சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Legacy of 10 years of SPD-Left Party rule in Berlin

பேர்லினில் SPD- இடது கட்சி ஆட்சியின்

By Sven Heymann
15 August 2011

use this version to print | Send feedback

கடந்த 10 ஆண்டுகளில் பேர்லினில் சமூக நிலைமைகள் ஜேர்மனியின் பிற இடங்களைவிட பெரும் திகைப்பைக் கொடுக்கும் தன்மையைக் கொண்டுவிட்டன. இதற்குக் காரணம் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) மற்றும் இடது கட்சிக் கூட்டணி அரசாங்கத்தின் கொள்கைகளின் நேரடி விளைவுகளாகும்.

ஜனவரி 2002ல் அதிகாரத்தை எடுத்துக் கொண்டதில் இருந்து SPD-இடது கட்சியின் கீழ் உள்ள செனட் பேர்லின் மக்களின் பெரும்பாலோரின் நலன்களுக்கு நேரடி எதிரான கொள்கைகளைத்தான் தொடர்ந்து வந்துள்ளது. பேர்லின் வங்கி ஊழல் தொடர்புடைய 21.6 பில்லியன் யூரோக்கள் இழப்புக்களை ஈடு செய்வதற்கு ஒப்புக் கொண்டபின், SPD மற்றும் இடது கட்சி ஆகியவை கிட்டத்தட்ட முற்றிலும் தொழிலாளர்களுக்கு எதிரான சிக்கன நடவடிக்கைகளை இடைவிடாமல் செயல்படுத்தியுள்ளன. இந்நடவடிக்கை வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளையும் பாதித்துள்ளது.

வேலையின்மையும் வறுமையும்                               

கடந்த மாதம் பேர்லினில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 233,403 என 13.5% த்திற்கு ஒப்பாக இருந்தது. இது ஜேர்மனிய தலைநகரை அனைத்து 15 கூட்டாட்சி மாநிலப் பகுதிகளிலும் மிக உயர்ந்த வேலையின்மைப் பகுதியாக ஆக்கியுள்ளது. கடந்த 12 மாதங்களில் அனைத்து மாநிலங்களிலும் வேலையின்மை குறைந்துவிட்டாலும்கூட, பேர்லினில் அது சற்றே அதிகரித்துள்ளது.

வேலையின்மையில் உள்ள பலரும் வாழ்க்கைக்கு ஆதாரமான வேலை வாய்ப்புக்கள் ஏதுமின்றி பணியில் இருந்து நின்றுள்ளனர். வேலையில்லாதவர்களில் ஐந்தில் நான்கு பேர் மோசமான Hartz IV நலன்கள் முறையைத்தான் நம்பியுள்ளனர்; அதாவது குறைந்தபட்சம் ஓராண்டிற்காவது அவர்கள் நீடித்த வேலையின்மையில் இருந்தால். உத்தியோகபூர்வமாக வேலையின்மை எனப் பதிவு செய்யப்பட்டுள்ளவர்களில் பாதிக்கும் மேலானவர்களுக்கு தொழிற்பயிற்சி தகுதிகள் இல்லை; இதற்கு ஓரளவு காரணம் SPD-இடது கட்சிகள் கல்வித்துறையில் ஏற்படுத்தியுள்ள வெட்டுக்கள்தான்.

பல்கலைக்கழகங்களுக்கு கொடுக்கப்படும் நிதியங்கள் கடுமையாக குறைக்கப்பட்டுவிட்டன; பள்ளிகளுக்கு கொடுக்கப்படும் நிதியங்களும் இதில் இருந்து விலக்கல்ல. 2003ம் ஆண்டு, SPD-இடது கட்சி நிர்வாகம் இலவச கற்பிக்கும் பொருட்கள் அளித்தல் என்ற நிலையை அகற்றிவிட்டது; இதையொட்டி பெற்றோர்கள் ஆண்டு ஒன்றிற்கு 100 யூரோக்கள் தங்கள் குழந்தைகளில் கல்விக்காக செலவழிக்க வேண்டியதாயிற்று. பேர்லின் நகர-மாநிலத்தின் பள்ளிப் பாடப்புத்தகங்களுக்கான செலவினங்கள் ஓராண்டிற்குள் கிட்டத்தட்ட பாதி குறைக்கப்பட்டுவிட்டது; ஆனால் பள்ளியில் பயிலும் மாணவரின் எண்ணிக்கையோ ஒப்புமையில் நிரந்தரமாகத்தான் உள்ளது.

கிட்டத்தட்ட 300,000 பேர்லின் இல்லங்களில், ஏறத்தாழ 441,000 மக்கள் இந்த ஆண்டு Hartz IV பொதுநலச் செலவுக் கட்டுப்பாடுகளினால் பாதிக்கப்பட்டனர். சமூக நிலையுடன் மிக நேரடியாகக் கல்வித் தரங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், வேலையின்மை மற்றும் அதையொட்டி வருங்கால வாய்ப்பின்மை போன்ற இயல்புகள் பல குடும்பங்களில் கிட்டத்தட்ட பரம்பரைச் சொத்தாக மாறிவிட்டன.

ஆனால் வேலையின்மையில் வாடுபவர்கள் மட்டும் பாதிக்கப்பட்டுவிடவில்லை. பேர்லினில் பிறக்கும் மூன்று குழந்தைகளில் ஒன்றுமொத்தத்தில் 170,000— ஏழையாக உள்ளது என்று Berliner Morgenpost கொடுத்துள்ள தகவல்களில் இருந்து தெரிகிறது. ஆனால் இவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர்தான் பொதுநல நன்மைகளை நம்பியிருக்கும் குடும்பங்களில் இருந்து வருபவர்கள். உண்மையில் வேலை இருந்தும் வறிய நிலையில் உள்ள மக்கள், உழைக்கும் வறியவர்கள்தான் குறிப்பிடத்தக்க வகையில் சமீப ஆண்டுகளின் சரிந்துவரும் சமூக நிலைமைகளால் தாக்கப்பட்டுள்ளனர்.

ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட சமூக நல அறிக்கை பொது வறுமை மற்றும் குழந்தைகள் வறுமை ஆகியவை 2010 வேலையின்மையில் குறைவு என்பதையும் மீறி அதிகரித்துள்ளதை உறுதிபடுத்தியுள்ளது. இந்த ஆய்வின் ஆசிரியர்களில் ஒருவர் நகர்ப்புற சமூகவியலாளர் Hartmut Haussermann வலியுறுத்தியுள்ளபடி, “வேலை பெறுதல் என்பது ஒன்றும் வறுமையில் இருந்து தப்பமுடியும் என்ற பொருளைத்தரவில்லை.”

பேர்லினில் உள்ள தற்காலிகப் பணி ஒப்பந்தங்கள் அதிகரித்திருப்பதை காணும்போது, இது வியப்பைத் தரவில்லை. தற்காலிக தொழிலாளர்களின் எண்ணிக்கை 2010 கோடையில் புதிய மிக அதிக உயர்வான எண்ணிக்கையான 30,308 என ஆயிற்று. 2000த்தில் இருந்த நிலைமையுடன் ஒப்பிடும்போது இது 118 சதவிகிதம் அதிகம் என்பதைப் பிரதிபலிக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தூண்டுதலில், பேர்லின் செனட்பொதுப் பணித்துறை என்பதை நிறுவியது; இதில் தற்காலிக மற்றும் குறைவூதியத் தொழிலாளர்கள்தான் நியமிக்கப்பட்டனர்; இவர்களுடைய உழைப்பு இப்பொழுது தனியார் வேலைகொடுக்கும் நிறுவனங்களின் நலன்களுக்காக சுரண்டப்படுகிறது.

SPD மற்றும் இடது கட்சியின் கீழ் உள்ள செனட்டின் சட்டங்கள் மூலம் வெளிவந்த கடுமையான பொதுப் பணிகள் ஊதியக் குறைப்புக்களுடன் இப்போக்கு நெருக்கமான தொடர்பைக் கொண்டுள்ளது. 2003ம் ஆண்டு, Employers’ Assoication of the Federal and State Governments (கூட்டாட்சி மற்றும் மாநில அரசாங்கங்களின் பணிகொடுப்போர் சங்கம்) அமைப்பில் இருந்து வெளியேறிய முதல் கூட்டாட்சிப் பகுதியாக பேர்லின் மாறியது. பொதுத்துறை ஊதியங்களை குறைப்பதற்காகவே இந்நடவடிக்கை குறிப்பாக எடுக்கப்பட்டது. ஊழியர்களின் ஊதியங்கள் முதலில் 12% வரை குறைக்கப்பட்டன. இதே போக்கின்படி, 2009 வரை கட்டாயப் பணிநீக்கங்கள் 2009 வரை இராதுஆனால் இவ்விதி பிற துறைகளில் ஊதிய வெட்டுக்கள் மூலம் செனட்டால் கடக்கப்பட்டது.

Tagesspiegel செய்தித்தாள் கொடுத்துள்ள ஒரு தகவல்படி, 1998 முதல் 2010 வரையிலான காலத்தில் பொதுத்துறை ஊழியர்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பகுதி குறைக்கப்பட்டுவிட்டது. குறிப்பாக இத்துறையில் இப்பொழுது இளைஞர்களுக்குக் வேலைகள் ஏதும் கிடைப்பதில்லை. கட்டுரையில் குறிக்கப்பட்டுள்ளபடி, நிர்வாகப் பதவிகளில் 25 வயதிற்கு உட்பட்டவர்கள் பணியில் இருப்பது 0.05 சதவிகிதம்தான் என்று உள்ளது. சராசரி வயது 49 என்று உள்ளது. ஒரு தொழிலாளி ஓய்வு பெறும்போது, அப்பதவியும் அநேகமாக மறைந்துவிடுகிறது. முன்னாள் செனட் உறுப்பினர் திலோ சராஜின் (SPD) 2008ல் இன்னும் வேலைக் குறைப்புக்கள் தேவை என்று குரல் கொடுத்தபோது, நகர நிர்வாகம் முற்றிலும் சரிந்துவிட அனுமதிக்கப்பட்டுவிடக்கூடாது என்று மட்டும்தான் இடது கட்சி கூறியது.

பொதுத்துறைப் பணிகளில் வெட்டுக்கள் மற்றும் பரந்த வறுமையின் நடைமுறை விளைவுகள் பேர்லினின் சமூகப் பாதுகாப்பு நீதிமன்றத்தின் (Berliner Sozialgerichts) உதாரணம் மூலம் தெளிவாகக் காட்டப்படுகிறது. நான்கு வழக்குகளில் முன்று, வேலை மையங்கள் கொடுத்த தீர்ப்புக்களை பெற்றுள்ள Hartz IV நலன்கள் பெற்றோர் பதிவு செய்த வழக்குகள் ஆகும். இந்நீதிமன்றம் ஒவ்வொரு ஆண்டும் அத்தகைய வழக்குகளினால் பெரும் சுமையை அடைந்துள்ளது. 2010ல் மட்டும் Hartz IV மதிப்பிட்டிற்கு எதிரான வழக்குகளின் எண்ணிக்கை 5,000 அதிகம் என ஆயிற்று; அதாவது 20 சதவிகிதம். இது முந்தைய ஆண்டுகளின் எண்ணிக்கைக்கு ஒப்பாகும். வழக்குத் தொடுத்தவர்களுக்கு ஆதவாகத்தான் நீதிமன்றம் இவற்றில் பாதிக்கும் மேலானவற்றில் தீர்ப்பைக் கொடுத்துள்ளது.

நீதிமன்ற தலைவரான Sabine Schudoma, புகார்கள் உணர்ச்சிபூர்வமான வெறுப்பை ஒட்டி வரவில்லை, முற்றிலும் குறைகளின் புறநிலைத்தன்மையை ஒட்டித்தான் எழுந்துள்ளன என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். அவர் கூறியதாக ராய்ட்டர்ஸ் அறிக்கை ஒன்று மேற்கோளிடுகிறது: “நலன்களின் மோசடி போன்ற வழக்குகள் மிகவும் அபூர்வம்தான்.” Schudoma வின் கருத்துப்படி அதிக எண்ணிக்கையிலான வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் வெற்றி அடைந்துள்ளது அரசியல் வாதிகளுக்கு ஓர் அடையாளம் போன்றதாகும்: “அதிகாரத்துவக் குறைப்பு, கூடுதலான கணினி மென்பொருட்கள், தனித்தனி வழக்குகளுக்கு கூடுதல் நேரம்இவைதான் நல்ல திசையை நோக்கிச் செல்லும் நடவடிக்கைகள் ஆகும்.” ஆனால் பல வேலை மையங்கள் பெரும் பணிச்சுமையை கொண்டுள்ள என்பது வெளிப்படை; இதையொட்டி ஏற்படும் பெருகிய அழுத்தங்களினால் அதிக தவறுகள் செய்யப்படுகின்றன; பின்னர் அதேபோல் அதிக சுமையைக் கொண்ட சமூக பாதுகாப்பு நீமின்றத்தின் முன் வழக்குகள் குவிகின்றன.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பொதுநல அறிக்கை மற்றொரு பிரச்சினையையும் அடையாளம் காண்கிறதுகுறைவூதியத் தரங்களின் பெருகிய எண்ணிக்கையை பாதிக்கும் தன்மையை அது கொண்டுள்ளது: அதாவது மிகக் கடினமான வீடுகள் நிலைமை பற்றி பிரச்சினை. மத்திய பேர்லின் பகுதி இப்பொழுது கூடுதல் வசதி பெற்ற சமூக அடுக்குகளிடையே வசிப்பதிற்கு ஆர்வம் காட்டும் நிலையில், வாடகைகள் எல்லா இடங்களிலும் உயர்ந்துவிட்டன. 2009 ல் இருந்து 2010 வரை சராசரி வாடகை உயர்வு 6.2 சதவிகிதம் என்று ஆகிவிட்டது.

உதவிநிதி அளிப்படும் வீடுகளின் வாடகைகளும் புதிய மிக உயர்ந்த தன்மையை எட்டிவிட்டன; மற்றவற்றுடன் பேர்லின் நீர் நிறுவனம் தனியார்மயமாக்கப்பட்டதும் இதற்குக் காரணம் ஆகும். இந்நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் சட்டபூர்வமாக உறுதிசெய்யப்பட்ட இலாபங்களை பெறுகின்றனர். 1999 முதல் நிறுவனம் குடிநீர், கழிவுநீர் அகற்றுதல் ஆகியவற்றிற்கான நுகர்வோர் விலையை 25% க்கும் மேலாக உயர்த்திவிட்டது; அதே நேரத்தில் பணியாளர் தொகுப்பில் 5,300 வேலைகளை நீக்கிவிட்டது.

மக்களில் பாதிப்பிற்கு உட்படக்கூடிய பிரிவினர் இதையொட்டி வெளியே உள்ள புறநகர்ப்பகுதிகளுக்கு செல்லும் கட்டாயத்திற்கு உட்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 2,000 Hartz Iv பொதுநல உதவி பெறுவோர் தங்கள் அடுக்கு வீட்டைக் காலி செய்யும் கட்டாயத்திற்கு உட்பட்டனர்; ஏனெனில் வேலை மையங்கள் அவர்கள் கொடுக்கும் வாடகை மிக அதிகம் என்று கூறிவிட்டன. இவர்களில் பெருப்பாலனவர்கள் Spandau, Marzahn-Hellersdorf, Reinickerndorf போன்ற இடங்களுக்கு சென்றுவிட்டனர்இவை அதிக சமூக அமைதியின்மை பகுதிகளாக மாறிவருவது நிரூபணம் ஆகிறது. சமூகவியல் வல்லுனர் Haussermann, “வசிக்குமிடக் குவிப்பு என்பது சமூகப் பிரச்சினைகளின் படிமமாகவும் ஆகிறது என்பது வெளிப்படை.” என்று குறிப்பிட்டுள்ளார்.

நகர்ப்புற வளர்ச்சித் தொடர்புடைய செனட் உறுப்பினர் Ingeborg Junge-Reyer (SPD), Neukolln, Berlin-Mitte ஆகிய இடைநகரப் பகுதிகளில் சமூக உறுதிப்பாடு பற்றிக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதே நேரத்தில் அறிக்கை பெருகிய சிறுகுழந்தைகள் ஏழ்மை மற்றும் பெரிய வீடுகள் பிரிவுகளான Gropiusstadt, Markische என்பவற்றிலும் குவிப்பைக் காட்டியிருப்பதை தெரிவிக்கிறது. எனவே இப்பிரச்சினை மற்றொரு பகுதிக்குத்தான் மாற்றப்படுகிறது; அதையொட்டி பிரச்சினை மிகவும் நெருக்கடியாகும்.

இந்த வழிவகையில் பேர்லினில் தக்க வீட்டுவசதியைப் பெறுவது என்பது பெருகிய முறையில் கடினமாகிவிட்டது. மீண்டும், இதற்கு முக்கிய காரணம் SPD-இடது கட்சி செனட்டின் ஆட்சிக் கொள்கைகள்தான் காரணம். “தடுப்புக்கள், “கடன் குறைப்புக்கள் என்ற போலிக்காரணங்களை காட்டி இது ஏராளமான அடுக்கு வீடுகளை தனியார்மயம் ஆக்கிவிட்டது. MieterEcho என்னும் வெளியீட்டில் வந்துள்ள ஒரு அறிக்கையின்படி, 250,000 அடுக்கு வீடுகள்தான் —SPD-இடது கட்சிக் கூட்டணி ஆட்சி தொடங்கியபோது முதலில் பொது உடைமையில் இருந்த 400,000 வீடுகளில்— 2009லும் உபயோகத்தில் உள்ளன. அவற்றில் பலவும் உண்மை மதிப்பைவிடக் குறைந்த அளவிற்குத் தனியார் நிதிய முதலீட்டாளர்களுக்கு விற்கப்பட்டுவிட்ட்டன. இந்த சொத்துக்கள் குறித்த சுறாமீன்கள் வீடுகள் வழங்குதலை தங்கள் இலாபத்தை மிகவும் அதிகமாக ஆக்கும் வாய்ப்பாகத்தான் காண்கின்றனர்.

தன்னை காத்துக் கொள்ளும் முயற்சியில், செனட் பொதுவாக காலி அடுக்கு வீடுகளின் எண்ணிக்கையை சுட்டிக்காட்டுகிறது; அவற்றில் போதுமான வீடுகளுக்கான வசதி உள்ளது. இந்த எண்ணிக்கை இப்பொழுது 100,000க்கும் மேல் என்று உள்ளது; ஆனால் அவற்றில் 50,000 உடனடியாக வாடகைக்கு விடுவதற்கு ஏற்றது அல்ல என்று பேர்லின் முதலீட்டு வங்கி கொடுத்துள்ள அறிக்கை தெரிவிக்கிறது. மற்றவை முற்றிலும் பயனற்றவை, அல்லது பரந்த அளவில் பழுதுநீக்கப்பட்ட பின்னர்தான் வசிப்பதற்கு உகந்தவை ஆகும். அதுவும் உயர்ந்த வாடகைக்குத்தான். இந்த அடுக்கு வீடுகள் பலவும் மக்களுக்குத் தேவையான எண்ணிக்கை, பரப்பு ஆகியவற்றில் இருந்து குறைந்த தன்மையைக் கொண்டுள்ளன. எனவே பேர்லின் வாடக்கைக்கு இருப்போர் சங்கம் 2009ல் தவிர்க்க முடியாத வீடுகள் பற்றாக்குறையை பற்றிக் கூறியிருந்தது.

இத்துடன், வாடகைச் செலவுகள், சராசரியாக செலவழிக்கக்கூடிய பணம் இவற்றிற்கிடையேயான ஆபத்து மிகுந்த தொடர்பும் சேர்க்கப்பட வேண்டும். மற்ற ஜேர்மனிய நகரங்களில் இருப்பதைவிட பேர்லினில் வாடகைகள் குறைவு என்பது உண்மைதான். ஆனால் பேர்லினில் சராசரி வருமானமும் குறைவுதான். 2009ல் இது 16,000 யூரோக்களுக்கு சற்றுக் குறைவு என இருந்தது; நாடு முழுவதும் அப்பொழுது சராசரி 19.000 யூரோக்கள் என்று இருந்தது. எனவே பேர்லினில் ஒருவருடைய வருமானத்தில் கிட்டத்தட்ட 29% வாடகைக்குச் செல்கிறது என்பது உண்மை; மூனிச்சில் இது 20% என்றும் பிராங்பேர்ட்டில் 21% என்றும் உள்ளது.

இச் சமூகச் சான்றை ஒட்டி, கடந்த தசாப்தம் மிகத் தெளிவாக SPD மற்றும் இடது கட்சியின் உண்மைக் குணநலனை வெளிப்படுத்தியுள்ளது. இந்த இரண்டில் எதற்கும் இடதுசாரித்தன்மை என்பது எதுவும் கிடையாது. இவை வங்கிகள், பெருநிறுவனங்களின் நன்மைகளை பிரதிபலிக்கின்றனவே ஒழிய தொழிலாளர்களின் நலன்களை அல்ல. பொது வசதிகளை தடையற்று தனியார் மயமாக்குதல், “கடன் குறைப்பு என்ற பெயரில் கடும் சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்துவது ஆகியவற்றில் இருந்து தக்க சான்றுகள் இந்நிலைக்கு கிடைக்கின்றன. குறிப்பாக இடது கட்சியின் பங்கு, இவ்விதத்தில் வலியுறுத்தப்பட வேண்டும். பேர்லின் நிர்வாகம் நடத்தும் ஆழ்ந்த வெட்டுக்களை குறைப்பதற்கு முற்றிலும் எதிரான வகையில், சமீபத்திய ஆண்டுகளில் இது நகரத்தின்மீது சுமத்தப்படும் ஒவ்வொரு வகையான சமூகப் பேரழிவின் உந்துதல் சக்தியாகவும்தான் இருந்து வருகிறது.