சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Senate report on Wall Street crash: The criminalization of the American ruling class

வோல்ஸ்ட்ரீட் பொறிவைக் குறித்த செனட் அறிக்கை: அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் கிரிமினல்தனம்

Barry Grey
18 April 2011
Use this version to print | Send feedback

2008இல் ஏற்பட்ட வோல்ஸ்ட்ரீட் பொறிவு குறித்து அமெரிக்க செனட்டின் விசாரணை துணைக்குழு, கடந்த புதனன்று ஒரு பெரிய அறிக்கையை வெளியிட்டது. அது ஒட்டுமொத்த நிதியியல் அமைப்புமுறையிலும், மற்றும் அரசுடனான அதன் தொடர்புகளிலும் ஊடுருவியுள்ள மோசடி மற்றும் குற்றத்தன்மையை ஆவணப்படுத்துகிறது.   

இரண்டு ஆண்டு விசாரணையின் விளைபொருளாக வந்திருக்கும் இந்த 650-பக்க ஆவணத்தில் 150க்கும் மேற்பட்ட விசாரணைகளும், வாக்குமூலங்களும், அத்துடன் பிரதான வங்கிகளின், அரசு நெறிமுறை ஆணையங்களின் மற்றும் கடன் மதிப்பிடும்  நிறுவனங்களின் (credit rating firm) உள்பரிமாற்ற ஆவணங்கள் மற்றும் அபராத மின்னஞ்சல்களின் ஆய்வறிக்கைகளும் உள்ளடங்கி உள்ளன. வோல்ஸ்ட்ரீட்டும், நிதியியல் நெருக்கடியும்: ஒரு நிதியியல் பொறிவின் உள்ளமைப்பு, (Wall Street and the Financial Crisis: Anatomy of a Financial Collapse) என்ற தலைப்பிலிருக்கும் இந்த அறிக்கை, நிதியியல் பொறிவு மற்றும் அதை தொடர்ந்து ஏற்பட்ட பின்னடைவானது, கடன் மதிப்பிடும் பெருநிறுவனங்களின் நயவஞ்சககூட்டுடனும், அரசு மற்றும் அதன் வங்கி நெறிமுறை ஆணையங்களின் உடந்தையுடனும், அடமானக் கடன்வழங்குனர்கள் மற்றும் வங்கிகளால் நடத்தப்பட்ட திட்டமிட்ட மோசடி மற்றும் ஏமாற்றுத்தனத்தின் விளைவாகும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.     

இந்த முக்கிய அறிக்கையின் தகவல்களை உலக சோசலிச வலைத் தளம் வரும் நாட்களில் விரிவாக ஆராயும். எவ்வாறிருப்பினும், அதன் அடிப்படை உந்துதல் தெளிவாக உள்ளது. அதன் தொகுப்புரை குறிப்பிடுவதாவது: இந்த நெருக்கடி ஒரு இயற்கை பேரழிவல்ல, மாறாக பெரும்-ஆபத்து நிறைந்த சிக்கலான நிதியியல் திட்டங்களின்; நலன்களுக்கு இடையில் ஏற்பட்ட வெளிப்படையான முரண்பாடுகளின்; மற்றும் நெறிமுறை ஆணையங்களின், கடன் மதிப்பிடும் முகமைகளின் மற்றும் வோல்ஸ்ட்ரீட்டின் மிதமிஞ்சிய இலாபத்தைச் சந்தையாலேயே கட்டுப்படுத்தி வைக்க முடியாததன் விளைவாகும் என்பதை இந்த விசாரணை கண்டறிந்துள்ளது.     

புதனன்று நிகழ்ந்த ஒரு பத்திரிகையாளர் கூட்டத்திலும், அதன்பின்னர் நடைபெற்ற நேர்காணல்களிலும் துணைக்குழுவின் தலைவர் செனட்டர் கார்ல் லெவின் (மிச்சிகனின் ஜனநாயக கட்சி செனட்டர்) இன்னும் அதிகமாக வெளிப்படையாக இருந்தார். மின்னஞ்சல்கள், சுற்றறிக்கைகள் மற்றும் ஏனைய உள்பரிமாற்ற ஆவணங்களைப் பயன்படுத்தி இருக்கும் இந்த அறிக்கை, முதலீட்டாளர்கள், சிறந்த வியாபாரங்கள் மற்றும் சந்தைகளை ஒழித்து கட்டியிருந்ததோடு மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் அவர்களின் வேலைகளையும், வீடுகளையும் இழக்கச் செய்திருக்கும் ஒரு பொருளாதார தாக்குதலுக்குள் இருக்கும் கதையைக் கூறுகிறது. உயர்-அபாயத்தில் கடன் வழங்கல், நெறிமுறை கையாள்வதில் ஏற்பட்ட தோல்விகள், பணவிரயமாக்கிய கடன் மதிப்பீடு தயாரிப்பு மற்றும் நலன்களுக்கிடையே பெரும் முரண்பாடுகளில் சிக்கியிருக்கும் வோல்ஸ்ட்ரீட் நிறுவனங்கள் என இவையனைத்தும் நாசகரமான அடமானக்கடன்களோடு சேர்ந்து அமெரிக்க நிதியியல் அமைப்புமுறையை கெடுத்துவிட்டது. அத்துடன் அமெரிக்க சந்தைகளின் மீதிருந்த பொதுமக்களின் நம்பிக்கையையும் குழிதோண்டி புதைத்துவிட்டது" என்று அவர் தெரிவித்தார்.    

"நிதியியல் நிறுவனங்கள் அவற்றின் வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களை எவ்வாறு திட்டமிட்ட பயன்படுத்திக் கொண்டன, கடன் மதிப்பிடும் முகமைகள் எவ்வாறு உயர்-அபாய பத்திரங்களுக்கு AAA அங்கீகாரத்தை வழங்கின, நெறிப்படுத்தும் ஆணையங்கள் அவற்றைச் சுற்றி நடந்து கொண்டிருந்த பாதுகாப்பற்ற மற்றும் சீர்கெட்ட அனைத்து நடைமுறைகளிலும் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதற்கு மாறாக எவ்வாறு கையைப் பிசைந்து கொண்டிருந்தன என்பதை அந்த அறிக்கை, துணைக்குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையின் பக்கங்களில் அவர்களின் சொந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியே, வெளிப்படுத்திக் காட்டுகிறது. நலன்களுக்கிடையேயான மோதல்கள் தாம் இந்த மட்டரகமான கதையின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஓடிக்கொண்டிருக்கும் நூலிழையாக உள்ளன.

பேராசை, நலன்களுக்கிடையில் இருக்கும் மோதல்கள் மற்றும் தவறான நடவடிக்கைகள் ஆகியவற்றுடன் கூடிய ஒரு பெரிய நிதியியல் பாம்புப்புற்றை இந்த புலனாய்வு கண்டறிந்துள்ளது" என்று கூறுமளவிற்கு லெவின் சென்றார். அவர் நியூ யோர்க் டைம்ஸிற்கு கூறியது: தங்களின் வாடிக்கையாளர்களை ஏமாற்றிய நிறுவனங்கள், பொதுமக்களையும் ஏமாற்றியுள்ளனர் என்பதற்கு மேலதிக ஆதாரம் உள்ளது. மேலும் அத்தகைய நிறுவனங்கள் தங்களின் நலன்களுக்கு இடையில் முரண்பாடுகளைக் கொண்டிருக்கும் பல்வேறு நெறிமுறை ஆணையங்கள் மற்றும் கடன் மதிப்பை பட்டியலிடும் நிறுவனங்களின் உதவியையும், ஒத்துழைப்பையும் பெற்றிருந்தன என்பதற்கும் ஆதாரம் உள்ளது.        

நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும் இந்த அறிக்கையின் ஒவ்வொரு பகுதியும், மோசடி மற்றும் துஷ்பிரயோக வலையமைப்பில் பங்கெடுத்த அடமானக்கடன் வழங்குனர்கள், நெறிமுறை ஆணையங்கள், கடன் மதிப்பிடும் முகமைகள், மற்றும் வோல்ஸ்ட்ரீட் முதலீட்டு வங்கிகள் என வெவ்வேறு பங்களிப்பாளரைக் கவனத்தில் எடுக்கிறது. முதல் பகுதி, அதன் ஆய்விற்கு வாஷிங்டன் மியூச்சுவலைக் (Washington Mutual - WaMu) கவனத்தில் எடுக்கிறது. அது சூறையாடும் மற்றும் ஏமாற்றும் கடன்வழங்கும் நடைமுறைகளை விவரித்திருப்பதுடன், 2008 செப்டம்பரில் ஜேபி மோர்கன் சேசிஸ் நிறுவனத்துடன் தொடங்கிய வங்கிகளின் பொறிவிற்கும், மற்றும் அதைத்தொடர்ந்து வீட்டு அடமானக்கடன் சந்தையின் வெடிப்பிற்கும் இட்டுச் சென்ற உபாயங்களையும் கணக்கில் எடுத்து குறிப்பிட்டுக் காட்டுகிறது.

இரண்டாவது பகுதியானது, அமெரிக்க வரலாற்றில் ஏற்பட்ட Washington Mutual, IndyMac மற்றும் Countrywide Financial ஆகிய மூன்று நிறுவனங்களின் மிகப்பெரிய நிதியியல் தோல்விகளை மேற்பார்வையிட்ட மோசடிசெலவு கண்காணிப்பிற்கான மத்திய அலுவலகத்தின் (federal Office of Thrift Supervision - OTS) மோசமான பாத்திரத்தை ஆராய்கிறது. ஓர் ஐந்தாண்டு காலத்தில், 2004இல் இருந்து 2008 வரையில், WaMu நிறுவனத்தில் OTS 500க்கும் மேற்பட்ட அதிமுக்கியமாக குறைபாடுகளைக் கண்டறிந்தது. இருந்தபோதினும், வங்கிகள் அவற்றின் கடன்வழங்கும் நடவடிக்கைகளை மேம்படுத்திக் கொள்ள வங்கிகளையும் மற்றும் வங்கிகளின் காப்பு நெறிமுறை ஆணையமான FDICஆல் முட்டுக்கட்டையிடப்பட்ட கண்ணோட்டத்தையும் கூட வலுக்கட்டாயமாக மாற்றும் நடவடிக்கைகளை எடுக்க தவறியது, என்று அவ்வறிக்கை குறிப்பிடுகிறது.           

Mood மற்றும் Standard & Poor இன் கடன் மதிப்பிடும் நிறுவனங்கள் பிணையுறுதியுள்ள பங்குபத்திரங்களுக்கும் (CDO) மற்றும் வீட்டு அடமானக்கடன் ஏனைய நாசகரமான அடமானக்கடன்களின் பின்புலத்தில் பிற சிக்கலான பத்திரங்களுக்கும் கடன் மதிப்பு பட்டியலில் முதலிடத்தை அளிப்பதில் திட்டமிட்டு செயல்பட்ட விதத்தை அவ்வறிக்கையின் மூன்றாவது பகுதி ஆவணப்படுத்துகிறது. இந்த நடவடிக்கைகள், இத்தகைய வெற்று பத்திரங்களை முதல்தர முதலீடுகளாகக் காட்டி வங்கிகள் பில்லியன் கணக்கான டாலர்களை ஈட்ட உதவியது. இதற்கு கைமாறாக, கடன் மதிப்பிடும் நிறுவனங்கள் அவற்றின் சேவைகளுக்காக பெரும் இலாபங்களைச் சுருட்டின.          

அவ்வறிக்கை குறிப்பிடுவதாவது: பட்டியலில் தங்களின் பெயரை முக்கிய இடத்தில் கோரும் மற்றும் இந்த பட்டியலிடல் மூலமாக தங்களின் நிதியியல் திட்டங்களில் இருந்து இலாபங்களைப் பெறும் வோல்ஸ்ட்ரீட் நிறுவனங்கள், கடன் மதிப்பை பட்டியலிடும் முகமைகளுக்கு நிதி  அளிக்கின்றன. தங்களின் இடத்தில் பலவீனமாக இருக்கும் பட்டியலிடும் ஒவ்வொரு முகமையும், தங்களின் வியாபாரத்தில் ஜெயிக்கவும், பெரும் சந்தை பங்களிப்பைப் பெறவும் நிறுவனங்களுக்கு மிகவும் சாதகமான பட்டியலை அளிக்க போட்டிக்குள் தள்ளப்படுகின்றன. இதனால் அடிமட்ட போட்டியே இதன் விளைவாக மாறியது.

பிரதான முதலீட்டு வங்கிகள் முதன்மையாக அமெரிக்க வீட்டுக்கடன் சந்தையின் பணவீக்கத்திலிருந்தும், பின்னர் அதன் வெடிப்பிலிருந்தும் இலாபம் ஈட்டியிருந்த நிலையில், அவற்றின் மோசடி மற்றும் ஏமாற்றுத்தன குற்றங்களை இறுதிப்பகுதி ஆய்வு செய்கிறது. அது கோல்ட்மென் ஷாச்ஸ் மற்றும் Deutsche Bank. இனை அதன் உதாரணங்களுக்கு எடுத்துக்காட்டுகிறது. வீட்டு அடமானக்கடன் பத்திரங்களின் மதிப்பு வீழ்ச்சியடையும் என்று இரகசியமாக பேரம்பேசி கொண்டே, வீட்டுக்கடன் சந்தை பொறியக்கூடுமென்று கூறி, வீட்டு அடமானக்கடன்களின் பின்புலத்தில் இருக்கும் பிணையுறுதியுள்ள பங்குபத்திரங்களை விற்கவும், தள்ளிவிடவும் செய்ய கோல்ட்மென் 2007இல் பெரும் ஏமாற்றுவேலையில் இறங்கியது.

அந்த அறிக்கை Deutsche Bank இன் உலகளாவிய முதன்மை பிணையுறுதியுள்ள பங்குப்பத்திர வர்த்தகர், கிரெக் லிப்னின் மின்னஞ்சல்களை மேற்கோளிட்டுக் காட்டுகிறது. வங்கியைச் சேர்ந்த "போலி கூட்டங்கள்" மற்றும் "பங்குச்சந்தை ஆய்வாளர்கள்" மூலமாக அபாயகரமான அடமானக்கடன் பத்திரங்களை விற்பனை செய்ததாக குறிப்பிட்டிருந்ததுடன், வங்கியின் செயல்பாடுகளை ஒரு "பிணையுறுதியுள்ள பங்குபத்திர இயந்திரமாக குறிப்பிடுகிறது. இதை கிரெக் லிப்மன் "பொன்ஜி திட்டம்" (Ponzi scheme)என்று அழைக்கிறார்

அந்த அறிக்கை, மோசடியை அம்பலப்படுத்துவதில் பெரிய வோல்ஸ்ட்ரீட் வங்கிகளின் முக்கிய பாத்திரத்தைக் குறிப்பிடுகிறது. அது குறிப்பிடுவதாவது: அமெரிக்க நிதியியல் அமைப்பு முழுமையிலும் உயர்-அபாய, கடன்களைத் திருப்பி அளிக்க முடியாத மற்றும் பாரிய அபாயங்களைக் கொண்டிருந்த கடன்வாங்குவோருக்கு தொடர்ந்து நிதிகளைப் பாய்ச்சிய ஒழுங்கமைக்கப்பட்ட நிதியியல் திட்டங்களுக்குப் பின்னால் முதலீட்டு வங்கிகளே உந்துசக்திகளாக இருந்தன. அடமானக்கடன் சார்ந்து வடிவமைக்கப்பட்ட நிதியியல் திட்டங்களைக் கட்டமைத்த, விற்பனை செய்த, வர்த்தகத்தில் ஈடுபடுத்திய மற்றும் அவற்றிலிருந்து இலாபம் ஈட்டிய முதலீட்டு வங்கிகள் தான் நிதியியல் நெருக்கடிக்கு முக்கிய காரணமாகும்.

ஒட்டுமொத்த நிதியியல் அமைப்புமுறையின் ஒட்டுமொத்த குற்றவியல் பகுதியில் ஒன்றாக இருந்ததென்னவென்றால், அனைத்து அரசு மட்டங்களும் அதன் சக-சதியாலோசகர்களாக இருந்தமையாகும். அதனை இன்னும் கூடுதலாக செழிப்பாக்கிக் கொள்ள, இந்த அமைப்புமுறை  திட்டமிட்டு பொருளாதாரத்தைக் கொள்ளையடித்தது. அமெரிக்காவில் மில்லியன் கணக்கான மக்களின் மற்றும் உலகெங்கிலும் பல மில்லியன் கணக்கிற்கும் மேலான மக்களின் ஒரு சமூக அவலம் தான் இதன் விளைவாக உள்ளது. இதற்கும் மேலாக, வங்கியாளர்கள் மற்றும் ஊகவணிகர்கள் முன்பிருந்ததைவிட இன்னும் அதிகமாக செல்வம் ஈட்டியுள்ளதுடன், அதிகாரம் மிக்கவர்களாக மாறியிருப்பது தான் இந்த வரலாற்று குற்றத்தின் விளைவாக உள்ளது.   

ஒரேயொரு பிரதான அமெரிக்க வங்கியின், தனியார் முதலீட்டு நிதி, அடமானக்கடன் நிறுவனத்தின் அல்லது காப்பீட்டு நிறுவனத்தின் ஒரேயொரு மூத்த நிர்வாகி கூட, இதுவரை சிறைச்சாலைக்கு அனுப்பப்படவில்லை. இதுவரையில் ஒருவர் மீது கூட வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

எதிர்காலத்திலும் ஒருவரும் குற்றவாளியாக குறிப்பிடப்படமாட்டார்கள் என்பதற்கு எல்லா அறிகுறிகளும் உள்ளது. ஜனவரியில் அமெரிக்க நிதியியல் நெருக்கடி விசாரணை குழுவால் இதேபோன்ற அதிர்ச்சியூட்டும் அறிக்கை அளிக்கப்பட்ட நிலையில், வெகுஜன ஊடகங்களால் இந்த செனட் அறிக்கை முற்றிலுமாக குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது. சில முக்கிய செய்தித்தாள்களில் மட்டும் இது வெறுமனே கடமைக்காக அவற்றின் உள்பக்கங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஒளிபரப்பு மற்றும் கேபிள் வலையமைப்புகளில் பெரும்பாலும் குறிப்பிடப்படாமல், பின்னர் கைவிடப்பட்டது.   

செனட் அறிக்கை வெளியான ஒருநாளைக்குப் பின்னர், வோல்ஸ்ட்ரீட் குற்றவாளிகள் யாரேனும் மீது வழக்கு தொடுக்க தவறியமைக் குறித்து, நியூ யோர்க் டைம்ஸ் ஒரு நீண்ட கட்டுரை வெளியிட்டது. அது நியூயோர்க் மத்திய வங்கி கூட்டமைப்பின் அப்போதைய தலைவர் திமோதி கெய்த்னருக்கும் (இப்போது இவர் ஒபாமாவின் கணக்குத்துறை கருவூல செயலாளராக உள்ளார்), நியூ யோர்க்கின் தலைமை நீதிபதி ஆண்ட்ரூ கோர்னோவிற்கும் இடையில் அக்டோபர் 2008இல் ஓர் இரகசிய பேச்சுவார்த்தை நடந்ததை விவரித்தது. அதில் கெய்த்னர், வங்கிகள் மற்றும் கடன் மதிப்பு பட்டியலிடும் நிறுவனங்களின் முதலீடுகளைக் காப்பாற்ற கோர்னோவை வலியுறுத்தினார்.   

1980களின் பிற்பகுதியில் ஏற்பட்ட சேமிப்பு மற்றும் கடன் நெருக்கடிக்குப் பின்னர், அரசு விசாரணைக்குழு 1,100 வழக்குகள் தொடரப்பட்டது, மற்றும் 800க்கும் மேற்பட்ட வங்கி நிர்வாகிகள் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டது குறித்து குறிப்பிட்டது. ஆனால் இன்றைய வங்கிகளுக்கு எதிரான எவ்வித கிரிமினல் குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்படவில்லை என்பதில் அந்த கட்டுரை முரண்பட்டிருந்தது. மத்திய புலனாய்வு கழகத்திற்கு வங்கி நெறிமுறையாளர்களின் மேற்கோள்களின்படி, 1995இல் 1,837ஆக இருந்த வழக்குகள் 2006இல் 75ஆக பெருமளவிற்கு குறைந்திருப்பதாக குறிப்பிட்டது. அதற்கடுத்த நான்கு ஆண்டுகளில், நிதியியல் நெருக்கடி உச்சக்கட்டத்தில் இருந்தபோதும் கூட, ஆண்டுக்கு சராசரியாக வெறும் 72 கிரிமினல் வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தன.  

2000த்தில் இருந்து நீதித்துறையில் செல்வ விசாரணை அலுவலகம் (Office of Thrift Supervision) ஒரேயொரு வழக்கைக் கூட பதிவு செய்யவில்லை. மேலும் கருவூலத்துறையின் ஒரு பிரிவான செலாவணி கட்டுப்பாட்டு அலுவலகம், கடந்த தசாப்தத்தில் வெறும் மூன்றை மட்டுமே பதிவு செய்துள்ளது

இதை எவ்வாறு விளக்குவது? கோல்ட்மென் தலைமை செயல் நிர்வாகி லோயர்டு பிளான்க்பென், ஜேபி மோர்கன் தலைமை செயல் நிர்வாகி ஜேமி டைமன், வாஷிங்டன் மியூச்சுவலின் முன்னாள் தலைமை நிர்வாகி கெர்ரி கில்லிங்கர், அத்துடன் கருவூலத்துறை செயலாளர் கெய்த்னர் மற்றும் அவருக்கு முன்பிருந்த ஹென்ரி பால்சன் (முன்னர் கோல்ட்மெனின் தலைமை நிர்வாக செயலாளராக இருந்தவர்) என இவர்கள் அனைவரும் ஏன் சிறைச்சாலையில் இல்லை?

ட்ரில்லியன் கணக்கான பொதுப்பணத்தை வங்கிகளுக்குப் பரிமாற்றியதன் விளைவாக ஏற்பட்ட கடன்களுக்கு விலையாக, தொழிலாளர்களின் வேலைகள், கூலிகள், வீடுகள் மற்றும் அடிப்படை சமூக சேவைகள் வெட்டப்பட்டு வரும் நிலையில், இதுபோன்ற நிதியியல் ஊகவணிகர்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறார்கள். இந்த தாக்குதலுக்குக் காட்டப்படும் ஒருங்கிணைந்த எதிர்ப்பானது, வேலைநிறுத்த-தடுப்பு சட்டங்களின் வடிவத்திலும், திரும்பி போராடும் தொழிலாளர்களுக்கு அபராதங்கள் மற்றும் சிறைவாசம் அளிப்பதன் மூலமாகவும் குற்றமாக்கப்பட்டுள்ளது.   

இதில் சம்பந்தப்பட்டிருக்கும் தனிநபர்கள் அதிகாரங்களில் இருப்பதும் வழக்குகள் தொடுக்கப்படாமல் இருப்பதற்கான காரணங்களில் ஒன்றாக உள்ளது. இவர்கள் அனைவரும் அரசியல்வாதிகள், ஊடகங்கள் மற்றும் சட்ட அமைப்புமுறைகளில் பெரும் செல்வாக்கைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது தனிநபர்களின் அந்தஸ்தையும் கடந்த ஆழமாக செல்கிறது. கீழ்தரமான வெளிவிவகாரத்துறையைப் போலவே இந்த ஒட்டுமொத்தமும் தனிநபர்களின் பேராசையிலிருந்து எழுவதில்லை. மாறாக இது ஒட்டுமொத்த அமைப்புமுறையின் ஓர் ஆழமான நெருக்கடியிலிருந்து எழுகிறது

அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் கிரிமினல்தன்மை மூன்றிற்கும் மேற்பட்ட தசாப்தங்களின் விளைவாகும். இக்காலக்கட்டத்தில் தான் பெருநிறுவன-நிதியியல் மேற்தட்டால் திரட்டப்பட்ட செல்வவளங்கள் உண்மையான உற்பத்தியிலிருந்து பிரிக்கப்பட்டன. அதன் இலாப நோக்கத்திற்காக, ஆளும் வர்க்கம் தொழில்துறையின் பாரிய பிரிவுகளைத் தனித்தனியாக்கியதுடன், இன்னும் தீர்க்கமாக நிதியியல் மோசடி மற்றும் ஊகவணிகத்திற்கும் அது திரும்பியது.

முதலாளித்துவ வர்க்கத்தின் இந்த ஒட்டுண்ணித்தனமான பிரிவுகளின் அதிகரிப்பானது, தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத்தரங்களில் ஏற்பட்ட கூர்மையான வீழ்ச்சியோடு இணைந்திருந்தது. செல்வச்செழிப்பான மற்றும் மிகவும் அதிகாரம் படைத்த அடுக்குகள், சமூகத்தை சூறையாடியதன் மூலமாக செல்வவளத்தின் பெரும் அளவுகளைக் கைப்பற்றியுள்ளது

அமெரிக்க மக்களை ஏமாற்றிய எந்த முக்கிய பிரமுகர்கள் மீதும் வழக்கு தொடுப்பதென்பது, ஒட்டுமொத்த அமைப்புமுறையின் குற்றத்தன்மையை உடனடியாக அம்பலப்படுத்துவதாகும் என்பதை ஆளும் வர்க்கம் அதுவே உணர்ந்துள்ளது. அது முதலாளித்துவ அமைப்புமுறையின் மீதே வழக்கு போடுவதாக இருக்கும்.