WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
The
crisis of revolutionary leadership in 2011
2011இல்
புரட்சிகர தலைமைக்கான நெருக்கடி
Joseph
Kishore
30 March 2011
2011இன்
முதல் மூன்று மாதங்கள் ஒரு தொடர்ச்சியான அசாதாரண சம்பவங்களை எடுத்துக்காட்டியுள்ளன.
அவையாவன,
இரண்டு அசைக்கமுடியாத
சர்வாதிகாரங்களை கவிழ்த்த மற்றும் ஏனைய பலவற்றையும் அதிர்ச்சியில் உறையச் செய்த
மத்தியகிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் எழுந்த புரட்சிகர எழுச்சிகள்,
அமெரிக்காவில் நீண்டகாலமாக
ஒடுக்கப்பட்டுவந்த தொழிலாள வர்க்க போராட்டத்தின் மறுஎழுச்சியை பறைசாட்டிய பரந்த
விஸ்கான்சன் போராட்டங்கள் ஒரு புதிய ஏகாதிபத்திய யுத்தம் தொடக்கப்பட்டது
ஆகியவையாகும்.
இதற்கும் கூடுதலாக,
சுனாமியால் தூண்டிவிடப்பட்ட
இலாபகர நோக்கத்தால் தூண்டிவிடப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்த அணுசக்தி
மின்னாலைகளின் அலட்சியத்திலிருந்து எழுந்த ஒரு சுற்றுச்சூழல் பேரழிவான ஜப்பானில்
ஏற்பட்ட ஓர் அணுக்கசிவு நெருக்கடியுடன்
இன்னும் அறியப்படாத பொருளாதார
மற்றும் சமூக விளைவுகளோடு,
ஒட்டுமொத்த உலகமும் இதை
முகங்கொடுத்துள்ளது.
சம்பவங்கள் ஒன்றையொன்று
தொடர்ந்து செல்லும் வேகம்,
ஒரு புரட்சிகர காலக்கட்டத்தின்
குணாம்சமாக உள்ளது.
உலகளாவிய அளவில்,
வர்க்க அடித்தளத்தில்
சமூகத்தின் துருவமுனைப்படுத்தல் அதிகரித்துள்ளது.
2008இன் இறுதியில் வெடித்த
நிதியியல் நெருக்கடியின் இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர்,
பெருநிறுவனங்களும் வங்கிகளும்
தொழிலாள வர்க்கத்தின்மீது அவற்றின் யுத்தத்தை தீவிரப்படுத்தி உள்ளன.
அதேநேரத்தில்,
இந்த ஆண்டின் முதல் மூன்று
மாதங்கள் மக்கள் எதிர்ப்பின் அதிகரிப்பை ஏற்கனவே கணிசமான அளவிற்கு தோற்றுவித்துள்ளன.
தொழிலாள வர்க்கத்தின்
ஆரம்பகட்ட போராட்டங்கள்,
ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாள
வர்க்கம் ஆழமான மற்றும் சிக்கலான அரசியல் சவால்களை முகங்கொடுக்கிறது என்பதை
தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த சவால்கள் அனைத்துமே
புரட்சிகரத் தலைமை தொடர்பான பிரச்சனையை மையமாக கொண்டுள்ளன.
மத்தியகிழக்கு மற்றும்
வட ஆபிரிக்காவில்,
தொழிலாளர்கள் மற்றும்
இளைஞர்களின் தீர்க்கமான போராட்டங்களால் இதுவரையில் பரந்த மக்களின் நலன்களுக்காக
செல்வவளத்தை மறு-பங்கீடு
செய்வதன் மூலமாகவும்,
தேசிய பொருளாதாரத்தை மறுகட்டமைப்பு
செய்வதன் மூலமாக மட்டுமே சாத்தியமாக கூடிய எந்தவொரு முக்கிய ஜனநாயக மாற்றத்தையும்
எட்ட முடியவில்லை.
துனிசியா மற்றும் எகிப்தில்,
மக்கள் ஆர்ப்பாட்டங்களும்
வேலைநிறுத்தங்களும் இரண்டு அமெரிக்க ஆதரவு-பெற்ற
சர்வாதிகாரிகளை கீழே இறக்கியது.
ஆனால் அவர்களின் அதிகாரத்தின்
பின்புலத்தை கொண்ட ஆட்சியை அவர்கள் இருந்த இடத்தில் உருவாக்கி வைத்துவிட்டு
சென்றுள்ளனர்.
ஜனநாயகத்திற்கு
உத்தரவாதமளிப்பவராக ஒபாமா நிர்வாகத்தால் பாராட்டப்பட்ட எகிப்திய இராணுவ அரசாங்கம்,
வேலைநிறுத்தங்களுக்கும்
ஆர்ப்பாட்டங்களுக்கும் தடைவிதிக்க முயற்சித்து வருகிறது.
எகிப்திய மக்களின் அரசியல்
மற்றும் பொருளாதார தேவைகளுக்கு அதற்கு முன்பிருந்த சர்வாதிகாரி காட்டிய
விடையிறுப்பிற்குக் குறைவில்லாமல் அது காட்டி வருகிறது.
தொழிலாளர் வர்க்கத்திடையே ஒரு
புரட்சிகர அரசியல் தலைமை இல்லாமல் இருப்பது,
குறைந்தபட்சம்
தற்காலிகமாகவாவது எகிப்திய முதலாளித்துவம் மறுஒழுங்கமைவதற்கு
உதவியுள்ளது.
தொழிலாளர்களின் ஆட்சி மற்றும்
சோசலிசத்திற்கான போராட்டத்தை நிராகரிக்கும் உத்தியோகப்பூர்வ எதிர்ப்பு அமைப்புகளால்
ஆளும் வர்க்கம் உதவியைப் பெற்றுள்ளன என்பதோடு,
தொழிலாளர் வர்க்கத்தை
இப்போதிருக்கும் முதலாளித்துவ அரசிற்கு அடிபணியச் செய்யவும் வேலையையும் செய்துள்ளன.
எகிப்தால் ஓரளவிற்கு
தூண்டுதல் பெற்ற அமெரிக்க தொழிலாளர்களின் போராட்டங்களும்,
தலைமை மீதான அதேமாதிரியான
பிரச்சினையை வேறு வடிவத்தில் முகங்கொடுக்கிறது.
தொழிலாளர்களின் கூட்டு
பேரம்பேசல் உரிமைகளை நீக்கிய மற்றும் அரசுத்துறை தொழிலாளர்கள் மீதும்,
சமூக திட்டங்களிலும் தாக்குதல்
நடத்த உந்தித்தள்ளிய ஆளுநர் ஸ்காட் வால்கரை எதிர்க்க நூறு ஆயிரக்கணக்கானவர்கள்
விஸ்கான்சனில் களமிறங்கினர்.
வால்கரை இராஜினாமா
செய்யக்கோரும் ஒரு பொது வேலைநிறுத்த கோரிக்கைகளை எதிர்த்த வலதுசாரி
தொழிற்சங்கங்களால் அந்த தாக்குதலை எதிர்க்கும் முயற்சிகள் முடமாகிப்போயின.
எதிர்ப்புணர்வை நாடு
முழுவதிலும் ஜனநாயக கட்சி ஆட்சியிலிருக்கும் மாநிலங்களில் அதற்கு அடிபணிய வைக்க
உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்கள் மிகவும் திட்டமிட்டு வேலை செய்தன.
வால்கரால் கொடூரமாக
கோரப்பட்டவைகளைவிட குறைவில்லாத வெட்டுக்களையும்,
சமூக திட்டங்களுக்கான செலவு
குறைப்பு நடவடிக்கைகளையும் மத்திய அரசும் அதன் மட்டத்தில் நடைமுறைப்படுத்தி
வருகிறது.
வசந்தகாலம் ஐரோப்பிய
கடன் நெருக்கடியின் புதிய தொடக்கத்தைக் கொண்டு வரும் என்ற அறிகுறிகளுடன்,
ஐரோப்பாவில் கடந்த ஆண்டில்
நடைமுறைப்படுத்தப்பட்டதையும் விட இன்னும் தீவிரமான சிக்கன நடவடிக்கை கோரிக்கைகளின்
ஒரு புதிய அலையை தொழிலாளர்கள் முகங்கொடுக்கின்றனர்.
அமெரிக்காவைப் போன்றே,
வங்கிகளுக்கு பிணையெடுப்பை
அளிக்க வாய்ப்புகளைப் பயன்படுத்திய அரசாங்கங்களும்,
அதற்கு தொழிலாள வர்க்கம்
விலைகொடுக்க வேண்டுமென இப்போது கோரி வருகின்றன.
மற்றொரு தாக்குதலை திட்டமிட
ஆளும் வர்க்கத்திற்கு போதிய நேரத்தை அளிக்கும் விதத்தில்,
கடந்த ஆண்டு தொழிற்சங்கங்களால்
ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு-நாள்
வேலைநிறுத்தங்கள்,
அவற்றை
பயனற்றுபோவதற்கும் மேலான காரியத்தைச் செய்தன.
லிபிய யுத்தம்
தலைமைக்கான நெருக்கடியின் விளைவுகளை வெளிச்சமிட்டு காட்டியுள்ளது.
ஒரு சுயாதீனமான புரட்சிகர
ஜனநாயக மற்றும் முதலாளித்துவ-எதிர்ப்பு
அரசியல் வேலைத்திட்டம் இல்லாமல் கடாபி ஆட்சிக்கு எதிராக எழுந்த பரந்த எதிர்ப்பு,
தனது சொந்த தரப்பிற்கு உதவும்
வகையில் ஏகாதிபத்தியத்தால் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக,
அமெரிக்கா மற்றும் அதன்
ஐரோப்பிய கூட்டாளிகளால் தொடக்கப்பட்டிருக்கும் அருவருக்கத்தக்க காலனித்துவ
யுத்தத்திற்கு இருக்கும் ஆதரவானது,
சர்வதேச அளவில்,
முதலாளித்துவத்தின் தாராளவாத
மற்றும் "இடது"
பிரதிநிதிகளிடமிருந்து தொழிலாள
வர்க்கத்தின் நலன்களை பிரிக்கும்,
இணைக்க முடியாத பெரும் சமூக
மற்றும் அரசியல் பிளவைத் தோலுரித்துக் காட்டியுள்ளது.
நவ-காலனித்துவ
யுத்தங்களை நியாயப்படுத்த திட்டமிட்டுப் பயன்படுத்தப்படும் ஒரு முழக்கமான
"மனித
உரிமைகள்"
என்ற பெயரில்,
மத்திய மேற்தட்டு வர்க்கத்தின்
மிகவும் வளமான பிரிவுகளின் கண்ணோட்டங்களையும்,
நலன்களையும்
பிரதிநிதித்துவப்படுத்தும் பழைய
"இடது"
எதிர்ப்பு இயக்கங்களும்,
கட்சிகளும் ஏகாதிபத்தியத்தின்
பக்கம் தங்களைத்தாங்களே நிறுத்திக் கொண்டுள்ளன.
அதற்கும் மேலாக,
“மனித உரிமைகளுக்கான"
ஏகாதிபத்தியம் என்று
காட்டிக்கொண்டு,
அதேநேரத்தில் இந்த கட்சிகளும்,
அமைப்புகளும் அவற்றின் சொந்த
நாடுகளில் உள்ள ஆளும் வர்க்கத்தின் சிக்கன நடவடிக்கை கொள்கைகளுக்கு எதிராக
தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்கள் அபிவிருத்தி அடையாமல் தடுக்க அவற்றின்
அதிகாரத்தைக் கொண்டு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றை செய்கின்றன.
அமெரிக்காவில்,
பராக் ஒபாமாவின் நிர்வாகம்
மக்களின் வெறுப்பை சம்பாதித்த அவருக்கு முன்னால் இருந்த நிர்வாகத்தின்
பிற்போக்குத்தனமான கொள்கைகளை,
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்,
விரிவாக்கினாலும் கூட,
அதை அது தொடர்ந்து
கொண்டிருந்தாலும் கூட,
ஒபாமா நிர்வாகத்தை ஆதரிக்கும்
வடிவத்தை இது எடுக்கிறது.
முந்தையவொரு புரட்சிகர
சகாப்தத்தின் மத்தியில் ட்ரொட்ஸ்கி எழுதுகையில்,
“உலக அரசியல் அரங்கம்
ஒட்டுமொத்தமாக பாட்டாளி வர்க்க தலைமையின் ஒரு வரலாற்று நெருக்கடியால் முக்கியமாக
குணாதிசயப்படுத்தப்பட்டுள்ளது,”
என்று
1938இல்
விளக்கினார்.
நிலைமைகள் மாறியுள்ளன;
ஆனால் அடிப்படை அரசியல் பணி
இன்னும் தொக்கி நின்கின்றன.
முதலாளித்துவ அமைப்புமுறைக்கு
எதிராக தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை முன்னெடுக்க,
ஒவ்வொரு நாட்டிலும் ஒரு புதிய
சோசலிச தலைமையைக் கட்டியெழுப்புவதே முக்கிய பணியாக உள்ளது.
இந்த நிலைமைகளின்கீழ்
அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சி,
'சோசலிசத்திற்கான போராட்டம்
இன்று'
) என்ற
தலைப்பில் இந்த மாதம் ஒரு தொடர்ச்சியான கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த தொடர் கூட்டங்களில்
முதலாவது மிச்சிகனின் அன் ஆர்பரில் ஏப்ரல்
9-10இல்
நடத்தப்படவுள்ளது.
இதைத் தொடர்ந்து ஏப்ரல்
16இல்
லாஸ் ஏஞ்சல்ஸிலும்,
ஏப்ரல்
30இல்
நியூ யோர்க்கிலும் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன.
இந்த கூட்டங்களுக்கு ஜனவரியில்
அழைப்பு விடுக்கப்பட்டதிலிருந்து இந்த ஆண்டில் நிகழ்ந்த சம்பவங்கள்,
அமெரிக்காவில் ஒரு சோசலிச
தலைமையைக் கட்டியெழுப்புவதில் உள்ள ஒரு முக்கிய கட்டமாக,
அவற்றின் வரலாற்று
முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டி உள்ளன.
அமெரிக்காவில் உள்ள
அனைத்து வாசகர்களும் இதில்
இந்த
கூட்டங்களில் ஒன்றிலேனும் கலந்து கொள்ள இன்றே திட்டமிடுமாறு உலக சோசலிச வலைத் தளம்
கேட்டுக் கொள்கிறது.
ஒருவேளை உங்களால் கலந்து கொள்ள
முடியவில்லையென்றாலோ,
அல்லது நீங்கள் அமெரிக்காவிற்கு
வெளியில் இருக்கிறீர்கள் என்றாலோ,
அதன் இளைஞர் அமைப்பையும்,
தொடர்பு கொண்டு இன்றே எங்களுடன்
சேர முடிவெடுங்கள்.
உலகம் ஒரு புதிய புரட்சிகர போராட்ட
சகாப்தத்திற்குள் நுழைகின்ற வேளையில்,
சோசலிசத்திற்கான போராட்டத்தை
முன்னெடுக்க இதுவே சரியாக தருணமாகும்.
|