WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
France blocks train carrying Tunisian refugees from Italy
இத்தாலியிலிருந்து துனிசிய அகதிகளை ஏற்றி வரும் இரயிலை பிரான்ஸ் தடைப்படுத்துகிறது
By
Antoine Lerougetel
20 April 2011
கடந்த
ஞாயிறன்று,
பிரெஞ்சு எல்லைப்
பொலிசார் பிரான்ஸுக்கும் இத்தாலிக்கும் இடையேயுள்ள இரயில் போக்குவரத்தை,
பிரெஞ்சுப்
பகுதியில் 10
கி.மீ.
தூரத்திலுள்ள
மென்டோன் இரயில் நிலையத்தை இத்தாலியப் புறத்திலுள்ள வன்டிமிக்லியாவுடன் இணைப்பதை,
பிரான்ஸிற்குள்
துனிசிய அகதிகள் நுழைவதை தடுப்பதற்காகத் தடைசெய்துவிட்டனர்.
துனிசிய
மக்கள் அந்நாட்டில் ஏற்பட்டுள்ள சமூகக் கொந்தளிப்பிலிருந்து தப்பியோடுவதை இகழ்வுடன்
காண்பதை நிரூபிக்கும் பிரெஞ்சு அரசாங்கத்தின் நிலையைத் தவிர,
இந்த நடவடிக்கை
ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் தடையற்றுச் செல்லுதல் என்னும்
Schengen
உடன்பாட்டையும் வினாவிற்கு உட்படுத்துகிறது.
இது
இத்தாலியிடமிருந்து கடுமையான சாடல்களை தூண்டியுள்ளது.
இந்த நடவடிக்கை
“எல்லைகள் இல்லாத
ஐரோப்பா என்னும் கருத்திற்குத் தற்காலிக முடிவைக் கொடுத்துள்ளது”
என்று
Der Spigel
கருத்துக்
கூறியுள்ளது.
அநேகமாக
துனிசியாவிலிருந்து அனைவரும் என்ற நிலையில் கிட்டத்தட்ட
26,000
குடிபெயர்ந்தவர்கள்,
அதிகாரத்தில் இருந்த
சர்வாதிகாரி ஜைன் எல்-அபிடைன்
பென் அலியை அகற்றிய வெகுஜன கொந்தளிப்புக்களுக்கு இடையே தப்பியவர்கள்,
இத்தாலியில்
நுழைந்து அதையொட்டி ஐரோப்பிய ஒன்றியத்தில் பெப்ருவரி மாதம் முதல் வந்துள்ளனர்.
பென் அலியின்
வீழ்ச்சிக்குப் பின்னர்,
ஐரோப்பாவிற்கு
குடியேறுவதைத் தடுக்கும் துனிசிய உடன்பாட்டை செயல்படுத்துவது தற்காலிகமாக நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளது.
மற்றய
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இந்தக் குடியேறுபவர்களில் ஒரு பகுதியினரை ஏற்க மறுக்கும்
நிலையை எதிர்கொண்டுள்ள இத்தாலிய பிரதம மந்திரி சில்வியோ பெர்லுஸ்கோனி கிட்டத்தட்ட
22,000 துனிசியக்
குடிபெயர்ந்தவர்களுக்கு ஆறு மாதத் தற்காலிக வசிக்கும் உரிமங்களைக் கொடுத்துள்ளார்.
இவை அவர்கள்
Schnegen பகுதியில்,
அதாவது அயர்லாந்து,
பிரிட்டன் தவிர
அனைத்து ஐரோப்பாவிலும் எங்கும் செல்லும் உரிமையை அளிக்கிறது.
ஒரு
முன்னாள் பிரெஞ்சுக் காலனியும் கிட்டத்தட்ட துனிசியாவிலிருந்து குடிபெயர்ந்துள்ள
ஒரு மில்லியன் மக்களுக்கும் மேலானவர்களுக்குத் தாயகமாக பிரான்ஸ் இருப்பதால்,
துனிசியக்
குடிபெயர்பவர்களுக்கு அது விரும்பத்தக்க இடமாக உள்ளது.
அவர்கள் பிரெஞ்சு
மொழி பேசுபவர்கள்.
பலருடைய
குடும்பங்கள்,
நண்பர்கள் மற்றும்
சமூகம் அங்கு உள்ளது.
பிரான்ஸ்
இத்தாலியுடன் அதன் எல்லையை துனிசியர்களுக்கு எதிராக மூடிவைக்கும் முயற்சிகள் மார்ச்
மாதத்திலிருந்து நடைபெறுகின்றன.
See: “France
re-establishes border controls with Italy amid dispute over African migrants.”
ஞாயிறன்று
துனிசிய அகதிகள் குழு ஒன்று வன்டிமிக்லியா இரயில் நிலையத்திற்கு பிரான்ஸுக்குச்
செல்லும்
1.17 பிற்பகல்
இரயிலைப் பிடிக்கச் சென்றது.
200 இத்தாலிய
மற்றும் பிரெஞ்சு மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களின் ஆதரவுடனும்,
இத்தாலிய வசிக்கும்
உரிமங்களுடனும் இவர்கள் புறப்பட்டிருந்தனர்.
ஆனால்
நண்பகலிலிருந்து
Alpes-Maritimes
பொலிஸ் ஆணையத்தின் உத்தரவின்பேரில் இரயில் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டதாக
அவர்களுக்கு கூறப்பட்டது.
அவர்கள் இரயில்
தடத்திலேயே அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
“சர்வதேச
போக்குவரத்தைத் தடைசெய்துள்ளது”
பற்றி இத்தாலி
பாரிஸுக்கு ஒரு முறையான எதிர்ப்பைப் பதிவு செய்தது.
Le Nouvel Observateur,
செயற்பாட்டாளர்கள் மற்றும்
அகதிகள் மீது இதற்கான குற்றத்தை பாரிஸ் சுமத்தியுள்ளது என்று எழுதியுள்ளது.
“வன்டிமிக்லியா
மற்றும் மென்டோனுக்கும் இடையே போக்குவரத்து பிற்பகல் பாதிக்கு மேல் வழமைக்கு
திரும்பியது.
பிரெஞ்சு உள்துறை
மந்திரி கூற்றுப்படி,
இது
Alpes-Maritime [பிரெஞ்சுப்
பிராந்திய நிர்வாகம்]
பொலிஸ்
உத்திரவின்பேரில் நிறுத்தி வைக்கப்பட்டது.”
இத்தாலிய
வெளியுறவு மந்திரி பிரான்கோ பிரட்டினி செயற்பாட்டாளர்கள் பற்றிய கவலைகளைத் தான்
உணர்ந்துள்ளபோதிலும்,
வசிக்கும் உரிமங்கள்
“முறையானவை,
பிரான்சினால்
அங்கீகரிக்கப்பட்டவை”
என்றார்.
“ஐரோப்பா இப்படி
நாடுகளுக்கு இடையே சுவர்களை எழுப்பினால் முன்னேறாது”
என்றும் அவர்
சேர்த்துக் கொண்டார்.
இத்தாலியச்
செய்தி ஊடகம் இது இத்தாலிக்கு
“முகத்தில் அறைந்தது”
போல் ஆகும் என்று கூறியது.
வலதுசாரி பிரிவினைவாதிகளான
Northern League
பிரெஞ்சுப் பொருட்கள் புறக்கணிக்கப்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தது.
Alpes
Maritime
மாவட்ட சபையின் ஆளும்
UMP உடைய தலைவர்
Eric Ciotti
கூறினார்:
“Schengen பகுதி
திருட்டுத்தனமாக வரும் குடியேறுபவர்கள் தடையின்றிச் செல்வதை அடக்கியிருக்கவில்லை.
எனவே முறையான
பாஸ்போர்ட்டுக்கள் மற்றும் முறையான வசிக்கும் ஆவணங்கள் உடன் ஐரோப்பிய ஒன்றிய
எல்லைக்குள் செல்ல முடியவில்லை எனக்கூறுவது பொருத்தம் இல்லை.”
ஏப்ரல்
18ம் திகதி
Le Monde,
பூசலை
அமைதிப்படுத்தும் முயற்சியில்
(பிரெஞ்சு
ஜனாதிபதியின் ஆலோசகர்]
Claude Gueant “தற்காலிக
வசிக்கும் உரிமையை இத்தாலி கொடுத்துள்ள முடிவு பல ஐரோப்பிய நாடுகளால்
எதிர்க்கப்படுகின்றன என்று வலியுறுத்தினார்….
ஆனால் நாம் அந்த
நடவடிக்கையை ஏற்றுள்ளோம்.
ஆனால் மறுபுறத்தில்
சில நிபந்தனைகள் உண்டு”
என்று
வலியுறுத்தினார்.
குடியேறுபவர்கள்
தங்களிடம் போதுமான நிதி வசதிகள் உள்ளன என்று நிரூபிக்க வேண்டும்,
இல்லாவிடின் நாம்
இவர்களை மீண்டும் இத்தாலியில் கொண்டுபோய்விடுவோம்.
அதுதான் அவர்கள்
முதலில் இறங்கிய நாடு”
என்று
தெரிவித்துள்ளது.
ஏப்ரல்
7 அன்று
Gueant ஒரு
சுற்றறிக்கையை வெளியிட்டார்.
அதில் பிரெஞ்சு
எல்லைக்குள் வர விரும்பும் எந்தக் குடியேறுபவரும்
“பிரான்ஸ்
அங்கீகரித்துள்ள முறையான பயண ஆவணத்தைக் கொண்டிருக்க வேண்டும்”,
“போதுமான
இருப்புக்கள் வைத்திருக்கும் சான்றுகளைக் காட்ட வேண்டும்—அதாவது
நாள் ஒன்றிற்கு
31 யூரோ
இருக்குமிடத்திற்கும்
62 யூரோக்கள் மற்ற
செலவுகளுக்கும் வைத்திருக்க வேண்டும்.”
குடியேறுபவர்கள்
“பொது ஒழுங்கிற்கு
அச்சுறுத்தலாக அமையக் கூடாது.
மூன்று மாதங்களுக்கு
முன் பிரெஞ்சுப் பகுதியில் நுழையாதவர்களாக இருக்க வேண்டும்”
இந்நிபந்தனையை
பெரும்பாலனவர்கள் நிறைவேற்ற முடியாது.
பிரான்ஸ்
Schengen
உடன்பாட்டை மீறுகிறது என்று
இத்தாலி குற்றம் சாட்டியுள்ளது.
இத்தாலிய உள்துறை
மந்திரி Roberto
Maroni, “நாம்
வழங்கும் வசிக்கும் உரிமங்கள் பெற்ற துனிசியர்கள் பயணிக்கும் உரிமையைப் பெற்றவர்கள்.
இதை பிரான்ஸ் தடை
செய்ய முடியாது.
அவர்கள்
Schengan
ஒப்பந்தங்களை விட்டு நீங்கினால் அல்லது உடன்பாட்டைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தால்
ஒழிய”
என்றார்.
ஒரு பொது
ஐரோப்பிய ஒன்றிய குடியேற்றக் கொள்கை கைவிடப்படும் என்று பெர்லுஸ்கோனி
அச்சுறுத்தியதாக
Der Spiegel
தெரிவித்துள்ளது.
“ஐரோப்பா ஏதேனும்
உருப்படியாகச் செய்ய வேண்டும்,
முடியாவிட்டால்
ஒவ்வொரு நாடும் அகதிகள் பற்றி நடத்தும் அதன் சொந்த முறைகளுக்குத் திரும்ப வேண்டும்
என்றார்.”
ஆரம்பத்தில் ஐரோப்பிய
ஒன்றிய உள்துறைபிரிவின் ஆணையர்
Cecilia Malmstrom
சார்க்கோசியின் முடிவைக் குறைகூறிய வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தின்
Schengen
உடன்பாட்டின்படி,
“எல்லையில் சோதனைகளை
நடத்த உங்களுக்கு அனுமதி கிடையாது.
பொதுப்
பாதுகாப்பிற்குத் தீவிர அச்சுறுத்தல் இருந்தால் ஒழிய.
இந்த நிகழ்வில்
இக்கணத்தில் அது இல்லை”
என்றார்.
ஆனால் பல ஐரோப்பிய
நாடுகளும் ஐரோப்பிய ஆணையத்திடம் உத்தியோகபூர்வ புகார்களை எழுப்பியுள்ளன.
இத்தாலியின்
செயற்பாடு “அயோக்கியத்தனமானது”
என்று ஒரு
இராஜதந்திரியை
Le Nouvel Observateur
மேற்கோளிட்டுள்ளது.
இதன் பின்
Malström
தன் நிலைப்பாட்டைமாற்றிக்
கொண்டார். BBC
கூறுகிறது:
“திங்கள் பிற்பகல்
ஒரு செய்தியாளர் கூட்டத்தில் செல்வி.
Malström தான்
பிரான்ஸிடமிருந்து
“தற்காலிகத் தடை”
“பொது ஒழுங்குக்
காரணங்களுக்காக ஏற்பட்டுள்ளது….இது
Schengen எல்லை
நெறிமுறை விதிகளுக்கு உட்படவில்லை என்று இருக்கலாம்.
ஆனால் அவர்கள்
இவ்வாறு செய்யும் உரிமையைக் கொண்டுள்ளனர் எனலாம்”
என்றார்.
ஐரோப்பிய ஒன்றிய
செய்தித் தொடர்பாளர்
Michele Cercone
வசிக்கும் உரிமங்கள் விசாக்கள் அல்ல என்றும் பிரான்ஸ் ஐரோப்பிய ஒன்றிய விசாக்களோ,
ஐரோப்பிய ஒன்றிய
பாஸ்போர்ட்டுக்களையோ கொண்டிராத மக்களை அனுமதிக்க வேண்டியதில்லை”
என்றார்.
ஐரோப்பிய
முதலாளித்துவ அரசியல் இயந்திரத்தின் முழு திவால் தன்மையையும் இது அடிக்கோடிட்டுக்
காட்டுகிறது.
இது சக்தி வாய்ந்த
நாடுகள் தங்களுடைய வலதுசாரிக் கொள்கைகளைச் செயல்படுத்துவதற்கு எதிரான தன்னுடைய
ஒப்பந்தங்களையே செயல்படுத்த முடியவில்லை,
அதற்கான
விருப்பத்தையும் கொண்டிருக்கவில்லை.
Malström
தலைகீழாக மாறியது ஐரோப்பிய
நீதித்துறை,
அடிப்படை உரிமைகள்
மற்றும் குடியுரிமை ஆணையர்
Viviane Reading 2010
கோடையில் பிரான்ஸில்
இருந்து ஏராளமான ரோமாக்கள் வெளியேற்றப்பட்டபோது காட்டிய நிலைப்பாட்டைத்தான்
ஒத்துள்ளது.
அவர் பிரெஞ்சு
அரசாங்கம் “இனவழியில்”
பாகுபாடு
காட்டுகிறது என்று குற்றம் சாட்டினார்.
மேலும்
“நம் ஐரோப்பிய
ஒன்றியத்தின் பொது மதிப்புக்கள்,
சட்டங்கள்”
ஆகியவற்றை இது
வினாவிற்கு உட்படுத்துகிறது என்றும் கூறினார்.
பிரெஞ்சுக் கொள்கை
இழிந்தது என்றும் ஐரோப்பிய நீதிமன்றங்களில் சார்க்கோசியை நிறுத்தப் போவதாகவும்
கூறினார்.
ஆனால்
உடனடியாக அனைத்தையும் ஐரோப்பிய அரசாங்கங்களின் அழுத்தத்தின் பேரில் இவர் பின்வாங்க
நேர்ந்தது.
ஆஸ்திரிய
உள்துறை மந்திரி
Maria Fekter
இத்தாலிய முடிவான விசாக்கள்
அளிப்பதைத் தாக்கினார்.
அதேபோல் ஜேர்மனிய
உள்துறை மந்திரி
Hans-Peter Friedrich
ம்
“இத்தாலி அதன்
பொறுப்பிற்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும்”
என்றார்.
பயணிக்கும்
விசாக்களை ரோம் அளித்த திட்டம்
“Schengen உணர்வை”
மீறியது ஆகும்
என்றார்.
பாதுகாப்பை,
குறிப்பாக தெற்கு
ஜேர்மனியில் அதிகப்படுத்தும் பேர்லினின் திட்டத்தையும் அவர் அறிவித்தார்.
ஜேர்மனியின்
கூட்டாட்சிப் பொலிசார் இப்பொழுதும் கூட அது எப்படி மீண்டும் முறையான எல்லைக்
கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தலாம் என்று பரிசீலிக்கின்றனர்
--
இந்த ஆண்டின் முதல்
காலாண்டில் 300
வட
ஆபிரிக்கர்கள்தான் ஜேர்மனியில் நுழைந்துள்ளனர் என்றாலும்.
சுவிட்சர்லாந்தின்
Lega கட்சி,
சமீபத்திய
உள்ளூராட்சித் தேர்தல்களில்
30 சதவிகித
வாக்குகளைப் பெற்ற கட்சி,
இத்தாலியுடனான அதனது
எல்லையில் குடியேறுபவர்களைத் தடுக்கும் வகையில் சுவர் எழுப்ப வேண்டும் என்று
கூறியுள்ளது. “இஸ்ரேலுக்கும்
பாலஸ்தீனத்திற்கும் இடையே உள்ளதுபோல் இது கட்டப்பட வேண்டும்.”
|