சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The war on Libya: a new eruption of imperialist rivalry

லிபியா மீதான யுத்தம்: ஏகாதிபத்திய போட்டியின் ஒரு புதிய வெடிப்பு

Nick Beams
2 April 2011
Use this version to print | Send feedback

இரண்டாம் உலக யுத்தத்திற்கு இட்டு சென்ற 1930களில் இருந்து மட்டுமல்ல, லிபிய மீதான யுத்தத்திலும் எதிரெதிர் ஏகாதிபத்திய சக்திகளின் முரண்பாடான பொருளாதார மற்றும் மூலோபாய நலன்கள் மிக வெளிப்படையாகவே பின்தொடரப்பட்டன.  

அனைவருமே லிபிய மக்களின் வாழ்விற்கான தங்களின் "மனிதாபிமான அக்கறையைக்" கூறிக் கொள்வதுடன், "பாதுகாக்கும் பொறுப்பு" என்றழைக்கப்படுவதையும் வலியுறுத்திக் கொள்கின்றன. ஆனால் அவற்றின் கூரிய பற்களை எந்த மனிதாபிமான முகத்திரையும் மூடிமறைக்க முடியாது.   

இப்போது வெளிப்பட்டுள்ளபடி, 1973 ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் கொண்டு வரப்படுவதற்கு முன்னரே, லிபியாவில் அதன் உளவுத்துறை (CIA) நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டிருந்ததுடன் பிரான்ஸ் மற்றும் பிரிட்டனை முந்துவதற்காக தாக்குதலை நடத்துவதற்கு முன்முயற்சிகளை எடுத்திருந்தது. அவர்கள் (பிரான்ஸூம், பிரிட்டனும்), அவர்களின் பங்கிற்கு, 1956இல் சூயஸ் கால்வாய் விஷயத்தில் மூலோபாய பின்னடைவைச் சந்தித்ததற்கு பதிலடியாக, சந்தேகத்திற்கு இடமின்றி, அமெரிக்காவின் பொருளாதார பலவீனம் ஒரு சந்தர்ப்பத்தை அளிப்பதாக பார்த்தன.

மேலும் அமெரிக்கா அதன் சிந்தனையில் மற்றொரு எதிரியைக் கொண்டிருக்கிறது. ஆபிரிக்காவுடன் சீனாவின் இருதரப்பு பொருளாதார உறவுகள் (இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 2010இல் 40 சதவீதத்திற்கும் மேல் வளர்ந்தது) எந்தளவிற்கு விரைவாக வளர்கிறது என்பதோ மற்றும் சீனாவின் பணமோ, முதலீடோ எந்தளவிற்கு அங்கே அரசியல் செல்வாக்கைக் கொண்டு வருகிறது என்பதோ பிரச்சினையல்ல என்பதை பெய்ஜிங்கிற்கு காட்டிக்கொள்ள முனைகின்றது. இராணுவ தலையீடு மற்றும் "ஆட்சி மாற்றத்தின்" மூலமாக அதன் நலன்களைப் பாதுகாப்பதில் அமெரிக்க இராணுவவாதம் இன்னும் முழுத் தகுதியை கொண்டிருக்கிறது.    

ஐரோப்பிய சக்திகளுக்கு இடையிலும் அங்கே பிளவுகள் உள்ளன. ஆரம்பகட்ட அமெரிக்க தாக்குதல்களுக்குப் பின்னர், நடவடிக்கையை யார் கட்டுப்பாட்டில் எடுப்பது என்பதில் இருந்த முரண்பாடு, நேட்டோ பொறுப்பெடுக்கவில்லையென்றால், பிரிட்டனும் பிரான்ஸூம் "புதிய" லிபியாவின் மதிப்புமிக்க எண்ணெய் வளங்களை கைப்பற்றுவதில் தன்னை ஓரங்கட்டிவிடும் என்ற இத்தாலியின் கவலைகளால் பகுதியாக உந்தப்பட்டிருந்தது.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பவாக்கில் பிரான்ஸூடன் சேர்ந்து ஆபிரிக்க கண்டத்தைத் துண்டுதுண்டாக்கிய பிரிட்டன், லிபியாவிற்கு அப்பாலும் பார்க்கிறது. வெளிவிவகாரத்துறை செயலர் வில்லியம் ஹாக் இலண்டனில் சமீபத்திய மாநாட்டில் தெரிவித்தது, இதுதான்: “உலகில் நம்முடைய நிலைப்பாட்டையும், செல்வாக்கையும் கட்டியெழுப்ப கூடிய, நம்முடைய பொருளாதாரத்திற்கு ஆதரவளிக்க கூடிய ஓர் அருமையான வெளிநாட்டு கொள்கையை பிரிட்டன் கொண்டுள்ளது.” இதனோடு சேர்த்து, “ஆபிரிக்க நாடுகளும்" பிரிட்டனின் நலன்களில் உள்ள ஒரு மூலோபாய பகுதியாகும் என்றார். இவற்றின் முக்கியத்துவம் பின்வரும் ஹாக்கின் கருத்துக்களால் வெளிப்படுகின்றன: வட ஆபிரிக்கா மற்றும் மத்தியகிழக்கில் சமீபத்தில் நிகழ்ந்த சம்பவங்கள், ஏற்கனவே இருபத்தோராம் நூற்றாண்டின் மிக முக்கியமான நிகழ்வுகளான “2008 நிதியியல் நெருக்கடி மற்றும் 9/11 சம்பவங்களையும்" கடந்து மிதமிஞ்சி சென்றுவிட்டன.

ஏகாதிபத்திய முழு கொள்ளையடிப்பின் வெடிப்பும், வெளிப்படையான முரண்பாடுகள் மற்றும் போட்டிகளின் எழுச்சியும் உடனடி நோக்கங்களின் விளைவுகள் அல்ல. இறுதி ஆய்வுகளில், இரண்டாம் உலக யுத்தம் முடிந்ததிலிருந்து பெரிய சக்திகளுக்கு இடையில் உருவாகியிருந்த அரசியல் உறவுகளை குழப்பத்திற்குள்ளாக்கும் உலகப் பொருளாதாரத்தின் அடித்தட்டுகளில் ஏற்பட்ட பெரும் நகர்வுகளின் அரசியல் வெளிப்பாடாகும் இது.

பொருளாதார மாற்றம் எந்தளவிற்கு நிகழ்ந்திருக்கிறது என்பதை உலக உற்பத்தி குறித்த சமீபத்திய புள்ளிவிபரங்கள் குறிப்பிட்டிருந்தன. மொத்த உலக உற்பத்தியில் அமெரிக்காவின் 19.4 சதவீதத்தோடு ஒப்பிடுகையில் 19.8 சதவீதத்தோடு உலகின் முன்னணி உற்பத்தி நாடாக சீனா அமெரிக்காவை முந்தி நின்றது. அமெரிக்க உள்நாட்டு யுத்தத்திற்குப் பின்னர் ஏற்பட்ட சக்திவாய்ந்த பொருளாதார அபிவிருத்தியின் மூன்று தசாப்தங்களை தொடர்ந்து, 1895இல் உற்பத்தியில் அமெரிக்கா முதலிடத்தே எடுத்துக்கொண்டதுடன், யுத்தத்தின் முடிவில் உலகின் மொத்த உற்பத்தியில் 50 சதவீதத்திற்கு நெருக்கமாக உயர்ந்த போதினும் கூட, அடுத்துவந்த 100 ஆண்டுகளின் பொருளாதார கொந்தளிப்புகள் அனைத்தையும் அது தாங்கிப்பிடிக்க வேண்டியிருந்தது.

குறிப்பாக கடந்த தசாப்தத்தில், சீனாவின் வேகமான வளர்ச்சி, அமெரிக்காவின் தரப்பில் ஏற்கனவே பெரும் விரோதத்தோடு எதிர்கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால் அமெரிக்க-சீன உறவுகளில் உள்ள மாற்றம் மட்டுமே முக்கியமான மாற்றமல்ல. 2000இல், மேற்கத்திய ஐரோப்பா, அமெரிக்கா, மற்றும் ஜப்பான் போன்ற தொழில்துறை உலகின் முக்கிய நாடுகள், உற்பத்தியில் 72 சதவீதத்தை காட்டின. இது 1990இல் இருந்த 80 சதவீதத்திலிருந்து குறைவு தான் என்றபோதினும், இதுவொரு உயர்ந்த மாற்றமாகவே இருந்தது. அது அதற்கடுத்த தசாப்தத்தில் அபிவிருத்தி ஆக இருந்தது.  

2010 இல் இதே நாடுகள் உலகின் உற்பத்தியில் பாதிக்கு சற்று அதிகமான உற்பத்தியைக் கொண்டிருந்தன. உற்பத்தியில் ஏற்பட்ட மாற்றமானது, பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய BRIC என்றழைக்கப்படும் நாடுகளைநோக்கி இருந்தது. 2000இல், உலகளாவிய உற்பத்தியின் 11 சதவீதத்திற்கு இந்த நாடுகளே பொறுப்பாகும். கடந்த ஆண்டு இவற்றின் பங்கு இரண்டு மடங்கிற்கு மேலாக, 27 சதவீதமாக உயர்ந்தது.

இந்த புள்ளிவிபரங்கள் லிபியாவிற்கு எதிரான இராணுவ தலையீட்டிற்கு ஒப்புதல் வழங்கிய ஐ.நா. பாதுகாப்பு சபையின் 1973 தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இருந்த பிளவுகளின் ஆதாரங்களைக் குறித்துக் காட்டுகின்றன. அந்த தீர்மானம் 10க்கு பூஜ்ஜியம் வாக்குகளையே பெற்றது. அதில் பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா (BRIC நாடுகள்) அத்துடன் ஜேர்மனும் ஆக ஐந்து நாடுகள் கலந்து கொள்ளவில்லை.

ஐரோப்பாவின் யுத்தத்திற்குப் பிந்தைய அரசியல், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியின் கூட்டுறவை அடித்தளமாக கொண்டிருந்தது. தற்போது, ஏழுச்சி கண்டுவரும் BRIC சக்திகள் பழைய முதலாளித்துவ சக்திகளிடமிருந்து பிரிந்துசெல்வதால், இரண்டு உலக யுத்தங்களிலும் விரோதிகளாக இருந்தவர்கள் கருத்து முரண்பட்டுள்ளனர். இந்த பிளவு எதிர்காலத்தில் இதர விஷயங்களிலும் அவற்றிற்குள் இருக்கும் உடன்பாடுகளை தகர்க்கும் என்பதும் உண்மை தான். ஆனால் இது 20ஆம் நூற்றாண்டின் வரலாறு எடுத்துக்காட்டுவதைப் போல்தீவிரமடைந்துவரும் பூகோள-அரசியல் பதட்டங்கள், தவிர்க்கமுடியாமல் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான யுத்தத்திற்கு இட்டுச் செல்லும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

உலக பொருளாதாரத்தின் அடித்தளங்களில் உள்ள ஆழமான மாற்றங்களும், அவை உருவாக்கிய பூகோள-அரசியல் பதட்டங்களும், மீண்டுமொருமுறை, லெனின் ஏகாதிபத்தியம், முதலாளித்துவத்தின் உச்சகட்டம் (Imperialism, the Final Stage of Capitalism) எனும் படைப்பில் அவரின் பகுப்பாய்வின் முன்கணிப்பை வெளிச்சமிட்டு காட்டுகிறது.

ஏகாதிபத்திய யுத்தத்தால் மனித நாகரிகத்தின் முன் நிறுத்தப்பட்ட அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டு வரும் ஒரே கருவியாக சோசலிசம் ஒரு வரலாற்று அவசியமாக இருக்கிறது என்று முதலாம் உலக யுத்தத்தின் ஆழத்திலிருந்து, 1916இல் பிரசுரிக்கப்பட்ட ஏகாதிபத்தியம் (Imperialism) விளக்கியது. லெனின் ஜேர்மன் சமூக ஜனநாயக தலைவர்  கார்ல் கவுட்ஸ்கியின் தத்துவத்திற்கு நேரடிய எதிர்ப்பாக அதை எழுதியிருந்தார். யுத்தத்தின் அதன் "சொந்த" அரசாங்கத்திற்கு ஆதரவு காட்ட ஜேர்மன் சமூக ஜனநாயகத்திற்கு தத்துவார்த்த விளக்கத்தை அளித்த கவுட்ஸ்கி, யுத்தம் முதலாளித்துவத்திலிருந்து இயல்பாக எழவில்லை என்று கூறினார். இதன் விளைவாக, ஏகாதிபத்திய சக்திகள் அதை தவிர்ப்பதற்கு தமது  விவகாரங்களை நெறிப்படுத்த இயலுமானவையாக இருக்கும்.

முதலாளித்துவத்தின் சீரற்ற வரலாற்று அபிவிருத்தியால் ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான எவ்வித உடன்படிக்கையும் ஒருகட்டத்தில் தவிர்க்கமுடியாமல் மற்றொன்றிலிருந்து பிளவுபடும் என்பதால், “அதீத-ஏகாதிபத்தியம்" போன்ற ஓர் நிலைமை ஒருபோதும் நிரந்தரமாக இருக்க முடியாது. முந்தைய பொருளாதார சமபலநிலையின் இந்த பிளவு காலனித்துவ நாடுகளுக்கு, ஆதிக்கம், ஆதாரவளங்கள் மற்றும் சந்தைகளின் வட்டத்தில் ஒரு புதிய அரசியல் மற்றும் இராணுவ போராட்டத்தை-அதாவது ஒரு புதிய உலக யுத்தத்தை இயக்கத்திற்குக் கொண்டு வந்தது.  

முதலாம் உலக யுத்தம் வெடித்த 100ஆம் நினைவாண்டை நாம் நெருங்கிக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில், உலக முதலாளித்துவத்தின் வரலாற்றில் மிகவும் ஆழமான உலகளாவிய பொருளாதார மாற்றங்களில் ஒன்றின் மத்தியில், லெனின் பகுப்பாய்வு முன்பு இல்லாத அளவிற்கு மிகவும் பொருந்தி நிற்கிறது. லிபியாவிற்கு எதிரான இராணுவ தாக்குதலும், அதை தூண்டிவிட்டுள்ள ஏகாதிபத்தியத்தின் அகோரபசியும் வரலாற்று நிகழ்ச்சிநிரலில் ஏகாதிபத்திய யுத்தம் மிக சமீபத்தில் மீண்டும் திரும்ப வருகிறது என்ற உண்மையை எடுத்துக்காட்டுகின்றன. 20ஆம் நூற்றாண்டின் ஆழமான அனுபவங்களின் அரசியல் மற்றும் மூலோபாய பாடங்களுடன் தொழிலாள வர்க்கம் அரசியல்ரீதியாக மறு-ஆயுதபாணியாக்கப்பட்டுள்ள நிலையில், உலக சோசலிசப் புரட்சியின் வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தை கையிலெடுப்பதன் மூலமாக, தொழிலாள வர்க்கத்தால் மட்டும் தான் இந்த கொடூரமான அச்சுறுத்தலை எதிர்கொள்ளமுடியும்.