சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French neo-fascist officials endorse Norway atrocities

பிரெஞ்சு நவ பாசிச பிரதிநிதிகள் நோர்வேக் கொடூரங்களுக்கு ஒப்புதல் கொடுக்கின்றனர்

By Kumaran Ira
29 July 2011
Use this version to print | Send feedback

ஐரோப்பா முழுவதும் தீவிர வலதுசாரிக் கட்சி உறுப்பினர்கள் ஆண்டர்ஸ் ப்ரீவிக் என்னும் நோர்வேயிலுள்ள வலதுசாரி, இஸ்லாமிய எதிர்ப்புத் தீவிரவாதி கடந்த வெள்ளியன்று நிகழ்த்திய படுகொலைகளுக்கு ஒப்புதல் கொடுத்துள்ளன. குறைந்தபட்சம் 76 பேர் ஒஸ்லோவில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் மற்றும் அருகேயுள்ள யுடோயாத் தீவில் நடந்த சமூக ஜனநாயக தொழிற் கட்சியின் இளைஞர் முகாமில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனர்.

பிரான்சில் நவ பாசிச தேசிய முன்னணியின் (FN)  இரு முக்கிய உறுப்பினர்கள் Jacques Coutela, Laurent Ozon இருவரும் நோர்வேயின் பாசிச முற்போக்குக் கட்சியின் முன்னாள் உறுப்பினரான ப்ரீவிக் நடத்திய வெகுஜனக் கொலைகளுக்கு ஆதரவு கொடுத்து பிளக் வலைத் தள கட்டுரைகளை எழுதியுள்ளனர். கொலைகளை செய்வதற்கு முன்பு ப்ரீவிக் முஸ்லிம்கள் மற்றும் குடியேறுவோரை எதிர்த்து வெறுப்பைக் காட்டும் தகவல்களை வலைத் தளத்தில் வெளியிட்டார். “கலாச்சார மார்க்சிசம்மற்றும்பன்முகக் கலாச்சார முறை ஆகியவற்றையும் தேசியக் கலாச்சாரத்தினைப் பாதுகாப்பதற்குத் தடையாக இருப்பவை என்று அவர் மேலும் கண்டித்துள்ளார்.

ஒரு FN வேட்பாளராக மார்ச் 2011ல் மாநிலத் தேர்தல்களில் நின்ற கௌடேலாஎதிர்ப்புப் போராளிஎன்று ப்ரீவிக்கை அவருடைய பிளக் தளத்தில் பாராட்டியுள்ளார். “மேற்கின் முதல் பாதுகாவலர்ப்ரீவிக், “இரண்டாம் சார்ல்ஸ் மார்ட்டெல்என்றும் அவர் ப்ரீவிக்கைப் பற்றிக் கூறியுள்ளார்இக்குறிப்பு இடைக்கால பிராங்கிஷ் அரசர் சார்ல்ஸ் மார்ட்டெலைப் பற்றியதுஅவர் ஸ்பெயின் மூலம் பிரான்ஸின் தெற்குப் பகுதியைப் படையெடுத்த முஸ்லிம் படைகளை 732ம் ஆண்டு போய்டியர்ஸ் போரில் (battle of Poitiers) தடுத்து நிறுத்தியவர் ஆவார்.

அவர் ஒன்றும் ஒரு பெருமிதச் சின்னம் அல்ல; ஆனால் தொலைபார்வை உடையவர், ஐரோப்பாவில் நம் அரசாங்கங்கள் மற்றும் பிரஸ்ஸல்ஸிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் உடந்தையுடன் எழுச்சி பெறும் இஸ்லாமியமயமாகுவதற்கு முகம் கொடுப்பவர்என்று கௌடேலா எழுதியுள்ளார். “தங்களுடைய ஏற்புடைத்தன்மை இல்லாத போலி நம்பிக்கையான கலால் இறைச்சி, மசூதிகள், சிறு குழந்தைகளை செக்ஸுக்காக நாடுதல் ஆகியவற்றை ஏற்படுத்த முயலும் போக்கிரிகள், நம் தெருக்களை ஆக்கிரமிப்பவர்கள் என்று உள்ளவர்கள்கூண்டோடு அகற்றப்பட வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

இதேபோல், FN உடைய தலைவர் மரீன் லு பென்னினால் அதன் அரசியல் குழுவில் நியமிக்கப்பட்டுள்ள ஓசோனும் ட்விட்டரில் ப்ரீவிக்கின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுத்துத் தகவல்களை வெளியிட்டுள்ளார். “ஒஸ்லோ நாடகத்தை விளக்குவதற்கு குடியேற்றங்களில் ஏற்பட்டுள்ள வெடிப்புத்தன்மை மேற்கோளிடப்பட வேண்டும். 1970ல் இருந்து 2009க்குள் இது 6 மடங்கு அதிகரித்துவிட்டதுஎன்று அவர் எழுதியுள்ளார்.

இத்தாலியில் பெர்லுஸ்கோனி அரசாங்கத்தின் கன்சர்வேடிவ் கூட்டணி பங்காளியும் தீவிர வலதுசாரி பிரிவினை இயக்கமான வடக்கு லீக்கும் ப்ரீவிக்கின் பாசிசக் கருத்துக்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளது. வடக்கு லீக்கின் முக்கிய உறுப்பினரான பிரான்செஸ்கோ ஸ்பெரோனிப்ரீவிக்கின் கருத்துக்கள் மேற்கத்தைய நாகரிகத்தை காப்பவைஎன்றார்.

ப்ரீவிக்கின் கருத்துக்களைப் பாதுகாத்தல், அவருடைய பயங்கரவாதத்தை காத்தல், FN மற்றும் பிற ஐரோப்பிய தீவிர வலது கட்சிகளால் நடத்தப்படுவது தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு தீவிர எச்சரிக்கை ஆகும். இவை நவ பாசிஸ்ட்டுக்களின் குடியேறுபவர்கள் மீது இருக்கும் வன்முறை விரோதப்போக்கு பற்றியும், எவ்வளவு தவறான முறையில் என்றாலும் நோர்வேயின் தொழிற் கட்சி சோசலிசக் கொள்கைகளைக் கொண்டிருக்கிறது என்று அவர்கள் உணரும் அமைப்புக்கள் மீது கொண்டுள்ள வன்முறை விரோதப்போக்கையும் வெளிப்படுத்துகின்றன.

நோர்வேயில் நடந்துள்ள வெகுஜனப் படுகொலைகளைத் தொடர்ந்து FN இழிந்த முறையில் தன்னைக் கொலையில் இருந்து தொலைவில் வைத்துக் கொள்ளமுற்பட்டது. ஞாயிறன்று FN உடைய தலைவர் மரீன் லு பென், “தேசிய முன்னணி நோர்வேஜியப் படுகொலையுடன் எத்தொடர்பையும் கொண்டிருக்கவில்லை; இது இரக்கமற்றுத் தண்டனை கொடுக்கப்பட வேண்டிய ஒற்றை, சீரற்ற மூளை உடைய ஒரு நபரின் செயலாகும்என்று அறிவித்தார்.

செவ்வாயன்று FN கௌடேலா கட்சி நடவடிக்கைகளிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டதாக அறிவித்தது. FN உடைய பொதுச் செயலர் ஸ்டீவ் பிரியோஸ் AFP இடம்இன்று அவருடைய பதவியில் இருந்து கௌடேலா தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்; ஒரு ஒழுங்குமுறைக் குழு விசாரணை முடியும் வரை இது தொடரும்என்றார். ஆனால் இதுவரை ஓசோன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கௌடேலாவை நீக்கியுள்ள நிலையில், FN செய்தி ஊடகம் மற்றும் அரசியல் அமைப்பு முறையின் ஆதரவைப் பெறும் வகையில்ஒரு பொறுப்பான கட்சி எனக் காட்டிக் கொள்ள முற்படுகிறது. உத்தியோகபூர்வ செய்தி ஊடகத்தில் இந்த மூலோபாயத்திற்கு சிறிது வெற்றி கிடைத்துள்ளது; அது ஜனவரி மாதம் மரீன் லு பென் கட்சித் தலைவராக வந்ததிலிருந்து செய்தி ஊடகங்கள் FN ற்கு ஆதரவைக் கொடுக்க முற்பட்டுள்ளது. (See “French media gives glowing coverage of new National Front Leader”).

Le Point  யினால் பேட்டி காணப்பட்டபோது, நிக்கோலா லெபர்க், பெர்பினன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருப்பவர், வலதுசாரி பற்றிய வல்லுனர், கூறினார்: “தேசிய முன்னணி நன்கு இப்பொழுது செயல்படுகிறது; இதற்குக் காரணம் நோர்வேஜியத் தாக்குதல்கள் தோற்றுவித்த கருத்து விவாதங்களை முகங்கொடுக்கையில் அது மேற்கொண்ட வெற்றிகரமான பொது உறவுகள்தான்.”

மரீன் லு பென் மிகப் பகுத்தறிவார்ந்த விடையிறுப்பைத்தான் கொடுத்துள்ளார். சட்டம் மற்றும் ஒழுங்கு பற்றிய நிலைப்பாட்டைக்கொண்டு, Tours மாநாட்டில் எப்.என் தலைவராகப் பதவி ஏற்றதில் இருந்து அவர் கொண்டுள்ள சார்பை இது ஒத்துள்ளது. குறிப்பாக கொலையாளிக்கு ஆதரவு கொடுத்த ஜாக் கௌடேலாவைப் பதவிநீக்கம் செய்தது; மேலும் தாக்குதலைத் தெளிவாகக் கண்டித்த முறையில் தனக்கு ஒரு நல்ல நிலைப்பாட்டையும் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்என அவர் சேர்த்துக் கொண்டார்.

இத்தகைய எளிதான நிலைப்பாடுகள்ஐரோப்பாவில் மறுபிறப்பு எடுத்துள்ள வன்முறை பாசிச அரசியல் பற்றிய வரலாற்று, அரசியல் உட்குறிப்புக்களை பூசி மெழுகுதல், ஐயத்திற்கு இடமின்றி பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா முழுவதும் அரசியல் அமைப்பு முறையில் பெரும் பிரிவுகளின் கருத்துக்களைத்தான் ஒத்து இருக்கின்றன.

இவை FN அல்லது வடக்கு லீக் போன்ற கட்சிகளை வளர்த்துள்ளன; இதற்குக் காரணம் வர்க்க விரோதப் போக்குகளை பிற்போக்குத்தன, தீவிர சோவினிச வகைகளில் திசைதிருப்புவதுதான். அவர்கள் FN பரந்த அளவில் இழிவுபடுத்தப்படுவதை விரும்பவில்லை; இதற்குக் காரணம் அதன் ஏற்றத்தில் இவை உடந்தையாக இருக்கின்றன.

தன்னுடைய இகழ்வுற்ற சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளுக்கு தொழிலாள வர்க்க எதிர்ப்பை முகங்கொடுக்கும் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி தொழிலாள வர்க்கத்தைப் பிரிக்கவும் FN வாக்காளர்களுக்கு அழைப்பீடு என்ற வகையிலும் குடியேறுவோர்-எதிர்ப்பு, முஸ்லிம் எதிர்ப்பு ஆகியவற்றைத் தூண்டுகிறார். பிரான்சில் பர்க்கா அணிவதைத் தடைசெய்தல் போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை அவர் முழு அரசியல் அமைப்பு முறையின் ஆதரவுடனும் செய்துள்ளார்இதில் பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி, புதிய முதலாளித்துவ எதிர்ப்புக்கட்சி போன்றதீவிர இடதுகட்சிகளும் அடங்கியுள்ளன.

இச்சக்திகள் எதுவுமே கடந்த ஆண்டு ரோமாக்கள் இலக்கு வைத்து வெளியேற்றப்படல் என்னும் சார்க்கோசி அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிராக அரசியல் பிரச்சாரம் ஏதும் நடத்தவில்லை.

இத்தகைய வளர்ச்சிப் போக்கு, FN கௌடேலாவை நீக்கியிருக்கும் முடிவு அது ஒரு பொறுப்பான அரசியல் நிறுவனம் என்பதை நிரூபிக்கிறது என்ற கூற்றுக்களிலுள்ள திவால்தன்மையைத்தான் உயர்த்திக் காட்டுகிறது. உண்மையில் செய்தி ஊடகம் FN ஐ ஒரு நெறியான அரசியல் கட்சி எனக் காண்பிப்பதில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இது இன்னமும் அதிகமாக, குழப்பமான, பிற்போக்கு நபர்கள் ப்ரீவிக் வெளிப்படுத்திய பிற்போக்குத்தனக் கருத்துக்கள் போன்றவற்றை ஏற்கத்தான் ஊக்குவிக்கும். இதன் விளைவு ஒஸ்லோ துன்பியல் போன்ற பல நிகழ்வுகள் இன்னும் வரும் என்பதுதான்.