சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Largest-ever social protests in Israel

இஸ்ரேலில் இதுவரை காணப்படாத மிகப் பெரிய சமூக எதிர்ப்புக்கள்

By Jean Shaoul 
8 August 2011

use this version to print | Send feedback

சனிக்கிழமை அன்று அதிகம் பெருகும் வாழ்க்கைச் செலவினங்கள் மற்றும் உயர் வீட்டு வாடகைகள் என தொழிலாள வர்க்கம் வாழ்க்கை செலவிற்கு ஈடுகட்டமுடியாத அளவிற்கு உள்ள நிலைமை குறித்து கால் மில்லியனுக்கும் மேலான மக்கள் தெருக்களுக்கு வந்தனர். இஸ்ரேலின் சமூக எதிர்ப்பின் வரலாற்றிலேயே இந்த ஆர்ப்பாட்டங்கள் இதுகாறும் இல்லாத அளவிற்கு மிகப் பெரியது ஆகும். இஸ்ரேலின் மக்கள் எண்ணிக்கையைக் கருத்திற்கொண்டால் இது அமெரிக்காவில் 10 மில்லியன் மக்கள், பிரிட்டனில் 2 மில்லியன் மக்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு சமம் ஆகும்.

டெல் அவிவில் நடந்த 200,000க்கும் மேற்பட்ட இளைஞர்களைக் கொண்ட அணிவகுப்பில் அஷ்மெனஜி மற்றும் மிஜ்ரகி யூதர்களும், ஓய்வு பெற்ற தம்பதிகளும் குடும்பங்களும் பங்கு பெற்றனர். “அரசாங்கம் மக்களைக் கைவிட்டுவிட்டது.” போன்ற கோஷங்களை ஆர்ப்பரித்தனர். பதாகைகள்மக்கள் சமூக நீதியைக் கோருகின்றனர்”, “ஒரு நல்ல வருங்காலம் வேண்டும் என்று முழுத் தலைமுறையும் கோருகிறதுஎன்று கூறின.

Israel
ஜூலை 30ம் திகதி டெல் அவிவில் 150,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் பங்கு பெற்றனர்

ஜெருசெலத்தில் குறைந்தபட்சம் 30,000 மக்கள் குழுமினர்; சில ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதம மந்திரி பென்ஞமின் நெத்தென்யாகுவின் இல்லத்தை நோக்கி அணிவகுத்தனர். பீர் ஷெவா, ஹைபா போன்ற மற்றும் அபிவிருத்தியடையும் எனக்கூறப்பட்ட சேரி சிறுநகரங்களான கிர்யட் ஷமோனா, அஷ்கெலோன் மற்றும் டிமோனாவில் சிறிய அளவிலான அணிவகுப்புக்கள் நடைபெற்றன.

நூற்றுக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்துள்ள ஒரு கூடார நகரத்தை பாலஸ்தீன நடவடிக்கையாளர்கள் டைபெயில் நிறுவியுள்ளனர். பல இளம் ட்ருஸ் பிரிவினர் யார்க்கா மற்றும் ஜூலிஸிற்கு வெளியேயும், மேலை கலிலிக்கு அருகே உள்ள கிராமங்களிலும் கூடாரங்களை நிறுவியுள்ளனர்.

எதிர்ப்புக்களில் பங்கு பெற்றவர்கள் அரபு நாடுகளில், குறிப்பாக எகிப்து, துனிசியாவில் நடைபெறும் வெகுஜன இயக்கங்களுடன் சக்திவாய்ந்த ஒப்புமைகளைக் கூறியுள்ளனர். ஹீப்ரூ மற்றும் அரபு மொழிகளில்இராஜிநாமா செய்யவும், எகிப்து போல் இங்கும் வந்துவிட்டதுஎன்று எழுதிய கோஷ அட்டைகளை எதிர்ப்பாளர்கள் சுமந்திருந்தனர். டெல் அவிவின் ஹபிமா சதுக்கம் நெத்தென்யாகுவின் தஹ்ரிர் சதுக்கம் என அழைக்கப்படுகிறது.

நான்காம் வாரம் தொடரும் ஆர்ப்பாட்டங்கள், டெல் அவிவில் வீடுகள் வாடகை உயர்வு பற்றி கூடார நகரம் அமைக்க வேண்டும் என்பது பேஸ்புக்கில் (Facebook) விடுத்த அழைப்பில் இருந்து தொடங்கின. இஸ்ரேலின் பொருளாதாரத்தின் பெரும்பகுதியை ஏகபோக உரிமைக்கு உட்படுத்தியுள்ள ஒரு டஜன் பில்லியன் குடும்பங்களுக்கு எதிரான சீற்றமாக, இவை நாடு முழுவதும் இப்பொழுது பரவியுள்ளன. இஸ்ரேலின் ப்ரோடெக்சியாவிற்கு (proteksia) எதிரான சக்திவாய்ந்த எதிர்க்குரல் ஆகும். அச்சொல் செல்வம் மற்றும் அதன் தொடர்புகளூடான ஆட்சிமுறை என்பதைக் குறிப்பது ஆகும்.

பீதி விற்பனையைத் தவிர்க்கும் வகையில் 45 நிமிடங்கள் தாமதமாகத் திறக்கப்பட்ட இஸ்ரேலிய பங்குச் சந்தை நேற்று 7% சரிந்தது. அமெரிக்காவின் கடன் தரத்தை ஸ்டாண்டர்ட் & பூர்ஸ் (Standard and Poor’s) குறைத்துள்ளதற்கும், எதிர்ப்புக்களின் பாதிப்பு பற்றிய அச்சங்களுக்கும் விடையிறுக்கும் வகையில் வணிகர்கள் நேற்று நடந்து கொண்டனர் எனக் கூறப்படுகிறது.

எதிர்ப்பாளர்களின் கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன. “தடையற்ற சந்தை சீர்திருத்தங்கள், சுகாதாரம் கல்வி ஆகியவற்றிற்கான சமூகநலச் செலவுத் திட்டங்களில் குறைப்பு ஆகியவற்றை நிறுத்தும்படி குரல்கள் ஒலிக்கின்றன. இஸ்ரேலிய தேசிய மாணவர்கள் சங்கம் இலவசக் கல்வி விரிவாக்கப்பட வேண்டும், இன்னும் கூடுதலான அரசாங்க வீட்டுகட்டுமானத் திட்டங்கள் வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.

ஒரு முன்னோடியில்லாத நடவடிக்கையாக, எதிர்ப்பு அமைப்பாளர்கள் இஸ்ரேலின் பாலஸ்தீனிய குடிமக்களின் கோரிக்கைகள் இரண்டை இணைத்துக்கொண்டுள்ளனர். அதாவது நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்படாத கிராமங்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும், குறிப்பாக நெஜெவ் பகுதியில் பெடௌவின் சமூகங்களை, மற்றும் உள்ளூர் அதிகாரங்களின் வரம்பை விரிவாக்கவும், கட்டமைப்புக்களுக்கு உதவவும் உயர் திட்டங்களுக்கு ஒப்புதல் கொடுக்க வேண்டும் என்பவையே அவை.

கடந்த வியாழனன்று டெல் அவிவ், ஏரியல், ஹெர்ஜ்லியா இன்னும் பல நகரங்களிலும் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்ப்பதில் ஏற்பட்டுவிட்ட உயர் செலவினங்களுக்கு எதிரான எதிர்ப்பைத் தெரிவித்தனர். அதே சமயம் உயர்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கல்வி மந்திரியின் டெல் அவிவ் இல்லத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வீடுகள் கட்டமைப்பதற்கு விரைவான ஒப்புதலை பெற வீடுகள் கட்டுவோருக்கு உதவும் வகையில் உள்ள புதிய வீடுகட்டும் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடாரங்களை எழுப்பினர்.

எதிர்ப்புக்களுடன் கூட, ஐந்து மாத காலமாக குறைந்த ஊதியம், நீடித்த பணி நேரம் குறித்து உள்ளிருப்பு மருத்துவமனை டாக்டர்களின் வேலைநிறுத்தங்களும் நடைபெற்று வருகின்றன. அரசாங்க மற்றும் டாக்டர்கள் தொழிற்சங்கத் தலைவர்கள் இம்முரண்பாட்டை பெருமுயற்சியெடுத்து முடிக்க விரும்புகின்றனர்; அப்பொழுதுதான் அரசாங்கத்திற்கு எதிரான பரந்த வேலைநிறுத்த இயக்கம் வளர்வது தடுக்கப்பட முடியும். பல மருத்துவமனைகளிலும் டாக்டர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் இராஜிநாமா செய்வதாக அச்சுறுத்தியுள்ளனர்.

இந்த வாரம் அரசாங்கம் கூடுதலாக 1,000 பதவிகளுக்கு நிதியளிப்பதாகவும், NIS 300,000 ($85,000) வரை மானியம் டாக்டர்களுக்கு வழங்கும் வகையில் நிதியை அளிக்க ஒப்புக் கொண்டுள்ளனர். டாக்டர்கள் புறப்பகுதியில் பணியாற்ற வேண்டும் அல்லது தேவை அதிகம் உள்ள சிறப்பு சிகிச்சை மருத்துவ மனைகளில் பணிபுரிய வேண்டும்.

ஆனால் எதிர்ப்புக்கள் உத்வேகமடைந்து வருகையில், முக்கிய தலைவர்கள் நேரடி அரசியல் கோஷங்களிடுவதைத் தவிர்த்து, இயக்கம் பிரதம மந்திரி நெத்தென்யாகு மற்றும் அவருடைய அரசாங்கத்திற்கு நேரடி எதிர்ப்பில் ஈடுபடக்கூடாது என்றும் கூறுகின்றனர். டெல்அவிவ் முகாம் நகரத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஸ்டாவ் ஷபிர், “பிரதம மந்திரி மாற்றப்பட வேண்டும் என்று நாங்கள் கோரவில்லை. அமைப்புமுறையை மாற்றுமாறுதான் கோருகிறோம்.” என்றார்.

நெத்தென்யாகுவின் கூட்டணி அரசாங்கம் ஒரு முக்கிய அரசியல் நெருக்கடியை எதிர்கொள்கிறது. இஸ்ரேலின் வரலாற்றிலேயே அதிக வலதுசாரித் தன்மை கொண்ட நெத்தென்யாகுவின் அரசாங்கம் வெளியுறவு மந்திரி, வலதுசாரி யிஸ்ரேல் பென்டின்யு (Yisrael Beiteinu -இஸ்ரேல் நம் தாயகம்) என்னும் அமைப்பைச் சேர்ந்த அவிக்டோர் லீபர்மானை பெரிதும் நம்பியுள்ளது.

தன்னுடைய தீவிர வலதுசாரி அரசாங்கம் எதிர்ப்பாளர்களின் கோரிக்கைகளுக்கு உண்மையான சலுகைகளைத் தரும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதை நெத்தென்யாகு தெளிவாக்கிவிட்டார். சில மேலெழுந்தவாரியான திருத்தங்களை அவர் முன்வைத்து, “சீர்திருத்தம் பற்றித் தெளிவற்ற உறுதிமொழிகளைக் கொடுக்கிறார். புதன் கிழமை அன்று வீட்டு நெருக்கடிக்குத் தீர்வு கொடுப்பது என்னும் வகையில் பாராளுமன்றம் இயற்றிய தேசிய வீட்டுக்குழுக்கள் சட்டத்திற்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார். ஆனால் இவை அனைத்துமே எதிர்ப்பாளர்களால் சீற்றத்துடன் உதறித்தள்ளப்பட்டு விட்டன.

ஹிஸ்டட்ருட் தொழிற்சங்கத்தின் பங்கு குறிப்பிடத்தக்க வகையில் தீமைபயப்பதாகும். கடந்த திங்களன்று வரவு செலவுத்திட்ட வெட்டுக்கள் குறித்த பல வேலைநிறுத்தங்களை நிறுத்தியபின், இதன் தலைமைச் செயலாளர் ஒபெர் ஐனி நகரசபை தொழிலாளர்களின் ஒரு நாள் வேலைநிறுத்த்திற்கு  அழைப்பு விடுத்துள்ளார். இது எதிர்ப்புக்களுடன் ஒற்றுமையுணர்வைக் காட்டுகிறது என்று ஐனி கூறுகிறார். ஆனால் இதன் உண்மையான நோக்கம் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்திற்கு வழிநடத்துவது என்று இல்லாமல், வளரும் இயக்கத்தைக் கட்டுப்படுத்தி நெரித்துவிடுதல் என்பதாகும். ஒரு வானொலிப் பேட்டியில் தனக்குஅரசாங்கத்தை வீழ்த்தும் விருப்பம் ஏதும் இல்லை என்று ஐனி வெளிப்படையாகக் கூறினார்.

தொழிலாள வர்க்கத்திற்கு எச்சலுகைகளையும் கொடுப்பதில்லை என்னும் தீவிர வலதுசாரி அரசாங்கத்தை முகங்கொடுக்கும் சூழ்நிலையில், இது தன்னுடைய தொழிற்சங்கம் தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தைத் தொடரும் நோக்கம் பெற்றிருக்கவில்லை, அதைத் தடுக்கும் நோக்கத்தைத்தான் கொண்டுள்ளது என்ற கருத்தை ஐனி வெளிப்படையாக ஒப்புக் கொள்ளுவதைத்தான் இது காட்டுகிறது.

எதிர்ப்புத் தலைவர்களின் கோரிக்கைகளைக் கேட்பதற்கு அவர்களைச் சந்திப்பதற்கு பிரதம மந்திரி மறுத்துவிட்டார். அவர்கள் ஓர்கலந்துரையாடல் குழுவினரை சந்திக்க வேண்டும் என்று கூறிவிட்டார். இக்குழுவிற்கு செப்டம்பர் நடுப்பகுதியில் ஒரு திட்டத்துடன் வருமாறு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஹார்வார்ட்டில் பயின்ற இஸ்ரேலியப் பொருளாதார மனுவல் ராஜ்டென்பேர்க் தலைமையில் உள்ள இக்குழு பற்றி நெத்தென்யாகுமுக்கிய மாற்றத்திற்கான வாய்ப்பைக் கொடுக்கும் என்றாலும், “அனைவரையும் திருப்திப்படுத்த அதனால் முடியாது என்றும் எச்சரித்துள்ளார்.

நெத்தென்யாகுவின் அரசாங்கம் பாலஸ்தீனிய மக்களுக்கு எதிராக அல்லது அண்டை அரபு நாடுகளின் மீது எதிர்ப்பை, பெருகும் சமூக அமைதியின்மையில் இருந்து திசை திருப்பும் தந்திரோபாயமாக கொள்ளும் என்னும் உண்மையான ஆபத்து உள்ளது. இஸ்ரேலியப் பாதுகாப்புப் படைகள் சமீபத்தில் காசாமீது ஆத்திரமூட்டும் வகையில் தாக்குதல்களைத் தொடங்கின. இதில் இருவர் இறந்து போனதுடன், மேற்குக்கரையில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவை அப்பகுதியில் அழுத்தங்களை அதிகரித்துள்ளது.

சமீபத்திய மாதங்களில் லிபர்மான் மற்றும் நெத்தென்யாகுவின் லிகுட் கட்சிக்குள் இருக்கும் அவருடைய நண்பர்கள் ஆகியோர் இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீனிய மக்கள் மற்றும் அவர்களுடன் சமாதானமாக உடன்பாடு காணவேண்டும், தடையற்ற பேச்சுரிமை வேண்டும் எனக் கோருவோர் அனைவரையும் அச்சுறுத்தும் வகையில் பல ஜனநாயக விரோத சட்டங்களை இயற்ற ஆர்வம் கொண்டுள்ளனர். இவற்றில் இஸ்ரேலின்சுதந்திர தினத்தை குறிக்கும் குறிக்கும் குழுக்களுக்கு பொது நிதி வழங்குவதைத் தடைசெய்யும் நக்பா சட்டமும் அடங்கும். பாலஸ்தீனியர்கள் யூத நாடு தோற்றுவிக்கப்பட்டதை ஒரு நக்பா என்று அறிவிக்கின்றனர். நக்பா என்றால் அரபு மொழியில்பெரும் தீமைஎன்று பொருளாகும்.

மற்றொரு சட்டம் இஸ்ரேலியர்கள் இஸ்ரேல் அல்லது இஸ்ரேலியக் குடியிருப்புக்களுக்கு எதிரான புறக்கணிப்பு இயக்கத்தில் பங்கு பெறுவது இஸ்ரேலியர்கள் மீது குற்றச்சாட்டு என்று கூறுகிறது. இதையொட்டி அவர்கள்மீது வழக்குப் பதிவு செய்யப்படலாம், அல்லது அவர்கள் $10,000 வரை இழப்பீட்டுத் தொகை கொடுக்க வேண்டும்; அல்லது இரண்டுமே செயல்படுத்தப்படும். மற்றொரு செயற்பாடு அரசாங்கத்திற்கு எதிராக ஒற்று வேலை பார்ப்பவர்களின் குடியுரிமை பறிக்கப்படும் என்று கூறுவது ஆகும்.

இஸ்ரேலின் 1.8 மில்லியன் உள்நாட்டு பாலஸ்தீனியக் குடிமக்களின் முதல் மொழியான அரபு மொழியை இஸ்ரேலின் மூன்று உத்தியோகப்பூர்வ மொழிகளான ஹீப்ரூ, அரபு, ஆங்கிலம் என்னபவற்றில் இருந்து நீக்கும் முயற்சிகளும் நடக்கின்றன. வலதுசாரிச் சக்திகள் ஐக்கிய நாடுகளின் கோல்ட்ஸ்டோன் அறிக்கையில் மேற்கோளிடப்பட்டுள்ள மனித உரிமைகள் குழுக்களுக்கான சர்வதேச நிதி வழங்கப்படுவதையும் சட்டவிரோதமாக்க முயல்கின்றன. இந்த அறிக்கை இஸ்ரேலின் இராணுவம் 2009 காசா போரில் போர்க்குற்றங்கள் நடத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

ஆளும் வர்க்கத்தின் சோவினிச கொள்கைகளுக்கு எதிர்ப்பட்ட வகையில், யூதர்களும் அரபுத் தொழிலாளர்களும், மத்திய கிழக்கு முழுவதும் புரட்சிகரப் போராட்ட எழுச்சிகளுக்கு இடையே ஒன்றாகப் போராடுவது இன, தேசிய எல்லைகளை கடந்து தொழிலாள வர்க்கம் ஒன்றுபடுவதைத்தான் எடுத்துக்காட்டுகிறது. இப்போராட்டங்கள் உலக முதலாளித்துவத்தின் முன்னோடியில்லாத ஆழ்ந்த நெருக்கடிக்கு நடுவே வெளிப்பட்டுள்ளமை இவற்றின் வரலாற்று முக்கியத்துவத்தை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

எகிப்து, துனிசியாவில் இருப்பது போல், தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் அடிப்படைப் பிரச்சினை தொழிலாள வர்க்கத்தின் அரசியல் ரீதியான சுயாதீன இயக்கத்தை வளர்ப்பதுதான். இது இப்பகுதி முழுவதும் உள்ள தொழிலாளர்களின் சோசலிச கொள்கைகளுக்காக ஐக்கியப்பட்ட போராட்டத்தை அடித்தளமாக கொண்டிருக்க வேண்டும்.