WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
:
லிபியா
எகிப்திய
இராணுவ
ஆட்சி
எதிர்ப்புக்கள்,
வேலைநிறுத்தங்கள்
தொடர்கையில்
வன்முறையை
விரிவாக்குகிறது
By our
correspondent
14 April 2011
செவ்வாயன்று
எகிப்திய
இராணுவம்
மீண்டும்
தஹ்ரிர்
சதுக்கத்தில்
தாக்குதல்
நடத்தி
அமைதியாக
உள்ளிருப்புப்
போராட்டம்
நடத்திக்
கொண்டிருந்த
ஆர்ப்பாட்டங்காரர்களை
வன்முறையைப்
பயன்படுத்திக்
கலைத்தனர்.
மாலை
5 மணிக்கு
இராணுவம்
சதுக்கத்திற்குள்
கவச
வாகனங்களுடன்
வந்து
மையத்தில்
இருந்து
எதிர்பாளர்களை
அகற்றிப்
பின்
அப்பகுதியில்
பெரும்
ஆயுதம்
தாங்கிய
படையினரால்
ஆக்கிரமிக்கச்
செய்தனர்.
தஹ்ரிர்
சதுக்கத்தை
துருப்புக்கள்
ஆக்கிரமித்தல்
இதன்
பின்
இராணுவம்
நகரத்தின்
மையத்திற்குச்
சென்றுவிட்ட
ஆர்ப்பாட்டக்காரர்களையும்
ஆர்வலர்களையும்
வேட்டையாடி
ஏராளமான
கைதுகளைச்
செய்தது.
இத்தாக்குதலில்
பயன்படுத்தப்பட்ட
சிறப்புப்
படைகளுக்குள்
இழிந்த
பிரிவு
777ம்,
இருந்தது;
இது
“ஒரு
பயங்கரவாத-எதிர்ப்புப்”
பிரிவு,
டெல்டா
போர்ஸ்
போன்ற
அமெரிக்கப்
பிரிவுகளுடன்
வாடிக்கையாக
பயிற்சி
நடத்துகிறது
சிறப்புப்படைகள்
கெய்ரோ
நகர்ப்பகுதியில்
இருந்த
வீடுகளைத்
தாக்கி
எதிர்ப்பாளர்கள்,
ஆர்வலர்களுக்காக
உணவு
விடுதிகளிலும்
தேடி
அலைந்தனர்.
சனிக்கிழமை
காலையிலேயே
தஹ்ரிர்
சதுக்கத்தில்
இருந்து
மிருகத்தனமாக
ஆர்ப்பாட்டக்காரர்களை
இராணுவம்
அகற்றத்
தொடங்கியது;
இதற்காக
அதிர்ச்சியூட்டும்
துப்பாக்கிகள்,
தடிகள்
மற்றும்
உண்மையான
ஆயுதங்களையும்
அது
பயன்படுத்தியது.
உலக
சோசலிச
வலைத்
தளத்திடம்
கண்ணால்
பார்த்த
சாட்சிகள்
துருப்புக்கள்
நேரடியாக
ஆர்ப்பாட்டக்காரர்கள்
மீது
சுட்டது
மற்றும்
ஏழு
பேர்
இறந்தது
ஆகியவற்றைக்
கண்டது
பற்றிக்
கூறினர்.
பாதிக்கப்பட்டவர்களில்
ஒருவர்
வெள்ளியன்று
பெரும்
எதிர்ப்புக்களின்போது
எதிர்ப்பாளர்கள்
பக்கம்
சேர்ந்த
ஒரு
இளம்
அதிகாரியாவார்.
மோசமான
தாக்குதல்
இருந்தபோதிலும்கூட,
இராணுவம்
சதுக்கத்தைக்
காலி
செய்ய
முடியவில்லை.
எதிர்ப்பாளர்கள்
பின்வாங்க
மறுத்து
இராணுவ,
பாதுகாப்புப்
படைகளுக்கு
எதிராகத்
தங்களுக்கு
பாதுகாப்புத்
தடைகளை
அமைத்துக்
கொண்டனர்.
எகிப்திய
இராணுவம்
மோதல்கள்
பற்றிய
இக்காட்சி
புரட்சியின்
முதல்
தினங்களை
நினைவிற்குக்
கொண்டுவந்தன.
அப்பொழுது
எதிர்ப்பாளர்கள்
தங்களை
ஆட்சியின்
குண்டர்களிடம்
இருந்து
பாதுகாத்துக்
கொள்வதற்கு
முள்
வேலி,
தடுப்புக்கள்
ஆகியவற்றை
நிறுவினர்.
இம்முறையிருந்த
வேறுபாடு
என்னவெனில்
விரட்ட
வந்தவர்கள்
இராணுவத்தில்
இருந்தே
நேரே
வந்தவர்கள்.
முன்பு
இராணுவம்
ஆர்ப்பாட்டங்கள்
தொடங்கியபோது
வெறுமே
பார்த்துக்
கொண்டிருந்தது.
உதாரணமாக
அப்படித்தான்
பெப்ருவரி
2 அன்று
முபாரக்
ஆட்சியின்
குண்டர்கள்
ஆயிரக்கணக்கான
அமைதியான
ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது
தாக்குதலை
தஹ்ரிர்
சதுக்கத்தில்
நடத்தினர்.
படுகொலைகளை
தடுக்க
இராணுவம்
சுண்டுவிரலைக்
கூட
நகர்த்தவில்லை.
சனி
மற்றும்
செவ்வாய்
தாக்குதல்களைத்
தொடர்ந்து
இராணுவக்
குழுவும்
அரசாங்கத்
தொலைக்காட்சி
நிறுவனமும்
தஹ்ரிர்
சதுக்கத்தில்
எஞ்சியுள்ள
எதிர்ப்பாளர்கள்
பழைய
ஆட்சியின்
கூலிக்கு
அமர்த்தப்பட்ட
குண்டர்கள்
எனவும்
இராணுவத்திற்கும்
மக்களுக்கும்
இடையே
பிளவை
உண்டுபண்ணுவதற்கு
உள்ளனர்
என்றும்
அறிவித்தனர்.
இத்தகைய
இழிந்த
பிரச்சாரப்
பொய்
அநேகமாக
எல்லா
உத்தியோகபூர்வ
அரசியல்
கட்சிகளாலும்
ஆதரிக்கப்பட்டது;
இதில்
ஜனாதிபதி
வேட்பாளர்
மகம்மத்
எல்
பரடெய்
மற்றும்
முஸ்லிம்
சகோதரத்துவமும்
அடங்கும்
இச்சக்திகள்
அனைத்துமே
இராணுவத்திடம்
நம்பிக்கை
என்பது
ஒரு
சிவப்புக்
கோடு
போல்
என்றும்,
அது
மீறப்படக்கூடாது
என்றும்
வலியுறுத்துகின்றனர்.
நாட்டின்
ஒற்றுமைக்கு
ஆபத்து
நேரக்கூடாது,
இராணுவம்
புரட்சிக்கு
ஆதரவாக
உள்ளது
என்ற
கருத்தை
அவர்கள்
வலியுறுத்துகின்றனர்.
எதிர்ப்பாளர்களுக்கு
எதிராக
தஹ்ரிர்
சதுக்கத்தில்
இராணுவம்
எகிப்திய
முதலாளித்துவம்
பல
வாரங்கள்
இராணுவம்
கொடும்
வன்முறையை
நட்டத்தியும்கூட
இராணுவ
ஆட்சிக்கு
நிபந்தனையற்ற
ஆதரவைக்
கொடுப்பது,
தன்னைத்தானே
ஜனநாயக
சக்திகள்
என
அறிவித்துக்கொண்டிருக்கும்
இந்த
அமைப்புகளின்
உண்மைத்
தன்மையைப்
பற்றி
நிறையக்
கூறுகிறது.
ஞாயிறன்று
எகிப்திய
வலைத்
தள
எழுத்தாளர்
மைக்கேல்
நபில்
ஒரு
இராணுவ
நீதிமன்றத்தால்
3 ஆண்டு
சிறைத்
தண்டனை
விதிக்கப்பட்டார்.
ஒரு
கட்டுரையில்
இராணுவம்
புரட்சியின்
பக்கம்
இருந்ததே
இல்லை
என்று
நபில்
நிரூபித்திருந்தார்;
மாறாக
அது
இராணுவ
நீதிமன்றங்கள்
முன்
எதிர்ப்பாளர்களை
நிறுத்துவதற்கு
முன்
அவர்களைக்
கைது
செய்து
சித்திரவதைக்கு
உட்படுத்தியது
என்று
கூறியிருந்தார்.
தம்மைத்
தாமே
‘ஜனநாயகவாதிகள்’
எனக்
கூறிக்கொள்ளுபவர்கள்
எவரும்
அவருக்குத்
தண்டனை
விதிக்கப்பட்டதையோ,
அவர்
இழிபெயர்பெற்ற
Tora
சிறையில்
மாற்றப்பட்டுள்ளதற்கும்
குறைகூறவில்லை.
புரட்சியை
பலாத்காரம்
மூலம்
முற்றுப்புள்ளி
வைக்கும்
இராணுவ
ஆட்சியின்
முயற்சிகளுக்கு
அநேகமாக
எகிப்திய
முதலாளித்துவத்தின்
மிகச்
செல்வாக்கு
மிக்க
அனைத்துப்
பிரதிநிதிகளுடைய
ஆதரவும்
உள்ளது.
உத்தியோகபூர்வ
எதிர்த்தரப்புக்
கட்சிகளும்
குழுக்களும்,
எல்
பரடெயின்
தேசிய
மாற்றத்திற்கான
கூட்டு,
முஸ்லிம்
சகோரத்துவம்
போன்றவை,
முதாளித்துவ
மற்றும்
போலி
இடது
கட்சியான
அல்-டகமு
போன்றவை
எதிர்த்துபோராடும்
தொழிலாளர்கள்,
இளைஞர்களின்
நலன்களைப்
பிரதிபலிக்கவில்லை;
மாறாக
ஆளும்
உயரடுக்கின்
பிரிவுகள்
தங்கள்
நலன்கள்
புரட்சியால்
அச்சுறுத்தப்படுவதாகவும்,
இதில்
தொழிலாளர்
வர்க்கம்
பெருகிய
முறையில்
உந்துசக்தியாக
வெளிப்பட்டுவருகிறது
என்பதையும்
காண்கின்றன.
தஹ்ரிர்
சதுக்கத்தில்
இராணுவ
அணிவகுப்பு
கடந்த
வெள்ளியன்று
நாட்டின்
தொழில்துறை
மையங்களில்
இருந்து
தொழிலாளர்கள்
தஹ்ரிர்
சதுக்கத்தில்
கூடி
குறைந்தபட்ச
ஊதியம்,
உயர்மட்ட
ஊதியங்களுக்கு
வரம்பு
மற்றும்
தனியார்மயமாக்கப்பட்ட
நிறுவனங்கள்
மீண்டும்
தேசியமயமாக்கப்பட
வேண்டும்
ஆகியவற்றைக்
கோரினர்.
பின்
செவ்வாயன்று
தஹ்ரிர்
சதுக்கத்தில்
சமீபத்திய
வன்முறை
நடந்த
தினத்தன்றே
ஒரு
புதிய
வேலைநிறுத்த
அலைகள்
நாடெங்கிலும்
பரவியது;
பல
தொழில்துறைகளில்
இருந்த
தொழிலாளர்களும்
அதிக
ஊதியங்களையும்,
சிறந்த
பணி
நிலைமைகளையும்
கோரினர்.
An Masry Al Youm
ல்
வந்துள்ள
ஒரு
அறிக்கையின்படி,
350 தொழிலாளர்கள்
நைல்
நதிப்படுகையிலுள்ள
டாக்ஹ்லியா
மாநிலத்தில்
உள்ள
சிறு
நகரமான
டால்க்காவிலுள்ள
சமூக
விவகாரங்கள்
அமைச்சரகத்திற்கு
முன்
எதிர்ப்புத்
தெரிவித்தனர்.
கெய்ரோவில்
200 தொழிலாளர்கள்
வரிகள்
ஆணைய
அலுவலகத்திற்கு
அணிவகுத்து
சென்று
தங்களுக்கு
ஊதியங்கள்,
மேலதிக
கொடுப்பனவுகள்
வழங்கப்பட
வேண்டும்
என்று
கோரினர்.
மற்றொரு
எதிர்ப்பு
நீதித்துறை
மந்திரியின்
அலுவலகத்தின்
முன்
நடத்தப்பட்டது.
அலெக்சாந்திரியாவில்
ஆசிரியர்கள்
கல்வி
அமைச்சரகத்தின்
முன்
ஆர்ப்பாட்டம்
நடத்தி
நிரந்தர
வேலை
ஒப்பந்தங்களைக்
கோரினர்.
கார்பியாவில்
1,200 தொழிலாளர்கள்
நிதி
மற்றும்
தொழில்துறை
நிறுவனத்தில்
இருந்து
அதிக
ஊதியங்களை
கோரி
எதிர்ப்புத்
தெரிவித்தனர்.
மெனௌபியாவில்
350 தொழிலாளர்கள்
Chipsy நிறுவனத்தில்
அதிக
ஊதியம்
கேட்டு
ஆர்ப்பாட்டம்
நடத்தினர்.
செவ்வாயன்றே
நைல்
நதிப்படுகையில்
ஜவுளித்
தொழிலாளர்களும்
எதிர்ப்புக்களை
நடத்தினர்.
நாட்டின்
தென்பகுதியிலும்
பெருந்திரளான
ஆர்ப்பாட்டங்கள்
நடைபெற்றன.
அசியுட்டில்
நெசவுத்
தொழிற்சாலை
தொழிலாளர்கள்
ஆலை
ஒரு
புதிய
முதலாளியால்
வாங்கப்படுவதை
எதிர்த்து
ஆர்ப்பாட்டம்
செய்தனர்;
புதி
அமைப்பு
தனியார்
வங்கிகளின்
கூட்டுப்
பிரிவு
ஆகும்.
இந்த
உடன்பாட்டிற்கு
முபாரக்
ஆட்சியின்
முன்னாள்
பிரதம
மந்திரி
அஹ்மத்
நஜிப்
ஏற்பாடு
செய்திருந்தார்.
மற்றொரு
எதிர்ப்பு
இஸ்மைலியா
மாநிலத்தில்
நடந்தது;
அங்கு
மஹ்சமா
கிராமத்து
மக்கள்
1,500
உள்ளூர்வாசிகளுக்கு
ரொட்டி
தயாரித்து
வழங்கும்
ரொட்டி
அடுமனை
மூடப்படுவதை
எதிர்த்து
ஆர்ப்பாட்டம்
செய்தனர்.
சூயல்
கால்வாய்
தொழிலாளர்களின்
வேலைநிறுத்தமும்
தொடர்கிறது.
ஆயிரக்கணக்கான
தொழிலாளர்கள்,
சூயஸ்
கால்வாய்
ஆணையத்துடன்
தொடர்புடைய
ஆறு
நிறுவனங்களில்
வேலை
செய்பவர்கள்
ஏப்ரல்
3ம்
தேதியில்
இருந்து
அதிக
ஊதியங்கள்,
கூடுதல்
சுகாதாரப்
பாதுகாப்பு
மற்றும்
உயர்ந்த
ஓய்வூதியத்
தொகை
ஆகியவற்றை
கோரி
வேலைநிறுத்தத்தில்
ஈடுபட்ட்டுள்ளனர்.
நிறுவனத்தின்
அலுவலகங்கள்
சூயஸ்,
செய்த
துறைமுகம்
மற்றும்
இஸ்மைலியா
ஆகியவற்றில்
உள்ளன.
தொழிலாளர்கள்
தங்கள்
எதிர்ப்புக்கள்
சூயஸ்
கால்வாய்
ஆணையத்தின்
தலைமையகத்திற்கு
மாற்றப்படும்
என்றும்
தங்கள்
கோரிக்கைகளுக்கு
இணங்காவிட்டால்
உண்ணாவிரதப்
போராட்டம்
நடத்தப்போவதாகவும்
அச்சுறுத்தியுள்ளனர்.
எகிப்திய
தொழிலாளர்களின்
முடிவிலா
வேலைநிறுத்தங்களும்
எதிர்ப்புக்களும்
இராணுவ
ஆட்சியையும்
அதன்
மேலை
ஆதரவாளர்களையும்
நரம்புத்
தளர்ச்சிக்கு
உட்படுத்திவிட்டன.
எல்லாவற்றிற்கும்
மேலாக
சூயஸ்
கால்வாய்
தொழிலாளர்களின்
வேலைநிறுத்தம்
நேரடியாக
அப்பகுதியில்
ஏகாதிபத்தியத்தின்
மூலோபாய,
பொருளாதார
நலன்களுக்கு
நேரடி
அச்சுறுத்தலைக்
கொடுக்கிறது.
செவ்வாயன்று
இராணுவத்தால்
நாட்டின்
பிரதம
மந்திரியாக
இருத்தப்பட்டுள்ள
எசம்
ஷரப்
சூயஸ்
கால்வாய்
ஆணையத்தின்
தலைவர்
அட்மைரல்
அஹ்மத்
படேலை
கால்வாய்
நெருக்கடிக்கு
முடிவு
காணுமாறு
உத்தரவிட்டார்.
எதிர்ப்பாளர்களுக்கு
எதிரான
சமீபத்திய
வன்முறையைக்
காணும்போது,
இது
ஒரு
அச்சுறுத்தல்
என்றுதான்
அறியப்பட
வேண்டும்.
ஆட்சி
பெரும்
பலாத்காரத்தை
பயன்படுத்தி
வேலைநிறுத்தத்தை
முடிக்க
தயாரிப்புக்களை
செய்கின்றது.
இக்கொள்கைக்கு
முக்கிய
ஏகாதிபத்திய
சக்திகள்
மற்றும்
சர்வதேச
நிதியச்
சந்தைகளின்
முழு
ஆதரவும்
உள்ளது.
மேற்கத்தைய
அரசியல்வாதிகள்
எகிப்தில்
இராணுவ
சர்வாதிகாரம்
நடத்திவரும்
வன்முறை
பற்றி
குறைகூறுவதை
தவிர்க்கப்
பெரிதும்
முற்பட்டுள்ளனர்.
அத்தகைய
சக்திகளுக்கு
எகிப்திய
இராணுவம்
அப்பகுதியில்
முதலாளித்துவத்தின்
பாதுகாப்பை
உத்தரவாதப்படுத்துகிறது.
“இனி
திரும்ப
வழியில்லை”
என்ற
தீய
தலைப்பில்
சமீபத்தில்
பார்க்ளேஸ்
(Barclays)
வெளியிட்டுள்ள
அறிக்கை
ஒன்று,
எகிப்திய
நாளேடு
அல்
அஹ்ரமில்
பதிப்பிக்கப்பட்டது.
இது
எகிப்தில்
உள்ள
பொருளாதார
நிலைமை
பற்றி
சர்வதேச
மூலதனத்தின்
பிரதிநிதிகளுடைய
உண்மையான
சிந்தனையை
வெளிப்படுத்துகிறது.
அறிக்கையில்
அடையாளம்
காணப்பட்டுள்ள
பிரச்சினை
ஒன்று
நடக்கும்
வேலைநிறுத்தம்தான்
எகிப்திய
ஆலைகளில்
உற்பத்தித்திறனின்
சரிவிற்கு
முக்கிய
பொறுப்பு
என்பதாகும்.
இரண்டாம்
பிரச்சினை
தொழிலாளர்களின்
எதிர்ப்புக்களுக்கு
கொடுக்கப்பட்ட
சலுகைகள்
அதிக
ஊதியங்களுக்கு
வழிவகுத்துள்ளன
என்பதாகும்.
இது
“தொழிலாளர்களுக்கு
சிறப்பாக
இருந்தாலும்கூட”
“போட்டித்தன்மைக்கு”
பெரிய
அடி
என்று
பிரிட்டிஷ்
வங்கி
எழுதியுள்ளது.
அறிக்கைப்படி,
நன்னம்பிக்கைக்கு
ஒரு
காரணம்
ஆளும்
இராணுவக்
குழு
ஆகும்.
இராணுவ
ஆட்சி
“ஜனநாயக
ஆட்சிக்கு
ஒழுங்கான
மாற்றத்தை”
உறுதி
செய்கிறது,
“உறுதியற்ற
தன்மைகளைக்
குறைக்கத்
தேவையான
நடவடிக்கைகளை
எடுக்கிறது,
இடைக்கால
தீர்வுகளை
பொறுத்தவரை
தெளிவைக்
கொடுக்கிறது”
என்று
பார்க்ளேஸ்
அதைப்
பாராட்டியுள்ளது.
இராணுவக்
குழுவிற்கு
எதிராக
அறிக்கையில்
வந்துள்ள
ஒரே
குறைகூறல்
முபாரக்
ஆட்சியின்கீழ்
வெளிநாட்டு
முதலீட்டாளர்களுடன்
முடிவு
செய்யப்பட்ட
சில
ஒப்பந்தங்கள்
மறு
ஆய்வு
செய்யப்படும்
என்ற
அதன்
முடிவுதான்.
இது
எகிப்தியப்
பொருளாதாரத்தின்
வருங்காலப்
போக்கு
பற்றி
தவறான
சமிக்ஞைகளை
கொடுக்கிறது
என்று
அறிக்கை
முடிவுரையாக
தெரிவிக்கிறது;
ஏனெனில்
ஒரு
தடையற்ற
பொருளாதாரத்திற்கு
ஆதரவாக
அனைத்து
அறிக்கைகளும்
வந்தபோதிலும்
இவ்வாறு
கூறப்படுவது
சரியல்ல
என்று
அறிக்கை
கருத்துத்
தெரிவிக்கிறது.
பார்க்ளேஸிற்
அறிக்கை
புதிய
எகிப்திய
இராணுவ
சர்வாதிகாரத்தில்
இருந்து
சர்வதேச
வங்கிகள்
எதிர்பார்ப்பைத்
தெளிவாக்குகிறது.
அவை
எகிப்திய
தொழிலாள
வர்க்கம்
மிருகத்தனமாக
அடக்கப்படுதல்
மற்றும்
முபாரக்கின்கீழ்
நடத்தப்பட்ட
புதிய
தாராளவாதக்
கொள்கைகள்
தொடரப்படல்
ஆகியவையே.
சமீபத்திய
நாட்கள்
மற்றும்
வாரங்களின்
நிகழ்வுகள்
பீல்ட்
மார்ஷல்
மஹ்மத்
ஹுசைன்
தந்தவியின்
தலைமையில்
உள்ள
இராணுவக்
குழு
பெருவணிகம்
மற்றும்
வங்கிகளின்
கோரிக்கையை
நிறைவேற்ற
எதிர்பார்ப்பதை
விட
அதிகமாகவே
செய்யத்
தயாராக
உள்ளது
என்பதுதான்.
|