WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
The
corporate looting of America
அமெரிக்காவின் பெருநிறுவனக்
கொள்ளை
Barry
Grey
4 April 2011
பங்குபத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்துடன் அமெரிக்க வாகனத்துறை நிறுவனம்
Fordஆல்
வெள்ளியன்று பதிவு செய்யப்பட்ட தகவலின்படி,
அதன் தலைமை
செயலதிகாரி ஆலன் முல்லேல்
2010இல்
அதற்கு
முந்தைய ஆண்டைவிட
48
சதவீத உயர்வுடன்
$26.52
மில்லியன் மதிப்பிலான
வருமான தொகையைப் பெற்றார்.
இது இந்த
செயலதிகாரிக்கு மார்ச்சில் அளிக்கப்பட்ட
$56.6
மில்லியன் பங்கு
கொடுப்பனவுக்குக் கூடுதலாக வழங்கப்பட்டதாகும்.
இதனால் ஓராண்டில்
அவர் பெற்றுள்ள மொத்த தொகை
83
மில்லியன் டாலருக்கும்
அதிகமாகும்.
செயற்குழு
தலைவர் பில் ஃபோர்ட் ஜூனியரும் பங்கு ஒதுக்கீட்டில் கிடைத்த
$42.2
மில்லியன் டாலருடன்
சேர்த்து, $26.42
மில்லியன் டாலரை
பெரும் உயர்வாக பெற்றார்.
இது மொத்தமாக சுமார்
$69
மில்லியனை சேர்த்தது.
United
Auto Workers
தொழிற்சங்கம்,
எதிர்வரும்
உடன்படிக்கை பேச்சுவார்த்தைகளில் கூடுதல் வாகனத்துறை தொழிலாளர்களாக புதிதாக
சேர்க்கப்படுவோருக்கு ஒரு மணிநேரத்திற்கு
$14
கூலியாக அதிகப்படுத்திக்
கேட்க இருப்பதாக அறிவித்த ஒருசில நாட்களிலேயே இந்த வெறுப்பூட்டுகின்ற தொகைகள்
அறிவிக்கப்பட்டன.
உற்பத்தியை மலிவு-கூலி
UAW
ஆலைகளுக்கு மாற்றுவதன்
மூலம், UAW
செயற்குழு
உறுப்பினர் சந்தா வருமானத்தை உயர்த்தி நிறைய பணம் திரட்டுவதற்கு,
வாகனத்துறை
தொழில்வழங்குனர்களை உடன்படச் செய்வதே தொழிற்சங்கத்தின் நோக்கமாக உள்ளது.
ஃபோர்ட்
முதலாளிகள் பேராசையைக் காட்டுவது ஒரு விதிவிலக்கல்ல.
முக்கிய அமெரிக்க
பெருநிறுவனங்களின் தலைவர்கள் கடந்த ஆண்டின் சமீபத்திய நினைவின்படி அவர்களின்
மிகப்பெரிய உயர்வுகளைப் பெற்றார்கள்.
மீடியன்
(Median)
தலைமை செயலதிகாரியின்
சம்பளம் (பங்கு
ஒதுக்கீடுகள் மற்றும் ஏனைய ஊதியப்படிகள் சேர்க்காமல்)
27 சதவீத உயர்வுடன்
$9
மில்லியனுக்குத் தாவியது.
“சிறப்பாக
செயல்பட்டு வரும் முன்னனி நிறுவனங்கள் அவற்றின் தலைமை நிர்வாகிகளுக்கு
$25
மில்லியன் சம்பள விகிதத்தை
அளித்து வருகின்றன…"
என்று சனியன்று
Detroit News
குறிப்பிட்டது.
செயலதிகாரிகளுக்கு பெரும் கொடுப்பனவுகளை வழங்கியுள்ள நிறுவனங்களில்
Transoceanஉம்
ஒன்றாகும்.
சுமார் ஓர்
ஆண்டிற்கு முன்னர்
11
தொழிலாளர்களின் உயிரைப்
பறித்ததுடன்,
எண்ணெய் கசிவுகளை
மெக்சிக்கோ வளைகுடாவிற்குள் பரப்பிவிட்ட
Deepwater Horizon
மோசடியின்
உரிமையாளர் தான் இந்த
Transocean
நிறுவனமாகும்.
வெள்ளியன்று கணக்கு
அறிக்கை தாக்கல் செய்த
Transocean,
பாதுகாப்பு செயல்பாடுகளில்
நிறுவனத்தின் சிறந்த ஆண்டு"
என்பதற்கு
அன்பளிப்பாக அதன் செயலதிகாரிகளுக்கு நஷ்டஈட்டு கொடுப்பனவுகளை அளித்திருந்ததாக
அறிவித்தது.
வோல்
ஸ்ட்ரீட் முறிவு மற்றும் வங்கிகளுக்கு வரிசெலுத்துவோரின் பிணையெடுப்பு
ஆகியவற்றிற்கு இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர்,
அமெரிக்காவின்
பெருநிறுவன கொள்ளை தீவிரமடைந்து வருகிறது.
பெரும்பான்மையாக
முற்றிலுமாகவே இவை வெட்டுக்கள் மற்றும் சிக்கன நடவடிக்கைகள் மூலமாக எட்டப்பட்ட
உயர்ந்துவரும் இலாபங்களுக்காகவும்,
ட்ரில்லியனில்
இருக்கும் பெருநிறுவன கையிருப்புகளுக்காகவும் செயலதிகாரிகள் தங்களுக்கு வெகுமதி
வழங்கிக்கொண்டனர்.
Standard & Poor’s 500
பங்குச்சந்தை குறியீட்டில்
பதிவு செய்துள்ள நிறுவனங்கள்,
அவற்றின்
வருவாய்களில் வெறும்
7
சதவீதம் மட்டுமே உயர்ந்தது
என்ற போதினும், 2010இல்
47
சதவீத இலாப உயர்வைப் பதிவு
செய்துள்ளன.
ஃபோர்டின்
இரண்டு முன்னனி செயலதிகாரிகளின் சம்பளங்களை மட்டுமே முன்னோக்கில் நிறுத்தினால்,
அவர்களின் கூட்டு
சம்பளம் $152
மில்லயனாகும்.
இது வரவிருக்கும்
தொழில்துறை இலக்கான ஒரு மணிநேரத்திற்கு
$14
என்ற விகிதத்தில்
மணிக்கணக்கில் வேலைசெய்யும்
5,241
தொழிலாளர்களின் ஓர் ஆண்டு
சம்பளத்திற்குச் சமமாகும்.
அதாவது ஒரு பெரிய
வாகனத்துறை ஆலையின் தொழிலாளர் சம்பள அளவாகும்.
வேலைகளுக்கு,
ஒரு நியாயமான
கூலிகளுக்கு,
மற்றும் கல்வி,
சுகாதாரம்,
வீட்டுவசதித்துறை
போன்ற அத்தியாவசிய சமூக தேவைகளுக்குப்
"பணமில்லை"
என்ற முறையீடுகளின்
போலித்தனத்தை இந்த உண்மைகள் அம்பலப்படுத்துகின்றன.
இந்த ஆண்டின் மத்திய
வரவு-செலவு
கணக்கு அறிக்கையில் சமூக திட்டங்களில் இருந்து முன்பில்லாத அளவிற்கு
$33
பில்லியனை வெட்ட ஒபாமா
நிர்வாகமும்,
காங்கிரஸில்
இருக்கும் ஜனநாயக கட்சியினரும் முன்மொழிந்து வருகின்ற நிலையில்,
2012 நிதியாண்டின்
தொடக்கத்தில் மருத்துவநலனை வெட்டியும்,
மருத்துவசேவைகளைத்
தனியார்மயமாக்கியும்,
ட்ரில்லியன் கணக்கான
டாலர்களை வெட்டும் ஒரு திட்டத்தை வெளிக்கொணர ஆயத்தமாகிவரும் நிலையில்,
ஃபோர்டின் இந்த
அறிவிப்பு வெளிவந்தது.
மாநில
மற்றும் உள்ளாட்சி அளவில்,
ஜனநாயக கட்சியினரும்,
குடியரசு
கட்சியினரும் பெருநிறுவனங்கள் மற்றும் செல்வந்தர்களுக்கு வரிகள் குறைப்பைத்
தொடர்ந்து கொண்டே,
அரசுத்துறை
தொழிலாளர்களின் வேலைகளையும் கூலிகளையும் குறைப்பது,
பாடசாலைகள் மற்றும்
நூலகங்களை மூடுவது,
மருத்துவசேவைகளைக்
குறைப்பது போன்ற கடுமையான சிக்கன முறைமைகளை ஒரேமாதிரியாக தொடர்ந்து
கொண்டிருக்கின்றனர்.
நிதியாண்டு
நெருக்கடியில் உள்ள ஒரு குறிப்பிடத்தக்க காரணி,
அமெரிக்க
பெருநிறுவனங்கள் குறைவாக வரிசெலுத்துகின்றன அல்லது மத்திய அரசிற்கோ அல்லது மாநில
அரசிற்கோ வரி செலுத்துவதே இல்லை என்ற உண்மையாக உள்ளது.
அமெரிக்காவின்
மிகப்பெரிய பெருநிறுவனமும்,
2010இல்
$14.4
பில்லியன் இலாபங்களை ஈட்டிய
நிறுவனமுமான ஜெனரல் எலெக்ட்ரிக்,
கடந்த ஆண்டு வருமான
வரியே செலுத்தவில்லை என்று கடந்த மாதம் தான் செய்திகள் வெளியாயின.
உண்மையில்,
மத்திய
அரசிடமிருந்து அது
$3.2
பில்லியன் வரிச்சலுகையை
எதிர்பார்த்து வருகிறது.
ஜெனரல்
எலெக்ட்ரிக் விதிவிலக்கு அல்ல,
வழமையாக உள்ளது.
சுமார்
70
சதவீத அமெரிக்க
பெருநிறுவனங்கள் வருமானவரியைச் செலுத்தவில்லை என்று அரசு கணக்குத்தணிக்கை
ஆணையத்தின் 2008
ஆய்வு
எடுத்துக்காட்டியது.
இதற்கிடையில்,
பொருளாதார வாழ்வின்
ஒரு நிரந்தர தன்மையாக பெரும் வேலைவாய்ப்பின்மையோடு சேர்ந்து,
தொழிலாளர்களின்
கூலிகளும் வீழ்ச்சி அடைந்து வருகின்றன.
வெள்ளியன்று
வெளியிடப்பட்ட தொழிலாளர்நலத்துறையின் வேலைவாய்ப்பு அறிக்கையின்படி,
சம்பளம் வாங்கும்
தொழிலாளர்களையும் சேர்த்து,
தனியார்த்துறை
தொழிலாளர்களின் சராசரி ஒருமணிநேர கூலிகள்,
2010 மார்ச்சில்
இருந்ததைவிட கடந்த மாதம் வெறும்
1.7
சதவீதம் மட்டுமே
உயர்ந்திருந்தது.
ஆனால்
உத்தியோகப்பூர்வ பணவீக்க விகிதம்
2
சதவீதத்திற்கும் அதிகமாக
இருக்கிறது.
இத்துடன் சேர்ந்து
எரிபொருள் மற்றும் உணவுப்பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மிக
வேகமாக உயர்ந்து வருவதுடன்,
அமெரிக்க
தொழிலாளர்களின் உண்மையான கூலிகளும் வீழ்ச்சியடைந்து வருகின்றன.
இந்த போக்கு
ஒபாமா நிர்வாகத்தின் கொள்கைகளுடன் பின்னிபிணைந்துள்ளது என்பது பின்வரும்
முரண்பாடால் குறிக்கப்படுகிறது:
டிசம்பர்
2007
முதல் ஜூன்
2009
வரையில் பெரும்பாலான
18
மாத உத்தியோகபூர்வ
பொருளாதார மந்தநிலையின் போது சராசரி ஒருமணிநேர வருமானம் ஆண்டுக்கு
3
சதவீதம் உயர்ந்தது.
பின்னர் கூலி உயர்வு
படிப்படியாக குறைந்தது.
இந்த
மாற்றம்,
UAWஇன் முழு
ஆதரவுடன் ஒபாமாவின் வாகனத்துறை வேலைத்திட்ட விருப்பத்தின்கீழ் நடத்தப்பட்ட ஜெனரல்
மோட்டார்ஸ் மற்றும் கிறிஸ்லெரின் திவால்நிலை மற்றும் மறுகட்டமைப்பைத்
தொடர்புபடுத்திக் காட்டுகிறது.
வாகனத்துறை
நிறுவனங்களுக்கு கடன்கள் வேண்டுமானால் தொழிலாளர்களின் நலன்களில் கடுமையான
வெட்டுக்களையும்,
புதிதாக
சேருவோருக்கு 50
சதவீத கூலி
வெட்டையும் (அதாவது
ஒரு மணிநேர வேலைக்கு
$14)
நடைமுறைக்கு கொண்டு வர ஒரு
நிபந்தனையாக வலியுறுத்தினார்.
இது பொருளாதாரத்தின்
ஒவ்வொரு துறையிலும் கூலி-வெட்டு
முனைவை அறிமுகப்படுத்த பெருநிறுவன மேற்தட்டுக்களுக்குக் காட்டப்பட்ட ஒரு சமிக்ஞையாக
இருந்தது.
இந்த நிகழ்முறை தான்
இப்போதும் அரசுத்துறையிலும் கொண்டு வர விரிவாக்கப்பட்டுள்ளது.
நிதியியல்
பிரபுத்துவத்தை இன்னும் அதிகமாக கொழுக்கவைக்க தொழிலாள வர்க்கம் வறுமைக்குத்
தள்ளப்படுகிறது.
2018இல்
உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படும்
13
சதவீதத்திற்கும் குறைவான
வேலைகள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்டிருக்கும் ஒரேயொரு
பெற்றோருக்கு கூட பொருளாதார பாதுகாப்பை அளிக்காது என்று
Wider Opportunities for
Women எனும்
இலாபநோக்கமற்ற குழுவால் வெள்ளியன்று அளிக்கப்பட்ட அறிக்கை ஓர் ஆய்வை வெளியிட்டது.
அந்த ஆய்வின்படி,
இந்த வேலைகளில்
வெறும் 43
சதவீதம் மட்டும் தான்,
வளர்ந்த இரண்டு
குழந்தைகளைக் கொண்ட இரண்டு தொழிலாளர்களுக்கு பொருளாதார பாதுகாப்பை அளிக்க போதிய
கூலிகளை வழங்கும்.
வேலை செய்ய
விரும்பும் அனைவருக்கும் நல்ல சம்பளத்தில் ஒரு பாதுகாப்பான வேலையும்,
அத்துடன் தரமான
கல்வி,
வீட்டுவசதி,
சுகாதாரம் மற்றும்
ஒரு சௌகரியமான வேலை ஓய்வு அனைத்தும் வழங்க தேவைப்படும் பெரும்வளங்கள் போதியளவிற்கு
உள்ளன.
ஆனால் முதலாளித்துவ
அமைப்புமுறையில் அவை அனைத்தும் உற்பத்தி கருவிகளைச் சொந்தமாக்கி கொண்டுள்ள மற்றும்
இரண்டு அரசியல் கட்சிகளையும் மற்றும் அரசு அதிகாரத்தின் எல்லா நெம்புகோல்களையும்
கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஓர் ஒட்டுண்ணித்தனமான ஆளும் மேற்தட்டால்
ஏகபோகமாக்கப்பட்டுள்ளன.
மாதக்கணக்காக நீண்டு வரும் விஸ்கான்சின் போராட்டம்,
உத்தியோகபூர்வ
தொழிற்சங்கங்களால் ஒடுக்கப்பட்டிருந்த பல தசாப்தங்களுக்கு பின்னர்,
அமெரிக்காவில்
பெரும் போராட்டத்திற்குள் தொழிலாள வர்க்கத்தின் மறு-எழுச்சிக்கு
அறிவிப்பு காட்டியது.
ஆனால்
தொழிற்சங்கங்களால் அந்த போராட்டத்தின் காட்டிக்கொடுப்பு,
ஜனநாயக கட்சியுடன்
சேர்ந்து ஒரே அணியாக வேலை செய்வது போன்றவை தொழிலாள வர்க்கத்தில் ஒரு புதிய
புரட்சிகர தலைமையை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் முக்கிய தேவையை அடிக்கோடிடுகிறது.
தொழிலாள வர்க்கத்தை
சுயாதீனமாக ஒன்றுதிரட்டவும்,
ஒரு பரந்த சோசலிச
இயக்கத்தை ஸ்தாபிப்பதிலும் இதுவொரு அத்தியாவசிய தேவையாக உள்ளது.
சோசலிச
சமத்துவ கட்சி,
சோசலிச
சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் பேரவை,
மற்றும் உலக சோசலிச
வலைத் தளம் "சோசலிச
போராட்டம் இன்று"
என்ற தலைப்பில்
மிச்சிகனின் அன் ஆர்பரிலும்,
லாஸ் ஏஞ்சல்ஸிலும்,
நியூ யோர்க்கிலும்
இந்த மாதம் தொடர்ச்சியான கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன.
இந்த தொடர்
கூட்டங்கள் வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் அன் ஆர்பர் கூட்டத்தோடு
தொடங்குகிறது.
இந்த
கூட்டங்கள் தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை சமூக உரிமைகளை பாதுகாக்க,
ஏகாதிபத்திய
யுத்தத்தை எதிர்க்க,
மற்றும் ஜனநாயக
உரிமைகள் மீதான தாக்குதலைத் தடுக்க ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை விவாதிக்கும்.
நம்முடைய வாசகர்கள்
அனைவரும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீதும்,
இளைஞர்கள் மீதும்
நடந்துவரும் தாக்குதலுக்கு எதிராக போராட ஒரு முன்னோக்கை எதிர்பார்க்கும் அனைவரும்
இவற்றில் கலந்து கொள்ள திட்டமிடுமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். |