WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
ஐவரி
கோஸ்ட்டில் பக்போவைக்
பிடிப்பதற்கு
பிரான்ஸ் உதவுகிறது
By Ann Talbot
12 April 2011
ஐவரி கோஸ்ட்டின் தற்போதைய
ஜனாதிபதியான
லோரன்ட்
பக்போ நேற்று சிறைபிடிக்கப்பட்டு அவருடைய எதிரி அலசைன் ஔட்டராவிற்கு விசுவாசமாக
உள்ள படைகளின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
பிரெஞ்சுத் தூதர்
ஜோன் மார்க்
சிமோன்
திங்களன்று
பிற்பகல் பக்போ,
வணிகத் தலைநகரான அபிட்ஜானில் கைதுசெய்யப்பட்டார்
என்று அறிவித்தார்.
இங்குதான் பக்போவின் படைகள் வடக்கை தளமாகக் கொண்ட ஔட்டாராவின் படைகளுக்கு எதிராகக்
கடைசி முயற்சியாகப்
சண்டைபிடித்தன.
“ஐவரி கோஸ்ட்டின் குடியரசுப் படைகளால்
லோரன்ட்
பக்போ கைதுசெய்யப்பட்டு Hotel du
Golfe
க்கு
கொண்டு
செல்லப்பட்டுள்ளார்” என்று
அவர்
குறிப்பிட்டார்.
பிரெஞ்சுத் தலைமையில் ஐ.நா. படைகள் அபிட்ஜானில் இருப்பதால்,
அதன்
பாதுகாப்புப் பெற்றுள்ள இந்த ஓட்டல்,
2010 பூசலுக்குட்பட்ட ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் இருந்து ஔட்டாராவின் தளமாக
உள்ளது.
உண்மையில் பிரெஞ்சு அரசாங்கம் செயல்பட்டு பக்போவைத் தாக்கிக் கைதும்
செய்தது.
இது
பிரான்சின் முன்னாள் குடியேற்றத்தில் பிரெஞ்சுப் படைகள் தம் முன்னாள்
குடியேற்றத்தில் தொடர்ந்து இருப்பதை எதிர்த்த ஐ.நா. தீர்மானங்களை அப்பட்டமாக மீறிய
செயல் ஆகும். ஐ.நா.விற்கும்,
பிரான்சிற்கும்
பக்போவைக் கைது செய்யும் அதிகாரம் கிடையாது, ஐவரி கோஸ்ட்டில் ஆட்சி மாற்றம்
செய்வதற்கான அதிகாரமும் கிடையாது. ஐ.நா. தீர்மானங்கள் 1975, 1962ன் படி இப்படைகள்
பொதுமக்களையும்
தங்களையும் தாக்குதலில் இருந்து காத்துக்கொள்ளுவதற்குத்தான் அனுமதிக்கப்பட்டுள்ளன.
ஔட்டராவின் படைகள் கடந்த 10 நாட்களாக பக்போவின் இல்லத்தைக் கைப்பற்ற
முடியவில்லை.
ஞாயிறன்று அவர் தன் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள பகுதிகளை விரிவாக்கத் தொடங்கியது போல்
தோன்றியது. UNOCI,
பிரான்சும்
ஐ.நா.
உம்
இணைந்து
நடத்திய செயற்பாடு போரை விரைவில் முடிவிற்குக் கொண்டுவரும்
வடிவமைப்பைக் கொண்டிருந்தது.
செய்தி ஊடகத் தகவல்கள்படி, பிரெஞ்சு ஹெலிகாப்டர்களும் டாங்கிகளும்
அபிட்ஜானில் போர் நடக்கும்போது புகலிடம் நாடியிருந்த வளாகத்தின் மீது
குண்டுவீச்சுக்களை நடத்தின.
அவர் சரணடைவதற்குமுன் தொலைபேசியில் பக்போவுடன் தொடர்பு கொண்டிருந்த
அவரது
ஆதரவாளர்கள்,
அவர் தானே பிரெஞ்சுத் துருப்புக்களிடம் சரணடைந்தார் என்று கூறுகின்றனர். பக்போ
“பிரெஞ்சுச் சிறப்புப்படைகளால் அவருடைய இல்லத்தில் கைது செய்யப்பட்டு எதிர்க்கட்சித்
தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்” என்று
Toussint Alain
என்பவர்
கூறியுள்ளார்.
பக்போவின் விசுவாசியும் ஆலோசருமான
Zakaria Fellah
ஔட்டராவின் துருப்புக்கள்
இதனைச்
செய்தன
என்னும்
கூற்று “முற்றிலும் பொய்” என்றார். “இச்செயற்பாடு, இறுதித் தாக்குதல், பிரெஞ்சுப்
படைகளால் நடத்தப்பட்டது” என்று
அவர்
குறிப்பிட்டார்.
பக்போவின் மற்றொரு ஆதரவாளர் அஹௌவா டான் மேல்லோ நிருபர்களிடம்,
“ஜனாதிபதி
லோரன்ட்
பக்போ தன்னுடைய பதுங்கு குழியில் இருந்து வெளிவந்து எந்த எதிர்ப்பும் இல்லாமல்
பிரெஞ்சுக்காரர்களிடம் சரணடைந்தார்” என்றார்.
“பக்போ கைது செய்யப்பட்ட இடத்தில் ஒரு பிரெஞ்சு வீரர் கூட இல்லை”
என்று பிரெஞ்சு இராணுவச் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறினார்.
ஔட்டராவின் ஐ.நா.தூதர் யூசேவ்
பம்பா பிரெஞ்சுத் துருப்புக்கள் பக்போவைக் கைப்பற்றினவா எனக் கேட்கப்பட்டதற்கு
அவர்கள் எந்தப் பங்கையும் கொள்ளவில்லை என்று மறுத்தார். “அதைப் பற்றி நான் தெளிவாக
உள்ளேன். Cote
d’lovire
யின் குடியரசுப் படைகள் செயற்பாட்டை நடத்தின. பக்போ கைது செய்யப்பட்டார். அவர்
எங்கள் காவலில் உள்ளார்”
அனைத்துமே பிரான்ஸுக்கும் ஔட்டராச் சார்புப் படைகளுக்கும் விரிவான
ஒருங்கிணைப்பைத்தான் சுட்டிக்காட்டுகின்றன.
Le Parisien
உடைய நேரடித் தகவலின்படி,
2.44 பிற்பகலில் பக்போவின் வளாகம் சேதமுற்றது, 38 நிமிடங்களுக்குப் பின்னர் 3.22
பிற்பகலில் பக்போ கைது செய்யப்பட்ட அறிவிப்பு பிரெஞ்சு தூதரிடம் இருந்து வந்தது.
பிற்பகல் 3.54 க்கு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி ஔட்டராவோடு “நீண்ட நேரம்”
தொலைபேசித் தொடர்பைக் கொண்டிருந்தார் என்று தகவல் கொடுக்கப்பட்டது.
ஔட்டராவின்
கன்னை
தொலைக்காட்சிக்கு முன் பக்போவை
நிறுத்தி அவரைக் கைது செய்தது உண்மை என நிரூபித்தது.
பக்போவின் ஆதரவாளர்கள்,
பிரான்ஸ் அவரைப் படுகொலை செய்ய விரும்பினர் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
ஔட்டராவின் ஆதரவாளர்களாலும் அவருக்கு ஆபத்து நேரக்கூடும். பான் கி-மூன் “அவருடைய
பாதுகாப்பு உறுதியளிக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியபோது,
உட்குறிப்பாக பக்போவிற்கு ஆபத்து என்பதை ஒப்புக் கொண்டார்.
மேலும், “அதை நான் வலியுறுத்துவேன்” என்றார்.
அதன் பிறகு அன்று 30 பிரெஞ்சு டாங்கிகள்
அவரது
வளாகத்தைச் சூழ்ந்து முக்கிய சாலை சந்திப்புக்களையும் தடைக்கு உட்படுத்தின.
இதற்கிடையில் ஔட்டராவின்
படைகள்
அரசாங்கத்
தொலைக்காட்சி நிலையத்தைக் கைப்பற்றின. அன்று காலை,
நீல உறைகளில் தெரியும் புதிய
கிலாஷிநிகோவ்
இயந்திரத் துப்பாக்கிகள்
சகிதம்
ஔட்டாரவின்
துருப்புக்கள்
வந்ததைப் நிருபர்கள் பார்த்துள்ளனர்.
இத்
தாக்குதலுக்கு ஆதரவு கொடுத்த ஐ.நா.வின் பொதுச் செயலர் பான் கி-மூன்,
ஐ.நா.வின் நோக்கம் அபிட்ஜானில் உள்ள
பொதுமக்களைக்
காப்பாற்றுவதுதான் என்று
கூறினார்.
“பொதுமக்களுக்கும்
நம் சமாதானம் காப்பவர்களுக்கும் எதிராக கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தியது மற்றும்
முறையான அரசாங்கத்தின்
தலைமையகத்திற்கு எதிராகத் தாக்குதல்கள் நடத்தியது என்பன
மீண்டும் UNOCI
ஐ தேவையான நடவடிக்கைகளை எடுத்து இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்படுதலைத் தடுக்கும்
உத்தரவைக் கொடுக்க வைத்தது; அதுதான் பாதுகாப்புக்குழுத் தீர்மானங்கள் 1975
(2011) மற்றும் 1962 (2010)ன் நோக்கம் ஆகும்.”
UNOCI
ன் செய்தித் தொடர்பாளர் Hamadoun
Toure,
லோரன்ட்
பக்போவின் இல்லத்தின்மீது நடத்தப்பட்ட ராக்கட் தாக்குதல்கள்
பொதுமக்களைத்
தாக்கப் பயன்படுத்தப்பட்ட கனரக ஆயுதங்களைச் சமன்செய்துவிடும் நோக்கத்தைக்
கொண்டிருந்தன என்ற கூற்றை வலியுறுத்தினார். “அவருடைய இல்லத்தைக் கட்டுப்பாட்டின்கீழ்
கொண்டுவர நாங்கள் முயலவில்லை… எங்கள் நோக்கம் எவரையும்
பிடிப்பது
அல்ல” என்றார் அவர்.
இப்பொழுது பக்போவிற்கு என்ன நடக்கும் என்பது பற்றி உறுதியாகக்
கூறமுடியாது. பெயரிட விரும்பாத மற்றொரு தூதர் செய்தியாளர்களிடம், “அவரை விரைவில்
வெட்டுபவரிடம் விட்டுவிடுவார்கள்
என்று நினைக்கிறேன்; ஆனால் அபிட்ஜானில் எந்த இடமும் பாதுகாப்பாக
இல்லை.” என்றார்.
ஐவரி கோஸ்ட்டில் தென்பகுதியில் இன்னும் பக்போவிற்கு பரந்த ஆதரவு
உள்ளது.
அவருடைய அரசாங்கத்தின்கீழ் இருந்த இப்பகுதி
ஐவரி கோஸ்ட்டின் உத்தியோகப் பூர்வ இராணுவத்தின் ஆதிக்கத்திலும் இருந்தது. அவர்
நவம்பர் தேர்தல்களில் பதிவான வாக்குகளில் 46% ஐப் பெற்றிருந்தார் என்று சர்வதேச
அவதானிகள்
மொத்த ஒப்புதல் கொடுத்த கருத்தில் இருந்து தெரிகிறது. பக்போவோ இந்த
எண்ணிக்கையை சவாலுக்கு உட்படுத்தினார்.
வாஷிங்டனை
தளமாகக்
கொண்ட Centre for Strategic and
International Studies
ன்
ரிச்சார்ட் டவுனி,
ஐவரி கோஸ்ட்டில் பக்போ மீது விசாரணை நடத்துவது “இன்னும்
அமைதியின்மையைத் தூண்டிவிடக்கூடிய எரியும் ஈட்டியாக இருக்கும்” என்று எச்சரித்தார்.
அனைவருமே இவ்வளவு எச்சரிக்கையுடன் இல்லை. பிரெஞ்சுச் செய்தி
ஊடகத்தில் இழிவான வெற்றிப் பூரிப்பு வெளிப்படையாகத் தெரிகிறது.
L’Express “Francarifique
பக்கம் மீண்டும் திரும்புகிறது” எனக் கூறுகிறது. உள்துறை மந்திரியான
Claude Gueant, Le Parisien
இடம் ஐவரி கோஸ்ட் இறுதியின் “அமைதியைக் கொள்ளும், பொருளாதார வளர்ச்சியின் மறுபிறப்பு
அங்கு தோன்றும்” என்றார்.
வடக்கை
தளமாகக்
கொண்டுள்ள
எதிர்ப்பாளர்கள் தெற்கை வன்முறையில் கைப்பற்றிய பிறகு ஐவரி கோஸ்ட்டில்
அமைதி, பொருளாதார வளர்ச்சி என்னும் மாற்றத்தைக் காண்பது மிகவும் கடினம்தான்.
இங்குதான் பக்போ கணிசமான தேர்தல் வெற்றிகளைப் பெற்றிருந்தார்.
ஔட்டாராவே சந்தேகிக்கப்படும் போர்க் குற்றங்களுக்காக விசாரணையில்
உள்ளார்.
அதைப்
போல் அவருடைய ஆதரவாளர்கள் ஐவரி கோஸ்ட்டின் மேற்குப் பிராந்தியத்தில்
மனித குலத்திற்கு எதிராக நடத்திய குற்றங்கள் குறித்து சந்தேகத்திற்கு உட்பட்டுள்ளனர்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணை வக்கீலான
Luis Moreo-Ocampo
இதற்கான
சான்றுகள்
குறித்து துவக்க ஆய்வைத் தொடங்கியுள்ளார். இப்பிராந்தியம்தான்,
பதவியை மேற்கொள்ளும்போது ஔட்டராவிற்கு அதிகப் பிரச்சினைகளைக் கொடுக்கும்.
ஏனெனில் இது கோக்கோ பயிர் வளர்ச்சிக்கு முக்கிய பிராந்தியம் ஆகும்.
அதுதான் ஐவரி கோஸ்ட்டின் முக்கிய ஏற்றுமதிப் பொருள் ஆகும்.
இதைத்தவிர தங்கம்
மற்றும் இயற்கை எரிவாயுவும் ஏற்றுமதி ஆகின்றன.
நிலச் சீர்திருத்தம் தேவை என்பதற்கு ஆழ்ந்த அழுத்தங்கள் உள்ளன.
முன்னாள் குடியேறியவர்கள் தாங்கள் ஆக்கிரமித்துள்ள நிலங்கள் அங்கீகரிக்கப்பட
வேண்டும் என்று கூறுகின்றனர். இந்த அழுத்தங்கள்தான் ஔட்டாரா படைகள் முன்னேறுகையில்
நடத்தப்பட்ட படுகொலைகளின் பின்னணியில் உள்ளன. |