World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Imperialist powers seek exit from Libyan war

ஏகாதிபத்திய சக்திகள் லிபியப் போரில் இருந்து வெளியேற முயல்கின்றன

James Cogan
28 July 2011

Back to screen version

நாட்டின் நீண்ட நாளைய சர்வாதிகாரி முயம்மர் கடாபியை அகற்றி பெங்காசியைத் தளமாகக் கொண்ட இடைக்கால தேசியக் குழுவை (TNC)  ஒரு கைப்பாவை அரசாங்கமாக நிறுவும் முயற்சியில் தோல்வியுற்ற நிலையில், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா லிபியாவிற்கு எதிரான ஏகாதிபத்தியப் போரை முக்கியமாகத் தூண்டிவிட்ட பிரான்ஸுடன் சேர்ந்து போரில் இருந்து வெளியேறுவதற்கு ஒரு மூலோபாயத்தை நாடுகின்றன. ஐந்து மாத காலம் லிபிய மக்கள் மீது இறப்பையும் அழிப்பையும் கொண்ட தாக்குதல்களை செய்தபின், பல லிபியத் தலைவரை படுகொலை செய்ய பல முயற்சிகளை மேற்கொண்ட பின், முக்கிய சக்திகள் இப்பொழுது கடாபியுடனும் மற்றும் அவருடைய அரசுடனும் ஒரு உடன்பாட்டைக் காண முற்பட்டுள்ளன.

திங்களன்று பிரிட்டனின் வெளியுறவு மந்திரி வில்லியம் ஹேக் ஒரு உடன்பாட்டை அவருடைய அரசாங்கம் ஏற்றுள்ளது பற்றிய அடையாளத்தைக் காட்டினார். கடாபி அதிகாரத்தில் இருந்து அகற்றப்படும் வரை, லிபியாவை விட்டு அவர் நீங்கும் வரை போர் முடிவிற்கு வராது என்று கூறிய முந்தைய அறிக்கைகளில் இருந்து அவர் பின் வாங்கினார். அதற்கு மாறாக ஹேக் இப்பொழுது லிபியர்கள்தான் தீர்மானிக்கவேண்டும்என்று கூறியுள்ளார். வெள்ளை மாளிகைச் செய்தித்தொடர்பாளர் ஜே கார்னி சில மணி நேரத்திற்குப் பின் பிரிட்டனின் நிலைப்பாட்டிற்கு ஒப்புதல் கொடுத்த வகையில், செய்தியாளர்களிடம் கடாபி நாட்டில் இருப்பதா வேண்டாமா என்பது லிபிய மக்கள் முடிவெடுக்க வேண்டிய விடயம்என்றார்.

ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியின் பிரெஞ்சு அரசாங்கம் ஏற்கனவே கடாபியுடன் உடன்பாட்டைக் காண்பதற்கு தன் விருப்பத்தைக் காட்டியுள்ளது. ஜூலை 10ம் திகதி பிரெஞ்சு பாதுகாப்பு மந்திரி Gerard Longuet அது இடைக்காலத் தேசியக் குழுவின் எழுச்சியாளர்களுக்குகடாபியின் விசுவாசிகளுடன் பேச்சுக்களை நடத்த அழுத்தம் கொடுப்பதாக அறிவித்தார். சர்வாதிகாரியே அவருடைய அரண்மனையில் வேறு ஒரு அறையில் வேறு ஒரு பதவியுடன் இருக்கலாம்என்பதையும் ஏற்க சொல்லியுள்ளார்.

லிபிய மக்களுடைய ஜனநாயகவிருப்பத்தின்பால் எனக் கூறப்படும் இத்தகைய இழிந்த செயற்பாடுகள் ஒரு கண்துடைப்பாகும். நாட்டில் கடாபி இருக்கலாம் என்பது ஏற்கப்பட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, இது அவருடைய நெருங்கியவர்கள் மற்றும் அதிகாரம் செலுத்துபவர்களுக்கு தங்கள் சலுகைகள், நிலைப்பாடுகள், செல்வம் ஆகியவற்றைத் தக்க வைக்க அனுமதிக்கும் ஓர் உடன்பாட்டை மேற்கொள்ளத் தயார் என்பதற்கான ஏகாதிபத்திய சக்திகளின் தெளிவான அடையாளம் ஆகும்.

இந்த அறிக்கைகள் ஐக்கிய நாடுகள் சபையின் தூதர் அப்துல் எல அல்-கதிப் மற்றும் கடாபி அரசாங்கத்தின் பிரதிநிதிகள் அதிகாரத்தை பகிர்ந்துகொள்ளும்திட்டங்களை இயற்றும் இராஜதந்திர நடவடிக்கையுடன் ஒரே காலத்தில் வெளிவந்துள்ளது. ரஷ்ய அரசாங்கம் ஓர் ஐந்து நபர் இடைக்கால ஆட்சி என்னும் திட்டத்தை முன்வைத்துள்ளது. இதில் இரு கடாபி விசுவாசிகள், இரு இடைக்கால தேசியக் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் இருதரப்பினரும் ஒப்புக் கொள்ளும் ஐந்தாவது நபர் ஆகியோர் இருப்பர்.

ஏகாதிபத்திய இராஜதந்திரத்தில் இத்தகைய மாற்றம் என்பது ஆரம்பத்திலிருந்தே போரை தொடக்கும் பின்னணியில் கொள்ளைமுறை மற்றும் புதிய காலனித்துவ செயற்திட்டம் ஆகியவை இருந்தன என்பதற்கான அழிவுகரமான உறுதிபடுத்தலாகும்.

பிரெஞ்சு, பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள் துனிசியா மற்றும் எகிப்தில் ஏகாதிபத்திய சார்புடைய சர்வாதிகாரிகளை அகற்றிய வெகுஜன மக்கள் எழுச்சிகளை தமது வட ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கில் உள்ள நலன்களுக்கு ஓர் அச்சுறுத்தல் எனக் கண்டன. இவை ஒவ்வொன்றும் நெருக்கமான அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளைக் கொண்டிருந்த கடாபியின் லிபியா தங்கள் கட்டுப்பாட்டின்றகீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்பதில் அவை உறுதியாக இருந்தன.

விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவல்கள் நிரூபிப்பது போல், நாட்டின்  செழிப்புமிக்க எண்ணெய், எரிவாயு இருப்புக்களை சுரண்டுவதில் இன்னும் ஆதாயமான ஒப்பந்த விதிகள் வேண்டும் என்னும் கடாபியின் முயற்சிகள் பற்றிக் கவலை கொண்டு, அவருடைய சீன, ரஷ்ய பெருநிறுவன நலன்கள் பால் இருந்த அக்கறை குறித்தும் கவலை கொண்டது. அவருடைய ஆட்சியை மக்கள் எழுச்சி மூலம் அகற்றிவிட்டு பதவிக்கு வரும் எந்த அரசாங்கமும் நாட்டின் இயற்கை செல்வத்தில் கூடுதலான பங்கைத்தான் கேட்கும்.

இதற்கு மாற்றீடாக ஏகாதிபத்திய சக்திகள் கிழக்கு லிபியாவில் பெங்காசியில் ஒரு புதிய ஆட்சியை நிறுவும் திட்டத்தை கொண்டன; திரிப்போலியை தளமாக கொண்ட கடாபி அரசாங்கத்திற்கு எதிராக குறைகூறுவோர் பெங்காசியில் இருந்தனர். அத்தகைய ஆட்சிதான் நாட்டின் ஆதாரங்களை அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நலன்களின் கைகளில் ஒப்படைக்கும் என்பது மட்டும் அல்லாமல், ஏகாதிபத்திய துருப்புக்களுடன் உடன்பாடு கொண்டு, பிராந்தியத்தில் அமைதியின்மை மேலும் பரவாமல் ஒரு தடுப்புச் சக்தியாகவும் இருக்கும்.

பெங்காசியில் இன்னும் அதிக ஜனநாயகம் தேவை என்பதற்கான எதிர்ப்புக்கள் வெடித்த சில வாரங்களுக்குள், பின்னர் இடைக்கால தேசிய குழுவை ஆரம்பித்த ஒரு சிறு குழுவினர், ஆட்சிக்கு எதிராக ஆயுதமேந்திய எழுச்சியை தொடக்கினர். எழுச்சி என அழைக்கப்பட்ட இந்நிகழ்விற்கு பின்னணியில் இருந்த நபர்கள் முன்னாள் கடாபி அமைச்சர்கள், CIA செயலர்கள் மற்றும் கடாபி சார்புடைய இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்ற ஒரு கூட்டுக்குழுவினர் ஆகும். இவர்களுடைய சிறு அளவிலான எழுச்சியை அடக்குவதற்கு லிபிய ஆயுதப் படைகள் எடுத்த நடவடிக்கைகள் பெரிய சக்திகளால் மிகைப்படுத்தப்பட்டு இனக்கொலை போல் குடிமக்களுக்கு எதிரான இரத்தக் களறி எனக்கூறப்பட்டு, வெளிநாட்டு இராணுவத் தலையீட்டின்மூலம்தான் தடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

அப்பொழுது முதல் நடந்தவை அனைத்தும் ஏகாதிபத்திய சார்பு இந்த எழுச்சி ஒரு பரந்த மக்கள் இயக்கத்தை பிரதிபலிக்கவில்லை, லிபிய மக்கள்நெடுகிலும் வெகுஜன ஆதரவைக் கொண்டிருக்கவில்லை என்பதை நிரூபித்தன. திரிப்போலியும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் கடாபியின் கட்டுப்பாட்டிற்குள் உறுதியாக இருந்தன. எதிர்பார்த்ததற்கு மாறாக, லிபிய இராணுவம் அதிகமாக அரசாங்கத்திற்கு ஆதரவைக் கொடுத்து நின்றது. இடைக்கால தேசியக் குழுவின் ஆயுதப் படைப் பிரிவுகளில் ஏராளமான மக்கள் சேரவில்லை. பயிற்சிகள் அற்ற கிளர்ச்சிஇராணுவம் பலமுறையும் நேட்டோ வான்வழித் தாக்குதல்களால் லிபிய சக்திகள் கைவிடும் கட்டாயத்திற்கு உட்பட்ட நிலப்பரப்புக்களைக்கூட தக்க வைத்துக் கொள்ளுவதில் பல முறையும் தோல்வியுற்றன.

இப்போர் ஒன்றும் குடிமக்களைக் காப்பாற்றுவது தொடர்பானதல்ல. ஐக்கிய நாடுகள்  தீர்மானம் எண் 1973ன் மூலம் போரை நியாயப்படுத்தியதில் இருந்து, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகியவை நேட்டோ கூட்டு என்னும் குடையின்கீழ் செயல்பட்டு, ஆட்சிமாற்றம்தான் தங்கள் உண்மையான செயற்பட்டியல் என்பதை ஒன்றும் இரகசியமாக வைத்திருக்கவில்லை.

இந்த இலக்கை அடைவதற்கான முக்கிய சக்திகளின் முயற்சிகளில் குற்றம் சார்ந்த தன்மைதான் இருந்தது. பல படுகொலை முயற்சிகளில் இலக்காக கடாபி இருந்தார். அவற்றுள் ஒன்று அவருடைய மகன் மற்றும் மூன்று பேரக்குழந்தைகளைக் கொன்றது. நூற்றுக்கணக்கான, ஏன் ஆயிரக்கணக்கான என்றும் கூறலாம், லிபியப் படையினர் கடாபியின் இராணுவத்தைத் தகர்க்கும் இலக்கு கொண்டிருந்த வான்தாக்குதல்களில் படுகொலையுண்டனர். நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் கொடுக்கப்பட்டு, சிறப்புப் படைகள், கூலிப்படைகள் மற்றும் நேட்டோ நாடுகளின் உளவுத்துறைச் செயலர்கள் லிபியாவிற்கு எழுச்சியாளர்களுக்குஇராணுவப் பிரிவுகளைக் கட்டமைக்க உதவுவதற்கு அனுப்பப்பட்டிருந்தனர். நாட்டின் மேற்குப் பகுதியில் பழங்குடி மக்களுக்கு பிரான்ஸ் சட்டவிரோதமாக விமானங்கள் மூலம் ஆயுதங்களை கொடுத்தது.

லிபிய அரசாங்கத்தின் கருத்துப்படி, திரிப்போலி மற்றும் பிற கடாபி ஆதரவுப் படைகள் இருந்த அடிப்படை உள்கட்டுமானங்கள் குண்டுத்தாக்குதலுக்கு உட்பட்டதில் குறைந்தபட்சம் 1,108 குடிமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், 4,500க்கும் மேலானவர்கள் காயமுற்றுள்ளனர். நேட்டோ வேண்டுமென்றே குடிமக்களை இலக்கு கொண்டு தாக்குதல் நடத்தியது, அதை ஒட்டி மக்கள் ஆட்சிக்கு எதிராகத் திரும்ப அச்சுறுத்தப்படலாம் என்பதற்கான சான்றுகள் பெருகிவருகின்றன. இந்த வாரம் திரிபோலிக்குக் கிழக்கே ஜ்லிடான் சிறுநகரத்தில் ஒரு தொற்றுநோய் சிகிச்சை நிலையம் மற்றும் உணவுக் கிடங்கு ஆகியவை தாக்கப்பட்டன. CNN ல் இருந்து வந்த செய்தியாளர்களுக்கு ஒரு மசூதி மற்றும் பள்ளியின் சிதைவுகள் காட்டப்பட்டன. உள்ளூர் அதிகாரி ஒருவர் CNN இடம் நேட்டோ, மக்கள்மீது பரந்த அளவிலான போரை நடத்திவருகிறது. அவர்கள் அனைத்தையும் அழிக்கின்றனர்.என்றார்.

லிபியா மீதான குற்றம் சார்ந்த போர் இப்பொழுது ஒரு இழிந்த கட்டத்தை அடைந்துள்ளது. அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் சங்கடமாகிவிட்ட ஐந்து மாத காலப் போரை நிறுத்தும் முயற்சிகள் வெளிவந்துள்ளன. இம்மாதம் முக்கிய சக்திகள் அனைத்தும் இடைக்கால தேசியக் குழுவை சட்டபூர்வமான அரசாங்கம்என அங்கீகரித்து $130 பில்லியன் என மதிக்கப்பட்டுள்ள மேலை வங்கிகள், நிதிய அமைப்புக்களில் உள்ள லிபியச் சொத்துக்களை அடிப்படையில் திருடும் திட்டத்தைக் கொண்டன. அவற்றின் நோக்கம் மிகத் தெளிவானதுதான். செல்வத்தை மீண்டும் பெறுவதற்கு கடாபியைச் சுற்றி உள்ள லிபிய உயரடுக்கு இடைக்கால தேசியக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அது பற்றிய விதிகள் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்சினால் ஆணையிடப்படும். இறுதியில் கடாபியின் அரசு அல்லது இடைக்கால தேசியக் குழு ஆகியவற்றின் பிரிவுகளிடம் இருந்து எத்தகைய கூட்டுக்கள் வெளிப்பட்டாலும், அவற்றிற்கும் ஜனநாயகத்திற்கும் எத்தொடர்பும் இருக்காது.

லிபியா மீதான அமெரிக்க-நேட்டோ போர் பல போலி இடது மற்றும் தாராளவாதப் போக்குகள், தனிநபர்கள் ஆகியோர் இழிந்த முறையில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதையும் எடுத்துக்காட்டியுள்ளது. இதில் பிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி, நேஷன் ஏடு, மனிதாபிமானக் காரணங்களினால்தலையீட்டிற்கு ஒப்புதல் கொடுத்த அமெரிக்க உயர் கல்வியாளர் யுவான் கோல் ஆகியோர் அடங்குவர். ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தது, ஒடுக்கப்பட்ட நாடு பேரழிவிற்கு உட்பட்டமை ஆகியவற்றை இவர்கள் நியாயப்படுத்தியுள்ளதன் மூலம் லிபியா மற்றும் இன்னும் பரந்த வகையில் அப்பிராந்தியத்தில் வாழும் மக்களின் நலன்களுக்கு நேரடி எதிரான தன்மையில் ஏகாதிபத்திய சக்திகள் அரசாங்கத்தை தம் விருப்பம் போல் அமைக்கலாம் என்பதையும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.