WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
The debt limit deal and the social counterrevolution in America
கடன் வரம்பு உடன்பாடும் அமெரிக்காவில் சமூக எதிர்ப்புரட்சியும்
Barry Grey
2 August 2011
Back
to screen version
ஒபாமா நிர்வாகத்தால் ஜனநாயக் கட்சி,
குடியரசுக் கட்சி காங்கிரஸ் தலைவர்களுடன் மத்திய அரசின் கடன் வரம்பை
உயர்த்துவதற்குக் கொண்ட உடன்படிக்கை அமெரிக்காவில் வர்க்கப் போராட்டத்தில் ஒரு
திருப்பு முனையைக் குறிக்கிறது.
இந்த
உடன்பாடு பெருநிறுவனங்களுக்கோ செல்வந்தர்களுக்கோ ஒரு பென்னிகூட அதிக வரிவிதிப்புகூட
இல்லாது, மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் நம்பியிருக்கும் முக்கியமான சமூகநலத்
திட்டங்களில் பெரும் வெட்டுக்களை சுமத்துகின்றது.
இது
20ம்
நூற்றாண்டின் பெறப்பட்ட சமூக சீர்திருத்தங்கள் அனைத்தையும் அகற்றும் உந்துதலின் ஒரு
பகுதியாக
Medicare,
Medicaid
மற்றும்
சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் மீது நேரடித் தாக்குதலைத் தொடக்குகிறது. மத்திய
அரசின் கடன் வரம்பு,
வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறைப்பிற்கு சமமான தொகையாக இருக்க வேண்டும் என்ற
உடன்பாட்டின்படி பிணைக்கப்பட்ட அதிகரிப்புக்களுடன் ஏற்கனவே ஏற்கப்பட்டுவிட்ட
கொடூரமான வெட்டுக்களையும்விட சமூகநலத் திட்டங்களில் முன்னோடியில்லாத வகையில்
கூடுதல் வெட்டுக்களுக்கு இது முன்னோடி ஆகிறது.
தற்போதைய
ப்ளூம்பேர்க்
பிசினெஸ்வீக்
பதிப்பில் ஒரு முக்கிய கட்டுரை,
“நீங்கள்
நினைப்பதைவிட ஏன் கடன் நெருக்கடி மோசமானது”
என்ற
தலைப்பில் அடுத்த தசாப்தத்திற்குள்
15
டிரில்லியன்
டாலர்கள் செலவுகள் குறைக்கப்பட வேண்டும் என வாதிக்கிறது—இது
வார இறுதியில் ஒப்புக்கொள்ளப்பட்ட உடன்பாட்டில் உள்ள வெட்டுக்களைவிட ஐந்து மடங்கு
அதிகம் ஆகும்.
இந்த வர்க்கப்போராட்ட வகை நடவடிக்கை பொருளாதார வளர்ச்சி கிட்டத்தட்ட
சரிந்துவிட்ட நிலையில் செயல்படுத்தப்படுகிறது.
சமீபத்திய பொருளாதாரம் பற்றி தகவல்கள் தொகுப்பு பொருளாதார மீட்பு எனக் கூறப்படுவது
தாமதமாகியுள்ளதைத்தான் நிரூபிக்கின்றன.
பணநீக்கங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன;
ஏற்கனவே குறைந்தபட்சம்
25மில்லியன்
அமெரிக்கர்களைப் பாதித்துள்ள வேலையின்மை இன்னும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தாங்கள் தப்பிப் பிழைப்பதற்கு மில்லியனுக்கு அதிகமாக குறைவேலையில் இருப்பவர்கள்,
வேலையற்று இருப்பவர்கள் அதிகம் தேவை எனக் கருதும் உணவு உதவி முத்திரைகள்,
வீடுகளில் வெப்பத்திற்கு உதவி,
பொதுச் சுகாதாரம்,
வீட்டுவாடகை உதவி போன்றவை வெட்டுக்களுக்கு உட்படுகின்றன. அடிப்படைச் சுகாதாரப்
பாதுகாப்பு,
ஓய்வூதியத் திட்டங்கள் என்று முதியோருக்கும் வறியவர்களுக்கும் உள்ளது பற்றிக் கூறவே
தேவையில்லை.
இந்த உடன்பாடு வோல் ஸ்ட்ரீட்டின் ஆணையாகும்.
வங்கியாளர்களும் பெருநிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகளும் கடன்திருப்பித் தர
முடியாததை தவிர்ப்பதற்கு விரும்பினர். சமூகநலச் செலவுகள் குறைக்கப்பட வேண்டும்
என்று வலியுறுத்தி
1930களில்
இருந்த நிலைமைக்கு சமூகநலத் திட்டங்கள் தள்ளப்படுவதற்கான முழு அளவுத் தாக்குதலை
நடத்த வேண்டும் என்றும் அச்சுறுத்தினர்.
செலவுக் குறைப்புக்கள் இன்னும் கூடுதலான வகையில் பெருவணிகத்தின் மீதான
கட்டுப்பாடுகளை செயல்படுத்துவதை இன்னும் தளர்த்தும். அதில் சுற்றுச்சூழல் தரங்கள்
மற்றும் சுகாதாரப்,
பாதுகாப்பு விதிகளும் அடங்கும். இவை பெருநிறுவனங்களுக்கு இன்னும் தடையற்ற நிலையை
நாட்டைக் கொள்ளையடிப்பதற்குக் கொடுக்கும்.
மேலும் இந்த உடன்பாடு செல்வந்தர்கள்மீது வரிவிதிப்பு அதிரிப்பதையும்
நிராகரிக்கின்றது.
இத்திட்டத்தை ஏற்றலில் இருந்த அவநம்பிக்கைத்தனமான போலிநாடகம்,
திரித்தல்,
பொய்கள் ஆகியவை அமெரிக்க ஜனநாயகத்தின் அழுகிய தன்மைக்கு சான்றாக உள்ளன. மேலும் இரு
முக்கிய கட்சிகள் மற்றும் முழு அரசியல் அமைப்பு முறையும் பெரும்பாலான மக்களான
தொழிலாளர் வர்க்கத்தின் நலன்கள் மீது கொண்டுள்ள விரோதப் போக்கிற்கும் சான்றாகும்.
கடன் வரம்பு நெருக்கடி ஒரு போலிக்காரணத்தை தருவதற்கும் தொழிலாள வர்க்கத்தின் மீது
வரலாற்றுத் தன்மை கொண்ட தாக்குதல் நடத்துவதற்கான அரசியல் சூழலை உருவாக்கவும்
தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
இருதரப்புமே உடன்பாட்டைக் கொண்டுள்ள இந்த சிக்கனநடவடிக்கைகளை
சுமத்துவதற்கு ஒபாமாவிற்கும் குடியரசுக் கட்சியினருக்கும் இடையே தொழில் பங்கீடூ
இருந்தது. செய்தி ஊடகளால் தோற்றுவிக்கப்பட்டு,
வலதுசாரி பில்லியனர்களால் பெரும் நிதியத்தைப் பெறும் தேனீர் விருந்து குடியரசுக்
கட்சினர்-
Tea Party
Republicans-
என அழைக்கப்பட்டவர்கள் இதுபற்றிய விவாதங்களை இன்னும் வலதிற்குத் தள்ளுவதற்குத்தான்
உதவினர்.
ஆனால்
ஒபாமாவும் கடன் வரம்பை உயர்த்துவது சமூகநலத்திட்டங்களில் வெட்டுக்களுடன் பிணைக்க
வேண்டும் எனக் கூறியதின் மூலம் முக்கியமான பங்கை கொண்டிருந்தார். முன்பு இது பகுதி
இயல்பான தொழில்நுட்பப் பிரிவில் இருந்தது.
குடியரசுக் கட்சியினரை அவர் வலதுபுறம் இருந்து எதிர்கொண்டார்.
அதற்காக நிதியத் திட்டத்தில் ஒரு பகுதியாக சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில்
வெட்டுக்களை முன்வைத்தார்.
இது ஒபாமாவிற்கும் ஜனநாயகவாதிகளுக்கும்
“சமச்சீரான
அணுகுமுறை”
என்ற
தங்கள் போலி மறைப்புகளை கைவிட அரங்கு அமைத்தது.
அதாவது பெருநிறுவன வரிவிதிப்புக்களில் இருந்த சில ஓட்டைகள் மூடப்பட்டன;
இதற்கு ஈடாக கூட்டாட்சிக் கடன் திருப்பித்தரத் தவறுதல் என்பது தவிர்க்க
ஒத்துக்கொள்ளப்படுகிறது.
Tea Party
காங்கிரஸ்
உறுப்பினர்கள் நிதிய உயரடுக்கு விரும்பிய வகையில் உடன்பாட்டை இயற்றவேண்டும்
என்பதற்கு ஒரு தடையானவுடன்,
அவர்கள் ஒருபுறம் ஒதுக்கப்பட்டனர்.
காங்கிரஸில் உள்ளவர்களை ஜனநாயகக் கட்சி
“முற்போக்குவாதிகள்”
பொறுத்தவரை,
தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களுக்கு அவர்கள் காட்டியதாகக் கூறப்பட்ட
எதிர்ப்பு ஒரு இரட்டை முகம் உடைய,
துணிவற்ற,
நேர்மையற்ற தன்மையைக் கொண்டது என்பது மீண்டும் அம்பலமாகியுள்ளது.
சமூகநலத் திட்டங்களில் வெட்டுக்கள் மற்றும் செல்வந்தர்களுக்கு
வரிகள் அதிகரிப்பு நிராகரிக்கப்படல் என்பது மக்கள் உணர்வை எதிர்த்து நிற்பதாகும்.
சமீபத்தியக் கருத்துக் கணிப்புக்கள் கிட்டத்தட்ட
75%
அமெரிக்கர்கள்
Medicare
இல்
வெட்டுக்களை எதிர்க்கின்றனர் எனக் காட்டுகின்றன. மிக அதிகமான பெரும்பான்மையினர்
செல்வந்தர்களுக்கு வரிகளை அதிகரிப்பதற்கு ஆதரவைக் கொடுத்துள்ளனர்.
பற்றாக்குறை மீதான உத்தியோகபூர்வ விவாதத்தின் முழு வடிவமைப்பும்
சமூகநலத் திட்டங்களுக்குப்
“பணம்
இல்லை”
என்ற
பொய்யைத் தளமாகக் கொண்டுள்ளன.
வோல்
ஸ்ட்ரீட் டிரில்லியன் கணக்கான வரிசெலுத்துவோர் நிதிகளை அதன் மோசமான கடன்களை
அடைப்பதற்குக் கோரியபோது அத்தகைய எதிர்ப்பு ஏதும் முன்வைக்கப்படவில்லை.
2008-09
வங்கிப் பிணை
எடுப்புக் காலம் முதல்,
பெருநிறுவன இலாபங்கள் உயர்ந்துள்ளதுடன், தலைமை நிர்வாக அதிகாரிகளின் ஊதியங்களும்
உயர்ந்துள்ளன. ஆனால் சாதாரண அமெரிக்க மக்களின் இல்லச் சொத்துக்களின் மதிப்பு
சரிந்துவிட்டதுடன், ஊதியங்கள் தொடர்ந்து சரிகின்றன.
நிதியப் பிரபுத்துவம் முன்பைவிட தன் கைகளில் கூடுதலான தேசிய செல்வத்தைக்
குவித்துக்கொண்டுள்ளது.
புஷ்ஷும் ஒபாமாவும் மத்தய அரசாங்கத்தை,
வோல்
ஸ்ட்ரீட் பிணை எடுக்கப்படுவதற்காக திவாலாக்கிவிட்டனர். இப்பொழுது ஆளும் வர்க்கமும்
அதன் இரு கட்சிகளிலும் உள்ள அரசியல் வேலையாட்களும் தொழிலாள வர்க்கம் இதற்கு விலை
கொடுக்க வேண்டும் என்னும் சமூக எதிர்ப்புரட்சியை நடத்துகின்றனர்.
செப்டம்பர்
2008ல்
நிதிய நெருக்கடி வெடித்ததில் இருந்து,
ஆளும்
உயரடுக்கு அதனது அமைப்புமுறையின் முறிவைப் பயன்படுத்தி வர்க்க உறவுகளை நிரந்தரமாக
மறுகட்டமைக்கவும் தொழிலாள வர்க்கத்தை வறிய நிலையில் தள்ளவும் செய்துள்ளது.
பெருநிறுவன அமெரிக்கா இப்பொழுது ரொக்கச் சேமிப்பாக
$2
டிரில்லியனுக்கும் மேல் கொண்டுள்ளது. தொழில்வழங்க செலவுசெய்ய மறுக்கிறது.
அதையொட்டி அது பாரிய வேலையின்மையை பயன்படுத்தி தொழிலாளர்களை ஊதியக் குறைப்புக்கள்
பெரும் சலுகைகள் இழப்பு ஆகியவற்றை ஏற்க மிரட்டமுடியும்.
கடன்
வரம்பு உயர்விற்குக் கிட்டத்தட்ட சமமாக இருக்கும் இந்த மலை போன்ற ரொக்கம்
கைவைக்கமுடியாத ஒன்றாக போற்றப்படுகிறது. ஆனால் வேலைகள்,
ஊதியங்கள்,
சுகாதாரப் பாதுகாப்பு,
பள்ளிகள்,
தொழிலாளர்களில் ஓய்வூதியங்கள் அனைத்தும் எளிதில் அகற்றப்படலாம் எனக் கருதப்படுகிறது.
ஞாயிறு இரவு கடன் உச்சவரம்பு உடன்பாட்டிற்குப் பாராட்டுத்
தெரிவிக்கையில்,
ஒபாமா
மீண்டும்
“ஐசனோவர்
ஜனாதிபதியாக இருந்த காலத்திற்குப் பின்,
ஆண்டு
உள்நாட்டுச் செலவுகள் மிகக் குறைவாக இருப்பதை”
தான்
மேற்பார்வையிடுவதாகப் ஒபாமா பிதற்றிக்கொண்டார்.
அரை
நூற்றாண்டிற்கு முன்பிருந்த அந்த நிர்வாகத்தின் போது
Medicare,
Medicaid,
உணவு நிதிகள்,
சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு,
தொழில் சுகாதாரம்,
பாதுகாப்பான நிர்வாகம் அல்லது கல்விக்காக மத்திய அரசின் உதவி ஆகியவை இல்லை என்பது
குறிப்பிடப்பட வேண்டும்.
தொழிலாள வர்க்க விரோத நடவடிக்கை என்று அம்பலப்படுத்தப்பட்டுள்ள
ஒபாமா நிர்வாகத்தின் வலதுசாரிக் கொள்கை,
சகோதரத்துவக் கூட்டான நேஷன் ஏடு,
மத்தியதர வர்க்கப் போலி சோசலிஸ்ட்டுக்கள் என்று சர்வதேச சோசலிச அமைப்பில் இருக்கும்
குழுக்கள் மற்றும் ஒபாமாவின் தேர்வினை பாராட்டி அவரை பிராங்க்ளின் டிலனோ
ரூஸ்வெல்ட்டின் மறு அவதாரம் என்று சித்தரித்தவர்கள் ஆகியோரை அம்பலப்படுத்தியுள்ளது.
இவர்கள் வலதுசாரிப்பக்கம் வளர்ச்சியுற்றிருப்பது சமூக வாழ்வின் அடிப்படை வகை
வர்க்கம் என்பதை நிராகரித்தது, அதற்குப் பதிலாக பலவகை அடையாள அரசியலுக்கு கொடுத்த
ஆதரவானது, அவர்களை முதலாளித்துவ அரசியல் முகாமில் நுழைய வழிவகுத்து பிராங்க்ளின்
டிலனோ ரூஸ்வெல்ட்டின் கீழ் இயற்றப்பட்ட சமூகச்சீர்திருத்தங்கள் அனைத்தையும்
அகற்றுவதற்கு முற்படும் ஒரு ஜனாதிபதியும் தேடவும் வைத்தது.
சோசலிச சமத்துவக் கட்சியின் பகுப்பாய்வு இத்தகைய நிகழ்வுகள் மூலம்
முற்றிலும் சரியென நிரூபிக்கப்பட்டுள்ளது.
சோசலிச சமத்துவக் கட்சி பலமுறையும் ஒபாமா சமூக சீர்திருத்தக் கொள்கையைச்
செயல்படுத்த மாட்டார் என்று எச்சரித்தது. மாறாக அவர் வங்கியாளர்கள் மற்றும்
பெருநிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகளுடைய ஆணைகளைத்தான் பின்பற்றுவார் மற்றும்
அவர்கள்தான் இவருடைய தேர்தல் பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்து நிதியும் வழங்கினர்
என்றும் கூறியது.
செப்டம்பர்
2008ல்
வெடித்த நிதிய பீதி அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் அடிப்படை
நெருக்கடியின் வெளிப்பாடு என்றும் சோசலிச சமத்துவக் கட்சி விளக்கியது.
இந்த
நெருக்கடியின் மையத்தில் அமெரிக்காவில் உலக நிலைப்பாட்டில் வரலாற்றுத்தன்மை நிறைந்த
சரிவு உள்ளது.
ஒபாமாவும் ஜனநாயகக் கட்சியினரும் குடியசுக் கட்சியினருக்கு சற்றும் குறைந்த தன்மை
இல்லாத நிதியப் பிரபுத்துவத்தின் பிரதிநிதிகள்தாம்,
தொழிலாள வர்க்க நலன்களுக்கு சிறிதும் குறைந்த விரோதப் போக்கு கொண்டவர்கள் அல்லர்
என்றும் சோசலிச சமத்துவக் கட்சியால் கூறப்பட்டது.
சோசலிச சமத்துவக் கட்சி மட்டும்தான் அனைத்து வெட்டுக்கள் மற்றும்
வாழ்க்கைதரங்களின் மீதான அனைத்துத் தாக்குதல்களுக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தை
சுயாதீனமாக அணிதிரட்டப்படப் போராடுகிறது.
ஒரு
சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராடுவதால் மட்டும்தான், பெருநிறுவனங்களும்
வங்கிகளும் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ்
தேசியமயமாக்கப்படும். இதனால் வேலைகள்,
கௌரவமான ஊதியங்கள் வீட்டு வசதிகள்,
கல்வி
மற்றும் பாதுகாப்பான ஓய்வுகாலம் ஆகியவை அனைவருக்கும் வழங்கப்படும்.
சமூக வெட்டுக்களில் பேரழிவு தரக்கூடிய பாதிப்பு தொழிலாள வர்க்கம்
மற்றும் இளைஞர்களால் உணரப்படும்போது,
சமூகப் போராட்டங்கள்,
அரசாங்கத்துடன் தொழிலாள வர்க்கம் நேரடியாக மோதுவது வெடித்துத் தோன்றும்.
இப்பொழுது முக்கிய பிரச்சினை ஒரு சோசலிச முன்னோக்கை வழங்கி,
தொழிலாளர்களின் அரசாங்கம் ஒன்றை நிறுவுவதற்கு இப்போராட்டங்களை ஒன்றுபடுத்தி,
அவற்றிற்கு வழிகாட்டும் ஒரு புரட்சிகரத் தலைமையைக் கட்டமைப்பதுதான்.
இத்தலைமை அதுவாக இயல்பாகத் தோன்றாது.
அது
கட்டமைக்கப்பட வேண்டும்.
முதலாளித்துவத் தாக்குதலை எதிர்த்துப் போரிட வழிகாண முற்படும் அனைத்துத்
தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை நாங்கள் சோசலிச சமத்துவக் கட்சியில் சேர்ந்து அதைக்
கட்டமைக்குமாறு வலியுறுத்துகிறோம்.
இன்னும் கூடுதலாத சோசலிச சமத்துவக் கட்சியில் சேருவதற்கான தகவல்கள் அறிவதற்கு இங்கு
அழுத்தவும். |