WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
மத்திய கிழக்கு
Israeli protest movement sparks mass strikes
இஸ்ரேலிய ஆர்ப்பாட்ட எதிர்ப்பு இயக்கம் பரந்த வேலைநிறுத்தங்களுக்கு
தூண்டுதலளிக்கிறது
By
Jean Shaoul
3 August 2011
Back to
screen version
அதிகரித்துவிட்ட வீட்டு விலைகள்,
வாடகைகள் தொடர்பான நாடுதழுவிய கூடார எதிர்ப்பாளர்களின் ஆர்ப்பாட்டங்களுடன் ஒற்றுமை
உணர்வைக் காட்டும் வகையில்
100,000
க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய
நகரசபை தொழிலாளர்கள் திங்களன்று வேலைநிறுத்தம் செய்தனர்.
உள்ளூராட்சி அலுவலகங்களும் மூடப்பட்டன,
தெருக்கள் சுத்தம்செய்யப்படவில்லை,
குப்பைகள் சேகரிக்கப்படவில்லை.
இஸ்ரேல் மற்றும் ஹிஸ்டட்ருட்டின் உள்ளூராட்சி அதிகாரங்களின்
தொழிற்சங்கம் மற்றும் தொழிற்சங்கங்களின் பொதுக் கூட்டமைப்பு ஆகியவை இந்த ஆண்டு
முன்னதாக வேலைநிறுத்தங்களை நிறுத்தி விட்டிருந்தன.
அவற்றைக் கட்டுப்படுத்தி,
நெரித்துவிடும் நோக்கத்துடன் இம்முறை அவைகளும் எதிர்ப்பிற்கு ஆதரவு கொடுத்துள்ளன.
டெல் அவிவ் நகரசபையின் ஒரு பகுதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது—அலுவலகங்கள்
காலை
10
மணிக்கு மேல்தான் திறக்கப்பட்டன;
ஜெருசெலம்
“மக்களை
பாதிப்பதைத் தவிர்க்கும் வகையில்”
வேலை நிறுத்தத்தில் சேரவில்லை.
டெல் அவிவ் மற்றும் ஜெருசெலத்தில் ஆசிரியர்களும் ஆதரவாளர்களும்
ஆர்ப்பாட்டம் செய்து சிறந்த பொதுக் கல்வி தேவைக்கு அழைப்புக் கொடுத்து,
மிக
உயர்ந்த செலவுகளுக்கு வகைசெய்துள்ள தனியார்மயமாக்கும் உந்துதலை நிறுத்துமாறும் நல்ல
கல்வி கற்பதற்குத் தடையாக உள்ள பெரும் சமத்துவமின்மை நிலைக்கும் முற்றுப்புள்ளி
வைக்குமாறு கோரினர்.
“தனியார்
கல்வி இருந்தால்,
சமூக நீதி இருக்காது”
என்று எழுதப்பட்ட கோஷ அட்டைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.
கல்வி தொடர்பாக மற்றொரு எதிர்ப்பார்ப்பாட்டம் வியாழன் நடத்தப்படத்
திட்டமிட்டுள்ளது.
ஜெருசெலத்தில் பிரதம மந்திரி அலுவலகத்திற்கு வெளியே மருத்துவர்கள்
ஒரு கூடார முகாமை நிறுவி,
பிரதம மந்திரி பெஞ்சமின் நெத்தன்யாகு அரசாங்கத்திற்கும் மருத்துவர்களுக்கும் இடையே
பல மாத காலமாக நீடிக்கும் பூசல்களைத் தீர்க்கத் தலையிட வேண்டும் என்று அழைப்பு
விடுத்துள்ளனர்.
மருத்துவச் செவிலியர் தொழிற்சங்கம் தாங்களும் மருத்துவர்கள்
போராட்டத்தில் சேருவதென்று அறிவித்து,
கூட்டு எதிர்ப்புக்களை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
இஸ்ரேலின் மிகப் பெரிய,
செல்வம் படைத்த மருத்துவமனையான ஷீபா மருத்துவ மையத்தில் இருந்த நான்கு
உட்பிரிவுகளில் இருந்து செவிலியர்கள் இரண்டு மணி நேரம் வேலைநிறுத்தம் செய்தனர்—நிறைந்து
வழியும் நோயாளிகளைக் கொண்ட உட்பிரிவுகளில் நிர்வாகம் போதுமான செவிலியர்களை
நியமிக்காததற்கு எதிரான எதிர்ப்பு இது என்று காரணம் கூறப்பட்டது.
டெல் அவிவில் டஜன் கணக்கான மாணவர்கள் ரோத்ஸ்சைல்ட்
புல்லுவார்டிலுள்ள கூடார நகரத்தில் இருந்து அரசாங்கக் கட்டிடங்களை நோக்கி நடந்த
அணிவகுப்பு ஒன்றில் பங்கு பெற்றபோது,
தங்கள் முதுகுகளில் வைக்கோல் கட்டுக்களைச் சுமந்து சென்றனர்.
“பிபி,
[நெத்தன்யாகு],
இது
முடிந்துவிட்டது,
என்
முதுகு முறிந்துவிட்டது”
என்று கூச்சலிட்டனர்.
இந்த வேலைநிறுத்தங்கள் கடந்த ஞாயிறன்று வாழ்க்கைச் செலவுகள்
பெரிதும் உயர்வதற்கு எதிரான பல ஆண்டுகளாக இல்லாத மிகப் பெரிய
150,000
பேர்
அடங்கிய ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து இடம்பெறுகின்றன.
மிகப் பெரிய அணிவகுப்பு டெல் அவிவில் நடைபெற்றது,
ஆனால் மற்றய நகரங்களான ஜெருசெலம்,
பீர் ஷேவா,
ஹைபா மற்றும் நஜரத் உட்பட ஏழு பிற நகரங்களிலும் நடைபெற்றன;
இங்கு அரபு மற்றும் யூதத் தொழிலாளர்கள் ஒன்றாக அணிவகுத்துச் சென்றனர்.
வீடுகளின் விலை உயர்விற்கு எதிராக தொடங்கிய எதிர்ப்பு இஸ்ரேலின்
பொருளாரத்தின் பெரும் பகுதியைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டிருக்கும் ஏறத்தாழ ஒரு
டஜன் பில்லியனர்கள் குடும்பங்களுக்கு எதிரான மறைக்கப்படாத சீற்றம் என்று பரவி
வருகிறது—அக்குடும்பங்கள்
நிலச் சொத்துக்கள்,
தொடர்புத்துறை,
செய்திப் பிரிவு,
சில்லறைப் பிரிவு,
உற்பத்தி,
கட்டுமானம்,
வங்கி,
ஓய்வூதியச் சேமிப்புக்கள் மற்றும் எரிசக்தித் துறைகளில் மேலாதிக்கம் கொண்டுள்ளன.
“தடையற்ற
சந்தைச்”
சீர்திருத்தங்கள் நிறுத்தப்பட வேண்டும்,
சுகாதாரம் மற்றும் கல்வித்துறைகளில் வெட்டுக்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பதற்கும்
அழைப்பு விடுக்கப்பட்டன.
இஸ்ரேலில் சமூகச் செலவுகளுக்கான வரவு-செலவுத்
திட்டத்தில் வெட்டு ஏற்படுத்தப்பட்டுவிட்டன என்றாலும்,
மேற்குக்கரை,
கிழக்கு ஜெருசெலம் மற்றும் கோலன் குன்று பகுதிகளில் அவ்வாறு நடக்கவில்லை;
அப்பகுதிகளில் வீட்டு வசதிக் கட்டமைப்புக்கள் இஸ்ரேலில் இருப்பதை விட இரு மடங்காக
உள்ளன.
இஸ்ரேலின் வணிக ஏடான க்ளோப்ஸ் குறிப்பிட்டுள்ளது போல்,
உயர்ந்த கட்டிடச் செலவுகளும் பொதுமக்களுக்கான சேவைகளில் அதிகரிப்பும் இஸ்ரேலியர்கள்
ஆக்கிரமிப்புப் பகுதிகளில் கூடியேறுவதற்கு ஊக்கம் அளிக்கப் பயன்படுத்தப்பட்டன.
OECD
அறிக்கை
ஒன்றில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை
1997க்கும்
2009க்கும்
இடையே கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகமாகிவிட்டதாகத் தெரிவிக்கிறது.
அளவிலும் ஆதரவிலும் எதிர்ப்புக்கள் பெருகிய நிலையில்,
அவை
நெத்தன்யாகுவின் கூட்டணி அரசாங்கத்திற்கு பெரிய அரசியல் நெருக்கடியைத்
தோற்றுவித்துள்ளன;
இது
இஸ்ரேலின் வரலாற்றில் மிக வலதுசாரித்தனம் கொண்ட அரசாங்கம் ஆகும்.
மந்திரிகள் மற்றும் வல்லுனர்கள் அடங்கிய ஒரு
“சிறப்புக்
குழு”
எதிர்ப்புத் தலைவர்களின் கருத்தைக் கேட்டு
“இஸ்ரேலியர்களின்
பொருளாதாரச் சுமைகளைக் குறைக்கத்”
திட்டம் ஒன்றை அளிக்கும் என்று நிலைமையைச் சமாளிப்பதற்கு நெத்தன்யாகு முயன்றார்.
சில
சிறிய கொள்கை மாற்றங்களையும் அவர் அறிவித்து,
“சீர்திருத்தம்”
பற்றித் தெளிவற்ற உறுதிகளையும் கொடுத்துள்ளார்.
18
மாதங்களுக்குள்
50,000
வீட்டுப்
பிரிவுகள் கட்டப்படும்,
ஒரு
மாதத்திற்கு பெட்ரோல் மீதான சுங்க வரி குறைக்கப்படும்,
சில
முதியோருக்கு வீடுகளில் வெப்பத்திற்கான நிதியுதவி இருமடங்காக ஆக்கப்படும்,
வரிகள்,
நீர்வரிகள் குறைப்பது பற்றிப் பரிசீலிக்கப்படும் போன்ற உறுதிமொழிகள் அவற்றில்
அடங்கியிருந்தன.
எதிர்க்கும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் சமூகநலக்
கோரிக்கைகளுக்கு தீவிர சலுகைகள் ஏதும் இல்லை என்பதை நெத்தன்யாகு தெளிவாக்கிவிட்டார்.
ஜியோனிச வலதுசாரித் தலைவர் ஜீவ் ஜபோடின்ஸ்கியின் மறைவு
71
ஆண்டுகள் முன்பு நடந்ததின் நினைவைப் போற்றும் வகையில் நடந்த சிறப்பு
பாராளுமன்றத்தில்
(Knesset)
கூட்டத்தில் பேசும்போது அவர் இஸ்ரேலின் தடையற்றச் சந்தைப் பொருளாதாரக்
கொள்கையிலிருந்து பின் வாங்கப் போவதில்லை என வலியுறுத்தினார்.
இவர் கொடுத்துள்ள குறைந்த சலுகைகள் கூட அரசாங்கம் மற்றும்
நிதித்துறைக்குள் கடுமையான பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலின் நிதித்துறை மந்திரி ஹைம் ஷானி
“நிதி
மந்திரியுடன் அடிப்படைப் பிரச்சினைகளில் கருத்து வேறுபாடு இருப்பதாகக் காரணம்
காட்டி”
இராஜிநாமா செய்திருப்பதுடன்,
“கடந்த
சில நாட்களாக நடக்கும் நிகழ்வுகள் பிரச்சினைகளை அதிகரித்துவிட்டன”
என்றும் சேர்த்துக் கொண்டார்.
ஷானிக்குப் பதிலாக இஸ்ரேலிய பாதுகாப்புப் பத்திரங்கள் அதிகாரத்தின்
முன்னாள் தலைவர் மோஷே டெர்ரியை நெத்தன்யாகு நியமிக்க உள்ளார்.
டெரி பொதுச் சீற்றத்தின் குவிப்புக்களின் ஒன்றான ஏகபோக உரிமை நிறுவனம் டெலக்
குழுவின் தலைவர் யினட்ஷக் டிஷுவாவுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளார்.
பாங்க் ஆப் இஸ்ரேலின் கவர்னரான ஸ்டான்லி பிஷர் இஸ்ரேலியர்கள்
எதிர்ப்புக் காட்டுவது பற்றித் தன் வியப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
“பொருளாதாரம்
நன்றாகத்தான் இருக்கிறது”
என
அவர் நம்புகிறார்.
வாழ்க்கைச் செலவுகள் உயர்வதைத் தீர்க்க மந்திரக்கோல்கள் ஏதும் இல்லை என்று அவர்
கூறினார்.
குறைந்த செலவுகள்,
குறைந்த வரிகள்,
சராசரி ஊதியம் குறைந்தபட்சம்
50
சதவிகிதம் உயர்த்தப்பட வேண்டும்,
இலவசக் கல்வி,
வகுப்புக்களில் மாணவர் எண்ணிக்கையில் குறைப்பு,
முன்னேற்றமான மருத்துவப் பாதுகாப்பு,
தொழிலாளர் நலச் சட்டங்கள் செயல்படுத்தப்படுவது மற்றும் இவைகள் போன்ற நடவடிக்கைகள்
தேவை என்று எதிர்ப்புத் தலைவர்கள் கோரியுள்ளனர்.
ஆனால் நெத்தன்யாகு கூடார எதிர்ப்புத் தலைவர்களைச் சந்திக்க மறுத்துவிட்டார்.
மாறாக அவர்கள் கோரிக்கைகளை மந்திரிகள் குழு கேட்கட்டும் என அவர் திட்டமிட்டுள்ளார்.
முன்னதாக எதிர்ப்புத் தலைவர்கள் அனைத்து விவாதங்களும் நெத்தன்யாகு மற்றும்
அரசாங்கப் பிரதிநிதிகளுடன் தொலைக்காட்சி காமெராக்கள் முன் நடக்க வேண்டும் என்று
கூறியிருந்தனர்;
இப்பொழுது அந்தக் கோரிக்கை ஹிஸ்டட்ருட் தலைமைச் செயலர் ஒவர் ஐனியின் அழுத்தத்தின்
பேரில் கைவிடப்பட்டு விட்டது.
தொழிற்சங்க அதிகாரத்துவம் எதிர்ப்புக்களுக்கு எதிராக இருக்கிறது
என்பதைத் தெளிவுபடுத்திய ஐனி,
“ஜனநாயக
முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதம மந்திரியை அவமானப்படுத்தும் நோக்கம் கொண்ட,
அவரை வீழ்த்த முயலும் ஓர் இயக்கத்திற்கு நான் ஆதரவு கொடுக்க முடியாது.
நாம் ஒன்றும் எகிப்திலோ,
சிரியாவிலோ இல்லை”
என்றார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் இராணுவத் தலைமைத் தளபதி காபி
அஷ்கெனஜியுடன் ஐனி ஒரு அரசியல் கூட்டை அமைத்துள்ளார்;
இது
இராணுவச் செலவுகளை சமூகநலச் செலவுகளுக்கு எதிராகப் பாதுகாக்கும் நோக்கம் உடையது.
விக்கிலீக்ஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ள தகவல் தந்திகள் தெரிவிப்பது போல்,
இவர் தன்னை நெத்தன்யாகுவின் வலதுசாரி கூட்டணிக்கு முக்கிய உறுதுணை என்று
கருதுவதுடன் அதன் கொள்கைகளுக்கும் ஆதரவு தருகிறார்.
மே
6, 2009
தகவல்
தந்தி ஒன்றின்படி,
ஐனி
அமெரிக்க ராஜதந்திகளைச் சந்தித்து அவர் இஸ்ரேலிய வரவு-செலவுத்
திட்டத்திற்குக் கொடுக்கும் ஒப்புதல் ஒரு
“கோஷர்
முத்திரை”,
நெத்தன்யாகுவிற்கு தொழிற் கட்சியின் ஆதவை உத்தரவாதம் செய்யும் என்று
உறுதியளித்துள்ளார்.
நெத்தன்யாகு அவருடன் நேரில் வரவு-செலவுத்
திட்டம் பற்றிப் பேச வேண்டும் என்றும் தான் நிதி மந்திரி யுவல் ஸ்டீனிட்சுடன் பேசத்
தயாராக இல்லை என்றும் கூறியுள்ளார்.
“தொழிற்
கட்சியை அரசாங்கத்திற்குள் கொண்டுவர முக்கியமான முயற்சிகள் எடுக்கும் ஐனி தன்னை
முக்கியமான அதிகாரம் செலுத்துபவர் உருவாக்குபவர் எனக் கருதுகிறார்”
என்று ஐ.நா.
இராஜதந்திரிகள் முடிவுரை கூறியுள்ளனர்.
ஹிஸ்டட்ருட் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் தொழிலாள
வர்க்கத்திடம் இருந்து பெரும் அழுத்தங்களைக் கொண்டுள்ளார்.
ஆனால் வேலைநிறுத்தங்கள் பற்றிய அதன் நோக்கம் மாறவில்லை:
அதாவது சீற்றத்தைத் தணித்து,
அரசாங்கத்திற்குத் தீவிரமான அரசியல் மற்றும் சமூகச் சவாலை எதிர்த்தல்.
அதன் பங்கிற்கு நெத்தன்யாகு அரசாங்கத்திற்கு பெருகிய ஆபத்து
ஏற்பட்டால்,
அது
தன் வாடிக்கையான பாலஸ்தீனிய மக்களுக்கு அல்லது அண்டை அரபு நாடுகளுக்கு எதிரான
தூண்டுதலைத் தொடக்கும் தந்திரோபாயத்தை மேற்கொள்ளும்;
இவைதான் பெருகும் சமூக அமைதியின்மையில் இருந்து திசைதிருப்பும் நடவடிக்கைகள் ஆகும்.
திங்கள் காலையில் முன்னதாக இஸ்ரேலியப் படைகள் மேற்குக்கரையிலுள்ள
கலன்தியா அகதிகள் முகாமில் இரு பாலஸ்தீனியர்களைக் கொன்றது;
இது
கற்களை வீசி எறியும் பாலஸ்தீனியர்களுடன் மோதல் ஏற்பட்டபின் சில வீடுகள்
சோதனையிடப்பட்டபின் நடந்தது.
கலன்தியாவை பாலஸ்தீனிய அதிகாரப் படைகள் பாதுகாப்பில் கொண்டுள்ளன;
ஆனால் இஸ்ரேலிய இராணுவம் அங்கு தனக்கு நுழையும் அதிகாரம் உள்ளது என்று கூறுகிறது.
பாலஸ்தீனிய அதிகார சக்திகள் அதிக சந்தேகத்திற்கு உரியவர்களைக் கைது செய்வதில்லை
என்று இராணுவத் தளபதி ஒருவர் புகார் கூறியுள்ளார்;
ஏனெனில் பாலஸ்தீனிய அதிகாரத்திற்கும் ஹமாஸிற்கும் இடையே ஒற்றுமை உடன்பாடு உள்ளது என
அவர் கூறுகிறார்.
கடந்த வாரம் ஜேனினில் நன்கு அறியப்பட்டுள்ள அரங்கு ஒன்றில் நடந்த
சோதனைக்குப் பின் இது வந்துள்ளது;
அங்கு இஸ்ரேலியப் படைகள் இருவரைக் கைது செய்தனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு அவை
21வயது
பாலஸ்தீனியர் ஒருவரை நப்லுஸ் நகரத்திற்கு அருகேயுள்ள அகதிகள் முகாமைச்
சோதனையிட்டபோது கொன்றனர்.
திங்களன்று லெபனிய,
இஸ்ரேலியப் படைகளுக்கு இடையே ஒரு குறுகிய துப்பாக்கி சூடுகள் நடந்தது.
இது
லெபனிய வீரர்கள் இஸ்ரேலிய ரோந்துப் படை எல்லையைக் கடந்தபோது சுட்டதை அடுத்து
நிகழ்ந்தது.
ஒரு முன்னாள் இஸ்ரேலியப் பாதுகாப்புப் படைகளின் தலைவரும் கடிமாக்
கட்சியின் சட்ட மன்ற உறுப்பினருமான ஷாவுல் மொபஸ் ஐ.நா.
பொதுமன்றத்தில் பாலஸ்தீனிய அதிகாரம் தனிஅரசு உரிமைக்கு முயல்வதற்கு முன்னதாக
பாலஸ்தீனிய அமைதியின்மை வரலாம் என்ற எதிர்பார்ப்பில் செப்டம்பர் மாதம் ரிசேவ்
படைகளை இராணுவம் திரட்டக்கூடும் என்று கூறினார்.
ஆர்மி
ரேடியோவில்
அவர்
“செப்டம்பர்
மாதம் வன்முறை,
வேதனைதரும் நிகழ்வுகளைக் கொண்டு தெளிவற்ற விளைவுகளைக் கொடுக்கும் திறனாக மாறலாம்”
என்றார். |