்ளையடிக்கப்படும் ஒரு
சூழலை நாம் உருவாக்கிவிடக்கூடாது,”
என்று சிங்
குறிப்பிட்டார்.
உண்மையில்
ஹசாரேவை டெல்லியின் இழிபெயர்பெற்ற
திஹார் சிறையில் ஒரு வாரத்திற்கு
வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
ஆனால் செவ்வாயன்று
மாலை அரசாங்கம் அதன் போக்கை
மாற்றி,
அந்த
74
வயது
முதியவர் விரைவில் விடுவிக்கப்படுவார்
என்று அறிவித்தது.
இந்த திருப்புமுனைக்காக
ராகுல்காந்தியின் தலையீட்டை
அரசாங்க வட்டாரங்கள் புகழ்ந்தன.
இந்திய முதலாளித்துவத்தின்
பாரம்பரிய அரசாங்க கட்சியை
பல தசாப்தங்களாக கட்டுப்பாட்டில்
வைத்திருந்த நேரு-காந்தி
குடும்ப வம்சாவழிக்கு
ராகுல்காந்தி வெளிப்படையான
வாரிசாக உள்ளார்.
சமீபத்திய மாதங்களில்,
மன்மோகன்சிங்
தலைமை அரசாங்கத்திற்குள்
இருந்தும்,
வெளியில்
இருந்தும் பெரும் விமர்சனத்திற்கு
உள்ளாகியுள்ள நிலையில்,
அவர் சிங்கிற்கு
அடுத்தபடியாக பிரதம மந்திரியாக
காட்டப்பட்டு வருகிறார்.
எவ்வாறிருந்த
போதினும் ஹசாரே மற்றும் அவரின்
பரிவாரங்கள் வேறு திட்டங்களைக்
கொண்டுள்ளன.
அரசாங்கம்
அச்சுறுத்தும்
என்பதை உணர்ந்துகொண்டு,
'ஹசாரே
சிறையிலிருந்து
வெளிவர ஒரு நிபந்தனையாக
அவருடைய போராட்டம் அதன்
உண்மையான வடிவத்தில் தொடரக்கூடாது'
என்ற அரசாங்கத்தின்
வலியுறுத்தலுக்கு அவர்கள்
பின்வாங்கினர்.
இறுதியாக,
அரசாங்கம் தான்
பின்வாங்கி இருந்தது.
புதனன்று நள்ளிரவில்,
24
மணிநேரத்திற்கும்
அதிகமான பேச்சுவார்த்தைகளுக்குப்
பின்னர்,
அவருடைய
உண்ணாவிரதமும் அதைச் சார்ந்த
போராட்டமும்
14
நாட்களுக்கு
மட்டுப்படுத்தப்பட்டிருக்க
வேண்டும் என்ற தனியொரு
விதிவிலக்கோடு,
ஹசாரே போராட்டத்தின்
மீதிருந்த அனைத்து தடைகளையும்
அரசாங்கம் நீக்கியது.
இந்த
உடன்படிக்கை அறிவிக்கப்படுவதற்கு
நீண்டநேரத்திற்கு முன்னரே,
ஹசாரே
விவகாரம் அரசாங்கத்தைத்
தீவிரமாக பலவீனப்படுத்தியுள்ளதாக
பத்திரிகைகள் ஒருமித்து
தீர்மானித்திருந்தன.
“மன்மோகன்சிங்
அரசாங்க அதிகாரம் செவ்வாயன்று
எழுந்த மக்கள் சீற்றத்திற்குப்
பின்னர் ஒரு மோசமாக
பாதிக்கப்பட்டுள்ளது.
ஏழு-நாள்
சிறை தண்டனைக்கு பதிலாக வெறும்
11
மணிநேரத்தில்
அன்னா ஹசாரேவை சிறையிலிருந்து
விடுவிக்க
[அறிவிப்பு
வெளியிடப்படவிருக்கிறது]
மக்கள்
சீற்றம் அரசாங்கத்தை
நிர்பந்தித்துள்ளது"
என
Economic Times
அதன்
தலையங்க கட்டுரையில் செவ்வாயன்று
குறிப்பிட்டது.
“இந்த
'ஒருபடி
முன்னால்,
இரண்டு
படிகள் பின்னால்'
எடுத்த
அரசாங்கத்தின் முடிவு பிரதம
மந்திரிக்கும் மற்றும்
'கடுமையாக
தணிக்கும்'
அணுகுமுறையைப்
பரிந்துரைக்கும் அவரின்
தேர்ந்தெடுக்கப்பட்ட
நெருக்கடிகால நிர்வாகிகளுக்கும்
ஒரு பெரும் பின்னடைவைக்
காட்டுகிறது.
பிரதம
மந்திரி தனிப்பட்டமுறையில்
அன்னா-எதிர்ப்பு
நடவடிக்கையை பார்த்துவருகிறார்;
அத்தோடு
அவருடைய கடுமையான நடவடிக்கைக்கு
ஆதரவாக அரசியல் விவகாரத்துறை
கேபினெட் குழுவையும் அவர்
வைத்துள்ளார்,”
என்று
அது குறிப்பிட்டது.
இந்திய
வர்த்தகம்
மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின்
(Federation of Indian Chambers of Commerce and Industry)
பொதுச்செயலாளர்
ராஜீவ் குமார்,
'வெளிநாட்டின்
பல-பிராண்ட்
நுகர்பொருள் விற்பனையாளர்களுக்கு
கதவுகளைத் திறந்துவிடுவது
மற்றும் வேலைவிடுப்புகள்
மற்றும் ஆலை கதவடைப்புகளின்
மீது கட்டுப்பாடுகளைத்
தளர்த்துதல் உட்பட,
பிற்போக்குத்தன
பொருளாதார சீர்திருத்தங்களின்
ஒரு புதிய சுற்றைத் தொடங்குவது
என்ற அரசாங்கத்தின் வழக்கமான
வாக்குறுதியை அது நிறைவேற்ற
முடியாமல் உள்ளது'
என்று உடனடியாக
தீர்மானத்திற்கு வந்தார்.
“துரதிருஷ்டவசமாக,
அரசியல் மீண்டும்
பொருளாதாரத்தை
ஆக்கிரமித்துவிட்டது.
பொருளாதார கொள்கை
மற்றும் சீர்திருத்தங்களில்
மிகவும் கவனம் செலுத்துவதற்குரிய
சரியான நேரம் இது.
ஆனால் அது நடப்பதாக
தெரியவில்லை.
முதலீடுகள்
ஸ்தம்பித்துள்ளன மற்றும்
ஒரேவேளை நாம் இரண்டு-இலக்க
பின்னடைவை முகங்கொடுக்க
வேண்டியதிருக்கலாம்.
நாம் அவசரமாக
செயல்பட வேண்டியுள்ளது,”
என்றார்.
செவ்வாயன்று
நடந்த ஊழலுக்கு எதிரான
இந்தியர்களின் போராட்டத்தில்
காட்டப்பட்ட அரசு அடக்குமுறையானது,
எந்தவித மற்றும்
அனைத்து எதிர்ப்பையும் தனது
ஆட்சியுரிமைக்கு சட்டவிரோதமாக
சவால் விடுக்கும் ஒன்றாக
தொடர்ந்து குற்றஞ்சாட்டிவரும்
வலதுசாரி அரசாங்கத்தால்
நடத்தப்பட்ட ஜனநாயக உரிமைகள்
மீதான ஒரு படுமோசமான தாக்குதலாகும்.
அதேசமயம்,
இந்திய தொழிலாளர்கள்
ஹசாரே மற்றும் அவரின்
ஊழல்-எதிர்ப்பு
பிரச்சாரத்தில் எந்தவித
கற்பனையையும் நிலைநிறுத்திக்
கொள்ளக்கூடாது.
பெருநிறுவன
ஊடகங்களாலும்,
பி.ஜே.பி.
இன் தீவிர ஆதரவாலும்
ஆழமாக தூண்டிவிடப்பட்டிருக்கும்
அதுவொரு வலதுசாரி போராட்டமாகும்.
ஒரு
முன்னாள்
இந்திய இராணுவ அதிகாரியான
ஹசாரே அவருடைய பிரச்சாரத்தை
"இரண்டாவது
சுதந்திர போராட்டம்"
என்றழைக்கிறார்.
ஆனால் அதில்
முற்போக்கான அல்லது மீட்டெடுக்கும்
எதுவும் இல்லை.
ஊழலுக்கு
எதிரான
இந்தியர்களின் தலைமையில்
சுய-பாணியிலான
"உள்நாட்டு
சமூக சேவகர்கள்",
ஹசாரேவின் வடிவத்திலும்
மற்றும் மதவாத பிரபலங்களின்
வடிவத்திலும் இருக்கும்
பழமைவாத குணாளர்கள்,
இவர்களுக்கு
ஒடுக்கப்பட்டவர்களின்
நேர்மையான போராட்டத்தோடோ
அல்லது உள்நாட்டு விடுதலையின்
பாதுகாப்போடு எவ்வித தொடர்பும்
கிடையாது.
ஆச்சரியப்படுவதற்கு
ஒன்றுமில்லாத விதத்தில்,
ஹசாரே உட்பட பலர்
இந்து வலதிற்கு அவர்களின்
அனுதாபத்தை வெளிப்படுத்தி
உள்ளனர்.
ஊழலுக்கு
எதிரான
இந்தியர்கள் வெளிப்படையாகவே
பெரு வர்த்தகங்களின்
சக்திவாய்ந்த பிரிவுகளின்
ஆதரவை பெற்றுள்ளனர்;
அதற்கு அழைப்புவிடுத்துள்ளனர்.
ஹசாரேவிற்கும்,
அவருடைய பிரச்சாரத்திற்கும்
ஆதரவான மிதமிஞ்சிய ஊடக
வெளிப்பாடுகளை ஒருவர் பார்த்தாலே
போதுமானது.
அவருடைய
கைது நடவடிக்கையைத் தொடர்ந்து
வெடித்த அனுதாப போராட்டங்களில்
பங்கெடுத்த மதிப்பார்ந்த
மக்களின் பங்களிப்பை
ஊதிப்பெரிதாக்கிய அறிக்கைகளால்,
செவ்வாய் மற்றும்
புதனன்று,
இந்திய
நாளிதழ்கள் நிரம்பி வழிந்தன.
“அன்னா
ஹசாரே கைது:
இந்தியா முழுவதும்
ஒரு மில்லியன் கலகங்கள்,”
இவ்வாறு ஒரு தலைப்பு
பிரஸ்தாபித்தது;
“இந்தியா
முழுவதிலும்
அன்னா ஹசாரேவிற்கு முன்பில்லாத
ஆதரவு,”
மற்றொன்று
அறிவித்தது.
உண்மையில்
அந்த போராட்டங்கள் எண்ணிக்கை
அளவிலும் சமூகரீதியாகவும்
மிகவும் குறைவாக இருந்தன;
மாணவர்கள்,
வியாபாரிகள்,
வழக்கறிஞர்கள்,
மென்பொருள்
அபிவிருத்தியாளர்கள் மற்றும்
ஏனைய தொழில் நிபுணர்களே அந்த
கூட்டங்களில் ஏறத்தாழ பிரதானமாக
இருந்தனர்.
எண்ணிக்கையளவில்
புதுடெல்லியில் பத்து
ஆயிரக்கணக்கானவர்களும்,
ஏனைய இடங்களில்
நூற்றுக்கணக்கானவர்கள்
அல்லது அதிகபட்சமாக
ஆயிரக்கணக்கானவர்கள்
இருந்திருக்கலாம்.
இந்த
போராட்டங்கள்
இந்த மாத தொடக்கத்தில் வங்கி
தொழிலாளர்களால் செய்யப்பட்ட
ஒருநாள் வெளிநடப்பு போராட்டத்தையும்
விட கணிசமான அளவிற்கு சிறியதாக
இருந்தன.
2008இன்
இறுதியில் மட்டும் இடது
முன்னணி மற்றும் தொழிற்சங்கங்களால்
அழைப்புவிடுக்கப்பட்டிருந்த
ஒருநாள் பொது வேலைநிறுத்தத்தில்
50
மில்லியனுக்கும்
மேற்பட்டவர்கள் பங்கெடுத்திருந்தனர்.
கேள்விக்கிடமின்றி,
காங்கிரஸ் தலைமையிலான
ஐக்கிய முற்போக்கு கூட்டணி
அரசாங்கம் அரசியல்ரீதியாக
எந்தளவிற்கு பலவீனமடைந்துள்ளது
என்பதால் இந்திய பெருநிறுவன
மேற்தட்டின் பிரிவுகளுக்கு
எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பொதுவாக
பார்த்தால் பெருவர்த்தகங்கள்
ஹசாரே போராட்டத்திற்கு ஆதரவாக
இருப்பதாக தோன்றும்.
2ஜி
செல்பேசி அலைக்கற்றை ஊழலின்
வெடிப்பைத் தொடர்ந்து,
அதில் அரசிடமிருந்து
பில்லியன் கணக்கான தொகையைக்
கொள்ளையடித்தமை மட்டுமல்லாமல்,
அரசாங்க கொள்கைகளில்
மற்றும் கேபினெட் மந்திரிமார்களைத்
தேர்ந்தெடுப்பதில் வர்த்தக
நிறுவனங்கள் மிகவும்
வெளிப்படையாகவும்,
அதிகாரத்தோடு
கட்டளைகளைப் பிறப்பித்ததும்
அம்பலபடுத்தப்பட்டன.
அந்த ஊழல் விவகாரம்
முக்கியமாக ஆட்சியிலிருக்கும்
அரசியல்வாதிகளின் ஒரு
பிரச்சினையாக்க வர்த்தகங்கள் ஆர்வத்தோடு
இருந்தன.
ஆனால்
பின்னர்,
ஊழல் எதிர்ப்பு
போராட்டம் மத்தியதட்டு
வர்க்கத்தில் சில உந்துதலைப்
பெற்ற போது,
ஊழல்மிக்க
அரசியல்வாதிகள் மற்றும்
அரசாங்க அதிகாரத்துவங்களிடமிருந்து
வர்த்தகங்கள் விடுவிக்கப்பட
வேண்டுமென்ற முறையீட்டோடு,
நெறிமுறைகளைக்
கூடுதலாக தளர்த்துவதற்கு
அழுத்தம் அளிக்கும் ஒரு வழியாக
பெருவர்த்தகங்களின் சில
பிரிவுகளால் பார்க்கும் நிலை
வந்தது.
எந்தவொரு
சமூகத்தில் பண-உறவு
ஆட்சி செலுத்துகிறதோ,
அந்த சமூகத்தில்
ஊழல் ஒரு தவிர்க்கமுடியாத
விளைபொருளாகும் என்பதே
எதார்த்தமாக உள்ளது.
அது முன்பில்லாத
அளவிற்கு அதிகமாக சமூகரீதியில்
துருவப்பட்டுள்ளது.
அதில் அரசியல்
மேற்தட்டு,
பெரும்பான்மையினராக
விளங்கும் நாட்டின் ஏழை
உழைப்பாளிகளை விலையாக கொடுத்து
ஒரு சிறிய முதலாளித்துவ
மேற்தட்டிற்கு சார்பாக
கொள்கைகளை பின்தொடர்கிறார்கள்.
கேள்விக்கிடமின்றி
இந்தியாவில் கடும் சமூக கோபம்
நிலவுகிறது.
சமீபத்திய
மாதங்களில் குறிப்பாக பன்னாட்டு
பெருநிறுவனங்கள் மற்றும்
அவர்களின் வினியோகஸ்தர்களுக்கு
அளிக்கப்படும் மானியங்களுக்கு
எதிராக அதிகளவில் பல வேலைநிறுத்த
அலைகளும்,
வியாபார
அபிவிருத்தி திட்டங்களுக்காக
விவசாயிகளை சுரண்டுவதற்கு
எதிரான போராட்டங்களும்
எழுந்துள்ளன.
இருந்தபோதினும்,
வெளிவேஷத்தில்
தொழிலாள வர்க்கத்தின்
அரசியல் பிரதிநிதிகளாக
நிற்கும் ஸ்ராலினிச நாடாளுமன்ற
கட்சிகளும்,
அவற்றின்
இடது முன்னணியும் திட்டமிட்டு
வர்க்கப் போராட்டத்தை
ஒடுக்கியுள்ளதால்,
இந்த கோபம் ஒரு
முற்போக்கான அரசியல் வெளிப்பாட்டை
காணவில்லை.
அன்னிய
முதலீட்டை ஈர்க்கவும்,
இந்தியாவை உலக
முதலாளித்துவத்தின் மலிவு-கூலி
உற்பத்தியாளராக மாற்றவும்
இந்திய முதலாளித்துவம்
முயன்றுள்ள கடந்த இரண்டு
தசாப்தங்களில்,
ஸ்ராலினிஸ்டுகள்
ஒன்றுமாற்றி ஒன்று புதுடெல்லியில்
வந்த வலதுசாரி அரசாங்கங்களுக்கு
ஆதரவு காட்டின.
இதில்
2004-08இல்
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய
முற்போக்கு கூட்டணிக்கு அதன்
நாடாளுமன்ற பெரும்பான்மையை
அளித்தமையும் உள்ளடங்கும்.
பி.ஜே.பி
மற்றும் சிவசேனா உட்பட ஜாதிய,
வகுப்புவாத மற்றும்
மதவாத அடிப்படையிலிருக்கும்
எதிர்கட்சிகளின் கூட்டங்களில்
பங்கெடுத்தமையே,
ஹசாரே போராட்டத்திற்கு
எதிரான அரசாங்கத்தின்
ஜனநாயக-விரோத
ஒடுக்குமுறைக்கு இந்திய
கம்யூனிஸ்ட் கட்சி
(மார்க்சிஸ்ட்)
மற்றும் இந்திய
கம்யூனிஸ்ட் கட்சியின் உடனடி
விடையிறுப்பாக இருந்தது.
ஜனநாயக உரிமைகளின்
பாதுகாப்பு என்றளவில்
மட்டுப்படுத்தப்பட்ட
அடித்தளத்தில் பி.ஜே.பி
உடன் சேர்ந்திருப்பதாக
ஸ்ராலினிஸ்டுகள் நியாயப்படுத்தினர்.
வகுப்புவாத
வன்முறைகளைத் தூண்டிவிடுவதிலும்,
பயங்கரவாதம் மற்றும்
பிரிவினைவாதத்திற்கு எதிரான
போராட்டம் என்ற பெயரில்
அடிப்படை
குடி உரிமைகளுக்குரிய ஆழமான
பாதைகளை அமைக்காமல் வழக்கமாக
அரசாங்கத்தை தாக்குவதிலும்
பல தசாப்த வரலாற்றைக்
கொண்டிருக்கும் பிஜேபி ஒரு
கொடிய வகுப்புவாத கட்சி என்பது
குறித்து அவர்களுக்கு எந்த
கவலையும் இல்லை.
|