சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : லிபியா

US, NATO allies join scramble for Libya’s oil

லிபிய எண்ணெய்க்கான போராட்டத்தில் அமெரிக்கா, நேட்டோ கூட்டணி நாடுகள் சேர்கின்றன

By Bill Van Auken
6 April 2011
Use this version to print | Send feedback

கிழக்கு லிபிய நகரமான பெங்காசியில் செவ்வாயன்று கேணல் முயம்மர் கடாபியின் ஆட்சிக்கு எதிராகப் போராடும் எழுச்சியாளர் எனக் கூறிக் கொள்பவர்களின் அரசியல் பிரிவான இடைக்கால தேசிய சபையுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு ஒரு அமெரிக்க பிரதிநிதிகள் குழு வந்துள்ளது.

இத்தாலிய அரசாங்கம் பெங்காசியிலுள்ள சபையை லிபியாவின் ஒரே நெறியான அரசாங்கம் என்று அங்கீகரித்துள்ளது தொடர்பாக திங்களன்று ரோமில் வந்த அறிவிப்பைத் தொடர்ந்து இந்த வருகை நடந்துள்ளது. இடைக்காலத் தேசிய சபைக்கு அங்கீகாரம் கொடுக்கும் நடவடிக்கையை இத்தாலி மூன்றாவது நாடாக எடுத்துள்ளது. முன்னதாக பிரான்ஸும், எண்ணெய் வளமுடைய பேர்சிய வளைகுடா எமிரேட்டான கட்டாரும் அங்கீகரித்துள்ளன.

இந்த அங்கீகாரத்தை அறிவிக்கையில் இத்தாலிய வெளியுறவு மந்திரி பிராங்கோ பிரட்டினி இத்தாலிய எண்ணெய், எரிவாயு நிறுவனமான ENI ன் தலைமை நிர்வாகியான பாவலோ ஸ்கரோனி இரண்டு நாட்கள் முன்பு TNC உடன் பேச்சுக்களுக்காக பெங்காசிக்கு சென்றிருந்ததாகக் கூறினார். வெளியுறவு அமைச்சரகம் பின்னர் இக்கருத்துக்களைத் திருத்திக் கொண்டு அவர் பெங்காசி சபையுடன் ஒரு தொலைபேசித் தொடர்பு கொண்டார் எனத் தெரிவித்தது.

எண்ணெய் நிறுவன நிர்வாகி லிபிய எரிசக்தித்துறையில் ஒத்துழைப்பை மீண்டும் தொடங்குவதற்கு லிபிய தேசிய இடைக்கால சபையுடன் தொடர்புகளை கொண்டார். அதே போல் எண்ணெய் தொழில் துறையிலும் இத்தாலியுடன் ஒத்துழைப்பை மீண்டும் தொடங்கப் பேசினார்என்று பிரட்டனி கூறினார்.

கடந்த மாதம், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகியவை தங்கள் ஏவுகணை மற்றும் குண்டுவீச்சுக்களை லிபியா மீது தொடங்குவதற்கு முன், கடாபி ஆட்சிக்கு எதிரான பொருளாதாரத் தடைகளைநம் காலிலேயே சுட்டுக் கொள்ளுவது போல்தான்என்று ஸ்கரோனி எள்ளி நகையாடினார். வட ஆபிரிக்க நாட்டுடன், “வருங்காலத்தில் அங்கு எத்தகைய அரசியல் முறை இருந்தாலும்”, மீண்டும் செயற்பாடுகளை ENI விரும்புவதை வலியுறுத்தினார். இந்த நிறுவனம் லிபியாவில் 1955 முதல் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது. முக்கிய பெரிய வெளிநாட்டு எண்ணெய் நிறுவனமாகும். மேலும் அந்நாட்டில் மிக அதிகமாக முதலீடு செய்துள்ள அயல் நாடும் ஆகும். இந்நிறுவனம் 2007ல் லிபிய அரசாங்கத்துடன் ஒரு $28 பில்லியன் உடன்பாட்டைக் கொண்டு 2042 வரை எண்ணெய் உற்பத்திக்கான ஒப்பந்தங்களை விரிவாக்கியுள்ளது.

ENI இத்தாலிய அரசாங்கத்திற்கு மிகவும் நெருக்கமான நிறுவனமாகும். இதுஎதிர்ப்பாளர்கள்புறம் மாறியிருப்பது நிறுவனம் அதன் பந்தயத் தொகையை பாதுகாப்பாக வைப்பதுபோல்தான். மறுபுறத்தில், இது அமெரிக்க-நேட்டோ திட்டங்களில் போர் விரிவாக்கம் பற்றியது அல்லது லிபியாவைத் திறமையுடன் பங்கு போடுவது பற்றி அறிந்துள்ள உள் செய்திகளையும் பிரதிபலிக்கக்கூடும். கிழக்கு எண்ணெய் வயல்கள் மற்றும் நிலையங்களும் TNC யின் பெயரளவுக் கட்டுப்பாட்டின் கீழ் வரக்கூடும் என்று அறிந்திருக்கலாம்.

இத்தாலியின் அங்கீகாரமும் ENI ஆனது பெங்காசி சபையுடன் உறவுகளைப் பிணைத்துக் கொள்வதும், கிரேக்க கப்பல் பெருநிறுவனத்தின் லைபீரியாவில் பதிவு செய்யப்பட்ட எண்ணெய் டாங்கர் டோப்ருக்கிற்கு அருகே மார்சா எல்-ஹாரிகா லிபிய கச்சா எண்ணெய் இறுதிப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டதற்கு ஒரு நாள் முன்னதாக நடந்துள்ளது.

ஈக்குவேட்டர் எனப் பெயர் கொண்ட இந்த டாங்கர், 1 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் திறன் உடையது. இது உலகச் சந்தையில் $100 மில்லியனுக்கும் மேலாக விற்கப்பட முடியும். அக்கப்பல் புறப்படுவது ஆறு வாரம் முன்பு நாடு உள்நாட்டுப்போரில் ஈடுபட்டதற்குப் பின் முதல் எண்ணெய் ஏற்றமதியைப் பிரதிபலிக்கும். எண்ணெய் ஏற்றிச் செல்லும் கிரேக்க கப்பல் நிறுவனம் யார் இச்செலவை ஏற்கிறார், எங்கு அது செல்கிறது என்பது பற்றிக் கூற மறுத்துவிட்டது.

எண்ணெய் களஞ்சியப்படுத்தும் இறுதிப்பகுதியில் மூன்று மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் சேர்ந்துள்ள நிலை இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. இவை AGOCO எனப்படும் அரபு வளைகுடா எண்ணெய் நிறுவனத்தைச் சேர்ந்தவை. இந்நிறுவனம் லிபியத் தேசிய எண்ணெய் நிறுவனத்தின் துணைப் பிரிவு ஆகும். TNC ஆனது AGOCO வின் கிழக்கே இருக்கும் வயல்கள் நாள் ஒன்றிற்கு 120,000 பீப்பாய்கள் உற்பத்தி செய்வதாகத் தெரிவித்துள்ளது. இது உள்நாட்டுப் போர் வெடிப்பதற்கு முன் இருந்த உற்பத்தியில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதி ஆகும். மொத்தத்தில் போருக்கு முன் லிபியா நாள் ஒன்றிற்கு 1.6 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து, 1.3 மில்லியனை ஏற்றுமதி செய்து வந்தது.

எரிசக்தி பற்றிய பகுப்பாய்வாளர்கள் இக்கூற்றுக்கள் பற்றி பெரும் சந்தேகம் கொண்டுள்ளனர். வணிகத் தகவல் நிறுவனமான IHS குறிப்பிட்டுள்ளபடி, “திறைமை படைத்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள், மற்றும் பெரும்பாலான லிபிய எண்ணெய் தொழிலாளர்கள் பெருமளவு வெளியேறியுள்ள நிலையில்நாட்டில் தொலைவிலுள்ள பாலைவனப் பகுதியிலுள்ள எண்ணெய் வயல்களைக் கைவிட்டவர்கள், போரில் அகப்பட்டுக் கொள்ள விரும்பாதவர்கள் அல்லது நீர், உணவு வழங்கல் வலையமைப்புக்கள் முறிவதால் அகப்படும் நிலையை விரும்பாதவர்கள் என்று உள்ள நிலையில்—AGOCO வின் வயல்கள், பிற லிபிய வயல்களைப் போலவே கிட்டத்தட்ட பூஜ்யம் என்று சரிந்துவிட்டது.”

ஆயினும்கூட, பெங்காசி சபை தன்னிடத்திலுள்ள எண்ணெயை விற்பதற்கான விருப்பத்தை அறிவித்துள்ளது. அப்பணம் அதன் செயற்பாடுகளுக்கும் ஆயுதம் வாங்குவதற்கும் பயன்படுத்தப்படும். கட்டார்தான் இடைத்தரகர் போல் எண்ணெயை உலகச் சந்தைக்கு கொண்டு வர முற்படுகிறது.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில்  ஒரு பேட்டியின்போது கடாபியின் பங்கு பற்றிக் கேட்கப்பட்டதற்கு, லிபியாவின் எரிசக்தித்துறை மந்திரி ஷுக்ரி கனெம் கசப்புடன் கூறினார், “ஒற்றுமை, சமரசம் இவற்றிற்கு அழைப்பு விடுவதற்குப் பதிலாக, அனைவரும் கொள்ளையடித்தலில் பங்கைத்தான் விரும்புகின்றனர்.”

போர்நிறுத்தத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கனெம் வலியுறுத்தி, போர் தொடர்வது என்பது லிபியாவின் எண்ணெய் தொழில்துறைக்குநெரிப்பைஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்தார்.

கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுப் பிரதிநிதி காதரைன் ஆஷ்டன், “லிபியா முழுவதற்கும் எதிரான எண்ணெய்த் தடை உள்ளது”, இது கடாபி ஆட்சியின் கீழுள்ள பகுதி மற்றும் ஆயுதமேந்தி எதிர்ப்பு நடத்துபவர்களின் கட்டுப்பாட்டின் கீழுள்ள பகுதிக்கும் சமமாகப் பொருந்தும் என்றார்.

இதற்கு எதிரிடையான நிலைப்பாட்டை வாஷிங்டன் எடுத்துக்கொண்டு, பணம் அரசாங்க உடைமையான தேசிய எண்ணெய் நிறுவனத்திற்கு சேராத வகையில், கிழக்கு லிபியாவில் இருந்து ஏற்றுமதிகள் அனுமதிக்கப்படும் என்று வலியுறுத்தியுள்ளது.

.நா.வின் லிபியாவிற்கான சிறப்புத் தூதர் அப்துல் இலா அல்-கடிப் ஏப்ரல் 4ம் திகதி பாதுகாப்பு சபைக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டார். இதில் பெங்காசி சபைநிதி இல்லாதது பற்றி கவலைகள், மற்றும் லிபியாவின் எண்ணெய், எரிவாயு விற்பனை செய்தல் குறித்த கவலைகளையும் எழுப்பியதுஎன்றார். “லிபியாவின் முடக்கப்பட்ட வெளிநாட்டிலுள்ள சொத்துக்களில் இருந்து எண்ணெய் எரிவாயு விற்பனையை ஒட்டிய கடன்களுக்கு உத்தரவாதம் அளித்தல்தொடங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

செவ்வாயையொட்டி, ஐரோப்பிய ஒன்றியம் லிபியத் தடைகள் மீதான தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. ஒரு வெளியுறவுச் செய்தித் தொடர்பாளர், “எண்ணெய் மற்றும் எரிவாயுத் தடைகள் குறிப்பாக கடாபியின் ஆட்சிக்கு எதிராக இலக்கு கொண்டவைதிரிப்போலியிலுள்ள அரசாங்கத்திற்கு வருமானம் செல்லாத வரை, “எண்ணெய் மற்றும் எரிவாயு வணிக நடைமுறைகளில் எங்களுக்குப் பிரச்சினை ஏதும் இல்லைஎன்று வலியுறுத்தினார்.

இத்தகைய அப்பட்ட தலைகீழ் மாற்றம், இத்தாலிய எண்ணெய் பெருநிறுவனம் ENI க்கும்எதிர்ப்பாளர்களுக்கும்இடைய நடந்த பேச்சுக்களுடன் இணைந்து, முக்கிய மேற்கத்தைய சக்திகள் மற்றும் எரிசக்திப் பெறுநிறுவனங்கள் லிபிய எண்ணெய்க்காகப் பெரும் போராட்டத்தில் ஈடுபடுவது தோன்றிவிட்டது என்பதைத்தான் காட்டுகின்றது.

இப்பின்னணியில் பெங்காசிக்கு அமெரிக்கக் குழுக்களின் வருகை மற்றும் பிரெஞ்சு, பிரிட்டிஷ் தூதர்கள் அதற்கு முன்னாலும்நடக்கிறது. அமெரிக்கத் தூதரான கிறைஸ் ஸ்டீவன்ஸ், இப்பொழுது திரிப்போலியின் மூடப்பட்டுவிட்ட தூதரகத்தில் இரண்டாவது இடத்தில் இருந்த அதிகாரி, மற்றவற்றுடன்சபையின் நிதியத் தேவைகள் பற்றியும்சர்வதேச சமூகம் எப்படி உதவலாம்என்பது பற்றியும் விவாதிக்க உள்ளார் என்று நிர்வாக அதிகாரி ஒருவர் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் கூறினார். இத்தகையஉதவி” Big Oil என்னும் நிறுவனத்தின் அமெரிக்க கிளைக்கு பெரும் இலாபம் ஈட்டும் ஒப்பந்தங்களுடன் பிணைக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

வாஷிங்டன், பாரிஸ் மற்றும் லண்டன் ஆகியவை லிபிய எண்ணெய் மீது ஆட்சி மாற்றத்தை ஒட்டி தடையற்ற கட்டுப்பாட்டைக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடாபி ஆட்சியை விழ்த்தும் திறன் உடையது. ஆனால் இந்த நோக்கம் எதிர்பார்த்ததைவிடக் கடினமாகவும், நீடித்தும் போய்விட்டது.

எழுச்சியாளர்கள்கடாபிக்கு விசுவாசமாக இருக்கும் இராணுவப் பிரிவுகளை தோற்கடிப்பதற்கு படைகளைத் திரட்டும் திறன் அற்றவர்களாக உள்ளனர். புதன்கிழமையன்று அவர்கள் மீண்டும் ப்ரெகாவிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டனர். இது எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவன இடம், மத்தியதரைக்கடல் பகுதியின் ஒரு துறைமுகம் ஆகும். முன்னதாக நேட்டோ வான் தாக்குதல்கள் கடாபிப் படைகளின் வாகனங்களை தகர்த்தும் கூட இந்நிலைதான் உள்ளது. பீதியில் எதிர்ப்பாளர்கள் பின்வாங்கியது அவர்களை கிழக்கே அஜ்டபியாவிற்கு 15 மைல் தூரத்திற்கு கொண்டுபோய்விட்டுள்ளது.

இந்தப் புதிய பின்னடைவுகள் ஆயுதமேந்திய எதிர்ப்பாளர்களின் தளபதி ஒருவரிடமிருந்து நேட்டோ போதிய வான்வழிப் பாதுகாப்பு அளிக்கவில்லை என்ற குறைகூறலைக் கூறவைத்துள்ளது. முன்னதாக கடாபியின் உள்துறை மந்திரியாக இருந்த அப்டெல் பட்டா யூனெஸ், நேட்டோ மிக மெதுவாக குண்டுவீச்சுக்கள் நடத்துவது பற்றி கண்டனம் தெரிவித்து, “அதன் பணிகளை நேட்டோ ஒழுங்காகச் செய்யவேண்டும், இல்லாவிடின் நான் தேசிய சபையை, பாதுகாப்பு சபையிடம் விவகாரத்தை எடுத்துச்செல்லக் கோருவேன்என்றார்.

இப்புகாரை நேட்டோ நிராகரித்து, லிபியத் தலையீட்டின்போது பெயரளவுக் கட்டுப்பாட்டை ஏற்றதிலிருந்து சீரான வேகத்தில்தான் அது செயல்பட்டுவருவதாகக் கூறியது. “செயற்பாடுகளின் வேகம் நேட்டோ எடுத்துக் கொண்டதிலிருந்து சிறிதும் குறையவில்லைஎன்று அமெரிக்கத் தலைமையிலான கூட்டின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார். “நாங்கள் கடந்த 6 நாட்களில் 851 முறை பறந்து தாக்கியுள்ளோம்….எங்களுக்குக் கொடுக்கப்பட்ட உத்தரவுவரை நிறைவேற்றுகிறோம்.”

இதற்கிடையில் பிரிகேடியர் ஜெனரல் மார்க் வான் உஹ்ம், ஒரு மூத்த நேட்டோ அதிகாரி, பிரஸ்ஸல்ஸில், “கடாபியின் இராணுவத் திறனில் 30% ஐ அழித்துவிட்டோம் என்பதுதான் தற்போதைய மதிப்பீடுஎன்றார்.

வாஷிங்டனும் நேட்டோவும் ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தின் பேரில் செயல்படுவதாகக் கூறுகின்றன. அத்தீர்மானம் குடிமக்களைக் காப்பாற்றஅனைத்து நடவடிக்கைகளும் எடுக்கஒப்புதல் கொடுத்துள்ளது. ஆனால் வான் உஹ்மின் அறிக்கையிலுள்ள வெளிப்படையான உட்குறிப்பு தொடர்ந்த வான்தாக்குதல்கள் லிபியாவின் இராணுவத்தைத் தகர்த்தல் மற்றும் எழுச்சியாளர்கள் எனக்கூறுப்படுவோரின் நலன்களைக்காத்தல் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.

அமெரிக்கா மற்றும் நேட்டோவின் ஆதரவைப் பெற்றுள்ள எதிர்ப்பு சீர்குலைந்து, துருப்புக்களற்று இருக்கும் நிலையில், வான்வழிப் போர் போதுமான திறனுடையதல்ல என நிரூபிக்கப்பட்டுள்ளது.

அல் ஜசீரா லிபியாவைப் பற்றிக் கொடுத்துள்ள தகவல் இந்த நிலைமையை மாற்றுவதற்கு இரகசிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை வெளிப்படுத்தியுள்ளது. ஆயுதமேந்திய எதிர்ப்பின் உறுப்பினர் சாட்சியத்தை மேற்கோளிட்டு இந்த இணையம் எதிர்ப்பாளர்கள் கிழக்கு லிபியாவில் அமெரிக்க மற்றும் எகிப்திய சிறப்புப் படைப் பிரிவுகளால் பயிற்சி அளிக்கப்படுகின்றன என்ற தகவலைக் கொடுத்துள்ளது.

எழுச்சியாளர்ஆயுதங்களை எகிப்திய எல்லையில் இருந்து பெறப்படுவதாகவும், இது ஐ.நா.ஆயுதத் தடையை மீறியது என்றும், வரும் ஆயுதங்கள்மிக நவீனவெப்பத்தை கண்டறிந்து தாக்கும் ஏவுகணைகளையும் கொண்டுள்ளன என்றார்.

ஒபாமா நிர்வாகம் கூறும் பொய்களையும் அறிக்கை மேலும் அம்பலப்படுத்துகிறது. அமெரிக்க ஜனாதிபதி பகிரங்கமான அமெரிக்க மக்களுக்கு லிபியாவில்இராணுவப் பூட்ஸ் கால்கள் இறங்காதுஎன்றும்எதிர்ப்பாளர்களுக்குஆயுதம் கொடுத்தல் இல்லை என்றோ உண்டு என்றோ போகவில்லை எனவும் கூறியிருந்தார். ஆனால் வாஷிங்டன் கொள்ளைமுறைப் போரை நடத்துகையில் இரண்டுமே நடைபெற்றுள்ளன என்றுதான் தெரியவந்துள்ளது.

செவ்வாயன்று வெளிவந்த கருத்துக் கணிப்பு ஒன்று அமெரிக்காவிற்குள் ஒபாமா நிர்வாகம் லிபியாவிற்கு எதிராகத் தொடக்கியுள்ள போர் குறித்த மக்கள் எதிர்ப்பு உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளது. 25 சதவிகித மக்கள்தான் இதுவரை அமெரிக்க இராணுவ நடவடிக்கையினால் ஏற்பட்டுள்ள கிட்டத்தட்ட $600 மில்லியன் செலவிலான தலையீடு உகந்தது என்று தெரிவித்துள்ளனர் என்று The Hill  நட்த்தியுள்ள கருத்துக் கணிப்பு கூறுகிறது. இதே கணிப்பில் 19 சதவிகித மக்கள்தான் எழுச்சியாளர் எனப்படுவோருக்கு ஆயுதம் கொடுத்தலுக்கு ஆதரவு கொடுத்துள்ளதை தெரிவிக்கிறது. ஒரு தனியான Quinnipiac பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு 47 சதவிகிதம் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் போருக்கு எதிராக உள்ளனர் என்றும் இது 41 சதவிகிதம் ஆதரவாக இருப்பதுடன் ஒப்பிடப்பட வேண்டும் என்றும் கூறுகிறது.