WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
:
லிபியா
லிபியா குறித்து ஒபாமா:
அமெரிக்க
“நலன்களுக்கான”
ஒரு போர்
By
Bill Van Auken
29 March 2011
இப்பொழுது
லிபியாவிற்கு எதிராக
10வது நாளாக போர்
நடக்கிறது என்ற நிலையில்,
அமெரிக்க மக்களுக்கு
அது பற்றிய முதல் உரையில் ஜனாதிபதி பராக் ஒபாமா திங்கள் இரவன்று அமெரிக்க
ஏகாதிபத்தியம் உலகில் எங்கு வேண்டுமானாலும்
“அதன் நலன்கள்
மற்றும் மதிப்புக்கள்”
பாதிக்கப்படுகின்றன
என்றால் அங்கு இராணுவ நடவடிக்கை எடுக்கும் உரிமை குறித்து ஒரு வாதம் செய்தார்.
பல
முரண்பாடுகள்,
தவிர்ப்புக்கள்
மற்றும் பொய்களும் நிறைந்திருந்த ஒபாமாவின் உரையானது இந்த
“நலன்களும்
மதிப்புக்களும்”
என்ன என்பது பற்றி
புரியும் வகையில் எதையும் தெரிவிக்கத் தோற்றுவிட்டது.
அதே போல்,
அமெரிக்க
காங்கிரசின் ஒப்புதல் வாக்கு பெறுவது ஒருபுறம் இருக்க,
அமெரிக்க மக்களுக்கு
அவர் ஏன்,
எப்படி அதனுடைய காரணங்கள் மற்றும் நோக்கங்கள் பற்றி விளக்காமல் ஒரு போரை
ஆரம்பிக்கும் உரிமையை தான் எடுத்துக் கொண்டார் என்பது பற்றியும் அது விளக்கவில்லை
ஆரம்பத்திலிருந்து இறுதி வரை தவறாக இருந்த லிபியத் தலையீடு வரையிலான நிகழ்வுகளைப்
பற்றிய ஒரு விபரத்தையும் ஒபாமா முன்வைத்தார்.
“நான்கு
தசாப்தங்களுக்கும் மேலாக லிபிய மக்கள் முயம்மர் கடாபி என்னும் ஒரு கொடுங்கோலரால்
ஆளப்பட்டு வந்துள்ளனர்.
கடந்த மாதம்
லிபியர்கள் தெருக்களுக்கு வந்து தங்களுடைய அடிப்படை உரிமைகளை கோரினார்கள்,
ஆனால் கடாபி அவருடைய
மக்களையே தாக்கத் தொடங்கினார்”
என்றார் அவர்.
கடாபி
“வழிநடத்திச்
செல்லும் நெறியை”
இழந்து விட்டார்
என்று ஒபாமா ஆணையிட்டபோது,
லிபியத் தலைவர்
கேட்க மறுத்து வாஷிங்டனை
“அனைத்துத் தேவையான
நடவடிக்கைகளையும் லிபிய மக்களைப் பாதுகாப்பதற்கு”
இசைவு கொடுக்கும்
ஒரு தீர்மானத்தைப் பெற ஐ.நா.
பாதுகாப்பு
சபைக்குச் செல்ல வைத்தார்.
கிழக்கு
லிபிய நகரான பெங்காசியில் தவிர்க்க முடியாத படுகொலைகளை முகங்கொடுத்த நிலையில்,
“நம் தேசிய நலன்கள்
அவ்வாறு நடக்க அனுமதிக்கக்கூடாது”
என்பதனால் தான்
இராணுவ வலிமையைப் பயன்படுத்த ஒப்புதல் கொடுக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டதாக
ஒபாமா கூறினார்.
முதலில்,
இந்த விந்தையான
வரலாறு தொடர்ச்சியான அமெரிக்க நிர்வாகங்கள் லிபிய
“கொடுங்கோலருடன்”
இன்னும் நெருக்கமாக,
மிகவும் இலாபகரமான
உறவுகளைக் கொண்டது என்பது பற்றி விளக்கம் கொடுக்கவில்லை.
செப்டம்பர்
11, 2011 ஐத்
தொடர்ந்து,
அவருடைய இரகசிய
உளவுத்துறை “பயங்கரவாதத்தின்
மீதான உலகளாவிய போர்”
என்று
அழைக்கப்பட்டதில்
CIA யின் பிராந்திய
நட்பு நாடுகளில் மிகவும் முக்கியமானவற்றுள் ஒன்றாயிற்று.
புஷ்ஷின் தேசிய
பாதுகாப்பு ஆலோசகர் கொண்டலீசா ரைஸ்,
திரிபோலிக்கு
அமெரிக்க-லிபிய
உடன்படிக்கையை நன்கு முடிக்கப் பறந்து சென்றிருந்தார்.
ஒபாமாவின்
கீழ் உறவுகள் இன்னும் சுமூகமாயின.
ஏப்ரல்
2009ல் ஹில்லாரி
கிளின்டன் கடாபியின் மகனை—தேசியப்
பாதுகாப்பு மந்திரியும் கூட—
வெளிவிவகார
செயலகத்திற்கு வரவேற்று நிர்வாகம்
“நம்மிடையேயுள்ள
ஒற்றுமையை ஆழப்படுத்த,
அகலப்படுத்த”
விருப்பம்
கொண்டுள்ளதாகவும்
“இந்த உறவையொட்டி
அது கட்டமைக்கப்படும்”
என்றும் அறிவித்தார்.
கடந்த
மாதம்தான் சர்வாதிகாரியின் புதல்வர்களில் மற்றவரான கமிஸ் அமெரிக்காவில் நான்கு
வாரங்களைக் கழித்தார்.
இப்பயணம் அமெரிக்க
இராணுவ நிலைப்பாட்டுத் துறையின் மேற்பார்வையின் கீழ் இருந்தது.
கடைசி நிமிடத்தில்
அவர் வெஸ்ட் பாயின்டிற்கு சென்றிருக்க வேண்டிய திட்டமிட்ட பயணம்
“எழுச்சியாளர்கள்”
என்று
அழைக்கப்படுவோருடன் போரிடுவதற்கு லிபியா செல்ல வேண்டியிருந்ததால் இரத்து
செய்யப்பட்டது.
கிளின்டனும்
அவருக்கு முன் பதவிக்கு முன் இருந்தவர்களும் கடாபியிடம் ஆதரவை நாடி எண்ணெய்
ஒப்பந்தங்களில் கவனத்தைக் காட்டியபோது அமெரிக்க
“மதிப்புக்கள்”
குறுக்கிடவில்லை
போலும்.
லிபியாவில்
வெடித்துள்ள வன்முறை அமைதியான லிபியக் குடிமக்கள் ஜனநாயகத்திற்காக தெருக்களுக்கு
வந்து அதன் பின் ஆட்சியினால் தாக்கப்பட்டது என்ற எளிய நிகழ்வு அல்ல.
நாடானது பிராந்திய,
பழங்குடிப்
பிரிவுகளினால் சிதைந்திருந்தது.
மேலைத்தேச
சக்திகளும் உளவுத்துறை அமைப்புக்களும் எழுச்சியைத் தூண்டிவிட்ட விதம் ஒரு
உள்நாட்டுப் போரைத் தூண்டும் போக்கைக் கொண்டிருந்தது.
பெங்காசி
நகரத்தின் மீது கிட்டத்தட்ட இனப் படுகொலைத் தன்மை அளவிற்குப் படுகொலையைத் தூண்டும்
விளிம்பில் ஆட்சி இருந்தது என்னும் கூற்று உண்மையைப் போல் காட்டப்படுகிறது.
ஆனால் அத்தகைய
அளவில் வன்முறைக் கொலைகள் எழுச்சியாளர்களின் பிடிக்கு வந்து கடாபிக்கு விசுவாசமாக
இருக்கும் சக்திகளால் மறுபடியும் கைப்பற்றப்பட்ட நகரங்களில் நடைபெற்றன என்பதற்கான
சான்றுகள் ஏதும் இல்லை.
அமெரிக்க
இராணுவ நடவடிக்கை
“கொலையை
நிறுத்துவதற்கு”
நடத்தப்பட்டன என்று
ஒபாமா கூறியுள்ளார்.
இது வெற்றிகரமாக
“கடாபியின்
பேராபத்தான முன்னேற்றத்தை நிறுத்திவிட்டது”
என்றும்
கூறியுள்ளார்.
உண்மையில்,
வாஷிங்டன் தான்
தூண்டிவிட்ட உள்நாட்டுப் போர் ஒன்றில்தான் வாஷிங்டன் தலையீடு செய்துள்ளது.
அமெரிக்க விமானப்
படை,
வாஷிங்டனின் நேட்டோ கூட்டணி
நாடுகள் அளித்த சிறிய எண்ணிக்கையிலான போர் விமானங்களுடன் எழுச்சியாளர்களின் விமானப்
படைபோல் செயல்பட்டு,
திரிபோலியிலுள்ள
அரசாங்கத்திற்கு விசுவாசமாகவுள்ள விமானத் துருப்புக்களை அழித்துவிட்டது.
இதையொட்டி அமெரிக்க
ஆதரவுடைய படைகள் தரையில் முன்னேற வழிவகுக்கப்பட்டுவிட்டது.
நடவடிக்கைக்கு ஒரு போலி நியாயத்தை அளித்த பின்னர்,
ஒபாமா அமெரிக்கப்
பங்கு பெரிதும் முடிந்துவிட்டது,
அவருடைய நிர்வாகம்
“நம் கூட்டணி
நாடுகளின் பங்காளிகளுக்கு”
அதாவது நேட்டோவிற்கு
பொறுப்புக்களை மாற்றச் செயல்பட்டுவருகிறது என்று ஒபாமா தெரிவித்தார்.
இந்த
உரையின் அப்பட்டமான நோக்கம் லிபியத் தலையீடு அமெரிக்கப் போரைத் தவிர வேறு ஏதோ ஒன்றை
காட்டுவதாகும்.
உரை நடத்தப்பட்ட
அரங்கு கூட—இது
தேசியப் பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் பாதையின்றிக் கூடியிருந்த இராணுவ
அதிகாரிகளால் நிறைந்திருந்தது.
வெள்ளை மாளிகை ஓவல்
அலுலகம் என்பதற்குப் பதிலாக—
இதையொட்டி முக்கிய
தொலைக்காட்சி நேரம் தடைக்குட்படாத வகையிலும் திட்டமிடப்பட்டிருந்தது.
இது ஈராக் அல்லது
ஆப்கானிஸ்தானில் நடக்கும் அமெரிக்கப் போர்களுடன் ஒப்பிடத்தக்கது அல்ல என்பதைத்
தெரிவிக்கும் வகையிலும் இருந்தது.
இது மற்றொரு
ஏமாற்றுத்தனம் ஆகும்.
லிபிய இராணுவ
நடவடிக்கைகளை ஒரு முறையான நேட்டோ கட்டுப்பாட்டின் கீழ்
இருத்துதல் என்பது
ஒரு முடிவெடுக்கும் பங்கை அமெரிக்கா கொள்ளுவதில் இருந்து அகற்றிவிடாது.
எப்படி
ஆப்கானிஸ்தானிய போர் நேட்டோவின் பெயரளவுக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தாலும்,
அது சிறிதும்
குறைந்த அளவில் அமெரிக்கச் செயற்பாடு என்பதில் சந்தேகம் இல்லையோ அப்படித்தான்
இதுவும்.
அமெரிக்க
இராணுவத்தின் மேலாதிக்கத்திற்கு நேட்டோ உட்பட்டது.
லிபியா மீது
அமெரிக்க இராணுவம் தொடர்ந்து முக்கிய பங்கைத் தொடரும்.
ஒபாமா நிர்வாகம்
அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை முடிப்பது பற்றிப் பேசுகையிலேயே,
வாஷிங்டன் போஸ்ட்
திங்களன்று பென்டகன்
AC-130 மற்றும்
A-10 ஆகிய தாக்குதல்
விமானங்களைப் பயன்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
இவைகள் வான்வழி
துப்பாக்கிக் கப்பல்கள் போன்றவை.
தரைப்படைகளை கன ரக
இயந்திரத் துப்பாக்கிகள்,
பீரங்கிகள்
போன்றவற்றால் படுகொலை செய்யப் பயன்படுத்தப்படும்.
போஸ்ட்
குறிப்பிட்டுள்ளதுபோல்,
இது
பயன்படுத்தப்படுவது அமெரிக்க இராணுவம்
“ லிபியாவில்
நடக்கும் பெரும் குழப்பமான போரில் இன்னும் ஆழமாக ஈர்க்கப்பட்டுள்ளது”
என்பதற்கான
அறிகுறியாகும்.
போர்
எதிர்ப்பாளர்கள் முன்வைத்த வாதங்கள் சிலவற்றைப் பற்றியும் ஒபாமா அரைமனத்துடன்
நேர்மையற்ற முறையில் விடையிறுத்தார்:
“அவர்கள் உலகின் பல
இடங்களில் நிரபராதியான மக்கள் தங்கள் அரசாங்கத்திடம் இருந்து மிருகத்தனமான
வன்முறையை முகங்கொடுக்கின்றனர்,
அமெரிக்கா ஒன்றும்
உலகிற்கு பொலிசாகச் செயல்பட வேண்டியதில்லை என்று வாதிடுகின்றனர்”
“எங்கு
அடக்குமுறை நேர்ந்தாலும்”,
வாஷிங்டன் தலையிட
முடியாது என்பதை ஏற்றாலும்,”
குறிப்பிட்ட
நடவடிக்கைகளுக்கு எதிராக நம்முடைய நலன்களை எப்பொழுதும் கருத்திற் கொள்ள வேண்டும்”
என்று ஒபாமா
வலியுறுத்தினார்.
ஒரு
அமெரிக்க நட்பு நாடும் அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படைப் பிரிவிற்கு தளமாக
இருக்கும் பஹ்ரைனின் சர்வாதிகார முடியரசு மிருகத்தனமாக மக்களை அடக்குவதற்கு எதிராக
தலையீடு ஏன் தேவையில்லை,
மாறாக அதற்கு ஆதரவை
ஏன் கொடுக்க வேண்டும் என இவர் கருதுகிறார் என்பதற்கு இதுதான் விளக்கம் போலும்.
அல்லது
CIA க்கும் அமெரிக்க
சிறப்புப் படைகளுக்கும் அவருடைய நாட்டில் இஸ்லாமியவாத போராளிகள் எனக் கூறப்படுவோரை
வேட்டையாடிக் கொல்ல அனுமதித்துள்ள யேமனின் சர்வாதிகாரி அலி அப்துல்லா சலே
கட்டவிழ்த்துள்ள குருதி கொட்டும் அடக்குமுறை மீதும் இதே போன்ற அணுகுமுறையை இவர்
நிர்வாகம் கொண்டுள்ளது என்பதையும் இது விளக்குகிறது போலும்.
செய்தி
ஊடகத்திற்கு உரை நிகழ்த்துவதற்கு சில மணி நேரம் முன்பு பேசிய ஒபாமாவின் துணை
தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் டெனிஸ் மக்டோனோ இதே அடிப்படைக் கருத்தை இன்னும் சற்று
அப்பட்டமான முறையில் கூறினார்.
“இந்த நிகழ்வுகள்
ஒவ்வொன்றையும் நாம்
தனித்தனியே காண்பது
முக்கியமாகும்…
இப்பிராந்தியத்தில்
ஒவ்வொன்றும் பிரத்தியேகமான முறையில் உள்ளது.
முன்னோடி என்பதுடன்
நாம் முழுமையாக ஏற்றுக்க கொள்ளும் பிரச்சினை அல்ல இவை….ஏனெனில்
தலையிடுதல் என்று வரும் பிரச்சினைகள் பற்றிய முடிவுகளில் நாம் தொடர்ச்சியையோ,
முன்னோடியையோ
தளமாகக் கொள்ளுவது அல்ல.
அப்பிராந்தியத்தில்
நம் சிறந்த முறையில் நம் நலன்களை முன்னேற்றுவிப்பதற்குத் தேவையான தளத்தைத்தான்
கொள்ளுவோம்.”
வேறுவிதமாகக் கூறினால்,
“அமெரிக்க
மதிப்புக்கள்”, “நீதி
மற்றும் மனித கௌரவம்”
ஆகியவை பற்றி
அமெரிக்க ஜனாதிபதி பேசும்போது,
நாம் பணப்பையைப்
பத்திரமாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
இத்தகைய
மதிப்புக்களும் கொள்கைகளும் அமெரிக்க நலன்களைத் தொடர்வதற்கு ஒரு உபயோகமான
போலிக்காரணத்தை அளிக்கும்போதுதான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
லிபியாவில்
இந்த நலன்களின் அக்கறைகள் என்ன?
வாஷிங்டன் கடாபி
ஆட்சியுடன் ஒரு இலாபகரமான உறவை நாடிப் பெருமளவில் அதைப் பெற்றபோது,
அது லிபியத் தலைவரை—அவருடைய
ஏகாதிபத்திய எதிர்ப்புப் பார்வை மற்றும் காலனிக்கு எதிரான போராட்டத்துடன்
வரலாற்றுத் தொடர்பு கொண்டுள்ள நிலையில்—ஒரு
நம்பகமற்ற நண்பர் என்றுதான் கருதியிருக்க வேண்டும்.
மேலும்,
அமெரிக்க ஆளும்
உயரடுக்கு ரஷ்யா மற்றும் சீனா இரண்டும் லிபியாவுடன் எண்ணெய் ஒப்பந்தங்கள்,
கட்டுமானத்
திட்டங்கள்,
ஆயுத ஒப்பந்தங்கள்
ஆகியவற்றை நிறுவும் உறவுகளின் அடையாளத்தை பெரும் எச்சரிக்கையுடன் கண்டது.
ஏனெனில் இவை
மத்தியதரைப் பகுதி மற்றும் வட ஆபிரிக்காவில் அமெரிக்க நலன்களை அச்சுறுத்தின.
இராணுவ
நடவடிக்கையின் நோக்கம் இன்னும் வளைந்து கொடுக்கும் தன்மையுடைய ஆட்சியை திரிபோலியில்
நிறுவுதல் ஆகும்—அது
முற்றிலும் ஒரு அமெரிக்கக் கைப்பாவையாக இருக்க வேண்டும்.
ஒபாமாவின்
உரை
“அமெரிக்க
மதிப்புக்கள்”
மற்றும் அமெரிக்க
“மனிதாபிமானம்”
லிபிய நிகழ்வுகளால்
தூண்டுதல் பெற்றது என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.
ஒரு முக்கிய கவலை
நாட்டில் தவிர்க்க முடியாத படுகொலை இருப்பதாகக் கூறப்படுவது பற்றி என்பது
“ஆயிரக்கணக்கான
கூடுதல் அகதிகளை லிபியாவின் எல்லைகளுக்கு அப்பால் தள்ளும்,
அது எகிப்து மற்றும்
துனிசியாவில் நடக்கும் சக்தி வாய்ந்த,
ஆனால் நலிந்த,
மாற்றங்களுக்கு
பெரும் வேதனைகளைக் கொடுக்கும்.”
“பிராந்தியம்
முழுவதும் வெளிப்பட்டுள்ள ஜனநாயக உந்துதல்கள் சர்வாதிகாரத்தின் இருண்ட
வடிவமைப்புக்களால் மறைக்கப்பட்டுவிடும்.
ஏனெனில்
அதிகாரத்தில் நிலைநிறுத்திக் கொள்ளச் சிறந்த மூலோபாயம் வன்முறைதான் என்று
அடக்குமுறைத் தலைவர்கள் முடிவிற்கு வந்துள்ளனர்”
என்றார் அவர்.
என்ன
பாசாங்குத்தனம்!
முதலில் ஒபாமா
நிர்வாகம் துனிசிய மற்றும் எகிப்திய மக்கள் எழுச்சிகளை எதிர்த்தது.
பென் அலி மற்றும்
முபாரக் போன்ற சர்வாதிகாரிகளுக்கு இயன்றளவு கடைசிக் கணம் வரை,
வாஷிங்டனின்
நீண்டகால நட்புக்களுக்கு ஆதரவு கொடுத்தது.
இரண்டாவதாக,
பிராந்தியத்திலுள்ள
மக்கள் தங்கள் உரிமைகளுக்காக நடத்தும் போராட்டங்களை மறைப்பதுதான் அமெரிக்கா வட
ஆபிரிக்காவின் முந்தைய காலனித்துவ சக்திகளுடன் சேர்ந்து
—பிரிட்டன்,
பிரான்ஸ்,
இத்தாலி,
ஸ்பெயின்—
ஒரு போரைத்
தொடக்கியிருப்பதின் துல்லியமான காரணம் ஆகும்.
இது தொழிலாள
வர்க்கம் மற்றும் அடக்கப்பட்ட மக்களின் புரட்சிகரப் போராட்டங்களுக்கு ஏகாதிபத்திய
ஆதிக்கத்தின் எதிர்ப்பை மீண்டும் உறுதிப்படுத்துவது ஆகும்.
“வன்முறைதான்
அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ளச் சிறந்த மூலோபாயம்”
என்ற முடிவிற்கு
அடக்குமுறை ஆட்சியாளர்கள் வந்துள்ளது பற்றி,
அவர்கள் அமெரிக்க
நட்பு நாடுகளான பஹ்ரைன்,
யேமன்,
சௌதி அரேபியா
ஆகியவற்றைக் கண்டாலே அப்படிப்பினையை கற்கலாம்.
போரைப்
பற்றிய ஒபாமாவின் நியாப்படுத்துதலில் பல கருத்துக்கள் உலகின் அறநெறி மதிப்புக்களின்
காவலர் என்று வாஷிங்டனின் பிரத்தியேகமான பங்கைக் கூறுவது ஆகும்.
“சில நாடுகள் மற்ற
நாடுகளில் நடக்கும் கொடுமைகள் பற்றிக் காணமல் இருந்துவிடுகின்றனர்.
அமெரிக்கா
வித்தியாசமானது.
ஜனாதிபதி என்னும்
முறையில் படுகொலை,
ஏராளமான மக்களுக்கு
ஒரே கல்லறைக்குழி என்பது வரும் வரை நடவடிக்கை எடுக்கக் காத்திருக்க நான் தயாராக
இல்லை”
என்றார் அவர்.
எவரை
ஏமாற்றுவதாக இவர் நினைக்கிறார்?
அவருடைய உரைக்கு இரு
நாட்கள் முன்புதான் அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் அவற்றின் போர் விமானங்களை
ஒரு காரைத் தாக்கி அதில் சென்றுகொண்டிருந்த இரு ஆண்கள்,
இரு பெண்கள் மற்றும்
மூன்று குழந்தைகளைக் கொன்ற வகையில் மற்றொரு கொடுமையை இழைத்தன.
“படுகொலைத்
தோற்றங்களை”
பொறுத்தவரை அமெரிக்க
இராணுவப் பிரிவு ஆயுதமற்ற ஆப்கானியர்களை வேண்டுமென்றே கொன்றதை வெளிப்படுத்தும்
அத்தகைய தோற்றங்கள்தான் பொது மக்கள் பார்வைக்கு வந்துள்ளதை மறைப்பதற்கு அவருடைய
நிர்வாகமும் பென்டகனும் அசாதாரண முயற்சியில் ஈடுபட்டன.
ஜனநாயகக்
கட்சியிலுள்ள தாராளவாதிகள் மற்றும் போலி இடது ஆதரவாளர்களுக்கு முறையீடு செய்யும்
வகையில் ஒபாமா லிபியத் தலையீட்டை
—இவருடைய
ஆட்சியில் தொடங்கிய முதல் போர்—
இவரால் தொடரப்படும்,
ஆனால் புஷ்
நிர்வாகத்தால் தொடக்கப்பட்ட ஈராக் போருடன் வேறுபடுத்திக் காட்டுகிறார்.
முதலில்,
இது ஐ.நா.தீர்மானத்தால்
இது புனிதப்படுத்தப்பட்டுள்ளது என்றும்
“சர்வதேச ஆதரவு”உடையது
என்றும் கூறுகிறார்.
இரண்டாவதாக அவர் இது
“கடாபியை வலிமையின்
மூலம் அகற்றும்”
நோக்கம் கொண்டது
இல்லை என வலியுறுத்துகிறார்.
மாறாக அமெரிக்கத்
துருப்புக்கள் “லிபிய
மக்களை உடனடி ஆபத்தில் இருந்து பாதுகாக்கவும் ஒரு பறக்கக் கூடாத பகுதியை
நிறுவவும்தான்”
நடக்கிறது என்றும்
வலியுறுத்துகிறார்.
இக்கூற்றின்
இரண்டாவது பகுதி ஒரு அப்பட்டமான பொய் ஆகும்.
அமெரிக்க இராணுவம்
அமெரிக்க ஆதரவுடைய ஆயுதமேந்திய எதிர்ப்பிற்கு கடாபியின் படைகளுக்கு எதிரான முன்னேற
பாதையை அமைத்துக் கொடுப்பதில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது.
இது முறையாக
ஆட்சியின் இராணுவப் பிரிவுகள்,
உள்கட்டுமானம்
ஆகியவற்றை சிதைக்கப் பாடுபட்டுள்ளது,
அதன் நோக்கம் ஆட்சி
மாற்றத்திற்கான போக்கை உருவாக்குவதுதான்.
ஐ.நா.
தீர்மானத்தை
பொறுத்தவரை,
அதுவோ ஐ.நா.
விதிகளின் மிக
அடிப்படைக் கொள்கைகளை மீறியது ஆகும்.
விதிகளின்படி
உறுப்புநாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவது தவிர்க்கப்பட்டுள்ளது.
இப்பொழுது தகவல்
என்னவென்றால்,
அத்தகைய தீர்மானம்
வலுக்கட்டாயமாக கொண்டு வரப்பட்டு மற்ற ஏகாதிபத்திய சக்திகளும் இணையும்போது போர்
என்பது நியாயம் என ஆகிவிடுகிறது.
முடிவுரையாக
ஒபாமா
“அமெரிக்காவின்
இராணுவச் சக்தி பயன்பாடு,
உலகில்
அமெரிக்காவின் பரந்த தலைமை,
என்னுடைய ஜனாதிபதி
தலைமையின் கீழ் என்பதைப் பற்றி இந்த நடவடிக்கை என்ன கூறுகிறது”
என்பது பற்றி
கவனத்தை ஈர்த்தார்.
தான்
“நம் இராணுவத்தை
விரைவாக,
உறுதியாக,
தேவையானால்
ஒருதலைப்பட்சமாக நம் மக்கள்,
நம் தாயகம்,
நம் நட்பு நாடுகள்,
நம் அடிப்படை
நலன்கள் ஆகியவற்றைக் காப்பதற்கு ஒருபொழுதும் தயக்கம் காட்ட மாட்டேன்”
என்று அவர்
குறிப்பிட்டார்.
ஆனால்
இராணுவ சக்தி
“நம் பாதுகாப்பு
நேரடியாக அச்சுறுத்தப்படவில்லை என்றாலும் நம் நலன்களும் மதிப்புக்களும்
அச்சுறுத்தப்படுகின்றன”
என்னும் நிலைமையில்
நியாயமாகிறது. “இனக்
கொலையில் இருந்து சமாதானத்தை பாதுகாத்தல் வரை,
பிராந்திய
பாதுகாப்பை உறுதிப்படுத்துதல்,
வணிகத்தை தடையின்றி
இயக்குவது”
அனைத்துச்
சூழ்நிலைகளிலும்,
அமெரிக்க செயல்பட
அஞ்சத் தேவையில்லை”
என்றார் அவர்.
புஷ்
நிர்வாகத்தின் கீழ் போரை தொடக்கக் கூறப்பட்ட உரிமை உறுதிப்படுத்தப்படுதலுக்கும்
அப்பாலுள்ள நிலைப்பாட்டைத்தான் இது பரந்த முறையில் கூறுவது ஆகும்.
புஷ் நிர்வாகம்,
பொய்களின்
அடிப்படையில்,
அதனுடைய போர்கள்
பயங்கரவாதம்,
பேரழிவு ஆயுதங்கள்
ஆகியவற்றால் ஏற்படக்கூடிய தவிர்க்க முடியாத அச்சுறுத்தலினால் விளைந்தன எனக் கூறியது.
அத்தகைய
தேவைகூட தேவையில்லை என ஒபாமா வலியுறுத்துகிறார்.
அமெரிக்க
நலன்களுக்கும் மதிப்புக்களுக்கும்”
வெறும் சவால் உலகின்
எப்பகுதியில் இருந்தால் போதும் என ஒபாமா வலியுறுத்துகிறார்.
அமெரிக்க தளமுடைய
சர்வதேச வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள் அத்தகைய
“நலன்கள் மற்றும்
மதிப்புக்களும்”
பாதிப்பிற்குட்படாத
இடம் உலகின் ஏதேனும் ஒரு பகுதியில் உள்ளதா?
–இதில்
“வணிகப் பாய்வும்
அடங்கும்.”
அமெரிக்காவின் ஆளும்
உயரடுக்கின் நலன்களுக்கு இன்னும் கூடுதலாக உதவக்கூடிய வகையில் அமெரிக்க இராணுவ
ஆக்கிரோஷ செயல்களுக்கு நியாயம் கற்பிக்கத்தான் ஒபாமா வாதிடுகிறார். |