WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
உலக பொருளாதாரம்
2008 இன்
பின்னர் மிகப் பெரிய உலகப் பங்குச் சந்தை சரிவு
By Andre Damon
9 August 2011
திங்களன்று
உலகப் பங்குச் சந்தைகள் பெரும் வீழ்ச்சியடைந்தன. அமெரிக்க குறியீடுகள் டிசம்பர்
2008க்குப் பின்
மிகத் தீவிரமான சரிவுகளைப் பதிவுசெய்தன.
இந்த நிதியச்
சந்தைகளில் ஏற்பட்டுள்ள பீதி அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் புதிய பொருளாதாரச்
சரிவு,
ஐரோப்பிய கடன் நெருக்கடி
மோசமாதல் மற்றும் வெள்ளியன்று அமெரிக்க அரசாங்கக் கடன் பத்திரங்கள் தரம்
கீழிறக்கப்பட்டதால் ஏற்பட்ட ஸ்திரமற்றதாக்கும் தாக்கம் ஆகியவற்றின் அதிகரித்துவரும்
சமிக்கைகளுக்கு மத்தியில் வந்துள்ளது.
2008ல்
வெடித்த நெருக்கடி தற்காலிகமானதுதான் என்ற கூற்றை இவ் விற்றுத்தள்ளுதல்கள்
முடிவிற்குக் கொண்டு வருகின்றன.
2008 நிதியக்கரைப்பை
எதிர்கொள்ளும் வகையில் ஒபாமா நிர்வாகத்தின் தலைமையில் அரசாங்கங்கள் மற்றும் சர்வதேச
அமைப்புக்கள் எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் அடிப்படைக் காரணங்களுக்கு தீர்வு
காண்பதில் தோற்றுவிட்டன.
டிரில்லியன் கணக்கான
டாலர்கள் நிதியத் தன்னலக்குழுக்களின் செலுத்தமுடியாத கடன்களை தீர்க்க உத்தரவாதம்
செய்து கொடுக்கப்பட்டமை புதிய ஊகக் குமிழி அதிகரிப்பதற்குத்தான் உதவியுள்ளன.
அமெரிக்காவில் பங்குகள் மதிப்புக்கள் சரிந்தது ஒரே நாளில் கிட்டத்தட்ட
1
டிரில்லியன் டாலர்
மதிப்புச் சொத்துக்களை அழித்துவிட்டது.
Dow Jones
தொழில்துறை சாரசரி
634 புள்ளிகள்,
அதாவது
5.6% வீழ்ச்சி
அடைந்தது. S&P500
6.6 சதவிகிதம்
மற்றும் NASDAQ
கூட்டு
6.9% சரிவுற்றன.
ஜூலை
22ல் இருந்து
S&P குறியீடு
16.8%
குறைந்துவிட்டது.
அனைத்து முக்கிய
பங்குக் குறியீடுகளும் அவற்றின் மோசமான நிலையை அடைந்தன. இது இன்று இன்னும் சரிவுகள்
வருவதைத்தான் காட்டுகிறது.
பிரிட்டிஷ்
FTSE 100 3.4% சரிவு,
ஜேர்மனிய
DAX குறியீடு
ஒன்பதாம் நாளாகத் தொடர்ந்து
5% சரிவை
வெளிப்படுத்திய ஐரோப்பிய சோர்வுற்ற நிலையைத்தான் அமெரிக்க தோல்வியும்
வெளிப்படுத்தியுள்ளது.
ஆசியாவில் பங்குச்
சந்தைகள் திங்களன்று
2%க்கும் மேலாக
சரிந்ததுடன், செவ்வாய் பிற்பகலில் இன்னும் தீவிரச் சரிவு ஏற்பட்டது.
Standard &
Poor
வெள்ளியன்று அமெரிக்காவின்
கடன் தரத்தை குறைத்துவிட்டதைத் தொடர்ந்து திங்கள் கூடுதல் குறைப்புக்களையும்
அறிவித்தது. இதில் வங்கிகள் மற்றும் அரசாங்க ஆதரவுடைய அடைமான நிதிய நிறுவனங்கள்
Fannie Mae,
Freddie Mac
ஆகியவை வெளியிட்டுள்ள
நீண்டகால கடன் பத்திரங்களும் அடங்கும்.
ஆனால்
திங்களன்று பங்குப்பத்திர சந்தை இரத்தக்களரியில் இருந்து
“பாதுகாப்பான இடத்தை
நாடி”
வெள்ளெமென பங்கு நிதிகள்
மற்றும் பிற ஊக வணிகங்களின் நிதிகள், பாவனைப்பொருட்கள் மற்றும் விலையுயர்ந்த
உலோகங்களின் சந்தைகளின் நிதிகளும் அமெரிக்க கருவூலத்தை நோக்கி வந்தன.
இதற்கிடையில்,
பொருளாதார
ஒத்துழைப்புக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு
(OECD)
திங்களன்று அதன் இணைந்த
கூட்டின் முக்கிய குறியீடுகள் ஜூன் மாதம்
102.2 என்று மே மாத
த்தில் இருந்த 102.5
என்பதில் இருந்து
குறைந்துவிட்டது என்ற தகவலைக் கொடுத்துள்ளது.
இது உலகம் முழுவதும்
கீழ்நோக்குப் பாதை ஆழமாகிறது என்பதைத் தெரிவிக்கிறது.
“கடந்த மாத
மதிப்பீட்டுடன் ஒப்பிடும்போது,
வளர்ச்சி
வட்டங்களின் திருப்பு முனைகளில் காணப்படும் வலுவான அடையாளங்கள் அமெரிக்கா,
ஜப்பான்,
ரஷ்யா ஆகிய
நாடுகளில் வந்துள்ளன”
என்று
OECD அதன்
அறிக்கையில் கூறியுள்ளது.
நிதியச்
செய்தி ஊடகங்கள் உலகப் பொருளாதாரம் இரண்டாம் மந்த நிலையில் நுழையக்கூடும் என்பதைப்
பரந்த அளவில் ஒப்புக் கொண்டுள்ளன.
பைனான்சியல்
டைம்ஸில்
நியூயோர்க் பல்கலைக் கழக பொருளாதார வல்லுனர் நௌரியல் ரௌபினி திங்களன்று
“கடந்த வாரப்
பீதிக்கு முன்னரே,
அமெரிக்காவும் பிற
முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளும் இரண்டாம் கடுமையான மந்த நிலையை அடையும் என்பது
பற்றிய சிக்கலான நிலை இருந்தது.”
என்றார்.
“2011ன்
முதல் அரையாண்டு வளர்ச்சியில் பெரும்பாலான வளர்ச்சியுற்ற நாடுகளில் ஒரு குறைப்பைக்
காட்டியுள்ளது —நேரடிச்
சுருக்கம் என்று கூடக் கூறலாம்—
என்ற ரௌபினி
எழுதியுள்ளார். “மற்றொரு
மந்தநிலை தவிர்க்கப்பட முடியாது எனத் தோன்றுகிறது;
ஒரு இரண்டாம்
மந்தநிலையை நோக்கிச் செல்வதற்கு அரசாங்கங்கள் தயாராக இருக்க வேண்டும் என்பதுதான்
செய்யக்கூடியது”
என்றும் அவர்
கூறினார்.
பங்குகளின்
சரிவின் அடித்தளத்தில் உள்ள மற்றொரு கூறுபாடு நாணயங்கள் பற்றிய முரண்பாடுகள் ஆகும்.
அமெரிக்க அரசாங்கம் மற்றும் மத்திய வங்கிக் கூட்டமைப்பின் மலிவான டாலர்
கொள்கையினால் இவை எரியூட்டப்பட்டுள்ளன.
கடந்த வாரம்
ஜப்பானும் ஸ்விட்சர்லாந்தும் நாணயச் சந்தைகளில் தலையிட்டு தங்கள் நாணய மாற்றுவிகித
அளவை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டன. இது
1930 களில் பெரும்
மந்தநிலையை அதிகரிக்கச்செய்த போட்டித்தன்மை நிறைந்த நாணய மதிப்புக் குறைவுகளைத்தான்
நினைவுபடுத்துகிறது.
ஐரோப்பிய
அரசாங்கக் கடன் நெருக்கடி கட்டுப்பாட்டை விட்டு மீறும் நிலையில் தொடர்ந்து உள்ளது.
இப்பொழுது அது இத்தாலி,
ஸ்பெயின் நாடுகளில்
மையம் கொண்டுள்ளது.
திங்களன்று
முதலீட்டாளர்களுக்கு உறுதியளிக்கும் வகையில் ஐரோப்பிய மத்திய வங்கி இத்தாலிய,
ஸ்பெயின்
பத்திரங்களை வாங்க இருப்பதாக உறுதி கூறியுள்ளது.
ஆனால் இந்த அசாதாரண
நடவடிக்கைகூட ஐரோப்பிய மற்றும் உலகந்தழுவிய பங்கு விற்பனைகளைத் தடுத்து நிறுத்த
முடியவில்லை.
இந்த
உடனடிக் காரணங்களுக்கு பின்னணியில் உலக முதலாளித்துவ முறையின் நிலைமுறிவு என்னும்
அடிப்படைக் காரணம் உள்ளது. அதன் மத்தியில் அமெரிக்க முதலாளித்துவத்தின் நீடித்த
வீழ்ச்சி நிலை உள்ளது.
அமெரிக்கக் கடன்
தரத்தை குறைத்த வகையில்
S&P வோல்
ஸ்ட்ரீட்டின் சார்பாக இன்னும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளுக்கான அழுத்தம் என்னும்
அரசியல் செயற்பட்டியலைத்தான் செய்துள்ளது. ஆனால் உலகப் பொருளாதாரத்தில்
அமெரிக்காவின் நிலைமை தீவிர சரிவைக் கண்டுள்ளது என்ற உண்மையையும் ஒப்புக்
கொண்டுள்ளது.
உலக
மோதல்கள் ஆழ்ந்துள்ள நிலைமைக்கு நடுவே,
உலகின் ஆளும்
வர்க்கங்கள் அனைத்தும் உடன்பட்டிருக்கும் ஒரே கருத்து சர்வதேச தொழிலாள வர்க்கத்தின்
மீதான அவற்றின் தாக்குதலை அதிகரிக்க வேண்டும் என்பது பற்றித்தான்.
இன்னும் கூடுதலான
மிருகத்தன வெட்டுக்களை சமூகநலத்திட்டங்கள்,
வேலைகள்,
ஊதியங்கள்
ஆகியவற்றின்மீது கொண்டுவரும் வகையில் அவை தங்களை மீட்டுக் காப்பாற்றிக் கொள்ளவும்,
முதலாளித்துவ
அமைப்புமுறையின் தோல்விக்கு தொழிலாள வர்க்கம் விலைகொடுக்குமாறு செய்யவேண்டும்
என்றும் முற்பட்டுள்ளன.
திங்கள்
பிற்பகல் வெள்ளை மாளிகையில் இருந்து ஒபாமா ஓர் அறிக்கையை வெளியிட்டார். இதில் அவர்
சமூகநல செலவுகளில் கூடுதல் வெட்டுக்களுக்கு தன் ஆதரவை மறு உறுதிபடுத்தும் வகையில்
அமெரிக்க கடன்தரம் தாழ்த்தப்பட்டுள்ளது
“நம்மால் கடனைத்
திருப்பித்தர முடியும் என்பது பற்றி அவர்கள் சந்தேகப்படுவதால் அல்லாது,
நம் அரசியல்
அமைப்புமுறை செயல்படும் திறன் பற்றி சந்தேகம் கொண்டிருப்பதால்தான்”
என்றார்.
சமூகநலத்
திட்டங்களில் முன்னோடியில்லாத வெட்டுக்கள்,
Medicare, Medicaid,
சமூகப் பாதுகாப்பு போன்ற
அடிப்படைத் திட்டங்களில் குறைப்பு உட்பட,
காங்கிரசின்
“உயர்மட்டக் குழு”
ஒன்றினால்
நிர்ணயிக்கப்படும். இது கடந்த வாரம் கடன் வரம்பு உடன்பாடு இயற்றப்பட்டதின் ஒரு
பகுதியாக நிறுவப்பட்டுள்ளது.
தான் குழுவை
1.5
டிரில்லியன் டாலருக்கும்
மேலாக வெட்டுக்களுக்கு மேல் செல்லுமாறு அழுத்தம் கொடுக்கும் என்று நிர்வாகம்
குறிப்புக் காட்டியுள்ளது. இத்தொகைதான்
S&P கோரியுள்ள
முழுதான 4
டிரில்லியன் டாலர்கள் என
நிர்ணயிக்கப்பட்ட தொகையை அடைவதற்கு இலக்காகக் கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஒபாமா தன்
வாடிக்கையான செல்வந்தர்கள் வரி செலுத்துவதில் சட்டத்தில் உள்ள ஓட்டைகள் அகற்றப்பட
வேண்டும் என்னும் ஜனரஞ்சக அழைப்பை விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது;
இவர் இதை முன்னதாக
செலவுக் குறைப்புக்களை
“சமம்”
செய்ய முடியும் என்ற
கருத்திற்காகக் கோரியிருந்தார்.
மாறாக அவர்
“வரிவிதிப்புச்
சீர்திருத்தம்”
வேண்டும் என்று
மட்டும் வலியுறுத்தியுள்ளார். இதன் பொருள் முந்தைய இருகட்சிக் குழுக்கள் முன்வைத்த
திட்டங்கள் ஆகும். அதாவது பெருநிறுவனங்கள் மற்றும் செல்வந்தர்கள் மீதான வரிவிகிதம்
கணிசமாகக் குறைக்கப்பட வேண்டும்,
அதே நேரத்தில்
மக்களின் பரந்த பிரிவுகளுக்கு தற்பொழுது நலனளிக்கும் வரிக் குறைப்புக்களை அகற்றுவது
அல்லது குறைத்துவிடுவது ஆகும்.
இச் சிக்கன
நடவடிக்கை திட்டம் மக்களில் பெரும்பாலானவர்களுக்கு பேரழிவு தரும் என்பது மட்டும்
அல்ல;
இது உலகப்
பொருளாதாரத்தில் மந்தநிலைப் போக்குகளையும் அதிகரித்துவிடும்.
செவ்வாயன்று
நடைபெற இருக்கும் மத்திய வங்கிக் கூட்டமைப்பின் கொள்கை பற்றிய கூட்டத்தை அமெரிக்க
மத்திய வங்கி ஒரு புதிய சுற்று
“மேலதிக
பணத்தை புழக்கத்தில் விடுவதை செய்யும்”
என்பது பற்றிய
அடையாளங்களுக்காக முதலீட்டாளர்கள் எதிர்நோக்கியுள்ளனர். அதாவது,
சந்தைகளை பணத்தால்
நிரப்பும் திட்டம்.
இத்தகைய
நடவடிக்கைகள் எதற்கும் தீர்வைத் தராது.
தற்போதைய நெருக்கடி
ஒபாமா நிர்வாகத்தின் கொள்கைகளுடைய திவால் தன்மையையும் முழு ஆளும் வர்க்கத்தின்
திவால் தன்மையையும் அம்பலப்படுத்துகின்றன.
பொருளாதாரச்
சரிவிற்கு இவை உகந்த விடையிறுப்பாக இல்லை.
2008ல்
முதலில் வெடித்த உலக முதலாளித்துவ முறையைச் சிதற அடிக்கும் அடித்தளத்தில் உள்ள
தீர்க்க முடியாத முரண்பாடுகள் மீண்டும் முழு ஆற்றலுடன் தம்மை வெளிப்படுத்திக்
கொண்டிருக்கின்றன.
ஒரு தற்காலிக மீட்பு
நடவடிக்கையில் இருந்து மற்றொன்றிற்கு அரசாங்கம் தடுமாறிச் செயல்படுகிறது.
நிதியப்
பிரபுத்துவத்தின் செல்வத்தை பாதுகாப்பது என்னும் இலக்கை ஒட்டித்தான் அது முற்றிலும்
வழிகாட்டப்படுகிறது.
சர்வதேச
தொழிலாள வர்க்கத்தின் பெருகிய எதிர்ப்பு பற்றிய தெளிவான அடையாளங்கள் உள்ளன.
இவற்றுள் இஸ்ரேலில் நடக்கும் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள்,
எகிப்தில் இராணுவ
ஆட்சிக் குழுவிற்குப் பெருகும் எதிர்ப்பு,
ஐரோப்பாவில் சிக்கன
நடவடிக்கை கோரிக்கைகளுக்கு ஆழ்ந்த விரோதப் போக்கு,
அமெரிக்காவில்
பல்லாயிரக்கணக்கான சேவைத்துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் ஆகியவை அடங்கும்.
இந்த
சமீபத்திய நெருக்கடி இப்போராட்டங்கள் வெற்றிபெற வேண்டும் என்றால்,
தொழிலாள வர்க்கம்
வேறு ஒருபாதையை கடைப்பிடிக்க வேண்டும்,
அது முதலாளித்துவ
முறையை பாதுகாக்க நினைக்கும் அனைத்து முதலாளித்துவ அரசாங்கங்கள் மற்றும் கட்சிகள்
மீது சமரசத்திற்கு இடமில்லாத எதிர்ப்புடன் தொடங்க வேண்டும் என்பதை நிரூபிக்கிறது.
கட்டுரையாளர் கீழ்க்கண்ட கட்டுரையையும் பரிந்துரைக்கிறார்:
The US credit downgrade |