சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : ஆப்கானிஸ்தான்

US slaughter intensifies in Afghanistan

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா படுகொலைகளை தொடர்கிறது

By Bill Van Auken
27 September 2010

Use this version to print | Send feedback

வார இறுதியில் ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமான காந்தகாருக்கு எதிராக நடந்த நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு கட்டவிழ்த்துவிட்ட அந்த தாக்குதலில் ஏராளமான எழுச்சியாளர்களை கொன்றதற்கான பொறுப்பை அமெரிக்க இராணுவம் ஏற்றுள்ளது.

நாட்டின் இரு கிழக்குப் பகுதிகளிலும் மிக அதிக எண்ணிக்கையிலான உடல்கள் எண்ணப்பட்டுள்ளதாக அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்பிற்கான நேட்டோவின் குடை அமைப்பான ISAF என்னும் சர்வதேசப் பாதுகாப்பு உதவிப் பிரிவு அறிவித்துள்ளது.

கிழக்கு லக்மன் மாகாணத்தில், ISAF ஒரு அமெரிக்கத் தலைமையிலான வான் வழித்தாக்குதலில் “எதிர்புப் போராட்டக்காரர்களுடன் நடந்த மோதலில்” குறைந்தது 30 பேராவது கொல்லப்பட்டன் என்று கூறியுள்ளது. இத்தகவல் அப்பகுதியில் சாதாரணக் குடிமக்களுக்குக் காயங்கள் ஏதும் இல்லை என்றும் கூறியது.

ஆனால் சனிக்கிழமை ஏராளமான ஆப்கானிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மாகாணத் தலைநகரமான மிகடர்ட்டனில் தெருக்களுக்கு வந்து தாக்குதலின் போது ஆயுதமற்ற குடிமக்களை படுகொலை செய்ததை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். எதிர்ப்பாளர்கள் அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்பை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

ஆப்கானியச் செய்தி அமைப்பான PAN ஆனது ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் ஷரிபுல்லா தாக்குதலில் எந்தப் போராளியும் கொல்லப்படவில்லையென்றும், பாதிப்பிற்குட்பட்டவர்கள் அனைவரும் போரில் ஈடுபடாதவர்கள் என்று கூறியதாக மேற்கோளிட்டுள்ளது. New York Times பத்திரிகையும் ஒரு தாலிபன் செய்தித் தொடர்பாளர் அப்பகுதியில் போராளிகள் நடவடிக்கை ஏதும் இல்லையென்றும், கொல்லப்பட்டவர்கள் அனைவரும் குடிமக்கள் என்று கூறியதாகத் தெரிவித்துள்ளது.

பொலிசார் தீயணைக்கும் நீர்க் குழாய்களைப் பயன்படுத்தியதோடு, ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு உண்மையான தோட்டாக்களையும் பயன்படுத்தினர். “உண்மையில் அது எதிர்ப்பு அல்ல. பாதுகாப்பைச் சீர்குலைக்க விரும்பிய சில கூறுபாடுகளின் எழுச்சி தான் அது” என்று டைம்ஸிடம் மாகாணப் பொலிஸ் தலைமை அதிகாரி குலாம் அசிஸ் கூறினார்.

எதிர்ப்புக்களுக்கு பின்னர் ISAF உடைய செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: “குடிமக்கள் இறப்பு பற்றி ஏதேனும் அடையாளம் இருந்தால், நாங்கள் அது பற்றி விசாரணை நடத்துவோம்.”

மற்றொரு முக்கிய கொலைக்களம் கிழக்கு கோஸ்ட் மாகாணம் ஆகும். அங்கு பாக்கிஸ்தான் எல்லையைக் கடக்க முற்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டபோது 42 “எழுச்சியாளர்கள்” அமெரிக்க வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டனர் என்று நேட்டோ செய்தித் தொடர்பாளர் கூறினார்.

வேறு ஒரு அறிக்கையில் ISAF கோஸ்ட் பாகிடா மற்றும் ஹெல்மாண்ட் மாகாணங்களில் நான்கு “எழுச்சித் தலைவர்கள்” கொல்லப்பட்டனர் என்று கூறியுள்ளது. ஆக்கிரமிப்பு மற்றும் அமெரிக்க ஆதரவு பெற்ற ஜனாதிபதி ஹமித் கர்சாய் அரசாங்கத்தை எதிர்க்கும் ஆயுதக் குழுக்களில் பங்கு கொண்டவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டவர்களுக்கு எதிராக இயக்கப்பட்ட கொலைப் படைக் குழு நடத்திய சிறப்புத் தாக்குதல்களின் தொடர்ச்சியின் விளைவாக இவை விளைந்தன என்று தோன்றுகிறது.

மற்றொரு சம்பவத்தில், அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்பின் செய்தித் தொடர்பாளர் அமெரிக்கத் துருப்புக்கள் ஞாயிறன்று தெற்கு ஹெல்மண்ட் மாகாணத்தில் இரு குடிமக்களைத் துப்பாக்கியினால் சுட்டுக் கொன்றன என்பதை ஒப்புக் கொள்ளும் கட்டாயத்திற்கு உட்பட்டார். இக்கொலைகள் மூசா க்வடா என்ற சிறுநகரில் நடந்தன. அங்கு துருப்புக்கள் ஆப்கானிய எதிர்ப்பாளர்களின் தாக்குதலை அடுத்துச் சோதனைச் சாவடிகளை நிறுவியுள்ளன.

ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்திருந்த இருவர் “சொல், சைகை” எச்சரிக்கைகளை மீறி சோதனைச் சாவடியை நோக்கி விரைந்து வந்தனர் என்று இராணுவம் கூறியுள்ளது. “ஆரம்ப அறிக்கைகளானது கூட்டணிப் படைகளைத் தக்க படை விரிவாக்க நடவடிக்கைகளை பின்பற்றின என்று தெரிவிக்கின்றன” என்று ISAF அறிக்கை முடிவுரை கூறியுள்ளது. அத்தகைய ஆயுதமற்ற குடிமக்கள் கொலை செய்யப்படுதல் “ஏற்கத்தக்க” செயல்கள் என்று கருதப்படுவது எந்த அளவிற்கு அவை வாடிக்கையாகிவிட்டன, பலவும் அறிவிப்புக்கள் கூடப் பெறுவதில்லை என்பதைத்தான் சுட்டிக்காட்டுகிறது.

ஆக்கிரமிப்பு அதிகாரிகள் சனியன்று மூன்று நேட்டோத் துருப்புக்கள் இரு வேறு குண்டுவெடிப்புக்களில் கொல்லப்பட்டதாக அறிவித்துள்ளனர். நாட்டின் கிழக்குப் பகுதியில் ஒன்றும் மற்றொன்று தெற்கிலும் நடைபெற்றது. தாக்குதல் அல்லது இறந்தவர்களின் நாடுகள் குறித்து தகவல்கள் இவர்களால் கொடுக்கப்படவில்லை.

சமீபத்திய இறப்புக்கள் இதுவரை 2010ல் கொல்லப்பட்ட வெளிநாட்டுத் துருப்புக்களின் எண்ணிக்கையானது 531 ஆக உள்ளது. இந்த ஆண்டு ஏற்கனவே அக்டோபர் 2001ல் ஆப்கானியப் படையெடுப்பைத் தொடர்ந்த ஆக்கிரமிப்பில் மிகவும் குருதி கொட்டப்பட்ட ஆண்டாகப் போய்விட்டது.

இதற்கிடையில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் தெற்கிலுள்ள காந்தகார் நகரத்திலும் அதைச் சுற்றியும் தொடர்கின்றன. இங்கு கிட்டத்தட்ட பத்து ஆண்டுகால ஆக்கிரமிப்பில் மிகப் பெரிய தாக்குதல் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

கிட்டத்தட்ட 8,000 அமெரிக்கத் துருப்புக்கள், பலவும் 2nd Brigade Combat Team மற்றும் 101st Airborne Division ஆகியவற்றில் இருந்து திரட்டப்பட்டவை, ஆப்கானியக் கைப்பாவைத் துருப்புக்கள் மற்றும் பிற வெளிநாட்டுத் துருப்புக்களுடன் ஆர்கென்டம் நதிப் பள்ளாத்தாக்கில் நடக்கும் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளன. காந்தகாருக்கும் நகரப் இணைப்புச் சாலைகளுக்கும் இது முக்கிய இணைப்பு வழியாகும். அந்நகரமோ ஒரு தாலிபன் கோட்டையாக அண்மையில் இருக்கும் ஹெல்மாண்ட் மாகாணத்துடன் உள்ளது. அதுவும் எழுச்சியின் ஒரு மையம் ஆகும்.

Operation Dragon Strike என்று அழைக்கப்பட்டுள்ள இத்தாக்குதல்கள் காந்தகார் மாகாணத்தில், ஜாரி மற்றும் பஞ்ச்வாய் மாவட்டங்களில் குவிப்புக் கொண்டுள்ளன. அவை நகரத்திற்கு மேற்கே அருகில் உள்ளவை. ஆப்கானியச் செய்தி அமைப்பான PAN உள்ளூர் அதிகாரிகள் குறைந்தது ஐந்து தாலிபன் போராளிகளாவது ஞாயிறு நடந்த மோதல்களில் கொல்லப்பட்டனர் என்று கூறியதாகத் தெரிவித்துள்ளது.

அமெரிக்கத் துருப்புக்கள் மெதுவாக நகரும் கட்டாயத்தில் உள்ளன. ஏனெனில் போராளிகள் பல நவீன வெடிக்கும் கருவிகளைப் பல இடங்களிலும் வைத்துள்ளனர்.

ABC செய்தி அமைப்பு நிருபர் Miguel Marquez தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து தெரிவிப்பதாவது: “இரவு முழுவதும் உரத்த வெடிச்சத்தங்கள் பள்ளத்தாக்கு முழுவதும் எதிரொலித்தன. 72 டன் Assault Breacher வாகனங்கள் அகன்ற பாதையை விவசாயப் பகுதியில் ஆர்கென்டம் ஆற்றையொட்டி அமைந்த பகுதிகளிலிருந்து இந்த சத்தங்கள் வந்தன. படையினர் இதை “பசுமைப் பகுதி” என்று கூறுகின்றனர். சிறிய கண்ணிவெடி அகற்றம் முறைகளும் பாதைகளைச் சீராக்கப் பயன்படுத்தப்பட்டன. ஒருவேளை ஏதேனும் குண்டுகள் இருந்தால் அகற்றப்பட வேண்டும் என்பதற்காக. பல ஆண்டுகள் தாலிபன் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளுக்கு துருப்புக்கள் நகர்கையில் IED அச்சுறுத்தல் என்பது மிகப் பெரிய அச்சுறுத்தல் ஆகும். நன்கு அறியப்பட்டுள்ள தாலிபன் போர் நிலைகளை அழிப்பதற்கு வீரர்கள் இரவு முழுவதும் வெடிக்கும் C4 பிளாஸ்டிக் கருவிகளை மரங்களில் கட்டிக் கொண்டிருந்தனர்.”

இந்தப் “பரந்த பாதைகளை” சீராக்க 72 டன் வாகனங்கள் செல்வதற்கு ஆர்கென்டப் பள்ளத்தாக்கில் உள்ளூர் விவசாயிகளின் பயிர்கள் எந்த அளவிற்கு நாசமாகின்றன என்பது பற்றி நிருபர் குறிப்பிடவில்லை. அத்தகைய அழிவுகள் ஏற்பட்டிருக்கும். அதுவும் வெளிநாட்டுத் துருப்புக்களுக்கு ஆழ்ந்த விரோதம் வெளிப்படுத்திய பகுதியில் எழுச்சிக்கு எதிரான பெருகிய ஆதரவு இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

உள்ளூர் தளபதிகள் காந்தகார் நடவடிக்கையை “ஆரஞ்சைப் பிழிவதுபோல்” என்பதற்கு ஒப்பிட்டு இது நிறைவுறப் பல மாதங்கள் ஆகும் என்று கணித்துள்ளதாக மார்க்விஸ் மேற்கோளிட்டுள்ளார். பெரும்பனாலும் உள்ளூர்வாசிகள் அமெரிக்கத் துருப்புக்களிடம் இருந்து ஒதுங்கியுள்ளனர். அதுவம் ஜாரி மாவாட்டத்தில் 10,000 மக்கள் கிட்டத்தட்ட வசிக்கும் Sengaray ஐ அவை ரோந்து சுற்றும் அதேநேரம் இம்மாவட்டம் 101st Airborne னால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

ISAF செய்தித் தொடர்பாளரான Brig.Gen.Josef Blotz ஞாயிறன்று எச்சரித்தார்: “கடுமையான சண்டையை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” அமெரிக்கத் துருப்புக்கள் “வேறு எங்கும் தாலிபான்கள் செல்ல முடியாத நிலையில் தாலிபான்களின் போராடும் நிலைகளை அழித்துக் கொண்டிருக்கின்றனர்.”

“ஆப்கானிய மற்றும் கூட்டணிப் படைகள் பலமுறையும் எழுச்சியாளர்களை அவர்கள் கொல்லைப் புறத்திலேயே தாக்குகின்றன. இதையொட்டி அவர்கள் மறுபடி ஒன்று சேர முடியாது” என்று மற்றொரு செய்தித் தொடர்பாளர் கேணல் ராபேல் டோரஸ், IASF உடைய கூட்டு செயல்பாட்டு மையத்தின் இய்குனர் கூறினார். அவர் தேர்ந்தெடுத்துள்ள சொற்கள் அமெரிக்கத் தலைமையிலான இராணுவம் உள்ளூர் மக்கள் எழுச்சியைத்தான் தாக்கிக் கொண்டிருக்கிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

30,000 என மதிப்பிடப்பட்டுள்ள அமெரிக்க மற்றும் ஏனைய வெளிநாட்டு ஆக்கிரமிப்புப் படைகள் காந்தகாரில் குவிக்கப்பட்டுள்ளனர். இத்தாக்குதல் நாட்டில் ஒபாமா நிர்வாகத்தின் கூடுதலான 30,000 துருப்புக்களின் கடைசித் தரையிறக்கமும் வந்த பின் தொடங்கியுள்ளது. இப்பொழுது ஆப்கானிஸ்தானில் கிட்டத்தட்ட 100,000 அமெரிக்கத் துருப்புக்கள் உள்ளன. இதைத்தவிர 50,000 நேட்டோத் துருப்புக்களும் பிற வெளிநாட்டுத் துருப்புக்களும் உள்ளன.

காந்தகார் நடவடிக்கையானது பரந்த அளவில் ஒபாமா எழுச்சிக்கு முக்கியம் என்று விவரிக்கப்படுகிறது. ஆனால் அமெரிக்க அதிகாரிகள் சமீபகாலம் வரை இராணுவத் தாக்குதலைப் பற்றி அதிகம் கூறவில்லை. ஏனெனில் கடந்த பெப்ருவரி மாதம் மிக அதிகமாக பேசப்பட்ட ஹெல்மாண்ட் மாகாணத்திலுள்ள மார்ஜா மாவட்டத்தின் மீதான தாக்குதல் எதிர்ப்பை அகற்றுவதில் தோற்றுவிட்டது.

தாக்குதலில் தொடர்புடைய இரு அதிகாரிகள், அமெரிக்க இராணுவம் தொடரும் மூலோபாயம் “தெளிவு, உறுதியானது, கட்டமைப்பு உடையது” என்று கூறியதாக ABC செய்தி மேற்கோளிட்டுள்ளது.

“இங்குத்தான் நீங்கள் எதிரியை மக்களிடம் இருந்து பிரிக்க வேண்டும்” என்று Lt.Col. Johnny Davis, 1st Battalion மற்றும் 502nd Infrantry Regiment ஐச் சேர்ந்தவர் கூறினார். “மிக அதிகப் பாதுகாப்பை நாங்கள் இங்கு கொண்டு வந்த கட்டங்களில் இது ஒன்று என்பது மட்டுமின்றி, இதுவரை ஆட்சியே இல்லாத இடத்தில் ஆட்சியையும் கொண்டுவருகிறோம்.”

Bravo நிறுவனத்தின் தளபதியான காப்டன் ப்ரான் ஔகே ABC இடம் கூறினார்: “இது சரிவரச் செயல் புரியாததற்குக் காரணம் நாம் மக்களுக்கு தாலிபானா அல்லது நாமா என்ற விருப்பத் தேர்வைக் கொடுக்கிறோம். ஆப்கானிய அரசாங்கம் தான் திறவுகோல், ஏனெனில் அவர்கள் தான் இதில் வெற்றிபெற முடியும். நமக்கும் தாலிபனுக்கும் என்ற விருப்பம் இல்லை,ஆப்கானிய அரசாங்கத்திற்கும் தாலிபனுக்கும் என்பதாகும்.”

இந்த “தேர்வுரிமை” இருப்பதாகக் கூறப்படுவது அமெரிக்க ஆக்கிரமிப்பின் நெருக்கடியை உயர்த்திக் காட்டுகிறது. வாஷிங்டன் ஆதரவு பெற்ற ஜனாதிபதி ஹமித் கர்சாயி உடைய அரசாங்கம் எப்பொழுதைக் காட்டிலும் இப்பொழுது இழிவுற்றுள்ளது. குறிப்பாக பெரும் மோசடி நிறைந்திருந்த செப்டம்பர் 18 பாராளுமன்றத் தேர்தல்களுக்கு பின்னர்.

மிகப் பெரிய அளவில் வாக்கு மோசடி நடந்துள்ளதற்கான சான்றுகள் கடந்த வாரம் பெருகின. தேர்தல்கள் பற்றிய புகாருக்கான ஆணையம், ஒரு கூட்ட ஆப்கானிய-சர்வதேச கண்காணிப்புக் குழு 4,000 புகார்கள் வரை பெற்றுள்ளது. இவற்றில் 1,000க்கும் மேற்பட்டவை ஏற்கனவே “மதிப்புத்திறன்” உடையவை என்று தரம் பிரிக்கப்பட்டுள்ளன. இதன் பொருள் அவற்றில் கூறப்பட்டுள்ள மோசடிகள் பந்தயத்தில் விளைவைப் பாதித்திருக்கக்கூடும் என்பதாகும்.

மக்கள் எடுத்துள்ள வீடியோ காட்சிகளானது தேர்தல் அதிகாரிகளும் பொலிசும் வாக்குப் பெட்டிகளில் வாக்குளைத் திணிப்பதையும், பிரச்சார அதிகாரிகள் வெளிப்படையாக வாக்குகளுக்கு விலையைப் பேரம் பேசுவதையும் காட்டுகின்றன.

ஒரு சம்பவத்தில் காந்தகார் மாகாணத்தில் எல்லைப் பொலிஸ் “தேர்தல் தினம் முழுவதும் மூன்று தனித் தேர்தல் பணிக்குழு ஊழியர்களைக் கைவிலங்கிட்டு காவலில் வைத்தனர்”. இதையொட்டி அவர்கள் வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்ள முடியாது. இதன் பின் அந்த ஊழியர்கள் மோசடி விளைவுகள் நிரம்பிய வாக்குத் தாள்கள் கொடுக்கப்பட்டு அவற்றில் கையெழுத்திடுமாறு உத்தரவிடப்பட்டனர். இந்த நடவடிக்கைக்கு உள்ளூர் அரசியல் வலிமை மிக்க ஜனாதிபதியின் சகோதரர் அஹ்மத் வாலி கர்சாய் உடைய நெருக்கமான அரசியல் நண்பர் இதை ஒருங்கிணைத்தார்.

வடக்கு மாகாணமான தக்காரில் அப்துல் பக்கி என்னும் வேட்பாளரை ஆதரித்த துப்பாக்கி ஏந்தியவர்கள் வாக்காளர்களை வன்முறையில் மிரட்டியது பற்றிய தகவல்களும் நியூ யோர்க் டைம்ஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“திரு. பக்கி மற்றும் அவருடைய துப்பாக்கி வீரர்கள் பக்கிக்காக வாக்களிக்குமாறு மக்களை கன்னத்தில் அறைந்தும் அடித்தும் இருந்தனர்” என்று உள்ளூர்வாசி ஒருவர் செய்தித்தாளிடம் கூறினார். துப்பாக்கி ஏந்தியவர்கள் பெண்களுக்கான வாக்குச் சாவடிக்குள் சென்று தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்களை வாக்குப் பெட்டியில் 200 மோசடி வாக்குகளைத் திணிக்குமாறு கட்டாயப்படுத்தினர்.

“ஒரு பொதுவான ஜனநாயகத்தைக் கட்டமைக்கும் பணி என்ற முன்னோக்கில், இது ஒன்றும் சீரியதாக இல்லை” என்று ஒரு மேலைத்தேய இராஜதந்திரி டைம்ஸிடம் கூறினார்.

தேர்தலானது ஒருவித ஜனநாயக முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கிறது என்னும் வாஷிங்டனின் கூற்றுக்களை இந்த அறிக்கைகள் கேலிக்கூத்தாகச் செய்துள்ளன. ஆப்கானிஸ்தானில் மூத்த அமெரிக்கத் தளபதியான ஜேனரல் டேவிட் பெட்ரீயஸ் கடந்த வாரம், “ஆப்கானிய மக்கள்” தாலிபனுக்குச் சக்தி வாய்ந்த தகவலை அனுப்பியுள்ளதாக கூறினார். மாறாக, மொத்த மோசடி மற்றும் வன்முறை என்று ஆப்கானிய மக்கள் மீது இந்த மோசடித் தேர்தலின் போது சுமத்தப்பட்ட நிகழ்வுகள் வெளிநாட்டு ஆக்கிரமிப்பை எதிர்ப்பவர்களுக்கான ஆதரவைத்தான் ஐயத்திற்கு இடமின்றி அதிகரித்துள்ளது.