WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பிய ஒன்றியம்
EU-IMF
பிணை எடுப்பிற்கு போர்த்துக்கல் வேண்டுகோள் விடுகிறது
By
Stefan Steinberg
8 April 2011
யூரோ நெருக்கடியின் ஒரு புதிய விரிவாக்கமாக போர்த்துக்கல் ஐரோப்பிய
ஒன்றியத்தையும் சர்வதேச நாணய நிதியையும்
EFSF எனப்படும்
ஐரோப்பிய நிதிய உறுதிப்பாட்டு நிதியின் விதிகளின்கீழ் ஒரு கடன் கேட்கும் மூன்றாவது
ஐரோப்பிய நாடாக போர்த்துக்கல் ஆயிற்று.
கிரேக்கத்திற்கும்
(மே
2010ல்
110 பில்லியன்
யூரோக்கள்),
அயர்லாந்திற்கும்
(நவம்பர்
2010ல்
85 பில்லியன்
யூரோக்கள்)
EU-IMF கொடுத்துள்ள
அவசரக்கால கடன்களை அடுத்து இது வந்துள்ளது.
புதன் மாலை போர்த்துகீசிய காபந்து நிர்வாகம்,
பிரதம மந்திரி ஜோசே
சாக்ரடிஸ் தலைமையில் இருப்பது தான் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து நிதிய உதவியை
வேண்டப்போவதாக அறிவித்தது.
செவ்வாயன்று அரசாங்க
ஆதாரங்கள் அத்தகைய கடனுக்கு போர்த்துகல்லில் தேவை இல்லை என்று வலியுறுத்தின.
ஆனால்
24 மணி
நேரத்திற்குள் அரசாங்கம் நிலைப்பாட்டை தலைகீழாக மாற்றிக் கொண்டு,
சர்வதேச வங்கிகள்,
முதலீட்டாளர்களிடம்
இருந்து வந்த அழுத்தங்களை அதற்கு மேற்கோளிட்டது.
போர்த்துக்கல் அதன்
10 ஆண்டுக் கடன்
பத்திரத்திற்கு கொடுக்கும் வட்டி விகிதம் புதன்னன்று
8.5 விகிதம் என
இருந்தது.
கடன்களுக்கு உரிய வட்டி
போன்றவற்றை திருப்பித் தருவது இந்த வட்டித்தரத்தில் முடியாது எனச் செய்துவிடும்.
போர்த்துக்கல்லின்
நிதியப் பிரச்சினைகள் முக்கிய கடன் தரம் நிர்ணயிக்கும் அமைப்புக்களின் ஒருங்கிணைந்த
நடவடிக்கைகளினால் மோசமாயிற்று.
அவை சமீபத்தில்
போர்த்துக்கல்லின் கடனை உயர் ஆபாய தர தகுதிக்கு ஒரு படி மேல் என்று இறக்கிவிட்டன.
முக்கிய வங்கிகளும் தரம் நிர்ணயிக்கும் அமைப்புக்களும் மற்றொரு
ஐரோப்பிய பொருளாதாரத்தை நெரித்து மண்டியிட செய்ய தயாரிக்கும் வழிவகை
புதன்கிழமையன்று
Financial Express
ல்
“வங்கிகள்
1, போர்த்துக்கல்
0” என்ற தலைப்பில்
அப்பட்டமாக சுருக்கிக் கூறப்பட்டது.
“மற்றொரு
யூரோப்பகுதி நாடு அதனுடைய வங்கிகளால் அவமானப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வாரம் முன்னதாக
போர்த்துக்கல்லின் வங்கிகள் பத்திரம் வாங்குவோர் மெதுவாக செல்லுவர் என்னும்
நடவடிக்கையை காபந்து அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்ற நாடுகளிடமிருந்து நிதி
உதவி கேட்காவிட்டால் ஈடுபடும் என்று அச்சுறுத்தின.
புதன்கிழமை கடன்
ஏலத்தில் தோல்வி அடைந்த பின்னர்,
லிஸ்பன்
வெள்ளைக்கொடியை அசைத்தது.”
சமூக ஜனநாயக சோசலிஸ்ட் கட்சியின்
(PS) தலைவரான
சாக்ரடிஸ் மற்றும் முக்கிய எதிர்க் கட்சியான வலதுசாரி சமூக ஜனநாயகக் கட்சி
(PSD) இரண்டும் உடனே
வங்கிகளுக்கு கீழ்ப்பணிந்தனர்.
கோரப்படும் கடன்
எவ்வளவு என்று சாக்ரடிஸ் இன்னும் துல்லியமாக குறிப்பிடவில்லை,
ஆனால்
பகுப்பாய்வாளர்கள் இது
60 ல் இருந்து
80 பில்லியன்
யூரோக்கள் வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கின்றர்.
கிரேக்கம்,
அயர்லாந்திற்கு
கொடுக்கப்பட்ட கடன்களைப் போல் ஒரு புதிய
EU-IMF பிணை எடுப்பு
போர்த்துக்கல்லுக்கு என்பது வங்கிகள் மற்றும் பிற ஐரோப்பிய அராசங்கங்கள்
போர்த்துக்கல்லில் பெரும் சமூகநலச் செலவுக் குறைப்புக்கள் தேவை எனக் கோர வைக்கும்.
போர்த்துக்கல் அரசாங்கம் ஏற்கனவே பல தொடர்ச்சியான சிக்கன வரவு
செலவுத் திட்டங்களை இயற்றி பொதுத்துறை ஊதியங்கள் மற்றும் வேலைகளில் பரந்த
குறைப்புக்களை செய்துள்ளது.
நாட்டில்
உத்தியோகபூர்வ வேலையின்மை மிக உயர்ந்த அளவில்
11.2 சதவிகிதம்
என்று உள்ளது,
இதில் இளைஞர்களின்
சதவிகிதம் இரு மடங்கு ஆகும்.
இதைத்தவிர நாடு ஒரு
புதுப்பிக்கப்பட்ட மந்த நிலையை
2011ல் காணக்கூடும்
எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சிக்கன
நடவடிக்கைகளின் விளைவுகளினால் ஏற்படும் சமூகக் கொந்தளிப்பு தொடர்ச்சியான,
நீடித்த
ஆர்ப்பாட்டங்கள்,
எதிர்ப்புக்கள்,
வேலைநிறுத்தங்கள்
மற்றும் பொது வேலைநிறுத்தங்கள் என்று கடந்த ஆண்டில் நாட்டில் ஏற்படுத்தின.
வெகுஜன எதிர்ப்புக்களை எதிர்கொள்ளும் வகையில்
—இதில்
மார்ச் 12
அன்று
11 நகரங்களில்
நூறாயிரக்கணக்கான இளம் தொழிலாளர்களும் குடும்பங்களும் ஆர்ப்பாட்டம் நடத்தியதும்
அடங்கும்— PSD
தேவையான சிக்கன
நடவடிக்கைகளை செயல்படுத்தப் போதிய திறன் அற்றவர் எனக்கருதி,
அவருடைய சிறுபான்மை
அரசாங்கத்தை கவிழ்த்தது.
இப்பொழுது அவர் இரு
மாதங்களில் நடக்க இருக்கும் தேர்தல்கள் வரை ஒரு காபந்து அரசாங்கத்தின் தலைவராக
உள்ளார்.
EU-IMF
பிணையெடுப்பிற்கு ஆதரவு
தருவதற்கும் PSD
உடனடியாக விரைந்தது.
அதன்
அரசாங்கத்துடனான வேறுபாடுகள் உத்தியை ஒட்டித்தான் உள்ளவை என்பதைத்
தெளிவுபடுத்தியபின்,
PSD ஆனது,
PS போலவே
பற்றாக்குறை இலக்குகளை செயல்படுத்த உறுதிபூண்டுள்ளது என்றும் வேறுபாடுகள்
விபரங்களில்தான் உள்ளன என்றும் கூறியது.
PSD தலைவர் பெட்ரோ
பாசோஸ் கொல்கோ ஒரு தேசிய ஐக்கிய அரசாங்கம் என்னும் கருத்தை முன்வைத்து,
அது
EU மற்றும்
IMF திட்டமிடும்
சிக்கன திட்டத்தை செயற்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இப்பொழுது மூன்று நாடுகள் என வந்தபின்,
அல்லது
EFSF குடையின் கீழ்
நுழைதல் என்னும் வழிவகையில் இருக்கையில்,
நிதியச் சந்தைகளும்
தரம் பிரிக்கும் அமைப்புக்களும் பெருகிய முறையில் தங்கள் கவனத்தை ஸ்பெயின் மீது
செலுத்துகின்றன.
ஸ்பெயினின் வங்கிகள்
போர்த்துக்கீசிய நிதிய முறையில் வெளிநாடுகள் கொண்டுள்ள மொத்த பங்கில் மூன்றில் ஒரு
பகுதியைக் கொண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
போர்த்துக்கல்லில்
நெருக்கடி ஆழப்படுகிறது என்றால்,
அது ஸ்பெயினின்
பொருளாதாரத்திலும் உடனடி விளைவை ஏற்படுத்தும்.
போர்த்துக்கல் பிணையெடுப்பின் உட்குறிப்புக்களை பற்றிக்
கருத்துக்கூறிய ப்ராவ்டா
(ஏப்ரல்
4) கட்டுரை ஒன்று,
“அடுத்தது ஸ்பெயினா?”
என்று வினாவை
எழுப்பி,
பின் தொடர்கிறது:
“ஸ்பெயினின்
பொருளாதாரத்தை காப்பாற்றுவதற்கான தொகை,
1.1 டிரில்லியன்
யூரோக்கள் ($1.56
டிரில்லியன்)
என்பது முந்தைய பிணை
எடுப்புக்களை மிகச்சிறியது போல் தோற்றுவித்து ஐரோப்பா முழுவதின் நிதி வலிமையைச்
சோதனைக்கு உட்படுத்தக்கூடும்.
உண்மை என்ன என்றால்
ஐரோப்பாவின் மற்ற பகுதிகளிடம் தேவையான ஆற்றல்,
பெரும் பிணை
எடுப்புக்களை கால வரையற்று ஒரே நேரத்தில் கொடுத்துத் தொடர்வதற்கு இல்லை என்பதாகும்.
ஸ்பெயினும்
சரிந்துவிடுகிறது என்றால்,
இது கண்டத்தின் மற்ற
நாடுகளுக்கும் பெரும் அழுத்தத்தை கொடுக்கும்.”
ஆனால் போர்த்துக்கலின் நிதியத் துயரங்கள் மற்றும் யூரோ
நெருக்கடியின் விரிவாக்கத்தால் ஸ்பெயினின் பொருளாதாரம் மட்டும்
அச்சுறுத்தப்படவில்லை.
இந்த வாரம்
பைனான்சியில்
எக்ஸ்பிரசில்
வந்துள்ள தகவல் ஒன்று ஜேர்மனிய வங்கிகள் யூரோப்பகுதி அரசாங்கக் கடன் பிரிவில் மிகப்
பெரிய தொகுப்பைக் கொண்டுள்ளன என்றும்,
இதில் மொத்த பத்திர
இருப்புக்கள் மட்டும்
46.5 பில்லியன்
யூரோக்கள் என்று கிரேக்கம்,
அயர்லாந்து,
போர்த்துக்கல்,
ஸ்பெயின்
ஆகியவற்றின் கூட்டுத் தொகை இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
ஜேர்மனிய வங்கிகள்
இதைத்தவிர 91
பில்லியன் யூரோக்களை
இந்நாடுகளின் வணிகத் துறைகளுக்குக் கொடுத்துள்ளது.
போர்த்துக்கல்லிற்கு ஒரு பிணை எடுப்பிற்கான விண்ணப்பம் என்பது பல
நலிந்த ஐரோப்பியப் பொருளாதாரங்களிலும் நெருக்கடி ஆழ்ந்துள்ளது எனப் புதிதாக
வந்துள்ள தகவலுடன் இணைந்துள்ளது.
ஏற்கனவே
தொடர்ச்சியான சிக்கன நடவடிக்கைகளை
EU-IMF ஆகியவற்றின்
ஆணையில் செயல்படுத்தியபின்,
கிரேக்கப்
பொருளாதாரம்,
போர்த்துக்கல்லை
போலவே,
மந்த நிலையில் உள்ளது.
அரசாங்கச் செலவுக்
குறைப்புக்களினால்,
நாட்டின் வரிவகை
வருமானங்கள் குறைந்து கொண்டிருக்கின்றன,
அதன் கடன்பளு
பெருகிக் கொண்டிருக்கிறது.
கடந்த ஆண்டு
கிரேக்கத்தின் மொத்த அரசாங்கக் கடன் மொத்த தேசிய உள்நாட்டு உற்பத்தியில்
148 சதவிகிதம் என
இருந்தது.
இக்கடன் இந்த ஆண்டு
GDP யில்
160 சதவிகிதம் என
உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெருகும் நிதிய நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில்,
கிரேக்க அரசாங்கம்
மற்றொரு சுற்று சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
இதையொட்டி அடுத்த
நான்கு ஆண்டுகளில்
25 பில்லியன்
யூரோக்கள் திரட்ட முடியும் என இலக்கு கொள்ளப்பட்டுள்ளது.
கிரேக்க அரசாங்கம்
அடிப்படை வரிகளை,
மதிப்புக்கூட்டு வரி
13ல் இருந்து
23 வரை உயர்த்துவது
சில தெரிவுசெய்யப்பட்ட பொருட்களுக்கு விதித்தல் என்பதையும் உள்ளடக்கியவையும்,
அரசாங்க ஊழியர்களின்
ஊதியத்தில் இன்னும் குறைப்பையும் செய்யத் திட்டமிட்டுள்ளது.
இச்சமீபத்திய
நடவடிக்கைகள் இன்னும்
50 மில்லியன்
யூரோக்களை திரட்டும் நோக்கம் கொண்ட அரசாங்கச் சொத்துக்களை தனியார் மயமாக்குதல்
என்னும் புதிய சுற்று நடவடிக்கைகளைத் தவிர நடத்தப்படுபவை ஆகும்.
கிரேக்க அரசாங்கம் அதன் கடன் சுமையை,
பெரும் சிக்கன
நடவடிக்கைகளை செயல்படுத்தியும்,
குறைப்பதில்
கண்டுள்ள தோல்வி நாடு பழையபடி புதிய
EFSF கடனுக்கு
விண்ணப்பிக்கும் அல்லது அதன் கடன்களை மறுசீரமைக்கும் என்ற புதிய ஊகங்களுக்கு
வழிவகுத்துள்ளது.
இதன் விளைவாக
ஐரோப்பிய வங்கி முறையும் பெரும் அழுத்தத்திற்கு உட்படும்.
இதற்கிடையில்,
“அழுத்தச் சோதனைகள்”
அயர்லாந்து
வங்கிகளின் நிதியப் பிரச்சினைகள் முன்பு நினைத்ததைவிட மோசமாக்கிவிட்டன என்பதைத்தான்
காட்டுகின்றன.
இதுவரை அரசாங்கம்
46 பில்லியன்
யூரோக்களை அயர்லாந்து வங்கிமுறை என்னும் இருட்டறையில் மூழ்கடித்துள்ளது.
இப்பொழுது
பகுப்பாய்வாளர்கள் இன்னும்
24 பில்லியன்
யூரோக்கள் நான்கு முக்கிய அயர்லாந்து வங்கிகள் தவிர்க்க முடியாத திவாலிருந்து
காப்பாற்றப்படத் தேவை என்று கூறுகின்றனர்.
இது மொத்தமாக
அயர்லாந்து வங்கிமுறைக்கு மாற்றப்பட்ட தொகை
70 பில்லியன்
யூரோக்கள் எனப் போகும்,
இது நாட்டின் ஆண்டு
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட
45 சதவிகிதம் ஆகும்.
புதிய பிணை
எடுப்பிற்கான ரொக்கம் தொழிலாளர்களுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள தேசிய ஓய்வூதிய
இருப்பு நிதியில் இருந்து எடுத்துக் கொள்ளப்படும்.
இந்தப் பின்னணியில்தான்,
நெருக்கடி
கட்டுமீறிச் செல்லும் நிலையில்தான்,
ஐரோப்பிய மத்திய
வங்கி வியாழனன்று அதன் அடிப்படை வட்டி விகிதத்தை
1சதவிகிதத்தில்
இருந்து 1.25
சதவிகிதம் என
உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
இந்த வங்கிவிகித உயர்வு சிறியது,
ஆனால்
முக்கியத்துவம் வாய்ந்தது.
அனைத்து முக்கிய
மத்திய வங்கிகளைப் போலவே
ECB யும்
2009ல் இருந்து
கிட்டத்தட்ட பூஜ்யம் என்ற வட்டி விகிதத்தில் கடன்களைக் கொடுத்திருந்தது.
இது
2008 நிதிய
நெருக்கடிக்குப் பின் நடைபெற்றது.
உலகெங்கிலும் மிகக்
குறைந்த அளவில் மத்திய வங்கிகள் வட்டிவிகிதத்தைக் கொண்டது முதலீட்டாளர்கள் மற்றும்
நிதிய நிறுவனங்களை தங்கள் நிதியங்களில் இருப்பை அதிகரித்துக்கொள்ளவும் புதிய சுற்று
ஊக வணிகம் நடத்தவும் உதவின.
ஐரோப்பிய மத்திய வங்கி நெருக்கடியில் ஒரு முக்கிய பங்கை
வங்கிகளுக்கு கிட்டத்தட்ட வட்டியில்லாத கடனாக யூரோப் பகுதியில் கொடுத்த வகையில்
கொண்டிருந்தது.
அதே நேரத்தில்
கண்டத்தின் மோசமான பொருளாதாரங்களிலிருந்து பில்லியன் கணக்கில் மதிப்புடைய அரசாங்கப்
பத்திரங்களை வாங்கியது.
இரண்டு ஆண்டுகளாக
அச்சடித்து ஏராளமான தொகையை வங்கிகளில் உட்செலுத்திய வகையில்,
ECB இப்பொழுது
தவிர்க்க முடியாத பணவீக்கத்தை எதிர்கொள்ளுவதற்கு வட்டி விகிதங்களை அதிகரிக்கும்
நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது—இது
அரசாங்கங்கள் மீது தொழிலாளர்களின் கோரிக்கையான அதிக விலைக்கு இழப்பீட்டு ஊதிய
உயர்வு தேவை என்னும் கோரிக்கைகளை ஏற்க மறுப்பதற்கு அழுத்தம் கொடுக்கும்.
ஆனால்,
ECB யின் வட்டி
விகித உயர்வில் முக்கிய பாதிப்பாளர்கள் ஏற்கனவே தங்கள் கடன்களைக் கொடுக்கும் திறன்
இல்லாமல் நலிவுற்றிருக்கும் சுற்றியுள்ள நாடுகள் ஆகும்.
நிதியப்
பகுப்பாய்வின்படி
ECB யின் மூலோபாயம்
அதன் வட்டி விகிதத்தைப் படிப்படியாக உயர்த்தி இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்தம்
1 சதவிகிதம்
அதிகப்படுத்துவது என்பதாகும்.
Jeffries International
ஐச் சேர்ந்த
Marchel Alexandrovich, ECB
இன் விகிதங்களில் ஒரு
சதவிகித அதிகரிப்பு என்பது யூரோப்பகுதி குடும்பங்கள் முழுவதிலும் வீட்டுக் கடன்
வட்டி கொடுத்தலில் சராசரியாக
7 சதவிகிதம்
அதிகப்படுத்தும் என்று கூறியுள்ளார்.
ஆனால் இதன் பொருள்
கடன் சேவைகளுக்கு திருப்பிக் கொடுத்தலில்
30 சதவிகிதம்
அதிகரிப்பு போர்த்துக்கல்,
பின்லாந்து வீட்டுக்
கடன்களிலும்,
அயர்லாந்தில்
15 சதவிகித
அதிகரிப்பு மற்றும் ஸ்பெயின்,
இத்தாலியில்
10 சதவிகித
அதிகரிப்பு என்றும் ஏற்படும்—அதாவது
போராடிக் கொண்டிருக்கும் பொருளாதாரங்களிலுள்ள குடும்பங்களில் ஒரு பெரும் புதிய சுமை
ஏற்படுத்தப்படும்.
கடந்த வாரம் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நடந்த விவாதம் ஒன்றில்,
ஐரோப்பிய ஆணையத்தின்
தலைவர் ஜோஸ் மானுவல் பாரசோ தான்
“வடக்கு-தெற்கு,
மையம்-அதையொட்டிய
பகுதி என்ற பிரிவினைகளால் ஐரோப்பா பிளவுறக்கூடாது என விரும்புவதாக”
அறிவித்தார்.
ஆனால் இத்தகைய
பிளவுகள் வங்கிகள் சார்பாக
EU, IMF, ECP
மற்றும் ஐரோப்பிய ஆணையத்தால் தொடரப்படும் கொள்கைகளின் தவிர்க்க முடியாத விளைவு
ஆகும்.
இவை பொருளாதாரங்களைக்
கண்டம் முழுவதும் திவாலாக்கிவிடும்.
இத்தகைய
நடவடிக்கைகள் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே அழுத்தங்களை அதிகரித்து மில்லியின்
கணக்கான தொழிலாளர்கள்,
அவர்கள்
குடும்பங்களையும் வறிய நிலைக்குத் தள்ளும். |