WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
The Israeli protests and the unity
of Arab and Jewish workers
இஸ்ரேலிய எதிர்ப்புக்களும் அரேபிய யூதத் தொழிலாளர்களின் ஐக்கியமும்
Patrick O’Connor
30 July 2011
Back to
screen version
இஸ்ரேலிய
தொழிலாளர்களும் இளைஞர்களும் மோசமாகி வரும் பொருளாதார இடர்களுக்கு எதிராக நடத்தும்
பெருகிவரும் எதிர்ப்பு இயக்கம் மத்திய கிழக்கு முழுவதும் மற்றும் சர்வதேச அளவிலும்
தொழிலாளர் வர்க்கத்திற்கு ஒரு பாரிய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.
செலுத்தமுடியாத வீட்டு விலை மற்றும் வாடகை உயர்வுகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்
15 நாட்களுக்கு
முன்பு வெடித்தெழுந்ததிலிருந்து, இளைஞர்கள் இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளில்
“கூடார நகரங்களை”
நிறுவினர்.
இந்த இயக்கம்
ஆரம்பத்தில் பெரும்பாலும் ஒரு மத்தியதர வர்க்கத்தின் செயற்பாடாக இருந்தது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் டெல் அவிவில் பெரும் ரோத்ஸ்சேல்ட் பொலிவார்டில் மையம்
கொண்டனர். ஆனால் இன்னும் பரந்தளவிலான மாணவர்கள்,
இளைஞர்களின் பிரிவு
இப்பொழுது இதில் ஈடுபட்டுள்ளதுடன், கருத்துக் கணிப்புக்கள் எதிர்ப்புக்களுக்கு
90% மக்களின் ஆதரவு
அதற்கு இருப்பதாகக் காட்டுகின்றன.
தொழிலாள
வர்க்கத்தின் பல பிரிவுகள் இப்பொழுது பிரதம மந்திரி பென்ஞமின் நெத்தன்யாகுவின்
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் நுழைந்துள்ளனர். உள்ளூராட்சித் தொழிலாளர்கள்
திங்களன்று எதிர்ப்புக் காட்டும் மாணவ எதிர்ப்பாளர்களுடன் ஒற்றுமையைக் காட்டும்
வகையில் வேலைநிறுத்தம் செய்ய உள்ளனர். பொது அலுவலங்கள் மூடப்படும்,
குப்பைகள்
சேகரிக்கப்படமாட்டாது.
20,000க்கும்
மேற்பட்ட இளந் தொழிலாளர்கள் இணைய தளத்தில் தங்கள் ஆதரவை திங்கள்
வேலைநிறுத்தத்திற்குக் வெளிப்படுத்தியுள்ளனர்.
பல வாரங்களாக
டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இது உயர்தகமை தொழிலாளர்களிடையே உள்ள
பரந்த அதிருப்தியைப் பிரதிபலிக்கிறது.
சர்வதேசரீதியாக இருக்கும் பிற தொழிற்சங்கங்களைப் போலவே ஹிஸ்டட்ருட் தொழிற்சங்கக்
கூட்டமைப்பு தொழிலாளர்களின் ஊதியங்களைக் குறைப்பதில் உடந்தையாக இருப்பதுடன், அது
பாரிய அழுத்தத்தில் கீழ் உள்ளது என்பது மிகத்தெளிவாகவுள்ளதுடன், நேடன்யாகுவிடம்
அவரால் முடியவில்லை என்றால் இயக்கத்தைக் கட்டுப்படுத்தித் திசைதிருப்புவதற்காக தான்
வேலைநிறுத்தங்களுக்கு அழைப்புவிடுக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிகழ்வுகள் முதலாளித்துவ செய்தி ஊடகம்,
அரபு உலகம்
முழுவதும் உள்ள மத்தியதர வர்க்க
“இடது”
மற்றும் பல தேசியவாத
மற்றும் இஸ்லாமிய அமைப்புக்களால் புறக்கணிக்கும் அல்லது மறுக்கப்படும் உண்மையான
இஸ்ரேலில் ஒரு தொழிலாள வர்க்கம் உள்ளது என்பதைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
மேலும் அதன் நலன்கள் இப்பொழுது இஸ்ரேலின் ஆளும் வர்க்கத்துடனும் மற்றும்
சியோனிசத்தின் அனைத்து உத்தியோகபூர்வ நிறுவனங்களுடனும் வெளிப்படையான மோதலில் உள்ளன.
இன்றுவரை
நடந்துள்ள எதிர்ப்புக்கள் இஸ்ரேலிய தொழிலாள வர்க்கத்திடம்
உருவாக்கிக்கொண்டிருக்கும் இயக்கத்தின் ஆரம்ப வெளிப்பாடுதான்.
சியோனிச
நாட்டிற்குள் வளர்ந்து வரும் போக்கு மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா முழுவதும்
உருவாகிய வெகுஜன சமூக எதிர்ப்பு என்ற ஒரு பரந்த நிகழ்போக்குடன் ஒருங்கிணைந்த ஒரு
பகுதியாகும்.
எகிப்து,
துனிசியா மற்றும்
பிற அரபு நாடுகளில் நடந்துவரும் புரட்சிகரப் போராட்டங்கள் சமயம் அல்லது தேசிய
அடையாளத்தின் மேலாதிக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. மாறாக சமூகப் பிரச்சினைகளான
வேலையின்மை,
வறுமை,
சமத்துவமின்மை,
கல்விக்கான வாய்ப்பு
ஆகியவற்றின் ஆதிக்கத்தைக் கொண்டவை.
இப்போராட்டங்களில்
பெருகிய முறையில் தொழிலாள வர்க்கம் முன்னணிக்கு வந்து கொண்டிருக்கிறது.
இப்பொழுது இஸ்ரேலில்
உள்ள தொழிலாளர்கள் எழுச்சியடைந்துள்ளனர். இவர்களுடைய உந்துதலுக்குக் காரணம் அதே
நெருக்கடியும் அதே சமூகப் பிரச்சினைகளும்தான்.
அரபு
நாடுகளிலும் இஸ்ரேலிலும் தொழிலாள வர்க்கத்தின் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின்
அரசியல் மற்றும் சமூகப் போராட்டங்களுக்கு ஒரு புதிய பாதையைத்தான் இது சுட்டிக்
காட்டுகிறது. இதின் அச்சாக இருப்பது சமூக வர்க்கமே ஒழிய தேசிய அடையாளமோ, இனமோ
அல்லது மதமோ அல்ல.
இஸ்ரேல்
எப்பொழுதுமே ஓர் ஆழ்ந்து பிளவுற்றிருக்கும் நாடு ஆகும்.
ஆனால் கடந்த இரு
தசாப்தங்களில் தொடர்ச்சியான தொழிற்கட்சி,
லிகுட் மற்றும்
கடிமா அரசாங்கங்கள்
“தடையற்ற சந்தை”
மற்றும் வணிகச்
சார்புடைய சீர்திருத்தங்களைப் பெருமளவில் சுமத்தியுள்ளன.
இவற்றுள் அரசாங்கச்
சொத்துக்கள்
தனியார்மயமாக்கப்பட்டது,
வங்கித்துறை மற்றும்
பெருநிறுவனங்களின் மீது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது மற்றும் பல
வேலைப்பாதுகாப்பு விதிகள் அகற்றப்பட்டது ஆகியவை அடங்கும்.
இதே
நடவடிக்கைகள்தான் இப்பொழுது எகிப்து மற்றும் பிற அரபு நாடுகளிலும்
சுமத்தப்படுகின்றன.
அண்டை நாடுகளில்
உள்ளதைப் போலவே இஸ்ரேலிலும் முன்னோடியில்லாத சமத்துவமற்ற நிலைதான் விளைந்துள்ளது.
தொழிலாளர்களின் உண்மை ஊதியங்கள் சரிந்துவிட்டன;
ஆனால் ஒரு சிறு
உயரடுக்கு மகத்தான சொந்தச் சொத்துக்களைக் குவித்துக் கொண்டுவிட்டது.
மிகச் செல்வம்
படைத்த 20
குடும்பங்கள் பங்குச் சந்தையில் பாதியைக் கட்டுப்படுத்துவது அடித்தளமாகக்கொண்ட
நாட்டின் புதிய தன்னலக்குழு பற்றிய விவாதம் இஸ்ரேலில் இப்பொழுது வழமையான
ஒன்றாகிவிட்டது.
இவை சிக்கன
நடவடிக்கைகள் மற்றும் சமூகநலச் செலவுகளுக்கு எதிரான ஐரோப்பிய இயக்கங்கள் மற்றும்
மத்திய கிழக்கு,
வட ஆபிரிக்காவில் நடைபெறும் எழுச்சிகளினால் உந்துதல் பெற்றுள்ளன.
சியோனிச ஆளும்தட்டு இந்த இயக்கங்களை பிராந்திய இஸ்லாமிய ஆதிக்கத்தை அச்சுறுத்தும்
தன்மை கொண்ட ஆபத்தான குழப்பம் எனச் சித்தரித்துள்ள நிலையில் இது முக்கியத்துவம்
வாய்ந்தது ஆகும்.
வட
ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் பல நாடுகளில் எழுச்சிகளின் விதி அந்தரத்தில்
இப்பொழுது தொங்குகிறது.
உதாரணமாக,
எகிப்தில்
வெறுக்கப்பட்ட சர்வாதிகாரி ஹொஸ்னி முபாரக் அகற்றப்பட்டுவிட்டார்,
ஆனால் அவருடைய
அடக்குமுறை ஆட்சிதான் இன்னும் நடைபெற்று வருகிறது. இதை ஒரு இராணுவச் சிறுகுழு
நடத்துகிறது. அதுவோ அமெரிக்க அரசாங்கத்துடன் நெருக்கமாகச் செயல்பட்டுவருகிறது.
இப்பொழுது எகிப்திய
தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் முக்கிய விரோதி என்று எவர்
நிரூபிக்கப்பட்டுள்ளனர் என்ற வினா எழுப்பப்படலாம்.
இஸ்ரேலிய தொழிலாள
வர்க்கம் அல்ல,
ஆனால் இஸ்ரேலிய
ஆளும் வர்க்கம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் ஆதரவிற்கு உட்பட்ட எகிப்திய
முதலாளித்துவம்தான் என்பது தெரிய வரும்.
இதில் முகம்மத் எல்
பரடேயில் இருந்து முஸ்லிம் சகோதரத்துவம் வரை உள்ளன. இவை நடைமுறையில் உள்ள
முதலாளித்துவச் சொத்து உறவுகளுக்கு சவால் ஏதும் வராமல் தடுப்பு அரணாக இராணுவம்
செயல்படுவதற்கு ஆதரவைக் கொடுக்கின்றன.
பல
தசாப்தங்களாக
“தேசிய ஒற்றுமை”
அல்லது
“அரபு ஒற்றுமை”
என்ற பெயரில் அரேபிய
மத்திய கிழக்கில் தொழிலாள வர்க்கப் போராட்டம் முதலாளித்துவத்திற்கு அரசியல்ரீதியாக
அடிபணியச்செய்து வைக்கப்பட்டிருத்தது தொடர்ச்சியான பேரழிவைக் கொடுத்துக்
கொண்டிருக்கிறது.
கொலைகார இஸ்ரேலிய
இராணுவ இயந்திரத்திற்கு எதிராகத் தைரியமுடன் பல வெகுஜனப் போராட்டங்களை நடத்திய
அசாதாரண வளரச்சியுற்ற பாலஸ்தீனிய விடுதலை இயக்கம்
(PLO) இப்பொழுது
ஒரு வலதுசாரிக் கருவியாக மாறி,
வெளிப்படையாக
அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் சியோனிச அரசாங்கத்தின் கருவியாகச் செயல்படுகிறது.
இது முதலாளித்துவ தேசியவாதத்தின் வரலாற்று முட்டுச்சந்து என்பதன் தெளிவான
வெளிப்பாடு ஆகும்.
இஸ்ரேலின்
தற்போதைய நெருக்கடி சியோனிச திட்டத்தின் திவால்தன்மையை வியத்தகு முறையில்
நிரூபிக்கிறது என்பதுதான் உண்மை.
நாஜிகளின்
படுகொலைக்கு பின் யூதர்களுக்குப் பெரும் தீர்வு எனக் காட்டப்பட்ட வழிவகை இப்பொழுது
யூத மக்களுக்கு ஒரு அப்பட்டமான பொறிதான் எனக் காட்டிக் கொள்ளுவதுடன்,
ஒரு குறுகிய
முதலாளித்துவ உயரடுக்கின் செழிப்பிற்கும் வகை செய்துள்ளது. இக்குறுகிய அடுக்கு அதன்
அமெரிக்க ஏகாதிபத்திய ஆதரவாளர்களிடம் இருந்து தொடர்ந்து உதவிநிதிகளைப் பெறுவதை
நம்பியுள்ளதுடன், அதேபோல் இடைவிடாத ஆக்கிரமிப்புப் போர்கள் மற்றும் தன்னுடைய
தொழிலாள வர்க்கத்தையே இன்னும் அதிகமாக மிருகத்தனமாக சுரண்டுதல் ஆகியவற்றையும்
நம்பியுள்ளது.
யூதத்
தொழிலாள வர்க்கத்திற்கு முக்கிய விரோதி யார்?
பாலஸ்தீனிய மற்றும்
அரபுத் தொழிலாளர்கள் அல்ல,
இஸ்ரேலிய ஆளும்
வர்க்கமும் நெசட் மற்றும் தொழிற்சங்கங்களில் இருக்கும் ஆளும் வர்க்கத்தின்
பிரதிநிதிகளும்தான். அவர்கள்தான் இப்பொழுது எதிர்ப்பு இயக்கத்தின் தலைமையில்
எடுத்துக்கொள்ள முற்படுகின்றனர். காரணம் அதை
நெரித்துவிட
வேண்டும் என்ற விருப்பம்தான்.
1948ம்
ஆண்டு இஸ்ரேல் நிறுவப்படுமுன்னரே,
அதன் பின் உறுதியாக
6 தசாப்தங்களாக,
யூத மற்றும் அரேபிய
மக்களுக்கு இடையேயான பதட்டங்கள் இஸ்ரேலிலும் அரபு நாடுகளிலும் ஏகாதிபத்திய சக்திகள்
மற்றும் ஆளும் உயரடுக்குகளால் தூண்டிவிடப்பட்டு, அவற்றை அவை தமது இலாபத்திற்காக
பயன்படுத்துகின்றன.
ஆனால்,
இப்பொழுது உலக
முதலாளித்துவ நெருக்கடியில் ஒரு புதிய கட்டம் வளர்ந்து கொண்டிருக்கிறது. சர்வதேச
அளவில் வர்க்க சக்திகளின் சமநிலையில் முக்கிய திருப்பம் வந்துள்ளது.
20ம் நூற்றாண்டின்
தீர்க்கப்படாத வரலாற்றுப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான புறநிலைச் சூழ்நிலை
உருவாகிக்கொண்டிருக்கிறது.
மத்திய
கிழக்கு மக்களை பிளவிற்கு உட்படுத்தும் அடிப்படை விடயங்கள் மதம் சார்ந்தவையோ அல்லது
இனமோ அல்ல. ஆனால் வர்க்கம் சார்ந்ததவையாகும். இப்பிராந்தியம் முழுவதும் உள்ள
தொழிலாள வர்க்கத்திற்கு தேவைப்படுவது ஒரு ஒன்றுபட்ட தொழிலாள வர்க்கப்
போராட்டம்தான். இது ஒரு சோசலிச,
சர்வதேச
வேலைத்திட்டத்தைத் அடித்தளமாகக் கொள்ள வேண்டும். அதன் நோக்கம் இலாபமுறையை அகற்றுதல்,
உலக சோசலிச
கூட்டமைப்பின் ஒரு பகுதியாக,
மத்திய கிழக்கின்
ஐக்கிய சோசலிச அரசுகளை உருவாக்குதலாக இருக்க வேண்டும்.
இந்த முன்னோக்குதான்
நான்காம் உலகத்தின் அனைத்துலகக் குழு முன்வைப்பதும் ஆகும். |