WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
:
எகிப்து
Egyptian military junta attacks sit-in on Tahrir Square
தஹ்ரிர் சதுக்கத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியோர் மீது இராணுவ ஜுண்டாக்குழு
தாக்குதல்களை நடத்துகிறது
By Johannes Stern
2 August 2011
எகிப்திய
இராணுவமும்,
இகழ்வான அமன் அல்-மர்காசியும்
(மத்தியப்
பாதுகாப்புப் படைகள்)
ஆகஸ்ட்
1ம் திகதி
கெய்ரோவில் தஹ்ரிர் சதுக்கத்தில் அமர்ந்திருந்த அமைதியான எதிர்ப்பாளர்களை
மிருகத்தனமாகத் தாக்கி சதுக்கத்தில் இருந்து அனைவரையும் வெளியேற்றி
எதிர்ப்புக்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தன.
கிட்டத்தட்ட
பிற்பகல் 2
மணிக்கு ஆயுதமேந்திய
வாகனங்கள் சதுக்கத்தின் நுழைவாயில்களுக்கு வந்தபின்,
இராணுவத்தினர்
ஆகாயத்தை நோக்கி எச்சரிக்கை வேட்டுக்களைச் சுட்டனர்.
எகிப்தியத்
துருப்புக்கள் தஹ்ரிர் சதுக்க ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக ஆகஸ்ட்
1
அன்று நகருதல்
(புகைப்படம்:
நோரா ஷலபி)
வெள்ளியன்று
உள்ளிருப்பு போராட்டத்தைக் கைவிட்ட உத்தியோகபூர்வ
“எதிர்க் கட்சிகள்”
மற்றும் எதிர்ப்புக்
குழுக்களின் உறுப்பினர்கள் அதிகமாக தஹ்ரிர் சதுக்கத்திலிருந்து அகன்று விட்டனர்.
சதுக்கத்தில்
இருந்தவர்கள் பெரும்பாலும் தியாகிகள் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்,
அவர்களுடைய
ஆதரவாளர்கள் என்று இருந்தனர்—அதாவது
அமெரிக்க ஆதரவுடைய ஹொஸ்னி முபாரக்கை பெப்ருவரி
11ம் திகதி
அகற்றுவதற்கான புரட்சிகரப் போராட்டங்களின் போது கொல்லப்பட்ட எதிர்ப்பாளர்களின்
குடும்பத்தினர்கள் மற்றும் ஆதரவளிப்பவர்கள்.
இளவயது
எதிர்ப்பாளர்கள் இதை முகங்கொடுக்கும் வகையில் சிப்பாய்கள் மற்றும் சாதாரண உடையணிந்த
பொலிஸ் அதிகாரிகள் தஹ்ரிர் சதுக்கத்தில் தானியங்கி இயந்திரத் துப்பாக்கிகளுடன்
நுழைந்போது அவர்கள் மீது கற்களை வீசியதாக நேரில் பார்த்த சாட்சிகள் கூறுகின்றனர்.
இராணுவம் மற்றும்
பாதுகாப்புப் பிரிவினர் நடத்திய சோதனையில் நூற்றுக்கணக்கான கூடாரங்கள்
தகர்க்கப்பட்டன,
சதுக்கத்தில்
இருந்து நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்;
இராணுவக்குழு
குறைந்தபட்சம் அவர்களில்
25 பேரையாவது
கைதுசெய்தது.
சதுக்கத்தை
இராணுவம் ஆவேசத்துடன் கைப்பற்றியபோது,
சில எதிர்ப்பாளர்கள்
தஹ்ரிர் சதுக்கத்திற்கு அருகேயுள்ள ஒமர் மக்ரம் மசூதியில் பதுங்கிக் கொள்ளுவதற்கு
ஓடினர்.
அதையொட்டி இராணுவம்
மசூதியையும் தாக்கத் தொடங்கியது.
கெய்ரோ நகரின் நகரப்
பகுதியிலுள்ள சில கடைக்காரர்கள் உள்ளிருப்பு போராட்டத்திற்கு எதிராக பொலிசார்
உதவிக்கு அழைக்கப்பட்டு,
அவர்களும்
தாக்குதலில் ஈடுபட்டனர் என்று தகவல்கள் கூறுகின்றன.
அக்காட்சி
பற்றி கலால் என்னும் எதிர்ப்பாளர் கூறுவதாவது:
“அவர்கள் நுழைந்தனர்,
பின்னர் நாங்கள்
உள்ளே இருந்தபோது கூடாரங்களை அழித்தனர்.
எங்களுடன்
மூதாட்டிகளும் தியாகிகளின் தாயார்களும் இருந்தனர்;
அவர்கள் ஓடவேண்டிய
கட்டாயம் ஏற்பட்டது.”
ஆயிரம் பேருக்கு
மேல் காயத்தை ஏற்படுத்திய கெய்ரோ மையப் பகுதியில் எதிர்ப்பாளர்களைப் பொலிஸ்
மிருகத்தனமாக தாக்கிய நான்கு வாரங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சிகளுக்குப் பின்
தொடங்கிய தியாகிகள் குடும்பங்களின் உள்ளிருப்புப் போராட்டத்தில்
கலந்துகொண்டவர்களில் கலாலும் ஒருவர் ஆவார்.
ஜனவரி மாதம்
எகிப்திய ஆட்சிக்கு எதிரான வெகுஜன எழுச்சியின் முதல் நாட்களின்போது,
அவருடைய சகோதரர்
நாசர் தொழிலாள வர்க்கப் பகுதியான இம்பபாவில் பொலிஸ் நிலையத்திற்கு வெளியே
கொல்லப்பட்டார்.
தஹ்ரிர்
சதுக்கத்தை டாங்குகள் அகற்றுகின்றன
(புகைப்படம்:
ஜோனதன்
ரஷட்)
எகிப்திய
புரட்சியின் பெருமிதச் சின்னங்களில் ஒன்றான தஹ்ரிர் சதுக்கத்தின் மீது நடத்திய
புதுப்பிக்கப்பட்ட தாக்குதல் நீண்டகாலச் சர்வாதிகாரி ஹொஸ்னி முபாரக்கின் ஆட்சியை
பெப்ருவரியில் வீழ்த்திய எகிப்திய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின்
செயற்பாடுகளுக்கு எதிரான திட்டமிடப்பட்ட எதிர்ப் புரட்சியின் உச்சக்கட்டமாகும்.
சமீபத்திய
வாரங்களில் எகிப்து முழுவதும் பரவியுள்ள பெரும் எதிர்ப்பு அலைகளை நிறுத்துவதற்காக
அமெரிக்க ஆதரவுடைய இராணுவ ஆட்சிக் குழு எகிப்திலுள்ள அனைத்து உத்தியோகபூர்வ
“எதிர்கட்சிகளுடனும்”
பிற குழுக்களுடனும்
ஒன்றாகச் செயல்பட்டு வருகிறது.
ஜூலை
8ம் திகதி மில்லியன்
கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் அனைத்து எகிப்தின் முக்கிய நகரங்களிலும்
ஆர்ப்பாட்டம் நடத்தி ஒரு
“இரண்டாவது புரட்சி”
தேவை எனக் கோரினர்.
இதைத்தொடர்ந்து
எகிப்து முழுவதும் பெரும் வேலைநிறுத்த இயக்கங்களும் உள்ளிருப்புப் போராட்டங்களும்
தொடர்ந்தன.
எகிப்திய
மக்கள் இராணுவ ஆட்சிக் குழுவை பழைய ஆட்சியில் விரிவடைந்துள்ள கரம் என்றுதான்
சரியாகக் காண்கின்றனர்;
ஏனெனில் முபராக்
சர்வாதிகாரத்தின் அதே கொள்கைகளைத்தான் இது துல்லியமாகப் பிரதிபலித்து நிற்கிறது.
முபாரக்கின்
தளபதிகள் அதிகாரத்தை எடுத்துக் கொண்டதில் இருந்து,
சமூகநலச் செலவுகள்
குறைக்கப்பட்டுவிட்டன,
இராணுவ ஆட்சி
தொடர்கிறது,
எகிப்து இன்னமும்
அமெரிக்கா,
இஸ்ரேல் ஆகியவற்றின்
உறுதியான நட்பு நாடாக உள்ளது.
எகிப்திய
தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் விடுத்துள்ள
“இரண்டாவது
புரட்சிக்கான”
அழைப்பு பெருகிய
முறையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் எகிப்திய முதலாளித்துவத்திற்குக் கவலை
கொடுத்துள்ளது.
முழு மத்திய
கிழக்கிலும் முதலாளித்துவ ஆட்சியை அச்சுறுத்தும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன
இயக்கம் ஏற்பட்டுவிடுமோ என்பது குறித்து அவர்கள் பெரும் கவலை கொண்டுள்ளனர்.
அமெரிக்க
ஏகாதிபத்தியமும் பிற பிற்போக்குத்தன ஆட்சிகளும் பெருகிய முறையில் இஸ்லாமியவாதக்
குழுக்களுக்கு ஆதரவைக் கொடுக்கின்றன.
சமீபத்தில்தான்
அமெரிக்கா அது முஸ்லிம் பிரதர்ஹுட்டுடன்
“வெளிப்படையான
உரையாடலை”
நிறுவும் என அறிவித்தது.
எகிப்தில் சலாபியக்
குழுக்கள் அதிக அளவில் சௌதி அரேபியாவின் ஆதரவைக் கொண்டுள்ளன;
அதுவோ முபாரக்
அகற்றப்படுவதை எதிர்த்தது.
நிலைமையைக்
கட்டுப்படுத்துவதற்காக உத்தியோகபூர்வ
“எதிர்க்”
கட்சிகள்—தாராளவாத,
இஸ்லாமியவாத அல்லது
போலி இடது என—இராணுவக்
குழுவைக் காப்பாற்ற ஒரு கூட்டணி அமைத்துக் கொண்டன.
ஜூலை
27ம் திகதி
35 அரசியல்
கட்சிகளும் குழுக்களும்
“ஐக்கிய மக்கள்
முன்னணி”
ஒன்றை அமைத்து,
அரசியல் விவாதங்கள்
நடத்தப்படுவதை நிறுத்தவும் அனைத்து
“முரண்பாட்டிற்குரிய
பிரச்சினைகளை”
ஒதுக்கி வைப்பது
என்றும் முடிவெடுத்தன.
ஓர்
எதிர்ப்பாளரை இராணுவத்தினர் அடித்து உதைக்கின்றனர்
[புகைப்படம்
:
நோரா ஷலபி]
இது ஒரு
இஸ்லாமியவாதத் தூண்டுதலுக்கு ஜூலை
29 அன்று அரங்கு
அமைத்தது.
இஸ்லாமியவாதக் குழுக்களான
முஸ்லிம் பிரதர்ஹுட்,
சலாபிக்கள் மற்றும்
அல்-கமா
அல்-இஸ்லாமியா
போன்றவற்றால் கவனமாகத் தயாரிக்கப்பட்ட ஒரு நடவடிக்கைக்கு எகிப்தின் கிராமப்புறப்
பகுதிகளிலிருந்து கெய்ரோவிற்கு இஸ்லாமியவாத ஆதரவாளர்கள் கொண்டுவரப்பட்டனர்;
இக்குழுக்களானது
இராணுவ ஆட்சி,
அதன் வேலைநிறுத்த
எதிர்ப்புச் சட்டம் ஆகியவற்றிற்கும் எதிர்ப்பாளர்கள் வேலைநிறுத்தம் செய்வோருக்கு
எதிரான வன்முறை நடவடிக்கைகளுக்கும் ஆதரவு கொடுப்பவை.
இந்நிகழ்வுகளைப்
போலி இடது சக்திகள் தஹ்ரிர் சதுக்கத்தில் எதிர்ப்பாளர்கள் கைவிடுவதற்குப் போலிக்
காரணமாகப் பயன்படுத்தின.
எதிர்ப்
புரட்சிக்குப் பாதை அமைப்பதில் மிக இழிந்த பங்கு சோசலிச முன்னணியில் இருக்கும் போலி
இடது கட்சிகளான புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள்
(RS), ஜனநாயகத்
தொழிலாளர்கள் கட்சி மற்றும் சோசலிசக் கூட்டணிக் கட்சி ஆகியவைகளாகும்.
இவைகள்
“இரண்டாவது
புரட்சிக்கான”
அழைப்புக்களுக்கு
வெளிப்படையான எதிர்ப்பாளர்கள் ஆவர்;
மாறாக இராணுவ
ஆட்சிக் குழுவை ஒரு முற்போக்குச் சக்தி,
ஜனநாயக,
சமூகச்
சீர்திருத்தங்களை வழங்க உள்ளது எனக் காட்டுபவை.
போலி இடது
குழுக்கள் இஸ்லாமியவாதிகளுடன் ஓர் உடன்பாட்டைக் கொண்டு,
“ஐக்கிய மக்கள்
முன்னணி”
என்பதில் சேர்ந்தன.
இஸ்லாமியவாதிகள்
தங்கள் ஜூலை 29
அணிவகுப்பைத்
தொடங்கியவுடன்,
போலி இடது சக்திகள்
உட்பட 33
அரசியல் கட்சிகளும்,
குழுக்களும்
எதிர்ப்புக்கள்,
உள்ளிருப்புக்கள்
ஆகியவற்றில் இருந்து பின்வாங்குவதற்கு ஒரு போலிக் காரணமாக இதைப் பயன்படுத்தின.
இத்தகைய
பிற்போக்குத்தன தந்திர உத்தி எகிப்திய முதலாளித்துவத்தினால்,
போலி இடதின்
ஆதரவுடன் செய்யப்பட்டது.
சமீபத்தில் இராணுவ
ஆட்சிக்குழு மக்களுக்கு எதிராக சமீபத்தில் நடத்திய வன்முறைகளுக்குப் பாதை அமைத்தது
என்பது மட்டுமின்றி,
இராணுவ ஆட்சிக்குழு
எகிப்தில் நடக்கும் வர்க்கப் போராட்டங்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதலுக்கும்
அரங்கையும் அமைத்துள்ளது. |