சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

A tool of imperialism: France’s New Anti-Capitalist Party backs war on Libya

ஏகாதிபத்தியத்தின் ஒரு கருவி மீதான யுத்தத்தைப் பிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி ஆதரிக்கிறது

By Alex Lantier
25 March 2011
Use this version to print | Send feedback

லிபியாவிற்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்சின் தூண்டுதலற்ற இராணுவ தாக்குதலுக்கு, புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சியும் (NPA), நான்காம் அகிலத்தின் பப்லோவாத ஐக்கிய செயலகத்தின் (United Secretariat of the Fourth International – USFI) அதன் சக-சிந்தனையாளர்களும் அவர்களின் ஆதரவை அறிவித்துள்ளனர். லிபிய தாக்குதலில் ஏகாதிபத்திய பண்பு எதுவுமில்லை என்று பகிரங்கமாக வாதிட்டு, அவர்கள் வெட்கமில்லாமல் அவர்களின் கொள்கைகளைப் பிரதான சக்திகளின் கொள்கைகளோடு இணைத்துக் கொண்டுள்ளனர்.

நெதர்லாந்தின் ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான சர்வதேச பயிலகத்தின் (International Institute for Research and Education) ஓர் ஆராய்ச்சியாளர்  பெர்டில் விடெட்டால் எழுதப்பட்டு, USFI இன் வலைத்தளம் International Viewpoint இல் மார்ச் 21இல் பிரசுரமான ஒரு கட்டுரை (“Bombs over Libya”), யுத்தத்திற்கு பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் விளக்கத்தை, அதாவது கேர்னல் மௌம்மர் கடாபியின் ஆட்சிக்கு எதிராக பெங்காசியிலுள்ள எதிர்ப்பு தேசிய சபையை (National Council) ஆதரித்து தலையீடு செய்துள்ளமை, “மனிதாபிமான" அக்கறைகளால் உந்தப்பட்டுள்ளது என்ற விளக்கத்தை, முற்றிலுமாக ஏற்றுக் கொண்டுள்ளது

அவர் இவ்வாறு தொடங்குகிறார்: “லிபியாவிற்கு எதிரான இந்த இராணுவ நடவடிக்கை, கடாபி ஆட்சி அதன் எதிர்ப்பாளர்கள் மீது நடத்தும் தாக்குதலை நிறுத்துவதற்கு அவசியப்படுகிறதா, அதற்கு உதவுகிறதா? அல்லது அது லிபிய மக்களின் நிலைமையை இன்னும் மோசமாக்கும் மூலோபாய தன்னலன்களால் உந்தப்பட்ட ஓர் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பா? இந்த பிரச்சினையில் சர்வதேச இடது பிளவுபட்டுள்ளது. இப்பிரச்சினை உண்மையிலேயே சிக்கல் வாய்ந்ததாகும். மேலும் ஏகாதிபத்திய தாக்குதலுக்கு எதிர்ப்பாக எப்போதும் பயன்படுத்தப்படும் வழக்கமான முழக்கங்கள் மூலமாகவோ அல்லது எதிர்ப்பாளர்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதன் மூலமாகவோ இதற்கு விடை கூறிவிட முடியாது.      

விடெட் ஆல் முன்வைக்கப்படும் இந்த கேள்வி, மிக மோசமான அவநம்பிக்கையில் உள்ளது. இந்த யுத்தம் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பின் ஒரு நடவடிக்கையாகும் என்பதை USFI நன்கு அறிந்துகொண்டே தான் அதற்கு ஆதரவு அளிக்கிறது. "பிரான்ஸூம், இங்கிலாந்தும், அமெரிக்காவும் ஏதோ திடீர் இரக்கத்தால் உந்தப்படவில்லை—மாறாக எண்ணெய்வளமிக்க அப்பிராந்தியத்தின் மூலோபாய நலனால் உந்தப்பட்டுள்ளன என்பது நம் எல்லோருக்கும் தெரியும் என்பது உண்மை தான்," என்று வெடெட்டே சுருக்கமாக ஒப்புக் கொள்கிறார்.  

உயிர்களைக் காப்பாற்றவே அது லிபியாவில் குண்டுவீசி வருவதாக கூறுவதில் உள்ள "மேற்கின் இரட்டை நிலைப்பாடுகளை" கூட அவர் குறிப்பிடுகிறார்: “கடைசிவரை முபாரக்கிற்கு ஆதரவு அளித்த, மற்றும் இப்போதும்கூட, அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராக கொடூரமான படையைப் பயன்படுத்தும் பஹ்ரெயினிய முடியாட்சியைக் கண்டிக்கக் கூட மறுக்கும் [அதே] தலைவர்கள், லிபியாவில் மனித உரிமைகள் நிலைமைகளால் நியாயமாக நகர்த்தப்பட்டுள்ளார்கள் என்று நாம் எவ்வாறு நம்ப முடியும்?”     

இத்தகைய வாதங்களை எழுப்பிய பின்னர், வெடெட் அவற்றையெல்லாம் சாதாரணமாக உதறித் தள்ளிவிடுகிறார்: “இந்த புள்ளிகளில் எவையும், இயல்பிலேயே, லிபியா மீது விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்ட வலயப்பகுதிக்கு எதிர்ப்பை அறிவிக்கும் வாதங்கள் ஆகாது. லிபியாவில் மேற்கதிய இராணுவ தலையீட்டை நிராகரிப்பதற்கு, அங்கிருக்கும் அபாயங்கள் மற்றும் அமைந்திருக்கும் சூழல்களைக் குறித்த சிறந்த பகுப்பாய்வு தேவைப்படுகிறது. மேலும் சில கடினமான நிராகரிப்புகளை நாம் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்குறிப்பிட்டுக் கூறவேண்டுமானால், எதிர்தரப்பு படைகளின் தலைவர்கள் ஒரு விமானங்கள் பறக்கத்தடைவிதிக்கப்பட்ட வலயப்பகுதிக்கு அழைப்புவிடுத்துள்ள உண்மை. மேலும் ஐக்கியம் மற்றும் ஏகாதிபத்திய-எதிர்ப்புக்கு வலைப்பதிவுகளைப் பதிப்பிப்பதை விட சிறந்த மாற்றீடுகளை நாம் காண வேண்டியுள்ளது.”

ஒரு யுத்தம் குறித்த ஒரு தொழிலாள-வர்க்க கட்சியின் அணுகுமுறை, அதை நடத்தும் ஆட்சிகளின் சமூக மற்றும் வர்க்க குணாம்சத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தும் மார்க்சிசத்திற்கு, இவ்வாறான ஓர் அறிக்கையுடன்,  USFI அதன் பகிரங்கமான விரோதத்தை அறிவித்துள்ளது. குறிப்பாக, ஓர் ஒடுக்கப்பட்ட, அடிப்படையில் லிபியா போன்ற முன்னாள்-காலனித்துவ நாட்டிற்கு எதிராக அமெரிக்கா, இங்கிலாந்து, மற்றும் பிரான்ஸ் போன்ற ஏகாதிபத்திய சக்திகளின் தலைமையில் நடத்தப்படும் யுத்தத்தை மார்க்சிஸ்டுகள் ஒரு  கோட்பாட்டு அடித்தளத்தில் எதிர்க்கின்றனர். மாறாக வெடெட், அரசியல் கோட்பாடுகளுக்கு வெகுதூரத்தில் விலகி நின்று அவசரப்படுகிறார்.

ஏகாதிபத்திய சக்திகளின் கொள்கைகளோடு முற்றிலும் இணைந்துள்ள அவர் முன்மொழியும் "மாற்றீடு", லிபியாவில் மேற்கத்திய-ஆதரவிலான படைகளை ஆயுதபாணியாக்குவதாகும்: “பல தசாப்தங்களாக மேற்கு நாடுகளால் ஆயுத உதவிபெற்று வந்த கடாபியின் படைகளை எதிர்ப்பாளர்கள் இன்னும் சிறப்பாக எதிர்கொள்ள ஒரு வாய்ப்பை வழங்கும் விதத்தில், அவர்களுக்கு விமான-எதிர்ப்பு கருவிகளையும், ஏனைய ஆயுதங்களையும் வழங்க நாம் வாதிட வேண்டும்; நம்மால் வாதிடவும் முடியும். அதிருஷ்டவசமாக, எகிப்தில் உள்ள (இதன் எல்லை பெங்காசிக்கு அருகில் உள்ளது) தற்போதைய இடைக்கால நிர்வாகம், அதன் எல்லை வழியாக ஆயுதங்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது.”

லிபிய எதிர்ப்பாளர்களுக்கு பிரான்ஸ் துப்பாக்கிகளை அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தி, NPA செய்தி தொடர்பாளர் ஒலிவியே பெசன்ஸநோ கூட இதேபோன்ற முன்மொழிவுகளை செய்திருந்தார்: “நாங்கள் முழுமையாக லிபிய மக்களோடு ஒற்றுமை உணர்வை கொண்டுள்ளோம். அந்த சர்வாதிகாரியை தூக்கியெறியவும், சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை வென்றெடுக்கவும் அவர்களுக்குத் தேவைப்படும் ஆயுதங்களையும், தற்காப்பிற்கான கருவிகளையும் அவர்களுக்கு நாம் வழங்க வேண்டும்.”

தலையீடு பற்றிய கொள்கை, “புரட்சிகர" கடாபி-எதிர்ப்பு படைகளைப் பாதுகாக்கும் புனித இலட்சியத்தோடு இணைந்துள்ளதால், அதை எதிர்ப்பது சாத்தியமில்லை என்பது தான், பிரான்சிலும், அதற்கு அப்பாலும் உள்ள அரசாங்கங்களின் மற்றும் ஊடகங்களின் விருப்பத்தை வலுப்படுத்த, USFI அறிக்கைகளின் நோக்கமாக உள்ளது. இந்த நிலைப்பாடானது, NPA மற்றும் USFIஆல் பிரசுரிக்கபட்ட ஓரியண்டல் மற்றும் ஆபிரிக்க ஆய்வுகளுக்கான இலண்டன் பயிலகத்தின் ஜில்பேர்ட் அஷ்காருடன் நடத்தப்பட்ட, "லிபியாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது?" என்றவொரு நேர்காணலில்  மிகவும் அருவருக்கத்தக்க வகையில் வெளிப்பட்டது.

அவர் கூறினார்: “கடாபி அவருடைய இராணுவத் தாக்குதலைத் தொடரவும், பெங்காசியை மீட்கவும் அனுமதிக்கப்பட்டால், அங்கே பெரும்படுகொலைகள் நிகழும். இந்த விஷயத்தில் மக்கள் உண்மையிலேயே ஆபத்தில் உள்ளார்கள். அதிலிருந்து அவர்களைப் பாதுகாக்க அங்கே வேறு நம்பகமான மாற்றீடு எதுவும் இல்லை. கடாபிபடைகளின் தாக்குதல் சில மணி நேரங்களில், அல்லது அதிகபட்சம் சில நாட்களில் நடக்க உள்ளது. ஆனால் நீங்கள் ஏகாதிபத்திய-எதிர்ப்பு கொள்கைகள் என்ற பெயரில், பொதுமக்களின் படுகொலைகளைத் தடுக்கும் ஒரு நடவடிக்கையை எதிர்க்க முடியாது.”

USFI பயன்படுத்தும் இந்த வரிகள், ஒரு குட்டி-முதலாளித்துவ, ஏகாதிபத்திய சார்பு குணாம்சத்துடன் அதன் கண்ணோட்டத்திற்கு முத்திரை குத்துகிறது. லிபியாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறதோ அது "மனித உரிமைகளுக்கான சூழலோ", அல்லது பெங்காசியில் அமைதியைக் காக்க "விமானங்கள் பறக்கத்தடைவிதிக்கப்பட்ட வலயப்பகுதியை" நடைமுறைப்படுத்தும் மேற்கத்திய சக்திகளின் முக்கிய நோக்கமோ அல்ல.

லிபியாவின் விமானப்படைகள் மற்றும் இராணுவப்படைகளின் பெரும் பிரிவுகளை மேற்கத்திய சக்திகள் அழித்துவரும் நிலையில், திரிப்போலியிலும் ஏனைய லிபிய நகரங்களிலும் குண்டுமழையும், கப்பல்களிலிருந்து ஏவுகணைகளையும் வீசித்தாக்கி வரும் நிலையில், அவை லிபியாவின் ஓர் உள்நாட்டு யுத்தத்திற்குள் ஒரு பெரும் தலையீட்டை செய்து வருகிறார்கள். அவர்களின் நோக்கம் பெங்காசியை ஆளும் வலதுசாரிக் குழுவை பயன்படுத்துவதாகும். லிபியாவைக் கைப்பற்ற தோற்றப்பாட்டளவில் மௌனமாக இருக்கும் குணாம்சத்தைக் கொண்டிருக்கும் அவர்களைத் தான் USFI வழக்கமாக "லிபிய மக்கள்" என்று குறிப்பிடுகிறது. இது மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் இருக்கும் சர்வாதிகாரிகளுக்கு எதிராக புரட்சிகரப் போராட்டங்களால் அதிர்வுக்குள்ளாக்கப்பட்ட ஒரு மூலோபாய, எண்ணெய் வளம் மிக்க அப்பிராந்தியத்தில் ஒரு வளைந்து கொடுக்கின்ற, மேற்கு-ஆதரவிலான ஆட்சியைத் தோற்றுவிக்கும்.

லிபிய யுத்தத்தை நியாயப்படுத்த போலி "மனிதாபிமான" வாதங்களை முன்வைப்பதன் மூலம், USFIஇல் உள்ள NPA மற்றும் அதன் சக-சிந்தனையாளர்கள்  தங்களைத்தாங்களே முதலாளித்துவ, ஏகாதிபத்திய ஆதரவு கட்சிகளாக வெளிக்காட்டுகிறார்கள்.

யுத்தத்திற்கான இத்தகைய "மனிதாபிமான" அடித்தளங்கள் 20ஆம் நூற்றாண்டு முழுவதுமே, பெரும்பாலான சமயங்களில் எவ்வித ஆதாரமுமின்றி, ஏகாதிபத்திய படையெடுப்புகளை நியாயப்படுத்த தூண்டப்பட்டுள்ளன. இதற்கொரு சமீபத்திய சான்று, 1999இல் கொசோவோ மீது நேட்டோ நடத்திய தாக்குதலாகும். கொசோவோ யூகோஸ்லாவிய ஜனாதிபதி ஸ்லோபொடன் மிலோஸ்விக் நூறு ஆயிரக்கணக்கான கொசோவோ அல்பானியர்களைப் படுகொலை செய்து கொண்டிருக்கிறார் என்ற கருத்துக்கள் பரவலாக பத்திரிகைகளால் பரப்பப்பட்டு அந்த நடவடிக்கை நியாயப்படுத்தப்பட்டது. யூகோஸ்லாவிய நடவடிக்கைகளால் கொசோவோவில் பொதுமக்களின் இறப்பு எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் ஏற்பட்டிருந்ததாக இப்போது கருதப்பட்டாலும் கூட, கொசோவோ விடுதலை இராணுவம் என்ற ஒரு கிரிமினல் குழுவிற்கு (தற்போது இது சட்டவிரோத உடலுறுப்பு வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தது எனத் தெரியவந்துள்ளது) ஆதரவளித்து கொண்டே, சேர்பியா மற்றும் கொசோவோ மீது குண்டுகளை வீச நேட்டோ அதையொரு போலிக்காரணமாக பயன்படுத்தியது.

எல்லாவற்றிற்கும் மேலாக, மேற்கத்திய சக்திகளால் தொடங்கப்படும் யுத்தங்களை மதீப்பீடு செய்வதில் அரசியல் கோட்பாடுகள் கைவிடப்பட்டு, வெறுமனே "உயிர்களைக் காப்பாற்றுவது" என்பது மட்டுமே வைத்துக் கொள்ளப்பட்டால், மத்திய கிழக்கிலும், ஆபிரிக்கா, அல்லது ஆசியாவிலும் படையெடுக்க தோற்றப்பாட்டளவில் USFI ஆதரவளிக்காத எந்தவொரு நாடும் இருக்காது. சிக்கலான இன மற்றும் பிரிவினைவாத முரண்பாடுகளை முகங்கொடுக்கும் நாடுகள் இருக்கும் பிராந்தியத்தில், மேற்கத்திய சக்திகள் அவை ஆதரிக்கும் சக்திகளின் உயிர்களைப் பாதுகாக்கும் அடித்தளத்தில் எப்போதும் புனித படையெடுப்பை நடத்த முடியும்.

லிபியாவைப் பொறுத்தவரை, ஏகாதிபத்திய நாடுகளில் மார்ச் மாத தொடக்கத்திலேயே தொடங்கிய, யுத்த பிரச்சாரத்தின் ஆரம்பத்திலிருந்தே USFI அதன் பங்கை வகித்தது.

லிபியாவில் மேற்கத்திய இராணுவ தலையீட்டிற்கு தேசிய சபை அழைப்புவிடுத்த மறுதினம், அதாவது மார்ச் 3இல், அது லிபியாவில் "மக்களுக்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையில் நடந்துவந்த மரண போராட்டத்தைப்" பாராட்டி, "லிபிய புரட்சியை ஆதரி! கடாபியை வெளியேற்று,” என்று ஓர் அறிக்கையைப் பிரசுரித்தது.

யுத்தத்தை ஆதரிப்பதில் இருந்த இந்த தீவிரத்தன்மை, யுத்தத்தை முன்னெடுப்பதில் பிரெஞ்சு ஏகாதிபத்தியம் ஒரு முன்னணி பாத்திரம் வகிக்க, பெரும் முக்கியத்துவத்தைக் கொடுத்தது. ஆனால் வெறுமனே NPA மற்றும் USFIஇன் கருத்துக்களை மட்டுமே படிப்பதன் மூலம், லிபியாவில் ஒரு "புரட்சிக்கு" உதவக்கூடும் என அவர்கள் முறையிட்ட சக்தி, பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் செல்வாக்கற்ற அதிவலதுசாரி அரசாங்கமாகும் என்பதை ஒருவரால் ஒருபோதும் புரிந்து கொள்ளவே முடியாது.

குறிப்பிடத்தக்க வகையில் இந்த நிலைப்பாடுகள், இலத்தீன் அமெரிக்க முதலாளித்துவ தேசியவாத ஆட்சிகள், வெனிசூலாவில் ஹ்யூகோ ஷாவேஸ், நிக்காரகுவாவில் டானியல் ஒர்ட்டேகா, மற்றும் கியூபாவில் பெடல் காஸ்ட்ரோ என பல தசாப்தங்களாக USFI அதன் முன்மாதிரிகளாக காட்டிவந்த அரசியல் தலைவர்களுடன் அதை முரண்பாட்டிற்குள் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. 2002இல் வெனிசூலாவில் ஷாவேஸுக்கு எதிரான இராணுவ ஆட்சிகவிழ்ப்பு, நிக்காரகுவாவில் 1980களில் எதிர்-புரட்சிகர கொண்ட்ராஸ்  கிளர்ச்சி, மற்றும் 1961இல் கியூபாவில் பிக்ஸ் வளைகுடா படையெடுப்பு என அமெரிக்க ஆதரவுடனான ஆட்சி கவிழ்ப்புகளின் நீண்டகால அனுபவத்திலிருந்து, இலத்தீன் அமெரிக்க அரசுகள் மேற்கத்திய தலையீடுகளின் அபாயம் குறித்து எச்சரித்தன.

எனவே USFI அறிக்கை இலத்தீன் அமெரிக்கத் தேசியவாதிகளையும் கண்டித்தது. அது எழுதியது: “ஹ்யூகோ ஷாவேஸ், டானியல் ஒர்ட்டேகா, மற்றும் பிடெல் காஸ்ட்ரோவால் எடுக்கப்பட்ட நிலைப்பாடுகளுடன் நாங்கள் முற்றிலும் உடன்படவில்லை. லிபிய மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு காட்டுவதற்குப் பதிலாக, ஓர் அமெரிக்கா ஏகாதிபத்திய தலையீட்டின் அபாயத்தை பிடெல் காஸ்ட்ரோ கண்டனம் தெரிவித்துள்ளார். ஹூகோ சாவேஸைப் பொறுத்தவரையில், அவர் சர்வாதிகாரி கடாபிக்கே அவரின் ஆதரவை மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.”

அது போலி-இடது முழக்கத்தில் இருந்த அதன் ஏகாதிபத்திய ஆதரவு போக்கை மறைக்க முயன்றது: “உலகிலுள்ள புரட்சிகர, முற்போக்கான, ஏகாதிபத்திய-எதிர்ப்பு சக்திகளின் இத்தகைய நிலைப்பாடுகளை ஏற்க முடியாது. ஒரு புரட்சியை நடத்திவரும் தங்களின் மக்களையே படுகொலை செய்யும் சர்வாதிகாரிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம், நீங்கள் ஏகாதிபத்தியத்தை எதிர்க்க முடியாது. அது ஏகாதிபத்தியத்தை மேலும் பலப்படுத்தவே செய்யும். இத்தகைய புரட்சிகளுக்கு ஆதரவளிப்பதும், சர்வாதிகாரிகளுக்கு ஆதரவளிக்காமல், இத்தகைய புரட்சிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதும் தான் சர்வதேச அளவில் புரட்சிகர இயக்கத்தின் அடிப்படை பணியாகும்.”

USFIஇன் போலித்தன வாய்வீச்சிற்கு இந்த பத்தி ஒரு சிறந்த உதாரணமாகும். "ஏகாதிபத்திய-எதிர்ப்பு சக்திகள்" குறித்து இலத்தீன் அமெரிக்க தேசியவாதிகள் பேசினார்கள் என்பதற்காக அல்ல, மாறாக அது மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் ஒரு பிற்போக்குத்தனமான யுத்தத்திற்கு ஆதரவளிக்க தயாரிப்பு செய்து வந்தது என்பதனால் தான், அவர்களின் அறிக்கைகளை USFIஆல் ஏற்க முடியாமல் இருந்தது.

இலத்தீன் அமெரிக்க தேசியவாதிகளின் யுத்த அபாய எச்சரிக்கைகளுக்கு விடையிறுக்க, அதன் பெல்ஜிய கட்சியான LCR-SAPஆல் (Revolutionary Communist League-Socialist Workers Party) எழுதப்பட்ட, குறிப்பாக " ஷாவிசத்தின் (Chavism) திவால்நிலையை" குற்றஞ்சாட்டும் ஓர் அறிக்கையையும் கூட USFI பிரசுரித்தது.

கடாபி அவருடைய மக்களுக்கு எதிராக நடத்திய கொடூரத்தைக் கண்டிப்பதும், மக்கள் பேரெழுச்சி முகாமைத் தேர்ந்தெடுப்பதும் அவசர தேவையல்ல. [ஆனால்] நேட்டோவின் எதிர்கால தலையீட்டிற்கு மற்றும் எதிர்காலத்தில் வருமென கருதப்படும் தலையீட்டிற்கு எதிராக ஆர்பாட்டம் செய்வது தான் அவசர தேவையாகும். ஆகவே உறுதியாக தெரியாத ஆனால் சாத்தியத்திறனைக் கொண்டிருக்கும் ஒரு குற்ற அச்சுறுத்தலுக்காக, உண்மையிலேயே நடந்துவரும் ஒரு நிஜமான குற்றம் குறித்து நாம் "மௌனமாக இருந்துவிட வேண்டும்" என மறைமுகமாக குறிப்பிட்டதற்காக" USFI ஷாவேஸையும் காஸ்ட்ரோவையும் கண்டித்தது.

சம்பவங்கள் காட்டியுள்ளபடி, லிபியாவை நேட்டோ சக்திகள் தாக்கக்கூடும் என்ற அபாயம் குறித்த "உறுதியற்ற" அல்லது "முன் அனுமானம்" என்று எதுவுமே அங்கே இருக்கவில்லை. இருந்தபோதினும், ஏகாதிபத்திய தலையீட்டிற்கான ஒரு வாய்ப்பாக இருந்தது என்பதை USFI வெறித்தனமாக மறுத்தது.

இத்தகைய எச்சரிக்கைகளை "கட்டுக்கடங்காத சூழ்ச்சி தந்திரங்களாக" உதறித் தள்ளிவிட்டு, LCR-SAP எழுதியது: “லிபிய புரட்சியில் "விசேஷமானதன்மையோ" அல்லது "திட்டவட்டமான தன்மையோ" எதுவும் இல்லை. சிஐஏ அல்லது பின்லேடனால் திருப்பிவிடப்பட்ட எந்த வெளிநாட்டு சதியும் இல்லை; அதற்கு மாறாக, அப்பிராந்தியம் முழுவதும் வெடித்துக் கொண்டிருக்கும் அரபு புரட்சியின் நிகழ்ச்சிப்போக்கின் ஓர் உள்ளார்ந்த பாகமாகும்.”

இத்தகைய கருத்துக்கள் வெளிப்படையாகவே அந்த சமயங்களில் தவறாக இருந்தன. LCR-SAP ஆவணம் வெளியிடப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் தான், "மனிதாபிமான" விமானங்களைக் கொண்டு பிரிட்டிஷ், இத்தாலிய மற்றும் பிரெஞ்சு சிறப்பு படை துருப்புகள் லிபியாவில் மும்முரமாக இருந்தன என்ற செய்திகள் பத்திரிக்கைகளை முழுவதுமாக நிரப்பி இருந்தன. எவ்வாறிருந்த போதினும், மேற்கத்திய சக்திகளின் ஒரு பெரும் குண்டுவீச்சு நடவடிக்கையின் வெடிப்புடன், ஏகாதிபத்திய யுத்தத்தின் ஒரு பிரச்சாரகராக நிற்கும் USFIஇன் பாத்திரம் அம்பலப்பட்டது.

யுத்தத்தை முடுக்குவதற்கு லிபியாவிற்கு எதிரான ஓர் .நா. தீர்மானத்திற்கு பிரெஞ்சு அரசாங்கம் அழுத்தம் அளித்த போது, லிபியா மீதான ஒரு தாக்குதலுக்கு ஒரு மனிதாபிமான வாதத்தை அளிக்க முயன்று வந்த சோசலிஸ்ட் கட்சி (Socialist Party – PS) தலைமையில் இருந்த பிரெஞ்சு முதலாளித்துவ "இடதின்" வழக்கமான கூட்டாளிகளுடன் NPA சேர்ந்திருந்தது.

சோசலிஸ்ட் கட்சியின் சிறிய துணைக்கட்சிகளைப் பெருமளவில் கொண்டிருக்கும் ஒரு குழுவான, லிபிய மக்களுடன் ஒற்றுமையுணர்வுக்கான குழுவுடன் (Collective for Solidarity with the Libyan People) NPA லிபிய பிரகடனங்களில் கூட்டு-கைசாத்திட்டது..

பிரான்சின் வலதுசாரி "இடது, “லிபிய மக்களுடன் ஒற்றுமை உணர்வு”  என்றிருக்கும் இந்த பாசாங்குத்தனங்கள், லிபிய மக்களுக்கு எதிராக ஒரு யுத்தம் தொடுக்க ஆதரவளிப்பது என்பதையே குறிக்கிறது என்பதை ஊகிக்க போதுமானதாக உள்ளது. .நா. பாதுகாப்பு சபை 1973 தீர்மானத்திற்கு வாக்களித்த நாளான மார்ச் 17இல், “தேசிய சபை மட்டுமே லிபிய மக்களின் ஒரே சட்டப்பூர்வ பிரதிநிதியாக அங்கீகரிக்க" கோரி அதுவொரு அறிக்கையை வெளியிட்டது.

சோசலிஸ்ட் கட்சியிலிருந்து சமீபத்தில் பிரிந்து வந்திருந்த Jean-Luc Mélenchonஇன் இடது கட்சி (PG) மற்றும் Europe-Ecologie போன்ற, Collective ஏற்படுத்தி கொடுத்துள்ள சோசலிஸ்ட் கட்சியின் துணைக்கட்சிகளில் பல, லிபியா மீதான யுத்தத்தை அங்கீகரித்து உத்தியோகபூர்வ அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. சோசலிஸ்ட் கட்சியுடன் நீண்டகால அரசாங்க கூட்டாளியாக இருந்த Europe-Ecologie, “இதன்மூலம் சர்வதேசச் சட்டம் பலப்படுத்தப்பட்டுள்ளதாக" தெரிவித்தது.

Mélenchon பொறுத்தவரையில், “புரட்சியை அழியாமல் தடுக்க, கொடுங்கோலனை நாம் தகர்க்க வேண்டும்,” என்று விவரித்து, “லிபியாவில் இராணுவ நடவடிக்கைக்கு தாம் ஆதரவளிப்பதாக" Libération நாளிதழிழுக்கு அவர் தெரிவித்தார்.

உயிர்களைக் காப்பாற்றுவதே லிபியாவில் மேற்கத்திய தலையீட்டின் நோக்கமாகும் என்ற வாதத்திற்கு வலுக்கொடுப்பதில், இந்த கட்சிகள் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் முக்கிய மூலோபாயங்களால் வெளிப்படையாகவே அளிக்கப்பட்ட வாதங்களைத் தான் மீண்டும்மீண்டும் கூறி வருகின்றன. ஆப்கானிஸ்தானின் 2001 படையெடுப்பில் பிரான்சின் பங்களிப்பை மேற்பார்வையிட்ட முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி சோசலிஸ்ட் கட்சியின் Hubert Védrine, ஐக்கிய நாடுகள் சபையின் 1973 தீர்மானத்தை (இதைக்கொண்டு மேற்கத்திய சக்திகள் அவற்றின் லிபிய தாக்குதலை அடித்துப்பிடித்து நியாயப்படுத்தின), ஒரு "வரலாற்று" தீர்மானமாக கூறி வரவேற்றார்.

பொதுமக்களைக் காப்பாற்றுவதற்காக என்ற மறைப்பில் நாடுகளுக்குள் தலையீடு செய்ய முக்கிய சக்திகளை அனுமதிப்பதற்காக, Védrine அந்த தீர்மானத்தை பாராட்டினார். தலையீடு செய்வதற்கான உரிமை என்பதன்மீது நுட்பமான விவாதங்களை முடிவுக்குக் கொண்டு வர, .நா. உறுப்பு நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, சில ஆண்டுகளுக்கு முன்னர் கோஃபி அனன் பதவிக்காலத்தில் .நா. சபையால் அக்கறையோடு செய்யப்பட்ட ஓர் உடன்படிக்கையாக விளங்கும், பாதுகாப்பதற்கான பொறுப்புணர்வு கோட்பாட்டை, .நா. 1973 தீர்மானம் எட்டியுள்ளதாக Le Nouvel Observateur அவர் தெரிவித்தார்.

இன்னும் அப்பட்டமாக கூற வேண்டுமானால், தங்கள் விருப்பப்படி நாடுகளைத் தாக்கி கைப்பற்றும் அவர்களின் உரிமையை பகிரங்கமாக வலியுறுத்தாமல் இருப்பதே நல்லது என Védrine போன்ற ஏகாதிபத்திய அரசியல் பிரதிநிதிகள் முடிவு செய்துள்ளனர். அதற்கு பதிலாக, அவர்கள் தாக்கும் நாடுகளில் உள்ள பொதுமக்களைப் "காப்பாற்றும்" வேஷத்தில், இந்த கொள்கையை அவர்கள் மூடிமறைக்க விரும்புகிறார்கள். இந்த சமயம், என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை மூடிமறைப்பதில் பலனைத் தருவதோடு மட்டுமின்றி, பிரான்சிலும் மற்றும் சர்வதேச அளவிலும் USFI மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் ஒட்டுமொத்த குட்டி-முதலாளித்துவ "மனிதாபிமான" சமூக அடுக்கின் ஆக்கபூர்வமான ஆதரவை ஒன்றுதிரட்டுவதிலும் ஆளும் வர்க்கத்திற்கு உதவுகிறது.

இந்த சக்திகள், அவற்றின் வலதுசாரி உந்துதல்களிலும் மற்றும் லிபியாவிற்குள் ஏகாதிபத்திய கூட்டாளிகளின் வலதுசாரி குணாம்சத்திலும் முழு நனவுடன் இருந்தாலும் கூட, இவை யுத்தங்களை ஆதரிக்கின்றன. இது USFI ஆல் வெளியிடப்பட்ட Achcar நேர்காணலின் உள்ளடக்கத்தில் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

"எதிர்ப்பு மிகவும் பன்முகத்தன்மையில் இருப்பதாக Achcar குறிப்பிட்டது. வெவ்வேறு சக்திகளையும் ஒன்றிணைப்பது எதுவென்றால், சர்வாதிகாரத்தை நிராகரிப்பதும், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான வேட்கையும் தான். அதற்கப்பாற்பட்டும் பல வெவ்வேறு முன்னோக்குகள் உள்ளன. லிபியாவில், மிகவும் குறிப்பாக, மனித உரிமை ஆர்வலர்கள், ஜனநாயக வழக்கறிஞர்கள், புத்திஜீவிகள், பழங்குடியின ஆக்கக்கூறுகள், மற்றும் இஸ்லாமிய சக்திகள் என மிகவும் பரந்த ஒரு கூட்டுக்கலவையே அங்குள்ளது. …லிபிய இயக்கத்தில் அரசாங்கத்தின் மற்றும் இராணுவத்தின்  கன்னைகளும் உள்ளிணைந்துள்ளன. அவை உடைத்துக் கொண்டு வந்து, எதிர்தரப்பில் சேர்ந்துள்ளன.”

தேசிய சபையின் இந்த சமூக கூட்டுக்கலவை குறித்த இந்த விளக்கம், லிபியாவில் புரட்சிக்குப் பாடுபடுகின்றன என்று கூறும் Achcar, வெடேட் மற்றும் பலரின் எரிச்சலூட்டும் வாதங்களைத் தகர்க்கிறது. உண்மையில் எதிர்ப்பு தேசிய சபையின் தலைவர்களில், முன்னாள் நீதித்துறை மந்திரி முஸ்தாபா அப்துல் ஜலீல் மற்றும் பிரிட்டிஷ் SAS சிறப்புப்படைகளுடன் பயிற்சிபெற்ற Libyan Thunderbolt பிரிவின் தளபதி ஜெனரல் அப்தெல் பதாஹ் யூனெஸ் அல் ஒபைடி ஆகியோரும் உள்ளடங்கி உள்ளனர். தேசிய சபையில் உள்ள பல்வேறு பழங்குடி தலைவர்கள் மற்றும் இஸ்லாமியர்களை போலவே, இத்தகைய தனிநபர்கள் ஜனநாயகத்திற்காக அப்படியொன்றும் "தீவிர வேட்கை" கொண்டிருக்கவில்லை.

எகிப்து மற்றும் துனிசியாவில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டங்களின் ஒரு தொடர்ச்சியை இந்த தேசிய சபை பிரதிபலிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், லிபிய நெருக்கடியின் ஆரம்ப நாட்களில் உண்மையான மக்கள் போராட்டங்களும் அங்கே நிகழ்ந்தன. அது இளைஞர்களின் போராட்டங்கள் மற்றும் எண்ணெய் நிறுவன வேலைநிறுத்தங்களை குறித்த செய்திகளையும் கண்டது. ஆனால் தேசிய சபையின் சக்திகள் அவற்றை முற்றிலும் மாறுபட்ட திசையில் தான் இயக்கின.

ஆட்சிக்கு எதிராக பாரிய அரசியல் இயக்கத்தை வளர்க்க அவர்கள் முற்படவில்லை. மாறாக, மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் ஒத்துழைப்புடன் கடாபி விசுவாசிகளுக்கு எதிராக அந்த ஆட்சிக்குள்ளேயே ஓர் இராணுவ போராட்டத்தை வளர்க்க முற்பட்டார்கள். அவர்களை அதிகாரத்தில் கொண்டு வருவதை இலட்சியமாக கொண்டிருந்த நேட்டோவின் ஒரு லிபிய தலையீட்டிற்கும், விமான தாக்குதல்களுக்கும் அழைப்புவிடுத்து அவர்கள் தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டு வந்தார்கள்.

தேசிய சபை அதிகாரத்திற்கு வந்தால், அப்பிராந்தியத்தில் குறிப்பாக லிபியாவின் அண்டை நாடுகளான எகிப்து மற்றும் துனிசியாவில் அபிவிருத்தியடைந்து வரும் புரட்சிகர தொழிலாளர வர்க்க போராட்டங்களுக்கு எதிராக ஏகாதிபத்திய -ஆதரவு பிற்போக்குதனத்தின் ஒரு தளமாக மாறும். பெப்ரவரி 11இல் எகிப்திய ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்கை இராஜினாமா செய்வதற்கு வழிவகுத்த பிரமாண்ட வேலைநிறுத்தங்களையும், போராட்டங்களையும் முடிவுக்குக் கொண்டு வர முயலும் ஒரு சர்வாதிகாரத்திற்குத் தலைமை கொடுத்து வரும் அமெரிக்க ஆதரவிலான எகிப்திய இராணுவத்துடன் அது (தேசிய சபை) இணைந்திருப்பதே இதை மிகவும் தெளிவுபடுத்துகிறது.

மேற்கத்திய பெருநிறுவனங்கள் எண்ணெய்வளங்களை பிடுங்கிக்கொள்ள தேசிய சபையும் ஒரு பங்குதாரராக மாறும் என்பது NPAவிற்கு நன்றாகவே தெரியும். "மேற்கத்திய விடையிறுப்பு எண்ணெய்வளத்தை நுகர்கிறது என்பதும் உண்மை தான்," என்று குறிப்பிட்ட Achcar, தொடர்ந்து கூறுகையில், “[.நா. பாதுகாப்பு சபையின் 1973 தீர்மானத்தின் மீதான] வாக்கெடுப்பைத் தவிர்த்திருக்கும் ஜேர்மனியை போன்றோ, பிரிட்டன் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக இத்தாலி போன்றோ இல்லாமல், பிரான்ஸ் மட்டும் தான் பலமான நடவடிக்கைக்கு ஆதரவாக எழுந்துள்ளது. இது, லிபிய எண்ணெய்வளத்தில் பிரான்ஸிற்கு பெரும் பங்கு இல்லை என்ற மற்றும் கடாபிக்குப் பின்னர் அதில் ஒரு பெரும் பங்கைப் பெறலாம் என அது பெரிதும் நம்புகிறது என்ற உண்மையோடு நெருக்கமாக தொடர்புபட்டுள்ளது“.

எவ்வாறிருப்பினும், மேற்கத்திய சக்திகள் மனித உயிர்களைக் காப்பாற்றுவதற்காகவே லிபியாவைத் தாக்கி வருகின்றன என்ற NPAஇன் வாதங்கள் எரிச்சலூட்டுவதாகவும், நனவுபூர்வமான மோசடியாகவும் உள்ளன என்பதை இந்த கட்டுரை தெளிவுபடுத்துகிறது. ஆட்சி மாற்றம் தான் மேற்கத்திய சக்திகளின் இலக்கு என்பதும், Achcarஇன் வார்த்தைகளில் கூறுவதானால், “கடாபிக்குப் பிந்தைய" ஒரு லிபியா என்பதும் அவர்களுக்கு (NPA) நன்றாகவே தெரியும். 1971இல் இருந்து 1974 வரையில் கடாபியால் பெரிதும் தேசியமயமாக்கப்பட்ட லிபியாவின் எண்ணெய்வளத்தை கொள்ளையடிக்கவும், திரிப்போலியில் ஒரு வலதுசாரி வாடிக்கையாளர் அரசை நிறுவவும் பிரான்சையும், ஏனைய சக்திகளையும் இது அனுமதிக்கும்.

NPA மற்றும் அத்துடன் USFIஇன்  “மனிதாபிமான மற்றும்புரட்சிகர உட்கூறுகள் குறித்து அனைத்தும் பேசும் Achcar, லிபியா மீதான மேற்கத்திய சக்திகளின் யுத்தம், எண்ணெய் வளத்தை பிடுங்கிக்கொள்வது மற்றும் ஏனைய அனைத்தையும் பாராட்டுகிறார்.

லிபியாவில் ஏகாதிபத்திய தலையீட்டிற்கு NPA மற்றும் USFIஇன் ஆதரவானது, 1953இல் நான்காம் அகிலத்திலிருந்து பிரிந்து சென்ற பப்லோவாத சக்திகளின் குணாம்சத்தை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுவதுடன், இந்த கட்சிகளின் பரிணாமத்தில் ஓர் அடிப்படை திருப்புமுனையையும் குறித்துக்காட்டுகிறது. ஒரு புரட்சிகர கோட்பாட்டை கையாள, இந்த சக்திகளுக்கு அழுத்தம் அளிக்கலாம் என முறையிட்டு, ஸ்ராலினிசம் மற்றும் மூன்றாம் அகில தேசியவாத அரசியலைத் தழுவியிருந்த அது ட்ரொட்ஸ்கிசத்தின் திருத்தல்வாதமாக ஆரம்பித்து, 1960கள் மற்றும் 1970களின் குட்டி-முதலாளித்துவ சமூக சூழலில் தீவிர இயக்கங்களாக  வளர்ந்தது.

இன்றைய NPAற்கு முன்னோடியாக 2009இல் ஸ்தாபிக்கப்பட்ட புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகம் (Revolutionary Communist League – LCR), பிரான்சில் இந்த காலகட்டத்தில், பெரும்பாலும் "ட்ரொட்ஸ்கோ-குவாரிச" மாணவ தீவிரக் கொள்கையினர் என்பதை அடித்தளமாக கொண்டிருந்தது. இந்த தலைமுறை உறுப்பினர்கள் இன்னமும் கூட, சோசலிஸ்ட் கட்சியின் Henri Weber போன்ற ஆளும் கட்சிகளில் அவர்களின் தொடர்புகளைக் கொண்டிருக்கும் முன்னாள் உறுப்பினர்களையும், அலன் கிரீவின் மற்றும் பிரான்சுவா சபடோ போன்றவர்களை தான் NPAஇன் முன்னனி தலைமைக்கு அளிக்கின்றனர்.

அவர்களை தலைமையெடுத்து செல்லும் இந்த தனிநபர்களும், இத்தகைய போக்குகளின் அரசியல் பரிணாமமும், அதிருப்தி அடைந்த மாணவ தீவிர கொள்கையினராக இருந்ததில் இருந்து வளமான அரசியல் எதிர்காலத்திற்காக உருவான, பசுமை இயக்கத்தில் இருந்த டானியல் கோன்-பென்டிட் மற்றும் முன்னாள் ஜேர்மன் வெளியுறவுத்துறை மந்திரி ஜோஸ்கா பிஷ்ஷர் போன்ற மத்திய-வர்க்க முன்னாள் தீவிர கொள்கையினரின் ஒட்டுமொத்த அடுக்கின் போக்கைத்தான் பிரதிபலிக்கிறது.

தற்போது NPA தலைமையிலுள்ள பிரபலங்களுக்கு வரலாற்றுரீதியாக முன்னோடியாக இருந்தவர்களைக் கவனிக்க வேண்டுமானால், ஒருவர் பியர் லாவல் போன்ற பிரபலங்களுக்குத் திரும்ப வேண்டியதிருக்கும். ஒரு சமூக-ஜனநாயகவாதியாக தொடங்கிய அவர், வலதில் சேர்ந்து இரண்டாம் உலக யுத்தத்தின் போது நாஜி ஆதரவிலான விச்சி (Vichy) கூட்டணி ஆட்சியின் பிரதம மந்திரியாக ஆவதற்கு முன்னால், ஒரு கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்வது அவருடைய அரசியல் வாழ்க்கைக்கு பலனளிக்குமா என்று சிலகாலம் ஆலோசித்தும் கூட வந்தார்.

இப்போதும் கூட, ஆக்கிரமிப்பு யுத்தங்களை ஆதரிப்பதிலும் கூடஆளும் வர்க்கத்தின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப அவர்களை மாற்றிக் கொண்டு, LCRஇன், இப்போது NPAஇன் தலைவர்கள் அரசியல் வாழ்விலும், கருத்திலும் அதேபோன்ற எரிச்சலூட்டும், தொழில்வாழ்க்கை சார்ந்த அணுகுமுறையையே எடுத்துள்ளனர்.

ட்ரொட்ஸ்கோ-குவாரிச" மூலங்களில் நீண்டகாலத்திற்கு முன்னர் அதன் முன்னணி பதவியைக் கொண்டிருந்ததன் காரணமாக, ட்ரொட்ஸ்கிசத்துடன் போலியாக கொண்டிருந்த உறவையும்கூட வெளிப்படையாக நிராகரித்ததன் அடிப்படையில், 2009இல் LCR NPA என்று அரசியல் முத்திரை குத்தப்பட்டதற்கு இன்னும் கூடுதலாக வெளிச்சத்தை இது அளிக்கிறது. பல தசாப்த காலகட்டத்தில் தயாரிக்கப்பட்டிருந்ததால், அது முதலாளித்துவ அரசியலுக்குள், சோசலிஸ்ட் கட்சியின் மற்றும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் சுற்றுவட்ட பாதைக்குள் இயக்கத்தின் முழு இணைப்பு இருப்பதை அது அறிவித்தது.

அந்த நேரத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு எழுதியது: “உண்மையில், LCR அதனை அதுவே கலைத்துக் கொள்வதில் உள்ள நிஜமான நோக்கம், தொழிலாள வர்க்கத்தின் முழுமையான அரசியல் சுயாதீனத்தின் மீது கவனம் செலுத்துதல், புரட்சிகர சர்வதேசியவாதம், முதலாளித்துவ அரசு, ஸ்ராலினிசம் மற்றும் சமூக-ஜனநாயக அதிகாரத்துவத்துடனும், முதலாளித்துவ தேசியவாதம் மற்றும் குட்டி-முதலாளித்துவ தீவிரகொள்கையின் எந்த வகைகளுடனும் ஒருங்கிணையாமல் சமசரத்திற்கு இடமில்லாத எதிர்ப்பு காட்டுவது போன்றவற்றைக் கொண்டிருந்த ட்ரொட்ஸ்கியின் அரசியல் மரபியத்தைக் கைவிடுவதாகும்.

ஐரோப்பிய குறிப்பாக பிரெஞ்சு அரசியல் சூழலில், LCR அதன் வழிநடத்தும் சித்தாந்தமாக முதலாளித்துவ-எதிர்ப்பை தேர்ந்தெடுப்பது, அதிகார நாணயத்தின் மலிவான மறுபக்கத்தை நோக்கி, வலதிற்கு பின்நோக்கி எடுத்து வைத்திருக்கும் ஒரு பாரிய அடியாகும். அரசியல்ரீதியாக தெளிவில்லாமல், வர்க்க அடித்தளத்தையோ அல்லது நிலைநோக்கையோ கருதாமல், அது        சமூக அதிருப்தியின் எல்லா விதங்களையும் அரவணைத்துக் கொள்கிறது. குட்டி முதலாளித்துவம், இடது மற்றும் வலது என இருதரப்பின் பெரும் பிரிவுகளிடையே ஒரு வாசகம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது அதாவது 20ஆம் நூற்றாண்டு மத்தியில் Pierre Poujade கொடூரமான வலது-வெகுஜன போராட்டங்களுக்கு, பத்தொன்பதாம் நூற்றாண்டு மத்தியில் பியர்-ஜோசப் புருதோனால் அராஜகவாதத்திலிருந்து ஒவ்வொன்றும் முன்மொழியப்பட்டது.”

NPA அதனுடைய எழுத்துக்களிலும், அறிக்கைகளிலும் இப்பொழுது ஒரு போலித்தனக் கொடியைப் பறக்க விடுகிறது. அது யாருடன் பல்வேறு தேர்தல் உடன்படிக்கைகளை செய்து வருகிறதோ, தொழிலாளர்களின் போராட்டங்களை விலைபேச எந்த தொழிற்சங்கங்களை ஆதரிக்கிறதோ, பிரான்சில் அந்த தொழிற்சங்கங்கள் மற்றும் ஏனைய முதலாளித்துவ கட்சிகளுடன் அதன் ஜனநாயக பேச்சுவார்த்தைகளை சௌகரியமாக்க, அது வெளிப்படையாக அதுவொரு ட்ரொட்ஸ்கிச கட்சி என்பதை மறுக்கிறது. இருந்தபோதினும், International Viewpoint மற்றும் Europe Solidaire Sans Frontières போன்று அதுவும் சர்வதேச பிரச்சினைகளைக் கையாள்வதற்கு அதன் வலைத் தளங்களில் "நான்காம் அகிலம்" என்று அதனை காட்டிக்கொள்கிறது.

வெளிநாடுகளில் "இடது" நம்பகத்தன்மையைப் பெற, ஒரு ட்ரொட்ஸ்கிச கட்சியின் சிறப்பை குழப்பத்திற்கு உள்ளாக்குவதுமே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். ஆனால் ஏகாதிபத்திய யுத்தத்திற்கு அது காட்டும் நனவுபூர்வமான ஆதரவு, இந்த கட்சிக்கு இனியும் சோசலிச, தொழிலாள வர்க்க அரசியலுடன் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது. USFIஇல் உள்ள அதன் சக-சிந்தனையாளர்களை கொண்டுள்ள மற்றும் அது செயல்பட்டுவரும் பிரான்சில் "இடது" கட்சிகள் என்று அழைத்துக்கொள்ளும் பரந்த குழுவைப் போலவே, NPAவும் சமூக பிற்போக்குத்தனத்தின் முகாமிற்குள் நகர்ந்துள்ளது.