WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
French union campaign on undocumented workers
ends in expulsions, few legalisation
ஆவணமற்ற தொழிலாளர்களை
வெளியேற்றுவதை முடிவிற்கு கொண்டுவருவதற்கும்,
சில
சட்டமியற்றுதல்களுக்காகவும் பிரெஞ்சு தொழிற்சங்கம் பிரச்சாரம் செய்கிறது
By
Antoine Lerougetel
13 April 2011
ஸ்ராலினிச
CGT (தொழிலாளர்
பொதுக் கூட்டமைப்பின்)
தொழிற்சங்கத்தின்
தலைமையில் நடத்தப்பட்ட ஒரு மோசடித்தன பிரச்சாரம்,
ஆவணமற்ற குடியேறிய
தொழிலாளர்கள்
(sans-papiers)
சட்டப்பூர்வ உரிமைகள் பெற வேண்டும் என்று போலியாக நடத்தப்பட்டதானது அவர்களில்
450 பேர்
வெளியேற்றப்படுவதில் முடிந்துள்ளது என்று மார்ச்
31ம் தேதி
Les Echos
ல் வந்துள்ள தகவல்
தெரிவிக்கிறது.
CGT
யின் பிரச்சாரம் வசிக்கும்
உரிமைகளைப் பெறுவதை தடைக்கு உட்படுத்தப்படுவதற்கு ஒப்புதல் வேண்டும் என்பதைத்
தளமாகக் கொண்டுள்ளது.
இது பிரான்ஸின்
ஆவணமற்ற தொழிலாளர்களில் மிகச் சிலரைத் தவிர மற்றவர்களுக்கு பிரான்ஸில்
சட்டப்பூர்வமாக வசித்து வேலை செய்வதை இயலாததாக ஆக்கிவிட்டது.
அரசாங்கத்தின்
கோட்பாடான “பணியின்
மூலம் சட்டப்பூர்வமாக்குதல்”
என்பதை ஏற்ற
நிலையில், CGT
பிரான்ஸில்
வசிக்கும் எஞ்சியுள்ள
400,000 ஆவணமற்ற
தொழிலாளர்களை அரசாங்கம் குற்றவாளிகளாக ஆக்கியுள்ளதை சவாலுக்கு உட்படுத்தாமல்
விட்டுவிட்டது.
CGT
யின் பிரச்சாரம்
முன்கூட்டியே முதலாளிகளுடன் பேசப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
இது முதலாளிகள்
ஒப்புதல் கொடுக்கும் ஆவணமற்ற தொழிலாளர்கள்தான் சட்டபூர்வமாக்கப்படுவர் என்பதற்கு
ஆதரவைக் கொடுத்தது.
தொழிற்சங்கம்
மற்றும் அவர்களுடைய முதலாளிகளுடைய ஆதரவுடன் வேலைநிறுத்தம் செய்தால் தொழிற்சங்கம்
அவர்கள் சட்டபூர்வமாக்கப்படும் விண்ணப்பங்கள் பற்றி பேரத்தை நடத்தும் என்று கூறி
CGT அவர்களை
சங்கத்தில் சேர்த்திருந்தது.
தொழிலாளரின்
விண்ணப்பத் தொகுப்பில் தேவையான ஆவணங்களில் ஒன்றான உத்தியோகபூர்வ தொழிற்சங்கம் அவர்
ஒரு வேலைநிறுத்தம் செய்தவர் என்ற சான்றிதழையும் கொண்டிருக்க வேண்டும்.
டிசம்பர்
3, 2009ல் ஆவணமற்ற
தொழிலாளர்களுக்கு
CGT விடுத்த
சுற்றறிக்கை ஒன்று,
“ஆவணமற்ற
தொழிலாளர்கள் தங்கள்
CERFA படிவங்களை
[வெளிநாட்டுத்
தொழிலாளர்களை நியமிக்கும் ஒப்புதலுக்கான விண்ணப்பங்களை]
வைத்திருக்க
வேண்டும்,
இது முதலாளிகளால்
நிரப்பப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது.
இந்தப் படிவங்களின்
பிரதி ஒன்று மையத்தில்
11 அமைப்புக்களால்
வேலைநிறுத்தம் செய்தவர்களின் அட்டையின் புகைப்படப் பிரதியுடன் இருக்க வேண்டும்”
என்று கூறியிருந்தது.
அரசாங்கத்துடன் இரண்டு ஆண்டுகள் பேச்சுவார்த்தைகள் நடத்தி,
அவ்வப்பொழுது
6,000 ஆவணமற்ற
தொழிலாளர்கள் தொடர்புடைய வேலைநிறுத்த இயக்கங்களை நடத்தியபின்,
அவர்களுடைய
நம்பிக்கைகள் சிதறின.
ஆண்டிற்கு
200 சட்டபூர்வ
இசைவுகள் என்பதுதான் “வெற்றி
அடைந்தது”.
CGT மொத்தம்
அளித்ததோ 3,916
விண்ணப்பங்கள் ஆகும்.
CGT
யின் விதிமுறையில்
குறிப்பிடத்தக்க அழிவுகரமான,
விண்ணப்பத்தை
அளிப்பதற்கு தவறான முறையில் வந்திறங்கிய தொழிலாளர்கள் தங்கள் அடையாளத்தையும்,
விலாசத்தையும்
வெளிப்படுத்த வேண்டும் என்று இருந்தது ஆகும்.
இவ்விதத்தில்
அவர்கள் பொலிசாரால் எளிதில் கண்டுபிடிக்கப்பட்டனர்.
2011க்குள்
28,000 சட்டவிரோத
குடியேறியவர்களை நாடு கடத்த வேண்டும் என்ற இலக்கை அடைய வேண்டும் என்று பொலிசாருக்கு
உத்தரவுகள் இருந்தன.
ஆவணமற்ற
தொழிலாளர்களுக்கு மக்களிடையே இருந்த பரிவுணர்வை அகற்றும் வகையில் அவர்கள் சார்பாக
CGT குறுக்கிட்டது.
அதேபோல்
அரசாங்கத்தின் குடியேற்ற எதிர்ப்புக் கொள்கைகளுக்கும் எதிர்ப்பு இருந்தது.
மே
2006ல் பாரிசில்
நடந்த 20,000
பேர் கொண்ட
ஆர்ப்பாட்டம் ஒன்று ஆவணமற்ற தொழிலாளர்கள் அனைவரும் சட்டபூர்வமாக்கப்பட வேண்டும்
என்று கோரியது.
இதற்கு பல இளைஞர்கள்
ஆதரவு கொடுத்திருந்தனர்.
அவர்கள்
இப்போராட்டத்தை ஆண்டின் முன்னதாக
CPE க்கு
(முதல் வேலை
ஒப்பந்தம்)
எதிரான மக்கள்
அணிதிரள்வின் தொடர்ச்சி என்று கண்டனர்.
அந்த ஒப்பந்தம்
இளைஞர்களின் வேலைப் பாதுகாப்பை அகற்றும் நோக்கத்தைக் கொண்டிருந்தது.
பாடசாலை
மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும்,
அவர்களுடைய
வகுப்புத் தோழர்கள் மற்றும் அவர்களுடைய ஆவணமற்ற பெற்றோர்கள் கைது செய்யப்படுதல்
மற்றும் வெளியேற்றப்படுதல் ஆகியவற்றை எதிர்த்தனர்.
2008ல்
CGT முக்கிய
தொழிற்சங்க கூட்டமைப்புக்கள்,
குடியுரிமை
ஆர்வலர்கள் மற்றும் இனவெறி எதிர்ப்பு அமைப்புக்கள்,
குடியேற்ற ஆதரவு
அமைப்புக்களுடன் “11
பிரிவுகளைக் கொண்ட
குழுவுடன்”
ஒரு கூட்டு அமைத்தது.
அரசாங்கம்
CGT ஐ சட்டபூர்வ
விண்ணப்பங்களை கொடுக்கும் ஆவணமற்ற தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே
உத்தியோகப்பூர்வ பேச்சுவார்த்தைகளை அரசாங்கத்துடன் நடத்தும் அமைப்பு என்று
நியமித்தது.
அக்டோபர்
1, 2009ல்
கையெழுத்திடப்பட்ட கடிதம் ஒன்று பிரதம மந்திரி பிரான்சுவா பியோனுக்கு
CGT ஆல் குழுவின்
சார்பாக அனுப்பப்பட்டது நவம்பர்
20, 2007ல்
இயற்றப்பட்ட சட்டத்தின்
40வது விதியில்
பொதிந்துள்ள சட்டபூர்வத்திற்கான கடுமையான நிபந்தனைகளை எதிர்க்கவில்லை.
பியோன் அவர்களுக்கு
உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்,
அவை நியாயமான
முறையில் செயல்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்,
“இன்னும்
சிறந்த,
எளிதாக்கப்பட்ட அளவு
கோல்களை வரையறுக்க வேண்டும்,
நாடு முழுவதும் இவை
செயல்படுத்தப்பட வேண்டும்.
அது தொழிலாளர்கள்
எங்கு தொழில் பார்த்தாலும்,
ஒரு தொழில்
பகுதிக்குள் ஒவ்வொருவரும் சமமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்பதை உறுதியளிக்க
வேண்டும்.
எந்தப் பகுதியிலும்
உறுதியாகவும் சீராகவும் இருக்கும் ஒரு சட்டபூர்வ வழிவகையை வரையறுக்க வேண்டும்”
என்று அது கோரியது.
இக்குழு
அரசாங்கத்துடன் ஜூன்
18, 2010ல்
வேலைநிறுத்தம் செய்தவர்களின் வசிப்பதற்கான விண்ணப்பங்கள் மற்றும் பணி உரிமங்கள்
2011 மார்ச்
31க்குள்
அளிக்கப்பட்டால் அரசாங்க அதிகாரிகளால் அது பரிசீலிக்கப்பட வேண்டும் என்ற
ஒப்பந்தத்தை செய்து கொண்டது.
Le Monde
எழுதியதாவது:
“எனவே
ஜூன் மாதம்,
உட்குறிப்பான
உடன்பாடு CGT
க்கும் இந்த
“வேலைநிறுத்தக்காரர்கள்”
“சிறப்பான
சலுகைகளை பெறுவர்”
என்னும் விதத்தில்
நடத்தப்பட வேண்டும் என்பதற்கு விண்ணப்பமானது அமைச்சரகத்துடன் ஏற்பட்டது.
ஆனால்
பிரச்சாரத்தின் விளைவு காட்டியுள்ளதுபோல்,
“எச்சிறப்புச்
சலுகைகளும்”
ஆவணமற்ற
தொழிலாளர்களுக்கு காட்டப்படவில்லை.
உண்மையில்
CGT ஆவணமற்ற
தொழிலாளர்களின் போராட்டத்தை தனிமைப்படுத்திக் காட்டிக் கொடுத்தது.
இது அதன் தேசிய
அடிப்படையிலுள்ள ஊதியங்கள் நிலைமைகளுக்கான பேச்சுவார்த்தைகள் என்ற சிண்டிகலிச,
முதலாளித்துவ
சார்பின் தன்மையுடன் ஒத்திருந்தது.
இது தொழிற்சங்க
அதிகாரத்துவத்திற்கு தேசியப் பொருளாதாரத்தின் இலாபத் தன்மையில் ஒரு முக்கிய நலனைக்
கொடுக்கிறது.
பெரும் வர்க்க
அழுத்தங்கள் மற்றும் தொழிற்சங்கப் போட்டிகள் என்று உலகப் பொருளாதார நெருக்கடியால்
தோற்றுவிக்கப்பட்டவை,
தொழிற்சங்கங்களை
முதலாளித்துவ “தேசிய
நலன்களுடைய”
செயற்பாட்டிற்கு
சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்தும் அமைப்புக்களாக மாற்றிவிட்டன.
மிகச்
சமீபத்திய காலத்தில்,
இது ஓய்வூதியங்கள்
மற்றும் சமூகநலப் பணிகளில் பலமுறை வெட்டுக்கள் என்ற வடிவமைப்பைக் கொண்டது.
இவை ஜனாதிபதி
நிக்கோலா சார்க்கோசிக்கும்
CGT க்கும் இடையே
ஏற்பட்ட பேச்சுவார்த்தைகள் மூலம் வந்தன.
அதே நேரத்தில்
சார்க்கோசி பெருகிய முறையில் குடியேறியவர்கள் மீது நவ பாசிசத் தாக்குதல்களைப்
பெருகிய முறையில் மேற்கோண்டு தொழிலாள வர்க்கத்தைப் பிரிக்கவும்,
உள்நாட்டுத்
தொழிலாளர்கள் மீது வர்க்க
யுத்தத்தை
நடத்தவும்
ஆப்கானிஸ்தானில் ஏகாதிபத்திய போர் நடத்தவும் இப்பொழுது லிபியா,
ஐவரி கோஸ்ட்
ஆகியவற்றில் நடத்தவும் முற்பட்டுள்ளார்.
ஸ்ராலினிசக்
கம்யூனிஸ்ட் கட்சியும்
(PCF) CGTயும்
நீண்டகாலக் கொள்கையாக குடியேறுவோர் மீது தடைக்கு ஆதரவாக
1970களிலிருந்து
இருந்துவந்துள்ளன.
வேலையின்மையை
எதிர்ப்பதற்கு தேசிய பாதுகாப்பு முறை என்ற கூற்றை இதற்குத் துணையாகக் கொண்டனர்.
இது பிரெஞ்சு
முதலாளித்தவத்திற்கு ஏற்றம் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
1970ல் அவர்கள்
“பிரெஞ்சுப்
பொருட்களை வாங்குக,
பிரெஞ்சுப்
பொருட்களை உற்பத்தி செய்க”
என்ற பிரச்சாரத்தை
தொடக்கினர்.
அதாவது பிரெஞ்சு
முதலாளிகளுடன் ஒற்றுமையாக ஒன்றுபட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் அவற்றின்
தொழிலாளர்களுக்கு எதிராகப் போராடினர்.
2008ல்
அரசாங்கத்துடன் கொண்ட
CGT யின் உடன்பாடு
ஆவணமற்ற தொழிலாளர்கள் குழுவுடன் மோதலைக் கொண்டு வந்தது.
குறிப்பாக பாரிசை
தளமாகக் கொண்ட
CSP75 எனப்படும்
Collectif de sans-papiers
உடன்.
பாரிஸ்
பகுதியிலுள்ள
2,000 ஆவணமற்ற
தொழிலாளர்களைப் பிரதித்துவப்படுத்தும்
CSP75,
அரசாங்கத்துடன்
CGT கொண்ட
பிரத்தியேக உறவிற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.
இது
CGT யின் தொழிற்சங்க
அரங்கான Bourse
du trevail ஐ மே
2008ல்
ஆக்கிரமித்தது.
CSP75 ன் அறிக்கை
விளக்கியது:
“CSP75
இந்தப் பிரத்தியேகப்
பங்கை ஏற்க முடியாது.
இது
CGT க்கு பாரிஸ்
பகுதி நிர்வாக அலுவலகங்களில் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து கூட்டாகக்
கொடுப்பதற்கான உரிமை ஆகும்.”
11
பிரிவுகளிலுள்ள குழு,
CIMADE எனப்படும்
குடியேறியவர்களுக்கான உதவி அமைப்புக்கள்,
RESF (எல்லைகளற்ற
கல்வி இணையம்),
LDH (மனித உரிமைகள்
லீக்), Droits
devant -சோசலிஸ்ட்
கட்சி,
கம்யூனிஸ்ட் கட்சி,
ஒலிவியே
பெசன்ஸநோவின் LCR
(NPA எனப்படும்
புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியின் முன்னோடி),
Lutte Ouvriere (LO,
தொழிலாளர்கள் போராட்டம்)
-அனைத்தும்
CSP75 ன்
ஆக்கிரமிப்பைக் கண்டித்தன.
இந்த
அமைப்புக்கள் பெருகிய முறையில் நச்சுத்தன்மைவாய்ந்த
பிரசாரத்திற்கு
CGT
க்கு ஆதரவு கொடுத்து
தொழிலாளர்களுக்கு
எதிரான
அரச
மற்றும் பொலிஸ்
படைகளுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து
செயல்பட்டன.
இவை
PCF நடத்திய
செய்தித்தாள்கள் விழாவில் (Fete
de l’Humanite)
CSP75
அங்கத்தவர்கள்
செப்டம்பர்
12, 2008ல்
CGT குண்டர்களால்
தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
CGT அதிகாரிகள்
அவர்களிடம் “உங்கள்
விண்ணப்பங்களைத் தடுக்க நாங்கள் அனைத்தையும் செய்வோம்.”என்றனர்.
ஜூன்
24, 2009 அன்று
CGT யினால்
அனுப்பப்பட்ட கமாண்டோ குழு ஒன்று
Bourse du travail
ல் இருந்து ஆவணமற்ற தொழிலாளர்களை தாக்கி அப்புறப்படுத்தியது.
இத்தாக்குதல்
CRS கலகப் பிரிவுப்
பொலிசுடன் ஒருங்கிணைந்து நடத்தப்பட்டது.
பிந்தையவர்
வெளியேற்றத்தை கட்டாயமாக்கச் செய்வதில் உதவிய பின்
600 அல்லது அதற்கும்
மேற்பட்ட ஆவணமற்ற தொழிலாளர்களை வெளி நடைமேடையில் சூழ்ந்து கொண்டனர்.
வெளியேற்றத்திற்கு
பாரிஸ் நகரவை மற்றும் அதன் சோசலிஸ்ட் மேயர் பேர்னார்ட் டுலானோயே ஆகியோரின் ஒப்புதல்
கிடைத்தது.
ஒவ்வொரு
கட்டத்திலும்
NPA, CGT யின்
செயல்களை ஆவணமற்ற தொழிலாளர்களுக்கு எதிராக ஆதரவு கொடுத்து வருகிறது.
மிருகத்தன
வெளியேற்றத்திற்கு அது எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என்பதோடு மட்டும்
இல்லாமல்,
அதை நியாயப்படுத்தி ஒரு
அறிக்கையையும் வெளியிட்டது.
“மொத்தத்தில்
NPA உறுப்பினர்கள்
இத்தகைய ஆக்கிரமிப்பை,
தொழிற்சங்க இயக்கச்
செயல்பாட்டைத் தடைக்கு உட்படுத்துவது எனக் கருதுவதால்,
அவர்களுடைய
வசிப்பதற்கான உரிமை ஆவணங்களை பெறுவதற்காக,
ஆக்கிரமிப்பாளர்கள்
அரசாங்கத்துடனும்,
பொலிஸ்
நிர்வாகத்துடனும் ஒரு சமச்சீர் அதிகாரத்தைக் கட்டமைக்க அனுமதிக்காது.”
இந்த
அறிக்கையுடன்,
முழு இடது
உத்தியோகபூர்வ நடைமுறையின் கருத்துக்களுடன் இயைந்து,
NPA தன்கருத்தை
தெளிவாக்கியது.
தொழிற்சங்கங்கள்
வர்க்கப் போராட்டத்தை அடக்குதல் மற்றும் அரசாங்கத்தின் அமைப்புக்களுடன்
ஒத்துழைப்பதற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் தலையட்டை அது அனுமதிக்காது”
என்பதே அது. |