WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
IMF
report points to global economic fragility
உலகப்
பொருளாதார
ஸ்திரமற்றதன்மையை
சர்வதேச
நாணய
நிதிய
அறிக்கை
சுட்டிக்காட்டுகிறது
Nick
Beams
14 April 2011
மீட்பு நிலை
என்று அழைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டபோதிலும்கூட,
பெருமந்த
நிலைக்காலத்திற்குப் பின் மிக ஆழ்ந்த பொருளாதார,
நிதிய நெருக்கடியைத்
தூண்டிவிட்ட அடிப்படை முரண்பாடுகளில் எவையும் தீர்க்கப்படவில்லை என்பதுடன்,
புதிய
பிரச்சினைகளும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
சமீபத்திய
உலக பொருளாதாரப் பார்வை
(World Economic Outlook WEO),
சர்வதேச நாணய நிதியத்தின்
அறிக்கைத் தலைப்பு கூறுகிறது:
“புதிய இடர்கள்
இருந்தபோதிலும்கூட,
உலக மீட்பு வலு
அடைந்து வருவதாகத் தெரிகிறது”.
உலக வளர்ச்சி
4.5
இனால்
2011
மற்றும்
2012ல் அடையும் என்ற
அதன் கணிப்பு ஒருபுறம் இருந்தாலும்,
அறிக்கையைப்
படிக்கையில்,
ஒரு மிக மோசமான
நிலையில்,
ஒரு சிலவற்றின் இன்னும்
மிகமோசமாகிக் கொண்டிருக்கும் நிலையை எதிர்கொள்கையில் ஒரு தைரியமான முகத்தைக்
காட்டும் நோக்கத்தைக் கொண்டுள்ளதுதான் தெரியவந்துள்ளது.
ஒரு உயர்
ஒலிக்குறிப்புடன் அறிக்கை
தொடங்குகிறது.
பொருளாதார மீட்பு
“இன்னும் கூடுதலான
வகையில் தன்னையே தக்கவைத்துக்களுக்கும் தன்மையைக் கொண்டுள்ளது”,
அதே நேரத்தில்
முன்னேற்றம் அடைந்துள்ள பொருளாதாரங்களில்
“இரட்டை மந்தநிலைப்
பாதிப்பு என்னும் இடர்”
பின்னோக்கிச்
செல்லுகிறது.
ஆனால் உடனடியாக அது
“செயற்பாட்டின்
வேகம் சீராக இல்லை,
வேலையின்மை
பின்வாங்கியுள்ள நிலையில்தான் உள்ளது”
என்றும்
குறிப்பிட்டுள்ளது.
வளர்ச்சி
“உயர் வேலையின்மை
விகிதத்திற்கு ஒரு முக்கிய குறைப்பைக் கொடுக்கக் கூடிய வலுவற்று உள்ளது”,
2007 இலிருந்து
வேலையற்றோர்
எண்ணிக்கை 30
மில்லியன்
அதிகமாகிவிட்டது.
நிதியச்
சந்தைகள் கடந்த இரு ஆண்டுகளில் அரசாங்க நிதியங்கள் பாரியளவில் உட்செலுத்தப்பட்டதால்
உறுதிப்படுத்துப்பட்டுள்ளபோது
(சில மதிப்பீடுகள்
உலகம் முழுவதும் பிணை எடுப்புக்கள் மிக உயர்ந்த அளவான
$14 டிரில்லியன்
இருக்கலாம் எனக் கூறுகின்றன)
மற்றொரு கரைவி்ன்
அச்சுறுத்தலும் தொடர்ந்து நீடிக்கிறது.
நாடுகள் கடன்
திருப்பிக் கொடுக்காததின் மூலம் அல்லது வங்கிகள் நொடித்துப் போவதின் மூலமாக இது
ஐரோப்பாவில் ஆரம்பிப்பது சாத்தியமாகலாம்.
அறிக்கை
கூறுகிறது:
“குறுகிய காலத்தில்,
அதிக
சிக்கலுக்குட்பட்டுள்ள யூரோப் பகுதி நாடுகளின் கடன்கள் மற்றும் வங்கிகளில் தொடர்ந்த
அழுத்தங்கள் நிதிய உறுதித் தன்மைக்கு கணிசமான அச்சுறுத்தலைக் கொடுக்கின்றன….
இதற்கு முக்கிய
காரணம் பிராந்தியத்தின் முன்னேறிய பொருளாதாரங்கள் பலவற்றில் உள்ள நிதிய
அமைப்புக்களிடையே தொடர்ந்து இருக்கும் பலமற்ற தன்மை,
மற்றும் அவற்றை
வெளிப்படுத்துவது பற்றி வெளிப்படைத் தன்மை காட்டப்படாமல் இருப்பதுதான்.”
வேறுவிதமாகக்
கூறினால்,
ஐரோப்பிய வங்கிகளுடைய நிலை
பற்றி எவருக்கும் உண்மையிலேயே அதிகம் தெரியாது,
அவை கடன்
கொடுத்திருக்கும் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களில் எவ்வளவு அவை இழக்கும்
என்பது பற்றி.
அவற்றின்
“சொத்துத் தன்மை”
“உறுதியற்றது”,
அதே நேரத்தில் அவை
“அதிகரித்துவரும்
கடன்களின் பெரும் சுவரினை எதிர்கொண்டுள்ளது போல் காண்கின்றன”,
இதைத்தவிர பிற
“கணிசமான மூலதனக்
குறைவுகளும் உள்ளன”.
2011
ன் வளர்ச்சி விகிதத்தை
3% என்பதில் இருந்து
2.8% எனக் குறைத்து
கணித்துள்ள அமெரிக்காவில் உள்ள நிலைமைகள் பற்றிச் சுருக்கி கூறுகையில் சர்வதேச நாணய
நிதிய அறிக்கை பொருளாதாரம் சற்று சூடு பிடித்துள்ளது என்று சுட்டிக் காட்டுகிறது.
“மரபுசாரா வகையில்
நிதிய முறை தளர்த்தப்பட்டதின்”
விளைவாக,
[அமெரிக்க மத்திய
வங்கிக் கூட்டமைப்பினால் வங்கிகளுக்கு மிக எளிய விகிதக் கடன்கள் வழங்கப்பட்டன],
பங்குச் செந்தைகள்
நிதிய நெருக்கடியினால் அவை அடைந்த இழப்புக்களில் மூன்றில் ஒரு பகுதியை மீட்டுவிட்டன.
ஆனால் தொழிலாளர்
சந்தையில் “மீட்பு”
மிகக் குறைவுதான்
என்பதையும் அது ஒப்புக் கொண்டுள்ளது.
“2008, 2009ல்
8.5 மில்லியன்
வேலைகளுக்கும் அதிகமாகத் தகர்க்கப்பட்டபின்,
தொழிலாளர் சந்தை
அதற்குப்பின் 1.5
மில்லியன்
வேலைகளைத்தான் கூட்டியுள்ளது;
இது பணிபுரியும்
வயதிலுள்ள மக்கள் தொகுப்பின் வளர்ச்சியுடன் இயைந்து இருக்கப் போதுமானது அல்ல.”
மரபார்ந்த
பொருளாதார அறிவின்படி,
ஒரு பொருளாதார
“மீட்பு”
என்பது
வேலைவாய்ப்புக்களில் முன்னேற்றத்தைக் கொண்டுவர வேண்டும்.
ஆனால் இப்பொழுது
இதைச் செய்வதற்கான தற்காலிக
உறவுகள்
எதிர்ப்புறமாக வேலை செய்கிறது.
இலாபம் மற்றும்
பங்குச் சந்தை மீட்பு என்பது மிக அதிக வேலையின்மை அளவினையும் மற்றும் அதனால்
தொழிலாளர்கள் மீது அழுத்தங்களையும் அதிகரித்துள்ளது.
வேறுவிதமாகக்
கூறினால் இலாப மீட்பு என்பது ஒரு மனித மந்தநிலையின் விளைவுதான்.
இந்த
அழுத்தங்கள் இப்பொழுது தீவிரமடைய உள்ளன.
அமெரிக்காவில்
எஞ்சியுள்ள சமூக நலத் திட்டத்தின் பிரிவுகள்மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்னும்
ஆளும் நிதிய அரசியல் வட்டங்களுடன் தன்னுடைய குரலையும் சர்வதேச நாணய நிதியம்
சேர்த்துக் கொண்டுள்ளது.
WEO அறிக்கை
“அடுத்த
தசாப்தத்தில் உரிமையாகப் பெறப்படும் திட்டங்களில் அடிப்படைச் சீர்திருத்தங்கள்
தேவை”
என்று குரல் கொடுத்துள்ளது.
இதைத் தொடர்ந்து
சர்வதேச நாணய நிதியத்தின் நிதியக் கண்காணிப்பில் இந்த ஆண்டு பற்றாக்குறைக் குறைப்பு
என்னும் பெயரில்
“உடனடிப் பணம்
கொடுக்கும் முறைக்கான”
கோரிக்கை ஒன்று
வந்துள்ளது.
சர்வதேச நாணய நிதிய
கூற்றுப்படி,
அமெரிக்காவிடம் அதன்
கடனை உறுதிப்படுத்துவதற்கு
“நம்பிக்கைத் தன்மை
உடைய மூலோபாயம்”
இல்லை.
2013ல் அதன்
பற்றாக்குறையை பாதியாக்குவதற்கான உறுதிப்பாட்டைச் சந்திக்கும் வகையில் அது
இதுபற்றிய பதிவுகள் ஆரம்பித்த
1960க்குப்
பின்னர்
எந்த இரு ஆண்டு காலத்திலும்
இல்லாத அளவிற்கு கடும் சிக்கன நடவடிக்கைகளை அது செயல்படுத்த வேண்டும்.
சர்வதேச
நாணய நிதியத்தின் மிகப் பெரிய பங்குதாரரான அமெரிக்கா பற்றிய இந்தக் குறைகூறல்
உலகப் பொருளாதாரக் கட்டுமானத்தில்
மிகப்பெரும்
திருப்பத்தை
அடிக்கோடிட்டுக்
காட்டுகிறது;
இதில் ஒப்புமையில்
அமெரிக்கப் பொருளாதாரத்தின் சரிவு மற்றும் பிற முக்கிய முதலாளித்துவப்
பொருளாதாரங்களின் சரிவு இருப்பது உதாரணமாகிறது.
WEO
அறிக்கையின் மிக முக்கிய
கூறுபாடுகளில் ஒன்று தனி நாடுகள் மற்றும் பிராந்தியங்களுக்கான வளர்ச்சி விகிதம்
பற்றிய கணிப்பு கொடுக்கப்பட்டு இருப்பதாகும்.
பொருளாதார
ஒத்துழைப்புக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின்
(OECD)
இருக்கும்
30
அங்கத்துவநாடுகளில் எந்த ஒரு முன்னேற்றம் அடைந்த தொழில்துறை நாடு கூட உலகவளர்ச்சி
விகிதம் 4.5
எனக்
குறிக்கப்பட்டிருக்கும் கணிப்பிற்குச் சமமாகவோ அதைவிட உயர்ந்தோ வரவில்லை என்பதாகும்.
அவை அனைத்துமே
2 முதல்
4 %
வளர்ச்சியைத்தான் காணும் அல்லது அதைவிடக் குறைவானதைக் காணும் என்று கூறப்பட்டுள்ளது.
முக்கிய
வளர்ச்சி அடையும் பகுதிகள் ஆசியா மற்றும் இலத்தின் அமெரிக்கா ஆகும்.
ஆனால் இப்பகுதிகள்
உலகப் பொருளாதாரத்திற்கு ஒரு ஏற்றம் தரும் தளத்தைக் கொடுக்கும் என்பதற்குப் பதிலாக
அவற்றின் விரிவாக்கம் பெரிதும் அமெரிக்க,
ஐரோப்பிய
பொருளாதாரங்களைத்தான் நம்பியுள்ளது.
அறிக்கை கூறுகிறது:
“பிராந்தியங்களுக்கு
இடையேயான வணிகத்தில் கணிசமான அதிகரிப்பு இருந்தாலும்கூட,
ஆசிய
ஏற்றுமதிகளுக்கான இறுதித் தேவையில் மூன்றில் இரு பகுதி இன்னமும் பிராந்தியத்திற்கு
வெளியே இருந்துதான் வருகிறது,
யூரோப்பகுதியில்
கொந்தளிப்பு புதுப்பிக்கப்பட்டுள்ளது முக்கியமான தொழில்துறை பிணைப்புக்கள் மூலம்
ஆசியாவைப் பாதிக்கும்.”
மேலும்,
ஆசிய,
இலத்தின் அமெரிக்க
பொருளாதாரங்களின் வளர்ச்சி உறுதித் தன்மைக்குப் புதிய மூலகாரணங்களை தோற்றுவித்துக்
கொண்டு வருகிறது.
சீனாவிலும்
ஹாங்காங்கிலும் நிதியப் பிரிவு அதிகாரிகள் கடன் விரிவாக்கத்தை கட்டுப்படுத்த
நடவடிக்கை எடுத்துள்ளதுடன்,
இன்னும் அதிகம்
செய்யவுள்ளனர் என்று சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.
“ஆயினும்கூட,
இரு
பொருளாதாரங்களிலும் கடன் வளர்ச்சியும் முந்தைய கடன் ஏற்றம் வெடிப்புக்களுக்கு
முந்தைய நிலையுடன் ஒப்பிடும்போது அதிகமாகத்தான் உள்ளன;
சொத்துக்கள்
விலைகளில் தீவிரத் திருத்தங்களுக்கான திறன் மற்றும் அவற்றின் தாக்கங்கள் பற்றிப்
பெருகிய கவலைகள் உள்ளன.”
நிதிய
அதிகாரிகளின் முயற்சிகள் இருந்தாலும்கூட,
“கடன் தொகுப்புக்கள்
நிர்வாகம் பற்றி கவலைகள் பெருகியுள்ளன,
பெரும் பொருளாதார
நிலைக்கட்டுப்பாட்டிற்குப் பயன்படுத்தப்பட்டவை இப்பொழுது வங்கிகளின் நிதியப்
புதுமுறைகள்,
இருப்புக் கணக்கில்
காட்டாது செய்யும் நடவடிக்கைகள் ஆகியவற்றால் குறைமதிப்பிற்கு உட்பட்டுள்ளன.”
என்று சர்வதேச நாணய
நிதியம் தொடர்ந்து எழுதியுள்ளது.
வேறுவிதமாகக்
கூறினால்,
அமெரிக்காவில் பிணையற்ற
கடன் நெருக்கடிக்கு வழிவகுத்த செயற்பாடுகள் இப்பொழுது சற்றே வேறுவிதத்தில் சீனாவில்
நடத்தப்படுகின்றன.
இலத்தின்
அமெரிக்கப் பொருளாதாரங்கள்
2009ல்
1.75% சுருக்கம்
அடைந்தபின் கடந்த ஆண்டு கிட்டத்தட்ட
6% உயர்ந்தன.
இதற்கு காரணம்
சீனாவின் வலுவான தேவையும் உயரும் பொருட்களின் விலைகளும் ஆகும்.
ஆனால் சர்வதேச நாணய
நிதியம் இவை இரண்டும்
“ஆதாரவான சூழல்”
என்றாலும் கடன்
ஏற்றங்களைப் பல நாடுகளில் தூண்டிவிடும் தன்மை கொண்டவை,
அவற்றையட்டி
“இறுதியில் ஒரு
வெடிப்பிற்கு”
வழிவகுக்கும் என்று
எச்சரித்துள்ளது.
இதேபோல்
வளர்ச்சியும் விரைவில் எதிர்மறையாகிவிடும்,
பிரேசிலில் ஒரு
கீழ்நோக்குத் தன்மை ஏற்பட்டால்;
ஏனெனில் அதைத்தான்
பிராந்தியத்தின் பல பகுதிகளும் நம்பியுள்ளன;
அல்லது சீனவில்
“ஒரு கடுமையான
நிலைப்பாடு ஏற்பட்டால்”,
அது பொருட்களின்
ஏற்றுமதியில் சரிவை ஏற்படுத்தும்.
உலகப்
பொருளாதாரம் உறுதியற்ற தன்மை,
வாடிக்கையாக
ஆர்வத்துடன் சர்வதேச
நாணய நிதியம் பூசி மெழுகுவது கூட முடியாத நிலையில்,
2008இல் வெடித்த உலக
நிதிய நெருக்கடி ஒரு நகர்ந்நு மறைந்துவிடும் புயல் அல்ல,
உலக
முதலாளித்துவத்தின் வரலாற்றில் ஒரு புதிய கட்டத்தை
தொடக்கியுள்ளது.
அதில் நடந்து வரும்
பொருளாதாரச் சரிவுகள்,
பெருகும் சர்வதேச
அழுத்தங்கள் மற்றும் ஆழமடையும் வர்க்க மோதல்கள் ஆகியவை ஒரு பகுதியாக இருக்கும்
என்பதுதான் புலனாகிறது.
|