சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

16,000 police deployed in London to put down youth revolt

இளைஞர் எழுச்சியை நசுக்குவதற்கு லண்டனில் பொலிஸார் நிறுத்தப்படல்

By Robert Stevens 
10 August 2011
use this version to print | Send feedback

நேற்று அரசாங்கத்தின் அவசரகால COBRA குழு கூட்டத்திற்கு பிரதம மந்திரி டேவிட் காமெரோன் தலைமை தாங்கி வியாழன் அன்று பாராளுமன்ற சிறப்புக் கூட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார்: இது லண்டனில் தொடர்ந்துள்ள கலகம் மற்றும் இங்கிலாந்தின் பல சிறுநகர்கள், நகரங்கள் ஆகியவற்றில் பரவியுள்ள கலகங்களை எதிர்கொள்வதற்காக கூட்டப்படுகிறது.

Lewisham
லெவிஷம் தெருவில் பொலிஸ் கலகப் பிரிவுப் படையினர்

தலைநகர் நெடுகிலும் நடக்கவுள்ள ஒரு பாரிய பொலிஸ் நடவடிக்கையின் திட்டங்களை மேற்பார்வையிடுவதற்காக டஸ்கனியில் விடுமுறை கழிக்கச் சென்றிருந்த காமெரோன் அதைக் குறைக்கும் கட்டாயத்திற்கு உட்பட்டார். நேற்று இரவு வழக்கமான எண்ணிக்கையை விட மூன்று மடங்கான கிட்டத்தட்ட 16,000 பொலிசார்  பணியில் ஈடுபட்டனர். நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பொலிசார் துணைக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.

 

லண்டன் மற்றும் பிரிஸ்டல், பேர்மிங்ஹாம், லீட்ஸ், லிவர்பூல் மற்றும் நோட்டிங்ஹாம் ஆகியவற்றில் பரவியுள்ள கலகத்தை எதிர்கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கை உள்ளது. மான்செஸ்டர், அண்மையில் உள்ள சால்போர்ட், மற்றும் மேற்கு ப்ரோம்விச் மற்றும் மிட்லாண்ட்ஸில் வொல்வ்வேர்ஹாம்ப்டன் ஆகிய பகுதிகளில் கூடுதல் கலவரங்கள் எழுந்தன என்று செவ்வாய் மாலை வந்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிசின் சிறப்பு ஆயுதக்கட்டுப்பாட்டின் அதிகாரி ஒருவர் (CO19) கடந்த வியாழன் மாலை டோட்டன்ஹாமில் வசித்துவந்த 29 வயது மார்க் டுக்கனைச் சுட்டுக் கொன்றதை அடுத்து இக்கலகங்கள் தூண்டப்பட்டுள்ளன. டுக்கன் குடும்பம் மற்றும் ஆதாவாளர்கள் சனிக்கிழமை அன்று அமைதியான எதிர்ப்பு ஒன்றை நடத்தியது மிருகத்தனமான தாக்குதலுக்கு கலகப் பிரிவுப் பொலிசாரால் உட்படுத்தப்பட்டது; இது அமைதியின்மை அலையைத் தூண்டியது.

திங்கள் பிற்பகலில் IPCC எனப்படும் சுயாதீன பொலிஸ் புகார்க்குழு பொலிசார் முதலில் கூறியது போல் டக்கன் பொலிஸ் மீது துப்பாக்கிச் சண்டையை தொடக்கவில்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளது. வெடிமருந்துப் பொருள் சோதனைகள் டுக்கன் கொல்லப்பட்ட இடத்தில் கண்டறியப்பட்ட ஒரு கைத்துப்பாக்கி அதிகாரிகள்மீது சுடுவதற்குப் பயன்படுத்தப்பட்டது என்று கூறுவதற்குசான்றுகள் எதையும் அளிக்கவில்லை என்று அறிக்கை கூறுகிறது.

ஒரு CO19 சுடுஆயுதமேந்திய அதிகாரி இரண்டு தோட்டாக்களை சுட்டார். அவற்றில் ஒன்று டுக்கனின் உடலைத் துளைத்துக்கொண்டு சென்றிருக்கலாம். அது பின்னர் ஒரு பொலிஸ் வானொலிக்கருவியில் புதைந்திருந்தது என IPCC விசாரணை கண்டறிந்துள்ளது. டுக்கனுடைய கைகளும் தாக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கை, டுக்கன் பொலிஸ் நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டவர் என்ற கூற்றுக்களை உறுதிப்படுத்துகிறது; பொலிசானது, நீதிபதி, நடுவர்குழு, கொலைத்தண்டனை நிறைவேற்றும் அமைப்பு என்று அனைத்துமாகச் செயல்பட்டுள்ளது. ஆயினும் கூட டுக்கன் கொலைக்கு எவரும் பொறுப்புக் கூறப்படவில்லை. தொடர்புடைய அதிகாரி வெறுமனே கடமையில் இருந்து அகற்றப்பட்டுள்ளார். டுக்கன் மரணம் பற்றிய விசாரணை IPCC விசாரணை முடிவிற்குப் பின் நடைபெறும் என்று செவ்வாயன்று ஒத்திவைக்கப்பட்டது; பிந்தையதோ முடிவடைய ஆறு மாதங்கள் பிடிக்கலாம்.

மேலும் பல காலமாக நீடித்துவரும் மோசமாகி வரும் சமூக நிலைமைகள், பொலிஸாரின் மிருகத்தனம் பற்றிய அதிருப்திகள் உத்தியோகபூர்வக் கட்சிகள் மற்றும் செய்தி ஊடகங்களினால் முற்றிலும் புறக்கணிக்கப்படுகின்றன. இந்த அடுக்குகளுக்கு பொலிஸ் கொலை செய்வது ஏற்புடைத்தது போலும்; அதற்கு எதிர்ப்புக்கள் ஏதேனும் தெரிவிக்கப்பட்டால் அவை அரசின் முழு ஆற்றலுடன் நசுக்கப்படுகின்றன.

அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளினாலும் பதட்டங்களில் தொடர்புடைய இளைஞர்களுக்கு எதிராக மிகத் தீய வனப்புரைதான் பயன்படுத்துப்பட்டுள்ளது.

பிரிட்டனின் தெருக்களில் ஒழுங்கை மீட்பதற்கு தேவையான அனைத்தையும் அரசாங்கம் செய்யும் என்று காமெரோன் அறிவித்தார். இந்நிகழ்வுகள்முற்றிலும், கலப்படமில்லாத குற்றங்கள் ஆகும் என்று விவரித்த அவர், “கைது செய்யப்பட்டவர்கள் சட்டத்தின் முழுச் சக்தியையும் உணர்வர். இக்குற்றங்களை செய்வதற்கு உரிய வயது இருக்கிறது என்றால், தண்டனையை ஏற்கவும் தக்க வயது வந்துவிட்டது என்றுதான் பொருள் என்றார்.

காமெரோன் மற்றும் மெட்ரோபொலிட்டன் பொலிஸ் உட்பட முழு அரசியல் அமைப்பு முறையும் பெரும் பிற்போக்குத்தன, பல பில்லியனர் செய்தி ஊடக உரிமையாளர் ரூபர்ட் மர்டோக்கின் ஒற்றுவேலை அவதூறில் தொடர்புடையவர்கள்; அந்நிலையில் இத்தகைய கருத்துக்கள் அதிர்ச்சிதரும் வகையில் பாசாங்குத்தனம் ஆகும்.

தன் பங்கிற்கு தொழிற் கட்சிசட்டம் மற்றும் ஒழுங்கு என்று கூறி காமெரோனுக்கு பெரும் ஆதரவைக் கொடுக்கிறது. தொழிற் கட்சி தலைவர் எட் மிலிபண்ட் பொலிஸ் கடுமையான விடையிறுப்பை தர வேண்டும் என்று கோரியுள்ளார். “லண்டனில் அனைத்துப் பகுதிகளிலும் பொலிஸ் உரிய நிலைப்பாட்டைக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

தொழிற் கட்சி எம்.பி.யான டோம் வாட்சன் அண்மையில் பாராளுமன்ற சிறப்புக் குழுக் கூட்டத்தில் மெட்ரோபொலிட்டன் பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்தது உட்படப் பல சட்டவிரோத நடவடிக்கை பற்றி மர்டோக் மற்றும் அவருடைய மகன் ஜேம்ஸ் ஆகியோரை வினாவிற்கு உட்படுத்தியவர், இராணுவம் அழைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். “தாமதம் கூடாது. பாராளுமன்றத்தை கூட்டுங்கள். பொலிசாரின் விடுமுறைகளை இரத்து செய்யுங்கள். இராணுவத்தின் தளவாட உதவியை அவசரகால நடவடிக்கைகளுக்கு கொண்டுவருக. பொலிஸ் குறைப்பை நிறுத்துக என்று ட்விட்டரில் அவர் கோரியுள்ளார்.

முன்னாள் லண்டன் மேயரும் தொழிற் கட்சியைச் சேர்ந்தவருமான கென் லிவிங்ஸ்டன், அரசாங்கத்தின் 80 பில்லியன் பவுண்டுகள் பாரிய சிக்கன நடவடிக்கைகளினால்சமூகப் பிளவுகள் ஏற்பட்டுள்ளன என்பதை ஒப்புக் கொண்டாலும், நீர்ப்பீய்ச்சித் தாக்குதல் தேவை என்று கூறியுள்ளார். ஹாக்னியின் தொழிற் கட்சி எம்.பி.யான டயனே ஆபட் ஊரடங்கு உத்தரவு பரிசீலிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

கன்சர்வேடிவ் எம்.பி.யான பாட்ரிக் மெர்செர் வடக்கு அயர்லாந்தின் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பயன்படுத்திய மிருகத்தன அரசாங்க அடக்குமுறை வகை லண்டன் தெருக்களிலும் அரசாங்கத்தால் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். “இத்தகைய நடவடிக்கைகளை அயர்லாந்து மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தத் தயாராக உள்ளோம், ஆனால் ஆங்கிலேயர்கள் ஒழுங்கை மீறி இத்தகைய அட்டூழியமான, இழிந்த வகையில் நடந்து கொள்ளும்போது அவர்களை மிருதுவாக நடத்துகிறோம் என்பது பற்றி நான் வியப்படைகிறேன்.” என்று அவர் கூறினார்.

இக்கட்டத்தில் படைகள் பயன்படுத்தத் தேவையில்லை என்றார் மெர்செர். “இது ஒன்றும் ஒரு இராணுவத் தேவையுடைய சூழ்நிலை அல்ல. துருப்புக்களைக் கொண்டுவந்தால், அது புரட்சி வேண்டும் என்ற கருத்தைப் பரப்பும்அக்கட்டத்தை சிறிதும் நாம் அணுகவில்லை.”

அவருடைய கருத்துக்கள், “புரட்சி என்னும் ஆவியிருவை எழுப்புபவை, ஒரு பாதுகாப்பான வருங்காலம் இல்லாத நிலையில், ஒரு முழுத்தலைமுறை இளைஞர்களும் தங்கள் சமூக அதிருப்தி மற்றும் வெறுப்பை அரசியல் அமைப்பு முறைக்கு வெளிப்படுத்தினால் என்ன நேரிடும் என்னும் உட்குறிப்புக்கள் பற்றிய ஆளும் வர்க்கத்தின் அச்சங்களை பிரதிபலிக்கின்றன. கலகங்களின் அடித்தளத்தில் இருக்கும் சமூக நிலைமைகள், முதலாளித்துவ அமைப்புமுறை பற்றிய ஒரு குற்றச்சாட்டும் மற்றும் பிரிட்டிஷ் அரசியல் அமைப்புமுறை பற்றிய ஒரு குற்றச்சாட்டும் ஆகும்; இவை பரந்த மக்கள் பிரிவுகளுக்கு வருங்காலம் எதையும் கொடுக்கவில்லை.

கடந்த ஆண்டு பொதுத் தேர்தல்களுக்கு முன்பே, லிபரல் டெமக்ராட்டின் தலைவர், இப்பொழுது துணைப் பிரதம மந்திரியாக உள்ள நிக் கிளெக் உலகப் பொருளாதார நெருக்கடி, மற்றும்நெறியற்ற அரசாங்கம் சுமத்தும் மிருகத்தன வெட்டுக்கள் ஆகியவற்றை எதிர்கொள்கையில்தீவிர சமூகப் பூசல்கள் ஏற்படும் என்று எச்சரித்திருந்தார். இப்பொழுது கிளெக்கும் லிபரல் டெமக்ராட்டுக்களும் அத்தகைய அரசாங்கத்தின் ஒரு பகுதிதான்; கடுமையான பெரும் சிக்கன நடவடிக்கைகளை சுமத்துவதோடு அவற்றை செயல்படுத்த சர்வாதிகார நடவடிக்கைகள் வேண்டும் என்றும் கோருகின்றனர்.

இன்றுவரை அரசாங்கம் இராணுவம் பயன்படுத்தப்படாது என்றுதான் கூறுகிறது. ஆனால் பிளாஸ்டிக் தடியினால் அடிப்பது என்பதுதீவிர பரிசீலனையில் உள்ளது. அதே நேரத்தில் அதிக ஆயுதங்கள் ஏந்திய பொலிஸ் வாகனங்களும் விரிவுபடுத்தப்படுகின்றன. மெட்ரோபொலிட்டன் பொலிசின் துணை உதவி ஆணையர் ஸ்டீவ் கவானக், கடந்த மூன்று நாட்களாக கலகப் பிரிவுப் பொலிசுக்கு பிளாஸ்டிக் தோட்டாக்கள் கிடைக்கின்றன என்றும், தேவையானால் அவை பயன்படுத்தப்படும் என்றும் கூறினார்.

இராணுவத்தை பயன்படுத்துவது பற்றிய விவாதங்கள் லண்டனிலும் இப்பொழுது மற்ற இடங்களிலும் வெடித்து எழுந்துள்ள சமூக அமைதியின்மையை எதிர்கொள்ள ஆளும் தட்டினரின் ஒடுக்குமுறைமிகுந்த பிரதிபலிப்பு எவ்வாறிருக்கும் என்பது பற்றிய அடையாளம் ஆகும்.

தலைநகரில் நடைபெறும் பொலிஸ் நடவடிக்கை பிரிட்டிஷ் வரலாற்றிலேயே மிகப் பெரியது ஆகும். அனைத்து மெட்ரோபொலிட்டன் பொலிஸ் அதிகாரிகளின் விடுப்புக்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன; 30 கலகப் பிரிவுப் பொலிசார் தலைநகருக்கு நாடெங்கிலும் இருந்து தருவிக்கப்பட்டுள்ளனர்; 150 மைல் தொலைவில் உள்ள மான்செஸ்டர் பிரிவும் இதில் அடங்கும். ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிகளும் உதவியளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் சனிக்கிழமை மாலை பொலிஸ் நடவடிக்கைகளில் 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; இவர்களில் பெரும்பாலானவர்கள் தலைநகரில் கைது செய்யப்பட்டுள்ளனர். லண்டனின் பொலிஸ் அறைகள் இப்பொழுது நிரம்பி வழிகின்றன; சிறைபிடிக்கப்பட்டவர்கள் இப்பொழுது அண்டைப் பகுதிகளுக்கு பஸ்ஸில் அனுப்பப்படுகின்றனர். கிட்டத்தட்ட 500 துப்பறிபவர்கள் CCTV இன் வீடியோ காட்சிகள், அடிக்குறிப்புக்களை பதட்டங்கள் பற்றி ஆராய்கின்றனர்; மெட்ரோபொலிட்டன் வரலாற்றில் இது மிகப் பெரிய குற்றவியல் விசாரணை ஆகும்.

இதுவரை குற்றச்சாட்டுக்குட்பட்ட 100பேரில் இளைஞர்கள், தொழிலாளர்கள், வேலையில்லாத பல்கலைக்கழகப் பட்டதாரிகள் என்று உள்ளனர். இது செய்தி ஊடகமும் அரசியல் அமைப்பு முறையும் சாதாரணமாக கூறும் கூற்றுக்களான, இக்கலகத்தில் தொடர்புடையவர்கள் அழிப்பில் ஈடுபடும் விருப்புகொண்ட குற்றம்மிக்க அடித்தட்டினர் என்பதை மறுக்கிறது.

மற்ற கைதுகளில் கிளாஸ்கோவில் ஒரு 16 வயதுச் சிறுவனும் உள்ளான். இவன் பேஸ்புக்கைப் பயன்படுத்தி நகரில் கலகத்தைத் தூண்டிவிட்டான் என்று கூறப்படுகிறது. அதேபோல் கிரேட்டர் மான்செஸ்டர் பொலிசார் சந்தேகத்தின் பேரில் ஒழுங்கீனத்தை தூண்டுவதற்கு சமூகச் செய்தி அமைப்பை பயன்படுத்தியதாக ஒரு நபரைக் கைது செய்துள்ளனர்