WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
The German Greens as a party of war
ஜேர்மனிய
பசுமைவாதிகள்,
ஒரு
போர்
ஆதரவுக்கட்சியாக
8 April 2011
Peter Schwarz
லிபியாவிற்கு
எதிரான
போருக்கு
பசுமைவாதிகள்
போல்
வேறு
எந்த
ஜேர்மன்
கட்சியும்
வலுவான
ஆதரவு
கொடுக்கவில்லை.
முன்னாள்
சமாதானவாதிகள்
இன்று
பேர்லினில்
அதிகாரத்தில்
இருந்தால்,
ஜேர்மனியின்
டொனார்டோ
குண்டு
வீசும்
விமானங்கள்
திரிப்போலி
மீது
தங்கள்
கொலைகார
சுமையை
இறக்கியிருக்கும்.
ஐக்கிய
நாடுகள்
பாதுகாப்பு
சபைத்தீர்மானம்
போருக்கு
ஒப்புதல்
கொடுத்ததைத்
தொடர்ந்து,
பசுமைவாதிகளின்
கட்சியை
வழிநடத்தும்
முக்கிய
பிரிவு
ஒரு
அறிக்கையை
வெளியிட்டு:
“ஐ.நா.வின்
நடவடிக்கைகள்
மொத்தத்தில்
பெரும்
மனித
உரிமைகள்
மீறலுக்குட்படுவதிலிருந்து
மக்களைப்
பாதுகாக்க
அரசியல்ரீதியாக
தேவையென
நாங்கள்
நம்புகிறோம்.”
என
அறிவித்திருந்தது.
பசுமைவாதிகளின்
பாராளுமன்றத்
தலைவர்
றெனாட்ட
கூனாஸ்ட்
ஜேர்மனிய
அரசாங்கத்தை
பாதுகாப்பு
சபை
வாக்களிப்பில்
கலந்து
கொள்ளாததற்காக
ஒரு
அரசியல்
தோல்வி
என்று
குற்றம்
சாட்டியுள்ளார்.
“இங்கு
லிபிய
மக்களுக்கு
உதவ
உறுதிப்பாடும்,
அரசியல்
கருத்தைக்
கொடுப்பதும்
முக்கியமாக
இருந்தன.
இப்பிரச்சினையில்
கூட்டாட்சி
அரசாங்கம்
தோற்றுள்ளது”
என்று
இவர்
Spiegel/Online
இடம்
கூறினார்.
முன்னாள்
பசுமைவாத
வெளியுறவு
மந்திரி
ஜோஷ்கா
பிஷ்ஷர்
இன்னும்
கூடுதலான
முறையில்
அரசாங்கத்தைப்
பற்றி
குறைகூறியுள்ளார்.
Süddeutsche
Zeitung
பத்திரிகையில்
வெளியிட்டுள்ள
கட்டுரை
ஒன்றில்
அவர்
எழுதினார்:
“பால்கன்களைப்
போல்,
மத்தியதரையின்
தென்பகுதியும்
ஐரோப்பிய
ஒன்றியத்தின்
உடனடிப்
பாதுகாப்புப்
பகுதி
ஆகும்.
ஐரோப்பிய
ஒன்றியத்தின்
அதிக
மக்கள்
தொகையைக்
கொண்ட,
பொருளாதார
அளவில்
சக்தி
வாய்ந்த
நாடு
இவ்விவகாரத்தில்
ஒதுங்கி
இருக்க
வேண்டும்
என்று
நினைப்பது
போலி
அறியாத்தனம்
ஆகும்.”
வெளியுறவுக்
கொள்கை
என்றால்
“அவை
உள்நாட்டில்
மக்கள்
செல்வாக்கைக்
கொண்டிருக்கவில்லை
என்றாலும்
கடுமையான
மூலோபாய
முடிவுகளை
எதிர்கொள்ளல்
என்று
பொருள்”
என்றார்
பிஷ்ஷர்.
இதே
போன்ற
உணர்வுகள்
பிஷ்ஷரின்
நீண்டகால
நண்பரும்,
ஐரோப்பியப்
பாராளுமன்றத்தில்
பசுமைவாதிகளின்
தலைவருமான
டானியல்
கோன்-பென்டிட்டாலும்
வெளிப்படுத்தப்பட்டன.
போரில்
ஜேர்மனிய
இராணுவம்
தலையடுவதற்கு
வலுவாக
அவர்
Spiegel
online இல்
வாதிட்டு,
மாநிலத்
தேர்தல்களின்
மோசமான
விளைவுகள்
வரும்
என்ற
அச்சத்தினால்
அரசாங்கம்
“ஒரு
பொன்னான
வாய்ப்பை
இழந்துவிட்டது”
என்றும்
குற்றம்
சாட்டினார்.
1999ம்
ஆண்டு
பசுமைவாதிகள்தான்
இரண்டாம்
உலகப்
போருக்குப்
பின்
முதல்
தடைவையாக
ஜேர்மனிய
படையினர்
போரில்
பங்கு
பெறுவதை
உறுதிப்படுத்தனர்.
கொசொவோப்
போருக்கு
ஒப்புக்
கொள்வதன்
மூலம்,
பசுமைவாதிகள்
கூட்டாட்சி
அரசாங்கத்தில்
தாங்கள்
நுழைவதற்கான
நம்பகத்தைன்மையை
நிரூபித்தனர்.
இன்னும்
தொடரும்
ஆப்கானியப்
போரில்
ஜேர்மன்
பங்கு
பெறுவதும்
ஒரு
பசுமைவாத
வெளியுறவு
மந்திரியின்
கீழ்த்தான்
நடைபெற்றது.
கட்டாய
இராணுவச்சேவையிலிருந்து
பாதுகாப்பு
நடவடிக்கைகளில்
முக்கியத்துவம்காட்டும்
ஒரு
தொழில்ரீதியான
இராணுவமாக
சர்வதேச
நடவடிக்கைகளுக்கு
ஏற்றால்போல்
ஜேர்மன்
இராணுவத்தை
மாற்றுவது
எல்லாவற்றிற்கும்
மேலாக
பசுமைவாதிகளால்தான்
ஊக்குவிக்கப்பட்டது.
இராணுவத்தின்
தன்மையிலுள்ள
இந்த
மாற்றத்தின்
பிற்போக்குத்
தன்மையை
மறைக்கும்
வகையில்,
அவர்கள்
பல
இளைஞர்களால்
பாராட்டப்பட்ட
கட்டாய
இராணுவ
சேவை
முறை
அகற்றப்பட
வலியுறுத்தினர்.
லிபியப்
போருக்கு
ஆதரவு
என்பது
பசுமைவாதிகள்
ஒரு
போர்
ஆதரவு
கட்சியாக
மாறிவிட்டதில்
முற்றிலும்
ஒரு
புதிய
கட்டத்தைப்
பிரதிபலிக்கிறது.
கொசொவோ
மற்றும்
ஆப்கானிஸ்தானில்
ஜேர்மனிய
இராணுவ
தலையீடுகள்
அனைத்து
முக்கியக்
கட்சிகளாலும்
ஆதரிக்கப்பட்டன;
ஆனால்
இப்பொழுது
பசுமைவாதிகள்
ஒரு
பழைமைவாத
அரசாங்கத்தை
போதுமான
இராணுவ
ஆக்கிரோஷத்தை
காட்டத்தவறியதற்கு
தாக்கியுள்ளனர்.
தந்திரோபாயக்
காரணங்களுக்காக
போரில்
ஒரு
நேரடித்
தொடர்பு
கூடாது
என
மேர்க்கெல்
அரசாங்கம்
நிராகரித்தாலும்,
இது
வலதுசாரி
நிலைப்பாட்டிலிருந்து
ஒரு
தாக்குதல்
என்பது
தெளிவாகும்;
இம்முறை,
பசுமைவாதிகள்
முற்றிலும்
தவறாக
உரைக்கப்படும்,
பாசாங்குத்தன
“மனிதாபிமான
அக்கறைகள்”
என்ற
அடிப்படையில்
போருக்காக
வாதிடவில்லை.
வெளிப்படையாக
அவர்கள்
லிபியப்
போரை
நியாயப்படுத்தும்
வகையில்
அதன்
மூலோபாய
நோக்கங்களை
வலியுறுத்துகின்றனர்.
இது
வடஆபிரிக்கா
ஒரு
“ஐரோப்பிய
ஒன்றியத்தின்
பாதுகாப்புப்
பகுதி”
என்று
பிஷ்ஷரின்
அறிவிப்பினால்
முற்றிலும்
தெளிவாக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பியப்
பாதுகாப்பு
மற்றும்
எண்ணெய்
நலன்களுக்காக
இக்கட்சி
லிபியக்
குடிமக்கள்,
படையினர்
இறந்து
போவதை
ஏற்கத்
தயாராக
உள்ளது.
லிபியப்
போர்
மற்றும்
யூரோ
நெருக்கடியைத்
தொடர்ந்து,
ஜேர்மனிய
வெளியுறவுக்
கொள்கை
ஒரு
அதிகரித்துவரும்
சங்கடத்திற்கு
முகங்கொடுக்கிறது.
சான்ஸ்லர்
அடினவெர்
காலத்தில்
இருந்து
மேலைச்
சார்பு
என்று
ஜேர்மனிய
வெளியுறவுக்
கொள்கையின்
வழிகாட்டு
நெறியாக
இருந்தது
இப்பொழுதெல்லாம்
செயல்படுவதில்லை.
பேர்லின்
மற்றும்
பாரிஸுக்கு
இடையே
உள்ள
மோதல்கள்
தீவிரமாகின்றன.
ஜேர்மனி
ரஷியாவிடம்
எரிசக்திக்கு
நம்பியுள்ளதும்,
BRIC என
அழைக்கப்படும்
நாடுகளுடன்
அதன்
வணிக
விரிவாக்கமும்
அவற்றின்
சொந்த
இயங்குசக்தியை
விரைவில்
வளர்த்துள்ளன.
ஆளும்
கட்சிகள்
இப்பிரச்சினைகளில்
ஆழ்ந்த
பிளவுகளைக்
கொண்டுள்ளன.
இந்த
நெருக்கடிப்
பின்னணியில்,
ஜேர்மனிய
இராணுவவாதத்தை
மீண்டு
தூக்கிநிறுத்த
உதவத்தயார்
என்ற
நிலைப்பாட்டை
எடுக்கத்தயார்
என்ற
ஒரு
கட்சியாகத்தான்
பசுமைக்
கட்சி
எழுகின்றது.
இந்த
இலக்கை
நோக்கி
தமது
தற்போதைய
செல்வாக்கின்
எழுச்சியை
அவர்கள்
பயன்படுத்துகின்றனர்.
சமீபத்திய
மாநிலத்
தேர்தல்களில்
கட்சி
அதன்
வாக்காளர்
ஆதரவை
இரு
மடங்காக
அதிகரிக்க
முடிந்தது.
பாடன்
வூட்டம்பேர்க்
மாநிலத்தில்
ஒரு
பசுமைவாதி
முதல்
முறையாக
மாநிலப்
பிரதமர்
என்னும்
பதவியை
வகிக்க
உள்ளார்.
இந்தப்
போக்கு
கூட்டாட்சி
மட்டத்திலும்
பிரதிபலிப்பாகிறது.
சமீபத்திய
Forsa கருத்துக்
கணிப்பு
பசுமைவாதிகளுக்கு
மிகஅதிக
ஆதரவாக
இதுவரை
28% வாக்காளர்
ஆதரவைக்
கொடுத்துள்ளது;
இது
30% ஆதரவு
கொண்டுள்ள
பழைமைவாத
யூனியன்
கட்சிகள்
பெற்றுள்ளதற்குக்
கிட்டத்தட்ட
ஒப்பாகும்.
சமூக
ஜனநாயக
கட்சி(SPD)
மூன்றாம்
இடத்தில்
23% உடனும்,
2009
பொதுத்தேர்தலில்
பசுமைவாதிகளைவிட
அதிக
வாக்குகள்
பெற்றிருந்த
தாராளவாத
ஜனநாயகக்
கட்சி(FDP)
3% ஆதரவுக்கு
சரிந்துவிட்டது.
குறுகிய
காலத்தில்
பசுமைவாதிகளுடைய
செல்வாக்கு
பெருகி
இருப்பது
அதன்
போர்க்
கொள்கைகளுடன்
எத்தொடர்பையும்
கொண்டிருக்கவில்லை.
மார்ச்
மாதம்
நடுப்பகுதியில்
ஒரு
கருத்துக்
கணிப்பில்
பதிலளித்தவர்களில்
88% லிபியாவில்
ஜேர்மனியப்
படைகள்
அனுப்பப்படுவதை
எதிர்த்தனர்,
8% தான்
ஆதரவு
கொடுத்தனர்
என்பதைக்
காட்டியுள்ளது.
லிபியாவிற்கு
எதிரான
நேட்டோ
தலையீட்டிற்கு
ஆதரவாக
பரந்த
பிரச்சார
முயற்சிகளை
அடுத்து
மக்களில்
சற்றே
சிறு
பெரும்பான்மையினர்
இராணுவச்
செயற்பாட்டிற்குத்
தங்கள்
ஆதரவைக்
கொடுத்துள்ளனர்.
அப்படி
இருந்தும்
65% எவ்வித
ஜேர்மன்
தலையீட்டையும்
நிராகரித்துவிட்டனர்.
அனைத்து
முக்கியக்
கொள்கைப்
பிரச்சினைகளிலும்
பிளவுற்று
இருக்கும்
கூட்டாட்சி
அரசாங்கத்தின்
நெருக்கடியில்
இருந்து
பசுமைவாதிகள்
முதலிலும்
முக்கியமானதுமாக
இலாபம்
அடைந்துள்ளனர்.
அதேபோல்
தன்னுடைய
பொதுநல
எதிர்ப்பு
ஹார்ட்ஸ்
சட்டங்களுக்கு(Hartz)
ஆதரவு
கொடுத்ததால்
அதன்
முக்கிய
வாக்களிப்பாளர்களான
தொழிலாள
வர்க்கத்தை
அவநம்பிக்கைக்குட்படுத்தியதால்
ஆதரவையும்
சமூக
ஜனநாயகக்
கட்சி
இழந்துவிட்டது.
இரண்டாவதாக,
பசுமைவாதிகள்
ஸ்தாபனமயப்படுத்தப்பட்ட
கட்சிகளுக்கு
ஒருவித
மாற்றீட்டை
பிரதிபலிக்கிறது
என்ற
ஒரு
புகழையும்
பயன்படுத்திக்
கொள்ள
முடிந்துள்ளது.
ஆனால்
இவர்கள்
நீண்டகாலமாகவே
இருக்கும்
இவ்வமைப்பு
முறையுடன்
ஒருங்கிணைந்துவிட்டனர்.
குறிப்பாக
ஜப்பானில்
அணுசக்திப்
பேரழிவு
ஏற்பட்டது
இவர்களுடைய
முன்னாள்
அணுசக்தி
எதிர்ப்பு
கட்சிக்கு
ஒரு
புதிய
ஆதரவு
வெளிப்பாட்டைத்
தேடிக்கொடுத்துள்ளது.
ஆனால்
பசுமைவாதிகளிடம்
இருந்து
மாற்றீட்டுக்
கொள்கைகளை
எவரேனும்
எதிர்பார்த்தால்
உறுதியாக
ஏமாற்றத்தைத்தான்
அடைவர்.
இக்கட்சி
அதன்
கூடுதல்
தேர்தல்
ஆதரவினை
தெளிவான
வலது
நோக்கிய
ஒரு
தெளிவான
மாற்றம்
என்ற
வகையில்
எதிர்கொண்டுள்ளது.
இது
வெளியுறவு
மற்றும்
பாதுகாப்புக்
கொள்கைகளில்
மட்டும்
இல்லாமல்,
பொருளாதாரக்
கொள்கைகளிலும்
காணப்படுகிறது.
முன்னாள்
சமூக
ஜனநாயகக்
கட்சி-பசுமைவாதிகள்
கூட்டணி
அரசாங்கத்தில்
பங்குதாரர்
என்னும்
முறையில்
பசுமைவாதிகள்
ஹார்ட்ஸ்
சட்டங்கள்
மற்றும்
சான்ஸ்லர்
ஷ்ரோடரின்
2010
செயற்பட்டியலுக்கு
வலுவான
வாதிடுபவர்களாக
இருந்தனர்.
அதிலிருந்து
அவர்கள்
சமூகநலச்
செலவுகளைக்
குறைப்பதின்
மூலம்
வரவுசெலவுத்திட்ட
பற்றாக்குறையைக்
குறைத்தல்
மற்றும்
வங்கிகள்
மீட்பு
என்ற
நோக்கமுடைய
கொள்கைகளை
இலக்காகக்
கொண்ட
கடுமையான
சிக்கனக்
கொள்கைகளுக்கு
வாதிடுபவர்களாக
மாறிவிட்டனர்.
இந்த
இலக்கை
அடையும்
வகையில்,
பசுமைவாதிகள்
ஆட்சியில்
பங்குபெற
கூட்டணி
அமைக்க
சமூகஜனநாயகக்கட்சியுடன்
மட்டுமல்லாது
பழைமைவாத
யூனியன்
கட்சிகள்
மற்றும்
தாராளவாத
ஜனநாயக்க்கட்சியுடன்கூட
கூட்டணிக்குத்
தயாராக
உள்ளனர்.
1968
சமாதானம்,
சுற்றுச்
சூழல்
இயக்கங்களின்
எஞ்சிய
கூறுபாடுகளில்
இருந்த
எழுந்த
ஒரு
மத்திதர
வகுப்பு
எதிர்ப்புக்
கட்சி,
இராணுவவாதம்
மற்றும்
சிக்கன
நடவடிக்கைகளுக்கு
வாதிடும்
ஒரு
வலதுசாரி
முதலாளித்துவக்
கட்சியாக
மாறியமைக்கு
ஆழ்ந்த
வரலாற்று
வேர்கள்
உண்டு.
பசுமைவாதிகளின்
மிகச்செல்வாக்குப்
படைத்த
தட்டுக்கள்
சமூத்தில்
வசதி
படைத்த
தட்டில்
இருந்து
வருபவர்கள்.
இவர்களுடைய
நல்ல
வருங்காலம்
நிதியச்
சந்தைகளின்
செயற்பாடுகளுடனும்
மற்றும்
1968க்குப்
பிந்தைய
மேலை
ஏகாதிபத்திய
நலன்களுடனும்,
இன்னும்
குறிப்பாக
சோவியத்திற்கு
பிந்தைய
காலத்துடனும்
பிணைந்துள்ளது.
இந்தச்
சகாப்தம்
சோவியத்
ஒன்றித்தின்
வீழ்ச்சி,
யூகோஸ்லாவியா
மேலை
ஆதரவுடைய
இனவழிப்
போர்களில்
உடைந்துபோனது,
தனியார்மயமாக்கல்,
செல்வம்
படைந்த
நாடுகளிலிருந்து
வேலைகளை
வெளியேற்றப்பட்டது
போன்றவற்றிப்
மத்தியில்
தொழிலாளர்களின்
வாழ்க்கைத்
தரங்களில்
பேரழிவுகரமான
சரிவுகளைக்
கண்டது.
ஆனால்
பசுமைவாதிகள்
பிரதிநிதித்துவப்படுத்தும்
வசதி
படைத்தவர்க்களுக்கு
இம்மாற்றங்கள்
கணிசமான
சொந்தச்
செல்வத்தை
குவிக்கும்
தளத்தைக்
கொடுத்தன.
இக்காரணத்தினால்தான்
சர்வதேசப்
பொருளாதார
நெருக்கடி
மற்றும்
வர்க்கப்
போராட்டம்
மீட்சி
பெற்றுள்ளதற்கு
இடையே,
பசுமைவாதிகள்
போர்களுக்கும்
ஆளும்
உயரடுக்கின்
நிதியச்
சலுகைகளுக்கும்
ஆதரவு
கொடுக்கின்றனர். |