WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Obama begins bid for second term: A president
of war and social reaction
ஒபாமா
இரண்டாவது
பதவிக் காலத்திற்கான
முயற்சியை
ஆரம்பிக்கிறார்:
போர்
மற்றும்
சமூகப்
பிற்போக்குத்தனத்திற்கான
ஒரு
ஜனாதிபதி
By
Patrick Martin
5 April 2011
அமெரிக்க
ஜனாதிபதி
பாரக்
ஒபாமா
2012ல்
மறு
தேர்தலுக்கான
தன்
வேட்பாளர்
நிலையை
ஒரு
வீடியோ
அறிக்கையில்
அறிவித்தார்.
இது
திங்கள்
வலைத் தளத்தில்
பதிவாகியதுடன்,
மின்னஞ்சல்
மூலம்
வந்து
சேர்ந்தது.
2012 ஜனாதிபதித்
தேர்தலுக்கு
முறையாக
வேட்பு
மனு
செய்யும்
முதல்
நபராக
அவர்
ஆனார்.
கூட்டாட்சித்
தேர்தல்
ஆணைக்குழுவில்
ஆவணங்களைப்
பதிவு
செய்தார்.
இது
நிதி
திரட்டுவதற்கு
சட்டப்பூர்வ
நிபந்தனை
ஆகும்.
ஒபாமா
ஏற்கனவே
“பில்லியன்-டாலர்
வேட்பாளர்”
என்று பெயர்
சூட்டப்பட்டுள்ளார்.
ஏனெனில் இவருடைய
பிரச்சாரம் அமெரிக்க வரலாற்றிலேயே அத்தகைய மிகப் பெரும் தொகையை கோரிச் செலவு
செய்யவேண்டும் என்று உள்ளது.
ஒபாமா ஜனாதிபதிப்
பதவிக்காலமோ அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் பில்லியனர்களுக்கு உதவியுள்ள
நிலையில் இந்த எண்ணிக்கை பொருத்தமானதும் உரிய அடையாளத்தையும் கொண்டுள்ளது.
நிதியப்
பிரபுத்துவம்—குறிப்பாக
வோல்
ஸ்ட்ரிட்டும்—2008ல்
குடியரசுக்
கட்சியின்
ஜோன்
மக்கெயினைவிட
ஒபாமாவிற்கு
பெரும்
ஆதரவு
கொடுத்தது.
இதையொட்டி
அவர்
சாதனை
வசூலான
$779 மில்லியனை
நன்கொடைகள்
மூலம்
பெற்றார்.
இது
2004ல்
முந்தைய
சாதனையான
ஜோர்ஜ்
டபுள்யூ
புஷ்ஷிற்குக்
கிடைத்த
நன்கொடை
தொகையை
விட
இரு
மடங்கு
அதிகம்
ஆகும்.
அவருடைய
நிதி
திரட்டும்
முயற்சிக்கு
சிறு
நன்கொடைகளில்
அதிக
எழுச்சி
இருந்ததுதான்
காரணம்
என்று
கூறப்பட்டாலும்,
ஒபாமாவின்
தொடக்கப்
பிரச்சாரம்
மற்றும்
பொதுத்
தேர்தல்
நிதியின்
பெரும்பகுதி
$1,000 அல்லது
அதற்கும்
மேல்
நன்கொடை
அளிக்கும்
நிலையில்
இருந்தவர்கள்
மூலமே
வந்தது.
2012
பிரச்சாரத்திற்கு
இன்னமும்
அதிகமாக
பணம்
திரட்ட
முயற்சிகள்
நடக்கும்.
கடந்த
மாதம்
பிரச்சார
மேலாளர்
ஜிம்
மெசினா
450 உயர்மட்ட
“பணம்
திரட்டுபவர்களை”
2011ல்
ஒவ்வொருவரும்
$350,000 திரட்ட
வேண்டும்
என்று
கேட்டுக்
கொண்டார்.
தேர்தலுக்கு
முந்தைய
ஆண்டான
2008 பிரச்சாரத்தின்
முழு
ஆண்டில்
திரட்டப்பட்டதைப்
போல்
இரு
மடங்கு
ஆகும்
இது.
இந்த
முயற்சி
மட்டும்
ஒபாமாவிற்கு
அவருடைய
பிரச்சாரக்
கருவூலத்திற்கு
$150
மில்லியனுக்கும்
மேலாக
ஜனவரி
2012ல்
சேர்வதற்கு
உதவும்.
இது
பெருவணிகக்
கட்சியிலுள்ள
அவருடன்
போட்டியிடும்
திறனைக்
கொண்டவர்களை
விட
மிக
அதிக
நன்கொடைகளைப்
பெற்றுத்
தரும்.
இத்தகைய
பெரும்
நிதிகளை
விரைவில்
சேகரிப்பதின்
மூலம்,
நிர்வாகம்
இரு
அரசியல்
கட்சிகளும்
கொண்டுள்ள
நிலைப்பாட்டிற்கு
எத்தகைய
சவாலையும்
அகற்றிவிடும்
வாய்ப்பைக்
காண
முயல்கின்றன.
கடந்த
வாரம்
பெரும்
வசதி
படைத்த
ஆதரவாளர்
குழு
ஒன்றில்
பேசுகையில்,
ஒபாமா,
“நாம்
நம்பும்
மாற்றத்தை
நாம்
அளித்துள்ளோம்.
ஆனால்
பணி
இன்னும்
முடியவில்லை.
இன்னும்
நிறையச்
செய்ய
வேண்டியுள்ளது”
என்று
அறிவித்தார்.
உண்மையில்,
நிர்வாகத்தின்
அனைத்துக்
கொள்கைகளும்
புஷ்
நிர்வாகத்தின்
வலதுசாரிக்
கொள்கைகளின்
தொடர்ச்சியாகவும்
அவற்றை
ஆழப்படுத்துவதாகவும்தான்
உள்ளன.
புஷ்
நிர்வாகத்தின்
கீழ்
துவக்கப்பட்ட
வோல்ஸ்ட்ரீட்
பிணை
எடுப்புக்களை
ஒபாமா
நிர்வாகம்
விரிவாக்கியது.
கூட்டாட்சிக்
கருவூலத்தின்
முழு
இருப்புக்களையும்
வங்கிகளை
மீட்கவும்,
நிதிய
உயரடுக்கின்
சேகரிக்கப்பட்டுள்ள
சொத்துக்களைக்
காக்கவும்
செலவிடப்பட்டன.
இரண்டரை
ஆண்டுகளுக்குப்
பின்னர்,
பெருநிறுவன
இலாப
நிலை
மீட்கப்பட்டுவிட்டது.
எப்பொழுதும்
இல்லாத
மிக
உயர்ந்த
அளவான
$1.68 ட்ரில்லியனால்
2010ல்
அடையப்பட்டது,
ஓராண்டில்
இது
36.8 சதவிகிதம்
அதிகமாகும்.
இலாபங்கள்
61.5 சதவிகிதமாக,
தற்போதைய
பொருளாதாரச்
சரிவைத்
தூண்டிய
2008 ம்
ஆண்டு
நெருக்கடித்
ஆரம்பத்தில்
ஏற்பட்ட
குறைந்த
நிலையில்
இருந்து
உயர்ந்துள்ளன.
பங்குச்
சந்தையும்
புத்துயிர்
பெற்றுவிட்டது.
2008-2009 குறைந்த
நிலையில்
இருந்து
பங்கு
விலைகள்
70 சதவிகிதம்
உயர்ந்துவிட்டன.
2010ல்
மட்டும்
பங்குகளின்
மதிப்புக்களின்
வியத்தகு
1
டிரில்லியன்
டொலர்
சேர்க்கப்பட்டது.
CEO க்களின்
ஊதியச்
சரிவிற்கு
முன்
இருந்த
வானளாவிய
நிலைக்கு
மீண்டும்
வந்து
விட்டது.
இது
2009 – 2010ல்
இருந்து
50 சதவிகிதம்
அதிகமாகும்.
அதே
நேரத்தில்
சராசரித்
தொழிலாளர்களின்
ஊதியங்கள்
தேக்கம்
அடைந்து
விட்டன.
தொழிலாள
வர்க்கத்தை
பொறுத்தவரை,
எந்த
வித
மீட்பும்
இல்லை.
மாறாக
ஒபாமா
நிர்வாகம்
நிதிய
நெருக்கடி,
பிணை
எடுப்பிற்கு
தொழிலாள
வர்க்கம்
விலைகொடுக்க
வேண்டும்
என்ற
பெருநிறுவன
அமெரிக்காவின்
உந்துதலுக்குத்
தலைமை
தாங்கியது.
இதன்
விளைவாக
7 மில்லியன்
வேலைகள்
தகர்க்கப்பட்டன.
ஊதியங்களும்
நலன்களும்
குறைக்கப்பட்டன.
பொதுப்
பணிகள்
மற்றும்
சமூகநலத்
திட்டங்கள்
மீது
முன்னோடியில்லாத
தாக்குதல்கள்
நடைபெற்றன.
வெள்ளியன்று
UPS நிலைய
பிரச்சார
வகையிலான
அணிவகுப்பு
ஒன்றில்,
ஒபாமா
அன்று
வெளியிடப்பட்டிருந்த
உத்தியோகபூர்வ
வேலையின்மை
புள்ளிவிபரங்களை
பாராட்டினார்.
அவையோ
கடந்த
நான்கு
மாதங்களில்
9.8 ல்
இருந்து
8.8 சதவிகிதம்
என்று
வேலையின்மை
விகிதத்தில்
ஒரு
சதவிகிதப்
புள்ளிக்
குறைப்பைக்
காட்டியுள்ளன.
“1984 மீட்பின்
போதுதான்
இவ்வகையில்
நிகழ்வுகள்
இருந்தன”
என்று
ஒபாமா
பெருமை
பேசிக்
கொண்டார்.
ஆனால்
தொழிற்துறையின்
புள்ளிவிபரங்கள்
பற்றிய
பகுப்பாய்வு
உத்தியோகபூர்வ
வேலையின்மை
விகிதத்தில்
ஏற்பட்டுள்ள
சரிவு
வேலையில்லாத
தொழிலாளர்களுக்கு
வேலை
கொடுக்கப்பட்டதால்
அல்ல,
வேலைகள்
கிடைக்காத
பெரும்
திகைப்பையொட்டி
தொழிலாளர்
தொகுப்பை
ஊக்கம்
இழந்த
தொழிலாளர்கள்
நீங்காததுதான்
எனக்
காட்டியுள்ளன.
பெருநிறுவன
பொருளாதாரக்
கணிப்பாளர்கள்
இப்பொழுது—அமெரிக்கப்
பொருளாதாரம்,
நிதிய
நெருக்கடியின்
தாக்கம்,
போர்,
வரவு-செலவுத்
திட்ட
செலவு
குறைப்பின்
தாக்கம்
ஆகியவற்றால்
அமெரிக்கப்
பொருளாதாரம்
மந்தநிலைக்குத்
திரும்பாது
என்ற
முன்கருத்தைத்
தளமாகக்
கொண்டது—நவம்பர்
2012ல்
உத்தியோகப்பூர்வ
வேலையின்மை
விகிதம்
8 சதவிகிதம்
அல்லது
அதற்கும்
மேலாக
இருக்கும்,
இரண்டாம்
உலகப்
போருக்குப்
பின்
தேர்தல்
தினத்தில்
மிக
உயர்ந்த
அளவாக
அது
இருக்கும்
என்று
கணித்துள்ளனர்.
2009
ல்
இருந்து
தற்போது
வரை
உள்ள
சரிவு
நிரந்தரமாக
வேலையற்று
இருக்கும்
ஒரு
நீண்டகால
வேலையின்மை
தொகுப்பைத்தான்
தோற்றுவித்துள்ளது.
6 மில்லியன்
அமெரிக்கர்கள்
6 மாதம்
அதற்கும்
மேலாக
கிட்டத்தட்ட
வேலையில்
இல்லாமல்
உள்ளனர்.
இதில்
தொழிலாளர்
தொகுப்பில்
இருந்து
விலகி
விட்ட
அதிகமான
மில்லியன்கள்
கணக்கில்
எடுத்துக்
கொள்ளப்படவில்லை.
புதிதாக
வேலையில்
இருந்து
நீக்கப்படும்
தொழிலாளி
சராசரியாக
வேலையில்
இருக்கும்
காலம்
39 வாரங்கள்
ஆகும்.
ஜனநாயக
மற்றும்
குடியரசுக்
கட்சிகளின்
பெருவணிக
அரசியல்வாதிகள்
சமூகத்தின்
இழிந்த
நிலையை
அதிகரிப்பதற்கு
நலன்களைக்
குறைத்தல்
அல்லது
அகற்றுதல்
என்ற
வேலையில்
ஈடுபட்டுள்ளனர்.
இவைதான்
முழு
வறிய
நிலைக்கு
பல்லாயிரக்கணக்கான
மில்லியன்
தொழிலாளர்களை
தள்ளிவிடுவதற்கு
குறுக்கே
உள்ளன.
மில்லியன்
கணக்கான
குறைவூதியத்
தொழிலாளர்கள்
இந்த
ஆண்டு
வரி
உயர்வைப்
பெறுவார்கள்.
செல்வந்தர்களுக்கு
கொடுக்கப்பட்ட
புஷ்ஷின்
வரிக்குறைப்புக்கள்
ஒபாமாவின்
ஆசியுடன்
இன்னும்
இரு
ஆண்டுகள்
தொடரப்படுகின்றன.
மாநில
மற்றும்
உள்ளூர்
அரசாங்கங்கள்
400,000 வேலைகளை
கடந்த
இரண்டு
ஆண்டுகளில்
குறைத்துவிட்டன.
இப்பொழுது
இன்னும்
மிகப்
பெரிய
வகையில்
ஊதியங்கள்,
சமூக
நலன்கள்
மற்றும்
தொழிலாளர்களின்
உரிமைகளை
பெரு
மந்த
நிலைக்குப்
பின்
இல்லாத
அளவிற்கு
மிகப்
பெரிய
வகையில்
தாக்குவதற்கு
ஈடுபட்டுவருகின்றனர்.
அதிக
வெளிப்படுத்தப்பட்ட
உதாரணத்தை
விஸ்கான்சன்
அளிக்கிறது.
ஆனால்
ஜனநாயக
கவர்னர்கள்
மற்றும்
குடியரசுக்
கட்சியின்
கவர்னர்கள்
பொதுத்
துறை
ஊழியர்களின்
ஊதியங்களையும்
நலன்களையும்
குறைத்தல்,
மருத்துவ
நலன்களை
அகற்றுதல்
அல்லது
குறைத்தல்,
மற்றும்
பிற
அரசப்
பணிகளைக்
குறைத்தல்
ஆகியவற்றில்
ஈடுபட்டுள்ளனர்.
இந்த
அரசாங்கச்
செலவுக்
குறைப்புக்கள்
கூட்டாட்சி
நிதிய
சமூகத்
திட்டங்கள்
பற்றி
வரவுள்ள
பாதிப்பின்
தாக்கத்தினால்
மிகச்
சிறிய
அளவிற்குப்
போய்விடும்.
உடனடியான
குறைப்பு
நடப்புக்
கூட்டாட்சிச்
செலவினங்களில்
வர
உள்ளது.
இதில்
$30 ல்
இருந்து
$60
பில்லியன்
வரை
குறைப்பு
இருக்கும்.
ஒபாமா
நிர்வாகமும்
காங்கிரசும்
இந்த
வாரம்
இத்திட்டத்திற்கு
இறுதி
வடிவைக்
கொடுக்கவுள்ளன.
இன்று
குடியரசுக்
கட்சியின்
கட்டுபாட்டிற்குள்
இருக்கும்
பிரதிநிதிகள்
மற்றும்
2012க்கான
வரவு-செலவுத்
திட்டத்தை
வெளியிட
உள்ளது.
இது
மருத்துவப்
பாதுகாப்பு,
மருத்துவ
உதவி
மற்றும்
சமூகப்
பாதுகாப்புத்
திட்டங்களில்
$4 டிரில்லியன்
அன்ற
உயர்ந்த
மதிப்பை
குறைப்புக்களில்
பெரிய
அளவில்
ஏற்படுத்தும்.
இவைதான்
மில்லியன்
கணக்கான
வயதான
குடிமக்களுக்கும்
உழைக்கும்
வறிய
நிலையிலுள்ள
தொழிலாளர்களுக்கும்
உயிரூட்டும்
தன்மையைக்
கொண்டவை
ஆகும்.
இவ்விதத்தில்
ஒபாமா
அவர்களால்
அழைக்கப்பட்ட
சுகாதார
பாதுகாப்பு
“சீர்திருத்தம்”
கொடுத்த
சுவட்டைத்தான்
அவர்கள்
பின்பற்றுகின்றனர்.
அதன்
நோக்கம்
அனைத்து
அமெரிக்கர்களுக்கும்
மருத்துவப்
பாதுகாப்பை
ஒரு
அடிப்படை
உரிமையாக
கொண்டுவருவது
என்று
இல்லாமல்,
சுகாதாரப்
பாதுகாப்புச்
செலவினங்களை
கூட்டாட்சி
அரசாங்கத்திற்காகவும்
பெருநிறுவன
அமெரிக்காவிற்காகவும்
குறைப்பது
ஆகும்.
இக்குறைப்புக்கள்தான்
போலிக்
கூற்றுக்களாக
வேலைகள்,
ஊதியங்கள்,
கல்வி,
சுகாதாரப்
பாதுகாப்பு,
வீட்டு
வசதிகள்
ஆகியவற்றிற்கு
இல்லை
என்று
கூறப்படுபவற்றை
வளர்க்கின்றனர்.
இதே
அரசியல்வாதிகள்தான்
பென்டகனுக்கும்
பெருநிறுவனங்கள்,
செல்வந்தர்களுக்கு
வரிக்
குறைப்பு
என்பவற்றிற்கும்
டிரில்லியன்களை
அள்ளிக்
கொடுக்கின்றனர்.
மறுதேர்தல்
அறிவிப்பிற்கு
முன்னதாக
ஒபாமா
கூட்டாட்சி
செலவைக்குறைத்தல்,
பற்றாக்குறையை
குறைத்தல்
என்னும்
உறுதிமொழிகளைக்
கூறும்போதே
லிபியா
மீது
நூற்றுக்கணக்கான
க்ரூஸ்
ஏவுகணைகளை
அனுப்பிவைத்துள்ளார்.
அதே
நேரத்தில்
மில்லியன்
மக்களைக்
கொன்று,
டிரில்லியன்கள்
செலவை
ஏற்படுத்திய
முடிவில்லா
போர்களை
ஆப்கானிஸ்தான்
மற்றும்
ஈராக்கில்
தொடர்கிறார்.
ஜனநாயகக்
கட்சியும்
வெள்ளை
மாளிகையும்
வெகுஜன
திருப்தித்
தொடர்ச்சிகளில்
ஒபாமா
மறுதேர்தல்
பிரச்சாரத்தின்
ஒரு
பகுதியாக
ஈடுபட்டுள்ளன.
பெரும்
நிதிய
நலன்கள்
மற்றும்
ஆளும்
வர்க்கத்தின்
ஆதரவு
இருந்தும்,
அடித்தளத்தில்
ஒரு
பதட்டமானதும்,
அச்சம்கூட
ஒபாமா
முகாமில்
உள்ளது.
இதை
குடியரசுக்
கட்சியின்
நிலைப்பாடு
பற்றிய
கவலை
இல்லை.
ஏனெனில்
ஒபாமா
அதே
கொள்கை
வடிவமைப்பைத்தான்
தழுவிச்
செயல்படுகிறார்.
ஆனால்
மக்கள்
இருகட்சிகள்
மீதும்
அவநம்பிக்கை
கொண்டிருப்பது
மற்றும்
முழு
பெருநிறுவனக்
கட்டுப்பாட்டிற்குள்
இருக்கும்
அரசியல்
முறைக்கு
பெருகும்
எதிர்ப்பு
பற்றிய
அதிக
அடையாளங்கள்
வந்துள்ளன.
காலப்
கருத்துக்
கணிப்பு,
பெப்ருவரியில்
வெளிவந்தது.
ஜனநாயகக்
கட்சிக்கான
ஆதரவு
ஒவ்வொரு
மாநிலத்திலும்
விழுந்துவிட்டது,
குறிப்பாக
தொழில்துறை
மாநிலங்கள்
பென்சில்வானியாவில்
இருந்து
சரிவு
கடுமையாகப்
பாதித்துள்ள
மின்னிசோட்டா
வரை
விழுந்து
விட்டது
எனக்
காட்டுகிறது.
கடந்த
இலையுதிர்காலத்தில்
மன்றத்தில்
குடியரசுக்
கட்சி
பெரும்பான்மையை
பெற்றதையொட்டி
குடியரசுக்
கட்சிக்கான
ஆதரவும்
சரிந்துவிட்டது.
லிபிய
போர்
தொடங்குவதற்கு
சற்று
முன்
எடுக்கப்பட்ட
கருத்துக்
கணிப்பில்
ஒபாமாவின்
நிலைப்பாடு
பற்றிய
தரம்
42 சதவிகிதம்
எனக்
குறைந்துவிட்டது.
அவருடைய
ஜனாதிபதி
பதவிக்
காலத்திலேயே
இது
மிகவும்
குறைவானது
ஆகும்.
கருத்துக்
கணிப்புக்களில்
எண்ணிக்கை
குறைந்துள்ளதைவிட
மிகவும்
முக்கியமானது
தொழிலாள
வர்க்கத்திடையே
பெருகியுள்ள
போராளித்தனமும்
சமூகச்
சீற்றமும்
ஆகும்.
விஸ்கான்சனில்
பெப்ருவரி,
மார்ச்
மாதங்களில்
வெடித்த
போராட்டம்
செயற்பட்டியலில்
இன்னும்
பரந்த
சமூக
மோதல்களுக்கு
இடம்
உண்டு
என்பது
பற்றிய
எச்சரிக்கையாக
உள்ளது.
இச்சமூக
சக்திகளின்
உந்துதல்
சக்தி—அரசியல்
முறையில்
அதிகம்
ஒப்புக்கொள்ளப்படவில்லை
என்றாலும்
அமெரிக்க
வாழ்வின்
மைய
உண்மை—முன்னோடியில்லாத
வகையில்
சமூக
சமத்துவம்
வளர்ந்துள்ளது
என்பதாகும்.
ஒரு
பெரும்
செல்வந்தர்
அடுக்கு
கணக்கிலடங்கா
செல்வத்தை
குவிக்கிறது.
அதே
நேரத்தில்
மக்களில்
பெரும்பாலானவர்கள்
அன்றாட
வாழ்வை
கழிக்க
திணறுகின்றனர்.
ஒபாமாவிடமிருந்து
Tea Party
வரை,
அமெரிக்க
அரசியல்
ஸ்தாபனத்தில்
அனைத்துப்
பிரிவுகளும்
முதலாளித்துவ
முறையை
ஆதரிக்கின்றன.
அதுவோ
தொடர்ச்சியாக
இந்த
சமத்துவமற்ற
நிலையை
தோற்றுவித்து,
ஆழப்படுத்துகிறது.
பொருளாதார
வல்லுனர்
ஜோசப்
ஸ்டிக்லிஸ்
Vanity Fair இதழின்
தற்போதைய
பதிப்பில்
சமூக
சமத்துவமின்மையின்
பாதிப்பு
பற்றி
சிறப்பான
வர்ணனையை
கொடுத்துள்ளார்.
“1
சதவிகிதத்தினருடையது,
ஒரு
சதவிகிதத்தினரால்,
ஒரு
சதவிகிதத்தினருக்காக”.
அமெரிக்காவில்
பொருளாதாரத்தில்
துருவமுனைப்படுத்தல்
ஏற்பட்டுள்ளதை
பற்றி
நன்கு
நிறுவப்பட்ட
உண்மைகளை
அவர்
மேற்கோளிடுகிறார்.
உயர்மட்ட
1 சதவிகிதத்தினர்
தேசிய
வருமானத்தில்
25 சதவிகிதத்தை
எடுத்துக்
கொண்டு,
நாட்டின்
செல்வத்தில்
40 சதவிகிதத்தை
கட்டுப்பாட்டிற்குள்
கொண்டுள்ளனர்.
அவர்களுடைய
வருமானங்கள்
கடந்த
தசாப்தத்தில்
18 சதவிகிதம்
உயர்ந்தது.
அதே
நேரத்தில்
மக்களின்
பெரும்பாலானவர்களின்
வருமானங்கள்
சரிந்துவிட்டன.
சமூக
கொள்கை
மற்றும்
அரசியல்
வாழ்வின்
மீது
இந்த
துருவமுனைப்படுத்தலின்
பாதிப்பையும்
அவர்
குறிப்பிடுகிறார்.
“செல்வத்தை
பொறுத்தவரை
ஒரு
சமூகம்
அதிக
பிளவுகளைக்
கொண்டால்,
பொதுத்
தேவைகளுக்கு
செலவழிப்பதற்கு
செல்வந்தர்கள்
கூடுதலாகத்
தயக்கம்
காட்டுகின்றனர்.
பூங்காக்கள்,
கல்வி
அல்லது
மருத்துவப்
பாதுகாப்பு
அல்லது
சுய
பாதுகாப்பிற்கு
செல்வந்தர்கள்
அரசாங்க
உதவியை
நம்பியிருக்க
தேவையில்லை—அவர்கள்
இவ்வற்றைத்
தாங்களே
விலைகொடுத்து
வாங்க
முடியும்….
“கிட்டத்தட்ட
அனைத்து
அமெரிக்க
செனட்டர்களும்
கீழ்மன்றத்தில்
பெரும்பலான
பிரதிநிதிகளும்
அவர்கள்
பதவிக்கு
வரும்போது
உயர்மட்ட
1 சதவிகித
உறுப்பினர்கள்,
உயர்மட்ட
1 சதவிகிதத்தால்
பதவியில்
இருத்தப்படுகின்றனர்,
உயர்மட்ட
1 சதவிகிதத்திற்கு
பணிபுரியாவிட்டால்,
உயர்மட்ட
1 சதவிகிதத்தினர்
அவர்கள்
பதவியை
விட்டு
நீங்கும்போது
வெகுமதி
அளிக்காது
என்பதை
அறிவர்.
வணிகம்,
பொருளாதாரப்
பிரிவுகளை
பற்றி
பொதுவாக
முக்கிய
நிர்வாகத்துறைப்
பிரிவின்
கொள்கை
இயற்றுபவர்கள்,
வணிக
முக்கிய
நிர்வாகத்துறைப்
பிரிவின்
கொள்கை
இயற்றுபவர்களும்
இந்த
உயர்
1 சதவிகித
மட்டத்தில்
இருந்து
வருபவர்கள்தாம்.”
இத்தகைய
மிக
அதிக
உயர்மட்ட
தன்மையின்
செல்வாக்கைக்
கொண்ட
சமூகத்தின்
விளைவுகளை
கண்டு
அச்சப்படுவதும்
தாராளவாதியான
ஸ்டிக்லிஸ்
ஆளும்
வர்க்கத்தை
மக்களை
இன்னும்
கடுமையாக
விரட்டக்கூடாது
என்று
எச்சரித்து
அவர்
எழுதுகிறார்:
“சமீபத்திய
வாரங்களில்
மில்லியன்
கணக்கில்
மக்கள்
தெருக்களுக்கு
வந்து
அவர்களுடைய
சமூகங்களின்
அரசியல்,
பொருளாதார,
சமூக
நிலைமைகளிலுள்ள
அடக்குமுறைத்தன்மை
பற்றி
ஆர்ப்பரிப்பதை
காண்கிறோம்.
… தெருக்களில்
மக்கள்
உணர்வை
நாம்
காணும்போது,
நாம்
நம்மையே
கேட்டுக்
கொள்ள
வேண்டியது
ஒரு
வினாவைத்தான்:
இது
எப்பொழுது
அமெரிக்காவிற்கு
வரும்?
முக்கிய
வகைகளில்
நம்
சொந்த
நாடும்
இந்த
தொலைவிலுள்ள,
தொந்திரவிற்குட்பட்ட
இடங்களைப்
போல்தான்
மாறிவிட்டது.”
இத்தகைய
புரட்சிகர
எழுச்சி
என்பது
அமெரிக்காவில்
பெருகிய
முறையில்
தவிர்க்க
முடியாததாகிறது.
முக்கியமான
சவால்
ஜனநாயக,
குடியரசுக்
கட்சிகளிலுள்ள
தொழிலாள
வர்க்கத்தின்
அரசியல்
சுயாதீனத்தை
நிறுவத்
தேவையான
தலைமையையும்
முன்னோக்கையும்
நிறுவி,
சோசலிச
கொள்கைகளுக்காக
வெகுஜன
இயக்கத்தைக்
கட்டமைப்பதுதான்.
“இன்றே
சோசலிசத்திற்கான
போராட்டம்”
என்று
சோசலிச
சமத்துவக்
கட்சி,
சமூக
சமத்துவத்திற்காக
சர்வதேச
மாணவர்கள்
அமைப்பு
மற்றும்
உலக
சோசலிச
வலைத் தளம்
ஆகியவை
இம்மாதம்
நடத்தும்,
வரவிருக்கும்
வார
இறுதியில்
மிச்சிகன்
ஆன்
ஆர்பரில்
தொடங்கவுள்ள
மாநாடுகளின்
அடிப்படை
இதுதான்.
இந்த
மாநாடுகள்
தொழிலாள
வர்க்கத்தின்
அடிப்படை
சமூக
உரிமைகளை
பாதுகாப்பதற்கு,
ஏகாதிபத்திய
போரை
எதிர்ப்பதற்கு,
ஜனநாயக
உரிமைகளின்
மீதான
தாக்குதல்களை
நிறுத்தவதற்கு
ஒரு
சோசலிச
திட்டத்தை
விவாதிக்கும்.
உழைக்கும் மக்கள்
மற்றும்
இளைஞர்கள்
மீது
நடத்தும்
தாக்குதலை
எதிர்ப்பதற்கு
ஒரு
முன்னோக்கை
தேட
முற்படும்
எமது
வாசகர்கள் மற்றும்
அனைவரையும்
இதில்
கலந்து
கொள்ளும்
திட்டத்தை
மேற்கோள்ளுமாறு
வலியுறுத்துகிறோம் |