WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
:
லிபியா
லிபியா பற்றி பேராசிரியர் கோல் பதில் கூறுகிறார் புத்திஜீவித அரசியல் திவால்தன்மை பற்றிய ஒப்புதல்
By
Bill Van Auken
16 August 2011
use
this version to print | Send
feedback
தன்னுடைய
Informed Comment
வலைத் தள பதிவுக்
கட்டுரையில் மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் மத்திய கிழக்கு வரலாற்றுத் துறைப்
பேராசிரியராக இருக்கும் ஜுவன் கோல்
உலக சோசலிச வலைத் தளத்தை
அவதூறு கூறும் வகையில்,
நாம் லிபியாவின்
கிழக்குப் பகுதியை கடாபி ஆட்சி மீண்டும் கைப்பற்றும் முயற்சிகளுக்கு ஆதரவு
தருகிறோம்,
லிபியக் குடிமக்கள்
படுகொலை செய்வதை வரவேற்போம் என்ற பொய்யை எழுதினார்.
ஆகஸ்ட்
10ம் திகதி
உலக சோசலிச வலைத் தளம்
“பேராசிரியர்
ஜூவன் கோலிற்கு ஒரு பகிரங்கக் கடிதம்:
அவதூறுக்கு ஒரு
பதில்”
என்பதை வெளியிட்டு,
கோலின்
பொய்களுக்குப் பதிலளித்து அவரின்
Informed Comment
இல்
“முழுமையாக,
பகிரங்கமாகத் தான்
எழுதிய கருத்துக்களை திரும்பப் பெறவேண்டும்”
என்று கோரியது.
ஆகஸ்ட்
11ம் திகதி,
கோலிடம் இருந்து
நாம் கீழ்க்கண்ட மின்னஞ்சல் பதிலைப் பெற்றோம்:
“ஹை!
நீங்கள் கொலைக்கார
கடாபி ஆட்சிக்கு ஆதரவைக் கொடுப்பதையும்,
பெங்காசியில் உள்ள
மக்கள் அவரிடம் இருந்து பாதுகாப்பதற்கு முயலும் நபர்கள் மீது நடத்தும்
தாக்குதலையும் நிறுத்துவீர்கள் என்று நான் நம்புகிறேன்.
வாழ்க,
ஜூவன்
எவரேனும்
குடிபோதையில் இருந்தால்தான் இத்தகைய விடையிறுப்பு வரும் என்று ஒருவர்
எதிர்பார்க்கலாம்.
ஆனால் கோலைப்
பொறுத்தவரை,
அவ்வாறு கூறுவது
தயவுகாட்டும் விளக்கம் ஆகிவிடும்.
உண்மை என்ன
என்றால்,
தன்னுடைய
நிலைப்பாட்டை பாதுகாக்க ஒரு நேர்த்தியான வாதத்தைப் புரிவதற்கு அவரால் இயலாது.
கோல் கொடுத்துள்ள
ஒரு-வரி
பதில் என்பது அவருடைய ஆரம்ப அவதூறுக்கு ஒரு சொல் ஆதாரச் சான்றுகூட கொடுக்காமல்
வெறுமே மீண்டும் வலியுறுத்துவது என்ற முறையில்தான் உள்ளது.
உலக
சோசலிச வலைத் தளத்திடம்
அவர் காட்டும் விரோதப்போக்கு,
அவர் ஆதரவு
கொடுக்கும் லிபியாவில் இழிந்த முறையில் நடத்தப்படும் ஏகாதிபத்திய செயற்பாட்டிற்கு
நாம் உடன்பட மறுப்பதில் இருந்து தோன்றுகிறது.
வரலாற்றுரீதியாக
ஒடுக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு எதிரான ஏகாதிபத்திய போர்களுக்கு எதிர்ப்பு என்னும்
அடிப்படையில் சோசலிச,
மார்க்சிசக்
கொள்கையை நாம் அடித்தளமாகக் கொண்டுள்ளோம்.
கடாபியை நாம் ஒரு
சோசலிச நிலைப்பாட்டின்கீழ் எதிர்க்கிறோம். அவருடைய ஆட்சி மற்றும்
ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒரு சுயாதீனமாக தொழிலாள வர்க்கம் அணிதிரண்டு போராட
வேண்டும் என்ற அடித்தளத்தைக் நாம் கொண்டுள்ளோம்.
மிகவும்
வெட்கமற்ற ஆரவாரத்துடன் கோல் தன் பணிகள் மூலம் ஆதரவை கொடுக்கும் லிபியப் போர்
தொடங்கி ஐந்து மாதங்களுக்குப் பின்னர்,
இத்தலையீடு ஒரு
சங்கடமானதாக மாறி,
அவருடைய சொந்த
நிலையும் சமரசத்திற்கு உட்படுத்தி அம்பலமாகியுள்ளது.
இந்நிலையிலுள்ளவர்கள் அவர்களின் நிலைப்பாட்டிற்கு வரும் சவால்களை இழிந்த,
நேர்மையற்ற
முறையில்தான் எதிர்கொள்ளுவர்.
லிபியப்
போருக்கு ஆதரவை வலியுறுத்திய அவருடைய
“இடதிற்கு ஒரு
பகிரங்கக் கடிதம்”
என்பது கடந்த
மார்ச்சில் வெளிவந்ததில் இருந்து எதுவுமே அதிகம் நடைபெறவில்லை என்பது போல் அவர்
எழுதியுள்ளார்.
தன்னுடைய
Informed Comment
பதிவை கோல்
“சுதந்திர லிபியச்
சக்திகள்”
என்று அவர் குறிப்பிடும்
பிரிவினருக்கு ஆதரவைக் கொடுக்கத் தொடர்கையில்,
இப்போர்
நடத்தப்படும் முறை,
இதே சக்திகளின்
வளர்ச்சி மற்றும் இதில் தொடர்புடையது
“சுதந்திரத்திற்கான”
போராட்டமோ,
“மனித உரிமைகளுக்கான”
புனிதப்போரோ அல்ல
என்பதுதான் தெளிவாக வெளிவந்துள்ளது.
மாறாக இது
ஏகாதிபத்தியச் சக்திகள் லிபியாவில் வெற்றி அடைந்து அங்கு இன்னும் தமக்கு வளைந்து
கொடுக்கும் ஒரு கைப்பாவை அரசாங்கத்தை நிறுவவேண்டும் என முயல்வதுதான்
வெளிப்பட்டுள்ளது.
ஜூன் மாதம்
“லிபியப் போரில் மிக
அதியுயர் தவறுகள்
10” என்ற
கட்டுரையில் கோலே ஒப்புக் கொண்டுள்ளபடி,
அமெரிக்க-நேட்டோத்
தாக்குதல் குடிமக்களைக் பாதுகாப்பதில் எந்த முக்கியத்துவத்தையும் காட்டவில்லை.
“லிபிய
தலையீட்டை சட்டபூர்வமானது என்பது போர் புத்திசாலித்தனமாக நடத்தப்படுகிறது என்ற
பொருளைத் தராது”
என்று கோல்
எழுதினார். “ஐக்கிய
நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானத்திற்குப் பின் இது முயம்மர் கடாபியின் தீய
தாக்குதல்களில் இருந்து குடிமக்களைக் பாதுகாக்கும் நோக்கம் கொண்ட
மட்டுப்படுத்தப்பட்டதாக இது இருக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தியிருந்தேன்….”
மாறாக,
“நேட்டோ,
தலைநகர்
திரிப்போலியை பெரும் தாக்குதலுக்கு உட்படுத்தும்
“அதிர்ச்சி,
பயமுறுத்தும்”
முறையைக் கையாண்டது;
குறிப்பாக
சர்வாதிகாரி முயம்மர் கடாபியின் வளாகத்தைத் தாக்கியது…எந்த
அளவிற்கு என்றால்,
அது ஒரு இலக்கு
வைக்கப்பட்ட படுகொலை முயற்சி எனத் தோன்றியது. தலையீட்டின் நோக்கம் பற்றிக்
குறைகூறுவோரின் மனங்களில் இது பல வினாக்களை எழுப்பியுள்ளது.”
என அவர் எழுதினார்.
ஏகாதிபத்திய
சக்திகள் பாதுகாப்புக் குழுத் தீர்மானத்தின் விதிகளை ஒட்டி உறுதியாக நடக்க வேண்டும்
என்று கோல்
“வலியுறுத்தினார்.”
ஆனால் அவை
பேராசிரியரின் ஆலோசனையைக் கேட்கவில்லை;
ஏனெனில் எண்ணெய்
வளமுடைய வட ஆபிரிக்க நாட்டில் தடையற்ற கட்டுப்பாட்டை நிறுவும் நோக்கம் உடைய
ஆக்கிரமிப்புப் போரை நடத்துவதில் மிகுந்த ஆர்வத்தைக் காட்டினர்.
இத்தீர்மானம்
இப்புதிய காலனித்துவ வகைச் செயலுக்கு ஒரு மறைப்பத்தான் வெறுமே கொடுத்தது.
பேராசிரியர் கோலின் செம்மறியாட்டு கத்தலும் அதைத்தான் வெளிப்படுத்தியது.
பெங்காசித்
தளமுடைய இடைக்கால தேசியக் குழுவின்
(TNC)
தலைவர் அப்துல் முஸ்தபா
ஜலில் தன் முழு அமைச்சரவையையும் பதவி நீக்கம் செய்தார். அவருடைய உறுப்பினர்கள் ஜூலை
28 அன்று ஜெனரல்
அப்தல் படா யூனிஸ் படுகொலையில் தொடர்பு கொண்டிருந்தனர் என்ற சந்தேகத்தின் பேரினால்
இது நடந்தது. கொலையுண்டவரோ கடாபியின் முன்னாள் உள்துறை மந்திரியாக இருந்து இடைக்கால
தேசியக் குழுவின் இராணுவத் தலைவராவதற்காக அங்கிருந்து வந்தவர்.
உலக சோசலிச வலைத்
தளத்திற்கான தனது பதிலை
பேராசிரியர் இந்நிகழ்வு நடந்து சில நாட்களுக்குப் பின்தான் விடை கொடுத்துள்ளார்.
“சுதந்திர லிபியச்
சக்திகள்”
பற்றி என்ன கூறுவது?
அரசாங்கத்தையே பதவிநீக்கம் செய்வது என்பது
“எழுச்சியாளர்களிடையே”
உள்நாட்டுப்போர்
வெடிப்பதை தாமதப்படுத்தும் நோக்கத்தை கொண்டது. அது யூனிசின் சக்திவாய்ந்த ஒபைடி
பழங்குடியை அமெரிக்க ஆதரவுடைய
பெங்காசியில் உள்ள
இடைக்கால தேசியக்குழுவிற்கு எதிராக போர்புரிய வைத்திருக்கும்.
இதற்கிடையில் கூட்டு தூக்குத் தண்டனைகள்,
சித்திரவதை மற்றும்
இனச்சுத்திகரிப்பு கொலைகள் என்று
“எழுச்சியாளர்களால்”
செய்யப்படுகின்றன
என்ற தகவல்கள் பெருகியுள்ளன.
இந்தச் செயல்கள்
மற்றும் இடைக்கால தேசியக்குழுவின் தலைமை அமைந்துள்ள முறை இவற்றைக் கவனிக்கையில்—முன்னாள்
கடாபி மந்திரிகள்,
நீண்டகால
“CIA” ஆதரவாளர்கள்
மற்றும் இஸ்லாமியவாதிகள்—இதன்
வெற்றி கடாபியின் ஆட்சியை விடக் குறைந்த ஊழலையும் கொண்டிருக்காது,
குறைந்த
அடக்குமுறையையும் கையாளாது என்றுதான் நம்ப முடியும்.
போர் ஆதரவு
கொடுக்கும்
நியூ யோர்க் டைம்ஸ்
கூட லிபியாவை
“விடுவிக்கும்”
போராட்டம் என்று
கூறப்படுவது “பிரிவுகளுக்கும்
பழங்குடியினருக்கும் இடையே மறைமுக மோதல் என்று வெளிப்பட்டுவிட்டது;
இது பல நூற்றாண்டு
காலமாக லிபியாவைப் பீடித்திருந்த பழங்குடி அழுத்தங்களால் அது சிதைவடைந்து செல்லும்
எனத் தோன்றுகிறது. அதாவது இரத்தக்களரிதான் ஏற்படும்”
என்று கூறியுள்ளது.
கடாபியின்
அடக்குமுறையின்போது கொலையுண்ட எண்ணிக்கையைவிட இப்பொழுது இன்னும் அதிகமான மக்கள்
ஏற்கனவே இந்த அமெரிக்க-நேட்டோ
லிபியாவிற்கு எதிராக நடத்தும் போரில் கொல்லப்பட்டுவிட்டனர். இன்னும் அதிகப்
படுகொலைகள் என்ற அச்சுறுத்தல்தான் தொடுவானில் தெரிகிறது.
இப்பொழுது
கோல் என்ன கூறினாலும்,
அவருடைய கரங்களிலும்
குருதிக் கறைதான் படிந்துள்ளது.
ஈராக்கில் அமெரிக்கா
நடத்திய போருக்கு ஓர் எதிர்ப்பாளர் என்ற வகையில் அவர் ஒரு புத்திஜீவி என்ற வகையில்
பெற்ற மதிப்புடன் தனது ஆளுமையை லிபியாவில் அப்பட்டமாக நடைபெறும் ஏகாதிபத்திய
செயற்பாட்டிற்கு ஆதரவு கொடுத்துள்ள முறையில் அவர் ஒரு மலிந்த கீழ்த்தரமான
பங்கைத்தான் கொண்டுள்ளார்.
உலக சோசலிச வலைத் தளம்
முதலில் ஏப்ரல் மாதம்
““(பார்க்கவும்.
லிபியா,
ஏகாதிபத்தியம் மற்றும் "இடது"
புத்திஜீவிகளின் சரணாகதி: பேராசிரியர்
ஜூவான் கோல் விவகாரம்”),
என்ற தலைப்பில் கூறிய விமர்சனத்திற்கு நேர்மையாக விடையிறுக்க
விருப்பம் இல்லாத,
இயலாத வகையில் கோல் பொய்கள்,
அவதூறுகள் ஆகியவற்றைக் கூறித் தப்பிக்கிறார்.
எமது பகிரங்கக் கடிதத்திற்கு கோலின் இந்த நெறியற்ற,
மெத்தன விடையிறுப்பை நாங்கள் நிராகரிக்கிறோம்;
உலக சோசலிச வலைத் தளத்திற்கு
எதிராகக் கூறியுள்ள அவதூறுகளை அவர் பகிரங்கமாக திருப்பிப் பெற
வேண்டும் என்று தொடர்ந்து கோருகிறோம்
|