WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
லிபியப் போரும் ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையேயான மோதல்கள் ஆழமடைதலும்
Alex Lantier and David North
16 April 2011
வியாழனன்று அமெரிக்க
ஜனாதிபதி பாரக் ஒபாமா,
பிரெஞ்சு ஜனாதிபதி
நிக்கோலோ சார்க்கோசி மற்றும் பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் காமெரோன் ஆகியோர்
லிபியா பற்றி விடுத்துள்ள கூட்டு அறிக்கை போரை விரிவாக்குவதோடு நின்றுவிடவில்லை.
வட ஆபிரிக்காவில்
புதிய காலனித்துவ நடவடிக்களின் பின்னணியில் ஐரோப்பாவிற்குள் இருக்கும் அரசியல்
பிளவுகளையும் அது தீவிரப்படுத்துகிறது.
ஒரு
“மனிதாபிமான”
முயற்சி என்று போர்
பிரச்சாரப்படுத்தப்பட்டாலும்,
குறைந்த பட்சம்
பகிரங்கமாகவேனும் பிரான்ஸ்,
பிரிட்டன்,
அமெரிக்கா
ஒருபுறத்திலும்,
மறு புறத்தில்
ஜேர்மனிக்கும் இடையே பெருகியுள்ள கடுமையான மோதல்களை
பற்றி அதிக கவனம்
காட்டப்படவில்லை.
கூட்டு அறிக்கையின் மிகக்
குறிப்பிடத்தக்க அம்சம்,
அது ஐரோப்பிய
ஒன்றியத்தாலோ,
நேட்டோ இராணுவக்
கூட்டாலோ கூட வெளியிடப்படவில்லை என்பது ஆகும்.
மாறாக இது பிரெஞ்சு,
ஆங்கில மொழிகளில்
பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி,
பிரித்தானிய
பிரதம மந்திரி
காமெரோன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஆகியோரின் கையெழுத்துக்களுடன்
வெளிவந்துள்ளது.
இந்த அறிக்கையில்
ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலின் கையெழுத்து இல்லை.
இவருடைய
அரசாங்கம்தான்
முன்னதாக லிபியா
மீதான ஆரம்ப தாக்குதலுக்கு இசைவு கொடுத்த ஐ.நா.தீர்மானத்தின்
வாக்குப் பதிவில் கலந்து கொள்ளவில்லை.
ஆயினும்கூட இந்த
அறிக்கை பங்குகொள்ளும்
சக்திகளின் போர்
நோக்கங்களை அதிக அளவில் விரிவாக்கியுள்ளது.
அதாவது
குடிமக்களைக்
காப்பது என்பதில் இருந்து லிபியாவின் ஆட்சி மாற்றம் என்ற கொள்கைக்கு
மாறியுள்ளது.
“குண்டுவீச்சு கடாபி
அகலும் வரை தொடர்கிறது”
என்ற தலைப்பில்,
Washington Post, Times of London, International Heralnd Tribune, al-Hayat
ஆகியவற்றில்
வெளியிடப்பட்ட இந்த அறிக்கை,
“(கேர்னல் முயம்மர்)
கடாபி பதவியில்
இருக்கும் வரை லிபியாவின் வருங்காலத்தைப் பற்றிக் கற்பனை செய்வது இயலாது”
எனப் பிரகடனம்
செய்கிறது.
மோதலுக்கு வேறு எந்த
விளைவும் ஒரு “காட்டிக்
கொடுப்பு”
ஆகிவிடும் என்று அது
உதறித்தள்ளுகிறது.
ஜேர்மனிக்கும்
பிரான்ஸுக்கும் இடையே உள்ள பிளவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
ஏனெனில் இந்த இரு
நாடுகளும் வரலாற்றளவில் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஐரோப்பாவில் அரசியல்
கட்டமைப்பை
உருவாக்குவதில்
வரலாற்றுரீதியாக
முக்கிய பங்கை
வகித்ததுடன்,
மேலும் யூரோ என்னும்
பொது ஐரோப்பிய நாணயம் புழங்கும் நாடுகளில் மிகப் பெரிய நாடுகளுமாகும்.
பல அவதானிகள்
ஜேர்மனிய அரசாங்கம்
கடந்த மாத வாக்களிப்பில்
கலந்து கொள்ளாதது
பற்றி வியப்பைத் தெரிவித்திருந்தாலும்,
பிரெஞ்சு ஆதிக்கம்
நிறைந்த மத்தியதரைக்கடல் ஒன்றியம்
(UM) ஐக் கட்டமைக்க
முற்பட்ட சார்க்கோசியின் முயற்சிகளை ஜேர்மனி எதிர்த்த காலத்திலேயே ஏற்பட்ட
வேறுபாடுகளின் தர்க்கரீதியான விளைவுதான் இதுவாகும்.
அத்தகைய அமைப்பை
2007ல் தன் தேர்தல்
பிரச்சாரத்தின்போதே தோற்றுவிக்க வேண்டும் என்ற கருத்தை சார்க்கோசி
முன்வைத்திருந்தார்.
பேர்லின் அத்திட்டத்தை,
ஒரு சுயாதீன
முனைப்பு,
ஐரோப்பிய
உள்ளடக்கத்திற்கு
வெளியே
செய்யப்பட்டது,
பிரான்ஸின்
நலன்களைக் பாதுகாப்பதற்கு இயற்றப்பட்டது என்று குறைகூறியது.
ஆரம்பத்தில்
வரையறுத்துக்காட்டப்பட்டபோதே,
அதில்
மத்தியதரைக்கடலோரப் பகுதிகளை
கொண்ட
நாடுகள்
இணைக்கப்படும்
என்று குறிப்பிட்டு
இதில் ஜேர்மனி,
பிரிட்டன் மற்றும்
ஸ்காண்டிநேவிய நாடுகள் ஒதுக்கப்பட்டது.
இது பிரான்ஸுக்கு
அதன் முன்னாள் காலனிகளான
துனிசியா,
அல்ஜீரியா மற்றும்
மொரொக்கோவுடனான
செயற்பாடுகளுக்கு
சலுகை கொடுத்த அரங்கை அமைத்து,
நிதிய உதவிகளையும்
அவற்றிற்கு கொடுக்கும் என்பதோடு,
பால்கனில்
உள்ள ஜேர்மனியின்
முக்கிய வணிப் பங்காளிகளுடனும்
மற்றும்
துருக்கியோடும் அத்தகைய நிலைப்பாட்டை பிரான்ஸுக்குக் கொடுத்திருக்கும்.
புதிய ஒன்றியம் பிரான்சின்
மூலோபாயச் செல்வாக்கிற்கு ஏற்றம் கொடுக்கும்,
அதே நேரத்தில்
ஐரோப்பிய,
மத்தியதரைக்கடலோர
அரபு நாடுகளின்
தொழிலாளர்கள்மீது ஏற்றப்படும் சுமையில் மாபெரும் இலாபங்களையும் ஈட்டித்தரும் என்று
கணிப்பிட்டார்.
ஜேர்மனியுடன்
பிரெஞ்சு வணிகப் பற்றாக்குறைகள் அதிகரிக்கையில்,
பிரெஞ்சு பொருளாதார
வல்லுனர்களும் அரசியல்வாதிகளும் இந்த மத்தியதரைக்கடல் ஒன்றிய திட்டங்கள் பாரிஸுக்கு
குறைவூதியத் தொழிலாளர் தொகுப்பு உள்ள மத்திதரைக்கடல் நாடுகளுடன் தொழில்துறை
ஒத்துழைப்பு மற்றும் ஆலைகளை நிறுவும் கொள்கைகளை தொடர உதவும் என்றும் ஜேர்மனிய
நிறுவனங்களுடன் போட்டியிடவும் உதவும் என்று நம்பினர்.
ஸ்விட்சர்லாந்தின்
Neue Zürcher Zeitung
இன்
வார்த்தைகளில்
வடக்கு ஐரோப்பிய
அரசியல் ஆளும்தட்டினர்,
“கடலுக்கு அப்பால்
தெற்கே பல புதிய மில்லியன்களை எறியும்”
என்னும்
சார்க்கோசியின் திட்டங்களை எதிர்த்தது.
அனைத்து ஐரோப்பிய
நாடுகளும் அவர் திட்டமிட்டுள்ள மத்தியதரைக்கடல் ஒன்றியத்தில்
அனுமதிக்கப்பட
வேண்டும் என்று மார்ச்
2008ல்
சார்க்கோசியிடம் மேர்க்கெல் வலியுறுத்தினார்.
Mediterraneal
Politics
என்னும் இதழின்
மார்ச் பதிப்பில்,
லிஸ்பனின் பல்கலைக்
கழக உயர் கூடத்தில் ரோபியாஸ்
ஷூமாக்கர்
ஜேர்மனியின்
எதிர்ப்புக்களை விளக்கி எழுதினார்:
“மத்தியதரைக்கடல்
ஒன்றியத்தை
தோற்றுவித்தல்,
மத்தியதரைக்கடல்
கடலோரப்பகுதிகளில் உள்ள நாடுகளை மட்டுமே அதில் அடக்குவது என்பது ஐரோப்பிய
ஒன்றியத்திற்குள் ஈர்ப்புச் சக்திகளைச் செயல்படுத்தத் தொடங்கி அவை துண்டாடும்
வழிவகைகளைத் தூண்டிவிட்டு,
இறுதியில்
சிதைவிற்கே வழிவகுக்கும்.
எனவே அவர்
சார்க்கோசிக்கும் பிற ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்களுக்கும் முற்றிலும் தேசிய
நலன்களைத் தொடர்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி பயன்படுத்தப்படுவது
நியாயப்படுத்தப்பட முடியாதது என்று கூறினார்.
இந்த வாதங்கள் மற்ற
ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ
நாடுகளின்
அரசாங்கங்களுக்கு இடையே கவலையை ஏற்படுத்தும் என்பதை
நன்கு அறிந்த
மேர்க்கெல்,
தன்னுடைய கருத்து
அனைவராலும் கவனம்
கொடுக்கப்படுவதற்கான
வாய்ப்பு அனைத்தையும் பயன்படுத்தினார்.
இதன் நோக்கம்
மாறுபட்ட கண்ணோட்டத்திறன் உடைய உணர்வுகளை ஒன்றாகக் கொண்டுவந்து,
இதையொட்டி மற்ற
தடுப்பதிகாரம்
(veto)
செலுத்தும் திறனுடைய
நாடுகளுக்கு ஜேர்மனி சில ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் ஒதுக்கப்படுவதைத் தளமாகக்
கொண்ட எத்திட்டத்தையும் உறுதியாக எதிர்க்கும் என்பதைத் தெளிவுபடுத்துவது ஆகும்.
இந்த மூலோபாயம்
மேர்க்கெலை “பொது
நலனுக்காக”,
அதாவது ஐரோப்பிய
ஒருங்கிணைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்-ஐரோப்பிய
பொது நலன்கள் ஆகியவற்றின் நிலைப்பாட்டின் பாதுகாப்பிற்காக மேர்க்கேல் நடந்து
கொள்ளுகிறார் என்பதைச் சித்தரிக்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தது என்பது வெளிப்படை.
ஆனால் இந்த
மூலோபாயத்தின் தளத்தில் இருந்த நியாப்படுத்துதலோ பிரான்ஸ் ஐரோப்பிய வெளியுறவு
விவகாரங்களில் சமமானவர்களுக்குள் முதன்மை நிலையை அடைதலைத் தடுத்தலும் ஆகும்;
இதையொட்டி அது
ஜேர்மனியின் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் முக்கிய பங்கை குறைமதிப்பிற்கு
உட்படுத்துவதைத் தடுக்கும் என்பதுடன்,
பிரெஞ்சுக்
காலனித்துவ
நோக்கங்கள்
மறுஎழுச்சி பெறுவதையும் தடுக்கும் என்பதுதான்.”
சார்க்கோசியின்
மத்தியதரைக்கடல் ஒன்றிய திட்டங்கள் பற்றி வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவித்த
மற்றொருவர் கடாபி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முனைப்பு
“ஒரு அவமதிப்பு,
நம்மை முட்டாள்கள்
எனக் கருதுவது”
என்று அவர் கூறி,
ஐரோப்பிய சக்திகள்
“அரபு லீக் மற்றும்
ஆபிரிக்க ஒன்றியத்தின் தலைமையகங்களான கெய்ரோ,
அடிஸ் அபபா
வழியேதான் செல்ல வேண்டும்”
என்றும்
வலியுறுத்தினார்.
இத்தகைய திட்டங்களில் உள்ள
பெரும் நலன்கள்,
ஆபத்துக்களைப் பற்றி
உணர்ந்த நிலையில்,
கடாபி பல பில்லியன்
டாலர் மதிப்புடைய
French Rafale போர்
விமானங்களை வாங்குவதில் இருந்து பின்வாங்கினார்.
இது இந்த விமானங்களை
எப்படியும் விற்க வேண்டும் எனக் கருதியிருந்த பிரெஞ்சு அரசாங்கத்திற்கு கூடுதல்
சீற்றத்தைக் கொடுத்தது.
2008ம்
ஆண்டு அமெரிக்க அடைமானச் செயல்கள் சரிவிற்குப் பின்,
ஐரோப்பாவிற்குள்
இருந்த நிதியச் சீரற்ற நிலைமைகள்
2009ல்
கிரேக்கத்தில் தொடங்கிய கடன் நெருக்கடிக்கு வழிவகுத்தன.
ஐரோப்பிய
சக்திகளிடையே தங்கள் நாட்டு வங்கிகளை காப்பாற்றுவதற்கு பிணை எடுப்பு மற்றும்
பொருளாதாரக் கொள்கை பற்றி பெரும் அழுத்தங்கள் எழுந்தன.
கடந்த மாதம்
பிரான்சை யூரோவில் இருந்து விலக்கிக் கொள்வதாக அச்சுறுத்தியதாகக் கூறப்பட்டது,
ஜேர்மனியை
பிணைஎடுப்பு
நிதிக்கு நன்கொடை
அளிக்கக் கட்டாயப்படுத்தியதற்காக நேர்ந்தது,
ஐரோப்பிய மத்திய
வங்கித் தலைவர் ஜோன் குளோட் திரிஷே
இனை
ஐரோப்பா
“இரண்டாம் உலகப்
போருக்குப் பின் மிகக் கடினமாக நிலைமையை எதிர்நோக்குகிறது”
என்று கூற வைத்தது.
ஜனவரி மாதம் துனிசியாவில்
பென் அலி ஆட்சி அகற்றப்பட்டதில் பிரான்ஸுக்கு ஏற்பட்ட சங்கடம் இருந்தபோதிலும்,
எகிப்து மற்றும்
மத்திய கிழக்கு முழுவதும் ஏற்பட்ட அமைதியின்மை சார்க்கோசிக்கு மீண்டும் ஒரு
வாய்ப்பைக் கொடுத்தது.
லிபிய அமைதியின்மையை
அவர் முன்பு ஜேர்மனி தடைக்கு உட்படுத்திய வட ஆபிரிக்காவில் பிரெஞ்சு நலன்களை
முன்னேற்றுவிப்பது என்பதற்காகப் பற்றி எடுத்துக் கொண்டார்.
மார்ச்
10ம் தேதி
சார்க்கோசி முதல் அரசாங்கத் தலைவராக லிபிய அரசாங்கமாக பெங்காசியைத் தளமாகக் கொண்ட
தேசிய
இடைக்கால குழுவை
அங்கீகரித்தார்.
அதன் பின் அவர் கடாபியுடன்
போருக்குச் செல்வதற்கு ஐக்கிய
நாடுகள்
பாதுகாப்புக்
குழுவில் ஒரு தீர்மானம் இயற்றப்படுவதற்கு அழுத்தம் கொடுத்தார்.
இந்த நடவடிக்கையை அவர்
தொடர்கையில்,
சார்க்கோசிக்கு போலி
இடது கட்சிகளான
சோசலிஸ்ட் கட்சி,
புதிய முதலாளித்துவ
எதிர்ப்புக் கட்சி மற்றும் பசுமைவாதிகளின்
அமைப்பு
போன்றவற்றின்
சகோதரத்துவத்தையும்
ஆதரவையும் ஏகாதிபத்திய போரை
மனிதாபிமானப் பணி,
குடிமக்களை
பாதுகாக்கும் அரிய செயல் என்று புனிதப்படுத்துவதற்கு நம்பலாம் என்பதை நன்கு
அறிந்திருந்தார்.
அவற்றின் இயல்பான
முட்டாள்தனம் மற்றும் ஏமாற்றுத்தனத்துடன்
இக்கட்சிகள்
ஏகாதிபத்திய பிரச்சார இயந்திரத்தில் தாங்கள் நம்பகமான பகுதிகள்தான் என்பதையும்
அம்பலப்படுத்திக் கொள்ள
கடமைப்பட்டுக்கொண்டன.
ஆனால் மேற்கு
அரசாங்கங்கள் தங்கள்
நடவடிக்கைகளின் பரந்த வரலாற்று தாக்கங்களை
முற்றிலும்
பொருட்படுத்தாத
தன்மையைக்
கொண்டிருந்தனர் என்பதை நம்புவது கடினம் ஆகும்.
தன் பங்கிற்கு
பிரிட்டன்,
சார்க்கோசியின்
விழைவுகளுக்கு ஊக்கம் கொடுத்தது;
இதற்குக் காரணம்
ஜேர்மனியிடம் இருந்து பிரான்ஸைப் பிரித்து பேர்லினின் அரசியல் செல்வாக்கை
குறைமதிப்பிற்கு உட்படுத்த வேண்டும் என்பதாகும்.
லிபியா மீது
பிரெஞ்சுத் தாக்குதலுக்கு இணங்கிய வகையில் வாஷிங்டன் பாரிஸில் இருந்து வருங்கால
அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு என்பதைச் சமாளிக்கும் தேவையில்லை என்று
கணக்கிட்டது.
முன்னாள் பாதுகாப்பு
மந்திரி ரும்ஸ்பெல்ட்
“பழைய ஐரோப்பா”
என்று நகையாடிய பொது
முன்னணி
இப்பொழுது
முறிந்துவிட்டது.
ஆனால்
சார்க்கோசியின் திட்டங்களுக்குத் தன் ஆதரவு இத்தகைய தாக்கங்களைக் கொடுக்கும் என
ஒபாமா
கணக்கிட்டிருப்பார்
என்று முழுமையாக
ஊகிக்கமுடியாது.
பேர்லினால்
பகிரங்கமாக எதிர்க்கப்படும் ஒரு போரில் பங்கு பெறுவதின் மூலம்,
மேற்கு ஐரோப்பாவுடன்
அரசியல்,
இராணுவ வகையிலான
ஒற்றுமையைத் தக்க வைத்துக் கொள்ளுதல் என்னும் தன் பல தசாப்தங்களாக இருந்த கொள்கையை
வாஷிங்டன்
கிட்டத்தட்டக்
கைவிட்டுவிட்டது.
பொருளாதாரக்
கொள்கைகள் பற்றிய மோதல்களில்
ஆழ்ந்துள்ள ஒரு
கண்டத்தில் ஐரோப்பிய சக்திகளுக்கு இடையேயான அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.
முன்பு நடந்தது
போலவே,
தன் வரலாற்று விரோதிகளால்
தந்திர உத்தியில் தோற்கடிக்கப்பட்டு தனிமைப்படுத்தபட்டுவிடக்கூடும் என அஞ்சும்
ஜேர்மனி தன் நலன்களைக் பாதுகாக்க வேறு
வழிவகைகளைக் காண
முயலும்.
மீண்டும் வாஷிங்டன் பேரழிவு
விளைவிக்கும் நிகழ்ச்சிகளை இயக்கக் கூடிய வகையில் செயல்பட்டுள்ளது.
லிபியாவின்
மீதான போர் என்பது
ஏகாதிபத்திய சதுரங்க விளையாட்டில் எடுத்துவைத்துள்ள
ஒரு அடியாகும்.
ஆனால் போரில்
ஈடுபடுபவர்கள் மரக்கட்டைகளுடன் விளையாடவில்லை;
மாறாக லிபியா
மற்றும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானவர்களின் உயிர்களுடன் விளையாடுகின்றனர்.
சர்வதேச
முதலாளித்துவ ஒழுங்கமைப்பின்
பூகோள
அரசியல்
உறுதிப்பாட்டின் மீது இது கொடுக்கக்கூடிய தொலைதூரவிளைவுடைய பாதிப்பை ஒட்டி,
இப்போர் இன்னும்
பரந்த அளவில்,
பேரழிவுதரக்கூடிய
மோதல்களுக்கு அரங்கு அமைக்கிறது. |