WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
:
லிபியா
லிபியாவில் நேட்டோ போர்க்குற்றங்களைப் பற்றிய குற்றச்சாட்டுக்கள் அதிகரிக்கின்றன
By Patrick Martin
6 August 2011
லிபியப் போரில் ஈடுபட்டிருந்த ஒரு நேட்டோ போர்க்கப்பல் அகதிகள்
நிறைந்த ஒரு படகின் பரிதாப நிலையைப் புறக்கணித்ததா என்பது பற்றிய விசாரணையை
இத்தாலிய அரசாங்கம் கோரியுள்ளது.
இப்படகில் இருந்த கிட்டத்தட்ட
100
பேர் பட்டினி,
தாகத்தால் இறந்து போயினர்.
இப்படகு மத்தியதரைக் கடல் பகுதியில் சிசிலிக்கும் லிபியாவிற்கும்
இடையேஒரு இத்தாலியத் தீவை அடைந்தது;
65
அடி நீளப் படகில்
270
தப்பிப் பிழைத்தவர்கள் நெரிசலில் அமர்ந்திருந்தனர்.
அதன் இயந்திரம் சீர்குலைந்தவடுன் இப்படகு ஒரு
“காப்பாற்றுக”
(SOS)
தகவலை அனுப்பியிருந்தது;
ஆனால் அடையாளம் காணப்படாத நேட்டோ போர்க்கப்பல் இந்தத் தகவலை பொருட்படுத்தவில்லை.
இறந்தவர்களின் சடலங்கள் இக்கொடூரப் பயணத்தின்போது கடலில்
வீசப்பட்டுவிட்டதாகத் தப்பிப்பிழைத்தவர்கள் கூறினர்.
முதலில் ஒரு சைப்ரஸ் நாட்டு இழுபடகைக் கண்டதாகவும்,
அது இவர்களுக்கு உயிர்காக்கும் சிறு தோணிகளைக் கொடுத்து இத்தாலிய அதிகாரிகளிடம்
தகவல் கொடுத்ததாகவும் அவர்கள் கூறினர்.
27
மைல் தொலைவில் மட்டுமே இருந்த நேட்டோ கப்பலுக்கு இத்தாலி இத்தகவலைக் கொடுத்தது;
ஆனால் போர்க்கப்பல் உதவி செய்ய மறுத்துவிட்டது.
இறுதியாக அகதிகளின் படகு லாம்பெடுசாவிற்கு தெற்கே
90
மைல் தொலைவில் இருக்கும்போது,
இத்தாலியக் கடலோரக் கப்பல்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் அதற்கு அருகே நெருங்கியது.
சர்வதேக் குடியேறுவோர் அமைப்பு
(International Organization for Migration)
இப்படகு லிபியக் கடலோரத்தை சனிக்கிழமை அன்று திரிப்போலியை விட்டு நீங்கியது என்றும்,
நைஜீரியா,
கானா,
எதியோப்பியா,
சுடான்,
சாட் மற்றும் மோரோக்கோவில் இருந்து குடியேறுவோரைக் கொண்டிருந்தது,
பொதுமான குடிநீர்,
உணவு அதனிடம் இல்லை என்றும் கூறுகிறது.
இத்தாலிய வெளியுறவு மந்திரி பிராங்கோ பிரட்டினி இந்நிகழ்வு பற்றிய
ஒரு முறையான விசாரணை தேவை என்று கோரியுள்ளார்;
மேலும் அவருடைய நாட்டின் நேட்டோ தூதரிடம் குடிமக்கள் அகதிகள் மீட்புப் பிரச்சினை
குறித்து போரில் நேட்டோ பணியின் ஒரு பங்காக இருக்க வேண்டிய அவசியம் பற்றிய
பிரச்சினையை எழுப்புமாறும் கேட்டுள்ளார்.
அகதிகள் படகைக் காப்பாற்றுமாறு முறையீடு ஏதும் தங்களுக்கு வரவில்லை
என்று நேட்டோ அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
தாங்களே இந்த ஆபத்து பற்றி எதிர்கொள்வதாக இத்தாலிய அதிகாரிகள் இப்படகு பற்றி
நேட்டோவிடம் தெரிவித்தனர் என்றும் ஒரு செய்தித்தொடர்பாளர் கூறினார்.
“இத்தாலிய
அதிகாரிகள் நிகழ்வு பற்றி எதிர்கொண்டனர் என்பதைப் பின்னர் நேட்டோ உறுதி செய்து
கொண்டது,
மூன்று கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இதில் ஈடுபட்டன என்றும் இத்தாலிய
அதிகாரிகள் கூறினர்.”
என்று அதிகாரி கூறினார்.
இத்தாலிய வலதுசாரி எம்.பி.
ஒருவரான ரோபர்டோ காஸ்டெல்லி,
அதன் கப்பல்கள் போர் நடக்கும் கடல் பகுதியில் அகதிகள் படகு இருந்தது பற்றித்
தெரிந்திருக்கவில்லை என்னும் நேட்டோ கூற்றுக்களை கண்டித்தார்.
“அனைத்துக்
கண்காணிப்புத் தொழில்நுட்ப வசதிகளையும் கொண்டிருக்கும் நேட்டோ இவ்வளவு பெரிய படகு
பற்றித் தெரிந்திருக்கவில்லை என்று கூறும் கதையை
Little Red Riding Hood
கூட நம்பமாட்டார்”
என்று அவர் கூறினார்.
முயம்மர் கடாபியின் ஆட்சியில் இருந்து குடிமக்களைக் காத்தல் என்னும்
போலிக்காரணத்தை ஒட்டி இப்போர் அமெரிக்கா,
பிரான்ஸ் மற்றும் பிரிட்டனால் தொடக்கப்பட்டது.
ஆனால் நேட்டோ போர் விமானங்கள் வாடிக்கையாக குடிமக்கள்மீது குண்டுத்தாக்குதல்களை
கடாபியின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பகுதியிலும்,
நேட்டோ ஆதரவுடைய
“எழுச்சியாளர்களின்”
கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலும் நடத்துகிறது.
அதே நேரத்தில்,
மத்தியதரைக் கடலில் போர்ப்பகுதியில் இருந்து ஓடிவரும்
ஆயிரக்கணக்கான அகதிகள் நேட்டோ சக்திகளால் போருக்கு முன்பு நடந்தது
போலவே துன்புறுத்தப்படுகின்றனர்
மற்றொரு அட்டூழியமான நிகழ்வில்,
சர்வதேசச் செய்திப் பாதுகாப்பு நிறுவனர்
(International News Safety Institute)
ஐ.நா.
தலைமைச் செயலர் பான் கி-மூனை
லிபிய அரசாங்கத் தொலைக்காட்சி நிலையத்தின்மீது நேட்டோ குண்டுத்தாக்குதல் நடத்தியது
பற்றி விசாரணை செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளது;
இத்தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்,
15
பேர் காயமுற்றனர்.
INSI
ஐ.நா.தலைவரை
இத்தாக்குதல்
2006ம்
ஆண்டு பாதுகாப்புக் குழுத் தீர்மானமான செய்தியாளர்கள் மீது தாக்குதல் தடை பற்றிய
தீர்மானத்தை மீறியுள்ளதா என்பது பற்றி முடிவெடுக்க வேண்டும் என்றும் கோரியது.
சர்வதேசச் செய்தியாளர் கூட்டமைப்பும் ஜூலை
30நடந்த
குண்டுத்தாக்குதலைக் கண்டித்துள்ளது;
இதில் மூன்று சுற்றுக்கோள் செய்திமாற்றுக் கருவிகள் அழிக்கப்பட்டுவிட்டன.
தொலைக்காட்சி மையம் தகர்க்கப்படுவது ஐ.நா.
ஒப்புதலான
“குடிமக்களைக்
காப்பாற்றுதல்”
என்ற விதியின்கீழ் வந்துள்ளது என்று நேட்டோ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்தச் சொற்றொடர் மார்ச் மாதம் தொடங்கிய இப்போரில் ஏகாதிபத்தியச் சக்திகள் நடத்தும்
இப்போரின் ஒவ்வொரு குற்றத்தையும் நியாயப்படுத்தும் அனைத்துப் பொருத்தும் உடையதாக
நேட்டோ ஏற்கிறது.
ஒரு நேட்டோ அறிக்கை கூறுகிறது:
“தொலைக்காட்சி
ஆட்சியின் ஒருங்கிணைந்த கூறுபாடாக முறையாகக் குடிமக்களை அடக்க அச்சுறுத்த மற்றும்
அவர்களுக்கு எதிராகத் தாக்குதல்களைத் தூண்டிவிடவும் பயன்படுத்தப்பட்டதால் நம்
குறுக்கீடு தேவையாயிற்று.
தொடர்ந்து தூண்டுதல் தரும் வகையில் கடாபியின் செயற்பாடு லிபியர்களுக்கு எதிரான
விரோத உணர்வைக் காட்டும் வகையிலும் குடிமக்களுக்கு எதிராக அவருடைய அதிகாரிகளைத்
திரட்டி இரத்தக்களறியைத் தூண்டும் வகையில் இருந்தது.”
ஆனால்
INSI
யின் இயக்குனர் ரோடெண்ட் பின்சர் ஒரு தொலைக்காட்சி மையத்தைக் குண்டுத்தாக்குதலுக்கு
உட்படுத்துவது
“செய்தி
அமைப்புக்களின் கண்ணோட்டத்துடன் நீங்கள் வேறுபடுவது என்னும் அடிப்படையில்”
செய்யப்படுவது என்பது மன்னிக்க முடியாது என்றார்.
“லிபியாவில்
நேட்டோ சக்திகள் குடிமக்களையும் செய்தியாளர்களையும் காத்தல் என்னும்
பாதுகாப்புக்குழுத் தீர்மானக் கட்டளையின் கீழ் செயல்படுகின்றன”
என்றார் அவர்.
இதற்கிடையில்,
லிபிய எதிர்ப்புச் சக்திகளுக்கும் கடாபி ஆட்சிக்கும் இடையே ஜிலிடனில் நடக்கும்
நிகழ்வுகள் பற்றி மாற்றுக் கருத்துக்கள் வெளிவந்துள்ளன;
இந்நகரம் மூலோபாயமான வகையில் முக்கியமானது;
இது மேற்கே எழுச்சியாளர்களால் கொள்ளப்பட்டிருக்கும் மிகப் பெரிய நகரான
மிஸ்ரடாவிற்கும் திரிப்போலிக்கும் இடையே உள்ளது.
பெங்காசியில் உள்ள மாற்றுக்காலத் தேசியக்குழுவின் செய்தித்
தொடர்பாளர்கள் நேட்டோ வான் தாக்குதல் ஜிலிடனில் நடைபெற்றபோது கடாபியின் மகன்களில்
ஒருவரான கமிஸைக் கொன்றது,
இவர் ஓர் உயரடுக்கு இராணுவப் பிரிவிற்குத் தளபதி,
அங்கு போரிட்டுக் கொண்டிருந்தார் என்று தெரிவித்துள்ளனர்.
இக்கூற்றை லிபிய அரசாங்க செய்தித்தொடர்பாளர் மறுத்து,
வான்தாக்குதலில் குடிமக்கள் கொலைசெய்யப்படுவதை மறைக்கும் வகையில் முன்கூட்டிக்
கூறப்படும் தவறான தகவல் என்றார்.
இரு சிறு குழந்தைகளும் அவர்களுடைய தாயாரும் வியாழன் அதிகாலையில் அவர்கள் உறங்கிக்
கொண்டிருந்தபோது கொல்லப்பட்டனர் என்று
CNN
பேட்டி கண்ட சாட்சிகளில் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லிபியத் தலைவரின் ஆறாவது மகனான கமிஸ் கடாபி மேலைச் செய்தி ஊடகப்
பிரிவுகளில் இறந்து விட்டதாக இப்போர் தொடங்கி இருமுறை கூறப்பட்டுள்ளது.
கடாபியின் ஏழாம் மகன் சைப் அல்-அரப்
திரிப்போலியின் குடும்ப வீட்டின்மீது ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட நேட்டோ வான்
தாக்குதலில் கொல்லப்பட்டார்.
திரிப்போலிக்கு
90
மைல்கள் கிழக்கே இருக்கும் ஜிலிடனைச் சுற்றி கடுமையான மோதல்கள் நடக்கின்றன;
இவ்விடத்தில்
Apache
தாக்கும் ஹெலிகாப்டர்கள்,
லிபியத் தலைநகரத்தின் மீது வெற்றியுடன் செல்வதற்காக செயல்படும் எழுச்சியாளர்
சக்திகளுக்கு உதவ ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
ஆட்சிக்கு எதிரான இரண்டாம் தாக்குதல் நடவடிக்கை மேற்கு லிபியாவில்
நடைபெறுகிறது;
இதையொட்டி நூற்றுக்கணக்கான பெர்பர் போராளிகள் மேலை நபுசா மலைப்பகுதிகளில் இருந்து
வெளியேறி திரிப்போலிக்கு தெற்கே இருக்கும் சிறு நகரங்களையும் கிராமங்களையும்
தாக்குவதற்கு முயல்கின்றன;
இதில் தலைநகருக்கு
150
மைல் தென்மேற்கில் உள்ள
10,000
மக்கள் கொண்ட டிஜி சிறுநகரும் அடங்கும்.
மேற்குப் புறத்தில் எழுச்சியாளர்களுக்கு நிலப்பகுதியில் என்ன
ஆதாயங்கள் கிடைத்திருந்தாலும்,
அவை பெங்காசியில் உள்ள
TNC
தலைமையகத்தின் உட்பூசல்களில் மங்கிவிடுகின்றன.
பெங்காசியின் ஜூலை
28ம்
திகதி முன்னாள் கடாபியின் உதவியாளரும் பெப்ருவரி மாதம் அவரை விட்டு விலகி எதிர்ச்
சக்திகளுக்கு உயர்மட்ட இராணுவத் தலைவராக வந்த அப்தெல் பட்டா யூனிஸ் கொலையுண்டார்.
ஞாயறு,
ஜூலை
31
அன்று பல மணி நேரத் துப்பாக்கிச் சண்டை பெங்காசியில் போட்டிப் போராளி சக்திகளுக்கு
இடையே நடைபெற்றது;
இதில் நான்கு பேர் இறந்து போயினர்.
TNC
அதிகாரிகள் யூனிஸ் கொலை பற்றியோ,
பின்னர் நடந்துள்ள உட்பூசல் கைகலப்புக்களைப் பற்றியோ விளக்கம் ஏதும் தரவில்லை.
|