World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

The resignation of Guido Westerwelle as Free Democratic Party chairman and German vice chancellor

கீடோ வெஸ்டர்வெல்லதாராளவாத ஜனநாயக கட்சித் தலைவர் மற்றும் ஜேர்மனிய பிரதி சான்ஸ்லர் பதவியில் இருந்து இராஜிநாமா

By Ulrich Rippert
6 April 2011

Back to screen version

பாடன் வூட்டம்பேர்க் மற்றும் ரைன்லாந்து பலரினேற் மாநிலத் தேர்தல்களில் பாரிய வாக்கு இழப்புக்களை அவர் கட்சி அடைந்ததை  அடுத்து, மார்ச் 3ம் திகதி தாராளவாத ஜனநாயகக் கட்சியின் (FDP) யின் தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதாக கீடோ வெஸ்டர்வெல்ல  அறிவித்தார். ஒரு நாளைக்குப்பின் அவர் ஜேர்மனிய பிரதி சான்ஸ்லர் பதவியையும் ராஜிநாமா செய்தார்.

தடையற்ற சந்தை FDP இப்பொழுது கூட்டாட்சிக் கூட்டணியில் பழைமைவாத யூனியன்கட்சிகளான CDU, CSU ஆகியவற்றுடன் உள்ளது.

சமீப நாட்களில் அவர்மீது வந்த பெரும் அழுத்தத்திற்கு வெஸ்டர்வெல்ல இவ்வகையில்  விடையிறுத்தார். சமீபத்திய மாநிலத் தேர்தல்களில் FDPயின் வியத்தகு வாக்கு இழப்புக்களுக்கு அவர் குறை கூறப்பட்டார்; இக்கட்சி சாக்சனி அன்ஹால்ட், பாடன் வூட்டம்பேர்க் மற்றும் ரைன்லாந்து பலரினேற்றின் பாதிக்கும் மேலான அதன் வாக்குகுளை இழந்தது. பாடன் வூட்டம்பேர்க்கில் மட்டும்தான் கட்சி ஐந்து சதவிகித வாக்கு என்னும் தடையைக் கடந்து மாநிலப் பாராளுமன்றத்தில் நுழைய முடிந்தது.

ஞாயிறன்று ஒரு சுருக்கமான செய்தியாளர் கூட்டத்தில் வெஸ்டர்வெல்ல தான் எடுத்த இராஜிநாமா முடிவு கடினமான விருப்பத் தேர்வு என்று அறிவித்தார். ஆனால் அதுஒரு சரியான முடிவு”, வெளியுறவு மந்திரி என்னும் அரசாங்கப் பதவியில் கவனம் செலுத்த இது அவரை அனுமதிக்கும் என்றார். அதே நேரத்தில் வெளியுறவு மந்திரி என்னும் வகையில் அவருடைய நாட்கள் கூட எண்ணப்பட்டுவிடும் என்பதற்கான அடையாளங்கள் பல உள்ளன; குறிப்பாக லிபியாவிற்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக்குழுவில் அவர் கலந்து கொள்ளததற்காக வெஸ்டர்வெல்ல பெரும் அழுத்தத்தை எதிர்கொள்ளுகிறார்.

தேர்தல்களில் வாக்குகள் இழப்பு மற்றும் ஜேர்மனிய வெளியறவுக் கொள்கை இரண்டுமே கவனத்துடன் ஆராயப்பட வேண்டும்.

2009 இலையுதிர்காலப் பொதுத் தேர்தலில், FDP வாக்குகளில் 14.6%ஐப் பெற்றது. இதுவரை அது பெற்ற வாக்குகளில் இது சிறப்பானது ஆகும். கட்சி SPD, CDU ஆகியவற்றின் பெரும் கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று விரும்பிய யூனியன் ஆதரவாளர்களிடம் இருந்து கணிசமான தந்திரோபாய ஆதரவைப் பெற்றது பாரிய கூட்டணி 2008 நிதிய நெருக்கடி, வங்கிப் பிணையெடுப்பைத் தொடர்ந்து தொழிலாளர் வர்க்கத்தின் மீது தேவையான தாக்குதல்களை நடத்தத் திறனற்றது என அவர்கள் அஞ்சியதால் இந்த ஆதரவு கொடுக்கப்பட்டது.

ஆனால் வெஸ்டர்வெல்லவின்கீழ் FDP விரைவில் ஆதரவை இழந்தது; ஐந்து சதவிகித தடையைக்கும் கீழேதான் பெற்றது. அவருடைய அரசியல் ஆதரவாளர்களுக்கு சலுகைகாட்டும் அப்பட்டமான கொள்கை, உல்லாச விடுதிகளை நடத்துபவர்களுக்குக் வரிகளை குறைத்தல் மற்றும் பிந்தைய ரோமானிய சீரழிவினரைப் போன்றவர்கள்என்று  திமிர்த்தனமாகச் சுட்டிக்காட்டி HartzIV பொதுநலன்களைப் பெறுவோர் மீதான அவரின் தாக்குதல்கள் ஆகியவை அத்தாக்குதலைத் தீவிரமாக நடத்த தொடங்குமுன் அரசாங்கத்திற்கு பரந்த எதிர்ப்பைத் தூண்டின.

வெஸ்டர்வெல்லவின் பொருட்படுத்தாத, திமிர்பிடித்த குணம் FDP பிரதிநிதித்துவப்படுத்தும் தீவிர தடையற்ற சந்தை நிலைப்பாடுகளுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளது. 1990 களில்வசதியுடையவர்களின் கட்சி என்று அறியப்பட்ட FDP  நிதியப் பிரபுத்துவத்தின் நலன்களைப் பிரதிபலிக்க முற்பட்டுள்ளது; இது இரக்கமின்றி அவர்களுடைய சலுகைகளை மக்களின் பெரும்பாலோரின் இழப்பில் பாதுகாக்க விரும்புகிறது.

1980 களின் ஆரம்பத்தில், FDP சமூக ஜனநாயகவாதிகளின் கூட்டணியில் இருந்து வலதுசாரி யூனியன் கட்சிகளுக்கு மாறிய போது வெஸ்டர்வெல்ல தன் அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். FDP மூத்த தலைவர் ஒட்டோ கிராவ் லம்ஸ்டோர்வ் அந்த நேரத்தில் கூட்டாட்சி நிதி மந்திரியாக இருத்தவர், “ஆன்மிக, மற்றும் அறநெறிப் புரட்சி தேவை என அழைப்புவிடுத்து, ஒரு செயற்பாட்டைச் சார்ந்த சந்தைப் பொருளாதாரத்தை நிறுவ முற்பட வேண்டும் என்றும் தொழிற்சங்கங்களின் மீது கட்டுப்பாடு வேண்டும் என்றும் கூறினார்.

1990 களில் வெஸ்டர்வெல்ல தன்னுடைய செல்வாக்கு மண்டலத்தை விரிவாக்கி சமூக ஏற்றம் காணவிரும்பும் வர்க்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஆனார்; இவர்களை ஒருகாலத்தில் இவர்தற்கால நகரும் திறன் படைத்த, வளைந்து கொடுக்கும் இளம், வெற்றிகர இளம் அடுக்கினர்என்று விவரித்திருந்தார். “புதிய பொருளாதாரம்ஏற்ற கண்டபோது இந்த அடுக்கினர் பங்குச்சந்தை ஏற்றத்தில் நலன்களைப் பெற்று அரசாங்கச் செலவுகள், பொதுநலச் செலவுகள் ஆகியவை சந்தைப் பொருளாதாரம், கூடுதல் இலாபங்கள் ஆகியவற்றிற்காகக் குறைக்கப்பட வேண்டும் என்றுகோரினர்அதன் தடையற்ற சந்தைத் திட்டத்தில் FDP செல்வந்தர்களுக்கும் தொழில்சார் நிபுணர்களுக்கும் வரிகள் குறைக்கப்பட வேண்டும் என்று கூறியது மந்திரம் போன்ற அந்தஸ்த்தை அடைந்தது.

எதிர்த்தரப்பில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இருந்தபின், FDP 2009 இலையுதிர்காலத்தில் அரசாங்கத்திற்கு திரும்பியது ஜேர்மனிய வணிகக் கூட்டமைப்பால் ஆர்வத்துடன் வரவேற்கப்பட்டது. நிறுவனங்களின் நிர்வாகக் குழுக்களில் மேர்க்கல்-வெஸ்ட்டவெல்ல கூட்டணி மிகச்சிறந்த அரசாங்கமாகச் செயல்படும் வாய்ப்பைக் கொண்டுள்ளது எனக் கொண்டாடப்பட்டது. ஆளும் உயரடுக்கு நெருக்கடியைப் பயன்படுத்தி இருக்கும் சமூகநலத் திட்டங்கள் அனைத்தையும் தகர்த்து, சமூகநலச் செலவுகளில் பெரும் வெட்டுக்களைச் சுமத்தவும் முற்பட்டது.

ஆனால், சந்தைப் பொருளாதாரத்தை பெருமைப்படுத்தியது, இடைவிடாமல் செல்வந்தர்களுக்கு வரிக்குறைப்பு என்ற கோரிக்கைகள், அதுவும் பொதுநலச் செலவுகள் தொடர்ந்து தாக்குதல் இருக்கும்போது, பெரும்பாலான தொழிலாளர் மக்களிடையே பெரும் எதிர்ப்பைச் சந்தித்தது. FDP பெருகிய முறையில் அழுத்தத்திற்கு உட்பட்டது. நிதியப் பிரபுத்துவம் தங்கள் கோரிக்கைகள் கடுமையாக செயல்படுத்தப்பட வேண்டும் எனக் கோரியபோது FDP வாக்குப்பதிவுகளில் பெரும் இழப்பைக் கண்டது.

FDP தலைவர் என்னும் பதவியை இராஜிநாமா செய்து வெளியுறவு மந்திரிப் பதவியைத் தக்க வைத்துக் கொள்ளலாம் என்னும் வெஸ்டர்வெல்லவின் முயற்சி தோல்வியைக் கண்டது. முக்கியமாக வெஸ்டர்வெல்ல பொறுப்பேற்கும் ஒரு கொள்கையான லிபியத் தீர்மானம் ஐ.நா.பாதுகாப்புக்குழுவில் வந்தபோது ஜேர்மனி வாக்களிப்பில் பங்கு பெறவில்லை என்பதால் அவர் வெளியுறவு மந்திரப் பதவியை இராஜிநாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் உரக்க எழுகின்றன.

ஜேர்மனி வாக்களிக்காதது பற்றிய குறைகூறல் சமீபத்திய நாட்களில் அதிகரித்து, செய்தி ஊடகத்தில் தலையங்கக் கருத்துக்களையும் வெளியிட வைத்தது. SPD மற்றும் பசுமைவாதிகளுடன் கூடி, பல அரசாங்க முகாமின் பிரதிநிதிகளும் வெஸ்டர்வெல்லவை தாக்க வரிசையில் நின்றனர்.

திங்கள் பிற்பகல் முன்னாள் உள்துறை மந்திரி ஹெகார்ட் பவும் [FDP]  வெஸ்டர்வெல்ல வெளியுறவு மந்திரிப் பதவியை இராஜிநாமா செய்ய வேண்டும் என்று கோரினார். “FDP யின் நம்பகத்தன்மைக்கு ஒரு புதிய துவக்கம் வெஸ்டர்வெல்லல இல்லாமல் இருந்தால்தான் முடியும் என்று அவர் Spiegel Online இடம் கூறினார். “கட்சி அவரை இனி விரும்பவில்லை, அதனால் ஒருவர் கட்சித் தலைமையில் இருந்து இராஜிநாமா செய்துள்ளார், ஆனால் அவர் வெளிநாட்டிற்கு தொடர்ந்து இந்நாட்டின் பிரதிநிதியாக இருப்பார் என்பதை மக்களுக்கு விளக்குவது கடினம்.” வெளியுறவு மந்திரி என்னும் முறையில் அவருடைய பங்கு நம்பகத்தன்மை கொண்டிருக்கவில்லை; குறிப்பாக ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் வாக்களிக்காமல் இருந்தது ஒரு தீவிர தவறாகும் என்று பவும் Spiegel Online இடம் கூறினார்.

ஆரம்பத்தில் வெஸ்டர்வெல்லவுக்கு அவருடைய நிலைப்பாட்டிற்காக சற்று ஆதரவு கிடைத்தது. சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் பாதுகாப்பு மந்திரி தோமஸ் டி மஷியர் (இருவரும் CDU), மற்றும் முன்னாள் வெளியுறவு மந்திரி பிராங்-வால்டர் ஸ்ரைன்மையர் (SPD), பழைமைவாத Frankfurter Allgermeine Zeitung பத்திரிகை அனைவரும் பகிரங்கமாக அவர் பதவியலிருப்பது என்ற நிலைப்பாட்டிற்கு ஆதரவு கொடுத்தித்திருந்தனர். லிபியாவில் இராணுவத் தலையீடு முக்கிய ஜேர்மனிய வணிக மற்றும் வெளியுறவுக் கொள்கை இயற்றும் வட்டங்களில் ஒருதலைப்பட்ச பிரெஞ்சு முன்முயற்சி, அப்பிராந்தியத்தில் ஜேர்மனியின் பரந்த நலன்களை தாக்குகிறது என்றுதான் கருதப்பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்கச் சார்புடைய சிந்தனைக்குழு “Stiftung Wissenschaft und Politik (SWP)”, “அண்மை, மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவிற்கான ஜேர்மன் கொள்கைகள்என்னும் தலைப்பில் ஒரு ஆய்வை வெளியிட்டது; அது அப்பிராந்தியத்தில் ஜேர்மனிய நலன்களின் வளர்ச்சி பற்றி ஆராய்ந்தது. ரஷ்ய இயற்கை எரிவாயுமீது நாடு கொண்டிருக்கும் நம்பகத்தன்மை மற்றும் உயரும் தேவை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு ஜேர்மனிய அரசாங்கம்வெளிப்படையாககூடுதலான இயற்கை எரிவாயுவை வட ஆபிரிக்காவில் இருந்து வாங்க முற்படுகிறது என்று ஆய்வு கூறியுள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் மாக்ரெப்பில் இருந்து குறிப்பாக ஜேர்மனியின் விசைத் தேவையில் பெருகிய முக்கியத்துவத்தை கொண்டுள்ளன. “இன்று லிபியா ஜேர்மனிக்கு நான்காம் முக்கிய எண்ணெய் வழங்கும் நாடு ஆகும். அல்ஜீரியா எட்டாம் இடத்தில் உள்ளது.”

ஆனால் ஜேர்மனி கடுமையான போட்டியை சந்திக்கிறது என்று ஆய்வு குறிக்கிறது. ஆய்வின் ஆசிரியரான இஸபேல் வாரன்ஃபெல்ஸ் பெரிய வட ஆபிரிக்க நாடுகளுடன் உடன்படிக்கைகளுக்கான சர்வதேசப் போட்டி தீவிரமாகிவிட்டது, குறிப்பாக விசை மற்றும் பாதுகாப்புத் துறைகளில் என்று எழுதியுள்ளார். ரஷ்யா மீண்டும் இப்பிராந்தியத்தில்முக்கிய பங்கைகொண்டு மாக்ரெப் நாடுகளும்சீனா, இந்தியா போன்ற புதிய சர்வதேசப் பங்கு பெறும் நாடுகளால்நாட்ப்படுகின்றன. ரஷ்ய விசைப் பெருநிறுவனமான Gazprom கிட்டத்தட்ட லிபிய எரிவாயுத் துறையில் ஏகபோக உரிமையை அடைய முயன்று கொண்டிருந்தது. இம்முயற்சி ஜேர்மனியால் கவலையுடன் நோக்கப்பட்டது.

ஆயினும்கூட பிரான்ஸ்தான் ஜேர்மனியின் முக்கிய போட்டி நாடு என்று ஆய்வு அடையாளம் காட்டுகிறது. ஒரு மத்தியதரைக்கடல் ஒன்றியம் என்பதற்கான திட்டம் பாரிசால் பிரெஞ்சு செல்வாக்கை அப்பிராந்தியத்தில் பாதுகாத்து, விரிவாக்குவதற்கு தொடக்கப்பட்டது, “இதனால் குறிப்பாக ஜேர்மனிய பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டிருக்கும்

இப்பிராந்தியத்தில் தன் முன்முயற்சியை ஜேர்மனி கட்டமைக்க முயல வேண்டும் என்று ஆய்வு முடிவுரையாகக் கூறுகிறது. அதே நேரத்தில் இதுசர்வாதிகார ஆட்சிகளில் இருந்து ஒதுங்கி இருந்து” “அரசியில் சீர்திருத்தம்பற்றிக் முக்கியத்துவம் காட்ட வேண்டும். இவ்வகையில் ஆய்வு ஜேர்மனி பிரான்ஸை விட அதிக நலன்களைக் கொண்டுள்ளதாகக் கருதுகிறது; ஏனெனில் பிரான்ஸ் அப்பகுதியில் உள்ள ஊழல் நலிந்த ஆளும் குழுக்களுடன் நெருக்கமான நட்புறவுகளை கொண்டுள்ளது. “லிபிய தலைவர் கடாபி சான்ஸ்லர் அலுவலகத்தின் முன் தன் கூடாரத்தைப் போடாதவரை, மற்றும் பிரான்ஸைப் போல் இல்லாமல் ஜேர்மனியும் துனிசியாவும் (இல்லாத) ஜனநாயகத்திற்காக பாடுபடும் முயற்சியைப் பாராட்டவும் இல்லைஎன்று ஆய்வு முடித்துள்ளது.

லிபியத் தேசிய இடைக்காலக் குழுவிற்கு பிரான்ஸ் அவசர அவசரமாகக் கொடுத்த அங்கீகாரம் மற்றும் இராணுவத் தலையீட்டிற்கு அது வலியுறுத்தியது ஆகியவை அப்பொழுது பேர்லினால் ஜேர்மனியின் இழப்பில் பிரெஞ்சு ஜனாதிபதி முயற்சியை மறுபடியும் எடுத்துக் கொள்ளும் முயற்சியாக விளக்கப்பட்டது. எனவேதான் வெஸ்டர்வெல்ல பாதுகாப்புக் குழு போர்த் தீர்மானம் பற்றிய வாக்கெடுப்பில் ரஷ்யா, சீனா ஆகியவற்றுடன் இணைந்து கலந்து கொள்ளவில்லை.

சீன ரேடியோ இன்டர்நேஷனல் (CRI) உடைய வலைத்தள தகவல் ஒன்றின்படி, வெஸ்டர்வெல்ல இன்னும் அதிகமாகச் சென்றுள்ளார். சீனாவிற்கு சென்றிருந்தபோது, வெஸ்டர்வெல்ல கடந்த வெள்ளி சீன வெளியுறவு மந்திரியுடன் செய்தியாளர் முன் தோன்றி லிபிய நெருக்கடியில் ஒரு இராணுவத் தீர்விற்கு எதிராகப் பேசியுள்ளார். CRI கூற்றின்படி, “சீன வெளியுறவு மந்திரி யாங் ஜீஷியும் ஜேர்மனிய வெளியுறவு மந்திரி கீடோ வெஸ்டர்வெல்லவும் வெள்ளியன்று லிபியப் பிரச்சினையில் அரசியல் தீர்விற்காக ஆதரவு தெரிவித்துப் பேசினர். பெய்ஜிங்கில் அவர்கள் நடத்திய கூட்டுச் செய்தியாளர் கூட்டத்தில் யாங் ஜீஷி சீனா இராணுவ நடவடிக்கையின் விரிவாக்கத்தால் ஏற்பட்டுள்ள பொதுமக்கள் பாதிப்பதை பற்றிக் கவலை கொண்டுள்ளது என்று கூறினார். வெஸ்டர்வெல்வும் லிபிய பிரச்சினை இராணுவரீதியாக இல்லாது அரசியல்ரீதியாகத்தான் தீர்க்கப்பட முடியும் எனத் தான் நம்புவதாகக் கூறினார்.”

ஆனால் பேர்லினில் அரசியல் வட்டங்கள் பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவை பாதுகாப்புக் குழுவில் எதிர்க்க முற்பட்ட வெஸ்டர்வெல்லவின் முயற்சி ஒரு முக்கிய தவறு என்று விரைவில் முடிவிற்கு வந்தன. முக்கிய மேலை நட்பு நாடுகளில் இருந்து ஒதுக்கப்படக்கூடிய நிலை மற்றும் ரஷ்யாவுடன் விருப்பமற்ற வகையிலான கூட்டு என்ற ஆபத்து பல ஜேர்மனிய வெளியுறவு மந்திரிகள் மனத்தில் பிரான்ஸுடன் ஜேர்மனி கொண்டுள்ள தந்திரோபாய வேறுபாடுகளைவிட அதிக கவனத்தைக் கொண்டு இருத்தது.

வெஸ்டர்வெல்ல பற்றிய ஆரம்பத்தில் வந்த குறைகூறல்கள் ஒருமனிதாபிமான போரில்ஜேர்மனி பங்குபெறத் தவறியது பற்றி இயக்கப்பட்டன. இக்குறைகூறல் பசுமைவாதிகள் மற்றும் SPD, CDU பிரிவுகள் சிலவற்றில் இருந்து வந்தன; முன்னாள் வெளியுறவு மந்திரி ஜோஷ்கா பிஷ்ஷர் (பசுமைவாதி), வெஸ்டர்வெல்லவை முக்கியமான கணத்தில்பதுங்கிவிட்டதாககுற்றம் சாட்டினார்.

மேற்கு நாடுகளின் கூட்டிற்கு விசுவாசம் என்ற பிரச்சினை விரைவில் மைய இடத்தைப் பிடித்தது. Spiegel Online ல் கடந்த வாரம் எழுதிய றல்வ் நொய்கிர்ஸ் .நா.பாதுகாப்புக் குழுவில் அரசாங்கம் வாக்களிக்காதது பற்றி கண்டனம் தெரிவித்தார்; அது வெளியுறவுக் கொள்கையில் இருகட்சி ஒருமித்த உணர்வை இல்லையென ஆக்கிவிட்டது என்று அவர் அறிவித்தார். “இதுவரை ஜேர்மனி எப்பொழுதும் அமெரிக்கா, பிரான்ஸுடன் இணைந்து நின்றுள்ளது. எப்பொழுதும் அது எளிதல்ல. சில நேரங்களில், ஈராக் போருக்கு முன்பு என்பது ஒரு உதாரணம், அது இயலாததாக இருந்தது. அப்பொழுது கூட்டாட்சிக் குடியரசு இரு முக்கிய பங்காளிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. ஆனால் எப்படியும் முக்கிய கருத்து அது ஒரேநேரத்தில் இரண்டையும் எதிர்த்தல் கூடாது என்றுதான் இருந்தது. அரசாங்கம் இப்பொழுது அந்த அடிப்படை ஜேர்மனியக் கொள்கையில் இருந்து விலகிச் செயல்பட்டுள்ளது.”

இதேபோன்ற கருத்துக்கள் பல மற்ற வெளியீடுகளிலும் தோன்றின. பலரும் பாதுகாப்புக்குழுவில் ஜேர்மனி ஒப்புதல் கொடுப்பது அது போரில் பங்கு கொள்ளும் என்ற பொருளை இயல்பாகக் கொடுத்திருக்கும் என ஏற்கவில்லை. “ஜேர்மனி மேற்குடன் இணைந்து செயல்படுகையில் அதன் புரிந்துகொள்ளக்கூடிய கவலைகளை பற்றியும் எழுப்பியிருக்க முடியும்என்று நொய்கிர்ஸ் எழுதினார்.

வெளியுறவு மந்திரி வெஸ்டர்வெல்ல பதவியில் இருக்கிறாரா, இல்லையா என்பது இரண்டாம் தர வினாவாயிற்று. பாதுகாப்புக்கழுவில் அவர் பங்கு பெறாத சங்கடம்நாடு 140 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டதில் இருந்து ஜேர்மனிய வெளியுறவுக் கொள்கையை வாட்டி எடுக்கும் பிரச்சினையாக இன்னமும் உள்ளது. ஐரோப்பிய தேசிய அரசு முறையின் நடுவே அகப்பட்டுக் கொண்ட ஜேர்மனிய முதலாளித்துவம் எப்பொழுதும் மூலப் பொருட்கள், எரிசக்தி ஆதாரங்கள் மற்றும் சந்தைகளுக்கான தேவையைக் கொண்டுள்ளது. அவ்வாறு செய்கையில் அது தவிர்க்கமுடியாமல் அதன் அண்டை நாடுகளுடன் மோதலுக்கு வருகிறது.

இன்றும் பல ஜேர்மனிய வெளியுறவுக் கொள்கை வல்லுனர்களால் முன்மாதிரியாகக் கருதப்படும் ஒட்டோ வொன் பிஸ்மார்க், குடியரசின் சான்ஸ்லராக இருக்கும்போது பெரிய ஐரோப்பியச் சக்திகள் ஒன்றையொன்று எதிர்க்கும் வகையில் கூட்டணி முறைகளை உருவாக்கினார். அதன்மூலம் ஜேர்மனிக்கு எதிரான ஒன்றுபட்ட கூட்டணி உருவாதலைத் தடுத்தார். ஜேர்மனி ஒரு காலனித்துவ  மற்றும் உலகச் சக்தியாக 1890-1914ல் வெளிப்பட்டதை அடுத்து பிஸ்மார்க்கிய கூட்டணி முறை சரிந்துவிட்டது. முக்கிய போட்டி ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையே விளைந்துள்ள முரண்பாடுகள் இறுதியில் முதல், இரண்டாம் உலகப்போர்களின்போது வெகுஜனப் படுகொலைகளாக வெடித்தன.  இதில் ஆரம்ப முயற்சி இரு போர்களிலும் ஜேர்மனியிடம் இருந்துதான் வந்தது.

போருக்குப் பிந்தைய தசாப்தங்களில், ஜேர்மனிய பொருளாதாரம் புத்துயிர் கண்டது. மேற்குடன் உறவுகள், நேட்டோ கூட்டணி, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை ஜேர்மனியின் வெளியுறவுக் கொள்கையின் அஸ்திவார கற்கள் ஆயின. ஆனால், ஜேர்மனிய மறு இணைப்பிற்கு இரு தசாப்தங்களுக்கு பின்னர் சர்வதேசப் பொருளாதார நெருக்கடி, அமெரிக்காவின் சரிவு மற்றும் சீனாவின் எழுச்சி, ஆகியவை ஜேர்மனிய வெளியுறவுக் கொள்கை சார்பில் பெரும் குழப்பங்களை கொண்டுவந்துள்ளன. ஜேர்மனி, ரஷ்ய எரிசக்தியை நம்பியிருப்பது மற்றும் அதன் பெருகிய வணிகம் BRIC நாடுகளுடன் [பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா] இருத்தல் ஆகியவை அதன் இயல்பான இயக்கத்தை விரைவில் வளர்த்து சமீபத்திய தசாப்தங்களில் மரபார்ந்த உறவுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்திவிட்டன.

பாரிஸுக்கும் பேர்லினுக்கும் இடையேயான தொடர்புகளின் ஒலிக்குறிப்பு கூடுதலான முறையில் ஆக்கிரோஷ தன்மையை பெற்று வருகிறது. பாதுகாப்புக் குழு வாக்கெடுப்பில் ஜேர்மனி பங்கு பெறாததை அமைதிவாதமென எவரும் குழப்பிக் கொள்ளக்கூடாது. மேற்கு கூட்டில் இருந்து பின்வாங்கத் தொடங்குவது என்பது இன்னும் கூடுதலான இராணுவத் சுயாதீனத்தை நோக்கிய முதல் படியாகும். தற்போதைய வெளியுறவுக் கொள்கை நெருக்கடி ஜேர்மனிய தேசியவாதம், இராணுவவாதம் ஆகியவை மீண்டும் எழுவதற்கான முன் அறிவிப்பு ஆகும்.