WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
:
லிபியா
NATO
airstrike kills dozens of civilians east of Tripoli
திரிப்போலிக்கு கிழக்கே
நேட்டோ வான்தாக்குதல் டஜன் கணக்கான குடிமக்களைக் கொல்கின்றது
By
Kate Randall
10 August 2011
Back to
screen version
மத்தியதரைக்
கடலோரப்
பகுதியில்
திரிப்போலிக்கு
90 மைல்
கிழக்கே
ஜில்டனுக்கு
அருகே
ஒரு
நேட்டோ
விமானத்தாக்குதல்
85 குடிமக்களைக்
கொன்றுவிட்டதாக
லிபிய
அரசாங்கம்
செவ்வாயன்று
குற்றம்
சாட்டியுள்ளது.
லிபிய
அரசாங்கத்தின்
செய்தித்தொடர்பாளர்
மௌசா
இப்ராஹிம்
இத்தாக்குதல்
திங்கள்
பின்னிரவில்
ஜிலிடனுக்குத்
தெற்கே
மூன்று
மைல்கள்
தூரத்தில்
உள்ள
மஜர்
சமூகத்தில்
நடைபெற்றது
என்று
கூறினார்.
அரசாங்கச்
செய்தி
நிறுவனமான
JANA, “காலனித்துவ
சிலுவையுத்தம் நடத்தும்
நேட்டோ
கூட்டினால்
நடத்தப்பட்ட
தாக்குதலில்
டஜன்
கணக்கான
நிரபராதியான
குழந்தைகள்,
மகளிர்
மற்றும்
முதியோர்
படுகொலையுண்டு
தியாகிகள்
ஆயினர்;
அவர்கள்
ஜிலிடனின்
அருகேயுள்ள
அவர்களுடைய
மஜர்
என்னும் பிராமத்தில்
வீடுகளில்
உறங்கிக்
கொண்டிருக்கும்போது
வான்தாக்குதல்களின்
விளைவாக
இறந்து
போயினர்.”
“20
குடும்பங்கள்”
கொலையுண்டன
என்றும்
JANA கூறியுள்ளது.
லிபியத்
தொலைக்காட்சியில்
ஒரு
மருத்துவமனையில்
இருந்து
அனுப்பப்பட்டு
வெளியிடப்பட்டள்ள
காட்சிகள்,
தாக்குதலில்
9 வயதிற்குட்பட்ட
3 குழந்தைகளாவது
குறைந்தபட்சம்
எரிந்துள்ள
நிலையில்
இருப்பதைக்
காட்டுகிறது
என்று
ஒரு
செய்தியாளர்
கூறினார்.
மிக
மோசமாகக்
காயமுற்றிருக்கும்
மகளிர்,
குழந்தைகள்
சிகிச்சை
பெறும்
வீடியோ
காட்சிகளும்
இடம்
பெற்றுள்ளன.
லிபிய
அரசாங்கச்
செய்தித்
தொடர்பாளர்
மௌசா
இப்ராஹிம்
தனது மஜர்
பயணத்தின்போது
நிருபர்களிடம்
இத்தாக்குதல்
அரசாங்கத்தின்
கட்டுப்பாட்டில்
இருக்கும்
நகரத்திற்குள்
நுழைய
“எழுச்சிப்
போராளிகள்
அனுமதிப்பதற்காக”
நடத்தப்பட்டது
என்றார்.
33 குழந்தைகள்,
32 மகளிர்
உட்பட
85 கிராமவாசிகள்
கொல்லப்பட்டனர்
என்றார்
அவர்.
சவக்கிடங்கில்
குறைந்தபட்சம்
25 சடலங்களேனும்
செய்தியாளர்களுக்குக்
காட்டப்பட்டன;
அவற்றைத்தவிர,
தாக்குதலால்
பாதிப்பிற்குட்பட்ட
பல
வீடுகளின்
அழிவுகளும்
காட்டப்பட்டன.
லிபிய
அரசாங்க படைகளுக்கு
எதிராக
நேட்டோ
நடத்தும்
தீவிரமான
வான்
குண்டுத்தாக்குதல்
நடவடிக்கையில்
ஜிலிடன்
இலக்காக
உள்ளது.
ஜிலிடன்
மீது
இரவில்
மூன்று
முறை
ஜெட்டுக்கள்
தாக்குதல்
நடத்தின
என்பதை
ஒரு
நேட்டோ
செய்தியாளர்
உறுதிபடுத்தினார்.
ஜிலிடனில்
ஒரு
முன்னாள்
பண்ணை
வளாகம்
லிபியத்
தலைவர்
முயம்மர்
கடாபிக்கு
விசுவாசமாக
உள்ள
துருப்புக்களால்
“இராணுவ
நடவடிக்கை
நடத்தும்
அரங்காக”
மாற்றப்பட்டுள்ளது
என்றும்
அவர்
கூறினார்.
நேட்டோச்
செய்தித்
தொடர்பாளரான
கேர்னல்
ரோலண்ட்
லாவோயி
நேட்டோவின்
நேபிள்ஸ்
தலைமையகத்தில்
நடந்த
வீடியோக்
கூட்டத்தில்
ஜிலிடனுக்கு
அருகே
நடந்த
தாக்குதல்கள்
“முறையான
இலக்கிற்கு”
எதிரானவை
என்றார்.
நேட்டோ
“அருகில்
வசிக்கும்,
உழைக்கும்
நிரபராதியான
மக்களுக்குத்
தீங்கு
கூடாது
என்பதற்கு
நேட்டோ
மிகத்தீவிர
முன்னெச்செரிக்கையுடன்
செயல்படுகிறது”
என்றும்
அவர்
கூறினார்.
“இந்தக்
கட்டத்தில்
குடிமக்கள்
இறந்துள்ளனர்
என்பதற்கான
சான்றுகள்
எங்களிடம்
இல்லை;
ஆனால்
இலக்கின்
தன்மையை
ஒட்டி
கூலிப்படைகள்
உட்பட
இராணுவப்
படைகளில்
இறந்திருக்கும்
வாய்ப்பு
அதிகமே.”
என்று
லாவோயி
கூறினார்.
ஒரு
இறுதியான
“போர்
மதிப்பிடு”
இன்னும்
வரவில்லை
என்றும்
அவர்
தெரிவித்தார்.
“குடிமக்கள்
இறப்புப்
பற்றிய
தகவல்களை
நாங்கள்
உறுதிபடுத்த
முடியாது. ஆனால்
குடிமக்கள்
உயிர்
இழந்திருந்தால்
பெரிதும்
வருத்தம்
அடைவோம்”
என்று
மற்றொரு
நேட்டோ
செய்தித்
தொடர்பாளர்
கூறினார்.
“குடிமக்கள்
இறப்பைத்
தவிர்க்க
நேட்டோ
பெரும்
முயற்சிகளைக்
கொண்டுள்ளது. ஆனால்
கடாபியின்
ஆட்சியோ
வேண்டுமென்றே
குடிமக்களை
இலக்கு
வைக்கிறது.”
என்றும்
கூறினார்.
மார்ச்
மாதம்
ஏகாதிபத்தியத்
தாக்குதல்
ஆரம்பித்ததில்
இருந்தே,
அமெரிக்கா,
பிரிட்டன்
மற்றும்
பிரான்ஸ்
நேட்டவின்
நடவடிக்கைகளை
நியாயப்படுத்த
கடாபியின்
ஆட்சியில்
இருந்து
குடிமக்களைக்
பாதுகாத்தல்
என்னும்
போலிக்
காரணத்தை
பயன்படுத்தியுள்ளன.
ஆனால்
நேட்டோ
போர்விமானங்கள்
வாடிக்கையாக
குடிமக்களுக்கு
எதிரான
குண்டுத்தாக்குதல்களை
நடத்தியுள்ளது. நேட்டோ
ஆதரவுடைய
“எழுச்சி”
சக்திகளின்கீழ்
உள்ள
பகுதிகளிலும்
இது
நடைபெறுகிறது;
எழுச்சிப்
படைகள்
இடைக்கால
தேசியக்
குழுவான
–TNC-
யினால்
இயக்கப்படுகின்றன.
சர்வதேசச்
சட்டத்தை
மீறி
நேட்டோப்
படைகள்
செய்தியாளர்களையும்
இலக்கு
கொண்டுள்ளன.
திங்களன்று
ஐக்கிய நாடுகள்
சபையின் கலாச்சார பிரிவான
யுனெஸ்கோ
நேட்டோவை
அதன்
ஜூலை
30 அன்று
லிபியத்
தொலைக்காட்சி
நிலையத்திற்கு
எதிராக
நடத்தப்பட்ட
தாக்குதலுக்காக
கடிந்து
கொண்டது.
அத்தாக்குதல்கள்
திரிப்போலியில்
மூன்று
மாடி கட்டிடத்திலுள்ள
செயற்கைக்கோள்
தகவல்
அனுப்பிக்
கருவிகளை
தாக்கி,
பல
மக்களைக்
கொன்றதுடன்
டஜன்
மற்றவர்களையும்
காயப்படுத்தியது.
“அல்-ஜமஹிரியா
மற்றும்
அதன்
நிலைகளை
நேட்டோ
தாக்கியதை
நான்
கண்டிக்கிறேன்”
என்று
யுனெஸ்கோ
இயக்குனர்
தலைவர்
ஐரினா
போகாவா
ஓர்
அறிக்கையில்
கூறியுள்ளார்.
“செய்தி
ஊடக
அமைப்புக்கள்
இராணுவ
நடவடிக்கைகளில்
இலக்கு
வைக்கப்படக்
கூடாது.
ஐ.நா.பாதுகாப்பு
நாட்டுத்
தீர்மானம்
1738 (2006)
செய்தியாளர்கள்
மற்றும்
ஊடகப்
பணிபுரிவோர்
யுத்தநிலைமைகளில்
வன்முறைக்கு
உட்படுத்தப்படுவதைக்
கண்டிக்கிறது”
என்று
இவர்
கூறினார்.
வான்வழித்
தாக்குதல்கள்
“ஜெனிவா
மரபுகளை
மீறியவை”;
போர்க்காலத்தில்
செய்தியாளர்களின்
குடியுரிமை தகுதியை
அவை
பாதுகாக்கின்றன
என்று
போகோவா
கூறினார்.
அந்நேரத்தில்
நேட்டோ
அதிகாரிகள்
“பயங்கரவாதச்
சார்புடைய
தகவல்கள்”
ஒளிபரப்பப்
படுவதைத்
தடுப்பதற்கு
தொலைக்காட்சி
மையங்களை
அது
தாக்கியதாகக்
கூறினர்;
இந்த
நடவடிக்கை
“குடிமக்களைக்
காப்பாற்றுதல்”
என்பதற்கு
ஒப்புதல்
கொடுத்துள்ள
ஐ.நா.
இசைவின் கீழ்தான்
உள்ளது
என்றும்
அவர்கள்
கூறியுள்ளனர்.
சமீபத்திய
நேட்டோவின் கொடூரம்
இந்த
வாரம்
ஆபிரிக்க
நாடுகளுக்கு
திரிப்போலியில்
உள்ள
அமெரிக்க
தூதர்
ஜீன் கிரெட்ஸ்
கடாபியை
அகற்றுவதற்காக
நடத்தும்
ஒரு
பிரச்சாரத்திற்கு
ஆதரவுதிரட்டும்
வகையில்
பயணிக்கையில்
வந்துள்ளது. கடாபியோ
நேட்டோ
சக்திகள்
எதிர்பார்த்ததைவிட
அதிக
காலம்
பதவியிலுள்ளார்.
ஆபிரிக்க
ஒன்றியத்தின்
தாயகமான
எதியோப்பியாவிற்கு
கிரெட்ஸ்
செல்கிறார்;
மற்ற
ஆபிரிக்க
நாடுகளுக்கும்
செல்கிறார்.
அமெரிக்கா,
பிரான்ஸ்
ம்றும்
பிரிட்டன்
ஆகியவை
கடாபி
பதவியில்
இருந்து
விலக
வேண்டும்
என்னும்
கோரிக்கைகளுக்கு
பல
அரசாங்க
அமைப்புக்கள்
ஆதரவு
கொடுக்கவில்லை.
தனிப்பட்ட
ஆபிரிக்கத்
தலைவர்களும்
நேட்டோவின்
தொடர்ந்த
வான்தாக்குதல்கள்
லிபியக்
குடிமக்களைக்
பாதுகாத்தல்
என்ற
காரணங்களை
மீறிச்செல்வதாகக்
குறைகூறியுள்ளனர்.
ஒரு
மூத்த
ஒபாமா
நிர்வாக
அதிகாரி
கிரெட்சின்
பணி
ஆபிரிக்க
நாடுகள்
நேட்டோவைக்
குறைகூறவதை
குறைக்கும்
நோக்கம்
உடையது,
அவர்களை
இடைக்கால
தேசியக்
குழுவுக்கு சற்று
ஆதரவாக கொண்டுவரும்
நோக்கம்
உடையது
எனக்கூறியதாக
பைனான்சியல்
டைம்ஸ்
மேற்கோளிட்டுள்ளது.
“இது
ஆட்சியின்
மீது
அழுத்தத்தை
இருமடங்காக்கும்
முயற்சி
ஆகும்”
என்றார்
அவர்.
கடந்த
மாதம்
லிபிய
எதிர்தரப்பு
இராணுவத்
தளபதி
ஜெனரல்
அப்தல்
பட்டா
யூனிஸ்
கொலையுண்டது
இன்னும்
விளக்கப்படவில்லை;
இது
பெங்காசியில்
இருக்கும்
இடைக்கால
தேசியக்
குழுவிற்குள்
உட்பூசல்களை
தூண்டி,
லிபியாவில்
ஒரு
இராணுவத்
தேக்கநிலையை
அடைந்துள்ளது என்பதைத்தான்
இன்னும்
அதிக
அளவில்
எடுத்துக்காட்டுகிறது.
|