WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
ஐவரி கோஸ்ட் உள்நாட்டுப் போரில் பிரான்ஸ் தலையிடுகிறது
By
Ann Talbot
7 April 2011
கடந்த
24 மணி நேரத்தில்,
தன் முன்னாள் காலனி
மீது தன் கட்டுப்பாட்டை மீண்டும் உறுதிபடுத்த முற்படும் வகையில் ஐவரி கோஸ்ட்டில்
நடைபெறும் மோதல்களில் பிரான்ஸ் நேரடியாகத் தலையிட்டுள்ளது.
பிரெஞ்சு
ஹெலிகாப்டர்கள் ஜனாதிபதி லாரென்ட் க்பக்போவிற்கு விசுவாசமான படைகள் மீது செவ்வாய்
மாலை குண்டு வீசின.
புதன் பிற்பகலில்
போட்டியாக ஜனாதிபதிப் பதவியை கோரும்
Alassane Ouattara
விற்கு
விசுவாசமாகவுள்ள தரைப் படைகள் ஜனாதிபதியின் இருப்பிடத்தின் மீது தாக்குதல்களை
கட்டவிழ்த்துவிட்டன.
இருந்தபோதிலும்கூட,
நேற்று இரவு முடிய
Alassane
Ouattara வின்
துருப்புக்கள் க்பக்போ பதுங்கியுள்ளார் என்று கருதப்பட்ட நிலவறைகளின் மீது நடத்திய
தாக்குதல்களில் தோல்வி அடைந்தபின்,
பின்வாங்கின.
ஐவரி
கோஸ்ட்டில் நீண்டகாலமாக க்பக்போவின் விசுவாசிகளுக்கும்
Alassane
Ouattara வின்
வடக்கு பகுதிப் படைகளுக்கும் இடையே பூசலுக்கு உட்பட்டுவிட்ட நவம்பர்
28 ஜனாதிபதித்
தேர்தலுக்குப் பின் மோதல்கள் தொடர்கின்றன.
பிரான்ஸும் நேட்டோ
சக்திகளும்
Alassane Ouattara
வைத்தான் தேர்தலில் வெற்றிபெற்றவர் என்று அங்கீகரித்துள்ளன.
பிரெஞ்சு
பிரதிநிதிகள் செவ்வாய் இரவு முழுவதும் மற்றும் புதன் காலையிலும் க்பக்போவிடம்
பேச்சுக்களை நடத்தினர்.
இறுதியில்
பிற்பகலில் பேச்சுக்கள் முறிந்ததுடன்,
Alassane Ouattara
சார்புப் படைகள் ஜனாதிபதி வசிக்குமிடத்தின் மீது அவை தெளிவுபடுத்திய
“இறுதித் தாக்குதலை”
தொடக்கின.
தங்களுடைய நோக்கம்
அவரை பதுங்கு குழியில் இருந்து
“வெளியே
கொண்டுவருதல்”
என்று அவர்கள்
கூறினர்.
தூதரகப் பகுதிகளில் இருந்த
தூதரகங்களிலிருந்த சன்னல்கள் தகர்த்து வெளியே தள்ளப்பட்டதில் இருந்து போரின்
தீவிரம் உணரப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பீதியிலிருந்து அங்கு வசிப்பவர் ஒருவர் ராய்ட்டர்ஸிடம் தொலைபேசியில் கூறினார்:
“இங்கு மோதல்
கொடூரமாக உள்ளது.
வெடிச்சத்தங்களில்
பெரும் ஓசையினால் என்னுடைய கட்டிடம் அதிர்கிறது.
தானியங்கித்
துப்பாக்கி வெடிப்புக்கள் மற்றும் கனரக ஆயுதங்களின் முழக்கத்தையும் நாங்கள் கேட்க
முடிகிறது.
எல்லா இடங்களிலும்
துப்பாக்கிச் சத்தங்கள் ஒலிக்கின்றன.
எல்லாத் திசைகளிலும்
கார்கள் விரைந்து செல்கின்றன.
அதேபோல்தான் போர்
செய்பவர்களும் விரைகின்றனர்.”
போரில்
பிரெஞ்சுப் படைகள் பங்கு கொண்டுள்ளன என்பதை இராணுவச் செய்தித் தொடர்பாளர் ஒருவர்
மறுத்தார்.
ஆனால் அப்பகுதியில்
வசிப்பவர்கள் தெருக்களில் பிரெஞ்சு டாங்குகளைப் பார்த்ததாகக் கூறுகின்றனர்.
ஐ.நா.
ஹெலிகாப்டர்கள் போர்
வலுத்தபோது ஜனாதிபதி வசிப்பிடம் மீது பறந்தது பார்க்கப்பட்டது.
பல மைல்
தூரத்திலிருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் கூட நான்கு மில்லியன் மக்களைக்
கொண்ட அபிட்ஜன் நகரை பெரும் வெடிப்புக்கள் அதிர்விற்கு உட்படுத்தியுள்ளதைக்
காட்டுகின்றன.
புகைப்படக்கருவியைக்
கடந்து ஏவுகணைகள் பறப்பதைக் காணமுடியும்.
இது ஒரு
வெடிமருந்துகள் கிடங்கு தாக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
படையினரின்
முகாம்களுக்கு அருகே சேதத்தின்
அளவு
இன்னமும்
முழுமையாகத் தெரியவில்லை.
ஆனால் அங்கு
வசிப்பவர் ஒருவர் ஏவுகணை ஒரு வீட்டின் கூரை வழியே நுழைந்து மூன்று பேரைக் கொன்றது
என்று தகவல் கொடுத்துள்ளார்.
ஐவரி
கோஸ்ட்டிலுள்ள ஐ.நா.
குழுவின்
(UNOCI) தலைவர்
ஹமடௌன் டூர் BBC
யின்
Today
நிகழ்வில்
புதன் காலையில் அவர் பேசியபோது,
ஏற்கனவே இத்தகைய
பெரும் சோகத்தை எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்டிருந்தது என்றார்.
“மிக,
மிக விரைவில் நாம்
இதற்கு ஒரு தீர்வைக் காண்போம் என நம்புகிறோம்,
அதுதான்
இந்நிகழ்வுகளின் முடிவாக இருக்கும்”
என்றார் அவர்.
பிரெஞ்சுப்
படைகளை சேர்ந்த
Edouard Guillaud
இதேபோன்ற கருத்தைப் பின்னர்
தெரிவித்தார்.
Europe 1 Radio
விடம் க்பக்போ விரைவில் வெளியேறிவிடுவார் என்று அவர் கூறினார்.
“நான் அதை
நம்புகிறேன்,
ஒரு சில மணி
நேரத்திற்குள்,
ஒருவேளை இன்றைக்குள்.”
பிரெஞ்சு
வெளியுறவு மந்திரி அலன் யூப்பே ராய்ட்டர்ஸிடம் கூறினார்:
“நேற்று லாரென்ட்
க்பக்போவின் கோஷ்டிக்கும் ஐவரியன் அதிகாரிகளுக்கும் இடையே பல மணி நேரம் நடத்தப்பட்ட
பேச்சுக்கள் முறிந்துபோயின,
இதற்குக் காரணம்
க்பக்போவின் பிடிவாதக் குணம்தான்.”
க்பக்போ,
ஐவரி கோஸ்ட்டில்
தான் நீடித்திருக்க அனுமதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது,
அதே போல் ஐ.நா.வின்
பாதுகாப்பும் அவருக்கு அளிக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.
நவம்பர் தேர்தலில்
கிட்டத்தட்ட பாதி வாக்குகளை க்பக்போ பெற்றாலும்கூட,
சர்வதேச
நோக்கர்களின் கருத்துப்படி,
இக்கோரிக்கைகளுக்கு
பிரான்ஸ் உடன்படவில்லை என்பது வெளிப்படை.
பிரான்ஸின்
தலையீடு ஐவரி கோஸ்ட்டில் அதனுடைய பங்கு அருகே நின்று கவனித்து,
மக்களைத் தீங்கில்
இருந்து பாதுகாக்க முற்படுவதுதான் என்ற பிரெஞ்சு அரசாங்கத்தின் கூற்றுக்களை
அனைத்தையும் சிதைத்துவிட்டது.
மாறாக அது அமெரிக்க
அரசாங்கத்தின் ஆதரவுடன் மேற்கத்தைய ஏகாதிபத்திய சக்திகளின் நலன்களை ஐவரி
கோஸ்ட்டிலும் சர்வதேச அளவிலும் வன்முறையைப் பயன்படுத்தி உறுதியாக்கிக் கொள்ளும்
வகையில் செயல்படுகிறது.
ஐவரி
கோஸ்ட்டில் பிரான்ஸின் பங்கு வாஷிங்டனால் பாராட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பாராக்
ஒபாமா பிரெஞ்சு,
ஐ.நா.
படைகளின் பங்கை
வரவேற்று,
க்பக்போ பதவியிலிருந்து
இறங்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
“இந்த
வன்முறையை நிறுத்தவும்,
இன்னும் குருதி
கொட்டுதலைத் தடுக்கவும் முன்னாள் ஜனாதிபதி க்பக்போ உடனடியாகப் பதவியை விட்டு விலகி,
தன் சார்பில்
போராடுபவர்களையும் ஆயுதங்களைக் கீழே போடுமாறு இயக்க வேண்டும்”
என்றார் ஒபாமா.
“ஐ.நா.
சமாதானத்தை
பாதுகாப்பவர்கள் இங்கு புரியும் பங்கிற்கு நான் வலுவான ஆதரவு தருகிறேன்.
ஏனெனில் அவர்கள்
குடிமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்னும் கட்டளையை செயல்படுத்துகின்றனர்,
அந்தப்பணிக்கு ஆதரவு
தரும் பிரெஞ்சுப் படைகளின் முயற்சியையும் நான் வரவேற்கிறேன்.”
ஐவரி
கோஸ்ட்டில் மோதலின் தொடக்கத்திலிருந்தே பாரிஸும் வாஷிங்டனும்
Ouattara
வின் ஆதரவாளர்கள்
கணிசமான அளவில் குடிமக்களைப் படுகொலை செய்வதைப் பாராமல்தான் உள்ளனர்.
இதில் ஒரு
கிராமத்தில் மட்டும்
1,000 பேர்
கொல்லப்பட்டனர்.
(See, “Civilians
massacred by Western-backed forces in Ivory Coast”)
இதுதான்
ஆபிரிக்காவில் பிரெஞ்சு இராணுவவாத
வெடிப்பின் ஒரு
பரந்த தன்மையின் பகுதி ஆகும்.
ஜனாதிபதி நிக்கோலா
சார்க்கோசி லிபியாவில் ஒரு பறக்கக்கூடாத பகுதி நிறுவுவதற்கான கோரிக்கைகளுக்குத்
தலைமை தாங்கினார்.
இடைக்கால தேசிய சபை
என்ற பெங்காசியைத் தளமாகக் கொண்ட பிரிவிற்கு பிரான்ஸ்தான் முதலில் அங்கீகாரம்
கொடுத்தது.
இது ஐவரி கோஸ்ட்டை
பொறுத்தவரை ஒரு வடிவமைப்பை பிரான்ஸிற்குக் கொடுத்துள்ளது.
பிரான்ஸும்
நைஜீரியாவும் ஐ.நா.
தீர்மானம்
1975 ஐ இயற்றின.
இது
UNOCI க்கு
குடிமக்களைப் பாதுகாக்கும் கட்டளையைக் கொடுத்தது.
லிபிய இராணுவ நிலைகள் மீது நேட்டோ ஜெட்டுக்கள் தாக்க அனுமதித்த
தீர்மானத்தின் தன்மையை ஒட்டியே இத்தீர்மானமும் இயற்றப்பட்டுள்ளது
ஐவரி கோஸ்ட்
தீர்மானம் இயற்றப்பட்ட சில நாட்களுக்குள்ளேயே,
பிரான்ஸும்
UNOCI ஐயும்
அபிட்ஜானில் செயல்படத் தொடங்கின.
அவை அரண்மனை மற்றும்
ஜனாதிபதி வசிப்பிடத்தின் மீது குண்டு போட்டன.
செவ்வாயன்று அகுடோ
மற்றும் அக்பன் இராணுவ முகாம்களின் மீதும் குண்டு வீசின.
தங்களுடைய
நடவடிக்கைகளை நியாப்படுத்தும் வகையில் அவர் க்பக்போ சார்புப் படைகள் கனரக பீரங்கியை
குடிமக்களுக்கு எதிராகப் பயன்படுத்தின என்று கூறின.
ஐ.நா.
தீர்மானம்
பிரான்ஸிற்கு தாக்குதல் நடத்த இசைவு கொடுக்கவில்லை.
ஆனால் ஐ.நா.
தலைமைச் செயலர் பான்
கி-மூன்
சார்க்கோசிக்கு பிரெஞ்சு உதவியை நாடிக் கடிதம் எழுதினார்:
“குடிமக்கள் மற்றும்
அமைதியை பாதுகாப்பவர்களுக்கு எதிராக கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதை நிறுத்தும்
வகையில் தேவையான இராணுவ நடவடிக்கைகளை தொடக்குவது உடனடியாகத் தேவை.”
க்பக்போ
கடந்த காலத்தில் பாரிஸுடன் நெருக்கமாக ஒத்துழைத்துள்ளார்.
அவர் அதிகாரத்தைத்
தக்க வைத்துக் கொள்ள இனவெறி மற்றும் வகுப்புவாத விரோதப் போக்குகளைத் தூண்டியுள்ளார்.
அண்டை நாடான
புர்கினா பாசாவில் இருந்து
1960 கள் மற்றும்
1970
களில் குடியேறியிருந்த
தொழிலாளர்கள் மீது இலக்கு கொண்டு அவர்களை சரியும் பொருளாதாரத்திற்கு பலிகடாக்கள்
ஆக்க முற்பட்டார்.
இதுதான்
Ouattara
வுடன் நீடித்த பூசலுக்குத்
தளமாயிற்று.
அவருடைய பெற்றார்கள்
ஐவரி கோஸ்ட்டில் பிறக்காதவர்கள் என்றும் கூறினார்.
அவர்
Ouattara வை
ஒதுக்கியிருந்தபோதிலும்கூட,
அந்த நேரத்தில்
பாரிஸ் க்பக்போவின் தேர்தலை அங்கீகரித்தது.
ஏனெனில் அப்பொழுது
பிரதம மந்திரியாக இருந்த லியோனல் ஜோஸ்பன் மற்றும் பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியுடன்
அவர் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்தார்.
ஆனால் அவர்
பிரெஞ்சு முயற்சியான அதிகாரப் பகிர்வு ஆட்சி சுமத்தப்படுதலை தடுக்க முற்பட்டவுடன்
பிரான்ஸுடனான க்பக்போவின் உறவுகள் சரியத் தொடங்கின.
அப்பகிர்வில்
வடக்குப் பகுதியினர் உள்நாட்டுப் போரை நிறுத்த வேண்டும் என்பதும் அடங்கியிருந்தது.
க்பக்போ
2004ல் ஒரு போர்
நிறுத்த ஒப்பந்தத்தை மீறி வடக்குப் பகுதியின் மீது இராணுவத் தாக்குதல் ஒன்றைத்
தொடக்கினார்.
இதில் ஒரு
பிரெஞ்சுத் தளமும் தாக்கப்பட்டது.
இதை எதிர்கொள்ளும்
வகையில் முழு ஐவரிய விமானப் படையையும் பாரிஸ் அழித்துவிட்டது.
இந்த
நடவடிக்கைக்கு எதிராக அபிட்ஜனில் தெருக்களுக்கு மக்கள் வந்து ஆர்ப்பரித்தபோது,
பிரெஞ்சு
ஹெலிகாப்டர்கள் கண்ணீர்ப் புகைக்குண்டு,
தொகுப்பு கையெறி
குண்டுகள் ஆகியவற்றை வீசினர்.
கவச வாகனங்கள்
பாலங்களில் நிலை கொண்டன.
அவற்றின் கீழே
ஆயுதப் படகுகள் ஆற்றில் ரோந்து போயின.
இந்த
நிலைமையில் பிரான்ஸ் திமிர்பிடித்த வகையில் தன் அதிகாரத்தை உறுதிப்படுத்தியது தன்
முன்னாள் காலனியில் ஏகாதிபத்திய அடக்குமுறையை அது தொடர்வதை அடிக்கோடிட்டுக்
காட்டுகிறது.
ஐவரி கோஸ்ட்டானது
1960ல் மற்றய
பிரெஞ்சு மேற்கு ஆபிரிக்காவுடன் முறையாக விடுதலை அளிக்கப்பட்டது.
ஆனால் பிரான்ஸ்
எப்பொழுதும் ஐவரி கோஸ்ட்டில்
1961ல்
கையெழுத்திடப்பட்ட ஒரு இராணுவ உடன்பாட்டின் விதிகளையொட்டி துருப்புக்களை
நிலைநிறுத்தியிருந்தது. |