சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : லிபியா

Imperialist powers prepare escalation of Libyan war

ஏகாதிபத்திய சக்திகள் லிபியப் போர் விரிவாக்கத்திற்கு தயாரிப்புக்கள் நடத்துகின்றன

By Patrick Martin 
18 April 2011
Use this version to print | Send feedback

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகியவை லிபியாவின் சர்வதிகாரி முயம்மர் கடாபிக்கு எதிரான போரைக் கணிசமாக விரிவாக்க முயல்கின்றன. அமெரிக்க ஆதரவுடைய எழுச்சித் தலைவர்கள் நேட்டோ சக்திகளிடமிருந்து தரைப்படை தரையிறக்கத்திற்கும், கூடுதல் குண்டுத் தாக்குதல்களுக்கும் முறையிட்டுள்ளனர்.

போர் விரிவாக்கத்திற்கான உந்துதல் ஆரம்பத் தலையீட்டின் வெளிப்படையான தோல்வியை அடுத்து வந்துள்ளது. இதில் நேட்டோவின் பெரும் குண்டுவீச்சுக்களும் அமெரிக்க ஆதரவுடைய எழுச்சிச் சக்திகள், கிழக்கு லிபியாவை பெங்காசியை அரசியல் மையமாகக் கொண்டு தலைமையகத்தையும் வைத்துள்ளவை நடத்தும் தாக்குதல்களும் இணைந்துள்ளன.

வார இறுதியில், கடாபியின் படைகள் கிழக்கு மற்றும் மேற்கு லிபியா இரண்டிலும் இராணுவத்தின் கூடுதல் முனைப்பைத் தொடர்ந்து பெற்று வந்தன. கிழக்கே அஜ்டபியாவின் முக்கிய நகர்ப்புறத் தெருக்களில் நடத்தப்பட்ட கடும் குண்டுத் தாக்குதல்கள் நூற்றுக்கணக்கானகடாபி எதிர்ப்புப் பிரிவினரை ஒரே அடியாகப் பின் வாங்க வைத்தன என்று செய்தி ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், கடாபியின் படைகள் மேற்கு லிபியாவில் எதிர்ப்பாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள ஒரே நகரமான மிஸ்ரடா மீது தங்கள் முற்றுகையை இறுக்கியதுடன் நகரத்தின் மையப்பகுதி வரையும் வந்துவிட்டன.

அஜ்டபியாவிலிருந்து வரும் செய்தி ஊடகத் தகவல்கள் கடாபி எதிர்ப்புச் சக்திகளுக்கு பெரும் பின்னடைவு என்பதை காட்டுகின்றன. அதனுடைய வலைத் தளத்தில் ஞாயிறு பிற்பகுதியில் நியூ யோர்க் டைம்ஸ், “நூற்றுக்கணக்கான எழுச்சியாளரின் தளவாட வாகனங்களும் மற்ற வாகனங்களும் அஜ்டபியாவின் கிழக்கேயுள்ள சாலைகளை நீங்குவதைக் காணமுடிகிறது. இவை வடக்கே 85 கி.மீ. தொலைவிலுள்ள எழுச்சியாளர்களின் தலைநகரான பெங்காசியை நோக்கிச் செல்வது தெரியவந்துள்ளதுபல படைப்பிரிவினரும் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் உறைந்துள்ளனர்.”

கிட்டத்தட்ட 600,000 மக்களைக் கொண்ட மிஸ்ரடா, லிபியாவின் மூன்றாவது மிகப் பெரிய நகரம் ஆகும். பெப்ருவரி மாத நடுப்பகுதியில் லிபிய எழுச்சி முதலில் வெடித்தபோது, கடாபி எதிர்ப்புச் சக்திகள் அதன் மீது கட்டுப்பாட்டைக் கொண்டனர். இப்பொழுது அது மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கிலிருந்து கடாபியின் படைகளால் தாக்கப்படுகிறது. எதிர்ப்புப் படைகள் நகரத்தில் கடலோரப் பகுதியையொட்டித் தங்கள் பிடியைக் கொண்டுள்ளனர். இதில் வெளியுலகோடு அவர்கள் தொடர்பிற்கு ஒரே பகுதியாக இருக்கும் துறைமுகமும் அடங்கியுள்ளது.

மிஸ்ரடா நகரவையின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் சனிக்கிழமை நேட்டோ தங்களுடைய துறைமுகத்தைப் பாதுகாக்கக் கூடுதல் படைகளை அனுப்ப வேண்டும் என முறையீடு செய்ததாக வாஷிங்டன் போஸ்ட்  தெரிவிக்கிறது. நகரத்தின் பெரும்பகுதி இடைவிடா குண்டு, ராக்கெட் தாக்குதல்களால் இடிபாடுகளுடன் காணப்படுகிறது. கடாபியின் படைகள் பலமுறையும் நேட்டோ போர் விமானங்களால் தாக்கப்படுகின்றன.

பெங்காசிக்குப் பதில் மிஸ்ரடா கிழக்கு லிபியாவின் எதிர்ப்பாளர்களின் தலைநகராக உள்ளது. இன்னும் கூடுதலான இராணுவ ஏகாதிபத்திய தலையீட்டைமனிதாபிமானகாரணங்கள் காட்டி நியாயப்படுத்தும் பிரச்சார முயற்சிக்கு மையக் குவிப்பாக உள்ளது. பெங்காசியில் நடத்தப்பட்டதாக கூறப்பட்ட படுகொலைகளை காரணம் காட்டி கடந்த மாதம் லிபியா மீது குண்டுவீச்சை ஒபாமா தொடக்கினார். இப்பொழுது அதேவித வாதம்தான் மிஸ்ரடாவை ஒட்டிக் கூறப்படுகிறது.

வெள்ளியன்று வெளியிட்ட கூட்டுக் கடிதம் ஒன்றில் ஒபாமா, பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் காமரோன் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி ஆகியோர் கடாபி அரசாங்கம் மிஸ்ரடா மீது நடத்தும் தாக்குதலை ஒருஇடைக்கால முற்றுகைமக்களை அடிபணிய வைப்பதற்கான முயற்சிஎன்று விவரித்தனர்.

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்சிலுள்ள அரசாங்கச் செய்தித் தொடர்பாளர்களும் ஊடகப் பண்டிதர்களும் வெளிப்படையாக இந்நகரத்தை 1995ல் ஒரே நாளில் பொஸ்னிய சேர்பி படைகளால் 8,000 முஸ்லிம் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் படுகொலை செய்யப்பட்ட பொஸ்னிய நகரமான Srebrenica உடன் ஒப்பிட்டுள்ளனர்.

பல விதங்களில் இத்தகைய ஒப்புமை கேலிக்கூத்தானது. அதில் ஒன்று குருதி கொட்டப்பட்டதின் அளவு ஆகும். வாஷிங்டன் போஸ்ட் கருத்துப்படிஇது ஒன்றும் கடாபி ஆதரவு காட்டுகிறது எனக் கூறுவதற்கில்லை—“ஸ்கைப் மூலம் அணுகப்பட்ட மருத்துவர்கள் சனிக்கிழமையன்று மிஸ்ரடாவில் இறந்தவர் எண்ணிக்கை 5 என்றனர், இது மொத்த இறப்பு எண்ணிக்கையை 36 என்று கடந்த மூன்று நாட்களில் மட்டும் ஆக்குகிறது, பெப்ருவரிக் கடைசியில் முற்றுகை தொடங்கியதிலிருந்து குறைந்தபட்சம் 276 என ஆகுகிறது.”

மிஸ்ரடாவில் நிலைமை கொடூரமாக உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. அதுதான் உள்நாட்டுப் போரின் தன்மை ஆகும். ஆனால் வெகுஜனப் படுகொலைகள், இனவெறிக் கொலைகள் என்னும் கூற்றுக்கள் ஒரு அரசியல் நோக்கத்தைத்தான் கொண்டுள்ளன: அதாவது லிபியாவிற்கு எதிரான அமெரிக்க நேட்டோப் போரை நியாப்படுத்தும் ஆதரவுதான் அது, குறிப்பாக தாராளவாத மற்றும்இடதுஅமைப்புக்கள் என்று அமெரிக்காவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் இருப்பவற்றால். இக்குழுக்கள் வெளிப்படையாக மாறி, உறுதியாக ஏகாதிபத்திய முகாமினுள் இப்பொழுது உள்ளன. அவர்களுடையபோர் எதிர்ப்புநிலைப்பாட்டை, ஈராக் போரின்போது புஷ் நிர்வாகத்தின் காலத்தில் ஏற்றிருந்ததைக் கைவிட்டுவிட்டன.

அமெரிக்காவில் லிபியப் போருக்கு முக்கிய ஆதரவு காங்கிரசிலுள்ள ஜனநாயகக் கட்சியினர் மற்றும் நியூ யோர்க் டைம்ஸ் போன்ற தாராளவாத செய்தி ஊடகத்திடம் இருந்து வருகின்றது. இவை இப்பொழுது ஈராக் படையெடுப்பிற்கு பெரும் ஆதரவு கொடுத்த இழிந்துவிட்ட நவ கன்சர்வேடிவ்வினரின் எஞ்சிய பிரிவுடன் இணைந்துள்ளன.

ஐரோப்பாவில் ஜேர்மனியப் பசுமைவாதிகள், பிரெஞ்சு முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி மற்றும் பிரிட்டனின் தொழிற்கட்சியின் சுற்றுக்கோள் வட்டத்திலுள்ள போலி இடதுகள் அனைத்தும் பெரும் ஆர்வத்துடன் கடாபியை அகற்றும் இராணுவத் தலையீட்டிற்கு ஆதரவளித்துள்ளன. பசுமைவாதிகள் ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கலை ஜேர்மனியப் படைகள் மற்றும் போர் விமானங்கள் அனுப்பப்படுவது குறித்துத் தயக்கம் காட்டுவதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வெள்ளியன்று, அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் செய்தி ஊடகத்தினர் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட Human Rights Watch இன் கூற்றான கடாபியின் படைகள் மிஸ்ரடாவில் கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்துகின்றன என்பதற்குப் பரந்த விளம்பரம் கொடுத்தன. திரிபோலியிலுள்ள ஆட்சியின் செய்தித் தொடர்பாளர் லிபியா அதன் இராணுவ ஆயுதக் கிடங்கில் கொத்துக் குண்டுகளைக் கொண்டிருக்கவில்லை என்றார்.

இத்தகைய குற்றச்சாட்டு முற்றிலும் பாசாங்குத்தனம் ஆகும். அதுவும் அமெரிக்கா கொத்துக் குண்டுகள் மீது தடை என்னும் சர்வதேச முறையீடுகளை முற்றிலும் நிராகரித்த நிலையில். இவை வெடிக்கும்போது ஆயிரக்கணக்கான சிறு குண்டுத் துகள்களைப் பரப்புகின்றன, ஒவ்வொரு துகளும் மக்களைக் கொல்லும் அல்லது உறுப்புக்களைச் சிதைத்துவிடும்.

கொத்துக் குண்டுகள் ஈராக்கிலுள்ள அமெரிக்கப் படைகளாலும் இஸ்ரேலிய இராணுவத்தாலும் 2006ல் தெற்கு லெபனான் மீது அது படையெடுத்தபோதும் பரந்தளவில் பயன்படுத்தப்பட்டன. நூற்றுக்கணக்கான, ஏன் ஆயிரக்கணக்கான நிகழ்வுகள், இந்த குண்டுத் துகள்களைப் பொறுக்கி எடுத்ததால் ஈராக்கிய மற்றும் லெபனானியக் குழந்தைகள் கொல்லப்பட்ட அல்லது காயமுற்ற நிகழ்வுகள் உண்டு. இவை மண்ணிலேயே பல ஆண்டுகள் பொதிந்து இருக்கும் இயல்பையும் பெற்றவை.

மீண்டும், இத்தகைய குற்றச்சாட்டுகளின் முக்கிய நோக்கம் போர்ப் பிரச்சாரம் ஆகும். பிரிட்டிஷ் செய்தித்தாள் The Observer  ஞாயிறன்று எழுதியுள்ளது போல், “கடாபியின் படைகள் இப்பொழுது குடிமக்கள் வசிக்கும் மிஸ்ரடப் பகுதியில் கொத்துக் குண்டுகள் மூலம் இலக்கு கொள்ளுகின்றனர் என்பதற்கான சான்றுகள் இன்னும் கூடுதலான நேட்டோ நடவடிக்கை விரைவாக விரிவாக்கப்படுவதற்கு எரியூட்டும்.”

மற்றொரு போலிக்கோடு மிஸ்ரடா போரில் கிட்டத்தட்ட 10,000 என மதிப்பிடப்பட்டுள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பொறியில் அகப்பட்டுக் கொண்டுள்ளதின் நிலைமை பற்றி திடீரென்ற அக்கறை ஆகும். சர்வதேச குடியேறுவோர் அமைப்பின்படி, இதில் எகிப்திலிருந்து 3,000 பேர், நைஜரிலிருந்து 3,000 பேர், சாட்டிலிருந்து 1,000 பேர், கானாவிலிருந்து 800 பேர் உள்ளனர் என்கிறது. ஒரு கிரேக்கப் படகு இந்த அகதிகளில் 1,200 பேரை சனிக்கிழமை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றது.

ஆனால் The Independent  என்னும் பிரிட்டிஷ் நாளேடுஇதுவும் உறுதியான போர் ஆதரவை வெளிப்படுத்தும் ஏடுதான்சுட்டிக்காட்டியுள்ளதுபோல், “கடாபி ஆட்சியினால் மட்டும் இந்த மக்களும் அவர்களுடைய குடும்பங்களும் அச்சப்படவில்லை. எகிப்திலிருந்து முக்கியமாக வந்த கபர் அஹ்மத் முகாமிலுள்ள சிலர், ஆபிரிக்கத் துணை சகாராப் பகுதியினர் மற்றும் பங்களாதேசத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் என்று முற்றுகையிலுள்ள நகரத்தின் பகுதிகள் சிலவற்றைக் கட்டுப்படுத்தும் புரட்சிகரப் படைகளுடன் நிகழ்ந்த மோதல்களில் அவர்களுடைய உயிர்களை இழந்தனர். மற்றவர்கள் கைதுசெய்யப்பட்டு கூலிப்படையினர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.”

இரு அகதிகள் முகாமில் இருந்த நிலைமையை எதிர்த்தபோது எழுச்சிப் போராளிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். கானாவின் பாட்ரிக் குவெசி, ஒரு எண்ணெய் நிறுவனத்தில் வெல்டராகப் பணிபுரிபவர் செய்தித்தாளிடம் கூறினார்: “இப்புரட்சியாளர்கள் நாங்கள் கூறுவதையும் கேட்பதில்லை. அவர்கள் சுடத் தொடங்குகின்றனர். எனக்கு அருகே நின்றிருந்த ஒருவர் மார்பில் சுடப்பட்டார். அவர் ஏதும் செய்யாமல் இருந்தவர். இரு புறத்தாலும் நாங்கள் மோசமாக நடத்தப்படுகிறோம். எங்களை நாங்கள் காத்துக் கொள்ள முடியாது, மிஸ்ரடா மக்கள் இதை நன்கு அறிவர்.”

பிரிட்டிஷ் பிரதம மந்திரி காமெரோன் Sky Television ல் வார இறுதியில் நடந்த பேட்டி ஒன்றில் மிஸ்ரடா பிரச்சினை பற்றிப் பேசினார்: “மிஸ்ரடாவில் மக்களைக் கொலை செய்வதில் கேணல் கடாபி தீவிரமாக உள்ளார் என்பது பற்றி என் மனதில் சந்தேகம் சிறிதும் இல்லை. அதேபோல் பெருநகரத்தைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயல்கிறார். பெங்காசியை நோக்கிச் செல்ல விரும்புகிறார். அங்கு அவர் ஒருவேளை சென்றுவிட்டால் குருதி வெள்ளம்தான் ஏற்படும் என்பது பற்றி நான் உறுதியாக உள்ளேன்.”

குறிப்பிடத்தக்க வகையில் பாசாங்குத்தனத்தன்மையுடைய இக்கூற்றுக்களை தவிரஇவை அனைத்துமே கடாபி வருங்காலத்தில்என்ன செய்வார்” “என்ன செய்யக்கூடும்என்பதற்கு எதிரான தடுப்பு நடவடிக்கை தேவையின் அடிப்படையில் கூறப்படுபவைஇதே நியாயத்துடன் எவரும் கடாபி எதிர்ப்புச் சக்திகளும்சிர்டே நகரில் (கடாபியின் தாயகம், எதிர்ப்பாளர்கள் கடந்த மாதம் தாக்குதலின் போது கைப்பற்ற முடியவில்லை), மக்களைக் கொல்வதில் தீவிரமாக இருந்தனர்என்றும், “திரிப்போலி நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர்அங்குஒருவேளை அவர்கள் சென்றுவிட்டால் குருதி வெள்ளம் இருக்கும் என்பது உறுதிஎனக் கூறமுடியும்.”

கடாபி சர்வாதிகாரத்திற்கு எதிரானஎழுச்சியாளர்கள்பக்கம் சாய்வதற்கும் எந்தவிதக் காரணமும் இல்லை. இவர்கள் கீழிருந்து வரும் உண்மையான எழுச்சியைப் பிரதிபலிக்கவில்லை. ஆனால் அத்தகைய புரட்சியை CIA  முகவர்கள், முன்னாள் அல் கெய்டா போராளிகள் மற்றும் கடாபி ஆட்சியின் முன்னாள் அலுவலர்கள் கூட்டாக நசுக்கும், அடக்கிவிடும் முயற்சிதான்இவர்களுள் பலரும் கடாபியின் புகழைசகோதரத் தலைவர்என்று அவர்கள் பெங்காசியைத் தளமாகக் கொண்ட இடைக்கால தேசிய சபையில் சேர்வதற்குச் சில நாட்கள் முன் பாடியவர்கள்தாம்.

மனிதாபிமானபிரச்சாரம் புதுப்பிக்கப்பட்டு முழக்கப்படுவதற்கான முக்கிய காரணம் இதுவரை ஏகாதிபத்தியத் தலையீட்டிற்கு ஏற்பட்டுள்ள சங்கடம்தான். வெள்ளியன்று அசோசியேட்டட் பிரஸுக்குக் கொடுத்த பேட்டி ஒன்றில் ஒபாமா இரு மாத உள்நாட்டுப்போரில் நேட்டோ தலையிட்டதுஒரு தேக்க நிலையைத்தான்ஏற்படுத்தியுள்ளது என ஒப்புக் கொண்டுள்ளார்.

பிரெஞ்சுப் பாதுகாப்பு மந்திரி ஜேராட் லோங்க்வே ஒரு புதிய ஐ.நா. பாதுகாப்புச் சபைத் தீர்மானம் கடாபியை அகற்றும் நோக்கத்தை அடைவதற்குத் தேவைப்படலாம் என்ற திட்டத்தை எழுப்பியுள்ளார். அதுதான் ஒபாமா, காமரோன் மற்றும் சார்க்கோசியின் கூட்டறிக்கையிலுள்ள கருத்துக்களின் நோக்கம். மூன்று முக்கிய நாடுகளும் ஐ.நாவிற்கு இது முக்கியம் என்று கூறுகின்றன என நான் நினைக்கிறேன். ஒருநாள் பாதுகாப்புச் சபை அத்தகைய தீர்மானத்தை இயற்றக்கூடும் என்றார் அவர்.

பிரெஞ்சு அதிகாரிகள் பலமுறையும் நேட்டோ விமானப் படையின் தாக்குதல் வலுப்படுத்தப்பட வேண்டும் எனக் கோரியுள்ளனர். இது பங்கு பெறாத நாடுகள் அனுப்பும் கூடுதல் விமானங்கள் மூலமோ அல்லது துவக்கத் தாக்குதலில் தலைமை வகித்து பின்னர் தேவையானால் வரலாம் என்ற அந்தஸ்திலுள்ள அமெரிக்க விமானங்கள் மீண்டும் வருவதின் மூலம்தான் முடியும் என்று கூறுகின்றனர்.

இதற்கிடையில் வாஷிங்டன் போஸ்ட் ஞாயிறன்று ஒரு தலையங்கத்தில் ஒபாமா நிர்வாகத்தின் கொள்கையை சீரற்றது, உருப்படியாக எதையும் செய்யாது எனக் கண்டித்து, குண்டுவீச்சுக்கள் விரிவாக்கப்பட வேண்டும், குறிப்பாக AC-130, A-10 ஆகியவை கடாபியின் துருப்புக்கள், தாங்குகள், பீரங்கிகள் என்று தரைப்படை மீதான தாக்குதல்களை விமானங்கள் மூலம் நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.