சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : லிபியா

Libyan war accelerates Chinese debate over “non-intervention”

லிபியப் போரில் தலையீடின்மை என்னும் சீனாவின் விவாதம் விரைவாகிறது

By John Chan 
19 April 2011
Use this version to print | Send feedback

நேட்டோ தலைமையிலான லிபியா மீதான போர், சீன ஆளும் உயரடுக்கில் மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில்தலையீடின்மைஎன்னும் அதன் உத்தியோகபூர்வ வெளியுறவுக் கொள்கையில் ஒரு விவாதத்தை தூண்டியுள்ளது. இக்கொள்கை எப்பொழுதுமே உண்மை என்பதைவிட ஒரு கற்பனை என இருந்ததோடு, சீனா அதை அடக்குமுறை ஆட்சிகளுடன் பேரம் பேசுவதற்கு வசதியாகவும், வசதிப்பட்டால் அமெரிக்கா, அதன் கூட்டு நாடுகளின் இராணுவத் தலையீடுகள் குறித்து குறைகூறுவதற்கும் பயன்படுத்தியுள்ளது.

ஆனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பியச் சக்திகள் அவர்களுடைய பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை பெருக்குவதற்கு பெருகிய முறையில் அப்பட்டமாக இராணுவ ஆக்கிரமிப்பை பயன்படுத்துவது பெய்ஜிங்கை மறு சிந்தனை செய்ய வைத்துள்ளது. லிபியா மீது அமெரிக்க, ஐரோப்பிய குண்டுத் தாக்குதல் பல பில்லியன் டாலர்கள் மதிப்புடைய சீன முதலீடுகளை ஆபத்திற்கு உட்படுத்தியுள்ளன, மேலும் லிபியாவில் வேலை பார்க்கும் 35,680 சீனர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தன்னுடைய குடிமக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு சீனா மத்தியதரைக்கடலில் தொலைதூர நடவடிக்கை ஒன்றை எடுத்தது. இதில் அதன் கடற்படை, இராணுவப் போக்குவரத்து விமானங்கள் மற்றும் சாதாரணக் கப்பல்கள் ஆகியவை ஈடுபட்டன. ஆயினும்கூட லிபியாவில் வணிகம் நடத்தும் 75 சீன நிறுவனங்கள், மதிப்புடைய கருவிகள் பலவற்றைக் கணிசமாக விட்டுச் செல்லும் கட்டாயத்திற்கு உட்பட்டன. மேலும் லிபியாவின் எரிசக்தி விநியோகங்களில் கணிசமானவற்றைப் பெற வேண்டும் என்னும் சீனாவின் விழைவுகளும் அவர்களுடைய தேவைக்கு வளைந்து கொடுக்கும் ஒரு ஆட்சியை இருத்துவதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகள் மேற்கோண்டிருக்கும் முயற்சிகளால் இப்பொழுது ஆபத்திற்கு உட்பட்டுள்ளன.

ரஷ்யா, பிரேசில், இந்தியா, ஜேர்மனி ஆகியவற்றுடன் சீனாவும் ஐ.நா. பாதுகாப்பு சபைத் தீர்மானத்திற்கு, லிபியா மீதுபறக்கக் கூடாத பகுதி சுமத்த இசைவு கொடுத்ததற்கு, வாக்களிப்பில் பங்கு பெறவில்லை. ஆயினும்கூட ஐ.நா.வில் தன் தடுப்பு அதிகாரத்தைப் பயன்படுத்த சீனா தயாராக இல்லை. ஏனெனில் அது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் குறிப்பிடத்தக்க வகையில் உறவுகள் சீர்குலைவதற்கு வழிவகுத்திருக்கும். அதே நேரத்தில் சீனா லிபிய ஆட்சியின் மீது தாக்குதல் நடத்துவதின் மூலம் அதனுடைய நலன்களைப் பெருக்கும் நிலையிலும் இல்லை. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போல் இல்லாமல், சீனாவின் கடற்படை இப்பொழுதுதான் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது, இன்னும் விமானத் தளதாங்கிக் கப்பல்களின் திறன் வரவில்லை.

சீன இராணுவத்தின் சில பிரிவுகள் சீனா உலகில் ஒவ்வொரு மூலையிலும் உள்ள தன்னுடைய பெருகிவரும் பொருளாதார, மூலோபாய நலன்களைப் பாதுகாக்க போதுமான இராணுவத் திறனைக் கொள்ள வேண்டும் என்று வாதிடுகின்றன. China Military  என்னும் மக்கள் விடுதலை இராணுவத்தின் (PLA) செய்தித்தாள் ஏப்ரல் 4ம் தேதி சீன நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீடுகள் ஆண்டிற்கு 54 சதவிகிதம் என்னும் விகிதத்தில் பெருகுவதாகத் தெரிவித்துள்ளது. “2010ல் நம் வெளிநாட்டு முதலீடு மற்றும் கூட்டு நிறுவனங்கள் கிட்டத்தட்ட 16,000 ஆக, 1.4 மில்லியன் ஊழியர்களுடன் இருந்தன. வெளிநாட்டிலுள்ள மொத்தச் சொத்துக்களின் மதிப்பு கிட்டத்தட்ட 1.2 டிரில்லியன் அமெரிக்க டொலர் என இருந்தது….. இவற்றை திறமையுடன் எப்படிப் பாதுகாப்பது, பெருகும் வெளிநாட்டு நலன்களைக் காப்பது என்பது நம் முன் உள்ள புதிய கற்க வேண்டிய பொருள் ஆகும்.’

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) “தலையீடு இன்மை என்னும் கொள்கை ஆரம்பத்தில் மேற்கத்தைய ஆக்கிரமிப்பு பற்றி பெய்ஜிங்கின் அச்சங்களை வெளிப்படுத்தியது, ஆனால் எப்பொழுதும் அது தன் நலன்களையும் தான் நம்பியிருந்தது. ஒரு தொழிலாளர் எழுச்சியை அடக்குவதற்கு 1958ல் ஹங்கேரியின் மீது சோவியத் இராணுவத்தின் படையெடுப்பை மாவோ சேதுங் வலுவாக ஆதரித்தார். 1960 களின் தொடக்கத்தில் சோவியத்-சீனா பிளவிற்குப் பின், பெய்ஜிங் 1968ல் சோவியத் செக்கோஸ்லோவாக்கியா மீது நடத்திய படையெடுப்பைசோவியத் சமூக ஏகாதிபத்தியம்என்று கண்டித்தது.

1971ல் சீன உயரடுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் சமரசம் கண்டு, நடைமுறையில் சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான கூட்டை அமைத்தது. வலதுசாரி அமெரிக்க ஆதரவுடைய ஆட்சிகளான தளபதி அகஸ்டோ பினோஷேயின் சிலிய இராணுவ சர்வாதிகாரத்துடன் பெய்ஜிங் உறவுகளைத் தக்க வைத்துக் கொண்டது. 1979ல் வியட்நாம் மீது பேரழிவு தரக்கூடிய படையெடுப்பை சீனா நடத்தியது. இது வியட்நாமிலிருந்து இராணுவத்தை பின் வாங்கியபின் அப்பகுதியை மீண்டும் உறுதிப்படுத்தும் வாஷிங்டனின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.

டெங் ஜியாவோபிங்கின் கீழ் சீனாவின் வெளியுறவுக் கொள்கை ஒரு குறைந்ததன்மையுடைய நிலைப்பாட்டிற்குமாறியது. 1978ல் அறிவிக்கப்பட்ட டெங்கின் தொலை விளைவுகள் உடைய சந்தைச் சார்புடைய சீர்திருத்தங்கள் சீனாவை ஒரு மாபெரும் குறைவூதியத் தொழிலாளர் அரங்காக அமெரிக்க ஆதிக்கத்திற்குட்பட்ட முதலாளித்துவ ஒழுங்கின் கீழ் கொண்டுவரும் நோக்கத்தை கொண்டிருந்தன. அதில் ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய சக்திகளுடன் அழுத்தங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்ற குறிப்பு உள்ளது.

ஆனால் சீனாவின் வெடிப்புத் தன்மை நிறைந்த பொருளாதார வளர்ச்சி இந்த வெளியுறவுக் கொள்கை சார்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு சீனா உலகின் மிகப் பெரிய உற்பத்தி நாடு என்னும் இடத்திலிருந்து அமெரிக்காவை அகற்றியது. அமெரிக்கா ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக அந்நிலையில் இருந்து வந்தது. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் என்று இருந்த ஜப்பானையும் கடந்து விட்டது. 2006 ல் இருந்து 2010 வரை சீனாவின் மொத்த கடன் பத்திரமல்லாத வெளிநாட்டு நேரடி முதலீடு 210 பில்லியன் டொலர் ஆக, முக்கியமாக எரிசக்தி, உள்கட்டுமானம் மற்றும் உலோகங்களில் இருந்தது. இதற்கான உந்துதல் அதன் மூலப்பொருட்களுக்கான தேவையாகும். 2009-10ல் சீனா வளர்ச்சி அடையும் நாடுகளுக்கு உலக வங்கியை விட ($105 பில்லியன்) கூடுதலாக கடன்களை ($110 பில்லியன்) கொடுத்தது.

தலையிடாக் கொள்கை என்பது சீன முதலாளித்துவத்திற்கு வசதியான வெளிநாட்டுக் கொள்கையாயிற்று. ஏனெனில் பெய்ஜிங் கடன்கள், கடனை ஒட்டிய வசதிகள் மற்றும் திட்டங்களை ஆசியாவிலும் ஆபிரிக்காவிலுமுள்ள பல சர்வாதிகார ஆட்சிகளுக்கு கொடுத்து அதற்கு ஈடாக மூலோபாய இடங்களில் ஆதாரங்களைப் பெற்றது. இக்கொள்கை பெய்ஜிங்கிற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகள் அவர்களுடைய நலன்களுக்கு இப்பிராந்தியங்களில் பயன்படுத்திச் சுரண்டியமனித உரிமைகள்பிரச்சாரத்தைப் பின்பற்ற ஒரு போலிக்காரணத்தை அளித்தது.

ஆனால் லிபியா ஒருவகையில் ஒரு திருப்புமுனையாகிவிட்டது. நேட்டோ குண்டுத் தாக்குதல் நடவடிக்கை சீனப் பொருளாதார நிலைமையை அந்நாட்டில் பெரிதும் குறைமதிப்பிற்கு உட்படுத்தி, சீன நலன்கள் எப்படி உத்தரவாதம் பெற வேண்டும் என்ற வினாவை பெய்ஜிங்கில் எழுப்பியுள்ளது. சீனாவின் உயர் சிந்தனை கல்விக்கூட ஸ்தாபனமானது அரசாங்கம் டெங்கின்கீழ் நிலைஎன்ற கொள்கையைக் கைவிடுமாறு கோருகிறது.

நியூ யோர்க் டைம்ஸில் மார்ச் 31ல் எழுதிய சிங்குஹா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் யான் ஜுவிடோங்நாட்டிற்கு இன்னும் தைரியமான, உறுதியான நிலைப்பாடு சர்வதேச விவகாரங்களில் சீனாவின் புதிய அந்தஸ்தை ஒரு உலகப் பெரும் சக்தி என்பதைக் காட்டும் வகையில் கொண்டிருக்க வேண்டும்என்று நம்புவர்களைத் தான் பிரதிபலிப்பதாகக் கூறினார். “ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, தலையிடாக் கொள்கையின் கோட்பாட்டை எந்த சீன அறிஞரும் சவாலுக்கு விட்டதில்லை, மற்ற நாடுகளின் இறைமையை மீறும் கருத்தை ஏற்றதில்லை. சமீபத்தில் இப்பிரச்சினை பற்றிக் கூடுதலான விவாதங்கள் உள்ளன….அதிகமாக வெளிக்காட்டிக் கொள்ள வேண்டாம் என்று நினைக்கும், சீனர்கள் கூட லிபியாவிற்கு இராணுவப்படைகள் அனுப்பப்படுவதை எதிர்க்கவில்லை.”

லிபியப் போருக்கு நீண்ட நாட்களுக்கு முன்னரே சீன ஆளும் வட்டங்களில் இந்த விவாதம் தொடங்கிவிட்டது. அமெரிக்க கடற்படை கோட்பாட்டாளர் ஆல்பிரட் தேயர் மஹன் உடைய கொள்கைகள், முன்பு CCP யினால்ஏகாதிபத்தியம்என்று கண்டிக்கப்பட்டவை, இப்பொழுது பரந்த அளவில் விவாதிக்கப்படுகின்றன. சமீபத்திய ஆண்டுகளில் மஹனின்கடல் சக்திகோட்பாடு, ஒரு வணிக நாட்டிற்கு அதன் கப்பல் பாதைகளைக் காக்க வலுவான கடற்படை தேவை என்பது அநேகமாக உத்தியோகபூர்வ அரசாங்கக் கொள்கையாகிவிட்டது. ஒரு முக்கியநவ மஹானியன்ஜாங் வென்மு 2009ல் அவர் எழுதிய China Sea Power என்பதில் லிபியாவிற்கு ஒப்பான ஒரு காட்சியைக் கொடுத்துள்ளார். இதில் அமெரிக்க இராணுவ அல்லது அரசியல் தலையீடு சீனாவின் பொருளாதார நலன்களைக் குறைமதிப்புக்கு உட்படுத்தக்கூடும் என்று வருகிறது.

சீன இராணுவம் மார்ச் மாதம் வெளியிட்ட உத்தியோகபூர்வ வெள்ளை அறிக்கை நாட்டின் அதிக இராணுவச் செலவுகளை நியாயப்படுத்தி, எதிர் சக்திகளை சமாளிக்கும் தேவையை சுட்டிக் காட்டியுள்ளது. ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில், அதுசீனாவைப் பற்றிய சந்தேகம், தலையீடு, சீனாவிற்கு எதிரான மாற்று நடவடிக்கைகள் வெளியில் இருந்து அதிகமாகிக் கொண்டிருக்கின்றனஎன்று அது குறிப்பிட்டுள்ளது. இதன் விளைவாக, “ஆசிய பசிபிக் பாதுகாப்பு கூடுதலான வகையில் சிக்கல் வாய்ந்ததாகவும், கொந்தளிப்பையும் கொண்டுவிட்டது. சர்வதேச இராணுவப் போட்டி இன்னும் கடுமையாகி விட்டதுஎன்று அறிக்கை கூறியுள்ளது.

ஒரு தலையிடும் வெளியுறவுக் கொள்கைக்கான உந்துதல், CCP இன் புதிய முதலாளித்துவ வர்க்கம், மத்தியதர வர்க்கத்தின் தளத்தில் இருந்தும் வந்துள்ளது. பெயரளவிற்குக் கூடசோசலிசம்பற்றிக் குறிப்பிடுவதை CCP அதிகம் நிறுத்திவிட்டதால், அது பெருகிய முறையில் பிற்போக்குத்தன தேசியவாதத்தை கொண்டு அரசியல் தளத்தில் அதைப் பயன்படுத்தி வசதியான தட்டுக்களை ஈர்த்து இணைக்க முற்பட்டுள்ளது. அவர்கள் அவர்களுடைய வருங்காலம் சீன முதலாளித்துவத்தின் சர்வதேச ஏற்றத்துடன் பிணைந்துள்ளது என்று காண்கின்றனர்.

சீன ஆட்சி, துனிசிய, எகிப்து தொழிலாளர்களின் போராட்டம் பற்றிய விவாதங்களை தணிக்கை செய்திருக்கையில், இணைய தள பொலிசார் லிபியாவிற்குச் சீனத் துருப்புக்கள் அனுப்பப்பட்டு சீன முதலீடு காப்பாற்றப்பட வேண்டும் என்று கூறும் கருத்துக்களை ஒன்றும் செய்யவில்லை. மற்ற வலைத்தள எழுத்தாளர்களும் வெளிப்படையாக சீனா மேற்கத்தைய கூட்டணியுடன் சேர்ந்துகொள்ளை அடித்தலில் ஒரு பங்கைப் பெற வேண்டும்அதாவது லிபிய எண்ணெயில் என்று கூறியுள்ளனர்.

ஹாங்காங்கின் South China Morning Post  தன்னுடைய ஏப்ரல் 7ம் தேதிப் பதிப்பில் சீனாவின் தற்போதைய மத்தியதர வர்க்கத்திடையே வளர்ந்துள்ளஆபத்தானஇராணுவவாதம் பற்றிக் குறிப்பிடுகிறது. ஒருஉயர் மட்டசெயற்பாட்டாளரும் வணிக நிறுவன உரிமையாளருமான Xia Peng, செய்தித்தாளிடம் கூறினார்: “நான் அவர்களிடம் [பரிவுணர்வு காட்டுபவர்களிடம்] உங்களின் வலுவான இராணுவத் திறன்கள் இருந்தால் உலகில் சக்திவாய்ந்த அரசியல் மற்றும் பொருளாதாரச் செல்வாக்கை அடைவீர்கள்…. கிட்டத்தட்ட அனைத்து இளம் சீன இராணுவ ஆர்வலர்களும் தேசபக்தி மிகுந்தவர்கள், நம் அரசாங்கம் உண்மையில் உணர்ச்சிபூர்வ கணங்களுக்கு அவற்றைத் திரட்டும் பெரும் சக்தி உடையது.” என்று.

சமீபத்திய வாரங்களில் இணைய தள பொலிஸ், சீனா ஆயுதப் போட்டியை வளர்க்க வேண்டும் என்பதால், விமானத்தளமுடைய கப்பல்கள் கட்டுவதை எதிர்த்த ஒரு பொருளாதார வல்லுனருக்கு எதிரானதேச பக்தர்களின்பிரச்சாரத்தைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை. பல வலைத் தள எழுத்தாளர்கள் அவரைசீனச் சார்புடையவர்அல்லர் என்றும் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய துரோகி என்றும் கண்டித்தனர். இந்தச் செயற்பாட்டாளர்கள் ஒரு சிறிய சமூக அடுக்கைப் பிரதிபலித்தாலும், CCP அவர்களுக்கு ஊக்கம் கொடுக்கிறது. இதற்குக் காரணம் அழுத்தம் கொடுக்கும் சமூகப் பிரச்சினைகளிலிருந்து கவனம் திசைதிருப்பப்பட முடியும் மற்றும் அதன் பெருகும் இராணுவச் செலவினங்கள் நியாயப்படுத்தப்படலாம் என்பதேயாகும்.

சீன ஆளும் உயரடுக்கினர் இடையே இன்னும் கூடுதலான தலையீடு தேவை என்னும் வெளியுறவுக் கொள்கைக்கான உந்துதல் பெரும் சக்திகளுக்கிடையே மூலப்பொருட்கள், சந்தைகள் மற்றும் செல்வாக்கு மண்டலங்களுக்கான போட்டி நடக்கும் பொருளாதார நெருக்கடியில்  தீவிரமாகுவதற்கு மற்றொரு அடையாளம் ஆகும். இலாப முறையைத் தொழிலாள வர்க்கம் அகற்றினால் ஒழிய, இந்த பதட்டங்கள் தொடர்ந்து இறுதியில் நேரடி இராணுவ மோதலுக்கு வழிவகுக்கும் என்பது தவிர்க்க முடியாதது ஆகும்.