WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
:
லிபியா
European Union prepares to send ground troops to Libya
லிபியாவிற்குத் தரைப்படைகளை அனுப்ப ஐரோப்பிய ஒன்றியம் தயார் செய்கிறது
By
Chris Marsden
11 April 2011
முற்றுகைக்கு
உட்பட்ட
மிஸ்ரடா
நகரத்தின்
விதி
பற்றி
மூடிமறைக்கும்
வகையில்
மனிதாபிமானத்
திரையைப்
பயன்படுத்தி
ஐரோப்பிய
ஒன்றியம்
தன்
கட்டுப்பாட்டின்
கீழ்
லிபியாவிற்குத்
தரைப்படைகளை
அனுப்புவதற்கு
ஐரோப்பிய
ஒன்றியம்
தயாரிப்புக்களுக்கு
முற்பட்டுள்ளது.
இந்த
நடவடிக்கை
ஒரு
சில
நாட்களுக்குள்
துவக்கப்பட்டுவிடலாம்.
முந்தைய
கொள்கையை
மாற்றிக்
கொள்ளும்
வகையில்,
அங்கேலா
மேர்க்கெலின்
ஜேர்மனிய
அரசாங்கம்
முக்கிய
இராணுவப்
பங்குபற்றலை நடத்த
முன்வந்துள்ளது.
ஐரோப்பிய
ஒன்றிய
EUFOR எனப்படும்
இராணுவ நடவடிக்கைப்
பிரிவை
லிபியாவிற்கு
மனிதாபிமான
உதவி
முயற்சிகளுக்கு
ஆதரவு
கொடுத்தல்
எனக்
கூறிக்கொண்டு
நிறுவியுள்ளது.
ஐ.நா.விற்கு
நான்கு
மாத
கால
அவகாசத்தை தலையீடு
பற்றி
பரிசீலிக்க
அவகாசமும்
கொடுத்துள்ளது.
லிபியாவின்
மூன்றாவது
பெரியநகரமான
மிஸ்ரடா
அல்லது
மிஸுரடா
அதன்
பின்
எளிதில்
விரிவாக்கப்படக்கூடிய
செயற்பாட்டிற்குத்
துவக்க
குவிப்பாக
அமையும்.
கடந்த
கடந்த
வாரம்
ஒரு
மாத
காலத்திற்கு
40,000 மக்களுக்கு
போதுமான
உணவை
உலக
உணவுத்
திட்டத்தின் கீழ்
600 டன்கள்
பெற்றாலும்
கூட,
சில
வாரங்களாக
இந்நகரம்
மிக
அதிக
குண்டுத்
தாக்குதல்களைச்
சந்தித்துள்ளது.
துருக்கி
ஏற்கனவே
குடிமக்களை
அங்கிருந்து
வெளியேற்றுவதற்கான
முயற்சிகளைத்
துவக்கி
விட்டது.
7.9
மில்லியன்
டொலர் செலவில்
நிறுவப்பட்டுள்ள
EUFOR அதன்
தலைமையகத்தை,
இத்தாலியின்
றியர்
அட்மைரல்
க்ளாடியோ
கௌடோசியின் கீழ்
ரோமில்
கொண்டுள்ளது.
ஐரோப்பிய
ஒன்றியம்
இரு
போர்ப்
படைப்
பிரிவுகளைக்
கொண்டுள்ளது.
இவை
சில
நாட்கள்
தரையிறக்கலில்
பயன்படுத்தப்பட
முடியும்.
ஐரோப்பிய
ஒன்றிய
வெளியுறவுக்
கொள்கையின்
தலைவர் காத்தரின்
ஆஷ்டன்
உத்தியோகப்பூர்வமாக
இதற்கு
ஐ.நா.
தலைமைச்
செயலர்
பான்
கி-மூனின்
அனுமதியைக்
கோரியுள்ளார்.
ஜேர்மனிய
செய்தி நிறுவன
அமைப்பான
DPA ஏப்ரல்
7ம்
தேதி
ஆஷ்டன்
பானுக்கு
“ஐரோப்பிய
ஒன்றியம்
தயாராகச்
செயல்பட
உள்ளதைத்
தெரிவித்து”
ஒரு
கடிதம்
எழுதியுள்ளார்
என்ற
தகவலைக்
கொடுத்துள்ளது.
ஐ.நா.விற்கு
ஐரோப்பிய
ஒன்றியும்
ஈடுபாடு
கொள்ள
வேண்டும்
என்று
கேட்பது
“ஒரு
ஊக்கமான
செயல்
ஆகும்”
என்று
தூதரக
ஆதாரம்
ஒன்று
தெரிவித்துள்ளது.
மற்றொரு
அதிகாரி,
“அனைவருமே
ஏதேனும்
செய்யப்பட
வேண்டும்
என்பதை
அறிவர்…வரவிருக்கும்
நாட்களில்
சர்வதேச
சமூகம்
அணிதிரட்டு
ஒன்றைக்
கொள்ளும்
என்பதை
நீங்கள்
எதிர்பார்க்கலாம்”
என்று
கூறினார்.
ஐரோப்பிய
ஒன்றிய
வெளியுறவு
மந்திரிகளின்
கூட்டம்
ஒன்று
செவ்வாயன்றே
இத்திட்டத்தை
விவாதிக்க
லுக்சம்பர்க்கில்
கூடுகிறது.
அதைத்
தொடர்ந்து
பேர்லினில்
நேட்டோ
வெளியுறவு
மந்திரிகளின்
கூட்டம்
நடைபெற
உள்ளது.
ஒரு
“தற்காலிக
போர்
நடவடிக்கைகள்
நிறுத்தப்பட
வேண்டும்”,
அதையொட்டி
வெளிநாட்டுத்
தொழிலாளர்களுக்கும்
நாட்டை
விட்டு
நீங்க
விரும்பும்
லிபிபயர்களும்
அகற்றப்படலாம்
என்று
ஐ.நா.
அழைப்பு
விடுத்துள்ளது.
இது
நடைபெறாவிட்டால்,
அது
கேணல்
முயம்மர்
கடாபி
ஆட்சியை
“சர்வதேசச்
சமூகத்தை”
மீறி
நடக்கிறார்
என்று
குற்றம்
சாட்டக்கூடும்,
அதைப்பயன்படுத்தி
இராணுவ
நடவடிக்கைக்கு
ஒரு
உரிய
காரணமும்
கற்பிக்கப்பட்டுவிடும்.
அமெரிக்க-நேட்டோ
வான்
தாக்குதல்
லிபியாவிற்கு
எதிராக
நடத்த
இசைவு
கொடுத்த
ஐ.நா.
பாதுகாப்பு சபைத்
தீர்மானம்
1973 “வெளிநாட்டுப்
படைகளின்
ஆக்கிரமிப்பிற்கு”
தடை
செய்துள்ளது.
ஆனால்
முக்கிய
சக்திகள்
குடிமக்களைத்
தீங்கில்
இருந்து
“காப்பாற்றும்
உரிமைக்காக”
படைகளை
அனுப்பலாம்
என்று
அனுமதித்துள்ளது.
மேலும்
இந்த
உரிய
இலக்கிற்காக
“தேவையான
நடவடிக்கைகள்”
அனைத்திற்கும்
அது
ஒப்புதலும்
கொடுத்துள்ளது.
இதே
“பாதுகாக்கும்
உரிமையை”
மேற்கோளிட்டு
பிரான்ஸ்
ஐவரி
கோஸ்ட்டில்
தான்
நடத்தும்
செயற்பாடுகளை
நியாயப்படுத்தியுள்ளது.
அங்கு
பிரெஞ்சுத்
துருப்புக்களும்
ஹெலிகாப்டர்களும்
நேரடியாக
பாரிசின்
தேர்ந்தெடுக்கப்பட்ட
தலைவரான
அலசானே
ஔட்டாராவின்
சார்பில்
போராடி,
தற்பொழுது
பதவியிலுள்ள
லௌரன்ட்
க்பக்போவை
அகற்றுவதற்கு
சண்டையில்
இறங்கியுள்ளன.
ஐ.நா.
தீர்மானம்
1973 இயற்றுவதற்கு
அமெரிக்கா
மற்றும்
பிரிட்டனுடன்
பிரான்ஸ்
முக்கிய
பங்கை
வகித்தது.
ஜேர்மனிய
சான்ஸ்லர்
அங்கேலா
மேர்க்கெலின்
செய்தித்
தொடர்பாளர்
ஸ்டீபென்
ஸீபெர்ட்
வெள்ளியன்று
ஒரு
செய்தியாளர்
கூட்டத்தில்
ஜேர்மனியப்
படைகள்
அத்தகைய
ஐரோப்பிய
ஒன்றிய
“மனிதாபிமானப்
பணிக்கு”
கிடைக்கும்
என்று
கூறினார்.
“ஐ.நா.வில்
இருந்து
வேண்டுகோள்
வந்தால்,
நாங்கள்
எங்கள்
பொறுப்பை
தட்டமாட்டோம்
என்பது
இயல்புதான்”
என்று
வெளியுறவு
மந்திரி
கிடோ
வெஸ்டர்வெல்லே
பண்டேஸ்டாக்கில்
(பாராளுமன்றத்தில்)
வெள்ளியன்று
கூறினார்.
பாதுகாப்பு
அமைச்சரகச்
செய்தித்
தொடர்பாளர்
கிறிஸ்டியன்
டீன்ஸ்ட்
ஐரோப்பியப்
பணியில்
ஜேர்மனி
பங்கு
கொண்டால்,
“ஜேர்மனியத்
துருப்புக்கள்
லிபிய
நிலத்தில்
தங்கள்
பூட்ஸ்
கால்களைப்
பதிக்கும்
என்பது
தெளிவு”
என்றார்.
Tagesspiegel
செய்தித்தாளும்
லிபியாவிற்கு
ஜெர்மனியக்
கப்பல்களை
மீண்டும்
அனுப்பும்
வழிவகைக்கான
திட்டங்கள்
உள்ளன
என்று
தகவல்
கொடுத்துள்ளது.
ஐரோப்பியப்
படைக்
குழுக்கள்
1/2011ல்
ஜேர்மனியும்
ஒரு
பகுதிதான்.
இவை
நெதர்லாந்தின்
கட்டுப்பாட்டின்
கீழ்
உள்ளன.
இதில்
990 படையினர்கள்
உள்ளனர்.
பெயரளவிற்கு
ஐரோப்பிய
ஒன்றியப்
போர்ப்படை
என்பதில்
மொத்தம்
உள்ள
துருப்புக்களில்
மூன்றில்
இரு
பகுதியை
இது
அளிக்கிறது.
ஜேர்மனி,
சீனா,
ரஷியா,
இந்தியா
மற்றும்
பிரேசிலுடன்
சேர்ந்து
ஐ.நா.
பாதுகாப்பு சபை
இராணுவ
நடவடிக்கைக்கு
ஒப்புதல்
கொடுக்க
வாக்கெடுப்பு
நடத்தியபோது
அதில்
கலந்து
கொள்ளவில்லை.
மேலும்
அது
லிபியாவிற்கு
ஐ.நா.வின்
கட்டளையான ஆயுத விநியோகத்தைத்
தடைசெய்தல்
செயல்பாட்டிற்கான
நேட்டோ
குழுவில்
இருந்தும்
தன்
கப்பல்களைத்
திரும்பப்
பெற்றுக்
கொண்டது.
இந்த
மாற்றத்தின்
அடிப்படையில்
உள்ள
ஜேர்மனி
TNC என்னும்
எதிர்ப்பாளர்களை
திட்டமிட்டபடி
பதவியில்
இருத்தி
விட்டால்
தவிர்க்க
முடியாமல்
விளையும்
ஒப்பந்தங்கள்
மறு
பங்கீட்டிலிருந்து
ஒதுக்கிவைக்கப்பட்டுவிடக்
கூடாது
என்னும்
உறுதிப்பாடுதான்.
இன்றுவரை
இப்பிரிவு
வாஷிங்டன்
மற்றும்
லண்டனுக்கு
நெருக்கமாக
இருக்கும்
சக்திகளின்
மேலாதிக்கத்தில்
உள்ளது.
போருக்குப்
பிறகு
கிடைக்கும்
ஆதாயங்களில்
கணிசமான
பங்கைத்
தான்
இழந்துவிடக்கூடாது
என்று
ஜேர்மனி
அஞ்சுகிறது.
Economist
ஆனது ஜேர்மனிய
இராணுவ
ஈடுபாட்டின்
உட்குறிப்புக்கள்
பற்றிக்
குறிப்பாகக்
கருத்துக்களைக்
கூறியுள்ள
வகையில்,
“எனவே,
இரண்டாம்
உலகப்
போரில்
எர்வின்
ரோம்மெல்லின்
ஆபிரிக்காக்கோர்ப்ஸ்
தோற்கடிக்கப்பட்ட
பிறகு
முதன்
முறையாக
ஜேர்மனியத்
துருப்புக்கள்
வட
ஆபிரிக்காவிற்கு
மீண்டும்
வர
இருப்பதை
நாம்
காணப்போகிறோமா?”
என்று
வினவியுள்ளது.
ஏடு
தொடர்கிறது:
“ஐரோப்பிய
ஒன்றியம்
லிபிய
நெருக்கடியில்
அதன்
இராணுவக்
கட்டத்தில்
ஓரம்
கட்டப்பட்டு
விட்டதாக
உணர்ந்தது
(அதுதான்
பொருளாதாரத்
தடைகளை
விவாதிக்கும்
முக்கிய
அரங்காக
உள்ளது).
நீண்டகாலமாகவே
அது
இன்னும்
கூடுதலான
இராணுவத்
திறன்களை
வளர்க்க
விரும்பி
வருகிறது.
ஆனால்
அம்முயற்சிகள்
பலமுறையும்
தோற்கடிக்கப்பட்டன,
குறிப்பாக
பிரிட்டனினால்.
இப்பொழுது
அது
ஒரு
மிருதுவான,
குறைந்த
இராணுவப்
புகழ்
என்பதைக்
கொண்டிருப்பதால்
அது
மிஸ்ராடவில்
உதவிக்கு
நேர்த்தியாக
உள்ளதாக
நினைக்கிறது.
‘சமீப
காலம்
வரை
அனைவரும்
ஐரோப்பியப்
பாதுகாப்பு
மடிந்துவிட்டது
என்று
நினைத்தனர்’
என்று
ஒரு
மூத்த
ஆதாரம்
குறிப்பிட்டு,
“ஆனால்
அது
இப்பொழுது
சாம்பலில்
இருந்து
மீண்டும்
உயர்
பெற்று
எழுகிறது”
எனத்
தெரிவிக்கிறது.
ஐரோப்பிய
ஒன்றியத்தின்
முனைப்பிற்கு
அமெரிக்காவின்
விடையிறுப்பு
அமெரிக்கத்
தரைத்துருப்புக்கள்
லிபியாவிற்கு
அனுப்பப்பட
மாட்டாது
என்னும்
ஜனாதிபதி
பாராக்
ஒபாமாவின்
உறுதிமொழியைக்
கடக்கும்
வகையில்
ஒரு
நேரடித்
தொடர்பை
நாடுவதாக
இருக்கலாம்.
ஆனால்
தன்
நடவடிக்கைகளில்
கட்டுப்பாட்டுடன்
இருக்க
வேண்டும்
என
அது
விரும்புகிறது,
லிபியாவிற்கு
எதிரான
போரில்
வெளிப்படையாக
மேலாதிக்கம்
செலுத்துவதாகத்
தென்படக்கூடாது,
அதையொட்டி
தன்
ஏகாதிபத்தியப்
போர்
நோக்கங்களை
மறைக்க
முடியும்
என
அது
கருதுகிறது.
பிரான்ஸ்,
இத்தாலி,
கட்டார்
போல்
இல்லாமல்,
வாஷிங்டன்
உத்தியோகப்பூர்வமாக
எதிர்ப்பை
லிபியாவின்
நெறியான
அரசாங்கம்
என்று
இன்னும்
அங்கீகரிக்கவில்லை.
இன்று
வரை
அதற்கு
ஆயுதம்
கொடுப்பதையும்
நிராகரித்து
வருகிறது.
நேட்டோவிற்கு
செயல்
கட்டுப்பாட்டை
மாற்றியதில்
இருந்து
அமெரிக்கா
அப்பிராந்தியத்தில்
இருந்த
தன்
போர்க்கப்பல்களை
11ல்
இருந்து
3ஆகக்
குறைத்து
விமானங்களின்
எண்ணிக்கையும்
170ல்
இருந்து
90 ஆக
அங்கு
குறைத்துவிட்டது.
கடந்த
வாரம்
செனட்டின்
வெளியுறவுக்
கொள்கைக்குக்
கொடுத்த
சாட்சியத்தில்
அமெரிக்காவின்
ஆபிரிக்கக்
கட்டுப்பாட்டின்
தளபதியும்
லிபிய
இராணுவ
நடவடிக்கை
நேட்டோவிற்கு
மாற்றப்படுவதற்கு
முன்
அதன்
தலைவராகவும்
இருந்த
ஜெனரல்
கார்ட்டர்
ஹாம்
லிபியா
மீது
தாக்குதல்
நடத்தினால்
ஆபிரிக்காவில்
ஏற்படக்கூடிய
விரோதப்
போக்கு
பற்றி
எச்சரித்தார்.
“இதில்
ஒரு
பாதிப்பு
உள்ளது.
இது
அப்பிராந்தியத்தில்
ஒரு
பாதிப்பை
ஏற்படுத்திவிடும்”
என்றார்
அவர்.
ஆபிரிக்காவில்
லிபியப்
போர்
மனிதாபிமானத்துடன்
தொடர்பு
கொண்டிருக்கவில்லை,
இதில்
முற்றிலும்
எண்ணெய்த்
தொடர்புதான்
உள்ளது
என்ற
பரந்த
உணர்வு
உள்ளது.
இதுவரை
வளைந்து
கொடுக்கும்
முதலாளித்துவ
அரசாங்கத்தின்
தலைவர்கள்
கூட
லிபியாவில்
வெடித்துள்ள
புதிய
காலனிய
இராணுவவாதம்
மற்றும்
இப்பொழுது
ஐவரி
கோஸ்ட்டிலும்
ஏற்பட்டுள்ள
அத்தகைய
நிலை
ஆகியவை
பற்றிக்
கருத்திற்கொண்டு
தங்கள்
வருங்காலத்தைப்
பற்றிக்
கவலைப்
பட்டுள்ளனர்
ஆபிரிக்க
ஒன்றியத்தின்
தலைவரான
ஈக்வேடர்
கினி
நாட்டு
ஜனாதிபதி
டியோடோரா
ஒபியாங்
என்கிமா
கடாபிக்கு
ஆதரவு
குறித்து
வெளிப்படையாகப்
பேசி,
லிபியாவின்
உள்நாட்டு மோதலில்
வெளித்
தலையீட்டிற்கு
ஒரு
முற்றுப்புள்ளி
வேண்டும்
என்றும்
கோரியுள்ளார்.
“லிபியாவில்
உள்ள
பிரச்சினைகள்
உள்நாட்டு
முறையில்
தீர்க்கப்பட
வேண்டும்,
மனிதாபிமானத்
தலையீடு
எனத்
தோன்றக்கூடிய
வெளிநாட்டுக்
குறுக்கீட்டால்
அல்ல.
ஏற்கனவே
இதை
நாம்
ஈராக்கில்
பார்த்துள்ளோம்”
என்றார்
அவர்.
பிரெஞ்சு/ஐ.நா.
தலையீடு
ஐவரி
கோஸ்ட்டில்
நடந்துள்ளது
பற்றிக்
குறிப்பிட்ட
என்கிமா
இது
“போர்
என்பதைக்
குறிக்காது,
ஒரு
வெளிநாட்டு
இராணுவத்தின்
தலையீடு”
ஆகும்
என்றார்.
இந்த
வார
இறுதியில்
ஆபிரிக்க
ஒன்றியம்
ஒரு
உயர்மட்ட
ராஜதந்திரப்
பணிக்குழுவை
லிபிய
எதிர்ப்பு
சக்திகள்
மற்றும்
அரசாங்கத்தைச்
சந்தித்து
போர்நிறுத்தம்
பற்றி
வலியுறுத்தியது.
இப்பணிக்கு
தென்னாப்பிரிக்க
ஜனாதிபதி
ஜாகப்
ஜமா
தலைவராக
இருந்தார்.
இதில்
காங்கோ
ஜனநாயகக்
குடியரசு,
மாலி,
மௌரிடானியா
மற்றும்
உகண்டாவின்
தலைவர்கள்
அடங்கியிருந்தனர்.
சௌதி
ஏடான
Arab News
ஞாயிறன்று
சையத்
ரஷிட்
ஹுசைன்
எழுதிய
“புவிசார்
அரசியல்
அதன்
கோரமான
முகத்தை
லிபியக்
கொந்தளிப்பில்
வெளிப்படுத்துகிறது”
என்ற
தலைப்பில்
ஒரு
கட்டுரையை
வெளியிட்டது.
இக்கட்டுரை
துவங்குகிறது:
“எனவே
இது
அனைத்தும்
எண்ணெய்
பற்றியதாகும்.”
லைபீரியக்
கொடியைக்
கொண்டிருந்த
எண்ணெய்க்
கப்பல்
வடகிழக்கு
லிபியத்
துறைமுகமான
Marsa Al Hariga
வில்
இருந்து
ஒரு
மில்லியன்
பீப்பாய்கள்
எண்ணெய்
நிறைந்தது
புறப்பட்டது
அவநம்பிக்கைவாதிகளுக்கு
ஆர்ப்பாட்ட
தினமாக
அமைந்தது.
இக்கப்பல்
சென்றது
பெப்ருவரி
17ம்
தேதி
எழுச்சி
துவங்கியதற்குப்பின்
எதிர்ப்பாளர்
அராசங்கம்
முதல்
எண்ணெய்
விற்பனை
செய்துள்ளதைக்
குறிக்கிறது.”
“வணிகர்கள்
விற்பனைக்கான
நிதி
ஒரு
கடல்கடந்த
வங்கிக்
கணக்கின்
மூலம்
கிடைக்கும்
என
நம்புவதாகக்
கூறினர்.
‘முதல்
எண்ணெய்க்
கப்பலின்
மதிப்பு
கிட்டத்தட்ட
$112 மில்லியன்
ஆகும்.
இது
லிபியாவிற்கு
வெளியே
உள்ள
ஒரு
வங்கியில்
கணக்கு
வைக்கப்படும்.
இதற்கு
எதிர்ப்பாளர்களை
அணுக
முடியும்’
என்று
வணிகர்களில்
ஒருவர்
மேற்கோளிட்டார்.”
TNC “சில
அரசாங்கங்களால்
அங்கீகரிக்கப்பட்டது,
ஐரோப்பாவில்
உள்ளவை
சிலவற்றாலும்
என்பதின்
பொருள்,
அங்கிருந்து
எண்ணெய்
வாங்குவதில்
சட்டப்பூர்வத்தடை
ஏதும்
இராது
என்பதுடன்
அதற்கு
நேரடியாகப்
பணம்
கொடுக்க
முடியும்
என்பதும்தான்”
என்று
அமெரிக்கச்
சிந்தனைக்குழுவான
Atlantic Council ன்
ஆபிரிக்க
இயக்குனர்
J. Peter Pham
கூறினார்.
எதிர்ப்பின்
கட்டுப்பாட்டில்
இருக்கும்
பகுதிகளில்
இருந்து
சீனாவிற்கு
முதல்
சரக்குக்
கப்பல்
சென்றதைக்
குறித்த
Arab News
மால்டாவிற்குத்
தப்பியோடிவிட்ட
முன்னாள்
லிபிய
எரிசக்தி
மந்திரி
ஒமர்
பத்தி
பென்
ஷட்வானை
மேற்கோளிட்டுள்ளது.
ஷன்வான்
லிபிய
எண்ணெய்
ஒப்பந்தங்களை
முக்கிய
எண்ணெய்ப்
பெருநிறுவனங்களுக்கு
கடாபியின்
நலன்களுக்காகக்
கொடுத்திருந்தார்.
ஒரு
நீண்ட
கால
அடிப்படையில்
ரஷியாவும்
சீனாவும்
லிபியாவில்
எதிர்ப்பாளர்களைஆதரிக்காததற்காக
அங்குள்ள
எண்ணெய்,
எரிவாயு
வயல்களின்
அபிவிருத்தி செய்யும்
பங்கை
இழுந்துவிட்டன
என்றார்.
“புதிய
ஜனநாயகம்
அதற்கு
உதவிய
நாடுகளுக்குத்தான்
(பிரான்ஸ்,
இத்தாலி
போன்றவற்றிற்கு)
நல்லது
செய்யும்”
என்றார்
அவர். |