WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
:
லிபியா
Reports suggest French intelligence encouraged anti-Gaddafi protests
கடாபி
எதிர்ப்பு
ஆர்ப்பாட்டங்களுக்கு
பிரெஞ்சு
உளவுத்துறை
ஊக்கம்
கொடுத்தது
என்று
தகவல்கள்
தெரிவிக்கின்றன
By
Alex Lantier
28 March 2011
ஐரோப்பிய
செய்தி
ஊடகத்தில்
வந்துள்ள
தகவல்கள்
கேணல்
முயம்மர்
கடாபியின்
லிபிய
அரசாங்கத்தை
உறுதிகுலைக்கும்
அல்லது
அகற்றுவதற்கு
பிரெஞ்சு
உளவுத்
துறைகள்
மேற்கொண்ட
முயற்சிகள்,
இறுதியில்
லிபியாவில்
போரை
ஏற்படுத்திய,
கடந்த
மாதம்
பெங்காசியில்
ஏற்பட்ட
எதிர்ப்புக்களில்
ஒரு
பங்கைக்
கொண்டிருந்தன
எனக் காட்டுகின்றன.
பெங்காசியை
தளமாகக்
கொண்ட
ஒரு
லிபிய
எதிர்ப்புக்
குழுவான
தேசிய
சபையானது
முன்னாள்
கடாபி
ஆட்சி
அதிகாரிகளின்
தலைமையில்
உள்ளது,
மேலைத்தேச
சக்திகளுக்கு
இராணுவ
ஆதரவை
நாடி
முறையிட்டது.
அமெரிக்கா,
பிரிட்டன்
மற்றும்
ஜனாதிபதி
நிக்கோலா
சார்க்கோசியின்
பிரெஞ்சு
அரசாங்கம்
ஆகியவை
இதைத் தொடர்ந்து
மார்ச்
19ம்
தேதி
லிபியாவிற்கு
எதிரான
போரைத்
தொடக்கின.
பிரெஞ்சு
உளவுத்
துறையின்
தொடர்பு
பற்றிய
குற்றச்சாட்டுகள்
மார்ச்
23ம்
திகதி
செய்தியாளர்
பிராங்கோ
பெஷிஸ்
வலதுசாரி
இத்தாலிய
நாளேடான
லிபரோவில்
“சார்க்கோ
லிபிய
எழுச்சியை தந்திரமாக
கையாண்டார்”
என்ற
தலைப்பில்
கொடுத்துள்ள
அறிக்கையில்
மையம்
கொண்டுள்ளது.
கடாபியின்
முன்னாள்
தலைமை ராஜதந்திரியான
நூரி
மெஸ்மரி
அக்டோபர்
மாதம்
பாரிஸுக்கு
ஓடி
வந்தது
குறித்து
அவர் உயர்த்திக்
காட்டுகிறார்.
மேலும்
மெஸ்மரி
கடாபிக்கு
எதிரான
பெங்காசி சதித்
திட்டத்திலிருந்த
இராணுவ
அதிகாரிகள்
மற்றும்
பிற
செயற்பாட்டாளர்களுடன்
பிரெஞ்சு
அதிகாரிகளைத்
தொடர்பு கொள்ளச்
செய்தார்
என்றும்
கூறியுள்ளார்.
பிரெஞ்சு
வணிக
உளவுத்துறை
வலைத்தளமான
Maghreb Confidential
ஐத்தான்
பெஷிஸ்
தன்னுடைய
தகவல்களுக்குப்
பெரும்பாலும்
ஆதாரத்தைக்
கொண்டுள்ளார்.
“முயம்மர்
கடாபியின்
தலைமை ராஜதந்திரியான
நூரி
மெஸ்மரி,
தற்பொழுது
பாரிஸிற்கு
துனிசியாவில்
சற்று
இருந்த
பின்,
வந்திருக்கிறார்.
பொதுவாக
மெஸ்மரி
அவருடைய
எஜமானனுக்கு வெகு
அருகில்தான்
இருப்பார்.
எனவே
லிபியத்
தலைவருடன்
அவர்
கொண்டுள்ள
நீண்ட
நாள்
பிணைப்பை
அவர்
முறித்திருக்கக்
கூடும்
என்று
பேச்சுக்கள்
அடிபடுகின்றன”
என
மெக்ரெப்
கான்பிடென்ஷியல்
கூறியுள்ளது.
லிபிய
ஆளும்
உயரடுக்கில்
முக்கியமான
தடையற்ற
சந்தைச்
சீர்திருத்தத்திற்கு
சார்புடையவரான
மெஸ்மரி
கடாபியின்
ஆட்சியில்
ஒரு
முக்கியப்
பங்கைக்
கொண்டிருந்தார்.
அயல்நாட்டு
அரசாங்கத்
தலைவர்களின்
லிபிய
வருகையை
அவர்
ஒருங்கிணைத்து
லிபியாவின்
தனியார்
ஜெட்டுக்களை
அவர்கள்
பயன்படுத்துவதற்கும்
செயற்பட்டார்.
கடாபியின்
பிள்ளைகளுக்கு
அரச கொடுப்பனவு
பணத்தையும்
அவர்
கண்காணித்தார்.
அவர்கள்
லிபியாவில்
அரச
நிதியை
எடுத்துக்
கொண்டதின்மூலம்
முக்கிய
வணிகத்
தலைவர்களாக
உள்ளனர்.
“மெஸ்மரியின்
விவகாரம்
மிக
முரண்பாடுடைய
வதந்திகளுக்கு
ஊட்டம்
அளிக்கிறது”
என்று
ஆபிரிக்க
விவகாரங்கள்
பற்றிய
பிரெஞ்சுச்
செய்தித்தாளான
Jeune Afrique
கூறியுள்ளது. “வழிகாட்டி
[அதாவது,
கடாபி]
அக்டோபர்
9-10 ல்
சிர்ட்டேயில்
நடைபெற்ற
அரபு-ஆபிரிக்க
உச்சிமாநாட்டின்போது
மெஸ்மரியைக்
கன்னத்தில்
அறைந்து
அவமானப்படுத்தியதாகக்
கூறப்படுகிறது.
பிரான்ஸிற்கு
அவர்
தப்பியோடிவிட்டார்
என்று
அக்டோபர்
22ல்
வெளிவந்த
தகவலுக்கு
முன்னால்
அதுதான்
அவருடைய
கடைசியாகப்
பொது
இடத்தில்
தோன்றிய
நிகழ்வாகும்.”
”நூரி
மெஸ்மரியின்
சமீபத்திய
செயல்கள்
சமீபத்திய
வாரங்களில்
தொடர்ந்து
ஆர்வத்தை
ஏற்படுத்தியுள்ளன.
லிபியத்
தலைவருடன்
மிக
நெருக்கமாக
இருந்தது
போல்
தோன்றிய
முயம்மர்
கடாபியின்
தலைமை ராஜதந்திரி
அக்டோபர்
இறுதியில்
பிரான்ஸுக்குப்
பயணித்தார்.
வழியில்
துனிசியாவில்
சில
நேரம்
இருந்தார்.
உத்தியோகபூர்வமாக
ஒரு
நாட்பட்ட
நோயால்
அவதியுறும்
மெஸ்மரி
பாரிஸுக்கு
ஒரு
அறுவை
சிகிச்சைக்காக
வந்தார்.
அவருடைய
மனைவியும்
மகளும்
சிறிது
காலம்
பாரிஸின்
Concorde Lafayette
ஹோட்டலில்
தங்கி
உண்மையில்
அவரைச்
சந்தித்தனர்.
அதன்
பின்
அவரைப்
பற்றி
எதுவும்
தெரியவில்லை.
ஓய்வு
பெற
விரும்புவதாகக்
கூறும்
மெஸ்மரி,
கடாபியின்
மிக
நெருக்கமான
நம்பிக்கைக்குரியவர்களில்
ஒருவர்,
அவருடைய
இரகசியம்
பலவற்றையும்
அறிந்தவர்”
என்று
நவம்பர்
18 பதிப்பில்
மக்ரெப்
கான்பிடென்டஷியல்
எழுதியுள்ளது.
அன்றே
மக்ரெப்
கான்பிடென்டஷியல்,
பிரெஞ்சு
மற்றும்
அமெரிக்க
கோதுமைத்
தயாரிப்பு
நலன்கள்--
France Export Cereales, FranceAgrimer, Soufflet, Louis Drefys, Glencore, CAM
Cereales, Cargil, Conagra
என்பவை
அடங்கியிருப்பவை—லிபிய
அரசாங்கத்திற்குச்
சொந்தமான
ஆலைகளுடன்
நடத்திய
பேச்சுக்களைப்
பற்றியும்
குறிப்பிட்டிருந்தது.
அவற்றுள்
பெங்காசியிலிருக்கும்
National Flour Mill Co.,
மற்றும்
திரிபோலியில்
இருக்கும்
மாவு ஆலைகளுக்கான
தேசிய நிறுவனமும் (National
Company for Flour Mills)
இருந்தன.
பிரெஞ்சு
ஆளும்
வர்க்கம்
லிபியாவில்
அதன்
சந்தைப்
பங்கிற்கு
ஏற்றம்
கொடுப்பதில்
தீவிரமாக
இருந்தது.
பிரெஞ்சு
வங்கிகளான
Credit Agricole, Societe Generale,
பொறியியல்
நிறுவனங்களான
Alstom, Thales
மற்றும்
கட்டமைப்பு
நிறுவனம்
La Farge ஆகியவை
டிசம்பர்
14-17ல்
பயணிப்பதற்கு
முன்
மக்ரெப்
கான்பிடென்ஷியல்
எழுதியது:
அதாவது
“பிரெஞ்சு
நிறுவனங்கள்
லிபியாவின்
வணிகப்
பங்காளிகள்
பட்டியலில்
உயர்நிலைக்கு
ஏறுவதற்கு
உறுதி
கொண்டன.
இத்தாலிதான்
தற்பொழுது
முதல்
இடத்தில்
உள்ளது,
சீனா
இரண்டாவது
இடத்திலும்,
சற்றுத்
தொலைவில்
ஆறாவது
இடத்தில்
பிரான்ஸ்
உள்ளது.”
ஆனால்
பெஷிஸின்
கருத்துப்படி
இப்பயணங்கள்
பிரெஞ்சு
இராணுவ
அதிகாரிகள்
லிபிய
இராணுவத்திலிருந்த
எதிர்ப்பாளர்களுடன்
பேசுவதற்கு
மறைப்பாகத்தான்
இருந்தன.
கோதுமை
வணிகத்திற்கான
பயணம்
முதலில்
அக்டோபர்
நடப்பதாகத்
திட்டமிடப்பட்டிருந்தது
என்பது
குறிப்பிடத்தக்கது.
ஆனால்
பிரெஞ்சு
அதிகாரிகள்
இதை
நவம்பர்
மாதத்திற்கு
ஒத்தி
வைத்தனர்.
பிரான்ஸில்
நடந்த
எண்ணெய்
வேலைநிறுத்தங்கள்
அதற்குக்
காரணம்
எனக்
கூறப்பட்டது.
இதன்
பொருள்
நவம்பர்
2 அன்று
பிரிட்டனுக்கும்
பிரான்ஸுக்கும்
இடையே
இராணுவக்
கூட்டு
இறுதி
கையெழுத்து
ஆனபிறகு,
இரு
முக்கிய
ஐரோப்பியச்
சக்திகளும்
லிபியா மீது
குண்டுவீசத்
தயாராயின.
பிரெஞ்சு-பிரிட்டிஷ்
கூட்டில்
மார்ச்
21-25 ல்
நீண்ட
தூர
குண்டுத்
தாக்குதல்கள்
பயிற்சிக்கான
ஒரு
உடன்பாடும்
இருந்தது.
இதற்கு
இரகசியப்
பெயர்
தெற்கு
மிஸ்ட்ரல்
என்பது
ஆகும்.
இது
மார்ச்
19 அன்று
தொடங்கிய
லிபியா
மீதான
தொலைத்
தூர
குண்டுத்
தாக்குதலை
ஒத்துள்ளது.
இப்பயிற்சி
போர்
மூண்டுவிட்டதால்
இரத்து
செய்யப்பட்டுவிட்டது.
பிரெஞ்சு
விமானப்
படையின்
தெற்கு
மிஸ்ட்ரல்
வலைத்தளப்படி,
“நவம்பர்
2, 2010 அன்று
பிரான்ஸும்
பெரிய
பிரிட்டனும்
பாதுகாப்பு
பற்றி
முன்னோடியில்லாத
வகையில்
உடன்பாடு
ஒன்றில்
கையெழுத்திட்டன.
தெற்கு
மிஸ்ட்ரலில்
கூட்டு
பிராங்கோ
பிரிட்டிஷ்
பயிற்சி
என்பது
இந்த
உடன்பாட்டின் கீழ்
வருகிறது.
இது
மார்ச்
21-25, 2011ல்
பல
பிரெஞ்சு
விமானத்
தளங்களில்
நடக்கத்
திட்டமிடப்பட்டுள்ளது.
அப்பொழுது
பிரெஞ்சு
மற்றும்
பிரிட்டிஷ்
படைகள்
கூட்டு
விமானப்
படை நடவடிக்கைகளை
மேற்கொள்ளுவார்கள்.
அத்துடன்
குறிப்பான
வான்
தாக்குதல்
(Southern Storm)
என்னும்
வெகு
நீண்ட
மரபார்ந்த
தாக்குதலும்
நடத்தப்படும்.”
நவம்பர்
மாத
கோதுமை
வணிகப்
பயணம்
பற்றிக்
குறிப்பிட்ட
பெஷிஸ்
அது
“ஏட்டளவில்
ஒரு
வணிக நடவடிக்கை,
பெங்காசியில்
நலன்தரும்
ஒப்பந்தங்களைப்
பெறுவதற்கான
முயற்சி.
ஆனால்
இக்குழுவில்
பிரெஞ்சு
இராணுவ
அதிகாரிகளும்
வணிகர்கள்
போல்
மறைந்து
இருந்தனர்.
பெங்காசியில்
அவர்கள்
ஒரு
லிபிய
விமானப்
படை
கேணலான
அப்தல்லா
கேஹனியைச்
சந்தித்தனர்.
அவர்
சந்தேகத்திற்கு
அப்பாற்பட்டவராக
இருந்தார்.
ஆனால்
கடாபியின்
முன்னாள்
தலைமை ராஜதந்திரியான
அவர்
அரசாங்கத்தை
விட்டு நீங்கத்
தயாராக
இருந்தார்
என்றும்
துனிசிய
எதிர்ப்பு
வட்டங்களில்
சிறந்த
தொடர்பு
உடையவர்
என்றும்
கூறியிருந்தார்.
இந்த நடவடிக்கை
மிகவும்
இரகசியமாக
நடத்தப்பட்டது.
ஆனால்
இது
பற்றிய
தகவல்
கடாபிக்கு
நெருக்கமானவர்களை
அடைந்தது.
கேணலுக்குச்
சந்தேகம்
ஏற்பட்டது”
என
எழுதியிருந்தார்.
நவம்பர்
28ம்
தேதி
கடாபி
ஒரு
சர்வதேசக்
கைது
பிடி
ஆணையை
மெஸ்மரிக்காப்
பிறப்பித்தார்.
இதில்
குறிப்பிடப்படாத
பணக்
கையாடல்
குற்றச்சாட்டுக்கள்
இருந்தன.
அடுத்த
நாள்
மெஸ்மரி
பிரான்ஸில்
கைது
செய்யப்பட்டார்.
கைதியாக
இருக்கையில்,
அவர்
லிபியா
பற்றிய
பிரெஞ்சு
அரசாங்கத்திற்குப்
பரந்த
தகவல்களைக்
கொடுத்தார்
எனக்
கூறப்படுகிறது.
டிசம்பர்
9ம்
தேதி
மக்ரெப்
கான்பிடென்ஷியல்
எழுதியது:
அதாவது
“தன்
உயிருக்குப்
பயந்த
மெஸ்மரி
அரசியல்
தஞ்சத்தை
நாடினார்.
உத்தியோகபூர்வமாக
அவர்
பணக்கையாடல்
செய்ததாக
லிபியா கூறுகிறது.
முன்பு
முயம்மர்
கடாபிக்கு
நெருக்கமாக
இருந்த
அவர்
ஒரு
“லிபிய
விக்கிலீக்”
என
விவரிக்கப்பட்டார்.
ஏனெனில்
இவருக்கு
ஆட்சியைப்
பற்றி
அனைத்தும்
தெரியும்.
மற்றவர்களும்
கட்சி மாறலாம்
என
எதிர்பார்த்து
திரிபோலி
பல
அதிகாரிகளின்
பாஸ்போர்ட்டுக்களையும்
பறிமுதல்
செய்தது.
இதில்
வெளியுறவு
மந்திரி
முசா
குசாவும்
அடங்குவார்.
அவரும்
மோசடிக்கான
குற்றச்சாட்டில்
விசாரணைக்கு
உட்படுத்தப்பட்டுள்ளார்.”
ஆனால்
டிசம்பர்
15ம்
திகதி
வெர்சாய்
மேல்முறையீட்டு
நீதிமன்றம்
மெஸ்மரியை
விடுவித்தது.
அவர்
காவலில்
வைக்கப்படுவதற்கான
நிபந்தனைகள்
“ஒழுங்கற்றவை”
என்று
காரணம்
கூறப்பட்டது.
அவர்
விடுவிக்கப்பட்ட
பின்னர்,
மெஸ்மரி
பிரெஞ்சு
அரசாங்கப்
பாதுகாப்பின் கீழ்
இருந்தார்.
பாரிஸில்
தொடர்ந்து
பல
ஆடம்பர
ஹொட்டல்களில்
அவர்
இருந்தார்.
அடுத்த
மாதத்தில்,
பல
லிபிய
அதிகாரிகள்
பாரிஸுக்கு
தொடர்ந்து
அனுப்பப்பட்டு,
லிபியாவிற்கு
மீண்டும்
மெஸ்மரையை
அழைத்துச்
செல்லும்
நோக்கத்தை
அவர்கள்
கொண்டிருந்தனர்.
பெஷிஸ்
எழுதுகிறார்:
“டிசம்பர்
16ம்
திகதி
லிபியத்
தொலைக்காட்சியின்
தலைவரான
அப்தல்லா
மன்சூர்
முயற்சித்தார்.
பிரெஞ்சு
அதிகாரிகள்
அவரை
Concorde
Lafayette
ஹோட்டல்
நுழைவாயிலில்
கைது
செய்தனர்.
டிசம்பர்
23 அன்று
பாரிஸுக்கு
அதிக
லிபியர்கள்
வந்தனர்.
Farj Charrani, Fathi Boukris, AllOunes Mansouri
அனைவரும்.”
இவர்கள்
பெங்காசியில்
பெப்ருவரி
17 நடைபெற்ற
கடாபி
எதிர்ப்பின்
உறுப்பினர்கள்
எனக்
கூறப்படுகிறது.
லிபிய
நிலைமை
இன்னும்
அழுத்தம்
நிறைந்ததாக
ஜனவரியில்
மாறியது.
இதற்குக்
காரணம்
தொழிலாள
வர்க்க
எதிர்ப்புக்கள்
அண்டைய
துனிசியா
முழுவதும்
பரவி
துனிசிய
ஜனாதிபதி
ஜைன்
எல்
அபிடைன்
பென்
அலி
ஜனவரி
14ம்
திகதி
இராஜிநாமா
செய்ய
வழி
செய்ததுதான்.
கடாபியின்
மகன்
மோடசிம்
பாரிஸில்
ஒரு
வாரம்
தங்கி
லிபியாவிற்கு
மெஸ்மரியை
மீண்டும்
கொண்டு
செல்லும்
நம்பிக்கையை
ஏற்படுத்த
முனைந்து
தோல்வி அடைந்தார்.
“மோடசிம்
கடாபி
பெப்ருவரி
5ம்
தேதி
பாரிஸிலிருந்து
தனியே
திரும்பினார்.
ஜனவரிக்
கடைசியிலிருந்து
ஆடம்பர
பிரிஸ்டல்
ஹோட்டலில்
தங்கியிருந்த
முயம்மர்
கடாபியின்
மகன்
நாட்டிற்குத்
திரும்ப வைப்பதற்கு
நூயி
மெஸ்மரியை
நம்பகப்படுத்துவதில்
தோல்வி
அடைந்தார்.
கடாபியின்
முன்னாள்
தலைமை ராஜதந்திரி
மெஷ்மரி
பாரிசில்
உத்தியோகபூர்வமாக
மருத்துவக்
காரணங்களுக்காக
இருந்தார்.
ஆனால்
லிபியா
ஒரு
கைதுப்
பிடி
ஆணையை
அவர் மீது
வெளியிட்டபின்,
பிரெஞ்சு
அதிகாரிகளால்
கைது
செய்யப்பட்டார்.
லிபியாவுடன்
“அனைத்துப்
பிரச்சினைகளும்
தீர்க்கப்பட்டுவிட்டன”
என்று
கூறிய
நிலையில்,
மெஸ்மரி
மிக
உறுதியான
உத்தரவாதங்கள்
வந்தால்
ஒழியத்
திரும்புவதற்குத்
தயக்கம்
காட்டினார்.”
கடாபி
ஆட்சி
பெருகிய
முறையில்
பாதுகாப்பு
நடவடிக்கைகளை
அதிகரித்த
நிலையில்,
பெங்காசியில்
பிரான்ஸின்
முக்கியமாகத்
தொடர்பாளர் என்று
பெஷின்
பெயரிட்டிருந்த
கேணல்
அப்தல்லா
கேஹனியை கடாபி
ஆட்சி
கைது
செய்தது.
ஜனவரி
27ம்
தேதி
மக்ரப்
கான்பிடென்ஷியல்
எழுதியது:
“ஜெனரல்
ஔத்
சைத்தி,
வரலாற்றளவில்
எழுச்சி
காட்டும் கிழக்கு
லிபிய
(பெங்காசி)
இராணுவ
உளவுத்துறையின்
தலைவர்,
துனிசியப்
புரட்சிக்கு
ஆதரவு
காட்டும்
ஆர்ப்பாட்டம்
எதையும்
நசுக்குமாறு
உத்தரவிடப்பட்டார்.
மைய
அரசாங்கம்
சில
அதிகாரிகளை
அதிக
நேரம்
எதிர்ப்புக்களுக்கு
ஊக்கம்
கொடுக்கும்
சமூக
இணையத்தளங்களில்
செலவிடுவதற்காக
கடிந்து
கொண்டது.
விமானப்படையின்
கேணல்
அப்துல்லா
கேஹனி
உட்படப்
பல
அதிகாரிகள்
கைது
செய்யப்பட்டனர்.”
பெப்ருவரி
17ம்
திகதி
மக்ரெப்
கான்பிடென்ஷியல்
எழுதியது:
“நீண்ட
காலமாகவே
கேணல்
கடாபிக்கு
ஒரு
முள்போல்தான்
பெங்காசி
இருந்து
வருகிறது.
லிபியாவின்
இரண்டாவது
பெரிய
“எகிப்திய”
நகரம்
வரலாற்றளவில்
எழுச்சிக்கு
ஊக்கம்
அளிப்பது
ஆகும்.
இப்பொழுதும்
அந்த
புகழிற்கு
ஏற்ப
நடந்து
கொள்ளுகிறது.
சமீபத்திய
நாட்களில்
கைது
செய்யப்பட்ட
தீவிர
செயற்பாட்டாளர்களில்
ஆறுபேர்
பெப்ருவரி
17 இயக்கத்தைச்
சேர்ந்தவர்கள்.
இந்தப் பெயர்
பெங்காசியில்
பெப்ருவரி
17, 2006ல்
அரசாங்க
எதிர்ப்பாளர்கள்
மீது
நடத்திய
குருதி
கொட்டும்
தாக்குதலில்
அமைந்துள்ளது.
அவர்கள்
Farj Charrani, Fathi Boukhris, AliQunes Mansouri, Safiddin hilal Sahri, Jalal
Kouafi மற்றும்
உறுதியான
[ஜமால்]
அல்
ஹஜ்ஜி
ஆகியோர்
ஆவர்.”
“ஆனால்
காலதாமதம்
ஏற்பட்டுவிட்டது:
கேஹனி
ஏற்கனவே
பிரெஞ்சு
உதவியுடன்
பெங்காசியை
ஒரு
எழுச்சிக்குத்
தயாரித்துவிட்டார்.” |