WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
ஜேர்மனி
உலகப் பொருளாதாரத்தின் கீழ்நோக்குப் பாதையை ஜேர்மனிய மொத்த உள்நாட்டு உற்பத்தி
உயர்த்திக் காட்டுகிறது
By Barry Grey
17 August 2011
use
this version to print | Send
feedback
ஐரோப்பிய ஒன்றியத்தின் மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதார வளர்ச்சிக்கு
அதிகம் ஊக்கம் கொடுக்கும் ஜேர்மனியப் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டின் இரண்டாம்
கால்பகுதியில் கிட்டத்தட்ட வளர்ச்சியற்று நின்றுவிட்டது என்று செவ்வாயன்று
ஜேர்மனியின் புள்ளிவிபர அலுவலகம் வெளியிட்டுள்ள குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.
ஜேர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி
(GDP)
ஜூன்
மாதம் முடிவுற்ற மூன்று மாதங்களில் வெறும்
0.1
சதவிகிதம் என்றுதான் முந்தைய காலாண்டில் பதிவான
1.3
சதவிகிதத்துடன் ஒப்பிடும்போது உயர்ந்துள்ளது.
முதல் காலாண்டின் வளர்ச்சி முன்னர் மதிப்பீடு செய்யப்பட்டிருந்த
1.5
சதவிகிதத்திலிருந்து குறைந்துவிட்டது.
இரண்டாம் காலாண்டின்
GDP
புள்ளிவிபரங்கள் பொருளாதார வல்லுனர்களின் கணிப்புக்களைவிட மிகவும் குறைந்துவிட்டன;
அவர்கள்
0.5
சதவிகிதம் வரலாம் எனக் கூறியிருந்தனர்.
2009
ம்
ஆண்டு முதல் கால் பகுதிக்குப் பின் இது மிக வலுவற்ற காலாண்டு முடிவு ஆகும்;
அப்பொழுது ஜேர்மனி இரண்டாம் உலகப் போருக்குப் பின் மிக மோசமான மந்தநிலையில் இருந்து
வெளிவந்து கொண்டு இருந்தது.
ஜேர்மனிய வணிக உணர்வுப் போக்கு ஜூலை மாதம் ஒன்பது மாத காலத்தில்
குறைவாக இருந்தது;
முதலீட்டாளர்களின் உணர்வுப் போக்கு இரண்டரை ஆண்டுக் காலத்தில் மிகக் குறைந்த நிலையை
அடைந்தது.
மூலதனப் பொருட்களுக்கான உள்நாட்டுத் தேவை
15.1
சதவிகிதம் ஜூன் மாதத்தில் சரிந்தது;
வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நுகர்வோர் பொருட்களுக்கான தேவைகளும் சரிந்தன.
ஜேர்மனியில் இவ்வகையில் கிட்டத்தட்ட பொருளாதார வளர்ச்சி
சரிந்துள்ளது பரந்த சர்வதேசப் போக்குகளுடன் ஒத்துத்தான் உள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ புள்ளிவிபர அலுவலகமான யூரோஸ்டாட் செவ்வாயன்று
17
நாடுகள்
அடங்கிய யூரோ வலையப் பகுதியின்
GDP
இரண்டாம் காலாண்டின்
0.2
சதவிகிதம்தான் உயர்ந்தது;
இது ஆண்டின் முதல் மாதங்களின் அதிகரிப்பான
0.8
சதவிகிதத்துடன் ஒப்பிடத்தக்கது.
2009
நடுப்பகுதிக்குப் பின் இது மிகவும் வலுவற்ற காலாண்டுக் கணக்காகும்.
யூரோப் பகுதியில் தொழிற்துறை உற்பத்தி,
மே
மாதத்துடன் ஒப்பிடும்போது ஜூன் மாதம்
0.7
சதவிகிதம் எனச் சரிந்தது.
ஜூலை மாதம் ஐரோப்பிய தயாரிப்பு வளர்ச்சி வலுவிழந்து;
கிட்டத்தட்ட ஓராண்டில் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கை மிகக் குறைவான தன்மைக்குச்
சரிந்தது.
வெள்ளியன்று பிரான்ஸ் இரண்டாவது காலாண்டில் பூஜ்ய வளர்ச்சியைக்
காட்டியது;
பிரிட்டன் வெறும்
0.2
சதவிகித
அதிகரிப்பு என அறிவித்தது:
நெதர்லாந்து
0.1
சதவிகிதம்,
ஸ்பெயின்
0.2
சதவிகிதம்,
போர்த்துக்கல் பூஜ்ய வளர்ச்சி விகிதம்;
இத்தாலி
0.3
சதவிகிதம்.
ரஷ்யாவில் பொருளாதார வளர்ச்சி இரண்டாம் காலாண்டில் தொடர்ச்சியாக வலுவிழந்தது.
கடந்த மாதம் அமெரிக்கா அதன் காலாண்டு வளர்ச்சி
1.3
சதவிகிதம் என்று குறிப்பிட்டது;
இதன் முதல் காலாண்டு வளர்ச்சி
0.4
சதவிகிதம்
என்பதிலிருந்து கீழிறங்கியதால் இது எதிர்பார்ப்பைவிட மிகக் குறைவாகும்,
அதையொட்டி
2011
முதல்
அரையாண்டில் நிகர வளர்ச்சி விகிதம்
0.8
சதவிகிதம் எனப் போயிற்று.
2010ம்
ஆண்டின் வளர்ச்சி விகிதமான
3
சதவிகிதத்துடன் இது ஒப்பிடத்தக்கது.
ஜப்பானோ அல்லது எழுச்சி பெற்றுவரும் ஆசியப் பொருளாதாரங்களான சீனா
அல்லது இந்தியாவோ உலக வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் என்னும் தீவிர வாய்ப்புக்கள்
ஏதும் இல்லை.
வெள்ளியன்று ஜப்பான் அதன்
GDP
இரண்டாம் காலாண்டில்
0.3
சதவிகிதம் குறைந்தது எனக் கூறியது;
இந்த விளைவு ஒரு நல்ல அறிகுறி எனக் கருதப்படுகிறது;
ஏனெனில் இது பொருளாதார வல்லுனர்களின் ஒருமித்த கணிப்பைவிட உயர்ந்தது ஆகும்.
ஹாங்காங்கின் பொருளாதாரம் ஏப்ரல்-ஜூன்
காலத்தில் உலக நிதிய நெருக்கடி வெடித்ததிலிருந்து முதல் தடவையாகச் சுருங்கியது.
சீனா,
இந்தியா இரண்டுமே தங்கள் பொருளாதாரங்கள் சற்று நிதானத்தில் இருக்க வேண்டும் என
முயல்கின்றன;
அவை பெருகிய பணவீக்கம் மற்றும் ஊகக் குமிழிகளை முகங்கொடுக்கின்றன;
இதற்கு முக்கியக் காரணம் அமெரிக்க அரசாங்கத்தின் மலிவான டாலர் கொள்கை ஆகும்.
ஜூலை மாதம் சீன பணவிக்க விகிதம்
6.5
சதவிகிதம் எனப் பதிவு செய்தது;
ஒரு மூன்று ஆண்டு காலத்தில் இது அதிகம் ஆகும்.
அதன் நாணயம் யுவானை டாலருடனும் மற்ற நாணயங்களுடனும் ஒப்பிடும்போது ஏற்றம் அடைய அது
அனுமதித்துள்ளது;
இதற்குக் காரணம் கடன்கொடுத்தலை இறுக்கப் பிடித்தல் மற்றும் விலையுயர்வுகளைத்
தடுத்தல் ஆகியவற்றிற்குத்தான்.
நிதியச் சந்தைகளின் ஏற்ற இறக்கங்கள் மற்றும் பெருகும் அரசாங்கக்
கடன்கள்,
வங்கி நெருக்கடிகள் ஆகியவற்றை உலக வளர்ச்சிக் குறைவு அடிக்கோடிட்டுக் காட்டுவதுடன்
உயர்த்தியும் காட்டுகிறது.
இத்தாலி,
ஏன் பிரான்சில் கூட ஐரோப்பிய அரசாங்கக் கடன் பரவுவதுடன் இது இணைந்துள்ளது;
அதேபோல் அமெரிக்கக் கடன் தரம் முதல் தடவையாக குறைக்கப்பட்டிருப்பதுடனும்
இணைந்துள்ளது.
உலகப் பொருளாதாரம் செப்டம்பர்
2008ல்
வோல் ஸ்ட்ரீட் சரிந்ததைத் தொடர்ந்து வந்த சரிவில் ஒரு புதிய கட்டத்திற்கு
நகர்ந்துள்ளது;
இப்பொழுதுள்ள நிலையில் டாலரை அடிப்படையாகக் கொண்டுள்ள உலக நாணய முறை மீட்க முடியாத
அளவிற்கு உறுதி குலைந்துவிட்டது;
ஐரோப்பிய பொது நாணயத்தின் மதிப்பு,
ஐரோப்பாவிற்குள் இருக்கும் சமச்சீரற்ற தன்மை மற்றும் தேசிய விரோதங்களினால்
குறைமதிப்பிற்கு உட்பட்டுள்ளது;
இதைத்தவிர இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய முழு பொருளாதார உறவுகளின்
கட்டுமைப்பும் காணக்கூடிய அளவிற்குச் சிதைந்து கொண்டிருக்கிறது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெடித்த பொருளாதார நெருக்கடி ஒரு
தற்காலிகச் சரிவு,
இதைத் தொடர்ந்து உண்மையான,
நிலைத்திருக்கும் மீட்பு வந்துவிட முடியும் என்று கூறப்படுவதை இனி
நம்பகத்தன்மையுடன் ஏற்பதற்கில்லை.
கொள்கை இயற்றுபவர்கள் பெரும் வங்கிப் பிணை எடுப்புக்கள் மற்றும் சிக்கன
நடவடிக்கைகள் அடிப்படைப் பிரச்சினைகளை எதையும் தீர்க்கவில்லை,
பொருளாதார நிலைமை சரிந்து வருகிறது என்பதை ஒப்புக் கொள்ளும் கட்டாயத்தில்தான்
உள்ளனர்.
கடந்த வாரம் அமெரிக்க பெடரல் ரிசர்வ் போர்ட் ஒப்புமையில் சாதாரண
வளர்ச்சிக்கு மீட்பு என்று முன்பு கணிக்கப்பட்டதைத் திரும்பப் பெற்றுக் கொண்டு,
குறைந்தபட்சம் இன்னும் இரு ஆண்டுகளுக்கேனும் வட்டி விகிதங்களைக் கிட்டத்தட்ட பூஜ்ய
விகிதத்தில் நிறுத்துவதற்கு உறுதியளித்தது.
இங்கிலாந்து வங்கியும் இதேபோல்
2011, 2012க்கான
அதன் வளர்ச்சிக் கணிப்புக்களைக் குறைத்துவிட்டது;
அதன் கவர்னர் மெர்வின் கிங் வட்டி விகிதங்களை அக்காலத்தில் உயர்த்துவதாக இல்லை
என்று பரந்த முறையில் குறிப்புக் காட்டியுள்ளார்.
1930களில்
இருந்த பெருமந்த நிலையுடன் ஒப்புமைகளை அதிகமாகிக் கொண்டிருக்கின்றன;
அத்துடன் அரசாங்கங்கள்,
கொள்கை இயற்றுபவர்கள் மற்றும் விமர்சகர்களிடம் இருந்தும் தீவிர எச்சரிக்கைகள்
வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
உலக வங்கியின் தலைவர் ரோபர்ட் ஜோல்லிக் ஞாயிறன்று ஆஸ்திராலியாவுக்கு பயணிக்கையில்,
“நாம்
ஒரு புதிய ஆபத்தான பகுதியில் நுழைகிறோம்”
என்றார்.
உலகத் தலைவர்கள்
“குறுகிய
மற்றும் நீண்ட கால வலுவான நடவடிக்கைகளை எடுத்து நம்பிக்கையை மீட்க வேண்டும்”
என்றும் அவர் கூறினார்.
ஆனால் அத்தகைய நடவடிக்கைகள் யாவை என்பது பற்றி அவர் தெளிவாகத் தெரிவிக்கவில்லை.
“இரண்டாம்
காலாண்டு ஜேர்மனிய வணிக வட்டத்தில் ஒரு திருப்புமுனையைக் குறிக்கிறது”
என்று
Unicredit
ன்
பகுப்பாய்வாளர்
Andreas Rees
கூறினார்.
“ஊக்கம்
கொடுத்த வளர்ச்சிக் காலம் நம்மை விட்டுப் பின் தங்கியுள்ளது”
என்றும் அவர் சேர்த்துக் கொண்டார்.
ஜேர்மனியின் பொருளாதார ஆலோசகர் குழுவின் உறுப்பினரான
Christoph Schmidt
ராய்ட்டர்ஸிடம்,
“நெருக்கடிக்கு
அருகே வந்துவிட்டோம் என்பதில் இருந்து நாம் மிகத் தொலைவில்தான் உள்ளோம்.
உலகின் மற்ற பகுதிகளில் இருந்து ஜேர்மனி ஒன்றும் தனித்து இருந்துவிடவில்லை”
என்றார்.
கொலம்பியாப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஜோப் ஸ்டிக்லிட்ஸ்,
முன்னாள் உலக வங்கியின் தலைமைப் பொருளாதார வல்லுனராக இருந்தவரும்,
நோபல் பரிசு பெற்றவருமான இவர்,
ஆகஸ்ட்
10ம்
திகதி
பைனான்சியல்
டைம்ஸில்
வெளியிட்ட கட்டுரை ஒன்றில்
“ஒரு
நீண்ட காலப் பாதிப்பு ஒன்றுதான் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கும் நிகழ்வாக இருக்கும்
எனத் தோன்றுகிறது”
என்று எழுதியுள்ளார்.
முதலீட்டு நிர்வாக நிறுவனமான
Pimco
வின்
இணைத் தலைமை முதலீட்டு அதிகாரியும்,
அதன் நிறுவனருமான பில் க்ரோஸ் ஆகஸ்ட்
12ம்
திகதி
வாஷிங்டன்
போஸ்ட்டில்
எழுதிய கட்டுரையில்
“ஒரு
நிதிய முன்னோக்கில் இருந்து கொள்கை இயற்றுபவர்கள் நமக்கு மந்தநிலையைத்தான் சுட்டிக்
காட்டியுள்ளனர்,
1930களின்
பேரழிவுத் தன்மையைத்தான் இது கொண்டிருக்கும்;
21ம்
நூற்றாண்டின் குறைந்த வளர்ச்சி என்றாலும் மூச்சுவிட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்கப்
பொருளாதார நிலை என்பதற்கு மாறாகத்தான் இது இருக்கும்”
என்று கூறியுள்ளார்.
நியூ யோர்க் பல்கலைக்கழகத்தின்
Stern School of Business
ல்
பொருளாதார வல்லுனராகவும் பேராசிரியராகவும் உள்ள
Nouriel Roubini
சமீபத்தில் சில கட்டுரைகளை வெளியிட்டு
“இரு
சரிவுடைய மந்த நிலை வருவதற்கான வாய்ப்பு
50
சதவிகிதம் உள்ளது”
என்று வாதிட்டுள்ளார்;
மேலும் கடந்த வாரம்
wsj.com
க்குக்
கொடுத்த பேட்டி ஒன்றில் முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் பற்றிய மார்க்சின்
பகுப்பாய்வு சரிதான் என்பதையும் ஒப்புக் கொண்டார்.
“கார்ல்
மார்க்ஸ் சரியாகவே கூறியுள்ளார்”
என்றார் ரூபிணி.
“ஒரு
கட்டத்தில் முதலாளித்துவம் தன்னையே அழித்துக் கொண்டுவிடும்.
ஏனெனில் உழைப்பிலிருந்து மூலதனத்திற்கு வருமானத்தை மாற்றிக் கொண்டே இருக்க முடியாது;
அதுவும் கூடுதல்திறன் இல்லாத நிலையில்,
கூட்டுத் தேவை
(aggregate demand)
இல்லாத
நிலையில்.
சந்தைகள் செயல்படும் என்று நாம் நினைத்தோம்.
அவை செயல்படவில்லை.”
அவ்வப்பொழுது தயாரிக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும் முழு
மந்தநிலையை நோக்கிச் சரிவைத் தடுக்கத் தோல்வி அடைகையில்,
புதிய வங்கித் தோல்விகள்,
அரசாங்கக் கடன்கள் திருப்பிக் கொடுக்க முடியாத அலைகள் ஏற்படுகையில்,
இயலாத தன்மையும் அச்சமும் ஆளும் வர்க்கத்திற்குள் பெருகுகின்றன.
முக்கிய செய்தித்தாள்களில் வந்துள்ள சமீபத்திய தலையங்கங்களாவன:
“உலகளாவிய
நம்பகத்தன்மை நெருக்கடி”
(வோல்
ஸ்ட்ரீட் ஜேர்னல்,
ஆகஸ்ட்
13);
“நிதியச்
சந்தைகள் திறன் எல்லையில் திணறுகின்றன”
(பைனான்சியல்
டைம்ஸ்
ஆகஸ்ட்
13),
“கீத்னரும்
பெர்னன்கேயும் புதிய நெருக்கடியை எதிர்த்துப் போரிட கிடங்கில் ஆயுதமற்றுள்ளனர்”
(வாஷிங்டன்
போஸ்ட்,
ஆகஸ்ட்
14).
ஆனால் இவர்கள் அனைவரும் இந்த நெருக்கடியில் இருந்து தொழிலாள
வர்க்கத்தின் மீது மிகக் கடுமையான தாக்குதல்கள் நடத்துவதின் மூலம் தங்களை
மீட்டுக்கொள்ள முற்படுவதில் உடன்பாட்டில் உள்ளனர்.
தாராளவாதிகளும் கன்சர்வேடிவ்களும்,
ஜோன் மேநார்ட் கேயின்ஸ் மற்றும் மில்டன் ப்ரீட்மனைப் பின்பற்றுவர்களும்,
முந்தைய நூற்றாண்டின் அடிப்படைச் சமூகச் சீர்திருத்தங்களைத் தாக்க வேண்டும் என்பது
மற்றும் உலக மக்களின் பெரும்பாலோரின் வாழ்க்கைத் தரங்களைப் பின்னோக்கித் தள்ள
வேண்டும் என்று கருதுவதில் ஒருமித்துத்தான் உள்ளனர்.
சமூகநலத் திட்டங்களில் இன்னும் மிருகத்தன வெட்டுக்களைத் தவிர,
வேலைகள் ஊதியங்கள் மீது ஒரு புதிய தாக்குதல் தயாரிக்கப்படுகிறது.
E.On
என்னும்
ஜேர்மனியின் மிகப் பெரிய பொதுப் பயன்பாட்டு நிறுவனம் கடந்த வாரம் அது கிட்டத்தட்ட
11,000
பணிநீக்கங்களைச் செய்யக்கூடும் எனக் கூறியுள்ளது;
ஏனெனில் முதல் தடவையாக ஒரு தசாப்தம் முன்பு அரச உடைமைகளாக இருந்த பயன்பாட்டு சேவை
வசதிகளிலிருந்து தனியார் மயமாக்கப்பட்ட அமைப்பு என்னும் முறையில் அது நஷ்டம்
அடைந்துள்ளது.
திங்களன்று
“அமெரிக்கத்
தொழில்துறை நிறுவனங்கள் இரட்டைச் சரிவு என்னும் இடருக்குத் தயாராகின்றன”
என்ற தலைப்பில்
பைனான்சியல்
டைம்ஸ்
ஒரு
கட்டுரையை வெளியிட்டது.
இச்செய்தித்தாள்,
எண்ணெய்,
எரிவாயுத் தொழில்களுக்குக் குழாய் தயாரிக்கும் கார்ட்னர் டென்வர் நிறுவனத்தின்
தலைமை நிதி அதிகாரியான மைக்கேல் லார்சன்
“நாம்
ஒரு குழுவைக்கூட்டி,
நாட வேண்டிய ஆலைகளின் பட்டியலைத் தயாரித்தோம்;
பெறக்கூடிய தேவைகளில் குறைவு என்ற நிலை ஏற்பட்டால் பணியாளர்கள் குறைப்பு என்ற
எண்ணிக்கையும் தயாராக வைத்துள்ளோம்,
செயல்படுத்துவதற்கு”
என்று கூறியதாக மேற்கோளிட்டுள்ளது. |