World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Syrian government resigns amid continuing unrest

தொடரும் கொந்தளிப்புக்கிடையே சிரிய அரசாங்கம் இராஜினாமா

By Jean Shaoul 
30 March 2011

Back to screen version

அரசியல் சீர்திருத்தம் கோரி நடந்து வரும் தொடர் ஆர்ப்பாட்ட போராட்டத்தை சாமாளிப்பதற்கான ஒரு முயற்சியாக சிரியா அமைச்சரவை ராஜினாமா செய்துள்ளது. 2003 லிருந்து பிரதமராக இருந்து, தற்போது பதவி விலகவுள்ள முகமத் நாஜி அல்-ஓட்ரி, புதிய அரசாங்கம் அமைக்கப்படும் வரை காபந்து பிரதமராக செயல்படுவார். 

சலுகை வாக்குறுதிகளுடன் கொடூரமான அடக்குமுறைகள் கொண்ட அரசாங்க கொள்கை தொடர, பாதுகாப்பு மற்றும் இராணுவ படையினர் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் நடைபெறும் டாரா மற்றும் லடாகியா ஆகிய இரண்டு முக்கிய மையங்களின் வெளியே தங்களது நிலைகளை தக்கவைத்துக்கொண்டனர்.  

ஆட்சிக்கு எதிராக சுவற்றில் எழுதியதற்காக மார்ச் 6 ஆம் தேதியன்று 15 பள்ளிக்குழந்தைகள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஆவேச போராட்டங்கள் நடந்ததை கண்ட தெற்கு நகரமான டாராவில் திங்களன்று, அணிதிரண்ட நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களை கலைக்க, இராணுவம் வானை நோக்கி நிஜமான தோட்டாக்களால் சுட்டது. இளைஞர்கள் கடந்த வாரம் விடுவிக்கப்பட்ட அதே சமயம், பாதுகாப்பு படையினரால் கடந்த 10 தினங்களில் குறைந்தது 61 பேர் கொல்லப்பட்டதால் அதிகரித்த கோபத்தால், போராட்டங்கள் பெரிய அளவில் அதிகரித்தன.

சுன்னி முஸ்லிம்கள் அதிகம் நிறைந்த இந்த நகரின் முக்கிய பிரதான சதுக்கத்தை நோக்கி போராட்டக்காரர்கள் பேரணியாக சென்று இரவுக்காக அந்த இடத்தை எடுத்துக்கொண்டனர். அவர்களின் முழக்கங்களில் ஒன்றாக," சுன்னிக்கள் அல்ல, அல்வாய்ஸ்கள் அல்ல, நாங்கள் அனைவருமே சுதந்திரத்தை விரும்புகிறோம்" என்று, குறுங்குழுவாதத்திற்கு சாட்டையடி கொடுத்து நிராகரிக்கும் முயற்சியாக இருந்தது. அதிபர் பஷார் அல் அஸ்ஸாத் குடும்பத்தை சுற்றியுள்ள ஒரு சிறிய குழுவால் சிரியா ஆட்சி செய்யப்படுகிறது. இக்குடும்பத்தினர் சிறிய அல்வாய்ட் பிரிவை சேர்ந்தவர்களும் மற்றும் மக்கள் தொகையில் 25 சதவிகிதம் கொண்ட இதர சிறுபான்மையினத்தவர்களின் ஆதரவைக் கொண்டுள்ளனர். மக்ககளில் பெரும்பாலானோர் சுன்னி முஸ்லிம்களாக இருக்கின்றனர்.

ஆஸாத் ஆட்சி வீழ்வதைக் காட்டிலும், சீர்திருத்தங்களை கோரிய போராட்டக்காரர்கள், எந்த ஒரு அன்னிய தலையீடும் கூடாது என்று நிராகரித்ததோடு, " கடவுள், சிரியா மற்றும் சுதந்திரம் ஆகியவை மட்டுமே" என்று முழக்கமிட்டனர். அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும், ஏராளமானோர் உயிரிழந்த மற்றும் காயமடைந்த தாக்குதலுக்கு காரணமான அதிகாரிகளை கைது செய்ய வேண்டும், மற்றும் அவசரகால சட்டங்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று அவர்கள் கோரினார்கள். பேச்சுச் சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடல் சுதந்திரத்தை ஆஸாத் அனுமதிப்பதோடு, சிரியாவின் பாதுகாப்பு படையினருக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

20 பேர் கொல்லப்பட்டு, 100 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவிற்கு பல நாட்கள் வன்முறைகளை கண்ட துறைமுக நகரான லடாகியாவில் இராணுவம் இன்னும் நிறுத்தப்பட்டுள்ளது. சனிக்கிழமையன்று, ஆளும் பாஆத் கட்சி அலுவலகங்கள் மற்றும் ஊழலின் அடையாளமாக திகழும் அதிபர் பஷார் அல் அஸ்ஸாத்தின் ஒன்றுவிட்ட சகோதரர் ராமி மேக்லூஃப்புக்கு சொந்தமான தொலைபேசி கம்பெனியான சிரியாடெல் அலுவலகங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்து அழித்தனர்.

வெளிநாட்டு ஆயுத குழுக்களும், முஸ்லிம் அடிப்படைவாதிகளும் உள்ளே ஆயுதங்களை கொண்டுவந்ததால்தான் நகரில் கலகம் ஏற்பட்டதாக அரசாங்கம் குற்றம்சாட்டியதோடு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்த போலீஸ்காரர்களின் பேட்டியை அரசு தொலைக்காட்சி காண்பித்தது. வாரக்கடைசியிலிருந்து நகரம் மிக அமைதியாக இருந்து வருகிற போதிலும், துப்பாக்கிகள் மற்றும் கத்திகளுடன் அரசாங்கத்திற்க்கு ஆதரவான மற்றும் எதிரான குழுக்களுக்கிடையே அவ்வப்போது மோதல்கள் நடக்கின்றன.

டமாஸ்கஸ், அலேப்போ, ஹோம்ஸ் மற்றும் ஹமா ஆகிய நான்கு பெரிய நகரங்களில் கடந்த சனிக்கிழமையன்று நடந்த ஆயிரக்கணக்கானோர்களின் போரட்டங்களை தொடர்ந்து, டமாஸ்கசுக்கு அருகிலுள்ள டஃபாஸ் மற்றும் டவுமா ஆகிய இடங்களில் பதற்றம் ஏற்பட்டதோடு, நூற்றுக்கணக்கானோர்கள் அங்கு கைதானார்கள், அரசாங்கமோ ஆட்சிக்கு ஆதரவான போராட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமையன்று அழைப்பு விடுத்தது. அதனை ஏற்று ஆயிரக்கணக்கானோர் டமாஸ்கஸ்ஸின் சாபே ஹ் பஹ்ராத் சதுக்கத்தை நோக்கி பேரணியாக சென்று, "கடவுள், சிரியா, மற்றும் பஷார் மட்டுமே! எங்கள் ஆத்மாவுடன், எங்கள் ரத்தத்துடன், உங்களை மீட்போம், பஷார்" என்று முழக்கமிட்டனர். டாரா மற்றும் லடாகியா ஆகியவற்றை தவிர்த்து மற்ற பெரும்பாலான நகரங்களில் இதேபோன்ற ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. 

பாஆத் கட்சிக்கு அப்பாற்பட்ட நபர்களையும் உள்ளடக்கிய புதிய அரசாங்கம் ஒன்று எதிர்பார்க்கப்படுவதாக பிபிசி தெரிவித்தது. ஆனாலும், ஆஸாத், அவரது பரந்துவிரிந்த குடும்ப வட்டம், முன்னணி வியாபார மற்றும் தொழில் குடும்பங்கள் மற்றும் பாதுகாப்பு கருவிகளின் கரங்களை வலுப்படுத்தும் உண்மையான அதிகாரத்தை மூடி மறைப்பதாக மட்டுமே அரசாங்கம் இருப்பதால், புதிய அரசாங்கம் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தும்.  

போராட்ட காலம் முழுவதும் முற்றிலும் மாயமான ஆஸாத், கசப்பால் பிளவுபட்டுள்ள ஆட்சிக்கு தலைமையேற்றிருக்கிறார். சிலர் ஆதரவாக உள்ள சீர்திருத்தத்திற்கு போராட்டக்காரர்களை விலை கொடுத்து வாங்கும் அதே சமயம், இராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினர் கடுமையான தாக்குதலை விரும்புகின்றனர். ஆஸாத் பின்னர் நாட்டு மக்களுக்கு ஆற்றவுள்ள உரையில், 1963ல் பாஆத் கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து கடைபிடிக்கும் அவசரகால சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான அறிவிப்பையும், கடந்த வாரம் அவர் அளித்த வாக்குறுதியின்படி பாஆத் தலைமையிலான தேசிய முற்போக்கு முன்னணியின் எந்த ஒரு கட்சியும் தன்னிச்சையாக செயல்பட தடைவிதிக்கும் அறிவிப்பையும் வெளியிட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. சிரியா மற்ற பல சட்டங்களைக் கொண்டுள்ளதால்,போராட்டக்காரர்கள் வலியுறுத்தும் அரசியல் சுதந்திரங்கள் சட்டத்திற்கு புற்ம்பானதாக இருக்கும் என்பதால், அதுவும் கூட அதன் பிரதிபலிப்பு அடையாளத்தை விட சற்று கூடுதலானதாகத்தான் இருக்கும்.

260 க்கும் அதிகமான கைதிகள், முக்கியமாக டாமஸ்கஸ் அருகிலுள்ள செய்ட்நயா சிறையிலிருந்து, தண்டனைக் காலம் முடிவை நெருங்குகிற இஸ்லாமியவாதிகளும், அதேபோன்று டாராவில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட சிறிய எண்ணிக்கையிலானவர்களும், விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசாங்கம் ராஜினாமா செய்தது. ஆனால் இந்த நடவடிக்கைகள் உயிரிழப்பினால் அதிகரித்த கோபத்தை தணிக்காமல் இருக்கலாம் என்பதோடு, அடுத்த வெள்ளிக்கிழமை ஒரு பெரிய "கோப தினத்தை" பற்றிய பேச்சு இருக்கும்.

ஈரான் மற்றும் லெபனானின் அண்டைய நாடான ஹெஸ்புல்லா இடையேயான உறவின் அச்சாணியாக திகழும் சிரியாவில் ஏற்பட்டுள்ள கலகம், ஒட்டுமொத்த பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை அன்னிய சக்திகள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள முயலுவதாக ஆஸாத் ஆட்சி அறிவித்ததை அத்தனை எளிதில் நிராகரித்துவிட முடியாது. எண்ணெய் வளமிக்க பிராந்தியத்தில் தனது மேலாதிக்கத்திற்கு தெஹ்ரான் அச்சுறுத்தலாக இருப்பதாக கருதுவதால், அதனை தனிமைப்படுத்தும் வாஷிங்டனின் முயற்சியில் பெய்ரூட்டுடன் சேர்த்து சிரியாவும் நீண்ட காலமாக கவனம் செலுத்தப்பட்டது.

இது பரிசும் அடியும் கொடுக்கக்கூடிய அணுகுமுறையை கொண்டதாக உள்ளது. சிரியாவின் மேம்பாலங்களையொட்டிய கோலம்ன் மலைகளின் மீதான இறுதி மட்டும் நிரந்தர கட்டுப்பாட்டையும், இஸ்ரேல் மீது ஹெஸ்புல்லா ஏவுகணையால் தாக்கினால் டமாஸ்கஸுக்கு எதிராக பதிலடி கொடுக்கப்படும் என்ற மிரட்டலையும் கொண்ட ஒப்பந்தத்தை சிரியாவுக்கு இஸ்ரேல் அளிப்பதுடன், பரிசும் அடியும் கொடுக்கக்கூடிய அணுகுமுறையை கொண்டதாக இது உள்ளது.

சிரியாவில் தலையிட வேண்டும் என்று அமெரிக்காவிலுள்ள முன்னணி கருத்தியலாளர்கள் வலியுறுத்தினாலும், ஆஸாத் சீர்திருத்தங்களை அமல்படுத்த வேண்டும் என்று ஒரு வரம்புக்குட்பட்டு கூறக்கூடிய நிலையில்தான் வாஷிங்டன் உள்ளது என்று இந்த நிலையில் அரச செயலர் ஹிலாரி கிளின்டன் மறுத்தார்.

சிரியாவில் அதிகரிக்கும் குழப்பங்கள் "மத்திய கிழக்கு அமைதி உடன்படிக்கைக்காக எஞ்சியிருக்கும் எந்த ஒரு நம்பிக்கைககளையும் சிதறடித்து" அந்த பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்காக ஈரானை பகையாளியாக மாற்றி, அந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின சிறந்த நண்பனான இஸ்ரேலுக்கு சவாலாக நிற்கும்" என்று ஞாயிறன்று வெளியிட்ட ஆய்வு கட்டுரை ஒன்றில் நியூயார்க் டைம்ஸ் கவலை தெரிவித்திருந்தது.

அந்த நாட்டின் பிரச்சனைகள் லெபனான் மற்றும் இஸ்ரேல் போன்ற அதன் அண்டை அரசுகளை பலவீனமாக்கிவிடும் என்ற அச்சத்திற்கும், அது ஈரானின் முக்கிய கூட்டாளிகளில் ஒன்றை மிகத் தீவிரமாக பலவீனப்படுத்திவிடும் என்ற நம்பிக்கைக்கு இடையேயும்" அமெரிக்க அதிகாரிகள் இழுக்கப்பட்டதாக அந்த நாளிதழ் தெரிவித்தது. 

லெபனானில், ஷியா இஸ்லாமிய குழுவான ஹெஸ்புல்லாவும், அதன் கூட்டாளிகளும் வாஷிங்டனுக்கு ஆதரவான சாத் ஹரிரி கூட்டணி அரசாங்கத்தை ஜனவரியில் ராஜினாமா செய்ய நிர்ப்பந்தித்து, நாஜிப் மிகாடியை புதிய அரசாங்கத்தை அமைக்க நியமித்தன. லெபனான் பிரதமர் யார் என்பதை ஹெஸ்புல்லா தீர்மானித்தது அதுதான் முதல்முறை என்பதோடு, வாஷிங்டன் மற்றும் டெல் அவிவுக்கு அது மிகப்பெரிய பின்னடைவாகவும் இருந்தது.

இன்னமும், மிகாடி ஆட்சியமைக்க முடியாமல் இருப்பதால், சிரியாவில் நடக்கும் குழப்பத்தை ஆதாயமாக்கிக் கொள்ளும் நம்பிக்கையுடன் ஹரிரி குறுங்குழுவாத துருப்பு சீட்டை வைத்து விளையாடுகிறார். ஹெஸ்புல்லாவை அன்னிய சக்திகளின் கைக்கூலி என அழைத்த ஹரிரி, ஹெஸ்புல்லா எதிர்ப்பு பேரணிகளை நடத்த அழைப்பு விடுத்தார்.

ஹெஸ்புல்லா தலைவரான ஹஸ்ஸன் நஸ்ரல்லா, எகிப்து, மாஹ்ரெப் மற்றும் வளைகுடா ஆகிய நாடுகளின் அரபிய மக்களை   தங்களது ஊழல் தலைவர்களுக்கு எதிராக போராடுவதற்கு ஊக்கப்படுத்திய அதே சமயம், சிரியாவில் அவரது ஆதரவாளரான ஆஸாத் போராட்டக்காரர்களை எதிர்ப்பதை ஆதரித்தார்.

மேலும் பெய்ரூட்டிலும் லெபனானின் தடையற்ற சந்தை கொள்கைகளுக்கு எதிராகவும், பிரிவினைவாத அடிப்படையிலான அரசாங்கத்திற்கு முடிவுகட்டுவதற்கான ஒற்றுமை மற்றும் அரசியல் சீர்திருத்தங்களை வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களின் தன்னிச்சையான பேரணிகள் மற்றும் போராட்டங்கள் நடைபெற்றன.

ஹமாஸ் தலைவர் கலீத் மாஷால்லுக்கு பிறந்த நாடு போன்று டமாஸ்கஸ் செயல்பட்டதால், சிரியா கலகத்தை தனக்கு சாதமாக்கிக் கொண்டு காஸாவிலுள்ள ஹமாஸ், லெபனானிலுள்ள ஹெஸ்புல்லா மீது தாக்குதல் நடத்தி, முடியுமானால் சிரியாவுக்கே நேரடி சவாலை ஏற்படுத்தலாம் என்று இஸ்ரேல் தைரிய உணர்வை பெற்றிருக்ககூடும்.

போராட்டக்காரர்களுக்கு சலுகை அளிக்குமாறு தனது பங்கிற்கு துருக்கியானது சிரியாவை வலியுறுத்தியது. அத்துடன் எந்த ஒரு நீண்ட கால போராட்டமும் பொருளாதார தொடர்புடையவற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சத்தில் நாட்டின் வட கிழக்கில் உள்ள வறட்சியால் பாதித்த பகுதிகளிலுள்ள சிரியாவின் குர்திஸ்துக்கள், போராட்டத்தில் இணைந்து, துருக்கியில் போராட்ட பொறியை ஏற்படுத்தலாம் என்று லெபனான், சிரியா மற்றும் ஜோர்டான், அங்காரா ஆகிய நாடுகளை பீதியடைய செய்யுமாறு அது கோரியது.