World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : லிபியா

Contact Group meeting in Doha plans imperialist carve-up of Libya

லிபியாவை ஏகாதிபத்திய துண்டாடும் திட்டம் பற்றி  தோஹாவில் தொடர்புக் குழுவின் கூட்டம்

By Alex Lantier
14 April 2011
Back to screen version

நேற்று கட்டாரில் உள்ள தோஹாவில் இடைக்கால தேசிய சபையின் பெங்காசியைத் தளமாகக் கொண்ட எழுச்சியாளர்களுக்கு ஆதரவு வழங்கும் மேலை மற்றும் அரபு நாடுகளின் வெளியுறவு மந்திரிகளின் தொடர்புக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் இடைக்கால தேசிய சபையின் ஏகாதிபத்தியச் சக்திகளின், குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவற்றின் கைக்கூலி என்ற  பங்கை எடுத்துக் காட்டியது. இவை லிபியாவில் நடைபெறும் கடுமையான உள்நாட்டுப் போரில் இத்தேசியக் குழுவைத் தங்கள் சார்பாக வளர்க்கின்றன.

கட்டாரும் பிரிட்டனும் மாநாட்டின் விருந்தோம்பும் நாடுகளாக இருந்தன. பிரிட்டனின் வெளியுறவு மந்திரி வில்லியம் ஹேக் மாலை முன்பகுதியில் கேர்னல் முயம்மர் கடாபி லிபிய அரசாங்கத் தலைமைப் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கோரிய அறிக்கையை வெளியிட்டார். “கடாபியும் அவருடைய ஆட்சியும் அனைத்து சட்டபூர்வத்தன்மையையும் இழந்துவிட்டன; கடாபி அதிகாரத்தை விட்டு நீங்க வேண்டும்என்று ஹேக் அறிவித்தார்.

லிபியா மீது தொடர்ந்து நேட்டோ படைகள் குண்டுத் தாக்குதல் நடத்தவதைப் பாராட்டும் வகையில் மாநாடு பின்வருமாறு அறிவித்தது: “இவை கடாபியின் மீது கணிசமான அழுத்தங்களைக் கொடுத்து பெங்காசி உட்பட குடிமக்களை வன்முறையில் இருந்து பாதுகாத்து, ஒரு மனிதாபிமானப் பேரழிவையும் தவிர்த்துள்ளன.”

இடைக்கால தேசிய சபைக்கு நிதியளிக்கவும் மாநாடு ஒப்புக் கொண்டுள்ளது: “பங்கு பெறும் நாடுகள் ஒரு தற்காலிக நிதிய வழிவகை இடைக்கால தேசிய சபைக்கு நிதி அளிக்கும் ஒரு  திட்டத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன; மேலும் சர்வதேச சமூகம் லிபியாவிற்கு தேவையான குறுகிய கால நிதியத் தேவைகள் மற்றும் கட்டுமானத் தேவைகளுக்கு உதவும் நிதியங்களை நிர்வகிக்கவும் ஒப்புக் கொண்டுள்ளது.”

இடைக்கால தேசிய சபையின் உறுப்பினர் மஹ்முத் சம்மம் அமெரிக்க அரசாங்கம்கடாபி ஆட்சியின் முடக்கப்பட்டநிதிகளை விடுவிக்க வேண்டும்என்று அழைப்பு விடுத்துள்ளது. அதாவது மேலை வங்கிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள லிபிய எண்ணெய் வருமானமான 30 பில்லியன் டாலர் மதிப்புப் பணத்தைக் கொடுக்க வேண்டும் என. பொதுவாக லிபிய சமூகநலச் செலவுகள் மற்றும் பொதுத்துறை  தொழிலாளர்களின் ஊதியத்திற்குப் பயன்படுத்தப்படும் இந்த நிதிகள் முக்கிய வங்கிகளால் இடைக்கால தேசிய சபைக்கு ஆயுதங்கள், மற்றைய தேவைகளை வழங்க பணம் கொடுக்க திருடப்படும்.

நேற்று லிபியாவின் கைத்தொலைபேசி இணையத்தின் பிரிவுகள் பலவற்றை இடைக்கால தேசிய சபை அமெரிக்கா மற்றும் பாரசீய வளைகுடா நாடுகள் கொடுத்த உதவி, கருவிகள் ஆகியவற்றைக் கொண்டு கடத்திக் கொண்டது. இந்த இணையம் முன்னதாக சீன நிறுவனம் ஒன்றான Huawei ஆல் நடத்தப்பட்டது; அது இடைக்கால தேசிய சபைக்கு உதவ மறுத்து விட்டது. சீன நிறுவனங்கள் கடாபியுடன் பல உள்கட்டுமான ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளன. ஒரு மேற்கு ஆதிக்கமுடைய இடைக்கால தேசிய சபையின்  ஆட்சி லிபியாவில் நிறுவப்பட்டால் இந்த ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்பட்டு பெரும் இழப்பிற்கு அது உட்படக்கூடும்.

தோஹாவில் உள்ள இடைக்கால தேசிய சபை பிரதிநிதிகள் தோஹாவிற்கு வந்திருந்த கடாபியின் முன்னாள் வெளியுறவு மந்திரி மூசா குசாவைச் சந்திக்க மறுத்து விட்டனர். “லிபியாவின் அனைத்துத் தரப்பினரும் உள்நாட்டுப் போரில் நாடு மூழ்கிவிடாமல் தடுத்துவிட வேண்டும்என்று குசா கேட்டுக் கொண்டிருந்தார்; நாடுஒரு புதிய சோமாலியா போல் ஆகிவிடும் என்ற எச்சரிக்கையும் விடுத்திருந்தார்.

லிபியாவில் இருந்து வரும் தகவல்கள் தெளிவாக்குவது போல், நாடு ஏற்கனவே ஒரு உள்நாட்டுப் போரில் மூழ்கியுள்ளது. நேட்டோ சக்திகளின் தாக்குதல்கள் லிபிய மக்களைக் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டிராமல் லிபிய இராணுவப் படைகளில் பெரும் பகுதியை இயன்றவரை அழிப்பதைத்தான் நோக்கமாகக் கொண்டுள்ளன. 16 லிபிய டாங்குகள், ஒரு விமான எதிர்ப்புப் பீரங்கி, மற்றும் ஒரு பெரிய வாகனம் ஆகியவற்றை முந்தைய தினம் நடத்திய வான் தாக்குதல்களில் தான் அழித்து விட்டதாக நேட்டோ நேற்று அறிவித்தது. பிரிட்டிஷ் அதிகாரிகள் அவற்றின் Eurofighter-Typhoons விமானம் 1,000 பவுண்டுகள் எடைக் குண்டுகளை லிபிய டாங்குகள் மீது நேற்று போட்டதாகத் தெரிவித்தனர்.

நேட்டோ விமானச் சக்தியின் ஆதரவைக் கொண்ட எழுச்சியாளர்களின் சிறு குழுக்களுக்கும் முறையான லிபியப் படைகளுக்கும் இடையே மோதல் தொடர்கையில், நேட்டோ டிரிபோலி, மிசுரடா, அல்-அஜிசியா மற்றும் சிர்ட்டே ஆகிய இடங்களில் குண்டுவீச்சுக்களை நடத்தியது. இன்னும் கடாபி  படைகளின் சார்பில் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படும் தென்பகுதி பிரெகா எண்ணெய் துறைமுக நகரமும், முக்கிய மூலோபாய  இடமான அஜ்டபியாவில் மோதல்கள் தொடர்கின்றன.

ஒரு மனிதாபிமானப் பேரழிவைத் தவிர்க்கும் நோக்கம் என்ற போலிக்காரணத்தில் தொடக்கப்பட்ட இப்போர் அதைத் தோற்றுவிக்கும் ஒன்றாக மாறிவிட்டது. .நா.பொதுச் செயலாளர் பான் கி-மூன் கிட்டத்தட்ட 3.6 மில்லியன் மக்கள், அதாவது மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 60 சதிவிகிதத்தினர், மனிதாபிமான உதவி நாடும் நிலையில் இருப்பதாகக் கூறியுள்ளார். மற்றும் ஒரு 330,000 மக்கள் லிபியாவிற்குள் தங்கள் வீடுகளில் இருந்து ஓடிவிட்டனர்

புகலிடம் நாடுவோருக்கான ஐ.நா. உயர் ஆணையம் இன்னும் 498,000 மக்கள் (போருக்கு முந்தைய மக்கள் தொகையில் 8%) லிபியாவை விட்டு நீங்கியுள்ளதாகவும், 236,000 பேர் துனிசியாவிற்கும், 200,000 எகிப்து மற்றும் சிறிய எண்ணிக்கையினர் அல்ஜீரியா, சாட் மற்றும் நைஜருக்குச் சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கிறது

இந்த எண்ணிக்கைகள் போரை விரிவாக்கவும் லிபியாவிற்குள் மேற்கு நாடுகளின் தரைப்படைகளை நுழைப்பதை நியாயப்படுத்தும் திட்டங்களுக்கு இழிந்த முறையில் பயன்படுத்தப்படலாம். அதாவது, நாட்டின்மீது படையெடுப்பதற்கு. ஐரோப்பிய ஒன்றியம் இத்தகைய திட்டங்களை ஏப்ரல் 10ம் தேதி பகிரங்கமாகக் கூறியது.  மிஸுரடாவிற்கு அனுப்பப்படும் மனிதாபிமான உதவிக்குப் பாதுகாப்பாக பெயரளவிற்கு ஆயிரம் துருப்புக்களை அனுப்பும் திட்டமாக அது கூறப்பட்டது.

இடைக்கால தேசிய சபையுடன் செல்வாக்கையும் தொடர்புகளையும் பெருவதற்கு முக்கிய ஏகாதிபத்தியச் சக்திகள் தொடர்ந்து போட்டியிடுகின்றன. இதுவோ முன்னாள் கடாபி ஆட்சி அதிகாரிகள், இஸ்லாமிய வாதிகள், வெளிநாட்டு உளவுத்துறை உதவிகள் ஆகியோரை அடக்கியுள்ள ஒரு சிறிய குழு ஆகும். இதன் மூலம் மேற்குசக்திகள் லிபியாவை நடைமுறையில் ஒரு காலனியாக  மாற்றும் நோக்கத்தைக் கொண்டுள்ளன.

ஆரம்பத்தில் போருக்குக் கடினமாக ஆதரவு கூறிய பிரிட்டனும் பிரான்ஸும் அமெரிக்கா மற்றும் ஜேர்மனியைக் குறைகூறியுள்ளன. அமெரிக்கா போரில் அதன் பங்கைக் குறைத்துக் கொண்டுள்ளது; இதற்குக் காரணம் இடைக்கால தேசிய சபைக்கு கொடுக்கப்படும் ஆயுதங்கள் அல்-கொய்தாவிற்குச் செல்லக்கூடும் என்ற அச்சம் உள்ளது. லிபியா மீது போருக்கு இசைவு கொடுப்பதற்கு இயற்றப்பட்ட ஐ.நா.தீர்மானம் 1973 .நா.பாதுகாப்புக் குழுவில் வாக்கெடுப்பிற்கு வரும்போது ஜேர்மனி அதில் பங்கு பெறவில்லை.

பிரெஞ்சு வெளியுறவு மந்திரி அலன் யூப்பே நேட்டோ போதுமான அளவு ஆக்கிரோஷத்தை எழுச்சியாளர்களுக்கு காட்டவில்லை; அதுவும் அமெரிக்க போர் விமானங்கள் இடைக்கால தேசிய சபைக்கு கொடுத்து வந்த நெருக்கமான வான் ஆதரவை நிறுத்திய பின்னர் குறைகூறியுள்ளார். “இது போதாது. நேட்டோ அதன் பங்கை முழுமையாகக் கொள்ள வேண்டும். அதுதான் நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்க விரும்பியதுஎன்றார் அவர்.

பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் காமெரோன் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி ஆகியோர் பாரிசில் நேற்று இரவு சந்தித்து, “செயற்பாடு ஆலோசனையுடன் கூடிய விருந்தைஉண்டனர்; இது லிபியப் போர் பற்றி முற்றிலும் ஆராயும் களமாயிற்று. அவர்களுடைய விவாதங்களின் பொருளுரை பற்றி பகிரங்க அறிக்கை ஏதும் கொடுக்கப்படவில்லை.

லக்சம்பேர்க்கின் வெளியுறவு மந்திரி ஜேன் அஷெல்போர்ன், Süddeutsche Zeitung பத்திரிகையில் வெளியிட்ட கருத்துக்களில் ஜேர்மனி வாக்குப் பதிவில் கலந்து கொள்ளாதது பற்றித் தாக்கி, ஐரோப்பிய ஒன்றியம்ஆக்கிரோஷத்துடன் போர் நடத்துபவர்கள், நன்மை செய்பவர்கள் என்ற இரு பிரிவினராக இருப்பது போல் தோன்றுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானை நேட்டோ தன் துருப்புக்களுடன் ஆக்கிரமித்துள்ள நிலையில், பேர்லின் ஒன்றும்நன்மை செய்பவர்கள்என்று நம்புவதற்கு இல்லை. ஆனால் இப்போர் ஒரு மறுக்க முடியாத உண்மையை எடுத்துக்காட்டியுள்ளது: பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகியவை லிபியாவிற்கு எதிரான போரில் விரைந்து ஈடுபட்டு, தங்களுக்கு ஆதரவான வலதுசாரிச் சக்திகளை அந்நாட்டில் பயன்படுத்தி வெகுஜன எதிர்ப்புக்கள் துனிசியா, எகிப்து, இன்னும் பிற வட ஆபிரிக்க நாடுகளில் ஏற்பட்டது போல் பரவாமல் தடுக்க முற்பட்டன.

இடைக்கால தேசிய சபையின் தலைமையிலுள்ள எதிர்த்தரப்பினரின்  கைக்கூலிப் படைகளில் காலிபா ஹிப்டர் என்னும் எழுச்சியாளர் இராணுவத் தலைவரும் உள்ளார். இவர் ஏப்ரல் 12ம் தேதி வாஷிங்டன் போஸ்ட்டிடம், CIA இடம் தான் கொண்ட நெருக்கமான உறவுகளை உறுதிப்படுத்தினார். (பார்க்க: A CIA commander for the Libyan rebels). லிபியாவில் இருந்து 1987ல் ஓடிவிட்ட முன்னாள் அதிகாரியான இவர் பல ஆண்டுகள் வடக்கு வர்ஜீனியாவில் CIA தலைமையகத்திற்கு அருகே வசித்து வந்தார். இவர் கடாபியின் முன்னாள் உள்துறை மந்திரியான அப்துல் பட்டா யூனிஸ் உடன் இடைக்கால தேசிய சபையின் சிறிய இராணுவப் படைகளுக்குத் தலைமைக்காகப் போட்டியிடுகிறார்.

அவர்கிழக்கு லிபியாவில் மிகப் பெரிய படைக்கு நான் தலைமை தாங்கியுள்ளேன்; மக்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் என்னைப் பற்றி நன்கு தெரியும். பல ஆண்டுகளாக இது போன்ற தருணத்தைக் கைப்பற்றத்தான் நான் காத்துள்ளேன்.” என்றார்.

போஸ்ட் மேலும் கூறியது: “மார்ச் மாதம் நடுவில் Falls Church இலுள்ள வீட்டை விட்டு நீங்குமுன் ஹிப்டர் தான் CIA வினாலும் லிபியாவில் உள்ள அமெரிக்கத் தூதராலும் தொடர்பு கொள்ளப்பட்டதாகவும் வாஷிங்டனில் உள்ள அதிகாரிகள், தாங்கள் எதிர்த்தரப்பு பற்றி கண்டுபிடிப்பதில் ஆர்வம் கொண்டுள்ள நிலையில், அவர் மீண்டும் நாட்டிற்குத் திரும்பும் திட்டம் பற்றி அறிந்தனர்.”

தேசிய இடைக்கால சபை உடனான தீவிர பேச்சுவார்த்தைகளை  வாஷிங்டன் தொடர்கிறது. நேற்று வெளியுறவுத்துறையின் செய்திகள்துணை வெளிவிவகார செயலாளர் ஜிம் ஸ்டீன்பெர்க்கும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களும் இன்று இடைக்காலக் குழுவின் வெளியுறவுத் துறைத் தலைவர் மஜ்முட் ஜிப்ரிலைச் சந்திப்பர் என்று அறிவித்தது. ஜிப்ரிலும் முன்னாள் வாஷிங்டனுக்கான லிபிய தூதர் அலி ஔஜலியும் செனட்டின் வெளியுறவுகள் குழுவைச் சந்திக்க உள்ளனர் என்று குழுவின் தலைவர் ஜோன் கெர்ரி கூறியுள்ளார்.