WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
France enforces
burqa ban
பிரான்சில்
பர்க்கா தடை நடைமுறைப்படுத்தப்படுகிறது
By Antoine
Lerougetel
18 April 2011
முஸ்லிம்
பெண்கள் முழு முகத்தை மறைக்கும் அங்கிகள்,
நிக்கப்,
பர்க்கா ஆகியவற்றை
அணிவதைத் தடுக்கும் ஜனநாயக விரோதச் சட்டம் ஏப்ரல்
11ல் இருந்து
நடைமுறைக்கு வந்ததற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மறைப்பு அணிந்த பல பெண்கள் கைது
செய்யப்பட வழிவகை செய்துள்ளது.
ஏப்ரல்
12ம் தேதி
உள்ளூராட்சி மந்திரி பிலிப் ரிஷேர் தேசிய சட்டமன்றத்தில் ஏற்கனவே பர்க்கா-எதிர்ப்புச்
சட்டத்தை மீறியதற்காக 4
பெண்கள் கைதுசெய்யப்பட்டனர்
என்று அறிவித்தார். Le
Nouvel Observateur “பொலிஸ்
ஆதாரங்களின்படி,
பாரிசுக்கு அருகே
Les Mureaux வணிக
மையத்தில் கைது செய்யப்பட்ட ஒரு மறைப்பு அணிந்த பெண்
150 யூரோக்கள்
சட்டபூர்வமாக அபராதம் விதிக்கப்பட்டார்”
என்று கூறியுள்ளது.
மேலும்
“மற்றொரு முழு
மறைப்பு அங்கி அணிந்த பெண் செவ்வாயன்று பாரிசுக்கு அருகே
Saint-Denis ல்
கைதுசெய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அவர் பொதுப் பாதையில் அங்கியை அகற்ற
மறுத்தற்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
பின் தன் நிகப்பை
அகற்றிய அப்பெண்மணி மீது வழக்குத் தொடரப்படவில்லை,
ஆனால் அவருக்குச்
சட்டம் பற்றி நினைவுறுத்தப்பட்டது.”
என்றும் அது
எழுதியுள்ளது.
பர்க்காத்
தடை முழு முகத்தை மறைக்கும் மறைப்பை பொது இடம் எதிலும் பயன்படுத்தக்கூடாது என்று
தடை செய்கிறது—தெருக்கள்,
கடைகள்,
பூங்காக்கள்,
பொதுப் போக்குவரத்து,
அரசாங்க அலுவலகங்கள்
என.
இதையொட்டி
150 யூரோக்கள்
($215) அபராதம்
விதிக்கப்படலாம் அல்லது சிறப்பு குடிமை உரிமை வகுப்புக்களுக்குச் செல்ல வேண்டும்
என்று உத்தரவிடப்படலாம்.
அவர்கள் நான்கு
மணிநேரத்திற்கு அவர்கள் தங்கள் முகத்தை மறைக்கும் மறைப்பை அகற்ற மறுத்தால்
அடையாளத்தைச் சரிபார்ப்பதற்காக காவலிலும் வைக்கப்படலாம்.
பெண்களை முக அங்கி
அணியக் கட்டாயப்படுத்தப்படுபவர்கள் ஓராண்டு சிறை தண்டனையை முகங்கொடுக்க வேண்டும்,
மற்றும்
30,000 யூரோக்கள்
அபராதம் கொடுக்க வேண்டும்
($43,000).
உத்தியோகபூர்வ மதிப்பீடுகள் இத்தகைய மறைப்பு அங்கிகளை அணியும் பெண்கள் மொத்தம்
பிரான்சின் ஐந்து முதல்
6 மில்லியன்
முஸ்லிம்களில் 2,000
பேருக்கு மேல் இல்லை எனக்
கூறுகின்றன.
ஏப்ரல்
11, திங்களன்று,
சட்டம் நடைமுறைக்கு
வந்த அன்று, “ஒரு
டஜன் பேர்,
மூன்று மறைப்பு அங்கி
அணிந்திருந்த பெண்கள் உட்பட,
பாரிஸில் திங்களன்று
Notre Dame
கதீட்ரலுக்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்,
இரு பெண்கள் ஒரு
வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டனர்”
என்று தகவல்
கொடுத்துள்ளது.
இதேபோல்
கடந்த சனிக்கிழமையன்று சட்டம் செயல்முறைக்கு வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக,
ஒரு சலாபியக் குழு
(Salafist group)
அழைப்பு விடுத்ததின்பேரில்
கிட்டத்தட்ட முழு மறைப்பு அங்கி அணிந்திருந்த
20 பெண்கள் உட்பட,
60
ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் எதிர்ப்பை பாரிசிலுள்ள
La Place de la Nation
ல் நடத்த பொலிசார் ஒப்புதல்
கொடுக்காததை மீறினர்.
L’Express
கருத்துப்படி,
பொலிசார்
61
எதிர்ப்பாளர்களைக் கைது செய்தனர்,
இவற்றுள்
19 பெண்களும்
இருந்தனர்.
இரு எதிர்ப்பாளர்கள்,
கிரேட்
பிரிட்டனிலிருந்து வந்த திரு சௌத்ரி மற்றும் பெல்ஜியத்திலிருந்து வந்த திரு
பெல்கசெம் ஆகியோர் கைது செய்யப்பட்டு நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டனர்.
திங்களன்று
கன்சா டிரைடர் கைது செய்யப்பட்டார்.
இவர் அவினியோனில்
வசிக்கிறார்.
பாரிஸுக்கு
TGV இரயிலில் நிகாப்
அணிந்து செல்லும்போது பேட்டி காணப்பட்டார்.
கடந்த கோடையில்
மறைப்பு அங்கி தடுப்பு பற்றி விவாதம் துவங்கியதிலிருந்து இனவெறித் தாக்குதலுக்கு
உட்பட்டு வருவதாக அவர் கூறினார்.
“இச்சட்டம் இஸ்லாமிய
எதிர்ப்புணர்வைக் கொண்டுள்ளது,
இனவெறியானது.
என்னுடைய வாழ்வே
இப்பொழுது முறைத்துப் பார்த்தல்கள்,
வெறுப்பு,
அவமதிப்புக்களுக்கு
முகங்கொடுத்தல் என்று ஆகிவிட்டது”
என்று அவர் கூறினார்.
“நான்
கடைகள்,
அஞ்சல் அலுவலகம்,
நகரசபைக்குக் கூடத்
தேவையானால் தொடர்ந்து செல்லுவேன்.
எச்சூழ்நிலையிலும்
அங்கி அணிவதை நிறுத்தமாட்டேன்”
என்றார் அவர்.
மேலும்,
“வாய்மொழி மூலம்
எச்சரிக்கை கொடுக்கப்பட்டு,
உள்ளூர் அரசாங்க
வக்கீலுக்கு முன் தோன்ற வேண்டும் என்று வந்தால்
… ஐரோப்பிய மனித
உரிமை நீதிமன்றத்திற்கு முறையிடுவேன்”
என்று சேர்த்துக்
கொண்டார்.
“இது
மதச் சுதந்திரம்,
மனச்சாட்சி பற்றியது.
அந்த உரிமைகள்
ஐரோப்பிய சட்டங்களால் பாதுகாக்கப்படுகின்றன.
இது ஒன்றும்
தூண்டுதலான நடவடிக்கை இல்லை…
எனக்கு உள்ள குடிமை
உரிமைகளத்தான் நான் செயல்படுத்துகிறேன்.
நான் ஒன்றும்
குற்றம் எதையும் செய்யவில்லை….பொலிசார்
என் அடையாள ஆவணங்களைக் காட்டச் சொன்னால்,
அவ்வாறு செய்வேன்,
அதில் பிரச்சினை
ஏதும் இல்லை”
என்று அவர் வலியுறுத்தினார்.
வறிய
முஸ்லிம் புறநகர்ப் பகுதிகளில் இச்சட்டத்தைச் செயல்படுத்துவது வன்முறை
எதிர்ப்புக்களைத் தூண்டக்கூடும் என்று பொலிசார் எச்சரிக்கைகள் கொடுத்துள்ளனர்.
Nord/Pas-de-Calais
மற்றும் Picardy
ஆகியவற்றின்
Unsa-Fo பொலிஸ்
தொழிற்சங்கத்தின் செயலாளர்
Thierry Depuyt, “நாம்
தலையிடும்போது எச்சரிக்கையுடன் இல்லை என்றால்,
வீடுகளிலுள்ள
பகுதிகளில் மோதலுக்கான இடரைச் சந்திப்போம்.
அங்கு பெண்கள் நிகப்
அல்லது பர்க்கா அணிந்தாலும் பொது ஒழுங்கிற்கு இடர் ஏற்படுத்துவதில்லை.
மற்ற வன்முறை,
போதைப் பொருள்
கடத்தல் பற்றிய பொலிஸ் செயற்பாடுகளுடன் இது ஒப்பிடப்பட்டுக் காணப்பட வேண்டும்”
என்றார்.
ஆனால்
எப்படியும் இதில் உறுதியான நடவடிக்கைகளைச் செய்வது என்று அரசாங்கம் தூண்டுதல்
வகையில் அறிவித்துள்ளது.
சார்க்கோசியின்
புதிய உள்துறை மந்திரி Claude
Gueant சட்டம்
“பின்பற்றப்பட
வேண்டும்”, “பொலிசும்
gendermerie உம்
சட்டத்தைச் செயற்படுத்த உள்ளார்கள்,
அவர்கள் சட்டத்தைச்
செயல்படுத்தவர்”
என்று எச்சரித்தார்.
பர்க்கா-எதிர்ப்புச்
சட்டம் செயல்படுத்தப்படுவது இரண்டு ஆண்டுகளாக ஜூன்
22, 2009ல்
சார்க்கோசி ஒரு பாராளுமன்றக் கூட்டத்தில்
“பிரான்ஸில்
பர்க்காவிற்கு நல்வரவு இல்லை”
என்று அறிவித்து,
எதிராக நடத்திவரும்
பிரச்சாரத்தின் உச்சக்கட்டம் ஆகும்.
பெண்கள் உரிமைகள்,
மதச்சார்பற்ற தன்மை
என்ற மறைப்பில் முஸ்லிம்கள் மீது இனவெறித் தாக்குதல்களை நடத்தும் முயற்சியின் ஒரு
பகுதிதான். 2004ம்
ஆண்டு பிரெஞ்சுப் பொதுப் பள்ளிகளில் தலை ஸ்கார்ப்கள் மீது தடை போடப்பட்டது இதற்கு
ஒரு உதாரணம் ஆகும்.
முஸ்லிம்
நாடுகளில் ஏகாதிபத்தியப் போர்களுக்கு எதிர்ப்பைக் குறைத்தல்,
தொழிலாளர்
வர்க்கத்திடம் பிளவை ஊட்டுதல் என்னும் இந்த ஜனநாயக விரோதச் செயற்பாட்டிற்கு
பிரான்ஸின் உத்தியோகப்பூர்வ “இடது”
அல்லது”
தீவிர இடது”
என்னும் கட்சிகளின்
முழு ஆதரவும் உள்ளது.
ஐரோப்பிய
ஒன்றியத்தின் குடியேற்ற எதிர்ப்பு மற்றும் இனவெறிக் கொள்கைகளின் வளர்ச்சியில்
பிரான்ஸ் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது.
பர்க்கா எதிர்ப்புச்
சட்டங்கள் பெல்ஜியத்திலும் இயற்றப்பட்டு இப்பொழுது இத்தாலி,
சுவிட்சர்லாந்து
இன்னும் பிற நாடுகளிலும் செயல் திட்டமாக முன்வைக்கப்பட்டுள்ளன.
பர்க்காவிற்கு எதிராக ஒரு பாராளுமன்றக் குழு நிறுவப்பட்டு,
அது அதன் முதல்
கூட்டத்தை ஜூலை 8, 2009ல்
நடத்தியது.
அனைத்துப் பாராளுமன்றக்
கட்சிகளும் இதில் பங்கு கொண்டன.
ஸ்ராலினிச
கம்யூனிஸ்ட் கட்சி (PCF)
ஐச் சேர்ந்த
André Gerin
தலைமையில் அது நடந்தது.
இது பர்க்கா முறைக்கு
எதிராக மிக உரத்த குரல் கொடுக்கிறது.
இக்குழுவில் ஆளும்
UMP, பெருவணிக
சோசலிஸ்ட் கட்சி (PS)
மற்றும் பசுமைவாதக் கட்சி
ஆகியவற்றின் உறுப்பினர்களும் அடங்கியிருந்தனர்.
இதற்கு போலி
இடது கட்சி
Lutte Ouvriere (தொழிலாளர்
போராட்டம்)
மற்றும்—துவக்கத்தில்
இது தலை ஸ்கார்ப் அணிந்திருந்த வேட்பாளர் இல்ஹம் மௌசைடை மார்ச்
2010 உள்ளூராட்சித்
தேர்தல்களில் நிறுத்தியிருந்தபோதிலும்,--
புதிய முதலாளித்துவ
எதிர்ப்புக் கட்சி (NPA)
ஆகியவையும் ஆதரவு
கொடுத்தன.
ஆனால் மௌசைட்டும் அவருடைய
ஆதரவாளர்களும் NPA
உள்ளூர்க் கிளையிலிருந்து
பின்னர் NPA
தலைமையினால்
வெளியேற்றப்பட்டனர். NPA
தன்னை இன்னும்
நேரடியாக ஆளும் வர்க்கத்தின் நிலைப்பாடுகளுடன் பிணைத்துக் கொண்டது.
தேசிய
சட்டமன்றத்திலும் செனட்டிலும் இச்சட்டம் அதிகப் பெரும்பான்மையில் இயற்றப்பட்டது.
இதன் பின்
அரசியலமைப்புக் குழுவும் இதை ஏற்றது.
PS, PCF மற்றும்
பசுமைவாதிகள் இதற்கு வாக்களித்தனர் அல்லது வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
தடை தேவை
என்பதற்கான இப்பிரச்சாரம் வெளிப்படையாக அரசியலமைப்பு நெறிகள் மற்றும் சட்டத்தின்
ஆட்சி ஆகியவற்றை இழிவுடன் கருதித் தொடரப்படுகிறது.
ஏப்ரல்
2, 2010ல் நடந்த
காபினெட் கூட்டத்தில் பிரதம மந்திரி பிரான்சுவா பியோன் அரசாங்கம் விரைவில் சட்டத்தை
இயற்றும் என்றும்,
அது அரசியலமைப்பிற்கு
முரணானது,
ஐரோப்பிய மனித உரிமைகள்
மரபை மீறியது என்றாலும் அரசாங்கம் பொருட்படுத்தாது என்று கூறினார்.
“சட்டபூர்வ
இடர்களைச் சந்திக்கத் தயாராக உள்ளோம்.
ஏனெனில் இது பற்றிய
நிலைப்பாடுகள் மதிப்புடையவை”
என்றார் அவர்.
மேலும்,
“இன்றைய
சமூகத்திற்குப் பொருந்தாதவற்றைப் பற்றிய சட்டம் இயற்றும்போது தேவையற்ற நிதானத்தை
நாம் காட்டத் தயாராக இல்லை….பிரெஞ்சு
அரசியலமைப்புக் குழு மற்றும் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தின் அதிகார வரம்பை
மாற்ற வேண்டும் என்றால்,
அதை ஒரு பொதுக்
கடமையாகக் கருதிச் செய்வோம்”
என்று கூறினார்.
இந்த
வலதுசாரிப் பிரச்சாரத்தின் அரசியல் விளைவுகள் இன்னும் வெளிப்படையாகத் தெரிகின்றன.
இது நவ பாசிச தேசிய
முன்னணியின் (Front National)
Marine Le Pen க்கு
மதச்சார்பற்ற தன்மையின் பாதுகாவலர் எனக் காட்டிக் கொள்ளும் நிலைப்பாட்டிற்கான
வாய்ப்பை தோற்றுவித்துள்ளது.
அதே நேரத்தில் அவர்
சமூகப்பணிகளில் “தேசிய
விருப்பம்”
என்ற கொள்கைக்கும் வாதிட
முற்படுகிறார்.
செல்வாக்கிழந்த கொள்கைகளால் ஒப்புதல் விகிதம்
30 சதவிகிதம் என்று
வந்துள்ள நிலையில்—கணிப்புக்கள்
2012 தேர்தல்களில்
FN உடைய
Marine Le Pen க்கு
இரண்டாம் சுற்றிற்குத் தகுதி கிடைப்பது கடினம் என்று உள்ள நிலையில்—சார்க்கோசி
பிரெஞ்சு சமூகத்தின் மிகப் பிற்போக்குத்தனமான சக்திகளுக்கு தன் செயற்பட்டியலை
நிறைவேற்றுவதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் முறையிடுகிறார்.
அரசியல்
ஸ்தாபனத்தில் எதிர்ப்பு இல்லாத நிலையில்,
தைரியத்தை கொண்டு,
சார்க்கோசி
நிர்வாகம் தன்போக்கில் முன்னேறுகிறது.
ஏப்ரல்
5ம் தேதி
UMP ஒரு மாநாட்டைக்
கூட்டி முஸ்லிம்களின் உரிமைகளை இன்னும் கூடுதலான தடைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளை
முன்வைக்க முனைந்தது.
சோசலிஸ்ட் கட்சி
(PS)
இந்த நிகழ்ச்சியை உள்நாட்டு
அமைதியின்மைக்கு ஆபத்தான ஒரு தூண்டுதல் என்று குறைகூறியுள்ளது.
ஆனால் அதை எதிர்த்து
ஒரு மனுவில் கையெழுத்திட்ட பின்னர்,
PS ன் முதன்மைச்
செயலர் Martine Aubry
மற்றும் முன்னாள்
PS பிரதம மந்திரி
Laurent Fabius
ஆகியோர் ஒரு சுவிஸ் முஸ்லிம் பல்கலைக்கழகப் பேராசிரியரும் கையெழுத்திட்டார் என்று
தெரிந்தவுடன் தங்களின் கையெழுத்துக்களைத் திரும்பப் பெற்றனர்.
கடந்த மாதம்
லிபியாவிற்கு எதிராக ஒரு ஆக்கிரோஷப் போரையும் தொடக்கி,
பிரான்சின் நவ
காலனித்துவ தலையீட்டை ஐவரி கோஸ்ட்டில் அதே நேரத்தில் ஆழப்படுத்தி,
பிரான்ஸ்
ஆப்கானிஸ்தானில் நடக்கும் நேட்டோ ஆக்கிரமிப்பு என்னும் செல்வாக்கற்ற செயற்பாட்டின்
பங்கையும் சார்க்கோசி கொண்டுள்ளார். |