WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
ஆப்கானிஸ்தானில் படுதோல்வி: பிரிட்டிஷ் துருப்புக்கள் ஸாங்கன் பகுதியிலிருந்து திரும்பப்பெறப்படுகின்றன
Robert Stevens
24 September 2010
Use
this version to print | Send
feedback
செப்டம்பர் 20ம் திகதி, தெற்கு ஆப்கானிஸ்தானின் ஸாங்கன் பகுதியில் எஞ்சியிருந்த கடைசி 1,000 பிரிட்டிஷ் திருப்புக்கள் திரும்பப் பெறப்பட்டன. நான்கு ஆண்டுகள் அங்கு இருந்த பின், இவர்கள் தங்களுடைய தளங்களின் கட்டுப்பாட்டை அமெரிக்கர்களிடம் ஒப்படைத்தனர்.
ஆப்கானிஸ்தானில் மொத்தம் இருக்கும் 9,500 பிரிட்டிஷ் துருப்புக்களின் ஒரு பகுதியாக இவர்கள் உத்தியோகபூர்வமாக அங்கிருந்து அகன்றது, படை மறுநிலைநிறுத்தலுக்கு மத்திய ஹெல்மாண்ட் மாகாணத்திற்கு அனுப்புவதற்கு என்று கூறப்படுகிறது. ஆனால் பிரிட்டன் ஒரு பெரிய தோல்வியைச் சந்தித்தது என்ற உண்மையை எதுவும் பூசி மெழுகிவிட முடியாது. செய்தி ஊடகத்தின் ஒரு பிரிவினர் கூறுவது போல் தாலிபனுக்கு ஸாங்கன் பிரதேசம் “ஒரு பயிற்சிக் களமாக” மட்டும் ஆக இருக்கவில்லை. பிரிட்டனின் ஆயுதப் படைகள் மக்களின் உறுதியான எழுச்சியினால் ஆக்கிரமிப்பாளர்கள் என்று விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.
எனவேதான் Daily Mail, “இது ஒரு தோல்வி அல்லது பின் வாங்குதல் அதுவும் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பிரிட்டிஷ் படையினர் கடுமையாகப் போரிட்டபின் நிகழ்ந்தது என்று ஒப்புக் கொள்ளத் தயாரில்லாத பெருந்திகைப்பில் மூத்த இராணுவ அதிகாரிகள் உள்ளனர்” என்று ஒப்புக்கொண்டுள்ளது.
இந்தப் பின்வாங்குதல் கறைபடிந்த, ஏகாதிபத்தியப் போரின் விளைவினால் குற்றம் சார்ந்த வகையில் வாழ்வு சிதைக்கப்படுவதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஒவ்வொரு ஆண்டும் துருப்புக்கள் எதிர்கொண்ட நிலை பற்றிய பேரழிவுச் சித்திரத்தைத்தான் செய்தி ஊடக அறிக்கைகள் தீட்டியுள்ளன. அவர்களுடைய வெளியேற்றத்தின் போது, ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட மொத்த 337 பிரிட்டிஷ் துருப்புக்களில் மூன்றில் ஒரு பகுதியான 104 பிரிட்டிஷ் துருப்புக்கள் இச்சிறு நகரத்திலும் அதைச் சுற்றிலுமே தான் கொல்லப்பட்டுள்ளனர்.
“Sangin : at last we’re leaving hell” (ஸாங்கன்: ஒரு வழியாக நரகத்தை விட்டு வருகிறோம்) என்ற தலைப்பில் Daily Express 2001 ஆண்டு ஆப்கானிஸ்தானிய படையெடுப்பின் முதல் நான்கு ஆண்டுகளும் ஆறு மாதங்களிலும், ஐந்து பிரிட்டிஷ் துருப்புக்கள் தான் கொல்லப்பட்டனர். மிகப் பெரும்பாலானவர்கள் 2006 முன்பகுதியிலிருந்து இறந்துள்ளனர். அதுவும் பிரிட்டிஷ் துருப்புக்கள் ஹெல்மாண்டில் மீண்டும் தரையிறக்கப்பட்ட பின். ஏப்ரல் மாதம் லண்டன் டைம்ஸில் வந்த தகவல் ஒன்று அன்றாட இறப்புக்களில் 10 சதவிகிதத்திற்கும் மேலானவை ஸாங்கனில் உள்ள UK 3 Rifles Battl Groupல் நடந்துள்ளதென்றும், இத்துருப்புக்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள மொத்த நேட்டோ துருப்புக்களில் 0.8 சதவிகிதத்தைத்தான் பிரதிபலிக்கின்றன என்று கூறியுள்ளது.
பொறுப்பை மாற்றிக் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போதும், பிரிட்டிஷ் இராணுவம் தாக்குதலுக்கு உட்பட்டது. “கடுமையான துப்பாக்கிச் சண்டைகள்… மாவட்ட மையத்தின் முக்கிய தளத்தில் இருந்து 800 மீட்டர் தொலைவிற்குள் நடைபெற்றன என்று கூறியுள்ளது.
எதிர்பார்த்தவிதத்தில் அரசியல்வாதிகள் மற்றும் செய்தி ஊடகம் கொல்லப்பட்ட, காயமுற்ற ஆயிரக் கணக்கான ஆப்கானியர்களைப் பற்றி எதுவும் கூறவில்லை. மாறாக பிரதம மந்திரி டேவிட் காமெரோன் “ஸாங்கனில் இறந்த படையினர் வீணே இறந்து விடவில்லை” என்று வலியுறுத்துவதில் தீவிரமாக இருந்தார்.
இத்தகைய அறிக்கைகள், அவற்றில் “நம் இளைஞர்கள்” பற்றிய வனப்புரைக்குப் பின்புலத்தில், ஆளும் உயரடுக்கு ஆப்கானிஸ்தானில் மடிவதற்கு அவர்கள் அனுப்பியுள்ளவர்களைப் பற்றி இகழ்வுணர்வைத் தவிர எதையும் கொண்டிருக்கவில்லை என்பதைத்தான் நிரூபிக்கின்றன. அவர்கள் கொடுத்த விலை மதிப்புடையது என்று நம்பும் காமெரோன் எதற்காக இந்த இறப்புக்கள் என்ற உண்மையைக் கூறவில்லை.
ஒரு புளுகு மூட்டையின் அடிப்படையில் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க மக்களுக்கு ஆப்கானியப் படையெடுப்பு விற்கப்பட்டுள்ளது. 9/11க்குப் பின்னர் “பயங்கரவாதத்திற்கு எதிரான” போரின் ஒரு பகுதி என அறிமுகப்படுத்தப்பட்டு, இது ஒசாமா பில் லேடனுக்கு புகலிடம் கொடுக்கின்றதும், அல் கெய்டாவிற்கான பிரதான நடவடிக்கைகளுக்கு தளத்தையும் கொடுக்கின்றதுமான ஆட்சியை அகற்றுவதற்கு என்று கூறப்பட்டது. அமெரிக்க இராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் இதன் பின் ஆப்கானிஸ்தான் முழுவதுமே 100க்கும் குறைவான அல் கெய்டா உறுப்பினர்கள்தான் உள்ளனர் என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர். இதன் பின் இந்த ஆக்கிரமிப்பு தாலிபனை அகற்றி ஜனநாயகத்தை அங்கு நிலைநிறுத்துவதற்கு என்று கூறப்பட்டது. மாறாக இது ஹமித் கர்சாயியுடைய இழிந்த கைப்பாவை அரசை இருத்திய முடிவைத்தான் கண்டது. இந்த ஆட்சி அமெரிக்க இராணுவச் சக்தியினால் பாதுகாப்பு பெறுகிறது, மக்களுடைய சொல்லொணா இடர் நிறைந்த வாழ்க்கைக்குத்தான் தலைமை தாங்குகிறது.
உண்மையில், ஆப்கானிய ஆக்கிரமிப்பு வாஷிங்டன் மற்றும் லண்டனின் கொள்ளை முறை புவிசார்-அரசியல் மூலோபாய நோக்கங்களுக்காக செயற்படுத்தப்படுகிறது. இரட்டை கோபுரங்களின் அழிப்பிற்குத் தேவையான போலிக் காரணத்தைக் கொடுப்பதற்கு முன்பே திட்டமிடப்பட்டிருந்தது. அமெரிக்காவை பொறுத்தவரை, பின்னால் ஆரம்பித்த ஈராக் போரைப் போலவே இடரில் இருந்த பிரச்சினை முழு “யூரேசிய” பகுதியின் மீதும் எல்லாவற்றிற்கும் மேலாக மத்திய கிழக்கு, மத்திய ஆசியாவில் உள்ள உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புக்கள் பெரும்பாலானவற்றின் மீது கட்டுப்பாட்டைக் கொள்ள வேண்டும் என்பதுதான். பிரிட்டன் கொள்ளையில் தனக்கும் பங்கு கிடைக்கும், அதைத்தவிர தன் நலன்களுக்காக உலக அளவில் அரசியல், இராணுவக் கூட்டின் மூலம் நலன்களைப் பெற்றுத் தன் ஐரோப்பிய போட்டி நாடுகளான ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிவற்றைவிட ஆதாயம் பெறலாம் என்ற கணக்கீடும் இருந்தது.
இத்துடன் தொடர்புடைய செலவினங்கள் இப்பொழுது இருமுறை பிரிட்டன் மீது அவமானகரமான பின்வாங்குதலைக் கொடுத்துள்ளன. முதலில் ஈராக்கிய நகரமான பஸ்ராவிலும், இப்பொழுது ஸாங்கனிலும் ஆகும். கடந்த வாரம், “ஏட்டளவில் பிரிட்டிஷ் ஸாங்கனிலிருந்து அங்கு விளைந்த, முன்னதாகவும் விளைந்த இழப்புக்களிலிருந்து தங்களை அகற்றிக் கொண்டுவிட்டனர். ஆனால் இங்கு ஆங்கில-அமெரிக்க உறவுகளில் ஒரு கூருணர்ச்சி அத்தியாயம் விளையாடியுள்ளது. ஈராக்கின் போர் இறுதியில் தங்கள் நிலைப்பாட்டில் இங்கிலாந்துத் துருப்புக்கள் நடந்து கொண்டவிதம் பற்றி அமெரிக்க இராணுவ மூத்த அதிகாரிகள் குறைகொண்டிருந்தனர் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை…. அதன் பின் இவர்கள் தொடரவேண்டும் என்று வாஷிங்டன் கோரியபோது முற்றிலும் அகன்றுவிட்டனர்” என்று Independent ஒப்புக் கொண்டுள்ளது.
பிரிட்டிஷ் படைகள் திரும்பப் பெறப்பட்டது குறித்து அதிகாரிகள் எதிர்நிலையாக கூறினாலும், கடும் கசப்பையும் சொற்களையும் அமெரிக்க இராணுவத்திடமிருந்த வெளிப்பட வைத்துள்ளது. இறுதியில் இது பிரிட்டனின் துயரங்கள் வாஷிங்டனுக்கும் அரசியல் பின்னடைவு என்பதைக் குறிக்கிறது. ஆக்கிரமிப்பில் சுயாதீன இராணுவப் பங்கு என்ற போலித்தனத்தை தக்க வைத்துக்கொண்ட ஒரே இராணுவம் பிரிட்டனுடையதுதான். அந்த நிலைப்பாடு கைவிடப்பட்டதும் இப்பொழுது, முன்பைக்காட்டிலும், இது அமெரிக்காவின் போர் என்ற பொருளைக் கொடுக்கிறது
இதைத் தவிர, அமெரிக்காவானது ஸாங்கின் மீது கட்டுப்பாட்டைக் கொள்ள முடியாது என்ற கூற்றுக்கள் அப்பகுதி மீது மொத்தக் கட்டுப்பாட்டை வலுப்படுத்தும் என்பவை ஆதாரமற்றவை ஆகும். அமெரிக்கா எதிர்நோக்கியுள்ள பெரும் மக்கள் எதிர்ப்பை விளக்குகையில், Daily Telegraph “ஸாங்கின் ஒப்படைப்பு: கல்லறை மீதான பெயர்களில் நாடுகளின் பெயர்கள் தான் மாறும்” என்று கணித்துக் கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தான் முழுவதும் சீர்குலையும் இராணுவ, பாதுகாப்பு நிலைமையையும், உள்நாட்டில் போர் எதிர்ப்பு எழுச்சி பெறுவதையும்தான் அமெரிக்கா எதிர்நோக்கியுள்ளது. இந்நிலைமைகள்தான் கடந்த டிசம்பர் மாதம் ஒபாமா நிர்வாகம் இன்னும் கூடுதலாக 30,000 துருப்புக்களை நாட்டிற்குள் குருதியைக் கொட்டி எதிர்ப்பை அடக்குவதற்கு அனுப்புவதாக அறிவித்தபோது இருந்தன. ஆயினும்கூட அமெரிக்கா பெரும் எதிர்ப்பை அடக்குவதற்கு முடியாத நிலையில் உள்ளது. செப்டம்பர் 21ம் திகதி தெற்கு ஆப்கானிஸ்தானில் ஜாபுல் மாகாணத்தில் ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் ஒன்பது அமெரிக்க படையினர் இறப்புடன் 2001 ஆண்டு படையெடுப்பு ஆரம்பித்ததிலிருந்து 2010 ம் ஆண்டானது அதிக இறப்புக்களைக் கண்ட ஆண்டாகப் போய்விட்டது. இந்த ஆண்டு இதுவரை குறைந்தபட்சம் 520 நேட்டோ துருப்பினராவது இறந்துள்ளனர்.
இதற்கிடையில், அமெரிக்க இராணுவத்தின் பிரிவுகள் ஜூலை 2011 ஜூலை ஆரம்பத்திலிருந்து “படிப்படியாக திரும்பப் பெறுதல்” என்ற திட்டத்தை கூச்சலுடன் எதிர்த்துள்ளனர். ஜனாதிபதி பாரக் ஒபாமா உத்தியோகபூர்வமாக இந்த நோக்கத்தைத்தான் கொண்டுள்ளார்.
வோல்ஸ்ட்ரீட் ஜேர்னல் செப்டம்பர் 21ம் திகதிக் கட்டுரை ஒன்றின்படி, மூத்த இராணுவத் தலைவர்கள் “ஆப்கானிஸ்தானில் விரைவான முன்னேற்றம் என்பதின் எதிர்பார்ப்புக்களைக் குறைக்க முற்படுகின்றனர்”, “ஆண்டு இறுதிக்குள் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த நலன்கள் ஏதும் கிடைக்காது” என்றும் கணித்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. “முழு பட்டாலியன்கள் அல்லது பிரிகேட்ஸ்களை” திரும்பப் பெறுதல் என்பதற்குப் பதிலாக, படைக் குறைப்பு என்பது முன்னணியில் உள்ள துருப்புக்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதையும் நாட்டிற்கு சிறு அளவிலான கம்பெனிப் படைப் பிரிவுகளைத் திருப்பி அனுப்புவதையும் செய்யும்” என்று கூறியுள்ளது.
30 மில்லியன் மக்களையும் விடக் குறைவாக இருக்கும் ஒரு வறிய நாட்டை மிருகத்தனமான முறையில் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவேண்டும் என்ற பெருந்தவறான முயற்சிதான் ஆப்கானிய ஆக்கிரமிப்பு ஆகும். எந்தவொரு படைச் சிப்பாயினதும் நடவடிக்கை ஒரு புறம், அது வீரத்தனமாயினும் அல்லது கோழைத்தனமாயினும் இருந்தாலும் இராணுவம் மற்றும் அரசியல் மேற்தட்டுக்களானது சொல்லத்தகாத குற்றத்தை இழைத்துள்ளார்கள். சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கம் இப்போருக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்று கோருவதுடன் அமெரிக்க, பிரிட்டஷ் இன்னும் மற்ற வெளிநாட்டுத் துருப்புக்கள் உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும் கோரவேண்டும். இந்தக் கொள்ளைப் போரை திட்டமிட்டு செயல்படுத்தியவர்கள் போர்க் குற்றங்களுக்காக நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியதுடன், உலக மக்களின் கருத்து என்ற நீதிமன்றத்தின் முன்பும் நிறுத்தப்பட வேண்டும்.
|