World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Japans nuclear cover-up

ஜப்பான் அணுப் பேரழிவு பற்றி மூடிமறைத்தல்

Peter Symonds
12 April 2011
Back to screen version

வடகிழக்கு ஜப்பானில் பெரும் பகுதியை பேரழிவிற்கு உட்படுத்திய பாரிய நிலநடுக்கம், சுனாமி ஆகியவை நடந்து ஒரு மாதம் முடிந்ததை நேற்றைய தினமான மார்ச் 11 குறிக்கிறது. இவை உக்ரைனில் செர்னோபிலில் 1986 ம் ஆண்டு அணுஉலைக்கூட வெடிப்பிற்கு பின்னர் மிகமோசமான அணுசக்திப் பேரழிவையும் தோற்றுவித்தன. ஜப்பானிய அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் TEPCO (டோக்கியோ எலெக்ட்ரிக் எரி்சக்தி நிறுவனம்) இன் பிரதிநிதிகள் இத்தினத்தில் ஆழ்ந்த மன்னிப்புக்கள் மற்றும் ஆறுதல் கொடுக்கும் உத்தரவாதங்களை வழங்கினாலும், பேரழிவு மற்றும் தற்போது ஆபத்தின் உண்மையான அளவினை குறைக்கும் வகையில் ஒருங்கிணைந்த செயற்பாடுகள் நடக்கின்றன என்பதில் ஐயம் ஏதும் இல்லை.

ஜப்பானிய அதிகாரிகள் நடந்து கொள்ளும் முறையான பரந்தவிரிந்த உளவேதனையைக் காட்டுவது ஒரு தேசிய வடிவை எடுக்கலாம். ஆனால் மூடிமறைத்தலின் அடித்தளத்தில் உள்ள காரணங்கள் உலகம் முழுவதற்கும்  பொருந்தும் தன்மையைத்தான் கொண்டுள்ளன. இந்த நெருக்கடி முழுவதும் அரசாங்கமும் TEPCOவும் புகுஷிமா வாழ்மக்கள் அல்லது ஆலையில் உள்ள தொழிலாளர்களின் பாதுகாப்பு பற்றிய அக்கறைகளால் உந்தப்படவில்லை, மாறாக TEPCOவின் இலாபத்தை பாதுகாத்து நாட்டின் அணுசக்தித்துறையை எப்படியும் பாதுகாத்தல் என்று உறுதியைத்தான் உந்துதலாகக் கொண்டுள்ளன.

தலைமை அமைச்சரவை செயலர் யுகியோ எடனோ நேற்று 27,000 மரணமான மற்றும் காணாமற்போனவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து, நிலநடுக்க பேரழிவினால் இடம் பெயர்ந்துள்ள பாதிக்கப்பட்டவர்களிடமும் மன்னிப்புக் கோரினார். NISA எனப்படும் அணுசக்தி, தொழில்துறை பாதுகாப்பு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஹடிகீனோ நிஷியாமா TEPCOவின் புகுஷிமா டைய்ச்சி அணு ஆலையைச் சுற்றியுள்ள மக்களற்ற பகுதி உருவாக்கப்பட்டதால் உருவாகிய வசதியின்மைகளுக்குதனது சொந்த மன்னிப்புக்களையும் கேட்டார்.

ஆனால், அதே நேரத்தில் எடனோ முடக்கப்பட்டுள்ள அணுசக்தி ஆலையில் நடக்கும் நெருக்கடி பற்றி சாதகமான கதை கூறும் வகையில், அணுசக்தி ஆலையில் நிலைமை மோசமடைந்து புதிய கசிவு பாரியளவில் கதிரியக்கப் பொருட்கள் மூலம் ஏற்படலாம் என்பது கணிசமாகக் குறைந்துவிட்டதுஎன்று அறிவித்தார். ஒரு நேரடிப் பொய் இல்லை என்றாலும், இத்தகைய கருத்து சேதப்பட்டுள்ள உலைக்கூடங்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சிக்கும் பொறியியல் வல்லுனர்கள், தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் உண்மையான ஆபத்துக்களை வேண்டுமென்றே மறைக்கிறது. முந்தைய தினம்தான் எடனோ பேரழிவை அரசாங்கம் எதிர்கொண்ட விதத்தைக் பாதுகாக்கும் வகையில் மிகக் கடினமான சூழ்நிலையில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டி இருந்தன, ஒவ்வொரு முறையும் மிகவும் திறமையான விருப்புரிமையைத்தான் தேர்ந்தெடுத்தோம் என நான் நம்புகிறேன்என்றார்.

உண்மையில் கடந்த மாதம் முழுவதும் அரசாங்கம், NISA, TEPCO ஆகியவை மிகத் தற்காலிக முறையில் செயல்பட்டு, பெரும் திகைப்புடன் அவர்கள் கணிக்காத, தயாரிப்பும் மேற்கோள்ளாத ஒரு பேரழிவிற்கு இடைக்காலத் தீர்வுகளைக் கொடுக்க முற்பட்டனர். நிலநடுக்கங்கள், சுனாமிக்கள் ஆகியவற்றின் பாதிப்பு ஜப்பானுக்கு உண்டு என்பது நன்கு அறிந்த நிலையிலும்கூட, TEPCOவின் பாதுகாப்பு முறைகள் அனைத்தும் தோல்வியுற்றன. ஆலை அதன் மின்விசை விநியோகத்தை இழந்த பின், அதற்குத் துணை நிற்கும் டீசல் மின்னியந்திரங்கள் சுனாமியால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கின. வெள்ளமோ ஆலையின் பாதுகாப்பற்ற சுவர்களை உடைந்து உள்ளே வந்தது. அவரசரகால மின்கலங்கள் மிகக் குறைந்த மின்விசையைக் கொடுத்தன, அவையும் விரைவில் தீர்ந்துவிட்டன.

ஆலையின் ஆறு அணுசக்தி உலைக்கூடங்களில் 4, 5, 6 இலக்கக்கூடங்கள் ஏற்கனவே ஆய்விற்காக பரிசோதனைக்காக இயங்காது இருந்தன. கட்டுப்பாட்டு தண்டுகள் 1, 2 மற்றும் 3ம் கூடங்களின் மத்தியில் நுழைக்கப்பட்டதுடன், உலைக்கூட செயற்பாடுகளை முடிவிற்குக் கொண்டு வந்தது. ஆனால் விசையும் இல்லாமல், உலைக்கூடத்தின் இயல்பான குளிர்ச்சி முறைகளும் இயங்காத நிலையில், 1, 2, 3 கூடங்களின் நடுப்பாகங்கள் மிக ஆபத்தான அளவிற்கு சூடேறி, எரிபொருள் தண்டுகளைச் சேதப்படுத்தி ஒரு முழு கரைப்பை அச்சுறுத்தின. எரிக்கப்பட்ட எரிபொருள் தொகுப்புக்கள், ஒவ்வொரு உலைக்கூடத்துடனும் பிணைந்துள்ள  தொடர்ச்சியான குளிர்ச்சியாக வைக்க வேண்டியவையும் சூடேறத் தலைப்பட்டன. இதில் 4ம் கூடமும் சேர்ந்துகொண்டது. அங்கு முழு உலைக்கூட நடுப்பகுதியும் உலையில் இருந்து அகற்றப்பட்டு பல மாதங்கள் முன்னதாகவே பயன்படுத்தப்பட்ட எரிபொருள் சேமிப்பும் வைக்கப்பட்டிருந்தன.

சில நாட்களுக்குள் சேதமுற்ற எரிபொருள் தண்டுகள் தோற்றுவித்த ஹைட்ரஜன் வெடித்து 1, 3 மற்றும் 4 வது கூடங்களின் மேல் மட்டங்களைத் தகர்த்தது. இதன் பின் TEPCO பெரும் திகைப்புடன் உப்புநீரை உலைக்கூடம் 1இல் மற்றும் பல எரிபொருள் குளிர்ச்சித் தொட்டிகளில் நிரப்பும் நடவடிக்கையை மேற்கோண்டது. இடைக்கால வழிவகையான புது நல்ல நீரை 1, 2 மற்றும் 3 கூடங்களின் நடுப்பகுதியில் செலுத்தும் முயற்சி மார்ச் மாதக் கடைசியில்தான் நிறுவப்பட முடிந்தது. TEPCO தற்போது தங்கியுள்ள இம்முறைகளைத்தான் எடனோ ஞாயிறன்று ஆலையில் ஒப்புமையில் பேசும்போது, உறுதியான நிலைமைஎன்று விவரித்துள்ளார்.

இன்னும் ஆபத்தான தன்மையில் உள்ள புகுஷமா ஆலையின் நிலையை எடுத்துக்காட்டும் வகையில் நேற்று 7.1 ரிக்டர் ஒரு பெரிய பின்னதிர்வு  அவசரக்கால குளிர்ச்சி முறைகளை ஆலையில் ஒரு மணி நேரத்திற்குத் தடைக்கு உட்படுத்தியது. பின்னர்தான் மின்விசை மீட்கப்பட்டது. நில அதிர்வு ஆய்வாளர்கள் பெரும் அதிர்வுகள் தொடரக்கூடிய ஆபத்து அதிகம் என்று எச்சரித்துள்ளனர். மிக நம்பிக்கையான கருத்துக்களில் கூட, உலைக்கூடங்கள் சாதாரண குளிர்ச்சி நிலை அடைய பல மாதங்கள் ஆகும் என்றும் சேதமுற்ற உலைக்கூடங்களைப் பிரித்துவிட்டு அனைத்தையும் தூய்மைப்படுத்தும் முயற்சி முழுமை அடைய பல ஆண்டுகாலம் பிடிக்கும் எனவும் தெரிகிறது. இன்னமும் முழுமையாக அறியப்படாத உலைக்கூடம் 1, 2 மற்றும் 3ல் நடுப்பகுதிச் சேதத்தின் பரப்பு மற்றும் ஓரளவு கரைப்பிற்கான வாய்ப்பு உட்பட அணுசக்தி வல்லுனர்களால் பெரும் விவாதத்திற்கு உட்பட்டுள்ளது.

நடக்கும் ஆபத்துக்கள் பற்றிய மற்றொரு குறிப்பு நேற்று அரசாங்கம் ஆலையைச் சுற்றியுள்ள 20 கி.மீ. ஒதுக்கப்பட்ட பகுதி ஐந்து சிறு நகரங்களையும் கிராமங்களையும் உள்ளடக்கும் என்று எடுத்த முடிவாகும். இவை நில நடுக்கத்திற்கு முன் 115,000 மக்களைக் கொண்டிருந்தன. பல வாரங்களாக அணுசக்தி இடர்கள் பற்றிய அதன் மதிப்பீட்டில் பிற்போக்குத்தனமாக இருக்கும் அமெரிக்க அணுசக்திக் கட்டுப்பாட்டுக்குழு,  80 கிமீ ஒதுக்கப்பட்ட பகுதிக்கு பரிந்துரை செய்து வருகிறது. ஒரு 15 நாட்களுக்கு முன்பு சர்வதேச அணுசக்தி அமைப்பின் ஆய்வாளர்கள் நீண்டகாலமாக இருக்கும் ஐசோடோப் செசியம் 137 என்பது ஆலைக்கு வடமேற்கே 40 கி.மீ. தொலைவில் உள்ள லிடேட் கிராமத்தில் உள்ளது என்று கண்டுபிடித்தனர்.

ஆரம்பத்தில் இருந்தே நீண்ட பாதுகாப்பு மீறல்கள், மூடிமறைப்புக்கள் என்ற வரலாற்றைக் கொண்டுள்ள அணுசக்தி இடர்கள் பற்றிய அதன் மதிப்பீட்டில் பிற்போக்குத்தனமாக TEPCO ஆபத்தைக் குறைத்துக்காட்டும், தவறான தகவல்களை, அதுவும் மிகக் குறைவாகத்தான் கொடுத்து வந்துள்ளது. ஜப்பானின் அணுசக்திப் பாதுகாப்பு ஆணையம் நேற்று அணுசக்தியினால் விளையக்கூடிய ஆபத்தை உத்தியோகபூர்வ மட்டத்தை 5ல் இருந்து மிகஉயர்ந்த அளவான 7க்கு உயர்த்தியது. இது செர்னோபில் தரத்திற்குச் சமமானது ஆகும். ஆயினும்கூட, NISAவும் TEPCOவும் வணிக நலன்களினால் தொடர்ந்து உந்துதல் பெறுகின்றன.

ஒரு கருத்தை வெளிப்படுத்தும் நிகழ்வில், TEPCO மார்ச் 26ம் தேதி புகுஷிமா நிர்வாக அதிகாரத்திடம் இரு புதிய உலைக்கூட பிரிவுகளான 7, 8 இனை கட்டுவதற்கு ஒரு திட்டத்தை முன்வைத்துள்ளது. இவை மிக உயர்ந்த கதிரியக்கக் கசிவு வெளிப்பட்டுள்ள அதே ஆலை இடத்தில் கட்டப்பட உள்ளது. உள்ளூர் அரசாங்கத்தின் எதிர்ப்பைப் பற்றிப் பொருட்படுத்தாமல், பெருநிறுவனம் அதன் திருத்தப்படாத திட்டங்களை மார்ச் 31ம் தேதி NISA இணைந்துள்ள பொருளாதார, வணிக, தொழில்துறை அமைச்சரகத்தின் அனுமதிக்காக அனுப்பியுள்ளது. செய்தி ஊடகத்திற்குத் தகவல் கசிந்தபின்தான் TEPCO பின்வாங்கி, இத்திட்டம் ஒரு தவறுஎன்று அறிவித்தது.

TEPCOவின் உபாயங்கள் அரசியலளவில் பொருந்தாமல் இருக்கலாம், ஆனால் அது ஒன்றும் தவறால் உருவானதல்ல. நிறுவனத்தின் இலக்கு எப்பொழுதுமே நெருக்கடியை அகற்றுவதற்கு  மிகக்குறைவாகச் செலவிட்டு அதை விரைவாகப் பின்னுக்குத் தள்ளிவிடுவதாகவே இருந்த்துகடல் நீரை ஆலைக்குள் செலுத்துவதற்கு நிறுவனம் தாமதப்படுத்தியது; ஏனெனில் அது உலைகளை இன்னும் காப்பாற்றிவிட முடியும் என்ற கருதியது. நிறுவனத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக அரசாங்கம் TEPCOவையே தொடர்ந்து பொறுப்பேற்கச் செய்து பில்லியன் கணக்கான நிதி உதவி கிடைப்பதற்கான வாய்ப்பையும் உயர்த்தி, அரசியல் சேதத்தை கட்டுப்படுத்துவது எனக்கூறக்கூடிய வகையில் உதவும் செயலைத்தான் செய்தது.

கடந்த வார இறுதியில் வெளியுறவு மந்திரி ராக்காய் மட்சுமோட்டோ  ஜாகர்த்தாவிற்கு ஆசியன் வெளியுறவு மந்திரிகளுடைய சிறப்புக் கூட்டத்திற்காகச் சென்றிருந்தார். ஜப்பானிய நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆசியன் (ASEAN) கொடுக்கப்படும் உதவி என்பதுதான் கூட்டத்தின் பெயரளவு நோக்கமாகும். ஆனால் மட்சுமோடோவிற்கு மற்றொரு முக்கிய நோக்கம் இருந்தது. ஆசியன் நாடுகளுக்கு ஜப்பானின் அணுசக்தித் தொழில்நுட்பம் பாதுகாப்பாகப் பயன்படுத்தப்படலாம் என்பதே அது. சர்வதேச அணுசக்தி வளர்ச்சி ஜப்பானிய நிறுவனம் என்பதில் TEPCOவிற்கு அதிக பங்குகள் உள்ளது. இது வியட்நாம், இந்தோனிசியா, தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸில் நிறைய அணுசக்தி உலைக்கூடங்கள் கட்டியுள்ளது அல்லது கட்டுவதற்கான ஒப்பந்தங்கள் பெற முற்படுகிறது.

புகுஷிமாப் பேரழிவு இலாப முறையின் துருப்பிடித்த, ஊழல் தன்மையைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. அணுசக்தித் தொழில்நுட்பம் அவ்வாறே ஆபத்தை முன்வைக்கவில்லை. ஆனால் அது வளர்ச்சியடையும் சமூகப், பொருளாதார ஒழுங்கு என்பது எப்படி உள்ளதோ அதைப் பொறுத்து ஆபத்து உள்ளது. தனியார் நிறுவனங்களின் பொறுப்பின் அணுசக்தித் திட்டங்கள் இருந்து, முதலாளித்துவச் சந்தை முறையின் மேலாதிக்கத்திற்கு உட்பட்டிருந்தால், சுற்றுச்சூழல், மக்கள் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவை தவிர்க்க முடியாமல் இலாப உந்துதலுக்குத் தாழ்த்தப்பட்டுவிடும். அணுசக்தி பாதுகாப்பாக இயக்கப்படக்கூடிய ஒரே முறை தொழிலாளர் வர்க்கத்தின் பொதுஉடமை மற்றும் ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் ,அதாவது சோசலிசத்தின்கீழ் அதை இருத்துவதுதான்.