WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
The war against Libya and the eruption
of European imperialism
லிபியாவிற்கு எதிரான யுத்தமும்ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் எழுச்சியும்
Chris
Marsden
5 April 2011
லிபியாவிற்கு எதிரான
ஏகாதிபத்திய யுத்தத்திற்கு ஏறத்தாழ ஏகமனதாய்
வரிசையில்
நிற்க ஐரோப்பிய
சக்திகள் தயாராக இருப்பது,
அந்த கண்டத்தின் அரசியல்
வாழ்வில் ஒரு தீர்மானகரமான
நிகழ்வாகும்.
பிரெஞ்சு வெளியுறவுத்துறை
மந்திரி டொமினிக் டு வில்பன், “இராணுவ
தலையீடு மிக மோசமான தீர்வு என்று நாங்கள் நம்புகிறோம்”
என்று
2003,
ஜனவரி
20இல்
ஈராக்
பற்றி கூறினார்.
ஐக்கிய நாடுகள்
பாதுகாப்பு சபையில் அப்போது பாரீஸ் யுத்தத்திற்கு எதிராக வாக்களித்தது.
ஜேர்மனியிலிருந்து வந்த
யுத்தத்திற்கான
எதிர்ப்புடன் சேர்ந்து,
"இடது"
குழுக்கள் மற்றும்
இடது சமூக ஜனநாயகவாதிகள் மத்தியில் இருந்த உத்தேச தலைவர்களை,
அமெரிக்க
இராணுவவாதத்திற்கு ஓர் எதிர்பலமாக ஐரோப்பாவை பாராட்டவும், “பிரான்ஸ்
வாழ்க!”
என்ற முழக்கங்களுக்கு
இட்டுச் செல்லும் அளவிற்கும் கூட,
இது குழப்பமான
கண்ணோட்டத்திற்கு அவர்களை இட்டுச் சென்றது.
லிபியாவிற்கு எதிரான
யுத்தத்திற்கு ஓடுகையில்,
பிரான்ஸ் அதன் நீண்டகால
கூட்டாளி ஜேர்மனிக்கு எதிராக நின்றதோடு,
யுத்தத்தை ஆதரிக்காத
பேர்லினின் தயக்கத்தைப் பகிரங்கமாக குற்றஞ்சாட்டி,
பிரிட்டன் மற்றும்
வாஷிங்டன் பக்கம் அதனை நிலைநிறுத்திக் கொண்ட சார்க்கோசியின் அரசாங்கத்துடன் அது
இராணுவ தலையீட்டிற்கான அழைப்பில்
முன்னணியில் நின்றது.
அமெரிக்காவின்
ஒத்துழைப்புடன்,
ஐ.நா.
பாதுகாப்பு சபையின்
1973
தீர்மானத்தின் மூலமாக
லிபியாவிற்கு எதிரான ஒரு தாக்குதலுக்கு பிரான்ஸ் அழுத்தம் அளித்தது.
மார்ச்
10, 2011இல்
தேசிய இடைக்கால சபையை லிபியாவின் அரசாங்கமாக அங்கீகரித்த உலகின் முதல் நாடாக அது
மாறியது.
மார்ச்
19இல்
அதன் முதல் விமானத்தாக்குதலை தொடங்கியது.
லிபியா மற்றும் கடாபி
ஆட்சியின் மீது பிரான்சின் குறிப்பிட்ட விரோதம்,
சாட்டில்
(Chad)
நிகழ்ந்த உள்நாட்டு யுத்தம்
வரையில் பின்நோக்கி நீள்கிறது.
மேலும் லொக்கெர்பியில்
(Lockerbie) Pan Am Flight 103
அழிக்கப்பட்டு ஓர்
ஆண்டிற்குள்ளேயே 1989இல்
பிரான்ஸின் UTA Flight 772
விமானத்தை தகர்த்த
குண்டுவீச்சால் அந்த பகைமை இன்னும் மோசமடைந்தது.
லிபியாவில் இராணுவ தலையீடு
செய்வதற்கு பிரான்சின் மாற்றத்தில் இது ஒரு
பகுதி
பங்கு
வகித்திருக்கக்கூடும்.
எவ்வாறிருப்பினும்,
இன்னும் அடிப்படையாக,
ஆபிரிக்காவில்
தன்னுடைய வரலாற்றுரீதியிலான ஏகாதிபத்திய விருப்பங்களுக்கு பிரான்ஸ் லிபிய ஆட்சியை
ஒரு தடையாக பார்க்கிறது என்ற,
ஓர் ஆட்சியைத்
தூக்கியெறியும் பரந்த உந்துதலில் இருந்து மட்டும் தான் இதை புரிந்து கொள்ள முடியும்.
வாஷிங்டனைப் போலவே,
அதேயளவிற்கு
பாரீஸினாலும்,
எகிப்து மற்றும்
துனிசியாவில் மேற்கத்திய
ஆதரவுடன்
இருந்த
சர்வாதிகாரங்களுக்கு எதிரான மக்கள் போராட்டமானது வட ஆபிரிக்காவில் ஏகாதிபத்திய
செல்வாக்கிற்கு ஓர் அச்சுறுத்தலாக பார்க்கப்பட்டது.
லிபியாவிற்கு எதிரான
யுத்தம் நேரடியாகவே ஒரு தலையாட்டி ஆட்சியை நிறுவுவதற்கும்,
மற்றும்
அப்பிராந்தியம் முழுவதும் ஏற்படக்கூடிய சோசலிச புரட்சியின் அச்சுறுத்தலுக்கு எதிரான
நடவடிக்கைகளுக்கு ஒரு தளம் அமைப்பதற்கும் வாய்ப்பை அளிக்கிறது.
ஐவரி கோஸ்ட்டில் இருந்து
தொடங்கி ஆபிரிக்காவிலும்,
மத்தியகிழக்கிலும் இன்னும்
மேற்படி தலையீடுகளை அனுமதிக்க மார்ச் 24இல்
ஐ.நா.வின்
1973
தீர்மானத்தை
"பாதுகாப்பதற்கான
பொறுப்புணர்வு"
என்று மேற்கோளிட்டு
ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி குறிப்பிட்டது,
இன்னும் கூடுதல் இராணுவ
தலையீடுகள் செய்வதற்கு லிபியா ஒரு முன்மாதிரியாக மாற்றப்படுவதாக பார்க்கப்படுகிறது.
ஐவரி கோஸ்டின்
தற்காலிக தலைவர் லௌரெண்ட் ஜிபாக்போவின்
கீழ் செயல்பட்டு
வரும் இராணுவ முகாம்கள்
மீது நேற்று
பிரான்ஸூம்,
ஐ.நா.
படைகளும்
ஹெலிகாப்டர்களில் இருந்து தாக்குதல் நடத்தின.
பிரான்ஸ் அது
தேர்ந்தெடுத்திருக்கும் கைப்பாவையான அலாஸ்னி அவுட்டாராவின்
(Alassane Ouattara)
வெற்றியை உறுதிசெய்ய அதன்
முன்னாள் காலனித்துவ நாட்டில் இருக்கும் அதன் 1,500
இராணுவ துருப்புகளுக்குப்
பலம் சேர்க்கும் விதத்தில் கூடுதலாக மேலும் 500
துருப்புகளை பாரீஸ் இப்போது
அனுப்பி உள்ளது.
இத்தகைய வெளியுறவு
கொள்கைகளை கைக்கொண்டிருப்பது லிபியாவிற்கு எதிரான யுத்தத்தை ஆதரிப்பதில் ஏனைய
ஐரோப்பிய சக்திகளுக்கும் உயிரூட்டும்.
லிபிய எதிர்ப்பு
பிரிவினரை
கொண்டு வாஷிங்டன்
அதன் இராணுவ பலம் மற்றும் அரசியல் செல்வாக்கின் மூலமாக,
சீனா மற்றும்
ஐரோப்பிய சக்திகள் ஆகிய
இரண்டிடம் இருந்தும் வரும்
அதன் ஆதிக்கத்திற்கு எதிரான சவாலை உடைக்க விரும்புகிறது.
யுத்தத்திற்கு
முன்னர்,
லிபியாவில் அமெரிக்க
பொருளாதார செல்வாக்கு குறைவாகவே இருந்தது.
இத்தாலி தான் திரிபொலியின்
முக்கிய வியாபார கூட்டாளியாக இருந்தது.
அதைத் தொடர்ந்து
ஜேர்மனியும்,
சீனாவும் இருந்தன.
யுத்தத்திற்குப் பின்னர்,
ஒரு புதிய சமநிலையை
உருவாக்குவதற்கு உறுதியளிக்க தேசிய இடைக்கால சபை அழைக்கப்படும்.
ஆனால் யுத்தத்தின்
கொள்ளைப்பொருட்களை
பங்கீட்டுகொள்வதற்கிடையே
நசுக்கப்படாமல்
இருக்கலாம் என்ற
நம்பிக்கையினாலும்,
பிரான்ஸைப் போலவே,
அதேபோன்ற காலனித்துவ
தலையீடுகளுக்கு முன்மாதிரிகளை அமைப்பதில் தங்களின் மேலோங்கிய நலன்களைக்
கொண்டிருப்பதாலும் அமெரிக்க தலைமையின்கீழ் ஓர் இராணுவ முன்னெடுப்பை நடத்த
பெரும்பாலான ஐரோப்பிய சக்திகள் ஒருபோதும் கையெழுத்திடவில்லை.
ஜேர்மனி விதிவிலக்காக
நிற்பது 2003இல்
இருந்த அதன் நிலைப்பாட்டின் ஒரு தொடர்ச்சி அல்ல.
இடைப்பட்ட காலக்கட்டத்தில்,
அமெரிக்காவிற்கு
எதிரான அதன் நிலைப்பாட்டை வலுப்படுத்திய புதிய கூட்டணிகளை நோக்கி பேர்லின் ஒரு
குறிப்பிடத்தக்க நிலைநோக்கைப் பின்தொடர்ந்துள்ளது.
பிரேசில்,
ரஷ்யா,
இந்தியா,
மற்றும் சீனா
(BRIC
நாடுகள்)
ஆகியவற்றோடு
சேர்ந்து ஐ.நா.
பாதுகாப்பு சபையின்
1973
தீர்மானத்தை,
அதன் நேட்டோ
கூட்டாளிகளுக்கு எதிராக ஜேர்மனி தவிர்த்துள்ளது.
உண்மையில்,
ஜேர்மனி பல
ஆண்டுகளாக ரஷ்யாவுடன் நெருங்கிய உறவுகளைக் கோரி வருகிறது.
இதன்மூலம் அது அதன்
எரிவாயு தேவைகளைச் சார்ந்துள்ளது.
சீனாவுடனான ஜேர்மனின்
வர்த்தகம் ஆண்டுக்கு $100
பில்லியனைத் தாண்டி உள்ளது.
ஜேர்மனியின் உலகளாவிய
நலன்களை
முன்னெடுப்பதில் வட ஆபிரிக்காவிலும்,
மத்தியகிழக்கிலும் அதன்
பொருளாதார செல்வாக்கு முக்கிய கருவிகளாக இருப்பதாக பேர்லின் ஒருவேளை நம்பக்கூடும்.
ஆனால் அமெரிக்காவால்
ஓரங்கட்டப்படாமல் இருப்பதை ஜேர்மனி தவிர்க்க வேண்டுமானால்,
அது அதன் மற்றைய
ஐரோப்பிய
பங்காளிகளைப் போலவே,
இதுபோன்ற
விருப்பங்களுக்கும்,
அதன் இராணுவ பலமின்மைக்கும்
இடையில் இருக்கும் பிளவை,
தவிர்க்க முடியாமல்
முகங்கொடுத்தே ஆக வேண்டும். 1930களைப்
போலவே,
தீவிரமடைந்துவரும் பூகோள-அரசியல்
பதட்டங்கள் மீண்டும் ஐரோப்பா ஆயுதமேந்துவதை நோக்கி தவிர்க்க முடியாமல் இட்டுச்
செல்கிறது.
ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பின்
இந்த புதிய பிரச்சாரத்திற்குக் காரணம் என்ன?
காகிதத்தில் இருந்த சொத்து
மூலதனங்களை
துடைத்தழித்த 2008
நிதியியல் நெருக்கடியானது,
முக்கிய ஏகிதிபத்திய
சக்திகளுக்கு
இடையிலான
விரோதப்போக்கை ஒரு
புதிய
தீவிரத்துடன்
அதிகரித்ததுடன்,
உலக
முதலாளித்துவத்தின் வாய்ப்புகளை
நோக்கிய
ஒரு திருப்புமுனை
என
நிரூபித்தது.
ஒரு நீண்டகால
நிகழ்வுபோக்கின்
விளைவால் இந்த
நெருக்கடி விளைந்தது.
இந்த காலங்கடந்த
நிகழ்வுபோக்கில் அமெரிக்கா முதன்மை உலக பொருளாதார சக்தி என்ற நிலையிலிருந்து
கடன்வாங்கும் முன்னனி நாடுகளுக்குள் முதலாளித்துவ ஸ்திரப்பாட்டிற்கு
உத்தரவாதமளிக்கும் ஒரு நாடாகவும்,
உலக நிலைமைகளில் பொருளாதார
மற்றும் அரசியல் ஸ்திரமின்மையின் முதன்மை ஆதாரமாகவும் மாறியிருந்தது.
அமெரிக்காவின்
உலகளாவிய இராணுவ அந்தஸ்தை காப்பாற்றிக்கொள்ள ஈராக்கை அச்சாரமாக கொண்டு தொடங்கி
ஆக்கிரமிப்பை தீவிரப்படுத்துவதைத் தவிர,
அதன் வீழ்ச்சியை மீண்டும்
சந்திக்கவோ அல்லது வளர்ந்துவந்த சக்திகளின்,
குறிப்பாக சீனாவின்,
அத்துடன் அதன்
பாரம்பரிய போட்டியாளர்களான ஐரோப்பா மற்றும் ஜப்பானின் சவாலை சந்திக்கவோ அதற்கு
வழியில்லாமல் இருந்தது.
சீனா,
ஐரோப்பா,
ஏனையவும் இதையே தான்
பின்தொடர வேண்டும்;
பின்தொடரும்.
சந்தைகள்,
இலாபங்கள் மற்றும்
மூலவளங்களுக்கான இந்த தீவிர போராட்டம் இறுதியாக ஒரு மூன்றாம் உலக யுத்தத்தின்
வெடிப்பைக் காட்டி அச்சுறுத்துகிறது.
இந்த நெருக்கடி வர்க்க
போராட்டத்தின் ஒரு தீர்க்கமான தீவிரத்தையும் தூண்டுகிறது.
அரசு கருவூலங்களைக்
காலியாக்கி வங்கிகளைக் காப்பாற்றுவது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சக்திகளுக்கு
ட்ரில்லியன் கணக்கில் செலவைக் கொடுத்தது.
ஆனால் அது
1930களில்
ஏற்பட்டதற்கு இணையாக இதுவரையில் ஏற்பட்டிராத ஒரு பொருளாதார நெருக்கடியின் தொடக்கமாக
மட்டுமே இருந்தது.
பிணையெடுப்பு வந்ததும்
முற்றுமுழுபொருளாதாரத்தின்
தாக்கங்களான
விரைவான மந்தநிலை,
உள்நாட்டு மொத்த
உற்பத்தியைவிட 50
சதவீதம்,
80 சதவீதம்,
நூறு சதவீதம் என
அரசு கடன்கள் எகிறியது
ஆகியவை
வந்தன.
இந்த இழந்த வருவாய்
அனைத்தையும் திரும்ப பற்றியெடுக்க முதலாளித்துவத்திற்கு இருக்கும் ஒரேவழி,
தொழிலாள
வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களை கடுமையாக கீழே கொண்டு வருவதேயாகும்.
உள்நாட்டில் வர்க்க
யுத்தத்தின் ஒரு கொள்கையிலிருந்து வெளிநாட்டில் ஏகாதிபத்திய யுத்தத்திற்குக் கொண்டு
செல்வது வரை இது செல்லும்.
ஐரோப்பா முழுவதிலும் உள்ள
அரசாங்கங்கள்,
வெட்டுக்கள்,
கூலி குறைப்புகள்
மற்றும் சுரண்டலை உயர்த்துவதன் மூலமாக நூறு பில்லியன் கணக்கான யூரோக்கள்
சம்பந்தப்பட்ட வரலாற்றுரீதியில் முன்னொருபோதும் இல்லாத சிக்கன நடவடிக்கைகள் மூலமாக,
பெரிய
பெருநிறுவனங்கள் மற்றும் செல்வந்தர்களின் நலன்களுக்காக வர்க்க சக்திகளின் ஓர்
அடிப்படை மறுசீரமைப்பைத் திணிக்கும் நோக்கத்தில் உள்ளன.
ஏகாதிபத்திய
இராணுவவாதத்தின் வெடிப்பில் புதிய கட்டத்திற்கும்,
தொழிலாள வர்க்கத்திற்கு
எதிரான வர்க்கப் போருக்கு திரும்பியமைக்கும் இடையில் உள்ள தொடர்பானது,
சிக்கன நடவடிக்கை
முறைமைகளைத் திணிக்கையில் நடைபெற்ற விவாதங்களின் போது ஊடகங்களின் வழக்கமான
பயன்பாட்டில் இராணுவப் பதங்கள் பயன்படுத்தப்பட்டதில் பிரதிபலிக்கிறது.
இந்த பொருளாதார மோதல்
ஏற்கனவே எந்தளவிற்கு சென்றுள்ளது என்பதை Economist
இதழின்
மார்ச்
24
பதிப்பு எடுத்துக்காட்டுகிறது.
அது குறிப்பிட்டது:
“ஆணையங்கள்
அவற்றின் அதிர்ச்சியையும்,
மதிப்பையும் நிதியியல்
மற்றும் செலாவணி விகிதங்களின் வடிவத்தில் காட்டியுள்ளன.
நிதியியல் துறையின்
முழுமையான பொறிவை அவர்கள் தடுத்துள்ளார்கள்
-அதுசரி,
ஒருபுறம்
வங்கியாளர்களின் சம்பளங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.
பெருநிறுவன துறையும்
சிறப்பாக செயல்பட்டு வருகிறது…
ஆனால் மீட்பினால்
கிட்டிய பலாபலன்கள் தொழிலாளர்களுக்கு அல்லாமல் மூலதன உரிமையாளர்களுக்குத் தான்
ஏறத்தாழ முற்றிலுமாக வினியோகிக்கப்பட்டுள்ளது.
மீட்பு தொடங்கியதில்
இருந்து அமெரிக்காவில் மொத்த உண்மையான கூலிகள் 168
பில்லியன் டாலராக
உயர்ந்துள்ளது.
ஆனால் இலாபங்களில் ஏற்பட்ட
$528
பில்லியன் உயர்வு அதை
வெகுதூரத்திற்கு முந்திச் சென்றுள்ளது.
இலாபங்கள் கூலிகளைவிட
அதிகமாகியிருப்பது,
ஐம்பது ஆண்டுகளில் இதுதான்
முதல்முறை யாகும் என்று Dhaval Joshi of BCA Research
கணக்கிட்டுள்ளது.
“ஜேர்மனியில்,
மீட்பு
தொடங்கியதிலிருந்து €113
பில்லியன்
($159
பில்லியன்)
அளவிற்கு இலாபங்கள்
உயர்ந்துள்ளன.
ஆனால் பணியாளர் சம்பளம்
வெறும் €36
பில்லியன் மட்டுமே
உயர்ந்துள்ளது.
இலாபங்கள்
£14
பில்லியன்
($22.7
பில்லியன்)
அளவிற்கு
உயர்ந்துள்ள பிரிட்டனில் விஷயங்கள் தொழிலாளர்களுக்கு இன்னும் மோசமாக உள்ளது.
ஆனால் நிகர மொத்தம்
நிஜ ஊதியங்கள் £2
பில்லியன் வீழ்ச்சி
அடைந்துள்ளது…
1980இல்
இருந்தே பொருளாதார
அபிவிருத்திக்கும்
ஒத்துழைப்பிற்குமான
அமைப்பு
(OECD)
எங்கிலும் தொழிலாளர்களின்
பங்கு வீழ்ச்சியில் உள்ளது.
இந்த இடைவெளி குறிப்பாக
அமெரிக்காவில் இன்னும் அதிகமாக உள்ளது: 1973
மற்றும்
2007க்கு
இடையில் உற்பத்தி 83
சதவீதம் உயர்ந்தது,
ஆனால் ஆண்களின் நிஜ
மத்திய ஊதியங்கள் வெறும் 5
சதவீதம் மட்டுமே உயர்ந்தது.”
இது ஆளும் வர்க்கம் மனதில்
என்ன கொண்டிருக்கிறது என்பதன் தொடக்கம் மட்டும் தான்.
பிரான்சில் சார்க்கோசி
அல்லது பிரிட்டனில் கன்சர்வேடிவ் கட்சி தலைமையிலான கூட்டணி போன்ற நெருக்கடியில்
மூழ்கியிருக்கும் ஆட்சிகள் அவற்றின் உள்நாட்டு நிகழ்ச்சிநிரலில் இருந்து கவனத்தைத்
திசைதிருப்பும் கருவியாக லிபியா மீதான கொடி-அசைப்பைப்
பயன்படுத்தும் போது,
தொழிலாளர்களுக்கு
எதிரான
தாக்குதல்கள்
இன்னும் ஆழமடையும்.
தொழிலாள வர்க்கம் இந்த
அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு அதன் சொந்த விடையிறுப்பை நெறிப்படுத்திக் கொள்ள
வேண்டும்.
முதலாளித்துவத்தின்
வெளியுறவு மற்றும் உள்நாட்டு கொள்கை பெருநிறுவனங்கள் மற்றும் பெரும் பணக்கார
மேற்தட்டின் உலகளாவிய நலன்களால் தூண்டப்பட்டிருப்பதைப் போலவே,
அவ்வாறே
தொழிலாளர்களும் அவர்களின் சொந்த ஐக்கியப்பட்ட சர்வதேச மூலோபாயத்தை உருவாக்கிக்
கொள்ள வேண்டும்.
யாருடைய ஒப்புதலுடன்
லிபியாவிற்கு எதிரான யுத்தம் நடத்தப்பட்டு வருகிறதோ அந்த அரசாங்கங்களுக்கு அல்லது ஐ.நா.விற்கு
பாசிச முறையீடுகள் மூலமாக யுத்த எதிர்ப்பைக் காட்ட முடியாது.
மேலும்
தொழிலாளர்களின் எந்த பிரிவிடமிருந்தும் மற்றும் தொழிற்சங்க
அதிகாரத்துவத்திடமிருந்தும் எந்த யுத்த எதிர்ப்பு நிலைப்பாட்டையும் எதிர்பார்க்க
முடியாது.
வேலைகள் மற்றும் சேவைகளைப்
பாதுகாப்பதற்கான போராட்டத்தை போன்றே,
யுத்தத்திற்கு எதிரான
போராட்டத்திற்கும் தொழிலாளர்களாலேயே நடத்தப்படும் வர்க்கப் போராட்டம்
அவசியப்படுகிறது.
சமூக சமத்துவம் மற்றும்
நிஜமான ஜனநாயகத்தின் அடிப்படையில் அமைந்த ஒரு அமைப்புமுறையுடன் மூலதனத்தின் ஆட்சியை
மாற்றும் போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அரசியல்ரீதியில்
அணிதிரட்டுவதே ஏகாதிபத்திய யுத்தத்திற்கு அளிக்கப்படும் ஒரே தீர்க்கமான விடையாகும்.
ஆளும் மேற்தட்டிடம்
இருந்து செல்வவளத்தை மறுபங்கீடு செய்வதன் மூலம் உழைக்கும் மக்களுக்கு அளிக்க-அதாவது,
பெருநிறுவனங்கள்
மற்றும் நிதியியல் ஏகபோகங்கங்களிடமிருந்து பறித்து ஜனநாயகரீதியில்-கட்டுப்படுத்தப்பட்ட
பொதுத்துறை நிறுவனங்களுக்குள் அவற்றை மாற்றுவது-நாகரீகமான வேலைகள்,
சமூக சேவைகள்,
மருத்துவ சேவைகள்
மற்றும் அனைவருக்கும் கல்வி ஆகியவற்றிற்கான போராட்டத்துடன் யுத்த எதிர்ப்பையும்
இணைத்து தொழிலாளர்கள் அவர்களின் சொந்தக் கரங்களில் அதிகாரத்தைக் கையிலெடுப்பதை இது
குறிக்கிறது.
ஏகாதிபத்தியமெனும் பொதுவான
எதிரிக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளர் வர்க்கத்தை சர்வதேசரீதியில்
ஐக்கியப்படுத்துவது தான் அனைத்து முன்னேறிய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின்
அடிப்படை கோட்பாடாக இருக்க வேண்டும்.
நான்காம் அகிலத்தின்
அனைத்துலகக் குழுவின் பிரிவுகளை சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கான புதிய புரட்சிகர
தலைமையாக கட்டியெழுப்புவதன் மூலமாகவே இந்த ஐக்கியத்தை நிஜமாக்க முடியும் |