WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
உலக பொருளாதாரம்
உலகப்
பொருளாதாரத்தை மீட்க சீனாவால் இயலவில்லை
By
John Chan
12 August 2011
use
this version to print | Send
feedback
உலகின்
பங்குச் சந்தைகளை,
புதிய நிதிய
உறுதியற்ற தன்மை அதிர்விற்கு உட்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில்,
சீனா உலகப்
பொருளாதார வளர்ச்சிக்கு அது
2008ல்
செய்த்துபோல மகத்தான ஊக்கப்பொதியைக் கொடுத்து பங்களிக்கமுடியுமா என்ற வினா
எழுந்துள்ளது.
2008ல்
லெஹ்மன் பிரதர்ஸ் சரிவைத் தொடர்ந்து எழுந்த
“நிதிய
சுனாமியை”
பீதியுடன்
எதிர்கொண்ட வகையில் சீனா நான்கு டிரில்லியன் யுவான்
(அமெரிக்க
$590
பில்லியன்)
ஊக்கப் பொதியை
அளித்தது.
சமூக எழுச்சிகள் ஏற்படுமோ
என்ற அச்சத்தில் பெய்ஜிங் அதன்பின்
20
மில்லியன் வேலைகள்
அழிக்கப்பட்டது மற்றும்
67,00
நடுத்தர,
சிறிய நிறுவனங்கள்
முக்கியமாக ஏற்றுமதித் துறையில் மூடப்பட்டதை பெரும் பீதியுடன் கவனித்தது.
ஊக்கப்பொதியை அது
பெரும் பரபரப்புடன் விரிவாக்கி
2009
மற்றும்
2010ல்
2.7
டிரில்லியன் டாலர் அளவிற்கு
வெள்ளமென வங்கிக் கடன்களை கொடுத்தது.
இவ்வளவு
பெரிய கடன் உட்செலுத்தியும்,
சீனா கடந்த இரு
ஆண்டுகளாக 9-10%
வளர்ச்சி
விகிதங்களைத் தக்க வைத்துக் கொண்டு ஆஸ்திரேலியா,
பிரேசில் போன்ற
பண்டங்கள் சார்ந்த பொருளாதாரங்கள் தம்மைத் தக்க வைத்துக் கொள்ளவும்,
சீனாவிற்கு ஜப்பான்,
தென் கொரியா,
தென்கிழக்கு ஆசிய
நாடுகள் பகுதிகள் மற்றும் மூலதன் பொருட்களைக் கொடுக்கும் நாடுகளும் தம்மைத் தக்க
வைத்துக் கொள்ள உதவியது.
ஜேர்மனியில்
இயந்திரக் கருவிகள் தொழிற்துறை,
சீனாவில் இருந்து
கேட்கப்பட்ட உற்பத்திப் பொருட்களைத் தயாரிப்பதை ஒட்டி பெரும் ஏற்றம் அடைந்தது.
சீனாவிற்கு அமெரிக்க
ஏற்றுமதிகள்கூட விரைவில் எழுச்சியுற்றன.
2007ம்
ஆண்டு சீனா உலக வளர்ச்சியில்
17.1%
ஐக் கொண்டிருந்தது;
இது உலகின் மிகப்
பெரிய பங்களிப்பாளர் என்று இருந்த அமெரிக்காவின் நிலையையும் விட அதிகமாயிற்று.
2009 மந்தநிலையின்
உச்சக்கட்டத்தில்,
சீனாவின் பங்கு உலக
வளர்ச்சியில் பாதி என உயர்ந்தது.
2010ல் அதன்
பங்களிப்பு மூன்றில் ஒரு பங்கு என மதிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவின்
உள்ளூர் அரசாங்கங்கள் வாங்கியிருந்த மாபெரும்
$2
டிரில்லியன் கடன்களால்
உள்கட்டுமானத்தை விரிவாக்க விரைந்து செயல்பட்டும் மற்றும் உயரும் நிலச்
சொத்துக்களின் மதிப்பில் இருந்து இலாபம் பெற்றபோதும் மிக அதிகமான குறைந்த வட்டிக்
கடன் வழங்கல் நீடிக்கவியலாத நிலச்சொத்து ஊகத்திற்கு எரியூட்டியது. ஸ்டாண்டர்ட்
மற்றும் பூர் தர நிர்ணய நிறுவனம் இக்கடனில் மூன்றில் ஒரு பகுதி மோசமாகக் கூடும்
என்று மதிப்பிட்டுள்ளது.
மொத்தத்தில்
சீனாவில் பொதுக் கடன்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்
70
முதல்
80%
வரை இருக்கலாம் என்று
மதிப்பிடப்பட்டுள்ளது.
திங்களன்று
வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் மேற்கோளிட்டுள்ள கலிபோர்னிய பல்கலைக் கழகத்தின்
பேராசிரியர் பாரி ஐஷன்க்ரீன் சமீபத்திய உரை ஒன்றில்,
அவர்
“2008-09
ல் இருந்ததை விட
நிலைமை இப்பொழுது நிர்வகிக்க இயலாத தன்மையில் உள்ளது.
அப்பொழுது
சீனாவிற்கு அனைத்தையும் செய்ய முடிந்து மகத்தான நிதிய ஊக்கத்தையும் கொடுக்க
முடிந்தது.
முதலீட்டுச்
செலவுகளுக்கு ஆதரவு கொடுப்பதற்காக,
அது வங்கிகளை நாளை
என்பது இல்லை என்பது போல் கடனைக் கொடுங்கள் என்று உத்தரவிடமுடிந்தது.
இன்று சீனாவின்
கொள்கை வகுப்பாளர்கள் அதிக உத்திகளுக்கு இடமின்றித்தான் உள்ளனர்”
என்று கூறியுள்ளார்.
“உலகைக்
காப்பாற்ற சீனாவால் முடியாது—அது
முயலவும் போவதில்லை”
என்ற தலைப்பில்
பிரிட்டனின் டெலிகிராப்பில் வந்த மற்றொரு கட்டுரையில்,
பகுப்பாய்வாளர்
ஜோனாதன் பன்பி சீனத் தலைவர்கள்
“ஒபாமா
நிர்வாகம் மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்கள் தங்கள் நாட்டு நிலைமையை சீராக்கிக்
கொள்வதில் அடைந்துள்ள தோல்வி பற்றிச் சாடியுள்ளது.”
என்றார்.
“ஆயினும்கூட,
உளைச்சல் தரும்
உண்மை என்னவென்றால்,
அதன் திறைமையைக்
குறைக்கும் வகையில் அதன் பொருளாதார ஏற்றத்துடன் இருக்க வேண்டிய உலகப் பங்கை
செய்வதற்கு முடியாத தொடர்ச்சியான தளைகளைக் கொண்டுள்ளது
—அதன்
விருப்பத்தை என்று கூடச் சொல்லலாம்.”
என்று அவர்
தொடர்ந்து எழுதியுள்ளார்.
பெய்ஜிங்கில்
“இரு
பெரும் அச்சங்கள்”
உள்ளன என்று அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
முதலாவது,
அடிப்படைத் தேவைகள்
மற்றும் தொழில்துறை மூலப்போருட்களின் உயர்ந்த விலையைக் குறைக்க வேண்டும் என்ற
நோக்கம்
“அமெரிக்கா
மத்திய வங்கிக்கூட்டமைப்பு மேற்கொண்டுள்ள அதிக நாணயத்தை புழக்கத்திற்கு விடுதல்
என்பதால் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அதன் விளைவு உலகில் பணப்புழக்கத்தை
அதிகரிப்பது என்று உள்ளது. இவற்றில் சில பாவனைப்பொருட்கள் முதலீட்டிற்குச் சென்று
விடுகின்றன.
இரண்டாவதாக,
அமெரிக்கா மற்றும்
ஐரோப்பாவில் எடுக்கப்படும் சிக்கன நடவடிக்கைகள்
“சீனாவின்
ஏற்றுமதிகளின் தேவையை குறைக்கும் அபாயத்தை கொண்டுவருகின்றது.”
எனவே சீனா
“இரண்டு
சக்திகள் ஒன்றினை கட்டுப்படுத்தும் நிலையில் சிக்கியுள்ளது.
பொருளாதாரக்
காரணங்களுக்காகவும் சமூக உறுதிப்பாட்டைத் தக்க வைப்பதற்கும் அது பணவீக்கத்தை தணிக்க
விரும்புகிறது.
ஆனால் அதன்
இறக்குமதிப் பாவனைப்பொருட்களின் விலையின் தயவில் தங்கியிருக்கும்போது அதற்கு
ஏற்றுமதிச் சந்தையை துடிப்புடன் வைத்திருக்கும் தேவையும் ஏற்பட்டுள்ளது.”
சீனாவின்
பணவீக்கம் அமெரிக்க பெடரலின் மூலம் உந்துதல் பெறுகிறது;
அதுவோ சாராம்சத்தில்
நாணயத்தை அச்சிடுதல்,
டாலரின் மதிப்பைக்
குறைத்தல் என்று உள்ளது.
யுவானின் மதிப்பு
மிக அதிகம் உயர்வதைத் தடுக்கும் வகையில்,
அதையொட்டி
ஏற்றுமதிகள் குறையாமல் காக்க வேண்டிய நிலையில்,
பெய்ஜிங் ஒவ்வொரு
மாதமும் பல பில்லியன் டாலர்கள் கொடுத்து அமெரிக்கக் கருவூலப் பத்திரங்களை வாங்க
வேண்டியுள்ளது;
டாலர்கள்
வாங்குவதற்கு இதே போன்ற யுவான் தொகைகளை வெளியிட வேண்டியுள்ளது.
யுவான் பெரிய அளவில்
வெளியிடப்படுவது,
குறைந்த வட்டிக்
கடன் கொள்கையுடன் இணைந்து விலை ஏற்றங்களுக்கு எரியூட்டுகிறது.
கடந்த ஆண்டு
இதேகாலத்தில் இருந்ததுடன் ஒப்பிடுகையில் நுகர்வோர் விலைக் குறியீடு ஜூலை மாதம்
6.5%
உயர்ந்ததுள்ளது.
இது ஜூன்
2008ல்
உலகப் பண்டங்கள் ஊகம் கடைசியாக மிக உயர்ந்த புள்ளியில் இருந்ததை விடமிகப் பெரிய
உயர்வாகும்.
நூற்றுக் கணக்கான
மில்லியன்கள் வறிய தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகளின் செலவினங்களில் மிக அதிகம்
என்ற பங்கைக் கொண்டுள்ள உணவு விலைகள்
14.8%
உயர்ந்துவிட்டன.
இதுதான்
எல்லாவற்றிற்கும் மேலாக பெய்ஜிங் மிகவும் பயப்படுவது—அதாவது
சமூக பதட்டங்களின் எழுச்சி.
கடந்த
அக்டோபர் மாதத்தில் இருந்து அரசாங்கம் விலையுயர்வைக் குறைக்கும் வகையில் வட்டி
விகிதங்களை உயர்த்தி வங்கிகள் கொடுக்கும் கடன்களையும் நிறுத்தியது—அதே
நேரத்தில் பொருளார வளர்ச்சியை அவை பாதிக்காமல் பார்த்துக் கொண்டது.
ஆனால் கடந்த வாரம்
சர்வதேச நிதியக் கொந்தளிப்பும் ஒரு புதிய உலக மந்தநிலை வரும் வாய்ப்பும் திடீரென
இந்தக் கடனை இறுக்கும் கொள்கையை கேள்விக்கு உட்படுத்திவிட்டன.
செவ்வாயன்று
உயர்மட்ட அரசாங்கக் கூட்டத்தைத் தொடர்ந்து பிரதமர் வென் ஜியாபோ
CCTV
இடம் கூறினார்:
“பணவீக்க
அழுத்தங்களை சமாளித்தல்,
பொருளாதார
வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ளுதல்,
பொருளாதாரக்
கட்டுமானத்தைச் சரிசெய்தல் இவற்றிற்கு இடையே முறையான வகையில் சமச்சீர்த்தன்மையை
நாம் கொள்ள வேண்டும்.”
இவருடைய கருத்து
சீனத் தலைவர்களை எதிர்கொண்டுள்ள சங்கட நிலையைத்தான் வேறுவிதமாகக் கூறுகிறது.
அதாவது எப்படி
பணவீக்கத்தையும் சரியும் பொருளாதாரத்தையும் சமன் செய்வது என்பதே அது.
ஆனால் இதற்கான வேறு
தீர்வு ஏதும் காணப்படவில்லை.
சீன
முதலாளித்துவத்தின் அடிப்படைப் பிரச்சினை,
அதன் பெரிதும்
விரிவாகும் தொழில்துறை திறன்களை ஏற்றுக் கொள்ளக்கூடிய உள்நாட்டு நுகர்வு
ஒப்புமையில் இல்லாததுதான்.
உலகின்
முக்கிய பெருநிறுவனங்களுக்கு சிறப்பான குறைவூதியத் தொழிலாளர் தொகுப்பு அரங்கு என்று
சீனா வளர்ந்துள்ளது.
ஏற்றுமதிகளைப்
போட்டித்தன்மையாக்க வேண்டும் என்பதற்காக டாலருடன் பிணைக்கப்பட்டுள்ள ஒரு நாணயத்தை
அது கொண்டுள்ளது;
குறைந்த சமூகப்
பாதுகாப்பு முறைதான் உள்ளது,
அதையொட்டித்
தொழிலாளர்கள் தங்கள் சேமிப்புக்களை வங்கிகளில் போட முடிவதில்லை;
வங்கிகளும்
அத்தொகைகளை முதலீட்டாளர்களுக்கு குறைந்த வட்டிக் கடனாகக் கொடுக்க முடிவதும் இல்லை;
இதைத்தவிர மோசமான
சுரண்டல் உள்ள ஆலைகளில் எதிர்ப்பை நசுக்குவதற்கு ஒரு பொலிஸ்-அரச
கருவியும் உள்ளது.
இவற்றின் விளைவு
உள்நாட்டு நுகர்வு மொத்த உள்நாட்டு உற்பத்தியில்
35%
என்றுதான் உள்ளது;
உலகில் வேறு எந்த
நாட்டில் இருப்பதையும்விட இது மிகக் குறைவு ஆகும்.
எனவே சீனாவின்
விரிவாக்கம் ஐரோப்பிய,
அமெரிக்கச்
சந்தைகளின் வளர்ச்சியைத்தான் பெரிதும் நம்பியுள்ளது.
2008ல்
வெடித்த நிதிய நெருக்கடி அத்தகைய பொருளாதார வளர்ச்சி வழிவகைக்கு ஒரு
முற்றுப்புள்ளியை வைத்தது.
ஆனால் உள்நாட்டு
நுகர்வை விரிவாக்க முயலுதல் என்பதற்கு முற்றிலும் மாறாக,
குறிப்பாக
ஏற்றுமதித் தொழில்களை அடித்தளமாக கொண்ட சக்தி வாய்ந்த பெருநிறுவன நலன்களும் மற்றும்
அரச அதிகாரத்துவத்தில் உள்ள அவற்றின் கூட்டுக்கள் தொழிலாள வர்க்கத்திற்கு சலுகைகள்
கொடுக்கப்படுவதை எதிர்க்கின்றனர்.
அவ்வாறு செய்வது
சீனாவின் பொருளாதாரப் போட்டித்தன்மையை குறைத்துவிடும் என்பது அவர்கள் கருத்து;
ஏற்கனவே இந்நிலை
மற்ற குறைவூதியத் தொழிலாளர் அரங்குகள்,
வியட்நாம்,
பங்களாதேஷ்,
இந்தியா
போன்றவற்றில் இருப்பவற்றால் சவாலுக்கு உட்பட்டுள்ளது.
சீனாவின்
ஊக்க நடவடிக்கைகள் ஒரு தற்காலிகப் பொருளாதார ஏற்றத்தைத்தான் அளித்துள்ளன;
ஆனால் நாடு
முதலீட்டின்மீது கொண்டுள்ள நம்பகத்தன்மையையும் அதிகப்படுத்தியுள்ளது.
சில
மதிப்பீடுகளின்படி,
மூலதனத்திற்கான
முதலீடு 2008ல்
மொத்த உள்நாட்டு உற்பத்தியில்
42%
என்பதில் இருந்து கடந்த
ஆண்டு கிட்டத்தட்ட
50%
என அதிகமாகியுள்ளது.
அமெரிக்கப்
பொருளாதார வல்லுனர்
Nouriel Roubini
சமீபத்தில்
எகானமிஸ்ட்டில் எச்சரித்துள்ளபடி பிரச்சினை
“எந்தநாடும்
அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்
50%
புதிய மூலதனப் பங்கில்
மறுமுதலீடு செய்யும் அளவிற்கு உற்பத்தித்திறனைக் கொண்டிருக்க முடியாது. அத்துடன்
பாரிய மிகைகொள்திறனை எதிர்கொள்ளுவதுடன் செலுத்தமுடியாத கடன் பிரச்சினையையும்
அதிர்ச்சிதரும் வகையில் முகங்கொடுக்கும்.”
உலக
முதலாளித்துவத்திற்கு மற்றொரு பெரும் ஏற்றம் அளித்தல் என்பது இயலாதது என்பது
ஒருபுறம் இருக்க,
சீனா முதலீட்டு
உந்துதலுக்கான ஊக்கப் பொதியை அளித்தல் என்பதானது ஒரு பொருளாதாரச் சரிவு என்னும்
ஆபத்தைத்தான் உயர்த்தும்.
அமெரிக்கா,
ஐரோப்பா போலவே,
பொருளாதார
நெருக்கடிக்கு ஒரு பகுத்தறிவார்ந்த,
முற்போக்கான
தீர்விற்கு முக்கிய தடை முதலாளித்துவ அமைப்புமுறையேதான்;
அதுதான் தொழிலாள
வர்க்கம் தோற்றுவிக்கும் பரந்த உற்பத்தித் திறனை சீனா மற்றும் சர்வதேச அளவில்
பில்லியன் கணக்கான மக்களின் கொழுந்துவிட்டு எரியும் சமூகத் தேவைகளுக்கு அளிப்பதற்கு
பதிலாக தனியார் இலாபத்திற்கு சுரண்டுகிறது. |