WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
பிரித்தானியா
Major police clampdown as riots spread across London and other UK cities
லண்டன் மற்ற இங்கிலாந்து நகரங்களில் கலகங்கள் பரவுகையில் பொலிஸின் பெரும் அடக்குமுறை
By Julie Hyland
9 August 2011
Back to
screen version
வடக்கு
மற்றும்
தென்கிழக்கு
லண்டன்
பகுதிகளைப்
பாதித்து
மற்று
இங்கிலாந்து
நகரங்களிலும்
பரவிக்
கொண்டிருக்கும்
சமூகச்
சீற்றத்தின்
வெடிப்பை
நசுக்கும்
வகையில்
தலைநகரின்
பல
பகுதிகளிலும்
பாரிய பொலிஸ்
பிரசன்னம்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சனிக்கிழமை
மாலை
டோட்டன்ஹாமில்
நடைபெற்ற
கலகம்
வியாழன்
முன்
மாலைப்பொழுதில்
29
வயதான,
நான்கு
குழந்தைகளுக்குத்
தந்தையான
மார்க்
டுக்கனை
சிறப்புப்
படைகள்
அதிகாரிகள்
சுட்டுக்கொன்றதை
அடுத்துத்
தூண்டப்பட்டது.
ஞாயின்று
பிரிக்ஸ்டன்,
என்பீல்ட்,
வால்ட்ஹாம்ஸ்டௌ,
ஐலிங்கடன்
மத்திய
லண்டலின்
ஆக்ஸ்போர்ட்
தெரு
ஆகிய
இடங்களில்
கலகங்கள்
மூண்டன.
திங்கள்
பிற்பகலை
ஒட்டி,
கிழக்கு
லண்டன்
ஹாக்னீ
மற்றும்
தென்கிழக்கு
லண்டனில்
லெவிஷாம்
மற்றும்
பெக்ஹாமிலும்
கலகங்கள்
பரவின.
இங்கிலாந்தின்
இரண்டாம்
பெரிய
நகரான
பேர்மிங்ஹாமிலும்
கலகங்கள்
வெடித்தன.
48
மணி
நேரத்தில்
220
க்கும்
மேற்பட்டோர்
கைது
நிகழ்வுகள்
பற்றி
“அதிர்ச்சி
அடைந்ததாக”த்
தெரிவிக்கும்
பொலிசாரின்
கூற்றுக்களின்
நம்பகத்தன்மையை
அவர்களின் பிரதிபலிப்பின் அளவு
(எதிர்கொள்ளும்
தரம்)
பொய்யாக்குகிறது.
இழிந்த
TSG
எனப்படும்
உள்நாட்டு பாதுகாப்பு பிரிவின் தலைநகரின்
சிறப்புப்
பொது
ஒழுங்கு
பொலிஸ்
பிரிவு—
டுக்கனின்
கொலையை
அடுத்து
எழுந்த
சமாதான
எதிர்ப்புக்களின்போது
“அவசரக்கால
உதவிக்காக”
தயார்நிலையில் இருந்ததுடன்
மட்டுமின்றி,
சனிக்கிழமை
கலகத்திற்கு
முன்பும்
தயார்நிலையில் இருந்தது.
ஞாயிறு
பிற்பகல்
ஆயிரக்கணக்கான
பொலிசார்,
டோட்டன்ஹாம்
மற்றும்
லண்டனின்
வடக்குப்
பகுதிகளில்
தேம்ஸ்பள்ளத்தாக்கு,
கென்ட்,
சரே,
எசெக்ஸ்
மற்றும்
லண்டன்
நகரம்
ஆகியவற்றில்
இருந்து
கொண்டுவந்து
நிறுத்தப்பட்டனர்.
உதாரணமாக
அன்று
இரவு
9.30
அளவில்
டோட்டன்ஹாமில்
இருந்து
குறுகிய
தூரத்திலுள்ள
“என்பீல்ட்
முழுவதும்”
மெட்ரொபொலிட்டன்
பொலிசால்
“தடைக்குட்பட்ட
பகுதியாயிற்று”;
கென்ட்டில்
இருந்து
இருப்புப்படைகளும்
அங்கு
நிறுத்தப்பட்டன.
“நூற்றுக்கணக்கான
கலகப்பிரிவுப்
பொலிசாரும்
வாகனங்கள்
மற்றும்
பொலிஸ்
நாய்களுடன்
வந்தனர். இவர்கள்
பக்கத்
தெருக்களில்
ஓடி
மறைந்த
இளவயதினரைத்
துரத்தினர். இளைஞர்களோ
ஓடும்போது
கார்களையும்
கடைச்
சன்னல்களையும்
நொருக்கினர்”
என்று
கார்டியன்
தெரிவிக்கிறது.
குதிரைப்படை
பொலிசாரும்
அப்பகுதியில்
இருந்த
இளைஞர்கள்
குழுக்கள்
அனைத்தையும்
தாக்கினர்.
பொலிஸ்
ஹெலிகாப்டர்கள்
தலைக்கு
மேலே
பறந்தன.
ஹாக்னியில்
நடந்த
கலகங்கள்
பொலிசார்
திங்கள்
பிற்பகல்
கடைசிப்பொழுதில்
மக்டொனால்ட்
உணவு
விடுதிக்கு
வெளியே
உட்கார்ந்திருந்த
இளைஞர்
ஒருவரைத்
தடுத்து
நிறுத்திப்
பரிசோதனைக்கு
உட்படுத்தியதால்
தூண்டுதல்
பெற்றன
என்று
கூறப்படுகிறது.
தான்
எத்தவறும்
இழைக்கவில்லை
என்று
சோதனைக்கு
உட்பட
இளைஞர்
மறுத்தபோது,
கலகப்
பிரிவு
வாகனம்
ஒன்று
வந்து
நிறுத்துப்பட்டு
பொலிசார்
அவரைக்
கைது
செய்ய
முயன்றனர்.
அவரைக்
காக்க
ஒரு
கூட்டம்
கூடியது;
நிலைமை
விரைவில்
ஏராளமான
கலகப்
பிரிவுப்
பொலிசாருக்கும்
நூற்றுக்கணக்கான
இளைஞர்களுக்கும்
இடையே
நடைபெற்ற
மோதல்களாக
விரிவாக்கம்
பெற்றது.
டோட்டன்ஹாம்
கலகத்திற்கு
முந்தைய
நிகழ்வுகள்
பற்றிய
உத்தியோகபூர்வத்
தகவல்கள்
வெளிப்பட்டு
வருகையில்
பொலிசாரின்
தடுப்பு
நடவடிக்கைகள்
செயல்படுத்தப்படுகின்றன.
ஒரு
டாக்சியில்
பயணித்து
வந்த
டுக்கன்
அதிகாரிகள்
வண்டியை
நிறுத்த
முற்பட்டபோது
அவர்கள்
மீது
துப்பாக்கியினால்
சுட்டார்
என்று
பொலிசார்
கூறுகின்றனர்.
ஒரு
முன்கூட்டித்
திட்டமிடப்பட்ட
கைது
செயலின்
ஒரு
பகுதியாக
வாகனம்
வந்தது.
டுக்கன்
இயக்கிய
தோட்டா
அவருடைய
வானொலியைத்
தாக்கியபோது,
ஒரு
அதிகாரி
பிரயாசத்துடன்
உயிர்
போவதில்
இருந்து
தப்பித்தார்
என்று
பொலிஸ்
அறிக்கைகள்
கூறுகின்றன.
மற்ற
அதிகாரிகள்
துப்பாக்கிச்
சூட்டை
எதிர்கொள்ளும்
வகையில்
தற்காப்பு
கருதிச்
சுட்டனர்,
டுக்கன்
உடனடியாக
இறந்து
போனார்.
அந்த
இடத்தில்
இருந்து
பொலிஸ்
அனுமதி
பெறாத
ஆயுதம்
மீட்கப்பட்டதாக
தகவல்கள்
கூறுகின்றன.
சனிக்கிழமை
பிற்பகல்,
200க்கும்
மேற்பட்டவர்கள்
டோட்டன்ஹாம்
பொலிஸ்
நிலையத்தில்
கூடி
“மார்க்
டுக்கனுக்கு
நீதி
வேண்டும்”
என்று
கோரினர்.
டுக்கனைத்
திருமணம்
செய்து
கொள்ள
இருந்த
செமோனே
வில்சன்
உட்பட
எதிர்ப்பாளர்கள்
அவர்
ஏன்
சுடப்பட்டார்
என்பது
பற்றிய
விளக்கத்தைப்
பெறவில்லை
என்று
புகார்
கூறினர்.
ஒரு
அமைதியான
எதிர்ப்புப்
போராட்டமாக இருந்தது என அவர்கள் ஒத்துக்கொண்ட எதிர்ப்பு,
திடீரென
பொலிஸ்
வாகனங்களை
இளைஞர்
குழுக்கள்
தாக்கத்
தொடங்கியபோது
வன்முறை
ஏற்பட்டது
என்று பல மணித்தியாலங்களின் பின் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆனால்
கார்டியன்
தகவல்படி
இன்னும்
வெளியிடப்படாத
வெடிமருந்துச்
பரிசோதனைகள்
பொலிஸ்
வானொலியில்
காணப்பட்ட
தோட்டா
பொலிஸ்
சுட்டதுதான்
எனக்
காட்டுவதாகத்
தெரிகிறது.
இது
பொலிசார்
டுக்கனைக்
கொன்றனர்
எனப்
பலர்
சந்தேகித்தபடிதான்
நடந்துள்ளது
என்பதைக்
குறிக்கிறது.
சாட்சிகள்
தாங்கள்
பொலிஸ்
டுக்கன்
தரையில்
முகம்
பதிந்து
கிடக்கையில்
சுட்டதைப்
பார்த்ததாகக்
கூறியுள்ளனர்.
எதிர்ப்பைப்
பற்றி
பொலிஸ்
கூற்றைப்
பொறுத்தவரை,
இப்பொழுது
வெளிவந்துள்ள
ஒளிப்பதிவு
காட்சிகள்
பொலிசார்
ஓர்
இளம் பெண்ணை
மிருகத்தனமாக
அடித்ததை
காட்டுகின்றன. இது
கூட்டத்தில்
சீற்றத்தை
ஏற்படுத்தியது.
YouTube
ல்
வந்துள்ள
இந்த
ஒளிப்பதிவுக்காட்சி
பொலிஸ்
ஒரு
16
வயது
இளைஞரை
தாக்க
முற்பட்டதை
அடுத்து
தூண்டுதல்
பெற்றது
என்னும்
சாட்சிகளின்
கருத்தைகளைத்தான்
உறுதி
செய்கிறது.
உள்ளூர்வாசி
லாரன்ஸ்
பெய்லி
நிருபர்களிடன்
தான்
“15
கலகப்
பிரிவு
பொலிஸ்
அதிகாரிகள்
அப்பெண்ணை
கேடயத்தால்
தாக்கி
நொருக்கியதை”
பார்த்ததாக
கூறியுள்ளார்.
“அப்பெண்
தரையில்
சரிந்தார்,
ஆனால்
அவர்
மீண்டும்
முயற்சி
செய்து
எழுந்தபோது,
மீண்டும்
தாக்கப்பட்டார்,
பின்னர்
அவருடைய
நண்பரால்
இழுத்துச்
செல்லப்பட்டார்”
என்று
அவர்
கூறினார்.
கோபமுற்ற
கூட்டம்
முன்னேறியபோது,
பொலிஸ்
வாகனங்கள்
சாலையை
தடுக்கப்
பயன்படுத்தப்பட்டன.
இந்த
வாகனங்களைத்தான்
இளைஞர்கள்
தாக்கித்
தீ
வைத்தனர்.
பொலிஸ்
ஆத்திரமூட்டல்
பற்றிச்
சான்றுகள்
அதிகரிக்கையில்,
செய்தி
ஊடகம்
மற்றும்
முக்கிய
அரசியல்
கட்சிகள்,
பதட்டங்களுக்கு
“முறையான
குற்றவாளிகள்”,
“கொள்ளையடிப்பவர்கள்”
ஆகியோர்
காரணம்
என்று
கூறும்
பிரச்சாரத்தை
தொடர்கிறன;
இதன்
நோக்கம்
இன்னும்
கூடுதலான
அரச
ஒடுக்குமுறையை
நியாயப்படுத்துவதுதான்.
கன்சர்வேடிவ்
கட்சிப்
பிரதம
மந்திரி
டேவிட்
காமெரோனின்
செய்தித்
தொடர்பாளர்
ஒருவர்
கலகம்
“முற்றிலும்
ஏற்கமுடியாதது”
என்று
கண்டித்தார்:
துணைப்
பிரதம
மந்திரி
லிபரல்
டெமக்ராடிக்
கட்சியின்
நிக்
கிளெக்
கலகத்தை
“சந்தர்ப்பவாதத்
திருட்டு”
என்று
விவரித்தார்.
மெட்ரோபொலிட்டன்
பொலிஸ்
அதிகாரத்தின்
தலைவரான
கன்சர்வேடிவ்
கட்சியின்
கிட்
மால்ட்ஹௌஸ்
கூறியது:
“வருந்தத்
தக்க
வகையில்
இந்நேரத்தில்
வன்முறையைப்
பயன்படுத்த
விரும்பும்
சில
மக்கள்
உள்ளனர்.
அவர்கள்
திருடவும்,
கட்டிடங்களுக்குத்
தீ
வைக்கவும்
வாய்ப்பை
நாடுகின்றனர்.
ஒரு
பீதி
உணர்வைத்
தோற்றுவிக்க
முற்படுகின்றனர்;
அவர்கள்
அராஜகவாதிகளோ
அல்லது
முறையாக
ஒழுங்கமைக்கப்பட்ட
அட்டூழியக்
குழுக்களின்
பகுதியினரோ
அல்லது
மோசமான இளைஞர்களோ,
எப்படியும்
ஒரு
புதிய சோடி பாதணிகள் தேவை என ஆசைகொண்டுள்ளனர்.”
தொழிற்
கட்சியின்
நிழல்
உள்நாட்டு
மந்திரியான
Yvette Cooper “லண்டனில்
வலுவான
தலைமை,
நடவடிக்கை
இப்பொழுது
தேவை;
அதுதான்
ஒழுங்கற்ற
தன்மை,
குற்றத்தன்மை
ஆகியவை
பரவுதலைத்
தடுக்கும்”
என்று
கோரியுள்ளார்.
“பொது
ஒழுங்கை
தக்க
வைப்பதற்கு
தேவையான
இருப்புக்கள்
பொலிசாரிடம்
உள்ளன
என்பது
பற்றி
நமக்கு
உறுதியளிக்கப்பட
வேண்டும்;
குற்றவாளிகளை
நீதிக்கு
முன்
நிறுத்தும்
தொடர்
நடவடிக்கைகளை
இலக்கு
கொண்டு
நடத்தவும்
வேண்டும்”
என்று
அவர்
கூறினார்.
“அரசாங்கத்திடம்
இருந்து
மேயரிடம்
இருந்து
ஒரு
தெளிவான
மூலோபாயம்
நமக்கு
இந்த
ஒழுங்கீனத்தைத்
தடுத்து
நிறுத்துவதற்கு
வேண்டும்;
இது
ஆகஸ்ட்
செப்டம்பர்
முழுவதும்
மீண்டும்
வரும்
ஒழுங்கீனமாக
ஆக்கப்படக்கூடாது.”
கூப்பருடைய
கருத்துக்கள்
கன்சர்வேடிவ்-லிபரல்
டெமக்ராட்டுக்கள்
செயல்படுத்தியுள்ள
சிக்கன
நடவடிக்கைகள்
பற்றிய
மறைமுகமான
குறிப்பு
ஆகும்;
அவற்றில்
கிட்டத்தட்ட
80
பில்லியன்
பவுண்டுகள்
செலவுகளில்
குறைக்கப்பட்டு
வேலைகளில்,
வாழ்க்கத்தரங்களில்
மற்றும்
சமூகநலத்திட்டங்களில்
பேரழிவு
விளைவுகளை
உருவாக்கும்.
சமீப
மாதங்களில்
அரசாங்கம்
பல்கலைக்கழகப்
பயிற்சிக்
கட்டணத்தை
மூன்று
மடங்காக
உயர்த்தி,
கல்வி பராமரிப்பு உதவிநிதியை
அகற்றிவிட்டது.
இவை
உயர்
கல்வியைத்
தொடர்வதற்கு
கிட்டத்தட்ட
16-18
வயதில்
உள்ள
640,000
பேருக்குக்
கொடுக்கப்பட்டு
வந்தன.
நாட்டின்
வசதிகள்
பெரிதும்
குறைந்துள்ள
பகுதிகளில்
ஒன்றான
டோட்டன்ஹாம்
போன்றவை
குறிப்பான
பாதிப்பிற்கு
உட்பட்டுள்ளன.
உத்தியோகபூர்வ
வேலையின்மை
8.8%
என்று
உள்ளது;
ஆனால்
இளைஞர்களிடையே
இது
அதிகமாக
இருக்கும்.
வேலை
தேடுவோரின்
உதவிநிதி கோரும் விண்ணப்பங்கள்
கடந்த
ஆண்டு
10%
அதிகரித்துவிட்டன;
அதே
நேரத்தில்
ஹாரிங்கே நகரவை
அதன்
வரவு-செலவுத்
திட்டத்தில்
41
மில்லியன்
பவுண்டுகளைக்
குறைத்துவிட்டது;
இளைஞர்களுக்கான
அதன்
பணிகளை
75%
குறைத்துவிட்டது.
இந்த
சமூக
உண்மைதான்
லண்டன்
அமைதியின்மைகளின்
அடித்தளத்தில்
உள்ளன.
இது
நாடெங்கிலும்
உள்ள
தொழிலாள
வர்க்கப்
பகுதிகளில்
தலைதூக்குகிறது.
இக்காரணத்தினால்தான்
கூப்பர்
வரவிருக்கும்
மாதங்களில்
“மீண்டும்”
ஒழுங்கீனம்
தோன்றலாம்
என
எதிர்பார்க்கிறார்.
அரசியல்
நடைமுறை,
பொலிஸ்
மற்றும்
செய்தி
ஊடகம்
ஆகியவை
இந்நிகழ்வுகளைப்
பயன்படுத்தி
இன்னும்
கடுமையான
நடவடிக்கைகளை
நியாயப்படுத்த
முயல்கின்றன.
திங்களன்று
டெய்லி
எக்ஸ்பிரஸ்
தலையங்கம்
எழுதியது:
“குற்றவாளிகளுக்கு
பெரிதும்
விரும்பும்
கடுமையான
தண்டனைகளைக்
கொடுக்காமல்,
தங்கள்
தோள்களில்
கற்களை
சுமந்து
நிற்கும்
இளைஞர்களைப்
“புரிந்து
கொள்வதில்”
பல
ஆண்டுகள்
நேரத்தை
வீணடித்துள்ளதற்கு
சமூகம்
இப்பொழுது
விலை
கொடுக்கிறது.”
திங்கள்
பிற்பகல்
உள்துறை
மந்திரி
தெரிசா
மே
பொலிசாருடன்
பேச்சுக்கள்
நடத்தி
கலகங்களை
“வலுவாக”
எதிர்கொள்ளுதல்
என்று
விளக்கப்படுவது
பற்றி
ஒருங்கிணைந்த
வகையில்
பேசினார்.
|