Split over Greek regional election highlights SYRIZA’s rightward march
கிரேக்கப் பிராந்திய தேர்தல்களையொட்டிய பிளவு சிரிசாவின் வலதுபுற நகர்தலை உயர்த்திக் காட்டுகிறது
By John Vassilopoulos and Alex Lantier
21 September 2010
Use
this version to print | Send
feedback
அட்டிக்காவில் நடக்கவிருக்கும் நவம்பர் மாதப் பிராந்திய தேர்தல்களில் PASOK உயர்மட்ட அதிகாரியான அலெக்சிஸ் மிட்ரோபாப்புலஸை தன் வேட்பாளராக நிறுத்தியுள்ளது குறித்து கிரேக்க குட்டி முதலாளித்துவ “இடது” கூட்டணி சிரிசாவில் பூசல்கள் வெடித்துக் கொண்டிருக்கின்றன. அட்டிக்கா பிராந்தியமானது கிரேக்கத்தின் தலைநகர் ஏதென்ஸையும் நாட்டு மக்களில் பாதிக்கு மேலானவர்களையும் கொண்டிருக்கிறது. சிரிசாவின் முன்னாள் தலைவர் அலேகோஸ் அலவனோஸ் செப்டம்பர் 9ம் தேதி ஒரு போட்டிப் பிரச்சாரத்தை ஆரம்பித்துத் தன் விருப்பத்தை அறிவித்தார்.
கிரேக்க கடன் நெருக்கடிக்கு தொழிலாள வர்க்கத்தின் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தும் விதத்தில் PASOK அரசாங்கத்தின் பிரதம மந்திரி ஜோர்ஜியோஸ் பாப்பாண்ட்ரூ விடையிறுக்கையில், சிரிசா வெளிப்படையாக PASOK க்கு ஆதரவாக நிற்கிறது. ஒரு IMP மற்றும் EU பிணை எடுப்பிற்கு ஈடாக ஊதியங்களையும் சமூகநலச் செலவுகளையும் குறைத்து தொழிலாளர்களின் வாழ்க்கை தரங்களின் சராசரியாக 30 சதவிகிதக் குறைப்பை பாப்பாண்ட்ரூ ஏற்படுத்தியுள்ளார். சிரிசா இந்நேரத்தில் அதன் பிணைப்புக்களை PASOK உடன் அதிகப்படுத்த விரும்பியுள்ளமையானது அதன் வலதுசாரித் தன்மையை அம்பலப்படுத்துகிறது.
சிரிசா மற்றும் சிரிசாவிற்குள் இருக்கும் மிகப் பெரிய குழுவான Synaspismos ன் தலைவரான அலெக்சிஸ் டிசிப்ராஸ், அலவனோசின் முடிவை “ஒரு இடது அதிகாரி தன்னுடைய வேட்பாளர் மீது சுமத்தும் மிரட்டலை முன்னோடியில்லாத வகையில் மேற்கோண்டுள்ள முயற்சி” என்று தாக்கியுள்ளார். தான் கட்சியின் ஒற்றுமையைக் காப்பதற்காக மிட்ரோபௌலோஸின் வேட்புமனுவிற்கு எந்த சலுகைகளையும் கொடுக்கப்போவதில்லை என்றும் டிசிப்ராஸ் கூறியுள்ளார் “தன் விருப்பப்படி எவரும் நடந்து கொள்ளலாம், ஆனால் அவருடைய நடவடிக்கைகளுக்கு அவரே பொறுப்பேற்க வேண்டும் என்று” அவர் கூறினார்.
அலெக்சிஸ் மிட்ரோபௌலோஸ் ஒரு பிரபலமான தொழில்துறை சட்டப் பேராசிரியரும் PASOK ஐ நிறுவிய உறுப்பினரும் ஆவார். 1980 களில் தற்பொழுதைய பிரதம மந்திரியின் தந்தை ஆண்ட்ரீயஸ் பாப்பாண்ட்ருவின் அரசாங்கத்தில் அவர் அரசாங்கத்தின் தொழில்துறை மற்றும் சமூகக் கொள்கைகளின் சட்ட வடிவமைப்பை வகுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
2008ம் ஆண்டு மார்ச்சில் அவர் கட்சியின் தேசியக் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இம்மாத ஆரம்பத்தில் தான் அரசாங்கத்தின் “புதிய-தாராளவாத கொள்கைகளுக்கு” எதிரான குழுவின் எதிர்ப்பு நடவடிக்கைகளையில் தான் பங்கு பெறுவதாக இல்லை என்று அறிவித்துவிட்டார். ஆனால் அவர் PASOK இன் குழுவிலுள்ள SYNASPISMOS க்கு உத்தியோகபூர்வமாக அவருடைய வேட்பு மனுவிற்கு இசைவு கொடுத்து தொடர்ந்து இருந்தார்.
செப்டம்பர் 13ம் திகதி மிட்ரோபௌலோஸ் தான் “அட்டிக்காவிற்கான ஒரு சுயாதீன இயக்கம்” என்பதற்காக ஏனைய PASOK உறுப்பினர்களுடன் இணைந்து நிற்பதாகக் கூறினார். மிட்ரோப்பௌலோஸின் வேட்புமனுவைச் சுற்றியுள்ள நிலைமைகள் அவர் PASOK தலைமையின் உட்குறிப்பான ஆதரவைப் பெற்றிருக்கக்கூடும் என்று தெரிவிக்கின்றன. அவருடைய அறிவிப்பைத் தொடர்ந்து இரு நாட்களுக்கு PASOK உத்தியோகபூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை. அவருடைய கட்சி உறுப்பினர் உரிமையை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. ஒரு மாதத்திற்கும் மேலாக சிரிசாவினால் வெளிப்படையாக ஆதரவு கோரப்பட்டும் நிலைமை இவ்வாறாகத்தான் உள்ளது. அவரை நடத்திய முறை—அவர் வெளியேற்றப்படவில்லை—கையில் ஒரு அடி கொடுத்தது போல்தான் உள்ளது.
மிட்ரோபௌலோஸை நியமனம் செய்யும் முன் Synaspismos தான் ஒரு உயர்நிலை PASOK இன் உறுப்பினரை அதன் அட்டிக்கா வேட்பாளராக நிறுத்த விரும்புகிறது என்பதைத் தெளிவுபடுத்தியிருந்தது. மினட்ரோபௌலோஸை அணுகுமுன் டிசிபரஸ் PASOK இன் எம்.பி.யும், முன்னாள் ஜவ்லின் விளையாட்டுச் சாம்பியனான சோபியா சகோரபாவையும் ADEDY பொதுத்துறை தொழிற்சங்கத் தலைவரும் PASOK இன் உறுப்பினருமான ஸ்பிரோஸ் பாபஸ்ப்ரௌவையும் அணுகியிருந்தது. ஆனால் இருவரும் அழைப்பை ஏற்கவில்லை.
சினபிஸ்மோஸின் வேட்பாளரைக் கண்டுபிடிக்கும் முயற்சியாக மாத ஆரம்பத்தில் 88 வயதான எதிர்ப்பு போராளி Manolis Glezons ஐ டிசிப்ரஸ் வேட்பாளராக நிற்க வேண்டும் எனக் கேட்ட கேலிக்கூத்தான தன்மையில் ஆரம்பித்தது. கிளேஜோஸ் அதனை மறுத்து அதற்குப் பதிலாக முன்னாள் சிரிசாத் தலைவர் அலவனௌஸைப் பரிந்துரைத்தார். அலவனௌஸை ஏற்கனவே தான் நிற்கும் விருப்பத்தைக் கோடிட்டுக்காட்டியிருந்தார்.
டிசிப்ரஸின் வலதுசாரி அரசியலுக்கும் தற்போதைய சிரிசாவின் தலைமைக்கும் அலவனௌஸ் ஒன்றும் ஒரு மாற்றீட்டைப் பிரதிபலிக்கவில்லை. “Front for Solidarity and Overthrow” வேட்பாளராக அவர் நிற்கிறார். இக்குழு அவரால் இந்த ஆண்டு முன்னதாக அமைக்கப்பட்டிருந்தது. குட்டி முதலாளித்துவ முன்னாள் முற்போக்குக் குழுக்களுக்கு ஒரு புதிய ஈர்ப்பு முனையாக அது ஆரம்பிக்கப்பட்டது.
அலவனோஸ் டெனோஸ் தீவில் ஒரு நீண்டகால அரசியல் குடும்ப மரபினை தளமாகக் கொண்டவர். அவருடைய தந்தையாரும் பாட்டனாரும் எம்.பி.க்களாக இருந்தவர்கள். இவர் சிரிசாவில் தலைவராகவும் சினஸ்பிஸ்மோஸில் தலைவராகவும் இருந்தபோது, அவர் டிப்ரஸின் கொள்கைகளை ஒத்திருந்தவற்றை ஏற்று, 2008 ல் PASOK உடன் உழைக்கத் தயாராக இருந்தார். கிரேக்க மாவோவியிஸ்ட் கம்யூனிஸ்ட் அமைப்பு உட்பட நான்கு சிரிசாப் பிரிவுகள் இவருடைய வேட்புக்கு ஆதரவு கொடுக்கின்றன.
PASOK ஐ தற்காலிகமாக அதன் இடதுசாரிக் கொள்கைகளை கைவிட்டுள்ள கட்சி என்று அலவனோஸ் அறிமுகப்படுத்த முற்பட்டுள்ளார். ஒரு சமீபத்திய பேட்டியில், “ஒரு திட்டத்துடன் அரசாங்கத்திற்கு வந்து முற்றிலும் மாறுபட்டதைச் செயல்படுத்தும் அரசாங்கத்தை நாம் கொண்டுள்ளோம்” என்றார். “மக்கள் சக்தியின் சரிவு குறித்து” அலவனோஸ் துயரம் கொண்டுள்ளார்.
தொழிலாளர்கள் பாப்பாண்ட்ரூவின் தேர்தல் உறுதிமொழிகளான சமூகநலச் செலவுகள் அதிகரிக்கப்படும் என்பவை பொய்யென முடிவு காண்கையில், தங்களுக்கு எதிராக முழு அரசியல் ஸ்தாபனமும் நிற்கின்றன எனக் கருதுகையில், அலவனோஸின் கூற்றுக்கள் சீர்திருத்தப் போலித் தோற்றங்களை மீட்கும் முயற்சியைப் பிரதிபலிக்கின்றன.
பெரும்பாலான செய்தி ஊடக வர்ணனையாளர்கள் சிரிசாவில் உண்மையில் பிளவு எனப் பேசுகையில், Kathimerini தலையங்கம் ஒன்று கூறுகிறது: “மிட்ரௌபௌலோஸ் மற்றும் அலவனோசின் அறிக்கைகளுக்குப் பின்னர் சிரிசாவில் பிளவு என்பது உண்மை என்பது இடதிற்கு தெளிவாகியுள்ளது. இரு தேர்தல் அரங்குகள் என்பது வரவிருக்கும் புதிய அரசியல் மாறுதல்களுக்கு ஒரு முன்னோடி ஆகும்.”
இத்தகைய பிளவில் கொள்கை அடிப்படை ஏதும் கிடையாது. PASOK க்கு எதிர்ப்பை திரட்டுவது பற்றி அலவனோஸ் அக்கறை காட்டவில்லை. மாறாக “இடது” என அழைக்கப்படுவதற்கு ஓரளவு நம்பகத்தன்மையைக் கொடுக்க முற்படுகிறார். மிட்ரோபௌலோஸ் அல்லது டிசிபரசுடன் அடிப்படை அரசியல் வேறுபாடுகள் ஏதும் அவருக்குக் கிடையாது.
மிட்ரோபௌலோஸ் மற்றும் அலவனோஸ், இரு வேட்பாளர்களுமே தேசியவாதத்தை வளர்க்கின்றனர். கடந்த வாரம் ஒரு உரையில் அலவனோஸ் அரசாங்கம் “வெளிநாட்டவருக்கு, IMF மற்றும் EU விற்கு அதிகாரத்தை வழங்குகிறது” என்று குற்றம் சாட்டினார். சினஸ்சிஸ்மோஸ் செய்தித்தாளான Avghi க்குக் கொடுத்த பேட்டியில் மிட்ரோபௌலோஸ் “நம் புவிசார் மூலோபாய நிலைப்பாடு, தேசிய ஆதாரங்கள் இவற்றைப் பயன்படுத்தி நமது மக்ககளின் பெருமிதம் மற்றும் கௌரவத்தை ஏற்றப்படுத்த வேண்டும்” என்று கூறினார்.
சிரிசா கொள்கைகளின் வர்க்கத்தன்மை மிகத் தெளிவாகவுள்ள நிலையில், அது கிரேக்கத்தின் முக்கிய வலதுசாரிக் கட்சியான புதிய ஜனநாயகத்தினால் ஒரு நம்பகத்தன்மை உடைய நட்பு அமைப்பு என்று காணப்படுகிறது. Eleftherotypia கடந்த மாதம் ND தலைவரான Antonis Samaras “PASOK க்கு எதிராக ஸ்ராலினிச கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி, சிரிசாவின் ஒரு பிரிவு மற்றும் நவ பாசிசக் கட்சியின் (LAOS) சில பிரிவுகளை ஒற்றுமைப்படுத்த விழைகிறார்.” என்று எழுதியுள்ளது.
சிறிதும் பயனற்ற ஒருநாள் தொழிற்சங்க எதிர்ப்புக்கள், சிரிசாவின் இசைவு பெற்றவை ND ஐ அச்சுறுத்தவில்லை. Eleftherotypia கருத்துப்படி ND தலைவரான சமரஸ் சிரிசா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி அவற்றின் “புரட்சிகர வித்தைகளை” செய்யும்போது தன்னுடைய “பூரிப்பான இயல்புத் தாக்குதலை” நடத்தத் திட்டமிட்டுள்ளார்.
பெரும் திகைப்புடன் சிரிசா மேற்கோண்டுள்ள PASOK உடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என்ற முயற்சிகள் வலதிற்கு அது இன்னும் மாறியுள்ளதைச் சித்தரிக்கிறது. அதுவும் ஜூலை மாதம் அதன் தொண்டர்களிடையை வலதுசாரி Renewal Wing (RW) பிளவு ஏற்பட்டபிறகு. RW இதைத்தொடர்ந்து DL எனப்படும் ஜனநாயக இடது கட்சியை Fotis Kouvelis தலைமையில் அமைத்துள்ளது.
பிளவின்போது கௌவெலிஸ் அறிவித்தார்: “அனைத்துத் தொழிலாளர்களின் ஸ்தாபிக்கப்பட்ட உரிமைகளை ஒழுங்குமுறையாகப் பாதுகாத்தல் என்று கருதாத இடதை விரும்புகிறோம். அதேபோல் அற்ப அரசியல் ஆதாயங்களுக்காக தொழிற்சங்கங்கள், அமைப்புக்கள் விருப்பப்படி நடக்கவும் கூடாது.” மே மாதம் நிறுவப்பட்ட European Financial Stablization Fund பற்றி அவர் விடையிறுத்தார். இதில் பாப்பாண்ட்ரூவின் சிக்கன நடவடிக்கைகள் IMF மற்றும் EU வினால் இயற்றப்படும் என்ற குறிப்பு இருந்தது. இந்த அடிப்படையில் அவர் PASOK உடன் நெருக்கமான உறவுகளை நிறுவி அதன் குறைப்புக்களைச் செயல்படுத்த உதவ முற்படுகிறார்.
கௌவெலிஸும் அவருடைய புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜனநாயக இடது கட்சியும்(DL) இதன் பின் PASOK உடன் ஏதென்ஸ், வோலோஸ், தெசலோனிகா ஆகியவற்றில் நடக்க இருக்கும் உள்ளாரட்சித் தேர்தல்களில் உடன்பாடு கொண்டு ஒரு கூட்டு வாக்குப் பட்டியலைத் தயாரிக்க முற்பட்டுள்ளன. பாப்பாண்ட்ரூ இந்த DL உடனான பங்காளித்தனத்தை “மூலோபாயம்” வாய்ந்தது என்று விளக்கியுள்ளார்.
DL உறுப்பினர்களுக்கு அரசாங்கப் பதவிகள் கொடுக்கும் வாய்ப்பு பற்றிக் கேட்கப்பட்டபோது, பாப்பாண்ட்ரூ பங்காளித்தனம் தொடரும் தன்மை உடையது என்றார். கௌவெலிஸின் “இடது சான்று” முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது பற்றிக் குறிப்பிட்ட பாப்பாண்ட்ரூ ஆன்லைன் செய்தித்தாள்Zoomnews.gr ல் வந்த கட்டுரை “நிச்சய விழா முடிந்துவிட்டதால் திருமணம் பற்றிய அறிவிப்பு எப்பொழுது வரும்” என்ற வினாவை எழுப்பியுள்ளது.
டிசப்ரஸ் இப்பொழுது ஒரு வெளிப்படையான சிக்கன நடவடிக்கை சார்பு, PASOK சார்பு உடைய நிலைப்பாடு RW ன் தளத்தில் இருப்பதற்கான அடிப்படை வாதங்களைப் பல முறை கூறிவருகிறார். செப்டம்பர் 14 திகதி நடந்த வானொலிப் பேட்டி ஒன்றில், டிசப்ரஸ், “நாட்டில் ஒரு புதிய நிலை வந்துள்ளது, இது IMF இருப்பதால் வரையறுக்கப்பட்டுள்ளது, இது நாட்டின் அரசியல் வாழ்வில், இடது உட்பட, மீள் ஒழுங்குபடுத்தலுக்கு வழியமைத்துள்ளது.” என்று கூறினார்.
இந்த நிலைப்பாடுகள் கௌவெலிஸ் விலகிவிட்டதுடன் சிரிசா இப்பொழுது இடதிற்கு நகரும் என்று கூறிய குட்டி முதலாளித்துவ, முன்னாள் தீவிரவாதிகளின் கருத்துக்களைத் தவறாக்கிவிட்டன. சிரிசாவிற்குள் அத்தகைய நிலைப்பாடுகள் Xekinima, ஒர்க்கர்ஸ் இன்டர்நேஷனலின் குழுவுடைய கிரேக்கப் பிரிவினால் முன்வைக்கப்பட்டிருந்தன. (See, “Greece: What is behind the right wing-split from SYRIZA?”).
இதேபோன்ற நிலைதான் SEK, ஒரு சகோதரிக் கட்சியான பிரிட்டனின் சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியினாலும் முன்வைக்கப்பட்டது. கிரேக்க “முதலாளித்துவ-எதிர்ப்பு” கூட்டணி ANTARSYA உறுப்பினாலும் முன்வைக்கப்பட்டது. RW சென்றதை “நல்லது” என்று கூறிய SEK உடைய ஏடு SOCIALISM FROM BELOW எழுதியது: “சிரிசா முழுவதும் என்று இல்லாவிட்டாலும், குறைந்தது அதன்இடது போக்காவது இடதுபக்கம் திரும்பக்கூடும்.”
உண்மையில் சிரிசா நிலைப்பாடுகளின் தர்க்கம்—அட்டிக்கா வேட்பாளரின் அடையாளமும்—இது RW ஐ இன்னும் வெளிப்படையான விதத்தில் PASOK உடன் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராகக் கூட்டு கொண்டு அதைப் பின்பற்றும் என்றுதான் தெரிவிக்கிறது.