சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

London conference plots imperialist carve-up of Libya

லண்டன் மாநாடு லிபியாவை ஏகாதிபத்திய துண்டாடுதலுக்கு சதி செய்கிறது

By Barry Grey
30 March 2011
Use this version to print | Send feedback

செவ்வாயன்று லண்டனின் Lancaster House இல் நடைபெற்ற மாநாடு பாசாங்குத்தனம், இழிந்த தன்மை ஆகியவை கொண்ட முகஞ்சுளிக்க வைக்கும் நிகழ்வாகும். லிபிய மக்களுக்கு சுதந்திரம் என்ற பெயரில், அமெரிக்காவும் பிரிட்டனும் 40 நாடுகளிலிருந்து மந்திரிகளையும் ஐ.நா., நேட்டோ, அரபு லீக் போன்ற சர்வதேச அமைப்புக்களில் இருந்து பிரமுகர்களையும்  முன்னாள் காலனிக்கு எதிராக வான் தாக்குதலை விரிவாக்கவும் ஒரு கைப்பாவை அரசாங்கத்தை நிறுவதற்கான அரங்கத்தை அமைப்பதற்கும் ஒருங்கே திரட்டின.

அமெரிக்கா, பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு ஏவுகணைகளும் குண்டுகளும் லிபிய அரசாங்கத் துருப்புக்கள் மற்றும் குடிமக்கள் மீது திரிபோலி, சிர்ட்டே போன்ற நகரங்களில் தொடர்ந்து குண்டுகள் பொழியும் நிலையில், அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் கிளின்டனும் பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் காமரோனும் இராணுவத் தாக்குதல் காலவரையற்று தொடரும் என அறிவித்தனர். லிபிய சர்வாதிகாரி முயம்மர் கடாபியின் ஆட்சிக்கு எதிரான கூடுதலான பொருளாதார, அரசியல் தடைகள் வேண்டும் என்று கிளின்டன் கூறியதுடன், வாஷிங்டன்எழுச்சி சக்திகள் என்று கூறப்படும் பிரிவுகளுக்கு ஆயுதம் வழங்க இருப்பதாகக் குறிப்பைக் காட்டியது.

திங்கள் இரவு ஜனாதிபதி பராக் ஒபாமாவின் தொலைக்காட்சி உரைக்குப் பின் இம்மாநாடு நடந்தது. அந்த உரையில் அவர் லிபியா மீதான ஆக்கிரோஷ நடவடிக்கையை நியாயப்படுத்தியதுடன், ஜனாதிபதிக்கு உலகில் எங்கும் அமெரிக்கமதிப்புக்கள் மற்றும்நலன்கள் ஆகியவற்றைக் காப்பதற்கும்வணிகப் பாய்வை தக்கவைப்பதற்கும் இராணுவத் தாக்குதல்களை தொடக்கும் உரிமையும் உண்டு என வாதிட்டார். ஒரு முடிவற்ற ஏகாதிபத்தியப் போருக்கு இது ஆரம்பம் என்பதுடன் புஷ் நிர்வாகத்தின் தவிர்க்க முடியாத போர்க் கொள்கையின் பரப்பிற்கும் அப்பால் செல்கிறது.

இது சிரியா, ஈரான் உட்பட மத்திய கிழக்கில் பல நாடுகளில் அமெரிக்கத் தலையீட்டிற்கு குறுகிய காலத் திறனையும், சீனா போன்ற சக்தி வாய்ந்த போட்டி நாடுகள் மீது நீண்ட கால அளவில் போருக்கான திறனையும் கண்டுள்ளது.

“NBC Nightly News” நிகழ்ச்சியினால் திங்கள் மாலை பேட்டி காணப்பட்டபோது, ஒபாமா லண்டன் மாநாட்டில் கிளின்டன் கொடுத்த அறிக்கைகளை மீண்டும் வலியுறுத்தினார்: அதாவது இவை போரில் அமெரிக்க ஈடுபாட்டை இன்னும் அதிகமாக்குகின்றன. அதில் பெங்காசியை தளமாகக் கொண்ட இடைக்கால மாற்று தேசிய சபையின் தலைமையிலுள்ள எதிர்ப்புச் சக்திகளுக்கு ஆயுதங்கள் அளித்தலும் அடங்கியுள்ளது.

இந்த அமெரிக்க இராணுவவாதத்தின் விரிவாக்கம் குறிப்பிடத்தக்க ஆர்வத்துடன் தாராளவாதிகள், “மனிதாபிமான ஏகாதிபத்தியத்தின் போலி இடதுவாதம் இடுபவர்கள் ஆகியோரின் ஆதரவைப் பெற்றுள்ளது. அவர்கள் 1990களிலும் பால்கன் போர்களில் அமெரிக்க குண்டுகள், தோட்டாக்கள் பயன்படுத்துவதற்கு வரிசையில் நின்று ஆதரவு கொடுத்தனர். இச்சக்திகளின் அடிப்படை ஜனநாயகக் கொள்கைகள் பற்றி இழிவான மனப்பாங்கை வெளிப்படுத்தும் வகையில் நியூயோர்க் டைம்ஸ் செவ்வாயன்று ஒரு தலையங்கத்தை வெளியிட்டு அதில் ஒபாமாவின் லிபியா பற்றி உரையைப் பாராட்டி, அதே நேரத்தில் அடிப்படை ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு நெறிகளை மீறுவதற்கு அவரைக் கடிந்தும் கொண்டது.

எதிர்ப்பாளர்களுக்கு இன்னும் சிறிது காலத்திற்கு வான்வழி ஆதரவு தேவையாக இருக்கலாம் என்று அறிவித்தபின், செய்தித்தாள் எழுதியது: “ஜனாதிபதிக்கு செயலாற்றும் விருப்புரிமை உள்ளது. ஆனால் இது ஒரு தேவையான போர் அல்ல, விரும்பிச் செல்லும் போர். ஜனாதிபதிகள் காங்கிரஸை கலந்து கொள்ளாமல், அமெரிக்க மக்களுக்கு தங்கள் காரணங்களை விளக்காமல், போரில் ஈடுபடுவதாக உறுதியளிக்கக் கூடாது.”

சான்றிற்கு தன் ஒப்புதலின்மையை தெரிவித்தபின், டைம்ஸ் உடனடியாக போரின் சட்டவிரோதத் தன்மையை ஒதுக்கி வைக்கும் வகையில், “அதிருஷ்டவசமாக, ஆரம்ப இராணுவ நடவடிக்கைகள் நன்கு நடந்தேறியுள்ளன என்று குறிப்பிட்டுள்ளது.

லண்டன் மாநாட்டை ஆரம்பித்து வைத்த பிரிட்டஷ் பிரதம மந்திரி காமரோன், “இங்கு ஒருமித்த நோக்கதிற்காகக் கூடியுள்ளோம். அது லிபிய மக்களை அவர்களுடைய தேவைக் காலத்திற்கு உதவுதல் என்பதாகும் என்றார். அமெரிக்க-நேட்டோ ஆதரவு கொண்டு எதிர்ப்புச் சக்திகளுக்கு இராணுவரீதியாகத் தொடர்ந்து எதிர்ப்புக் காட்டுவதற்கு அவர் கடாபியைக் கண்டித்து லிபியத் தலைவர் இதையொட்டி.நா. பாதுகாப்பு சபைத் தீர்மானத்தை அப்பட்டமாக மீறியுள்ளார் என்றும், அத்தீர்மானத்தில் இராணுவத் தலையீட்டிற்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். இப்போரானது தீர்மானத்தை ஆட்சி முழுமையாக ஏற்கும் வரை தொடரும் என்றும் அவர் கூறினார்இது கடாபி ஆட்சியில் இருந்து சரிந்தால்தான் சாதிக்கப்பட முடியும்.

கார்டியன் குறிப்பிட்டுள்ளது போல் காமெரோனும் கிளின்டனும் கடாபி பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையை நேரடியாகப் பழையபடி கூறுவதிலிருந்து மாநாட்டில் தங்கள் கருத்துக்களைக் கூறும்போது நிறுத்திக் கொண்டனர். ஏனெனில் மாநாட்டில் பிரதிபலிக்கப்பட்டுள்ள அரசாங்கங்களுக்கு இடையே போரின் நோக்கத்தை ஆட்சி மாற்றத்திற்கு என வெளிப்படையாகக் கூறுவது பற்றிக் கருத்து வேறுபாடுகள் உள்ளன.

கடாபி உடனடியாகப் பதவி விலக வேண்டும், ஒரு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நீதியை எதிர்கொள்ள வேண்டும்  என்னும் தன் கோரிக்கையை காமரோன் மீண்டும் கோரவில்லை என்று கார்டியன் குறிப்பிட்டது: “இந்த மாநாட்டிற்கு துருக்கிய வெளியுறவு மந்திரி அஹ்மெட் டாவுடொக்லு பங்கு பெற்றார். இவர் கடாபிக்கும் எதிர்ப்புச் சக்திகளுக்கும் இடையே ஒரு போர் நிறுத்தத்திற்கு உதவும் நம்பிக்கையில் உள்ளார். கடாபியை புலம்பெயரச் செய்யும் கருத்தை வெளிப்படுத்தியுள்ள லிபியாவின் முன்னாள் ஏகாதிபத்திய ஆட்சி நாடான இத்தாலியின் வெளியுறவு மந்திரி பிராங்கோ பிரட்டனியும் இதில் பங்கு பெறுகிறார்.”

ஐக்கியம் என்னும் முகப்பிற்குப் பின் போர் முகாமிற்குள் கடுமையான மோதல்கள் உள்ளன. லிபியாவின் மீதான போருக்குத் தொடக்க உந்துதலுக்குத் தலைமை தாங்கிய பிரான்ஸைக் கட்டுப்படுத்தும் வகையில் பிரிட்டனுக்கு மாநாட்டை நடத்துவதற்கு அமெரிக்கா ஐயத்திற்கு இடமின்றி ஊக்கம் கொடுத்து, கடாபிக்குப் பிந்தைய லிபியாவில் அமெரிக்க மேலாதிக்கத்தை உறுதிபடுத்த பிரிட்டனை தனக்காகப் பயன்படுத்தவும் முயல்கிறது.

இதில் பல பிளவுகள் உள்ளது வெளிப்படையாகிறது. கடாபிக்கும் எழுச்சியாளர்களுக்கும் இடையே போர் நிறுத்தத்திற்கு வகை செய்து பேச்சு வார்த்தைகளை ஏற்பாடு செய்ய முற்பட்ட ஆபிரிக்க ஒன்றியத்தின் முயற்சிகள் இராணுவ நடவடிக்கை தொடங்கியதால் தடைக்குட்பட்டன. எனவே ஆபிரிக்க ஒன்றியம் மாநாட்டை புறக்கணித்துள்ளது. அதை போல் ஐ.நா. தீர்மானத்தின்மனிதாபிமான நெறிகளை மீறி விட்டது என்று போர்க் கூட்டணியை முந்தைய நாள் கண்டித்த ரஷ்யாவும் பங்கு பெறவில்லை.

மற்ற அரபு நாடுகளுடன் எகிப்தும் பங்கு பெற மறுத்துவிட்டது. எகிப்தின் இராணுவ ஆட்சியாளர்கள், அண்டை லிபியாவை ஏகாதிபத்திய வகையில் பிரிவினைக்கு உட்படுத்தக்கூடிய ஒரு கூட்டத்தில் வெளிப்படையாக சேருவது அமைதியற்று உள்ள ஒரு மக்களின் சீற்றத்தை சந்திக்கும் இடர் என்பதால் அதில் கலந்து கொள்வது உகந்தது அல்ல என்று உணர்ந்துள்ளது.

இடைக்கால மாற்றுக்காலத் தேசிய சபையுடனான உறவுகள் பற்றியும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. இன்றுவரை பிரான்ஸும் கட்டாரும் தான் முறையாகத் தன்னைத்தானே நியமித்துக் கொண்டுள்ள கடாபி-எதிர்ப்புத் தலைமையை அங்கீகரித்துள்ளன. வாஷிங்டன் மற்றும் லண்டன் ஆகியவை மாநாட்டை நடத்தும் நோக்கங்களில் ஒன்று, “ஜனநாயக எதிர்ப்புத் தலைமைக்கு சட்டபூர்வ நிலையை அளித்தல் ஆகும். ஆனால் போர்க் கூட்டணிக்குள் இருக்கும் வேறுபாடுகள் பேச்சுக்களில் முறையாகக் கலந்து கொள்ளுவதற்கு மாற்றுக்காலத் தேசிய சபையினரை அனுமதிக்க மறுத்துவிட்டன.

இதன் விளைவாக லிபிய மக்கள் தங்கள் வருங்காலத்தை நிர்ணயித்துக் கொள்ள என விளம்பரப்படுத்த மாநாட்டில் லிபியாவிலிருந்து பங்குபெறுபவர்கள் எவரும் இல்லை. ஆயினும்கூட சற்றே கூடுதலாகச் சென்று காமெரோன் மாற்றுக்கால தேசிய சபைக்கு ஆதரவை வளர்க்க முற்படும் வகையில், அதன் தலைவர் மஹ்முத் ஜப்ரிலை 10, டௌனிங் தெருவில் சந்தித்து, அச்சந்திப்பை ஒரு புதிய அரசாங்கத்தின் அச்சு என்று தன்னுடைய ஆரம்ப உரைகளில் பெயரிட்டு, வெளியுறவு அமைச்சரகத்தின் முக்கியச் செய்தி அறையை ஜப்ரிலின் சக எழுச்சிப் பிரதிநிதிகள் பேசுவதற்கு செய்தியாளர் கூட்டத்திற்குத் திறந்துவிட்டார்.

கிளின்டனும் ஜர்பிலுடன் பெரும் ஆர்ப்பாட்டத்துடன் பேச்சு நடத்தி, இருவரையும் ஒன்றாகப் புகைப்படம் எடுக்க அனுமதித்தார். இது குழுவிற்கு அமெரிக்க ஆதரவை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில் இருந்தது. வாஷிங்டன் ஒரு சிறப்புத் தூதரை எதிர்ப்புத் தலைமையுடன் உறவுகள் வலுப்படுத்துவதற்கு அனுப்ப உள்ளது என்று அமெரிக்க அதிகாரிகள் அறிவித்தனர்.

தேசிய சபையின் வலதுசாரி மற்றும் ஏகாதிபத்திய சார்பு லண்டனில் அதனுடைய சார்பாக வந்திருந்த பிரதிநிதிகளில் உருவகமாகியிருந்தது. பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி முனைவர் பட்டம் பெற்றபின் அமெரிக்காவில் ஜப்ரில் பல ஆண்டுகள் கற்பித்துவந்தார். 2007ல் இருந்து அவர் கடாபியின் தேசிய பொருளாதார வளர்ச்சிக் குழுவின் தலைவராக இருந்தார். இந்த அமைப்பு முதலாளித்துவ சந்தைமுறை உறவுகளை அறிமுகப்படுத்தி லிபியாவை வெளிநாட்டு முதலீட்டிற்குத் திறந்து விட்டது.

செய்தியாளர் கூட்டத்தில் பேசிய இரு மூத்த எதிர்ப்பு உறுப்பினர்கள் சபையின் பிரிட்டனிலுள்ள ஒருங்கிணைப்பாளர் குர்னா எல்-காமடி, மற்றும் குழுவின் செய்திப் பிரிவுத் தலைவர், வாஷிங்டனை தளமாகக் கொண்ட மஹ்முத் ஷம்மமும் ஆவர்.

Foreign Policy என்னும் ஏட்டின் நிர்வாக ஆசிரியர் ஷம்மம். இவர் முன்பு Arab Newsweek ன் ஆசிரியராக இருந்தார். Carnegie Endowment for Peace ல் மத்திய கிழக்குப் பிரிவின் ஆலோசனைக் குழு உறுப்பினரும் ஆவார். செய்தியாளர் கூட்டத்தில் அவர் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் எதிர்ப்புப் படைகளுக்கு ஆயுதங்களை கொடுக்கத் தொடங்க வேண்டும் என முறையிட்டார்.

எல்-காமடி ஒரு லிபிய எழுத்தாளரும் அரசியல் விமர்சகரும் ஆவார். அவர் இங்கிலாந்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார். 1980 களில் லிபிய எதிர்ப்பு இயக்கத்திற்காக வெளிநாடுகளில் தீவிரமாக இருந்தார். கடந்த சில ஆண்டுகளாக அவர் வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக இருந்து வருகிறார்.

இந்த நபர்கள் அனைவருமே அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பெருநிறுவனங்கள், அரசியல் மற்றும் (உறுதியாக கருத்திற்கொள்ளலாம்) உளவுத்துறை அமைப்புக்களுடனும் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கின்றனர்.

மாநாட்டைத் தொடர்ந்து நடந்த கிளின்டனின் செய்தியாளர் கூட்டம், அமெரிக்கா அல் கெய்டாவிற்கு எதிராக நடத்துகிறது எனப்படும் போராட்டம் மற்றும்பயங்கரவாதத்திற்கு எதிரானது எனக் கூறுப்படுவது ஆகியவற்றின் முழு மோசடித் தன்மையும் அம்பலமானது. அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் எழுச்சியாளர்கள் என அழைக்கப்படுபவர்களுக்கு ஆயுதம் கொடுப்பதற்கான வாய்ப்பு இல்லை என்பதை மறுத்து, அத்தகைய நடவடிக்கை ஐ.நா. பாதுகாப்பு சபைத் தீர்மானம் 1973ல் லிபியாவில் இராணுவத் தலையீட்டிற்கு இசைவு கொடுத்துள்ளதில் அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் வலியுறுத்தினார்.

எதிர்ப்பிற்கு ஒருவேளை அமெரிக்க ஆயுதம் வழங்குமா என்று கிளின்டனை ராய்ட்டர்ஸ் நிருபர், அன்று அமெரிக்க அட்மைரல் ஜேம்ஸ் ஸ்டாவ்ரிடிஷ் செனட் குழுவிடம் அமெரிக்க உளவுத்துறையில் இடைக்கால மாற்றுக்கால சபைக்கும் அல் கெய்வேடா, ஹெஸ்புல்லா ஆகியவற்றிற்கும் உடையே உள்ள பிணைப்புக்கள் பற்றிசலசலப்புக்கள் உள்ளன என்பதை மேற்கோளிட்டு வினவினார்.

எந்த அளவிற்கு அதில் கவலை உள்ளது? மாற்றுக்காலக் சபைக்கு ஆயுதங்களை மாற்றும் திறனில் ஏற்பட்டுள்ள அமெரிக்க விவாதத்தில் அது ஒரு பகுதியா?” என்று நிருபர் கேட்டார்.

அமெரிக்க ஆயுதங்கள் லிபிய எதிப்பு மூலம் அல் கெய்டாவிற்கு செல்லக்கூடிய ஆபத்தை ஒதுக்கும் வகையில், கிளின்டன் கூறினார்: “இதில் ஒரு பங்காக இருக்கும் எந்த அமைப்பின் குறிப்பிட்ட நபர்கள் பற்றியும் எத்தகைய குறிப்பிட்ட தகவல்களையும் நாங்கள் கொண்டிருக்கவில்லை. ஆனால் இடைக்கால மாற்றுக்கால சபைக்கு வழிநடத்துபவர்கள் யார் என்பதைப் பற்றி இன்னும் முழுமையாக அறிந்து கொள்ள முற்பட்டுள்ளோம்.”

டைம்ஸ் ஆப் லண்டனில் இருந்து அடுத்த வினா எழுப்பியவர் எழுச்சித் தலைவர்கள் 30 ல் இருந்து 40 பேர்களில் மூன்று அல்லது நான்கு பெயர்களைத் தவிர மற்ற  “எவருடைய பெயர்களும் பகிரங்கமாக்கப்படவில்லைஎன்பது மிகவும் வியப்பிற்குரியது என்று கூறினார். “தாங்கள் யார், எங்கிருந்து வருகிறோம், எத்தகைய குழுவில் அவர்களுடைய பின்னணி, பணத்தை எப்படி செலவு செய்கிறோம் என்பது பற்றி அறிவிக்கும் வகையில் அவர்கள் இன்னும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என நீங்கள் நினைக்கவில்லையா?” என்று அவர் தொடர்ந்து கேட்டார்.

தகவல்களைச் சேகரிக்கிறோம். அந்த நடவடிக்கை தொடர்ந்துவருகிறது என்று மட்டுமே இதற்குக் கிளின்டன் பதில் கூறினார்.

இரு நாட்களுக்கு முன்புதான் கிளின்டன் அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரி ரோபர்ட் கேட்ஸுடன் பல ஞாயிறு பேட்டி நிகழ்வுகளில் தோன்றினார். இவற்றில் அவர்கள் இருவரும் யேமனி சர்வாதிகாரி அலி அப்துல்லா சலேயை அவர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பயங்கரமான தாக்குதல்களை நடத்தினாலும் அமெரிக்கா தொடர்ந்து ஆதரிக்கும் என்று வலியுறுத்தினார். இதற்குக் காரணம் யேமனில் அல் கெய்டாவின் பிரசன்னம் இருப்பதுதான் என்றும் கூறினர்.

ஒபாமா நிர்வாகம் மற்றும் செய்தி ஊடகம் லிபிய எதிர்ப்பிற்கும் அல் கெய்டாவிற்கும் இடையே உறவுகள் இருக்கலாம் என்பதை உதறித் தள்ளியிருப்பது, அமெரிக்காவிற்கும் அல் குகெய்டாவிற்கும் இடையேயுள்ள உறவு சிக்கல் வாய்ந்தது, நெருக்கமானது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. எப்படியும் ஒசாமா பின் லேடன் உட்பட பயங்கரவாத வலைப் பின்னலின் உயர்மட்ட நபர்கள் CIA யின் சொத்துக்கள் என்ற முறையில்தான், அமெரிக்க ஆதவு பெற்ற முஜாஹிதின் கெரில்லாக்கள் 1980 போர்களில் ஆப்கானிஸ்தானில் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக ஆரம்பித்தனர்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் மைய எதிரியுடன் கொண்டுள்ள உறவில் இருக்கும் இரட்டைத் தன்மை, லிபியாவில் அமெரிக்கத் தலைமையில் நடக்கும் ஏகாதிபத்திய மற்றும் நவ காலனித்துவ போரிலுள்ள பல முரண்பாடுகளில் ஒன்றை அம்பலப்படுத்துகிறது.