WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
:
லிபியா
Divisions among imperialist powers deepen over conduct of Libyan offensive
லிபியா
மீதான தாக்குதல் முறை பற்றி ஏகாதிபத்திய சக்திகளிடையே பிளவுகள்
By Chris
Marsden
7 April 2011
லிபியா மீது
வான்வழித் தாக்குதலில் பங்கு பெறுவதில்லை என்னும் வாஷிங்டனின் முடிவு பெரிய
சக்திகளுக்கு இடையே அழுத்தங்களை அதிகப்படுத்தியுள்ளது.
குறிப்பாக
அமெரிக்காவிற்கும்,
பிரான்ஸிற்கும்
இடையே.
அமெரிக்கா
அதன் கிட்டத்தட்ட
40 போர் ஜெட்டுக்களை
திங்களன்று திரும்பப் பெற்றதுடன்,
11 ஜெட்டுக்களை
மட்டுமே தேவைக்கு வைத்துவிட்டு,
ஆகாயத்தில்
எரிபொருள் நிரப்புதல் போன்ற ஆதரவு நடவடிக்கைகளுக்கு நேட்டோவால் கேட்டுக்
கொள்ளப்பட்டால்,
தொடர்ந்து ஆதரவு
கொடுப்பதாக அறிவித்துள்ளது.
மார்ச்
31ம் திகதி
நேட்டோவானது லிபிய இராணுவ நடவடிக்கையின் பொறுப்பை எடுத்துக் கொண்டது.
ஆனால் இது ஒருபுறம்
பிரான்ஸ்,
மறுபுறம் அமெரிக்கா,
துருக்கி,
பிரிட்டன்
ஆகியவற்றிற்கு இடையே ஒரு பூசல் நிகழ்ந்தபின்தான் ஏற்பட்டது.
பிரான்ஸானது
நடவடிக்கைகள் இன்னும் முறைசாரக்குழு ஒன்றினால் போரில் பங்கு பெறும் அரசுகள்
அனைத்தில் இருந்தும் உறுப்பினர்களைக் கொண்டதின் மூலம் நடத்தப்பட வேண்டும் என
விரும்பியது.
ஆனால் அமெரிக்கா
பிரான்ஸிற்கு நடவடிக்கை கட்டுப்பாடு இருக்கும் எத்தகைய நடவடிக்கையும் நிராகரித்து
விட்டது.
ஒரு அமெரிக்கத் தூதர்
நேட்டோவிற்குக் கட்டுப்பாட்டை மாற்றியது
“வாஷிங்டனுக்கு இது
தாக்குதல் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க பங்கு இராது”
என்பதைக்
குறிக்கிறது எனத் தெளிவாக்கினார்.
இந்த உறுதிமொழி சில
நாட்களுக்குளேயே நன்கு தெரிந்துவிட்டது.
அமெரிக்கா
பின்வாங்கிவிட்டது,
இராணுவத் தாக்குதல்
மற்றும் அதனுடன் இணைந்த செலவுகளில் கூடுதல் பங்கு ஐரோப்பிய சக்திகளுக்கு இருக்கும்
எனப் பொறுப்பாக்கிவிட்டது.
அமெரிக்க
நடவடிக்கைக்கு விடையிறுக்கும் வகையில் நான்கு கூடுதல் டோர்னாடோக்களைத் திங்களன்று
பிரிட்டன் அனுப்பி வைத்துள்ளது.
ஒரு நேட்டோ அதிகாரி,
“இன்னும் கூடுதலான
தாக்குதல் சொத்துக்கள் தேவை,
அப்பிரச்சினை
தீர்க்கப்பட உள்ளது.
பிரிட்டன்
எண்ணிக்கையை அதிகம் உயர்த்தும் வகையில்
4 டோர்னாடோக்களை
அனுப்பியுள்ளது.
ஆனால் நமக்கு
இன்னும் அதிகம் தேவை”
என்று
குறிப்பிட்டுள்ளார்.
நேட்டோ
செய்தித் தொடர்பாளர் கார்மன் ரோமரோ
Agence France-Presse
இடம் புதன்கிழமையன்று
நடவடிக்கைகள் கடந்த வாரம் நேட்டோ கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டதிலிருந்து
“அதே சீராக
தொடர்கிறது”
என்றார்.
ஆனால் ஐரோப்பிய
சக்திகளிடையே வாஷிங்டன் நடவடிக்கையில் இருந்து விலகியதால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை
நிரப்புவதற்குப் போதுமான திறன் இல்லை என்ற எச்சரிக்கைகளுக்கு இடையே இந்தக் கருத்து
விவாதத்திற்கு உட்பட்டுள்ளது.
ஒன்பது
நாடுகள்
72 தாக்கும்
விமானங்களை தரையிலுள்ள இலக்குகளுக்கு எதிராகத் தாக்குதல்கள் நடத்துவதற்கு
தேவையானவற்றிற்காக சேகரித்து வருகின்றன.
இவற்றில்
பிரான்ஸிலிருந்து
18,
பிரிட்டனிடமிருந்து
10, கனடாவிலிருந்து
7, ஐக்கிய அரபு
எமிரேட்டுகளிடமிருந்து
6 என உள்ளன.
இந்தப் போர்
நடவடிக்கையில் பிரான்ஸ்தான் இரண்டாவது பெரிய சக்தி என்று
கார்டியன்
சுட்டிக்காட்டியுள்ளது.
அது சார்ல்ஸ் டு
கோல் விமானத் தாங்கிக் கப்பல்,
இரு போர்க்
கப்பல்கள், 16
போர் விமானங்கள்
என்று மொத்தமாக
33 விமானங்களை
அனுப்பியுள்ளது.
ஆனால் திங்களன்று
அமெரிக்கா நிலை மாற்றத்தைக் கொள்ளும் வரை,
“அமெரிக்கர்கள்தான்
பெரும்பாலான தாக்குதல்களை தரை இலக்குகள் மீது நடத்தினர்.
பிரெஞ்சுப் படைகள்
ஒரு கால்ப்பகுதி தாக்குதலையும் பிரிட்டிஷார் பத்தில் ஒரு பகுதித் தாக்குதலிலும்
ஈடுபட்டனர்.
அமெரிக்கா
பின்வாங்கிவிட்ட நிலையில்,
நேட்டோ இடைவெளியை
இட்டு நிரப்ப உள்ளது,
ஆனால்
பிரிட்டிஷார்தான் கூடுதலாகக் கொடுக்க உறுதியளித்துள்ளனர்.”
கார்டியன்
குறிப்பிட்டுள்ள
அழுத்தங்களின் கூடுதல் அடையாளம் ஒன்றில்
“அமெரிக்கா மற்றும்
பிரான்ஸ் என இதுவரை பெரிய அளவில் இராணுவத் தாக்குதல் நடத்தியவை,
மத்தியதரைக்கடல்
பகுதியில் கணிசமான இராணுவப் படைகள் மீது தேசியக் கட்டுப்பாட்டை கொண்டவை நேட்டோ
அதிகாரத்திற்கு பணிந்து போக மறுத்துவருவதுடன்….
நேட்டோ கூட்டணித்
தலைமையை எடுத்துக் கொண்டபோது,
அனைத்து வான்
தாக்குதல்கள் மீதும்
“ஒரே முழுமையான
கட்டுப்பாட்டை”
அது ஏற்றுவிட்டதாக
வலியுறுத்தப்பட்டது.
ஆனால் நேட்டோ
கட்டுப்பாட்டிற்கு உட்பட்டும்,
வெளியேறியும்
செல்லும் நாடுகள்,
அவற்றின்
“வான் சொத்துக்களை”
மீண்டும்
கூட்டணியின் கட்டுப்பாட்டிற்குள் அவற்றை கொடுப்பதற்கு முன்னதாக,
தேசிய
நடவடிக்கைகளுக்காக திரும்பப் பெறுகின்றன.”
பைனான்சியல்
டைம்ஸின்
ஒரு மூத்த பிரிட்டிஷ்
பாதுகாப்பு அதிகாரி
“பலரும் இதை
அட்லான்டிக்கின் மறுபுறத்திலிருந்து ஐரோப்பியர்கள் தங்களுடைய நடவடிக்கைகளில்
இணைந்து செயல்பட வேண்டும் என்பதற்கான காலம் வந்துவிட்டது என்பது குறித்த மிக
நேரடியான சமிக்ஞை என்று விளக்கம் காண்கின்றனர்”
எனக்கூறியதாக
மேற்கோளிட்டுள்ளது.
“அட்லான்டிக்
கடந்த உறவுகள் இப்பொழுது அமெரிக்காவானது லிபியாவில் இராணுவக் குறிக்கோளுக்கு
அமெரிக்கா தலைமை தாங்க மறுப்பதால் சோதனைக்கு உட்பட்டுள்ளன.
பெருங்கடலுக்கு
இருபுறமுள்ள தலைவர்கள் மோதலை ஐரோப்பிய இராணுவ மற்றய அரசியல் ஸ்தாபனங்களுக்கு ஒரு
தட்டியெழுப்பும் குரல் என்று சித்திரிக்கின்றனர்”
என
FT கருத்துத்
தெரிவித்துள்ளது.
“லிபியாவில்
நாம் பார்த்துள்ளது மிகப் பெரிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது”
என்று முன்னாள்
தொழிற்கட்சி பாதுகாப்பு மந்திரியாக இருந்த ஹட்டன் பிரபு கூறியுள்ளார்.
“அமெரிக்கா
10 மற்றும்
15 ஆண்டுகளாக அது
ஐரோப்பியர்கள் பாதுகாப்புச் சுமையை கூடுதலாக பகிர்ந்து கொள்ள வேண்டும் எனத்தான்
விரும்புவதாகக் கூறிவருகிறது,
நாம் அந்தப்
படிப்பினையை ஏற்க வேண்டும்.”
அமெரிக்க
நிலைப்பாடு ஐரோப்பிய சக்திகளுக்கு இடையே விரோதங்களை அதிகப்படுத்த உதவியுள்ளது.
“பிரெஞ்சுக்காரர்கள்
ஜேர்மனியர்கள் மீது சீற்றம் கொண்டுள்ளனர்,
லிபியா மீது அவர்கள்
கொண்டுள்ள நிலைப்பாட்டையொட்டி”
என்று ஒரு
பிரிட்டிஷ் அதிகாரி
FT இடம் கூறினார்.
இப்பொழுது
பிரிட்டனானது லிபியாவில்
12 டோர்னாடோக்களை
பறக்க விட்டுள்ளது,
RAF 10 டைபூன்களை
பறக்கக் கூடாத பகுதியை செயல்படுத்த நிலைகொண்டுள்ளது.
ரோயல் ஏயர் போர்ஸின்
தலைவரான ஏர் சீப் மார்ஷல் ஸ்டீபன் டால்ட்ன்
கார்டியனிடம்
பிரிட்டிஷ் போர் விமானங்கள் குறைந்தபட்சம் ஆறு மதாங்களுக்கேனும் லிபியா மீது
பறக்கக்கூடாத பகுதியைச் செயல்படுத்துவதில் பங்கு பெறும் என்று கூறினார்.
லண்டனிலிருந்து விரைவான எதிர்கொள்ளல் வந்துள்ளது எந்த அளவிற்கு பிரிட்டனின் ஆளும்
உயரடுக்கு அமெரிக்காவுடன் நல்ல உறவுகளைத் தக்க வைத்துக்கொள்ள விழைகிறது என்பதை
நிரூபிக்கிறது.
கன்சர்வேடிவ்/லிபரல்
டெமக்ராட் அரசாங்கம் தான் இன்னும் கூடுதல் செயலாற்றத் தயார் என்பதை
தெளிவாக்கியுள்ளது.
ஆனால் அது மற்றய
ஐரோப்பிய சக்திகளுக்கும் சுமையில் கூடுதல் பங்கு பெறுவதற்கு ஊக்கம் கொடுக்குமாறு
கோரப்பட்டுள்ளது.
பாதுகாப்பு
மந்திரி லியம் பாக்ஸ் ஐரோப்பிய பாதுகாப்பு மந்திரிகளை கூடுதல் விமானங்கள் அனுப்பக்
கோரியுள்ளார்.
Telegraph
இடம் ஒரு ஆதாரம் பாதுகாப்பு அமைச்சரகம் இன்னும் அதிக விமானங்களை அனுப்பத் தயார்—“தேவையானால்
அனைத்தையுமே,
மொத்தமாகவுள்ள
129 ஐயும்”
என்று கூறியது.
ஆனால்
“மற்றய நாடுகளில்
இருந்தும் இடைவெளியை இட்டு நிரப்ப விமானங்கள் அனுப்பப்பட வேண்டும்,
பிரான்ஸ் உட்பட”
என வலியுறுத்தியது.
பிரான்ஸ்
மற்றும் பிரிட்டன் தவிர,
ஐந்து மற்றய
நாடுகளும் இதுவரை குண்டுவீச்சுத் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளன—பெல்ஜியம்,
கனடா,
டென்மார்க்,
இத்தாலி மற்றும்
நோர்வே என—மொத்தத்தில்
30 விமானங்கள்
ஈடுபட்டுள்ளன.
AFP இடம் ஒரு
பிரெஞ்சு இராணுவ அதிகாரி கூறினார்,
“ஒவ்வொரு நட்பு
நாடும்,
குறிப்பாக சில
தாக்குதல்களில் பங்கு பெற்றவை,
இப்பொழுது வேகத்தை
அதிகரிக்க வேண்டும்.”
அமெரிக்க
நடவடிக்கையினால் பாரிஸ் தெளிவாக அழுத்தம் கொண்டுள்ளது.
குறிப்பாக இப்பொழுது
அது மூன்று நடப்பிலுள்ள போர்களில் ஈடுபட்டிருப்பதால்,
லிபியா,
ஆப்கானிஸ்தான்
மற்றும் ஐவரி கோஸ்ட்.
கூடுதல் விமானம்
பற்றிப் பிரான்ஸ் உறுதியளிக்கவில்லை என்றாலும்,
வெளியுறவு மந்திரி
அலன் யூப்பே அமெரிக்க நடவடிக்கையை எதிர்கொள்ளும் வகையில்,
கடாபி எதிர்ப்பு
எதிர்ப்பின் உறுதியான ஆதரவாளர் என்ற சந்தேகத்திற்குரிய கூற்றை,
நாட்டின் செயற்பாடு
மூலம் தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறார்.
நடவடிக்கைகளிலிருந்து போர் விமானங்களை திரும்பப் பெறுவது என்னும் அமெரிக்க முடிவை
அடுத்து,
எதிர்ப்பு படைகளின்
தளபதியான அப்டெல்படா யூனிஸ் நேட்டோத் தலைமையிலான விமானப்படைப் பிரிவு
“ஒவ்வொரு நாளும்
மிஸ்ரடா மக்கள் இறக்க அனுமதிக்கிறது”
என்று குற்றம்
சாட்டியுள்ளார்.
“நேட்டோ இன்னும் ஒரு
வாரம் காத்திருந்தால்,
மிஸ்ரடாவில் ஏதும்
மிஞ்சியிருக்காது”
என்று செவ்வாயன்று
அவர் கூறினார்.
இந்த
அறிக்கைக்கு நேட்டோ செய்தித் தொடர்பாளர் ரோமரோவிடமிருந்து கடுமையான விடை புதன்கிழமை
அன்று வெளிவந்தது:
“எங்களுக்குத்
தெளிவாக என்ன செய்ய வேண்டும் என்ற கட்டளை உள்ளது.
மிஸ்ரடா
குடிமக்களைக் காப்பதற்கு அனைத்தையும் செய்வோம்”.
மற்றொரு செய்தித்
தொடர்பாளர் ஓனா லுங்கேஸ்கு அல்
ஜசிராவிடம்”
“கடந்த ஆறு
நாட்களில் நாங்கள்
1,000 முறை
பறந்துள்ளோம்.
இவற்றில்
400க்கும்
மேற்பட்டவை தாக்குதலுக்காக நடந்த பறப்புக்கள் ஆகும்.”
நேற்று
நாங்கள்
155 முறை பறந்தோம்,
இன்று கிட்டத்தட்ட
200க்குத்
திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே எங்கள் பணியைத்
தீவிரமாக எடுத்துள்ளோம்.
உண்மையில்
மிஸ்ரடாவைச் சுற்றியுள்ள டாங்குகளைத் தாக்கிக் கொண்டிருக்கிறோம்,
ஆயுதங்கள் உடைய கவச
வாகனங்கள்,
விமானப் பாதுகாப்பு
முறைகள்,
மிஸ்ரடா,
லானுப்,
ப்ரெகா ஆகியவற்றைச்
சுற்றியுள்ள ராக்கட்
செலுத்தும் தளங்கள் ஆகியவற்றையும் இலக்கு கொண்டு தாக்கி வருகிறோம்.”
யூப்பேயும்
இக்குறைகூறலால் துவண்டார்.
பாதுகாப்பான
முறையில் அவர் கடாபியின் படைகளை குடிமக்கள்,
நட்புப்
படைகளிலிருந்து பிரித்து இனம் காண்பது அதிக கடினமாக உள்ளது என்றார்.
வான்தாக்குதல்கள்
பெரும்பாலான விமானங்கள் மற்றும் கவச வாகனங்களை அழித்துவிட்டன,
லிபியத்
துருப்புக்கள் இப்பொழுது சாதாரண லாரிகள்,
அதிக நவீனமில்லாத
ஆயுதங்களை எதிர்ப்பாளர்கள் வைத்துள்ளது போன்றவற்றை
உபயோகப்படுத்துகின்றனர் என்று பிரெஞ்சு வெளியுறவு மந்திரி வலியுறுத்தினார்.
“இராணுவ நிலைமை
களத்தில் குழப்பமாக,
உறுதியற்றதாக உள்ளது,
சூழப்பட்டுவிடும்
ஆபத்தும் உள்ளது.”
France
Info
வானொலியிடம் அவர்
இதைத் தொடர்ந்து,
“தொடரும் நிலையில்
இல்லாத தன்மையில் மிஸ்ரடா உள்ளது.
இதைப்பற்றி இன்னும்
சில மணி நேரத்தில் நேட்டோ தலைமைச் செயலரான ஆண்டர்ஸ் போக் ரஸ்முசனிடம் விவாதிக்க
உள்ளேன்.”
பிரான்ஸின்
பாதுகாப்பு மந்திரி
Gerard Longuet
முற்றுகையிலுள்ள மத்தியதரைக்கடல் நகரத்திற்கு பொருட்களை வழங்குவதற்கு ஒரு கடலோரப்
பாதை திறக்கப்படவுள்ளது என உறுதியளித்தார்.
“பெங்காசியிலிருந்து
(எதிர்ப்புக் கோட்டை)
உதவி கிடைக்கும்,
கடாபியின் இராணுவப்
படைகள் இதைத் தடுக்க முடியாது என்பதை நாங்கள் உறுதி செய்துவிடுவோம்”
என்றார் அவர்.
திரிப்போலிக்கு எதிரான தாக்குதல் நீடித்தால்,
இன்னும் கூடுதலான
நடவடிக்கைகளுக்கு யார் செலவு செய்வது என்பது பற்றி ஒளிவு இல்லாத தீவிர மோதல்கள்
தோன்றும்,
ஒரு புறத்தில் கூடுதலான
ஐக்கிய முயற்சி இருப்பதாகக் காட்டிக் கொண்டாலும்.
அதேபோல் யார்
போருக்குப் பிந்தையை லிபிய எண்ணெய் சொத்துக்களில் அதிக பங்கைப் பெறுவர் என்பதிலும்
பிளவுகள் இருக்கும்.
அமெரிக்காவிற்கு பாரிசின் விருப்பமான பெங்காசித் துருப்புக்களுக்கு ஆயுதம் அளித்தல்
என்பதின் மீது கணிசமான தயக்கங்கள் உள்ளன.
யூப்பே மார்ச்
29 அன்று லண்டனில்
வெளியுறவு மந்திரிகள் லிபியா பற்றிப் பேசியதையடுத்து இதை எழுப்பினார்.
ஆனால் வாஷிங்டன்
அவ்வாறு செய்வது,
அதுவும் எதிர்ப்பில்
அல் கெய்டா தொடர்பு உள்ளது என அறிந்துள்ள நிலையில்,
ஏற்கனவே இது மோதலைப்
பயன்படுத்தி ஆயுதங்களை தரையிலிருந்து வானுக்கு ஏவுகணைகள் உட்பட எடுத்துக்
கொண்டுள்ளது என்ற நிலையில் ஆபத்தானது எனக்கருதுகிறது.
அல்ஜீரியப்
பாதுகாப்பு அதிகாரி ஒருவர் ஏப்ரல்
5ம் தேதி ஏவுகணைகள்
வடக்கேயுள்ள மாலித் தளங்களுக்கு கடத்தப்படுவதாகவும் பயணிகள் விமானங்களை அவை இலக்கு
கொள்ளக்கூடும் என்றும் கூறியதாகப் பரந்த முறையில் மேற்கோளிடப்பட்டுள்ளது.
நேட்டோவின்
உயர்மட்டத் தளபதி அமெரிக்க அட்மரைல் ஜேம்ஸ் ஸ்டாவ்ரிடிஸ்,
முன்னதாக
உளவுத்துறைத் தகவல் லிபியாவில் அல் கெய்டா நிலைப்பாடு மின்மினி போல் உள்ளதாகக்
காட்டுகிறது என்றார்.
பாதுகாப்பு மந்திரி
ரோபர்ட் கேட்ஸ் மார்ச்
31ம் தேதி வரை
எதிர்ப்பாளர்களுக்கு ஆயுதம் வழங்குவதை ஏற்கவில்லை.
இது அவர் அமெரிக்க
செனட் மற்றும் மன்றத்தின் இராணுவக் குழுக்களில் நடந்த கூட்டத்தில் தெரிவித்தார்.
இதற்கு கூட்டுப்
படைகளின் தலைவரான அட்மைரல் மைக் முல்லெனுடைய ஆதரவும் இருந்தது.
நேட்டோவின்
தலைமைச் செயலர் ரஸ்முசென் ஸ்வீடனின் பிரதம மந்திரி பிரெட்ரிக் ரெயின்பெல்ட்டுடன்
பேசிய பின்னர் இதை ஏற்று,
“நேட்டோவைப்
பொறுத்தவரை,
நான் நேட்டோ
சார்பில் பேசுகிறேன்,
நாங்கள் ஆயுதத்
தடைகளைச் செயல்படுத்துவதில் குவிப்புக் காட்டுவோம்”
என்றார். |