WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
:
லிபியா
லிபியாவில்
தலையீடு
பற்றி
ஐரோப்பிய
ஒன்றிய
உச்சிமாநாட்டில்
பிளவுகள்
By Chris
Marsden
13 April 2011
லிபியா
பற்றிய லுக்சம்பேர்க்கில் நடந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சிமாநாடு அது
உத்தியோகபூர்வமாக தொடங்கு முன்னரே பல பெரும் சக்திகளின் நலன்களுடைய மோதல்களுக்கு
உள்ளானது.
EUFOR
லிபியா என்னும் பெயரில் முற்றுகைக்குட்பட்டுள்ள மிஸ்ரடா நரத்தைக்
காப்பாற்றுவதற்கு தன் கடற்படை மற்றும் இராணுவத்தின் உதவியை அளிக்க முன்வந்த
ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கையை ஐ.நா.
நிராகரித்தது. ஏப்ரல் 1ம்
தேதி 7.9 மில்லியன் யூரோக்கள் செலவில் ரோமைத் தளமாகக்
கொண்டு இத்தாலிய துணை தளபதி க்குளோடியோ கௌடியோசி தலைமையில் EUFOR
லிபியா நிறுவப்பட்டு இருந்தது. தரையில்
படையினர் ஆக்கிரமிப்புக் கூடாது என்ற உறுதிமொழிகள் நிறைந்து இருந்தாலும்,
இப்பணி துவக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இரு பட்டாளங்களாலான
1,500 படையினரை கொண்டுள்ளது.
இப்படி
முன்வைக்கப்பட்ட திட்டத்தில்
990 படையினர் வழங்கி ஜேர்மனி முக்கிய பங்கைக் கொண்டிருந்தது.
கடந்த வெள்ளியன்று அங்கேலா மேர்க்கெலின் அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபை தன்னை
கேட்டுக்கொள்ளும் எந்த
“மனிதாபிமான் பணியிலும்” பங்கு பெறும் என
அறிவித்திருந்தது.
இது
அமெரிக்க-பிரெஞ்ச,
இங்கிலாந்து தலைமையிலான நடவடிக்கைக்கு பேர்லின் காட்டிய
எதிர்ப்பிருந்து முற்றான பின்வாங்கலாகும்.
இதற்குக் காரணம் லிபியாவிலும் இன்னும் பொதுவாக எண்ணெய் வளமுடைய வட ஆபிரிக்கா
மற்றும் மத்திய கிழக்குப் பகுதியில் ஆதிக்கம் செலுத்துவதிலிருந்து இதன்
போட்டியாளர்ளால் ஒதுக்கப்பட்டுவிடுவோமோ என்ற அச்சம்தான்.
EUFOR
அணிதிரட்டப்படுவது OCHA எனப்படும் ஐ.நா.வின்
மனிதாபிமான விவகாரங்கள் ஒருங்கிணைப்பு அலுவலகத்திடம் இருந்து வந்துள்ள அழைப்பில்
சட்டரீதியாக தங்கியுள்ளமையால் ஆகும். ஆனால் ஐரோப்பிய
வெளியுறவுக் கொள்கைப் பிரிவுத் தலைவர் கத்தரின் ஆஷ்டன் மிஸ்ரடாவிற்கு ஒரு தொடர்
போர்கப்பல்களை அனுப்ப முன்வந்தது “கடைசி பட்ச
நடவடிக்கையாகத்தான் முடியும்” எனக்கூறி நிராகரித்த ஐ.நா.
பொதுச்செயலர் பான் கி-மூனுடன் நடத்திய
உரையாடல் பற்றி நினைவு கூர்ந்த ஆஸ்திரிய வெளியுறவு மந்திரி மைக்கேல்
ஸ்பிண்டிலெக்கர் கூறினார்.
ஐ.நா.வின்
நிலைப்பாடு “யதார்த்தத்துடன் மோதல்கள் நடத்தும் ஒரு எதிரான
சிந்தனைப் போக்கு” என்று ஜேர்மனிய பிரஸ் ஏஜென்சியிடம் ஒரு
பெயரிடாத ஐரோப்பிய ஒன்றிய தூதரால் கண்டிக்கப்பட்டது.
பின்லாந்தின் வெளியுறவு மந்திரி அலெக்சாந்தர் ஸ்டப்,
“OCHA பல நேரமும் மனிதாபிமான உதவிப் பணியை குழப்பமற்ற தேர்வாக
தேர்ந்தெடுக்கின்றதுடன்,
சில நேரங்களில் உதவியைக் கொடுப்பதற்கு இராணுவ உதவி தேவை என்று நாம் அறியும்போது
இராணுவத் தொடர்பு
(எதையும் இது) விரும்புவதில்லை.”
என்று புகார் கூறினார்.
ஸ்பெயினின் ஐரோப்பிய ஒன்றிய விவகாரங்களுக்கான மந்திரி டியேகோ போபெஸ் ஹரிடோ
லுக்சம்பேர்க் கூட்டம்
“ ஐ.நா. லிபியாவில்
நடத்தி வரும் மனிதாபிமானப் பணியைக் காக்க இன்னமும் கூட இராணுவ நடவடிக்கை என்னும்
கருத்திற்கு ஒப்புதல் கொடுக்கலாம்” என்றார்.
இதுவரை
திட்டமிடப்பட்டுள்ள நடவடிக்கை அல்லது அதற்கு ஒப்புதல் கொடுக்க மறுத்து
நிராகரித்துள்ள ஐ.நா.வின்
செயல் இரண்டையும் குறித்து அமெரிக்காவிடம் இருந்து எந்தவித உத்தியோகபூர்வ
அறிக்கையும் வரவில்லை. ஆனால் இங்கிலாந்தும் பிரான்ஸும்
ஐரோப்பிய ஒன்றியத்தினுள் ஜேர்மனி அவ்வாறான முக்கிய பங்கை ஆற்றுவது பற்றிய
முயற்சிகள் குறித்து மகிழ்ச்சி கொள்ளவில்லை என்பதற்கான அடையாளங்கள் உள்ளன.
பிரிட்டிஷ் வெளியுறவு மந்திரி வில்லியம் ஹேக்,
“மிஸ்ரடா உட்பட லிபியாவிற்கான உதவி என்பது இயல்பாக நடக்கிறது.
இதுவரை இதற்கு இராணுவ உதவி என்பது தேவைப்படவில்லை”
என்றார்.
லண்டன்
மற்றும் பாரிஸ் இரண்டுமே கூடுதலான ஐரோப்பிய இராணுவ ஈடுபாடு வேண்டும் எனக்கூறுகின்றன;
ஆனால் அவற்றின் கட்டுப்பாட்டில் இது இருக்க வேண்டுமே ஒழிய ஒரு
ஜேர்மனியத் தலைமையிலான படையை விரும்பவில்லை. அமெரிக்காவும்
லிபிய தாக்குதலுக்கான செலவினங்களில் அதிக பங்கை ஐரோப்பியச் சக்திகள் ஏற்க வேண்டும்
என்பதில் முனைப்பாக உள்ளது. நேட்டோவிற்கு செயற்பாட்டுக்
கட்டுப்பாட்டை மாற்றிய பின்னர், அது அப்பகுதியில் தன்
கடற்படை இருப்பை 11ல் இருந்து 3
போர்க்கப்பல்கள் என்றும் தொடர்புடைய விமானங்களை 170ல்
இருந்து 90க்கும் குறைந்துவிட்டது.
இந்த விமானங்கள் பொதுவாக நேட்டோ கட்டுப்பாட்டு அமைப்பிற்குப் வெளியிலிருந்தே
செயல்படுகின்றன.
பிரான்ஸும் இங்கிலாந்தும் உச்சிமாநாடு கூடுவதற்கு முன்பு தங்கள் ஐரோப்பிய
பங்காளிகள் நேட்டோவிற்குள் இராணுவ பலத்தை வழங்காததற்காக கண்டனம் தெரிவிப்பதில்
செலவிட்டன.
பிற ஐரோப்பிய சக்திகளை மறைமுகமாகச் சுட்டிக்காட்டும் வகையில்,
பிரெஞ்சு வெளியுறவு மந்திரி அலன் யூப்பே, “நேட்டோ
தன் பங்கை முழுமையாக ஆற்ற வேண்டும்; அது போதுமானளவு
செய்வதில்லை…இது செயற்பாட்டுத் தலைமையை விரும்பியது,
நாம் அதை ஏற்றோம்” என்றார்.
ஆனால் தற்பொழுது வான்தாக்குதலின் தீவிரம் “போதுமானதாக
இல்லை” என்றார் அவர்.
ஹேக்
கூறியது: “நாம்
நேட்டோவின் முயற்சிகளைத் தக்கவைத்துத் தீவிரப்படுத்த வேண்டும்.
எனவேதான் இங்கிலாந்து கடந்த வாரம் கூடுதல் விமானங்களை,
லிபியக் குடிமக்களை அச்சுறுத்தும் தரை இலக்குகளைத் தாக்கும் திறன்
உடையவற்றை அனுப்பி வைத்தோம். மற்ற நாடுகளும் இதேபோல்
செய்தால் வரவேற்போம்.”
இங்கிலாந்து-அமெரிக்க
கோரிக்கையான “லிபியாவின் நீடித்த சமாதானம் நிறைந்த
வருங்காலத்திற்கு கேர்னல் கடாபி அகலவேண்டும்” என்பதையும்
ஹேக் வலியுறுத்தினார்.
இக்குறைகூறல்கள் சனிக்கிழமை முதல் நேட்டோ கூட்டு வான்தாக்குதலை வியத்தகுமுறையில்
முடுக்கிவிட்ட பின்னரும் கூட வந்துள்ளன;
இது நேட்டோவை பதிலடி கொடுக்கத் தூண்டியது.
“இப்பொழுது
கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைக்குட்பட்ட வகையில் நேட்டோ அதன் இராணுவ நடவடிக்கைகளை
லிபியாவில் ஆர்வத்துடன் செய்துவருகிறது. செயற்பாடுகளின்
வேகம் மக்களைப் பாதுகாக்கும் தேவையினால் நிர்ணயிக்கப்படுகிறது”
என்று அது ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.
அமெரிக்கா,
இங்கிலாந்து மற்றும் இத்தாலியின் பகிரங்க ஆதரவை ஒட்டி,
லிபியாவின் எதிர்த்தரப்பு இடைக்கால தேசியக்குழு (TNC)
ஞாயிறன்று ஆபிரிக்க ஒன்றியம் மற்றும் கடாபிக்கும் இடையே உடன்பாடான
போர்நிறுத்த திட்டங்களை நிராகரித்து, அவரும் அவருடைய
மகன்களும் நாட்டை விட்டு நீங்க வேண்டும் என்று கோரியது.
ஐரோப்பிய சக்தி மற்றும் செல்வாக்கை வலியுறுத்துவதற்காக கூட்டப்பட்ட ஐரோப்பிய
ஒன்றியத்தின் உச்சிமாடு அதற்குப்பதிலாக மீண்டும் ஐரோப்பிய சக்திகளுக்கு இடையே
காணப்படும் பிளவுகள் பூசல்கள் இவற்றை வெளிப்படுத்தும் களமாயிற்று.
பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தின் குறைகூறல்களை ஸ்பெயின் நிராகரித்து
கூடுதல் இராணுவ உறுதிப்பாடு வேண்டும் என்ற அவற்றின் கோரிக்கைகளையும் நிராகரித்தது.
“நேட்டோவின் நடவடிக்கை நன்கு தொடர்கிறது.
இதில் திருத்தப்படுவதற்கு இப்பொழுது ஒன்றும் இல்லை” என்று
ஐரோப்பிய விகாரங்களுக்கான அரசாங்க செயலர் டியேகோ லோபஸ் ஹரிடோ கூறினார்.
CONOPS
என்னும் EUFOR லிபியாவின் செயற்பாடுகளின்
கருத்தாய்வு பற்றிய விவாதங்களில் ஸ்வீடன் நவடிக்கை பற்றிய தன் தயக்கத்தை
வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. பின்லாந்தின் வெளியுறவு
மந்திரி ஸ்டப் “கொசொவோ போன்ற நிலையைப் போல் ஒரு இக்கட்டான
நிலை வந்துவிடக்கூடாது” என்று எச்சரித்து “அந்நிலையோ
78 நாட்கள் நீடித்தது என்றும் நான் வாதிட முடியும்”
என்றார்.
நேட்டோ
கட்டுப்பாட்டைப்பற்றிப் புகழ்வது முற்றிலும் தங்களுக்கு சாதகமானதாக பிரான்ஸ்,
இங்கிலாந்தால் உணரப்படுவதுடன், வாஷிங்டன்
அதை தன்னுடைய நடைமுறை தலைமைப்பங்கை தக்க வைத்துக்கொள்ளும் வழிவகையாவும்
காணப்படுகிறது.
மற்ற
வழிவகைகள் மூலமும் நிகழ்வுகள்மீது தங்கள் கட்டுப்பாடு மிக்க
செல்வாக்கை அடையும் முயற்சிகளிலும் ஈடுபடுவதை அவை நிறுத்த மாட்டா.
நிலத்தின் மனிதாபிமான மறைப்பு என்ற பெயரில் இராணுவக் குறுக்கீடு
நடத்துவதும் செயற்பட்டியலில் இல்லாமல் இல்லை. மாறாக,
எந்தச் சக்தியின்கீழ் அது நடத்தப்பட வேண்டும் என்பதற்குத்தான்
போட்டி உள்ளது.
இன்று
பிரிட்டன் மற்றும் கட்டார் ஆகிவை லிபியத் தொடர்புக் குழுவின் கூட்டம் ஒன்றை
தோஹாவில் ஏற்பாடு செய்துள்ளன;
அங்கு மிஸ்ரடா மற்றும் பிற முற்றுகைக்குட்பட்ட நகரங்களுக்குச்
சர்வதேச மனிதாபிமான உதவி பற்றிய திட்டங்கள் விவாதிக்கப்பட உள்ளன.
கிட்டத்தட்ட 20 நாடுகளின் வெளியுறவு
மந்திரிகள்
இதில்
கலந்துகொள்வர்.
இந்த
முறைசாராக்குழு மார்ச்
29ல் லிபியா மீதான லண்டன் மாநாட்டின் போது நிறுவப்பெற்று
தொடக்கத்தில் இராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்காவும் இங்கிலாந்து கோருவது போல் நேட்டோ
தலைமை என்று இல்லாமல் பிரான்ஸ் தலைமை தாங்க வேண்டும் எனக் கருதியது. “சர்வதேச
முயற்சிக்குத் தேவையான தலைமை மற்றும் பொது அரசியல் இயக்கம் ஐ.நா.
ஆபிரிக்க ஒன்றியம், அரபு லீக்,
இஸ்லாமிய மாநாட்டின் அமைப்பு, ஐரோப்பிய
ஒன்றியம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பும் லிபியாவின் ஆதரவிற்குக் கொடுக்கப்படும்”
என்று உடன்பாடு காணப்பட்டது.
இடைக்கால தேசிய சபையின் லிபிய எதிர்த்தரப்பு நேரடியாக கட்டாரி்ல் லிபிய தொடர்பு
குழுவிடம் கோரிக்கைவிடும்.
லண்டனில் அது கொண்டிருந்த குறைந்த முக்கியத்துவமான பங்கிற்கு இது எதிர்மாறானதாக
இருக்கும்.
அந்த நேரத்தில் பிரான்ஸ் மட்டும்தான் அதை லிபியாவின் உத்தியோகபூர்வ அரசாங்கம் என்று
அங்கீகரித்திருந்தது.
அதன் பின் TNC க்கு இத்தாலி,
கட்டார் ஆகிய நாடுகளின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
பிரெஞ்சு வெளியுறவு அமைச்சரகத்தின் செய்தித் தொடர்பாளர் பேர்னார்ட் வலெரோ பெரும்
ஆர்வத்துடன் கூறினார்:
“அவர்கள் இங்கு இருப்பர் என்பது மட்டும் இல்லை,
ஆனால்
(இது
கட்டார்க்காரர்களுடன் சோதித்து அறியப்பட வேண்டும்)
லண்டனில் அவர்கள் ஒதுங்கி இருந்தது போலில்லாமல்,
அவர்கள் தொடர்புக் குழு முன் தோன்றுவர்.”
லிபியத்
தொலைக்காட்சி
(Libya
TV) நிறுவுவதற்கு இடைக்கால தேசிய சபைக்கு கட்டாரால்
அனுமதிக்கப்பட்டுள்ளது.
கட்டார்தான் கடாபிக்கு எதிரான அமெரிக்கத் தலைமையிலான தாக்குதலுக்கு பேராதரவு
கொடுத்து வருகிறது.
பிரிட்டனும் அதன் தலைமைப் பங்கை முக்கிய லிபிய வெளியேறியவர் மௌசா கௌசா மூலம் நிறுவ
முற்படுகிறது.
முன்பு கடாபியின் உளவுத்துறைத் தலைவரும் பின்னர் வெளிநாட்டு
மந்திரியாகவும் இருந்த இவர், சில ஆதாரங்களால் நீண்டகால
M16 முகவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர்
செவ்வாயன்று பிரிட்டனைவிட்டு நீங்கிச் செல்ல அனுமதிக்கப்பட்டார்;
லோக்கர்பி குண்டுவீச்சில் இவருக்கு ஒருவேளை தொடர்பு இருக்கக்கூடும்,
முறையாக விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்ற நிலை இருந்தும் கூட.
பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர்
(வெளியுறவுத்துறை
விதிகள் படி செவ்வாயன்று பெயர் தெரிவிக்கக்கூடாது என்ற நிலையில்)
கூறியபோது,
திரு.கௌசா
“ஒரு தடையற்ற நபர், பிரிட்டனில் இருந்து
எங்கு செல்ல விரும்பினாலும் செல்லலாம் என்பதால் சென்றுள்ளார்”
என்றார்
கௌசா
கடாபி ஆட்சியின் உள் செயற்பாடுகள் பற்றிய தன்
“உட்பார்வைகளைப்” பகிர்ந்து கொள்ளுவார்
என்று மற்றொரு செய்தித் தொடர்பாளர் கூறினார்.
வெளியேறுவதற்கு முன் அரபு மொழியில் கொடுத்த அறிக்கை ஒன்றில் கௌசா
“லிபியாவை ஒரு உள்நாட்டுப் போருக்கு அழைத்துச் சென்றுவிடுவதை
அனைவரும் தவிரக்க வேண்டும். அது பெரும் இரத்தம் சிந்தலை
ஏற்படுத்திவிடும்; பின்னர் லிபியா ஒரு புதிய சோமாலியா
ஆகிவிடும்.” கேட்டுக் கொண்டுள்ளார்.
“லிபியாவிற்கான
தீர்வு லிபியர்களிடம் இருந்தே வரும், விவாதங்கள்,
ஜனநாயக முறை விவாதங்கள் மூலமாக” என்றார்
அவர்.
அவருடைய
கருத்துக்கள்
“அவர் தன்னை லிபிய அரசாங்கத்திற்கு அடுத்தாற் போல் ஒரு பெரிய
நிலையில் வரக்கூடிய முயற்சி உடையவர்கள் என்பதைக் காட்டும் வகையில் உள்ளன”
என்று நியூயோர்க் டைம்ஸ் ஊகமாகக் கூறியுள்ளது.
ஆனால் அவை இடைக்கால தேசிய சபையினால் வரவேற்கப்படவில்லை;
அதன் செய்தி ஊடகச் செய்தித் தொடர்பாளர் முஸ்தாபா கீரியானி,
“நாங்கள் இனவழிக் குழுக்கள் ஒன்றையொன்று எதிர்த்துப்போரிடுவதை
விரும்பவில்லை. நாம் ஒன்றும் அரசியில் கட்சிகள் ஒன்றையொன்று
எதிர்த்துப் போரிடுவதை விரும்பவில்லை. இங்கு இரு அணிகள்
உள்ளன; ஒன்று நாட்டு மக்களுடையது,
லிபிய மக்களுடையது மற்றொன்று கேர்னல் கடாபி, அவருடைய ஆட்சி,
அவருடைய மகன்களுடையது.” என்று பதில்
கொடுத்தார்.
நாளை ஐ.நா.
பொதுச் செயலர் பான் கி-மூன் கெய்ரோவில்
லிபியா பற்றிய மற்றொரு சர்வதேசக் கூட்டத்திற்கு தலைமை தாங்குவார் என
எதிர்பார்க்கப்படுகிறார். “இது ஐ.நா.
ஆபிரிக்க ஒன்றியம், அரபு நாடுகளின் லீக்,
இஸ்லாமிய மாநாட்டு அமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்
ஆகியவற்றிற்கு இடையே நெருக்கமான ஒருங்கிணைப்பு இருப்பதை உறுதி செய்யும்.”
அன்றே
BRIC நாடுகள் (பிரேசில்,
ரஷ்யா, இந்தியா,
சீனா) ஆகியவையும் கூடுகின்றன. இவை
அனைத்தும் ஐ.நா.தீர்மானம்
லிபியாவிற்கு எதிரான இராணுவத் தாக்குதலுக்கு ஒப்புதல் கொடுத்தபோது வாக்களிப்பில்
கலந்துகொள்ளவில்லை. நேற்று ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி
மெட்வெடேவ் லிபியாவின் நிலைமை “ஏற்கனே கட்டுப்பாட்டை மீறிச்
சென்றுள்ளது” என்று எச்சரித்தார்.
பிறருடைய துன்பத்தில் இன்பம் காணும் வகையில்,
நேட்டோ நடவடிக்கை பூசல்களில் மூழ்கியுள்ளன: “அனைவரும்
இது குறித்து வெவ்வேறு திட்டங்களைக் கொண்டுள்ளனர்.
ஐரோப்பியர்கள் ஒன்று கூறுகின்றனர்; அமெரிக்கர்கள் வேறு
ஒன்று கூறுகின்றனர். ஒரு நாள் “பங்கு
பெறுவோம்” என்கின்றனர், மறுநாள்
“நாம் பங்குபெற மாட்டோம்” என்கின்றனர்”
என்றார். |